Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Boys
#21
சமுதாயச் சீரழிவு சந்திக்கு வந்திருக்குப் போல.... அமுக்கி வைச்சு தொடருறதைவிட......சந்திக்கு வரவச்சு வெளிச்சம் போட்டால் திருட்டுத்தனங்கள் குறையுமெல்லே....Boys(Guys) மட்டுமல்ல Girls(Gals) இன்னும் கில்லாடிகள்தான்.....அதை சங்கர் எப்ப வெளிச்சத்துக்கு விடப்போறார்.....!

படம் சொல்லும் செய்தி பெற்றோரே உங்களை உங்கள் பிள்ளைகள் ஏமாறும் வழிவகைகள் என்ன....உங்கள் பிள்ளைகளை கட்டுப்படுத்தும் ஆலோசனைகள் அல்லது மன ஒடுக்கத்துக்கான ஆலோசனைகள் வழங்கப்படவேண்டிய காலம் என்பனவற்றை இத்திரைப்படம் சொல்லும் போல....!பெற்றோருக்கு நல்லவராக நடித்து வெளியில் கும்மாளம் போடும் ஆண் பெண் கூட்டங்களுக்கு நல்ல அடி குடுத்திருக்குப்போல....! எமது கருத்து உங்கள் விமர்சனக்களில் இருந்தானதே...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#22
சிறுதிருத்தத்துடன்....

சமுதாயச் சீரழிவு சந்திக்கு வந்திருக்குப் போல.... அமுக்கி வைச்சு தொடருறதைவிட......சந்திக்கு வரவச்சு வெளிச்சம் போட்டால் திருட்டுத்தனங்கள் குறையுமெல்லே....Boys(Guys) மட்டுமல்ல Girls(Gals) இன்னும் கில்லாடிகள்தான்.....அதை சங்கர் எப்ப வெளிச்சத்துக்கு விடப்போறார்.....!

படம் சொல்லும் செய்தி பெற்றோரே உங்களை உங்கள் பிள்ளைகள் ஏமாற்றும் வழிவகைகள் என்ன....உங்கள் பிள்ளைகளை கட்டுப்படுத்தும் ஆலோசனைகள் அல்லது மன ஒடுக்கத்துக்கான ஆலோசனைகள் வழங்கப்படவேண்டிய காலம் என்பனவற்றை இத்திரைப்படம் சொல்லும் போல....! பெற்றோருக்கு நல்லவராக நடித்து வெளியில் கும்மாளம் போடும் ஆண் பெண் கூட்டங்களுக்கு நல்ல அடி குடுத்திருக்குப்போல....! எமது கருத்து உங்கள் விமர்சனங்களில் இருந்தானதே...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea :!:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#23
ஆனால் குருவியண்ணை இதை ஒரு விஞ்ஞான அல்லது உளவியல் விவரண சித்திரமாக இன்னும் கூடிய விளக்கங்களோடு கொடுத்திருக்கலாம்....இந்திய சினிமாக்காரருக்கு காசுதான் குறி...எப்பொழுதுதான் சமுதாய நலனுக்காக படம் எடுக்கப் போகிறார்களோ?

இநதப் படத்திலிருந்து கன விடயம் அறியக்கூடியதாக உள்ளது....விசித்திரநாட்டின் விசித்திர நகர் பற்றியும் அங்குள்ள இளசுகள் பற்றியும்....விசித்திர நகரில் புகுந்துள்ள டேற்றிங் கலாசாரம், எவ்வளவு இலகுவாக பள்ளி மாணவருக்கு கிடைக்கும் விபச்சாரிகள், காதலுக்கு புதிய வரைவிலக்கணம் (அது தான் பால்போல பதினாறில் எனக்கொரு கேள்பிரண்டு வேணும்...என்று பாடுறாங்கள்) காதல் இயற்கையாக வரும் என்றுதான் நினைச்சன்...இவங்களுக்கு காதல் ஒரு அத்தியாவசியத் தேவை போல கிடக்கு

இது புலம்பெயர் எம்மவரிடையே காணக்கூடியதாக உள்ளது...ஆனால் ஈழத்தில் இன்னும் வந்து சேரவில்லை...அங்கு பெற்றோருக்குத் தெரியாமல் புகைத்தல், மது அருந்தல் என்பன நடைபெறுவது கண்டிருக்கிறேன்.....இருந்தாலும் விசித்திர நாடு அருகில்தான் வியாதி தொற்றலாம்...அதைவிட புலம்பெயர் எம்மவர் மூலமும் தொற்றலாம்....ஈழத்துப் பெற்றோரே வருமுன் காப்பீர் :!: Idea
Reply
#24
இது குமுதம்


பொறுப்புணர்வே இல்லாமல் பெண்களிடம் ஜொள்விட்டுத் திரியும் ஐந்து விடலைப் பையன்கள் வாழ்க்கையில் அடிபட்டதும், எதார்த்தத்தை உணர்ந்து ஜெயித்துக் காட்டுகிறார்கள்.

அந்தப் பொறுப்பற்றுத் திரியும் காலகட்டத்தில், அவர்கள் செய்யும் காரியங்களை, பேசும் உரையாடல்களை ‘உரித்து’க் காட்டியிருக்கிறார் ஷங்கர். பார்ப்பவர்களைத் திகைக்க வைக்கும் காட்சிகள். டீன்_ஏஜ் வயதில் ஏற்படும் செக்ஸ் ஆர்வம் குறுகுறுப்பானது. புதிர் நிறைந்தது. ஏன், கொஞ்சம் பயம் கொண்டது என்றுகூடச் சொல்லலாம்.

ஆனால், ‘பாய்ஸ்’க்கு கூச்ச நாச்சம் ஏதும் இல்லை. எல்லாவற்றையும் ‘ஙிrமீணீளீ tலீமீ ஸிuறீமீ’ சித்தாந்தப் படி போட்டு உடைக்கிறார்கள். விலைமாதுவை வீட்டுக்குக் கூட்டி வருகிறார்கள். கட்டிலை ஆட்டுகிறார்கள். பையன்கள் படுத்திருக்கும் கார் குலுங்கிக் குலுங்கி ஆடுகிறது. பஸ்ஸில், ரங்கநாதன் தெருவில், துணிக்கடைகளில் பெண்களை முன்பின் உரசுகிறார்கள். (சாணம் பிடிப்பது என்கிற அடைமொழியுடன்) எட்ஸட்ரா... எட்ஸட்ரா... ஷங்கர் படம்தானா என்று சந்தேகமே வந்து விடுகிறது.

ஹாலிவுட் படங்களில் கொச்சை வசனங்களும் நேரடியான காட்சிகளும் சர்வ சாதாரணமாய் ஆகியிருக்கும் நிலையில் தமிழுக்கும் அந்த ஸ்டைல் அசந்தர்ப்பமாக வந்திருக்கிறது.

முதல் பாடல் ‘எனக்கொரு கேர்ள் ஃப்ரண்ட்’ கிராஃபிக்ஸில் அந்த டிஜிட்டல் பெண் வசீகரிக்கிறாள். ஆனால், ‘பூம்பூம்’ பாட்டில் வரும் கிராஃபிக்ஸைப் பலமுறை பார்த்துவிட்ட அலுப்பு. டைம் ஸ்லைஸ், மோஷன் காப்ச்சரிங் டெக்னிக்குகள் இனிமையாகக் கையாளப்பட்டிருக்கின்றன.

ஐந்து பையன்களும் சரி, அந்தப் பெண் ஹரிணியும் சரி, முதல் படம் என்பதே தெரியாத அளவுக்கு உற்சாகமாய் நடித்திருக்கிறார்கள். ஒவ்வொரு காட்சியிலும் இளமை கொப்பளிக்கிறது.

ஏ.ஆர். ரஹ்மானின் இசையும், ரவி.கே. சந்திரனின் காமிராவும் படத்திற்கு பலம். கிளைமாக்ஸ் பாட்டில் ரஹ்மான் ஹை பிட்ச்சில் பிய்த்து உதறுகிறார்.

இளைஞர்கள் கெட்டுப் போவதற்குக் காரணமாய், பத்திரிகைகளையும், டி.வி.யையும் (டிஸ்கவரி சேனல் கூடவாம், வாட் எ லாஜிக்!) சொல்கிறார் விவேக். முக்கியமான மற்றொன்றை விட்டுவிட்டார், சினிமா.

‘பொடா’வில் கைதாகி, சிறையில் எல்லோரும் அடிபட்டு, மிதிபட்டு, உடைந்து போகும் காட்சிகள் பவர்ஃபுல். ஏ.வி. ரமணன் ஒரு மிடில் கிளாஸ் அப்பாவை அற்புதமாய் பிரதிபலித்திருக்கிறார்.

லொகேஷன்கள் ஆடை அலங்காரங்கள், செட்டுகள், கிராஃபிக்ஸ், டெக்னிகல் விஷயங்கள் என்று காசை அள்ளி இறைத்திருக்கிறார்கள். படம் முழுக்க ஒரு ‘ரிச்னஸ்’ தெரிகிறது.

முற்பாதி ஆபாசம், பிற்பாதி உபதேசம்.

நாட்டி பாய்ஸ்!


--------------------------------------------------------------------------------



‘பூம்...பூம்’ பாடலுக்கு லாஸ் ஏஞ்சலஸில் இருக்கும் ‘டிஜிட்டல் ஆர்ட் மீடியா’வின் மார்க் கோபே, விஷ§வல் சூப்பர்வைசராகப் பணியாற்றி இருக்கிறார். பிரசாத் ஸ்டூடியோவில் எட்டு நாட்கள் ஷ¨ட் செய்த பின்பு, ஷங்கரும், ராஜுசுந்தரமும் லாஸ் ஏஞ்சலஸ் சென்று ‘மோஷன் கேப்ச்சர்’ முறைப்படி நான்கு நாட்கள் ஷ¨ட் செய்திருக்கிறார்கள்.

அண்ணாசாலையில் ஹீரோ ஆடையில்லாமல் ஓடும் காட்சிக்காக விசேஷ அனுமதி பெற்று ஐந்து நாட்களாக தினமும் இரவு பதினொரு மணியிலிருந்து காலை ஆறு மணி வரை ஷ¨ட் செய்திருக்கிறார்கள். அக்காட்சியில் வரும் பஸ், கார், டூ வீலர்கள், சைக்கிள்கள், லாரிகள் எல்லாமே ஷ¨ட்டிங்குக்காக வாடகைக்கு அமர்த்தப்பட்டவைதான்.

டாஸ்மேனியாவிலுள்ள மிகப் பெரிய லாவண்டர் தோட்டத்தில் ஷ¨ட் செய்திருப்பது இதுதான் முதல் முறை. ஷ¨ட்டிங்கின்போது, லாவண்டர் பூக்களைத் தொட யாரையும் அனுமதிக்கவில்லை. காரணம், அப்பூக்களிலுள்ள லட்சக்கணக்கான தேனீக்கள் கொட்டிவிடும் என்பதால்தான்.

‘மாரோ மாரோ’ பாடலுக்காக கொச்சியிலுள்ள ஸ்டேடியத்தில் அங்குள்ள 2000 ஜூனியர் ஆர்டிஸ்டு களை வைத்து ஷ¨ட் செய்திருக்கிறார்கள். பிறகு ‘இமேஜ் குளோனிங்’ முறைப்படி ஸ்டேடியம் முழுவதும் ரசிகர்கள் இருப்பதுபோல கிராஃபிக்ஸில் மாற்றினார்கள்.


--------------------------------------------------------------------------------

ஷங்கரிடம் ஒரு கேள்வி

இளைஞர்களிடம் எத்தனையோ பாஸிட்டிவ்வான விஜயங்கள் இருக்க, வெறும் செக்ஸிற்காக அலையும் கூட்டமாக அவர்கள் சித்திரிக்கப்பட்டிருப்பது சரியா? ஷென்டில்மேனிற்கு அப்புறம் உங்கள் படங்களில் வல்காரிட்டி படிப்படியாகக் குறைந்து அழுத்தமான படங்களைக் கொடுத்த நீங்கள், திடீரென்று இந்த அளவுக்கு இளைஞர்கள் றிஷீrtrணீஹ் பண்ண வேண்டிய அவசியம் என்ன?

ஷங்கர்: வெற்றிபெற்ற இளைஞர்களின் வாழ்க்கையை பாசாங்கு இல்லாமல் நேர்மையாகச் சொல்லியிருக்கிறேன். பொறுப்பு இல்லாமல் சுற்றித் திரியும்போது பொறுப்பு இல்லாதவர்களாகவும், பொறுப்பு வந்தவுடன், பொறுப்பானவர்களாகவும் காட்டியிருக்கிறேன். அந்த வயதிற்குண்டான தெரிந்துகொள்ளும் ஆர்வங்கள், அத்துமீறல்களை, குழப்பங்களை, கற்பனையாகச் செய்யாமல் நிஜவாழ்க்கையில் நடக்கின்ற, நடந்த சம்பவங்களை வைத்துத்தான் சொல்லியிருக்கிறேன்.

அது இளமையின் ஒரு பகுதி மட்டுமே! அதை மட்டும் இல்லாமல் அவர்களின் காதலை, கலாசார பயங்களை, கௌரவம் பார்க்காமல் எந்த வேலையையும் செய்யும் மனப் பக்குவத்தை, சொந்தக் காலில் நிற்கும் மன உறுதியை, நட்புக்காகச் செய்யும் தியாகத்தை, உழைத்து முன்னேறுவது போன்ற பல பாசிடிவான விஷயங்களைச் சொல்லியிருக்கிறேன். கதை நியாயப்படித்தான் காட்சிகளும். ஒருசில காட்சிகளை சிலரால் ஏற்றுக்கொள்ள முடியாத காரணத்தால், அவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் காட்சிகள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.


--------------------------------------------------------------------------------

படத்தில் அதிர்ச்சிதரக்கூடிய அளவில், நேரடியான வசனங்கள் இருக்கின்றன. பலத்த எதிர்ப்பு வரும் என்று தெரிந்தேதான் அவை எழுதப்பட்டனவா?

சுஜாதா: நீங்களே அதிர்ச்சி தரும் வசனம் என்று தீர்மானித்து, அதற்கு எதிர்ப்பு இருப்பதாகவும் தீர்மானித்து விடுகிறீர்கள். ஒருமுறை தியேட்டருக்குப்போய் மக்களுடன் இந்தப் படத்தைப் பாருங்கள். தெரிந்தே யாரும் தப்பு செய்யமாட்டார்கள். நல்ல காரியம்தான் செய்வார்கள்.
Reply
#25
Kanani Wrote:ஆனால் குருவியண்ணை இதை ஒரு விஞ்ஞான அல்லது உளவியல் விவரண சித்திரமாக இன்னும் கூடிய விளக்கங்களோடு கொடுத்திருக்கலாம்....இந்திய சினிமாக்காரருக்கு காசுதான் குறி...எப்பொழுதுதான் சமுதாய நலனுக்காக படம் எடுக்கப் போகிறார்களோ?

இநதப் படத்திலிருந்து கன விடயம் அறியக்கூடியதாக உள்ளது....விசித்திரநாட்டின் விசித்திர நகர் பற்றியும் அங்குள்ள இளசுகள் பற்றியும்....விசித்திர நகரில் புகுந்துள்ள டேற்றிங் கலாசாரம், எவ்வளவு இலகுவாக பள்ளி மாணவருக்கு கிடைக்கும் விபச்சாரிகள், காதலுக்கு புதிய வரைவிலக்கணம் (அது தான் பால்போல பதினாறில் எனக்கொரு கேள்பிரண்டு வேணும்...என்று பாடுறாங்கள்) காதல் இயற்கையாக வரும் என்றுதான் நினைச்சன்...இவங்களுக்கு காதல் ஒரு அத்தியாவசியத் தேவை போல கிடக்கு

இது புலம்பெயர் எம்மவரிடையே காணக்கூடியதாக உள்ளது...ஆனால் ஈழத்தில் இன்னும் வந்து சேரவில்லை...அங்கு பெற்றோருக்குத் தெரியாமல் புகைத்தல், மது அருந்தல் என்பன நடைபெறுவது கண்டிருக்கிறேன்.....இருந்தாலும் விசித்திர நாடு அருகில்தான் வியாதி தொற்றலாம்...அதைவிட புலம்பெயர் எம்மவர் மூலமும் தொற்றலாம்....ஈழத்துப் பெற்றோரே வருமுன் காப்பீர்.
என்ன கணணி பயப்பிடுறியள். நாங்கள் சினிமாவுக்குள்ளதான் வளர்ந்தனாங்கள். ஆங்கிலப்படங்கள் வன்முறைப் படங்கள் நீலப்படங்கள் எல்லாம் அப்பவும் ஓடினது. அதுகளாலை எந்தப் பிரச்சனையும் வரயில்லை. பிறகு ரிவி யும் வந்திட்டுது. அதாலையும் பிரச்சனை வரேல்லை. அதுகள்தான் நாட்டைக் கெடுத்ததுபோலை உங்கட கதை. நீங்கள் இங்கை பார்க்கலாம்.. எல்லாம் செய்யலாம் ஒண்டுமில்லை. அங்கையும் உயரதிகாரியள் எல்லாம் பார்க்கலாம் ஒண்டுமில்லை. சின்னவை பார்க்கக்கூடாதெண்டுறது.. ஹிப்போக்கிறசி. உங்களுக்கு பார்க்கப் பிரச்சனையில்லாதபோது.. அவைக்கும் பிரச்சனையிருக்காது இல்லையோ..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#26
நீங்கள் பார்த்திருக்கிறியள் என்பது உங்கள் கருத்துக்களிலே தெரியுது தாத்ஸ்....அதையேன் பேரப்பிள்ளைகளுக்கும் சொல்லிக் குடுக்கிறியள் அதுகளும் இப்பிடி...... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
Reply
#27
Kanani Wrote:நீங்கள் பார்த்திருக்கிறியள் என்பது உங்கள் கருத்துக்களிலே தெரியுது தாத்ஸ்....அதையேன் பேரப்பிள்ளைகளுக்கும் சொல்லிக் குடுக்கிறியள் அதுகளும் இப்பிடி......
கணணி 12 வயதுவரை பிள்ளையள்.. 12-18 வயது மட்டும் பெரியபிள்ளையள் அதுக்குப்பிறகு வயதுவந்தவர். இது எந்தநாட்டுக்கும் பொருந்தும். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
ஆனால் ஒண்டு வசந்தமாளிகை படமே 235 ஆம்நாள் தான் பார்த்தேன்.. அதுகூட 10 தரம் ஏற்கெனவே பார்த்த ஒருவன் 11 ஆம்தரம் பார்க்க துணைக்கு ஆள்தேடி நல்லபடம் நான் ரிக்கற் எடுத்துத்தாறன் வா எண்டு கூட்டிக்கொண்டு போனது. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#28
அப்பவே மதி சொல்பவன் வா என்றவுடனேயே கூடப்போகும் பழக்கம்<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#29
yarl Wrote:அப்பவே மதி சொல்பவன் வா என்றவுடனேயே கூடப்போகும் பழக்கம்
அவன் பார்க்கப்போனது ஏ சகுந்தலாவின் துடையை.. நான் பார்க்கப்போனது மூன்றுநாளில் எடுக்கப்போகும் படத்தை.. அதுதான் வித்தியாசம்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#30
ஐயோ... ஐயோ...
அப்பிடி என்னதான் படத்தில இருக்கென்று அவசரப்பட்டு
இணையத்தில தேடிப்பிடிச்சு, active member இன் பாஸ்வேர்ட்டைக்
கண்டுபிடித்து, முதல் பாகத்தை (அதான் முதலாவது cd) பார்ப்பமென்று
தரவிறக்கம் செய்து போட்டால் 5 நிமிடங்கள் தான் படம் போச்சு.
மிச்சம் பழுது. அறிமுகக் கட்டந்தான், வரிசைக்கிரமமாக நடிகர்களை
நல்லவடிவா அறிமுகப்படுத்துகினம். ஆரம்பம் நல்லாத்தான் இருக்கு.

"பெண்ணே நீ Twin Tower ஆ
என் கைகள் விமானம் போல் பறந்து வருகின்றனவே"

என்ற வரியோடு முடீச்சிட்டாங்கள்.

பெண்களைக் கவர்வதற்காக பெடியங்கள் நல்லாக் குறம்புத்தனம்
செய்யுறாங்கள்.

மிச்சத்த எப்ப பார்க்கிறது...???


Reply
#31
இளைஞன் Wrote:ஐயோ... ஐயோ...
அப்பிடி என்னதான் படத்தில இருக்கென்று அவசரப்பட்டு
இணையத்தில தேடிப்பிடிச்சு, active member இன் பாஸ்வேர்ட்டைக்
கண்டுபிடித்து, முதல் பாகத்தை (அதான் முதலாவது cd) பார்ப்பமென்று
தரவிறக்கம் செய்து போட்டால் 5 நிமிடங்கள் தான் படம் போச்சு.
மிச்சம் பழுது. அறிமுகக் கட்டந்தான், வரிசைக்கிரமமாக நடிகர்களை
நல்லவடிவா அறிமுகப்படுத்துகினம். ஆரம்பம் நல்லாத்தான் இருக்கு.

"பெண்ணே நீ Twin Tower ஆ
என் கைகள் விமானம் போல் பறந்து வருகின்றனவே"

என்ற வரியோடு முடீச்சிட்டாங்கள்.

பெண்களைக் கவர்வதற்காக பெடியங்கள் நல்லாக் குறம்புத்தனம்
செய்யுறாங்கள்.

மிச்சத்த எப்ப பார்க்கிறது...???
ஏனப்பு கொஞ்சம் பொறுமை காத்தால் என்ன..? இஞ்சை எல்லா இடமும் ஓடுதாம். ஓடி முடிய டிவிடியிலை வரும்.. ஆசை தீர மாக்கர் போட்டு திரும்பத் திரும்பப் பார்க்கலாமே.. அதுக்கிள்ளை அவசரப்படுறியள். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#32
Karavai Paranee Wrote:இங்கும்கூட நாம் கருத்துக்கள் வைப்பதாய் எண்ணி விளம்பரம் செய்துவிட்டோம்

திரைப்படத்தைப் பார்க்காது கருத்துகளை வைப்பது மிகத் தவறுதான்.

ஆனால்
இந்த

<img src='http://www.yarl.com/forum/files/song5.jpeg' border='0' alt='user posted image'>
விகடன் விமர்சனம்

<b>18-லிருந்து 25 வயது இளைஞர்கள் சிலரை ஷங்கரின் இந்த வக்கிரமான படம் ஒரு வேளை ஈர்க்கலாம். மற்றவர்களுக்கு... சீ</b>!

என்ற சில வார்த்தைகள் எம்மை என்ன எல்லாம் செய்ய வைத்து விட்டது பாருங்கள்..............

நல்லது என்று சொன்னால் யாரும் பார்க்க மாட்டார்கள்.
ஆனால் சீ..... என்று சொன்னால் நிச்சயம் பார்க்கத் தோன்றும். இதுவும் ஒரு வகை திட்டமிடப்பட்ட விளம்பரம் என்கிறது சென்னைப் பகுதி.

(<b>எதையும் மறைக்கும் போதும், பார்க்காதே என்று சொல்லும் போதும்தான் பார்க்கத் தோன்றும்</b>.)

அதே பாணியிலான,
சினிமாவுக்குள்,
இன்னுமொரு சினிமாத்தனத்தையும் கையாண்டிருக்கிறார்கள்.
Reply
#33
வசந்த மாளிகை பார்த்த தாத்ஸ் இன்று........
<img src='http://www.yarl.com/forum/images/avatars/gallery/general/cartoon_futurama_farnsworth.gif' border='0' alt='user posted image'>
யாருக்காக....இது யாருக்காக...
இந்தக் களத்திலே யாழ்களத்திலே
எனகருத்துக்கள் தணிக்கையில் போனதே...
யாருக்காக....இது யாருக்காக...
தணிக்கையே போ போ...
மொடரேற்றர்களே போ போ

எழுதுங்கள் இவன் கல்லறையில் மொடரேற்றர்கள் இரக்கமில்லாதவர் என்று....
பாடுங்கள் இவன் கல்லறையில் இவன் பைத்தியக்காரன் என்று..


என்ன தாத்ஸ் பாடுறியளோ? :wink: <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


யாருக்காக....இது யாருக்காக...
Reply
#34
<b>Weblog ஒன்றில் தட்டுப் பட்டது.

September 09, 2003
[b]Posted <span style='font-size:25pt;line-height:100%'>by balaji at September 9, 2003 12:43 AM</span>
[size=18][b]பாய்ஸ்</b>

இன்னாங்கடா, நம்ம பசங்க எல்லாரும் இந்தப் படத்தைப் பாரு, செம கைமா சீன் எல்லாம் வைச்சிருக்கான், அப்புறமா அதை வெட்டி எடிட் பண்ணிடுவாங்க, அதுக்குள்ள பாத்துடுன்னு சொன்னதினாலே, போன வாரம் தியேட்டர் போயி பாய்ஸ் படத்தை பாத்துப்புட்டேன். ரெண்டாவது வாரத்திலேயும் ஏறக்குறைய ஹவுஸ்·புல்லா ஓடிக்கிட்டிருக்கு. ஊரிலெ இருக்கற அல்ப கேஸெல்லாம் நம்மளை மாதிரியே வந்து இந்தப் படத்திலே என்ன தான் கீது, கண்டுக்குவோம்ன்னு கெளம்பி வந்துட்டானுங்க போலிருக்குது.

படம் குன்ஸாதான் ஆரம்பிக்குது. ஒவ்வொரு பையன் பத்தியும் நறுக்-ன்னு நாலு வார்த்தை. அவங்க வீட்டைக் காமிக்கும்போது பச்ச கலரிலெ ·பாஸ்ட் பார்வர்ட் செஞ்சு காமிக்கிறான். பசங்கல்லாம் வல்லவரு, நல்லவரு, தானைத் தலைவரு, இளைய தளபதி, சிங்கம், காண்டா மிருகம்ன்னெல்லாம் பீலா வுடாமே அவனுங்களை சாதாரண பசங்களாத்தான் காமிக்கறான். ஒருத்தனுக்கு இங்கிலிப்பீசே வரல்லை, நம்மளை மாதிரி. ஒருத்தன் எப்பப் பார்த்தாலும் கவிதை, கிவிதைன்னு அலையறான். ஒருத்தன் சரோஜாதேவி புக்கை கடையிலே வாங்கி பாத்ரூமிலெ படிக்கறான் (சரோஜாதேவி புக்கை பேரம் பேசாம வாங்கின முத ஏமாளி இவன் தான்). ஒருத்தன் முள்ளம்பன்னி மாதிரி தலைமுடி வச்சுக்கினு ரவுண்ட்ஸ் வர்றான். இன்னொருத்தன் எப்பப் பாத்தாலும் ஏதாவது இங்கிலீசு பாட்டப் பாடிக்கிட்டே பீட்டர் விட்டுக்கினு அலையறான். இவங்க அப்பா அம்மாக்கள்ல்லாம் ஒவ்வொரு விதம். எல்லாரையும் நமக்கு காட்டறத்துக்குள்ளே, ஏய், ஹீரோயின் காட்டுங்கடான்னு பக்கத்து சீட்டு பார்ட்டி ரவுசு பண்ணிட்டான். ஹீரோயின் சுமாரா கீது. அப்படி ஒண்ணும் பெரிய பிகரா இல்ல. ஆனா மூஞ்சியிலெ நல்ல குறும்பு தெரியுது. தம்மாத்தூண்டா இருந்துகினு நல்லா நடிச்சிருக்கு.

நம்ம வயசு பசங்க பாய்ஸ் எல்லாரும் பொண்ணுங்க பின்னாடியே அலையறானுங்க. நாலஞ்சு சீன் காமெடிக்காக இங்கே வச்சிருக்கனுங்க. ஆனா, "அல்லாரும் உஷாரா இருங்க. இதப் பாத்துட்டு நம்ம எளவட்டங்களும் பொண்ணுங்க பின்னாடியே அலையப் போறானுங்க, அதனால இந்தப் படத்தை வெட்டுங்க, தடா பண்ணுங்க"ன்னு ஒரு கும்பல் கெளம்பி இருக்குது. இதுக்கு முன்னாடி பசங்க அலஞ்சானுங்களா? ஆமாம். இதுலே காட்டியிருக்கதையெல்லாம் பசங்க செஞ்சானுங்களா? ஆமாம். இந்தப் படத்துனால கெட்டுப் போயிடுவானுங்களா? அதான் இல்லை. ஏன்னா, பசங்க, போன வருஷமே துள்ளுவதோ இளமை பாத்துக் கெட்டுப் போயிட்டானுங்களே! (அந்தப் படம் வந்தப்பவும் இப்படித் தான் சொன்னாங்க). நம்ம எளவட்டங்கல்லாம் ஆயிரம் விஷயம் பாக்கறானுங்க. அதிலே இதுவும் ஒண்ணு. இந்தப் படத்தாலே கெட்டுடும், ஆச்சா பாச்சான்னு குதிச்சா, பசங்க, இந்தப் படத்திலெ என்ன தான் கீதுன்னு பாக்கக் கெளம்பிடுவாங்க. அதனால, ரவுசு பண்ணற கும்பல்லாம், 'இளமையில இதெல்லாம் சகஜமப்பா'ன்னு கம்னு கெடங்க.

எத்தினையோ படமும், புக்ஸ¤ம் கீது, அதிலெ இதுவும் ஒண்ணு. சனங்க எல்லாரும் படத்திலெ வர்ற மாதிரியா பண்ணறாங்க? எத்தினி பேரு இந்தியன் பாத்துட்டு லஞ்சம் வாங்கறதை நிறுத்தினான்? எத்தினி ஆளு கிழக்கு சீமையிலெ பாத்துட்டு வக்காளி-ன்னு திட்டிட்டு அலையறான்? அதனாலெ, ஒரு படத்தால 'யூத்' எல்லாம் கெட்டுடுவாங்கன்னு சொல்றது எல்லாம் சும்மா டூப்பு. கெட்டுப்போற பசங்களை ரெண்டு மணி நேரம் 'புதிய கீதை' பாக்க வை. அதோட அறிவுரையை கேட்டு கேட்டு பசங்க திருந்திடுவானுங்க :-) அதான் இந்த பாய்ஸ் படத்துக்கு UA செர்ட்டிபிகேட் குடுத்துட்டானுங்களே, குழந்த குட்டியெல்லாம் படத்துக்கு கூட்டிக்கினு போகாம இரு. அம்புட்டுதேன். இந்த மாதிரி ஏ ஜோக்கு, எளவட்ட காமெடி அல்லாம் ரசிக்கற ஆளா நீ, அப்போ போ இந்தப் படத்துக்கு. இல்லியா, போகாதே. ஏதாவது விக்ரமன் படத்துக்கோ, வி.சேகர் படத்துக்கோ போ. ஆனா, மத்தவன் பாக்கக் கூடாதுன்னு சொல்லாதே. மத்தவன் ராமனா இருக்கணுமா, ஜொள் பார்ட்டியா வரணுமான்னு நீ யாருய்யா சொல்றதுக்கு?

படம் வேகமாத்தான் ஓடுது. சிரிக்கறத்துக்கு நெறைய எடங் கீது. ரகுமான் பாட்டெல்லாம் தியேட்டரிலெ கேக்கும்போது நல்லா தான் கீது. எழுந்து ஆடணும் போலக் கீது. காமெரா வொர்க்கு பிரமாதம். அசத்திப்புட்டானுங்கோ! இதுக்காகவே படத்த இன்னொரு தடவ பாக்கணும். நம்மூரிலெ நடந்த பூகம்பம், பொடா சட்டம், எம் டி வி-ன்னு டாபிக்கலா விஷயங்களை கலந்திருக்காங்க. வில்லன் கில்லன்-ல்லாம் இல்ல. பாய்ஸ் வீட்ட விட்டு வெளியே வந்து, வெளி ஒலகத்த எப்படி சமாளிக்கறாங்க, சம்பாரிச்சு, பாடி பெரிய ஆளா வர்றானுங்கன்னு காமிக்கறாங்க. ஐயப்பன் காசெட்டு போடறது, கோயில் சாப்பாட்டிலெ வயத்தை வளக்கறது-ன்னு சமாசாரங்க குன்சா தான் சொல்றாங்க. பசங்க வீட்ட விட்டு வந்ததுமே பெரிசா செஞ்சு கிழிச்சு சாதிக்கற மாதிரி காட்டலெ. அவங்க கஷ்டப்படறது, ஏண்டா வீட்ட விட்டு வந்தோம்ன்னு நொந்துக்கெறதுன்னு சரியாத்தான் காட்டியிருக்கானுங்க. கடசியிலெ சாலமன் பாப்பையா வந்து அறுத்துட்டு படத்த முடிச்சுடறாரு.

ஏதோ, மூணு மணி நேரம் நல்லா போச்சுப்பா. ஜாலியா பாக்கறதா இருந்தா பாய்ஸ் பாக்கலாம். எளவட்டங்களா, படத்தப் பாத்துக் கெட்டுப்போயிடாதீங்க. நம்ம பாலு மகேந்திரா ஏதோ கில்பான்ஸ் படம் பண்ணறாராம் (தனுஷ், அதான்ப்பா காதல் கொண்டேன் பார்ட்டி, அவன் தான் ஹீரோ). அந்தப் படத்தப் பாத்துட்டு கெட்டுப் போங்கப்பா. ஒண்ணும் அவசரமில்ல. இல்லாட்டி இருக்கவே இருக்கு, செல்வராகவனோட அடுத்த படம்.

<b>- பாலாஜி. - </b>

Posted by balaji at September 9, 2003 12:43 AM
Nadpudan
Chandravathanaa
Reply
#35
நன்றி சந்திரவதனா அக்கா

சந்திவதனா அக்கா இணைத்த இணைப்பை படித்தவுடன் நான் கதைத்தபோது அந்த தமிழ்தான் வருகின்றது

என்ன அப்படி எழுதிப்போட்டீக ??????????
[b] ?
Reply
#36
கம்னு கெட பரணி நைனா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அவனுக அப்படி எழுதுவானுக ரொம்ப பேசின கலாசிடுவானுக... :wink:
Reply
#37
புதுப் படப்பாடல்களை கேட்பதோடு சரி. ஆனல் boys பட விமர்சனங்களைக் பார்க்கும்போது ஓருமுறை படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் செய்ய வேண்டும் போல் தோன்றுகின்றது. எது எப்படி இருந்தாலும் சரி படத்துக்கு நல்ல விளம்பரம்தான் கிடைத்து இருக்கின்றது.

நட்புடன்,
தமிழ்செல்லம்.
Reply
#38
ஆமாம் தமிழ்ச்செல்லம்!
"பாபா" திரைப்படத்திற்கும் இப்படித்தான் விளம்பரங்கள் கிடைத்தன.
ஆனால் தமிழகத்தில் இன்று அரசியல்வாதிகளுக்கும், சினிமாத்
துறைக்கும் இடையில் பகை. அதான் இந்தப் பிரச்சினைகளுக்குக்
காரணம். தமிழக அரசியவாதிகள் தமிழ்க் கலாச்சாரத்தைப் பற்றிக்
கவலைப் படுகினமாம்...!? அடுத்து கமலின் "சண்டியர்" திரைப்படம்
பலவித விமர்சனங்களை ஏற்கனவே சந்தித்திருக்கிறது. அதுவும் வந்து
புயல் கிளப்பும். பொறுத்திருந்து இரசிப்போம்! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


Reply
#39
வணக்கம் நண்பர்களே...

பெடியங்களப் பற்றி..(அட நம்மட பெடியங்கள் இல்ல. இது Boys படம்)
திண்ணை இணையத்தளத்தில் விமர்சனக்கடிதம் ஒன்றுள்ளது.
அப்பட்டமாக அப்படியே எழுதியிருப்பதால் தொடுப்பைத் தருகிறேன்:

http://www.thinnai.com/pl0904039.html


Reply
#40
அட காலுக்கு மேல கால் போட்டு செற்றியில இருந்து ரீவி பார்க்கிற இரகசியம் இப்பதான் விளங்குது :? :?:
Reply


Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)