Posts: 509
Threads: 71
Joined: Nov 2005
Reputation:
0
அறியத்தருவீர்களா கழுதையறியுமா கற்பூரவாசனையை என்பதன் உண்மையான அர்த்தம் என்ன?
கற்பூரத்துக்கு அப்படி என்ன வாசனையுள்ளது
கழதைக்கும் கற்பூரவாசனைக்கும் என்ன தெடர்பு?
பி.கு: தயவு செய்து நக்கலடிக்காதீர்கள் உண்மையாகவே தெரியாது
Posts: 333
Threads: 16
Joined: Jan 2006
Reputation:
0
உது தான் கோத்தை வித்த கோணல் புளியங்காய்,அதன் விளக்கம் என்ன?
"To think freely is great
To think correctly is greater"
Posts: 142
Threads: 9
Joined: Feb 2006
Reputation:
0
அதுதான் முதல்லயே சொல்லிட்டாரே ஒனியன் சார்.
நீங்கள் ஒனியன் சாரின் அறிமுகப்பகுதியை ஒரு முறை போய் பாருங்கோ...
டோன்ட் வேஸ்ட் த டைம்.
.
Posts: 509
Threads: 71
Joined: Nov 2005
Reputation:
0
இதில் எனக்கு ஒரு சந்தேகம் கழதை ஒரு மிருகம் தானே அதற்கு ஜந்தறிவுள்ளது ஆறவது அறிவான பகுத்தறிவில்லை இல்லை இந்த பகுத்தறிவில்லாத மிருகத்திடம் பகுத்தறிவுள்ள மனிதர் ஏன் கற்பூரத்தை கொழுத்துகிறார்கள் அதனால் என்ன பயன்
ஒவ்வரு மிருகத்திற்கும் ஒவ்வரு சிறப்பு அந்த சிறப்புகளை வெளிக்கொணர்வதை விட்டுவிட்டு அதற்கு முன்னால் கற்பூரத்தை கொழுத்தி மனிதர்களின் மதிப்பை குறைக்கிறார்கள்
இதிலிருந்து நான் விளங்கிக் கொள்வது கழதைக்கு கற்பூரம் கொழுத்தும் அந்த மனிதர்களுக்கு பகுத்தறிவு இல்லை என்பது
Posts: 142
Threads: 9
Joined: Feb 2006
Reputation:
0
ஒனியன் சார்...அவங்க கேக்குறது,,,கழுதைக்கு எதுக்காக கற்பூர வாசனை தெரியணுங்குறதே... கழுதை தெரிஞ்சு என்ன செய்ய போகுது??? எதுக்காக கழுதைக்கும் கற்பூரத்துக்கும் தொடர்பு வந்திசு... ஏன் குதிரைக்கு தெரியுமா கற்பூர வாசனைன்னு வச்சுக்கல.... அப்படித்தானுங்களே நர்மதா???
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
.
Posts: 509
Threads: 71
Joined: Nov 2005
Reputation:
0
கழதைக்கு கற்பூரம் கொழுத்துவது விழலுக்கிறைத்த நீர் போல என கூறலாம்
இதனால் ஒரு பயனும் இல்லை
நாயிற்கு கொழத்தினாலும் அது கற்பூரத்தை முகர்ந்து பிடிக்கும்
Posts: 509
Threads: 71
Joined: Nov 2005
Reputation:
0
ப்ரியசகி நீங்கள் சொல்வது சரி சில பழமொழிகள் ஏற்புடையதல்ல
பல பழமொழிகளின் கருத்துக்களை நம்மவர்கள் மழங்கடித்து விட்டார்கள் (அர்த்தங்களை மாற்றிவிட்டார்கள்)
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
உண்மை அர்த்தம் எனக்கு தெரியாது எனக்கு புரிந்த்வரைக்கும்.
கற்பூரமென்பது அருமையான, வாசனையுடைய ஒருபொருள் கடவுளுக்கு ஏற்புடையது, கெட்ட வாசனைகளை ஈர்த்து அளிக்கக்கூடியது, இறைவனுக்கு ஆரத்தி காட்டுவதால் உயர் பொருளாக கருதப்படுவது, கழுதை எனப்பட்டது மிருகங்களில் இழிவானது அதன் பயன் பாட்டைவைத்து அழுக்குமூட்டை சுமக்கத்தான் லாயக்கானது, பசு, குதிரை, யானை போன்று பயனும் அற்றது, பெறுமதியும் அற்றது, யாரையும் திட்டும்போதுகூட கழுதை போண்று லாயக்கற்றது எனத்தான் திட்டுகிறார்கள். அப்படி ஒதுக்கப்பட்ட கழுதை இறைவனுக்கு ஏற்றும்போது பயன்படுமெழும் வாசனையை அறியுமா? என்பதே பொருள். ஒரு அருமையான விடயத்தை மூடர்கள் புரிந்துகொள்ளமாட்டார்கள் என்பதே அதன் பொருள், ஏனெனில் அது அவர்களுக்கு எட்டாப்பொருள் என பொருள்படும்.
.
.
Posts: 422
Threads: 10
Joined: Oct 2005
Reputation:
0
பிருந்தன் கூறிய விளக்கமே சரியானது.
ஓர் அருமையான விடயத்தை அதனை விளங்கிக்கொள்ள முடியாதவர்களிடம் சொல்லுவதால் எதுவித பயனுமில்லை.
பழமொழிகள் சந்தத்துடனேயே எழுதப்பட்டிருக்கின்றன.
"க" கழுதை, "க" கற்புூர வாசனை என்று பொருத்தமாக அமைந்ததால் அப்படி எழுதியிருக்கலாம்.
பழமொழிகளில் இருக்கும் சொற்களுக்கு நேரடிக் கருத்துக்களைப் பாராமல் அவற்றின் உட்கருத்துக்களையே நாம் உள்வாங்கவேண்டும்.
Posts: 509
Threads: 71
Joined: Nov 2005
Reputation:
0
நாயைக் கண்டால் கல்லைக் காணோம்
கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.
என்ற பழமொழியின் அர்த்தம் என்ன?
(அதன் உட்கருத்து தற்போது திரிபடைந்துள்ளது என கூறுகிறார்கள்)
Posts: 142
Threads: 9
Joined: Feb 2006
Reputation:
0
எனக்கு தெரிந்தவரை கல்லால் செய்த நாய் சிலையை.....
சிற்பி பார்த்தால் ஆகா எப்படி அழகாக செதுக்கியிருக்கிறார்கள் என்று சொல்லுவான்...அதயே ஒரு சாதாரண மனிதன் பார்த்தால் ஆகா நாய் எவ்வளவு அழகாக இருக்கிறது என்பான்.
ஒரு பொருளை ஒவ்வொருவரும் பார்க்கும் பார்வையிலேயே...இருக்கின்றது.
அது கல்லா இல்லை நாயா என்று சிற்பிக்கும் மற்றவர்களூக்கும் உள்ள வித்தியாசம் போல....
எங்கேயோ படித்த ஞாபகம்.
பின்னாளின் அது திரிந்து கல்லை கண்டால் நாயை காணோம் நாயை கண்டால் கல்லை காணோம் என்று சாதாரண அர்த்தமாகிவிட்டது.
சரியா தவறோ...நான் எங்கேயோ படித்ததை சொல்கிறேன். மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
.
Posts: 151
Threads: 4
Joined: Feb 2006
Reputation:
0
நீங்கள் சொன்ன விளக்கம் சரி ஆனால் சின்ன திருத்தம். அதாவது சிற்பி கல்லில் ஒரு சிலையை செய்து வைத்திருக்கும் போது அதை சிலையாக பார்ப்பவன் அதில் உள்ள நாய் உருவத்தை காண்பான். ஆனால் அதை வெறும் கல்லாக பார்த்தால் அங்கு நாய் தென்படாது.
.
Posts: 509
Threads: 71
Joined: Nov 2005
Reputation:
0
நாயைக் கண்டால் கல்லைக் காணோம்
கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.
நாயைக் கண்டால் அடிப்பதற்குக் கல்லைக் காணவில்லை. கல் இருக்கும் போது நாய் அங்கு இல்லை என்பது போலத்தான் பொருள் கொண்டு இப் பழமொழி தற்போது பிரயோகிக்கப் படுகிறது.
இதன் உண்மைப் பொருள்.
பண்டைக்காலத்தில் அற்புத சிற்பங்கள் வடிக்கப் பட்டன. மாமல்லபுரம் தஞ்சை காஞ்சி... சிற்பங்கள் இதற்கு எடுத்துக் காட்டாக விளங்கின.. இங்கே ஒரு சிற்பி நாயின் உருவத்தை கல்லில் சிற்பமாக வடித்திருந்தான். அந்த சிற்பத்தை ஒருவன் மிகவும் ரசித்தான். அந்த சுவைஞனைச் சிற்பி கேட்டான் "என் சிற்பம் எப்படி? என்று.
அதற்குச் சுவைஞன் சொன்ன பதில்
நாயைக் கண்டால் கல்லைக் காணோம்
கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.
என்பதாக இருந்தது. அதாவது அதில் நாயைப் பார்த்தால் கல் தெரியவில்லை. கல்லைப் பார்த்தால் நாய் தெரியவில்லை.
இது மனிதரின் பார்வையில்தான் ஒவ்வொன்றும் என்பதைக் குறிக்கிறது.
Posts: 509
Threads: 71
Joined: Nov 2005
Reputation:
0
உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு...
என்ற பழமொழியின் அர்த்தம் என்ன?
(அதன் உட்கருத்து தற்போது திரிபடைந்துள்ளது என கூறுகிறார்கள்)
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
முகத்தாரின் பார்வையில்
வழமையா சாப்பாட்டு விசயத்திலை பெண்கள் பாத்தி கட்டி சாப்பிடக்கூடியவர்கள் சின்ன வயசிலை இப்பிடி சாப்பிட்டா ஆள் பெரிய சைஸ் ஆகிவிடும் அதோடை எவனும் திரும்பிப் பாக்கமாட்டான் ஆனபடியாலை சாப்பாட்டை குறைச்சு பெண்கள் சாப்பிட்டால் (உண்பதை சுருக்குதல்) அவர்களை சூப்பர். பிகருகளாக. . .ஆகக் காட்டும் (பெண்டிர்க்கு அழகு) யாரும் விளக்கம் பிழை எண்டா அடிக்க வராதைங்கோ . .சொல்லித்தாங்கோ. .
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>