இதுதான் உலகத்தின் நகர்வு என்பது.இவற்றை தடை செய்ய இயலாது.அப்படியாயின் விஞ்ஞானம் ஒரு போதும் வளர்ந்திருக்காது.நாம் கூட நம்மவருடன் நினைத்த நேரத்தில் தொடர்புகளைக் கொண்டிருக்கவே முடியாது. வளர்ந்தும் இருக்க முடியாது.
புத்தரும்,காந்தியும்,விவேகானந்தரும்,வள்ளுவரும்,ஏசுவும்,நபிகள் நாயகமும் ...............இன்னும் எத்தனை எத்தனை மாகான்கள் நாம் பிறந்த ஆசியாவுக்குள் பிறந்தார்கள்.....................நாம் திருந்தினோமா? நம் உயிர் துடிக்கும் இரத்த நாளங்கள் முழுவதும் வன்முறை........
நமது சிந்தனைகள், தத்துவங்கள் எல்லாம் நல்லவைதான். ஆனால் நாங்கள் மனித உயிர்களுக்கு எதுவித மதிப்போ,மரியாதையோ கொடுக்கத் தெரியாதவர்கள்.
நினைத்த போது எதுவும் பார்க்காமல் நடு வீதிகளில் எவரையும் கொன்று போடுபவர்கள். ஒருவரது உயிரின் மதிப்பு என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒரு கருக் கலைப்பை எதிர்த்து கோசமிடும் உங்கள் பேனா ஏன் ஒரு கொலையை நியாயப் படுத்துகிறது. கொலை செய்யத் துாண்டுகிறது.
நீங்களும் அதைத்தானே எழுதுகிறீர்கள்...............
உங்கள் கருத்துகள் ஆக்கத்துக்கா? அழிவுக்கா?
shanthy Wrote:<b>வேண்டாம் தொலையட்டும்.</b>
குப்பைகளையெல்லாம் குடிநடுவில் குடியிருத்த
கொடிபிடிக்கும் கொள்ளையர்கள்
<span style='font-size:22pt;line-height:100%'>கல்லெறிபட்டுச் சாகவேணும் </span>
கடவுளே கண்திறவாய்....!
அது தமிழ் வளர்க்கும் ஒளித்தலமாயினும்
<span style='color:red'>தொலைந்தொழியட்டும்</span> வேண்டாம்.
உங்கள் கொலை வெறிதான் உங்கள் கலாச்சாரமாக இருந்தால்.நாங்கள் செத்துப் போவது மேல்..........
நாங்கள் வாழும் புலம் பெயர் நாடுகளில் மனித உயிர்களுக்கு மட்டுமல்ல பிராணிகளைக் கூட கொல்வதற்கு பாவம் பார்க்கிறார்கள்.மரண தண்டனையைக் கூட ஒரு மனிதனுக்குக் கூட கொடுக்க மறுக்கிறார்கள்.எத்தனை எத்தனை மாமிசம் சாப்பிடாத மேலை நாட்டவர்கள் இங்கே தெரியுமா? நமக்கு இறைச்சி இல்லாவிட்டாலே சோறு இறங்காது.
பிராணிகள் மேலுள்ள அன்பு அவர்களிடமிருக்கிறதே!!!!!!!!!!!!!
<span style='font-size:25pt;line-height:100%'>நாம் தத்துவங்கள் சொன்னோம் , பின்பற்றவேயில்லை.
மேலை நாட்டவர்கள் தத்துவங்களை படித்தார்கள். அதை தமது நடைமுறையில் பயன் படுத்துகிறார்கள்.இதுவே நமக்கும் அவர்களுக்கும் உள்ள வேறுபாடு. அவர்களிடம் மனிதம் இருப்பதற்கும் , நம்மிடம் இல்லாமல் போனதற்கும் காரணம்.........</span>
<span style='font-size:25pt;line-height:100%'>மனிதநேயம் இல்லாத எந்த ஒரு மனிதனையோ ,படைப்பையோ என்னால் ஒருபோதும் ஏற்க முடியாது. </span>
[scroll:4a5314ccc5][size=15]எவருக்கும் நீ அடிமையில்லை , எவரும் உனக்கு அடிமையில்லை. -அஜீவன்
அத்தனையும் மனிதநேயம் நிறைந்த உன்னத கருத்து. அஐPவன் எனது நன்றிகள். இப்படி ஒரு கருத்தை இத்தனை அழகாக முன்வைப்பீர்கள் என எதிர்பாற்கவே இல்லை.