Posts: 509
Threads: 71
Joined: Nov 2005
Reputation:
0
எனது அம்மம்மாவின் காலத்தில் பெண்கள் ஒல்லியாக இருந்தால் அவர்களை வருத்தக்காரர் என சொல்லி திருமணம் செய்ய மறுப்பார்களாம் (அம்மம்மா கூறியது எதற்கும் ஒருக்கால் உங்கள் பெற்றேரிடமு கோளுங்கள்)
அப்படி இருந்த காலத்தில் ஔவையார் இப்படி கூறியிருப்பாரா
Posts: 142
Threads: 9
Joined: Feb 2006
Reputation:
0
பாவிப்பது: பகையாளன் குடியை உறவாடிக்கெடு.
உண்மை அர்த்தம்: பகையாளன் குடியை உறவாடி[அவனிடம் உனக்குள்ள பகையை] கெடு.
[எங்கேயோ கேட்டது]
.
Posts: 870
Threads: 22
Joined: Apr 2005
Reputation:
0
உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கழகு பழமொழியா?? எப்பவிலை இருந்து
Posts: 142
Threads: 9
Joined: Feb 2006
Reputation:
0
அடடா...நர்மதா தப்பா சொல்லிட்டாங்க...
அது திருக்குறள் இல்ல.....!!!
.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
Quote:வயிறு தொப்பையாக இல்லாமல், சுருங்கி.. அதாவது ஒட்டி இருத்தல் பெண்களுக்கு அழகு என்பதாகத்தான், இதன் பொருளை எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதன் உண்மைப் பொருள்
உண்டி என்பது சாப்பாடு. சாப்பாடு செய்வதற்கான நேரம் அதிகமாகும் பட்சத்தில, பெண்கள் சமையலறையிலேயே முடங்கி விடுகிறார்கள். இதனால் இவர்கள் மற்றைய விடயங்களிலிருந்து பின்னுக்குப் போய் விடுகிறார்கள். இந்த நிலை மாறுவதற்கு அவர்கள் சுவையான சமையலை குறுகிய நேரத்துக்குள் செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். இதுவே பெண்களுக்கு அழகு
இப்படி வலைப்பதிவில் சந்திரவதனா அக்கா எழுதியிருக்கார் :?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 151
Threads: 4
Joined: Feb 2006
Reputation:
0
உணவின் அளவை குறைத்தால் அதைச் செய்யும் நேரமும் குறையும் தானே.
.
Posts: 142
Threads: 9
Joined: Feb 2006
Reputation:
0
அப்படிங்கிறீங்க.....
எப்டி???
10 முட்டை அவிய 10 நிமிசம் எண்டா...1 முட்டை அவிய 1 நிமிஷம் அப்டியா???
.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
ப்ரியசகி Wrote:Quote:பாவிப்பது: பகையாளன் குடியை உறவாடிக்கெடு.
இதை நான் இப்படி தான் நினைத்தேன்
பகையாளன்..குடியை..அதாவது எதிரியின் வாழ்க்கையை..உறவாடி..வஞ்சமாக உறவாடி..கெடு என்பதை குறிக்கின்றது என்று..
:roll: :roll: இது தவறா?
உறவாடி எதிரியின் வாழ்க்கையை கெடுக்கும்படி முன்னோர்கள் சொல்லியிருக்கமாட்டார்கள் என நினைக்கின்றேன். பழமொழிகள் பெரும்பாலும் நல்வழிப்படுத்தும் நோக்கத்துடனேயே சொல்லப்பட்டிருக்கின்றன.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 509
Threads: 71
Joined: Nov 2005
Reputation:
0
ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்
என்ற பழமொழியின் அர்த்தம் என்ன?
(அதன் உட்கருத்து தற்போது திரிபடைந்துள்ளது என கூறுகிறார்கள்)
Posts: 509
Threads: 71
Joined: Nov 2005
Reputation:
0
நன்றி தமிழமகன்
ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்" என்பது வழக்கத்தில் உள்ள பழமொழி இப்படில்லாம் பயமுறுத்தினா யார்கிட்டதான் வைத்தியம் பாக்குறது?
இதன் உண்மையான வடிவம் இதுதான்.
"ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன்".
Posts: 509
Threads: 71
Joined: Nov 2005
Reputation:
0
மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே
என்ற பழமொழியின் அர்த்தம் என்ன?
(அதன் உட்கருத்து தற்போது திரிபடைந்துள்ளது என கூறுகிறார்கள்)
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
நர்மதா Wrote:மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே
என்ற பழமொழியின் அர்த்தம் என்ன?
(அதன் உட்கருத்து தற்போது திரிபடைந்துள்ளது என கூறுகிறார்கள்)
ஆறு ஓடும் போது அரிக்கப்படும் மணல் ஏதும் தடங்கல் ஏற்படும் போது தேங்கி ஆற்றில் சில இடங்களில் திட்டு போல தோன்றும் . உண்மையில் அது உறுதியற்ற குவியல்/குதிர் . அதை நம்பி, அதாவது ஆற்றின் இடையே திட்டுக்கள் இருக்கிறது என அதை நம்பி காலை வைக்க முடியாது அது ஒருவரை தங்கும் தன்மையற்றது. அதில் நம்பி காலை வைத்தால் அவர் ஆற்றுடன் அடித்துசெல்லப்பட கூடிய சாத்தியம் உண்டு. அதையே அவ்வாறு
மண் குதிர் ஐ நம்பி ஆற்றில் இறங்காதே என்பர்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 509
Threads: 71
Joined: Nov 2005
Reputation:
0
நன்றி குளக்காட்டான்
"மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே" என்பதே பழமொழி.ஆனால் உண்மையிலே இது "மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே" என்பதே சரி. மண்குதிர் என்பது ஆற்று நீரின் சுழற்சியால் ஏற்படும் மணல்மேடுகள். இது பாறை போல் காட்சியளித்தாலும் அதன் மீது ஏறினால் அது நீரில் அமிழ்ந்து விடும்.எனவே மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கக் கூடாது. குதிர் என்பது குதிரை என திரிந்து விட்டது.
Posts: 509
Threads: 71
Joined: Nov 2005
Reputation:
0
"அரசனை நம்பி புருஷனை கைவிட்ட மாதிரி" என்ற பழமொழியின் அர்த்தம் என்ன?
(அதன் உட்கருத்து தற்போது திரிபடைந்துள்ளது என கூறுகிறார்கள்)