10-26-2003, 07:55 PM
[size=18]ஆன்லைனில் "கரெக்ட்" செய்த ஃபிகர்
நான் சாட் செய்யத் தொடங்கியபோது இன்டர்நெட் நட்புக்கான பல வெப்சைட்களுக்குப் போவேன். அந்த சைட்களில் இருக்கும் பெண்களில் யார் யார் என் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று பார்ப்பேன் (நான் சேலத்துக்காரன்). அந்தப் பெண்களின் ஈ-மெயில் முகவரியை ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொண்டு ஒவ்வொருவருக்கும் ஈ-மெயில் அனுப்புவேன்.
நான் அனுப்பிய மெயில்களுக்கு சில பெண்கள் பதில் அனுப்பினார்கள். அவர்களில் பலர் ஒன்றிரண்டு மெயில்களுக்குப் பிறகு பதில் அனுப்பவில்லை. எனக்கு போர் அடித்ததால் நானும் விட்டுவிட்டேன். ஆனால் ஒருத்தி மட்டும் எனக்கு நண்பி ஆனாள்.
முதலில் என்னைப் பற்றி நானும் தன்னைப் பற்றி அவளும் மெயில் அனுப்பி ஒருவரை ஒருவர் அறுத்துக் கொண்டிருந்தோம். என்னைப் போலவே அவளும் வேண்டாவெறுப்பாக அதையெல்லாம் எழுதுவதாகத் தோன்றியது எனக்கு. எனக்கு அந்த சமயத்தில் வேறு நண்பிகள் இல்லை. எனவே இவளைக் கொஞ்சம் சீண்டிப் பார்த்து ரிஸ்க் எடுக்கலாம் என்று தோன்றியது.
ஒரு ஆணும் பெண்ணும் முத்தமிட்டுக் கொள்வது போன்ற ஒரு புகைப்படம் உள்ள மின்னட்டை ஒன்றை அவளுக்கு அனுப்பினேன். "பேச மட்டும்தான் உதடுகளா?" என்று அதன் கீழே ஆங்கிலத்தில் வார்த்தைகள்! அனுப்பிய பிறகுதான் தப்பு செய்துவிட்டோமோ என்று பயமாக இருந்தது. அவள் இனிமேல் நமக்கு மெயில் அனுப்பப் போவதில்லை என்று நினைத்தேன்.
அன்று மாலை எதிர்பார்ப்புடன் மெயில் பார்த்தபோது அவளிடமிருந்து வாழ்த்து அட்டை வந்திருந்தது! ஒரு பெண் அலறுவது போல் ஒரு படம். அது அவளுக்கு எங்கே கிடைத்ததோ தெரியவில்லை. படத்திற்குக் கீழே "ஓ, நீ அந்த மாதிரி ஆளா? உன் வம்புக்கு நான் வரவில்லை!" என்று எழுதியிருந்தது! கூடவே அவளுடைய ஐ.சி.க்யூ. எண்.
காய்ந்து போன கேஸ் என்று நினைத்துக் கொண்டேன். அடுத்த மெயிலில் நான் ஐ.சி.க்யூ.வை எப்படி இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்று கேட்டதும் அவள் எனக்கு சொல்லித் தந்தாள். நாங்கள் ஐ.சி.க்யூ.வில் சாட் செய்யத் தொடங்கிய சில நாட்களில் ரொம்ப அதிக நேரம் அதில் செலவழிக்கத் தொடங்கினோம்.
இப்போது நான் என் அடுத்த ரிஸ்க்கை எடுக்கவேண்டிய கட்டம் வந்தது. எனக்கு ஈ-மெயிலில் வந்த ஒரு படுமோசமான ஏ ஜோக்கை அவளுக்கு ஃபார்வர்ட் செய்தேன். படுமோசம் என்றால் அவ்வளவு படுமோசம்! "என்ன செய்யப் போகிறாய்?" என்று சினிமா பாட்டில் வருவது போல் கேட்டுக்கொண்டேன்.
அதற்கு அவள் பதில் அனுப்பவில்லை. ஆனால் எங்கள் அடுத்த சாட்டிலிருந்து எங்கள் பேச்சு அநியாயத்திற்கு ஆபாசமாக இருந்தது! "இன்றைக்கு உன் டிரெஸ் அழகாக இருக்கிறது. நல்ல டிசைன்" என்பேன் நான். "வழியாதே, நான் ஒன்றுமே போட்டுக்கொள்ளாமல்தான் உன்னோடு பேசிக் கொண்டிருக்கிறேன்" என்பாள் அவள். "நானும் அதைத்தான் சொன்னேன்!" என்று நான் சொல்வேன்! நாங்கள் பேசியதை எல்லாம் எழுத முடியாது!
அதற்குப் பிறகு நாங்கள் சாதாரணமாகப் பேசவே இல்லை. எனக்கு அது போதைப் பழக்கம் போல் ஆனது. அடுத்த ரிஸ்க்காக சைபர்செக்ஸ் என்று சொல்கிறார்களே, அதில் இறங்கலாமா என்று அவளைக் கேட்டேன். ஆனால் அதை கேட்பதற்குள் நான் பயந்து செத்தேன்.
எனக்கு அதில் அனுபவம் இல்லை என்றாள் அவள். எனக்கும் அனுபவம் இல்லை என்றேன் நான். சரி, ஒரு "experiment" மாதிரி செய்து பார்ப்போம் என்றாள் அவள். எங்களுக்குள் ஒரு விளையாட்டுதான். கொஞ்சம் சீரியஸாகப் போய்க் கொண்டிருக்கிறோமா என்றும் எனக்குத் தோன்றியது. இது எங்கேதான் கொண்டு போய் விடுகிறது என்று பார்ப்போம் என்று முடிவு செய்தேன்.
எங்கள் முதல் சைபர்செக்ஸ் தமாஷாக ஆரம்பித்தது, பிறகு கிளுகிளுப்பாக மாறியது. ஆனால் பொதுவாக நான் கேள்விப்பட்ட சைபர்செக்ஸ் போலில்லை எங்கள் விளையாட்டு. இரண்டு பெரிய குழந்தைகள் ஒருவரை ஒருவர் சீண்டிக்கொள்வது போல்தான் இருந்தது. கிளுகிளுப்பை விட விளையாட்டும் ரொமான்ஸும் அதிகமாக இருந்தது. இந்த விளையாட்டும் எங்களுக்கு பழக்கமாகிப் போனது.
எத்தனை நாள்தான் இப்படியே இருப்பது? ஒரு தடவை சாட்டில் அவளிடம் ஒரு கேள்வி கேட்டேன் : "நாம் நேரில் சந்திப்போமா?" "யோசிக்கிறேன்" என்றாள் அவள். பிறகு தேதி, இடமெல்லாம் குறித்துவிட்டோம். அந்த நாளும் வந்தது. எனக்குப் பிடித்த மஞ்சள் நிறத்தில் அவள் புடவை அணிந்து வந்தாள். அவளுக்குப் பிடித்த சாம்பல் நிறத்தில் புதிதாக சட்டை வாங்கி அணிந்து கொண்டு போனேன்.
அவளைப் பார்த்தபோது எனக்கு அதிர்ச்சி. அவளுடன் சாட் செய்ததில் நான் செய்த கற்பனைக்கு நேர்மாறாக இருந்தாள் அவள். அவளைப் பார்த்த கணத்தில் எனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தை என்னால் மறைத்துக்கொள்ள முடியவில்லை. நானும் ஒன்றும் பெரிய அழகன் இல்லை. அவளுடைய ஏமாற்றம் எனக்கு வெளிப்படையாகத் தெரிந்தது.
நாங்கள் சந்தித்த ரெஸ்டாரென்டில் காப்பி சாப்பிட்டுக்கொண்டு ஒன்றுக்கும் உதவாத விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்தோம். எங்கள் இருவருக்குமே பேச்சில் நாட்டம் இல்லை. வேறு எதிலும்தான்! எப்போது பேச்சு முறிந்து கிளம்புவோம் என்று இருந்தது எனக்கு.
அவளுக்கும் ஏமாற்றம்தான் என்றாலும் என் ஏமாற்றத்தை மறைத்துக்கொள்ள முடியாமல் போனது அவளுக்குப் பிடிக்கவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.
டேபிளில் தாளம் போட்டுக் கொண்டு யோசித்துக் கொண்டிருந்தபோது அவள் "ஓ.கே. நான் கிளம்பவேண்டும்" என்றாள். நான் உடனே "யெஸ், எனக்கும் நேரமாகிவிட்டது. நைஸ் மீட்டிங் யூ" என்று ஒரு முன்பின் தெரியாத ஒரு நபரிடம் பேசுவது போல் சொல்லிவிட்டுப் பிரிந்தேன். இனிமேல் அவளுடன் பேசக் கூடாது என்று முடிவு செய்தேன்.
ஆனால் வீட்டுக்குப் போனதும் முதல் வேலையாக இன்டர்நெட்டுடன் இணைத்தேன். ஐ.சி.க்யூ.வில் லாக்-இன் செய்தேன். அவள் ஆன்லைனில் இருந்தாள். அவள் பெயரைப் பார்த்ததும் எனக்குக் குற்ற உணர்வு ஏற்பட ஆரம்பித்துவிட்டது. எவ்வளவு நன்றாகப் பழகிய பெண்ணை உருவத்தை வைத்து ஒதுக்குகிறோம் என்று தோன்றியது எனக்கு.
அவளும் தன் ஏமாற்றத்தை மறைத்துக் கொள்ளவில்லை என்றாலும் நான் என் மேல் வைத்திருந்த மரியாதை கணிசமாகக் குறைந்தது. எனக்கு உருவம் பெரிதல்ல. மனம்தான் பெரிது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். கடைசியில் நானும் சராசரி ஆண் போலத்தான் என்று இந்த சம்பவம் எனக்கு நிரூபித்தது.
அவளுடன் மீண்டும் பழகித்தான் பிராயசித்தம் செய்ய வேண்டும் என்று அவளுக்கு ஒரு "ஹாய்" அனுப்பினேன். அவளும் "ஹாய்" என்றாள். அன்றுதான் நாங்கள் ரொம்ப சீரியஸாகப் பேசினோம்.
நாங்கள் அதிகம் பேசவில்லை. ஆனால் அவள் ரசனைகளைப் பற்றி அப்போதுதான் நான் முதல் முதலாகக் கேட்டேன். அவள் வேண்டா வெறுப்பாகத்தான் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். இருந்தாலும் விட்டுப் பிடிப்போம் என்று முடிவெடுத்தேன். கிளம்புவதற்கு முன் "நாளைக்கு ஆன்லைனில் இருப்பாயா?" என்று கேட்டேன். "நிச்சயமாகத் தெரியாது" என்றாள் அவள்.
அடுத்த நாள் அவளுடன் சாட் செய்தேன். அந்த வாரம் முழுக்க சாட்தான். ஆனால் நாகரீகமான சாட். எங்களுக்கு இடையில் அந்த இறுக்கம் இன்னும் போகவில்லை. எனக்கு அவளை இந்த முறை சந்தித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. ஒரு நாள் திடுதிப்பென்று "நீ ஃப்ரீயாக இருந்தால் நாம் நாளை காப்பி சாப்பிடுவோமா?" என்றேன்.
"எனக்கு இன்னொரு முறை நேரத்தை வீணாக்க முடியாது" என்றாள் அவள். "ஒரே ஒரு காப்பி மட்டும் சாப்பிட்டுவிட்டுப் போய்விடுவோம்! ப்ளீஸ்!" என்றேன். அவள் சம்மதித்தாள். இந்த முறை அதே இடத்தில் அதே சட்டையுடன் போனேன். அவள் 10 நிமிடம் தாமதமாக வந்தாள்.
அவளைப் பார்த்ததும் எனக்கு சந்தோஷமாக இருந்தது. கூடவே சிரிப்பும் வந்தது. என் நமட்டு சிரிப்பு அவளுக்கும் தொற்றிக் கொண்டது. "ஹாய் ஸ்வீட்ஹார்ட்!" என்றேன். அவள் பதில் சொல்லாமல் சிரித்தாள்.
நாங்கள் அன்று சாப்பிட்டது மூன்று காப்பி. நிஜமான காதலர்கள் மாதிரி சின்னக் குரலில் ரொம்ப நேரம் பேசினோம். எங்களுக்குப் பேசிக் கட்டுப்படியாகாதது போல அவ்வளவு பேசினோம்.
அன்று தொடங்கி நாங்கள் அடிக்கடி சந்தித்தோம். பிறகு தினமும் சந்தித்தோம். சாட் செய்தோம். ஃபோனில் பேசினோம். என்னை அவள் மன்னித்து விட்டது போல் தோன்றியது. எனக்கு அவள் மேல் காதல் வந்துவிட்டிருந்தது.
அவளிடம் சொன்னால் தப்பில்லை என்று ரகசியத்தைப் போட்டு உடைத்தேன். நேரில் இல்லை. சாட்டில்தான். "தேங்க்ஸ்" என்பது தவிர வேறு எதுவும் சொல்லவில்லை அவள். அன்று ஒரு சீரியஸ் முத்தத்துடன் விடைபெற்றேன் நான்.
நாங்கள் இப்போதெல்லாம் சாட்டை விட ஃபோனில்தான் அதிகம் பேசுகிறோம். அவளும் என்னைக் காதலிக்கிறாளோ என்று எனக்கு வலுவான சந்தேகம் இருக்கிறது. அவளுக்கு என்னை ரொம்பப் பிடிக்கிறது என்று எனக்குத் தெரியும். நாங்கள் சைபர்செக்ஸ் பக்கமெல்லாம் போவதே இல்லை.
இருந்தாலும் அவள் சைபர்செக்ஸுக்காக வேறு நண்பர்களை நாடுவாளோ என்ற பயத்தில் நான் எப்போதாவது கொஞ்சம் ஓவராக ஜொள்ளு விடுவேன். அவ்வளவுதான். எந்தப் பிரச்னையும் இல்லாமல் எங்கள் உறவு நகர்ந்து கொண்டிருக்கிறது. நான் எடுக்கப் போகும் அடுத்த ரிஸ்க் என்ன என்று நீங்கள் சுலபமாக ஊகித்துவிடலாம் . . .
நன்றி : வெப் உலகம்

................