Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
ஆஹா இவங்க என்னம் கோள்மூட்டுற தொழிலை விடல்லையா? இளையோர் அமைப்பு பிரிவை மூடவைச்ச பெருமை யாரை சாரும் எண்டு ஒரு பட்டிமன்றம் வைச்சால் தப்பே இல்லை? 6,7 பக்கத்தில் குருவி, இவோன் என்னம் பலர் கருத்துகள் எழுதி இருந்தார்கள், அது பல நாட்களாக இருந்தது, நேற்று வந்து சூடா 2 வார்த்தை கதைச்ச சிலரால் கருத்து திசை மாறிச்சென்று வெட்டுறுத்தினர்களின் கையில் சிக்கிவிட்டது அந்த பிரிவு,,
கருத்துக்களம் என்றால் அது ஒரு பக்கச்சார்பாகத்தான் இருக்கனும் எண்டு எதிர்பார்க்கிறது தவறு,, ஒரு பொருளை எடுத்து அதனை ஒவ்வொருக்கும் காட்டும்பொழுது ஒவ்வொருவரினதும் மனதில் ஒரே மாதிரியான என்னம் வராது, அதேமாதிதித்தான் குருவி தன்னுடைய கருத்தை சொல்லுறார், அதற்கு பலர் தங்களின் (எதிர்)கருத்தை சொன்னார்கள், அதை வாசித்த அனைவருக்கும் விளங்கும் யாருடைய கருத்தில் அர்த்தம் இருக்கு என்று,
சரி இளையோர் அமைப்பைப்பற்றி விவாதிக்கும் இடத்தில அசினுக்கும் பிசினுக்கும் என்னவேலை? அல்லது பேடிக்கும் ஆண்மையற்றவனுக்கும் என்ன வேலை? இதை யார் முதல்ல அங்க செருகினது? குருவியா? அல்லது நீரா? அது எப்படி இவோன், குருவி சண்டைபிடிக்கும்பொழுது மூடாத அந்த பக்கம் நீர் வந்த உடன மூடினது? நானும் அங்கே பல கருத்துக்களை முன்வைத்தேன், இவோன், குருவி, நான், என்னம்பலர் கருத்துக்களை முன்வைக்காத பொழுது மூடாத களத்தை உம்முடைய கருத்தின் மூலம் மூடவைத்துவிட்டு எதற்கு இந்த கோள் மூட்டுகை?? :roll: :? :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 319
Threads: 22
Joined: Oct 2004
Reputation:
0
டக்ளஸ் அந்தக் கருத்துப் பகுதி ஏன் மூடப்பட்டதென்று எனக்கு தெரியாது. நாரதர் எழுதியவற்றை நான் பார்க்கவில்லை. ஒருவர் எழுதுகின்ற கருத்துக்களின் விசமத்தனத்தை உணர்ந்து எதிர்க்கருத்துக்களை வைத்த போது அதை ஏன் தூக்கினார்கள் என்று தெரியவில்லை. என்னுடைய வேண்டுகோள் இதுதான்.. நான் நீங்கள் எழுதியவற்றை தண்க்கை செய்யட்டும். ஆனால் குருவி எழுதியவற்றை மீளவும் வெளியிட வேண்டும்.
வர்ணன்.. உங்களது கோரிக்கை எதை சொல்கிறதென்றால்.. அதாவது அவர் யார் என்பது முதலே தெரிந்து விட்டால் அவர் உங்களுக்கு சார்பானவரென்றால் அவருடை எல்லாக் கருத்துக்களும் அற்புதம் என்றும் அவர் உங்கள் கருத்துக்கு சார்பானவராய் இல்லயென்றால் அவரது அத்தனை கருத்துக்களும் பொய்யானவை என்று முடிவெடுக்கவே.
ஐயா.. சிலநேரங்களில் உங்கள் வார்த்தைகளில் சொல்வதானால்.. தேசியத்திற்கு எதிரானவரும் சரியான சில கருத்துக்களை முன்வைக்கலாம். அதே நேரம் தேசியத்திற்கு சார்பானவரும் பிழையான கருத்துக்களை முன்வைக்கலாம். ஆகவே அந்தக் கருத்ததுக்களை வாசித்து விட்டு அது தொடர்பில் தீர்மானியுங்கள்.
Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
[b]மேற்கோள்:
ஐயா.. சிலநேரங்களில் உங்கள் வார்த்தைகளில் சொல்வதானால்..
தேசியத்திற்கு எதிரானவரும் சரியான சில கருத்துக்களை முன்வைக்கலாம்.
அண்ணா - தேசியத்துக்கு எதிரானவர் வைக்க கூடிய- சரியான கருத்து - எது??
தயவு செய்து உடனடியா சொல்லுங்க- நழுவி போக மாட்டிங்க எண்டு நம்புறன் ! 8)
-!
!
Posts: 319
Threads: 22
Joined: Oct 2004
Reputation:
0
Quote:அண்ணா - தேசியத்துக்கு எதிரானவர் வைக்க கூடிய- சரியான கருத்து - எது??
புலம் பெயர் நாடுகளில் புலிகளின் பெயரால், தமிழீழ விடுதலைப் போரை தமது சொந்த சுயநலத் தேவைகளுக்கு யாரும் பயன்படுத்தினால் அது தொடர்பான தகவல்களை அவர்களால் வெளிப்படுத்த முடியும்..
அதே நேரம் தேசியத்துக்கு சார்பானவர் பிழையான கருத்துக்களை முன்வைக்கலாம் என்பதனை ஏற்றுக்கொள்கிறீர்கள் தானே? தயவு செய்து உடனடியாக பதில் சொல்லுங்க.. நழுவி போய்விடுவீர்கள் என நான் நம்பவில்லை
Posts: 319
Threads: 22
Joined: Oct 2004
Reputation:
0
Quote:அதே நேரம் தேசியத்துக்கு சார்பானவர் பிழையான கருத்துக்களை முன்வைக்கலாம் என்பதனை ஏற்றுக்கொள்கிறீர்கள் தானே?
இதற்கு அண்மைக்கால உதாரணங்களை யாழ் களத்திலேயே கண்டிருப்பீர்கள் தானே
Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
இவோன் Wrote:Quote:அண்ணா - தேசியத்துக்கு எதிரானவர் வைக்க கூடிய- சரியான கருத்து - எது??
புலம் பெயர் நாடுகளில் புலிகளின் பெயரால், தமிழீழ விடுதலைப் போரை தமது சொந்த சுயநலத் தேவைகளுக்கு யாரும் பயன்படுத்தினால் அது தொடர்பான தகவல்களை அவர்களால் வெளிப்படுத்த முடியும்..
அதே நேரம் தேசியத்துக்கு சார்பானவர் பிழையான கருத்துக்களை முன்வைக்கலாம் என்பதனை ஏற்றுக்கொள்கிறீர்கள் தானே? தயவு செய்து உடனடியாக பதில் சொல்லுங்க.. நழுவி போய்விடுவீர்கள் என நான் நம்பவில்லை
இதெல்லாம் ஒரு பதிலா? திரும்பவும் ஒரு மதில் மேல் பூனை கருத்தாய் இருக்கிறதே-
என் கேள்வி திரும்பவும்-
<b>அண்ணா - தேசியத்துக்கு எதிரானவர் வைக்க கூடிய- சரியான கருத்து - எது?? </b>
தேசியம் கூடாது என்பதா?
சிங்களவனோட சேர்ந்து வாழணும் என்பதா?
இல்லை - தீவுசேனையில் போய் - கருணாவோட - ஆமி காம்ப் ல இருப்பதா-?
தேசியத்துக்கு எதிராய் - நீங்க அர்த்தப்படுத்தினவங்க -
தேர்வு செய்யும்- சரியான வழி - இதில என்ன எண்டு தெளிவா சொல்லுங்க- சொதப்பாமல்-! 8)
-!
!
Posts: 319
Threads: 22
Joined: Oct 2004
Reputation:
0
சரி.. தேசியத்துக்கு எதிரானவர் 4 கருத்தக்களை முன்வைக்கின்றார்.
1. தேசியம் கூடாது
2.கருணாவுடன் ஆமி காம்பில் இருத்தல்.
3.ஒற்றையாட்சி முறையில் தீர்வு
4.புலம்பெயர் நாடுகளில் சிலர் தமது சுயநலத்திற்காகவே புலிகிள்ன போராட்டத்தை பயன்படுத்துகின்றனர்.
திரும்பவும் நான் சொன்னதை வாசித்துப் பாருங்கள்.
Quote:தேசியத்திற்கு எதிரானவரும் சரியான சில கருத்துக்களை முன்வைக்கலாம்
இங்கே தேசியத்திற்கு எதிரான ஒருவர் சொன்ன நான்காவது கருத்து சில இடங்களில் சரியாயிருக்கிறது. ஆக.. நாம் என்ன செய்ய வேண்டும்.. அவருடைய முதலாவது கருத்து ஏன் சரியில்லை என்று கருத்து வைக்க வேணும். இரண்டாவது கருத்து ஏன் பாதகமானது என கருத்து வைக்க வேண்டும். 3வது கருத்து எதற்காக நடக்க கூடாது என விளக்க வேணும். அதே நேரம் 4 வது கருத்தில உள்ள உண்மைநிலை நாம் உணர்ந்து கொள்ளத் தான் வேணும்.
உங்களுக்கு இன்னும் விளங்கியிருக்காது. பரவாயில்லை. தவிரவும் நான் இங்கு கருத்துக்கள பற்றித்தான் கதைச்சுக் கொண்டிருக்கிறன். அவர் என்ன நிலைப்பாடு உள்ளவராயிருந்தால் என்ன? அவரது கருத்துக்களை பாருங்கள். அதன் பின்னர் அது சரியானதா பிழையானதா என விவாதியுங்கள்..
நான் கேட்டதற்கு எங்கெ பதில்..? தேசியத்திற்கு ஆதரவான ஒருவர் பிழையான கருத்துக்களை சொல்ல மாட்டாரா..?
Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
இவோன் Wrote:சரி.. தேசியத்துக்கு எதிரானவர் 4 கருத்தக்களை முன்வைக்கின்றார்.
1. தேசியம் கூடாது
2.கருணாவுடன் ஆமி காம்பில் இருத்தல்.
3.ஒற்றையாட்சி முறையில் தீர்வு
4.புலம்பெயர் நாடுகளில் சிலர் தமது சுயநலத்திற்காகவே புலிகிள்ன போராட்டத்தை பயன்படுத்துகின்றனர்.
திரும்பவும் நான் சொன்னதை வாசித்துப் பாருங்கள்.
Quote:தேசியத்திற்கு எதிரானவரும் சரியான சில கருத்துக்களை முன்வைக்கலாம்
இங்கே தேசியத்திற்கு எதிரான ஒருவர் சொன்ன நான்காவது கருத்து சில இடங்களில் சரியாயிருக்கிறது. ஆக.. நாம் என்ன செய்ய வேண்டும்.. அவருடைய முதலாவது கருத்து ஏன் சரியில்லை என்று கருத்து வைக்க வேணும். இரண்டாவது கருத்து ஏன் பாதகமானது என கருத்து வைக்க வேண்டும். 3வது கருத்து எதற்காக நடக்க கூடாது என விளக்க வேணும். அதே நேரம் 4 வது கருத்தில உள்ள உண்மைநிலை நாம் உணர்ந்து கொள்ளத் தான் வேணும்.
உங்களுக்கு இன்னும் விளங்கியிருக்காது. பரவாயில்லை. தவிரவும் நான் இங்கு கருத்துக்கள பற்றித்தான் கதைச்சுக் கொண்டிருக்கிறன். அவர் என்ன நிலைப்பாடு உள்ளவராயிருந்தால் என்ன? அவரது கருத்துக்களை பாருங்கள். அதன் பின்னர் அது சரியானதா பிழையானதா என விவாதியுங்கள்..
நான் கேட்டதற்கு எங்கெ பதில்..? தேசியத்திற்கு ஆதரவான ஒருவர் பிழையான கருத்துக்களை சொல்ல மாட்டாரா..?
தலைவா உங்க கருத்துக்கு பதில் சொல்லாமல் என்ர கொம்பியூட்டரை ரேண் - ஓவ் பண்ணமாட்டன் -!
முதலிருந்தே நான் கேட்ட கேள்வியை திரும்ப கேக்கிறன் -
இவோன் அவர்களே-
நீங்கள்-யார்? உங்க நிலைப்பாடு எது-?
இந்த கருத்தை சொல்ல வருவதன் மூலம் -
உங்க நிலைப்பாடு:
1)தேசியத்துக்கு துணையாவா?
2)தேசியத்துக்கு எதிராவா?
3)இரு சார்பு நிலையும் இல்லையா?
4) சந்தடி சாக்கில - சிந்து பாடுறதா?
உங்க நிலைப்பாடை முதல் சொல்லுங்க-!8)
-!
!
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் எல்லாவற்றையும் எங்கும் எழுதிவிட முடியாது. கருத்துக்கள் மற்றையோரைப் பாதிக்கும், கோபமூட்டும், வன்முறைகளைத் தூண்டும் (உ+ம். முகம்மது நபியின் கேலிச்சித்திரம்) என்பதைப் புரிந்து கொள்ளாமல் விமர்சனம் என்ற பெயரில் ஆளையாள் தாக்கி எழுதுவதனால் எதுவித பலனுமில்லை. உணர்ச்சிவசப் பட்டு, அவசரப்பட்டு எழுதினால், உங்கள் அம்மணத்தை கண்காட்சியாக எல்லோரும் பார்க்க அனுமதிக்கின்றீர்கள் என்று அர்த்தம்.
விமர்சனங்கள் ஆரோக்கியமாக இருக்கவேண்டும், முட்டையில் மயிர் பிடுங்வதாக இருக்கக் கூடாது, தற்பெருமையைப் பறைசாற்றுவதாக இருக்கக் கூடாது. கற்றுக் குட்டித்தனமான விமர்சனங்களையும், கருத்துக்களையும் எழுதிக்கொள்வதால் எவரையும் அறிவூட்டமுடியாது. மாறாகத் தவறான பாதையில்தான் இட்டுச் செல்லமுடியும் (தெளிவானவர்கள் தங்கள் பாதையிலேயே போய்க் கொள்வார்கள்)
யாழ் களத்தில் வருபவர்கள் பலர் அனாமேதயங்களே. எழுதுபவர்களின் கருத்துக்களை வைத்துக் கொண்டுதான் அவர் எந்தத் தளத்தில்/பின் புலத்தில் இருந்து கருத்தாடுகின்றார் என்பதை மற்றவர்வர்கள் புரிந்து கொள்ள முயலவேண்டும்.
தேசியத்திற்கு எதிராக எழுதப் போகின்றேன் அல்லது ஆதரவாக எழுதப் போகின்றேன் என்று ஒருவர் முன்கூட்டியே அறிவித்தால், அதை அப்படியே ஏற்றுக் கொள்வதும் முட்டாள்த்தனமானது/சிறுபிள்ளைத்தனமானது.
<b> . .</b>
Posts: 319
Threads: 22
Joined: Oct 2004
Reputation:
0
Quote:அண்ணா - தேசியத்துக்கு எதிரானவர் வைக்க கூடிய- சரியான கருத்து - எது??
இவ்வாறான ஒரு கேள்வியைத்தான் நீங்கள் முதலில் வைத்தீர்கள். அதற்க பதில் சொன்னேன். திருப்தியா.. நான் உங்களை ஒரு கேள்வி கேட்டிருந்தேன்.. தேசியத்திற்கு ஆதரவானவர்கள் எங்குமே பிழையான கருத்துக்களை முன்வைக்க மாட்டாரா
Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
கிருபன்(ஸ்) - இங்க ஆளையாள் தாக்கி ஒண்ணும் நடக்கல-
அவை என்னத்தை சொல்ல வருகினம் - என்பதை -தெளிவா சொல்லிடுங்க எண்டு - கேட்க நினைக்கிறேன் - அவ்ளோதான் -! 8)
-!
!
Posts: 319
Threads: 22
Joined: Oct 2004
Reputation:
0
Quote:யாழ் களத்தில் வருபவர்கள் பலர் அனாமேதயங்களே. எழுதுபவர்களின் கருத்துக்களை வைத்துக் கொண்டுதான் அவர் எந்தத் தளத்தில்/பின் புலத்தில் இருந்து கருத்தாடுகின்றார் என்பதை மற்றவர்வர்கள் புரிந்து கொள்ள முயலவேண்டும்.
தேசியத்திற்கு எதிராக எழுதப் போகின்றேன் அல்லது ஆதரவாக எழுதப் போகின்றேன் என்று ஒருவர் முன்கூட்டியே அறிவித்தால், அதை அப்படியே ஏற்றுக் கொள்வதும் முட்டாள்த்தனமானது/சிறுபிள்ளைத்தனமானது
வர்ணன் உங்களது கேள்விக்கு கிருபன் பதில் சொல்லிவிட்டார்.
Quote:விமர்சனங்கள் ஆரோக்கியமாக இருக்கவேண்டும், முட்டையில் மயிர் பிடுங்வதாக இருக்கக் கூடாது, தற்பெருமையைப் பறைசாற்றுவதாக இருக்கக் கூடாது. கற்றுக் குட்டித்தனமான விமர்சனங்களையும், கருத்துக்களையும் எழுதிக்கொள்வதால் எவரையும் அறிவூட்டமுடியாது. மாறாகத் தவறான பாதையில்தான் இட்டுச் செல்லமுடியும்
கிருபன் உங்களது கருத்தை ஏற்றுக்கொள்கிறென். அனால் இதுதான் கடந்த சில நாட்டகளாக தமிழ் இளையோர் அமைப்ப என்ற தலைப்பில் நடந்தது. தமிழ் இளையோரின் செயற்பாடுகள் முட்டையில் மயிர் பிடுங்கும் வடிவில் விமர்சிக்கப்பட்டன. போஸ்ரர் சரியா எழுதேல்லை. அதில சில எழுத்துக்கள் வடிவில்லை. சில எழுத்துக்களில பிழை விட்டிருக்கு.. ஒழுங்கா காலை வைச்சிருக்க வில்லை போன்ற விமர்சனங்களைத்தான் நான் எதிர்கொண்டு பதில் சொல்லிக்கொண்டிருந்தேன்..
வர்ணன்.. ஒரு வேளை நான் தேசியத்திற்கு ஆதரவானவன் என்று சொல்லி விட்டால்.. நான் சொல்லும் அத்தனை கருத்துக்களையும் சரியென்று ஏற்று விடுவீர்களா? வாசித்த தானே ஏற்பீர்கள்..?
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
வர்ணன், உங்கள் கேல்விகளுக்கு யாரும் பொய்யான பதில்களைக் கூறலாம். அவற்றினை வைத்து அவர் ஆதரவானவரா, எதிரானவரா என்று தீர்மானிக்கமுடியாது.
பேசாமல் ஒரு வாக்களிப்பை வைத்து, யாழ் களத்தில் வருபவர்களின் நிலைப்பட்டைப் புரிந்துகொள்ளுங்கள்.
<b> . .</b>
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
varnan Wrote:கிருபன்(ஸ்) - இங்க ஆளையாள் தாக்கி ஒண்ணும் நடக்கல-
அவை என்னத்தை சொல்ல வருகினம் - என்பதை -தெளிவா சொல்லிடுங்க எண்டு - கேட்க நினைக்கிறேன் - அவ்ளோதான் -! 8)
தலைப்பைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லையே. நீங்கள் புதிதாக ஒரு தலைப்பைத் தொடங்கி உங்கள் கேள்விகளை வைப்பது பொருத்தமாக இருக்கும். 8)
<b> . .</b>
Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
kirubans Wrote:வர்ணன், உங்கள் கேல்விகளுக்கு யாரும் பொய்யான பதில்களைக் கூறலாம். அவற்றினை வைத்து அவர் ஆதரவானவரா, எதிரானவரா என்று தீர்மானிக்கமுடியாது.
பேசாமல் ஒரு வாக்களிப்பை வைத்து, யாழ் களத்தில் வருபவர்களின் நிலைப்பட்டைப் புரிந்துகொள்ளுங்கள்.
இதென்ன கருத்து கிருபன்?
நான் என்ன யாழ்கள பிரச்சினையை பற்றின தலைப்பிலையா பேசுறன்?
இவோன் அவர்கள் - கருத்தோடு - முரண்பாடு- அவ்ளோதான் - ! புதுசா குழப்பங்களை உருவாக்க மாட்டீர்கள் என்று நம்புறன் -! 8)
-!
!
Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
kirubans Wrote:varnan Wrote:கிருபன்(ஸ்) - இங்க ஆளையாள் தாக்கி ஒண்ணும் நடக்கல-
அவை என்னத்தை சொல்ல வருகினம் - என்பதை -தெளிவா சொல்லிடுங்க எண்டு - கேட்க நினைக்கிறேன் - அவ்ளோதான் -! 8)
தலைப்பைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லையே. நீங்கள் புதிதாக ஒரு தலைப்பைத் தொடங்கி உங்கள் கேள்விகளை வைப்பது பொருத்தமாக இருக்கும். 8)
ஆஹா நண்பா- தலைப்பு எப்பிடி இருந்தா என்ன?
மரியாதை குறைவா ஏதும் பேசுறமா நாங்க - இங்க ?
ஏன் அங்க எல்லாம் போறீங்க?
சக கள உறுப்பினர்களாய் - எங்கயும் கெளரவமாய் பேசலாம் - ! 8)
-!
!
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
varnan Wrote:இங்கே பகிரங்கமாய் - எதுதான் உங்கள் வழி என்று தெளிவுபடுத்தணும் - வாக்குவாத படுறவங்க-!
மதில்மேல் பூனையாய் இருந்து- கருத்து எழுதி - ஏதும் கெளரவம் கொள்ளமுடியுமா?
முதல்ல சும்மா - அங்க ஒண்டு இங்க ஒண்டு பேசுறவங்க -தெளிவான நிலைப்பாடு - ஒன்று சொல்லணும்-!
உங்க நிலைப்பாடு:
<b>1)தேசியத்துக்கு துணையாவா?
2)தேசியத்துக்கு எதிராவா?
3)இரு சார்பு நிலையும் இல்லையா?
4) சந்தடி சாக்கில - சிந்து பாடுறதா?</b>
முதல்ல தெளிவு படுத்தணும்- இவ்ளோ - விபரம் - தெரியும் எண்ட ரீதியில பேசிகொள்ளும் நீங்க - முதல்ல - நீங்க - என்ன கொள்கையை கொண்டு இருக்கிங்க எண்டு தெளிவு படுத்தணும்-! 8)
இதை சொல்ல நீ யார் என்றும் நீங்க கேக்கலாம்- அதே நேரம்- தெளிவா - யார் நீங்க - எண்டு சொல்லாமலே-
அநியாயத்துக்கு - அளந்து விடுறீங்களே- பொது இடத்தில்-
அதை நானும் கேக்கலாம் என்ற நம்பிக்கையில்-! 8)
வர்ணன் இதே எனது நிலைப்பாடும் பதில்களும்
<b>1) தேசியத்திற்கு எதிரானது
2) புலிக்கு எதிரானது
3) எந்தச்சார்பில் ஏதாவது புடுங்கலாமே அந்தச்சார்பானது
4) பொழுது போகாட்டி நல்லா சந்தியிலை சிந்து பாடுவன், அதுக்கு சம்திங் கிடைச்சா இன்னும் நல்லது</b>
இனி அடுத்து என்ன செய்யலாம் என்று சொல்லும் ஆவலுடன் எதிர்பாத்துக் கொண்டிருக்கிறன்
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
kurukaalapoovan Wrote:வர்ணன் இதே எனது நிலைப்பாடும் பதில்களும்
<b>1) தேசியத்திற்கு எதிரானது
2) புலிக்கு எதிரானது
3) எந்தச்சார்பில் ஏதாவது புடுங்கலாமே அந்தச்சார்பானது
4) பொழுது போகாட்டி நல்லா சந்தியிலை சிந்து பாடுவன், அதுக்கு சம்திங் கிடைச்சா இன்னும் நல்லது</b>
இனி அடுத்து என்ன செய்யலாம் என்று சொல்லும் ஆவலுடன் எதிர்பாத்துக் கொண்டிருக்கிறன்
நானும் உங்களை மாதிரித்தான்.......! 8) 8) 8)
வாங்கோ இரண்டு பேருமாச் சேர்ந்து ஒரு ரேடியோ தொடங்குவம்......! சனத்தை எல்லாம் திரட்டி ஐநாக்கு முன்னால ஆர்ப்பாட்டம் செய்வம். எங்கட பலத்தைப்பார்த்து எங்களையும் பேச்சுவார்த்தைக்கு கூப்பிடுவினம்...........
காசைக் கொண்டு புலத்துக்கு பக்கத்து நாட்டுக்காறன் தானா வருவான்.. எங்கட சுகுமாரையும் சேர்ப்பம்...
::
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
நீர் என்னத்துக்கு வடிவேலு மாதிரி வாறீர் இதுக்குள்ளை.
வர்ணன் தெளிவா இங்குள்ளவர்களின் நிலைப்பாட்டை எழுதட்டாம், ஏதே முடிவெடுக்கப் போறாராம் அதுக்குத்தான் அவருக்கு விளக்கம் குடுத்திருக்கு. இனி என்ன செல்லப் போறார் அடுத்து என்ன செய்ய தயாரா இருக்கிறார்?
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
உங்கட கட்சீல சேரவெளிக்கிட்ட எனக்கு தேவைதான்..... <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
::
|