Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இன்ரநெற் காதல்கள்
#1
இன்டர்நெட் காதல்கள்

ஈ-மெயில், சாட்ரூம்கள், டேட்டிங் சர்வீஸ்களில் ஹசந்தித்து, காதல் வசப்படுபவர்கள் பலர். இந்தக் காதல் கதைகளில் சில இனிமையானவை. இன்னும் சில சோகமானவை. வேறு சில சிரிப்பூட்டுபவை.

[size=18]ஆள் மாறாட்டம்

இந்த சம்பவத்தை நான் பலரிடம் சொல்லிவிட்டேன். அத்தனை பேரும் இதை நம்பியதுதான் ஆச்சரியம். ஏறத்தாழ ஆறு மாதங்களுக்கு முன் ஒரு இன்டர்நெட் கஃபேகாரர் தொல்லை தாங்காமல் ஒரு டேட்டிங் சைட்டில் என் பெயரையும் ஈ-மெயில் முகவரியையும் கொடுத்துப் பதிவு செய்து கொண்டேன். அப்புறம் அதை மறந்து விட்டேன். ஏனென்றால் எனக்கு டேட்டிங் சைட்களில் நம்பிக்கை இல்லை. சாட்இ ஈ-மெயில்தான் என் ஸ்டைல்.

ரொம்ப நாள் கழித்து ஒரு முறை என் யாஹூ மெயில்பாக்ஸில் அந்த சைட்டிலிருந்து ஒரு மெயில் வந்திருந்தது. யாரோ ஒரு ஏஞ்சல்2000'-இடமிருந்து எனக்கு மெசேஜ் வந்திருந்ததைத் தெரிவிக்கத்தான் அந்த மெயில்.

அன்று மாலை ஏஞ்சல்2000 யாஹூ மெசஞ்சரில் வந்தாள். அவளுக்கு வாய் ரொம்ப நீளம். அன்று இரண்டு மணிநேரம் பேசிக்கொண்டிருந்தோம். என் ரசனையும் அவள் ரசனையும் நேர்மாறாக இருந்தது. ஆனால் இப்படி ஒரு பெண்ணுக்காகத்தான் நான் காத்திருந்தேன். நகைச்சுவை உணர்வு, புத்திசாலித்தனம், நல்ல ரசனை, எல்லாம் அவளிடம் இருந்தன. அவள் மும்பையில் இருப்பதாகவும், ஒரு பன்னாட்டு வங்கியில் வேலை பார்ப்பதாகவும் சொன்னாள். அப்போதைக்கு நம்பினேன். நான் ஒரு வெப் டிசைனர். வயசு 26

மறுநாளும் சந்தித்தோம். ஆனால் நான் அப்போது ஆபீசில் இருந்த இன்டர்நெட் இணைப்பைப் பயன்படுத்திக் கொண்டிருந்தேன். மணி 9.30. கிளம்புகிறேன் என்று சொல்ல எனக்கு மனம் வரவில்லை. நள்ளிரவு 12.45 வரை சாட்தான். அன்று ஆபீசிலேயே தூங்கினேன். எனக்கும் அவளுக்கும் ஒரு விஷயம் புரிந்தது. நாங்கள் இருவரும் பொருத்தமான ஜோடி. எனக்கு அவளிடம் லவ் எல்லாம் இல்லை. ஆனால் ஒரு soft corner இருந்தது. அவளுக்கும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். நான் என்னைப் பற்றி அவளிடம் நிறைய சொன்னேன். அவள் எப்போதும் உஷாராக கம்மியாகத்தான் சொன்னாள்.

அதற்குப் பிறகுதான் சில விநோதமான சம்பவங்கள் நடக்க ஆரம்பித்தன. அவளிடம் பேசும்போது ஒரு விஷயம் எனக்கு உறைக்கத் தொடங்கியது. நான் அவளுக்கு முன்பே தெரிந்த ஒரு இளைஞன் என்று நினைத்துக் கொண்டுதான் என்னுடன் இத்தனை நாளும் பேசிக்கொண்டு இருந்திருக்கிறாள். நான் என்னைப் பற்றி சொன்ன பல விபரங்கள் அப்படியே அந்த இளைஞனைப் பற்றிய தகவல்களுடன் ஒத்துப் போயிருக்கின்றன. நான் சரியாக மாட்டிக் கொண்டேன். நான் எவ்வளவு முறை சொல்லியும் அவள் நம்பவில்லை. "நான் தெலுங்குக்காரி, ஒரு பத்திரிகையில் வேலை பார்க்கிறேன். நீ நரேஷாக இருந்தால் உனக்கு இது ஏற்கனவே தெரிந்திருக்கும்" என்றாள். திடீரென்று அவள் என்னுடன் சாட் செய்வதை நிறுத்தினாள். யாஹூ மெசஞ்சரில் வருவதில்லை.

சில நாட்கள் கழித்து நான் அவளுக்கு ஒரு e-card ஐத் தூது அனுப்பினேன். அதற்கு பதிலாக அவள் என்னைத் திட்டி ஒரு e-card அனுப்பினாள். இந்த அட்டையைப் பார்த்து நான் நிஜமாகவே கடுப்பானேன். நாம் பிரிவதுதான் நல்லது. ஆளை விடு என்ற மெசேஜுடன் ஒரு வாழ்த்து அட்டை அனுப்பினேன்.மறுநாள் அவளிடமிருந்து ஈ-மெயில் வந்திருந்தது. நான் அதற்கு பதில் போடவில்லை. யாஹூ மெசஞ்சரைப் பயன்படுத்துவதையும் நிறுத்திவிட்டேன்.

அவள் என்னை விடுவதாக இல்லை. எப்போதோ ஒரு முறை நான் ஒரு வெப்சைட்டைப் பற்றி அவளிடம் சொல்லியிருந்தேன். அந்த சைட்டின் மெசேஜ் போர்டில் அவள் அனுப்பிய கமென்ட் வந்திருக்கிறதாம். அந்த சைட்டை அறிமுகப்படுத்தியதற்காக எனக்கு நன்றி சொல்லி மெயில் போட்டிருந்தாள். எனக்கு மெயில் போட இந்த அல்ப விஷயத்தை ஒரு சாக்காக அவள் பயன்படுத்திக் கொண்டது எனக்குப் புரிந்தது. எங்ளுக்குள் ஒன்றுமே நடக்காதது போல் அவள் உற்சாகமாய் பேசியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பிறகு இரண்டு ஈ-மெயில்கள் கழித்து மீண்டும் காணாமல் போனாள். என்னை சீண்டிப் பார்ப்பது அவள் நோக்கமாக இருந்திருக்கலாம்.

இந்த முறை நான் விடவில்லை. eCrush.com என்ற வெப்சைட்டிலிருந்து அவளுக்கு ரகசியமாக ஒரு காதல் செய்தி அனுப்பினேன். இந்த சைட் நீங்கள் அனுப்பும் ஆணுக்குஃபெண்ணுக்கு ஹஉங்களுக்குத் தெரிந்த யாரோ ஒருவர் உங்களைக் காதலிக்கிறார்' என்ற செய்தியை ஈ-மெயில் மூலம் தெரிவிக்கும். நீங்கள் அவரை அந்த சைட்டில் சந்தித்து நீங்கள் அவர் ரகசியமாக விரும்பும் ஆளாக இருந்தால் அவர் தன் நிஜ அடையாளத்தை உங்களிடம் தெரிவிப்பார். நான் அவளுக்கு eCrush அனுப்பி இரண்டு நாள் கழித்து எனக்கும் யாரிடமிருந்தோ ஒரு eCrush வந்தது. அது அவளாகத்தான் இருக்கும் என்று ஊகித்தேன்.ஆனால் அவளுடன் சாட் செய்து பல நாட்கள் ஆகிவிட்டிருந்தன. ஒரு பெரிய வெற்றிடம் ஏற்பட்டுவிட்டிருந்தது. ஏதாவது செய்தாக வேண்டும் என்று தோன்றியது. ஆனால் ப்ரெஸ்டீஜை விட்டுக்கொடுக்க முடியவில்லை.

அதில் வந்த ஐடியாதான் eCrush. அவளுக்குள்ளும் என்னைப் போல் கொஞ்சமாவது ஒரு வெறுமை ஏற்பட்டிருக்கும். நாள் ஆக ஆக மெல்ல மெல்ல அந்த வெறுமை மறையத் தொடங்கியது. இருந்தாலும் அவளுடன் மீண்டும் பேசவேண்டும் என்ற ஆர்வம் மட்டும் பல மாதங்கள் கழித்தும் நீடித்தது. அவள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும் என்று ஒரு நாள் யாஹூ மெசஞ்சரில் ஒரு மெசேஜ் அனுப்பினேன் "Wish you a happy married life"

மூன்று நாள் கழித்து அவளிடமிருந்து மூன்று offline message-கள் வந்திருந்தன. "Thanx", "Thanks உனக்கு எப்படித் தெரிஞ்சுது??," "சும்மா தமாஷுக்குத்தான் சொன்னேன். எனக்குக் கல்யாணம் எல்லாம் ஆகல. நீ ஏன் அப்படி ஒரு மெசேஜை அனுப்பினே?" எனக்கு குஷி பிய்த்துக் கொண்டு போனது. பிறகு அவள் ஆன்லைனில் வந்தாள். "I missed you!" என்றேன். அவள் என் பெயரை தன் யாஹூ மெசஞ்சர் நண்பர்கள் பட்டியலில் சேர்த்துக் கொள்ள அனுமதிக்கும்படி கெஞ்சினாள். அதாவது நாங்கள் பிரிந்தவுடன் அவள் என் பெயரைத் தன் நண்பர்கள் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டிருந்தாள். என் நண்பர்கள் பட்டியலில் இருந்த உருப்படியான ஒரு பெயர் அவள்தான். அதனால் நான் அதை நீக்காமலே விட்டிருந்தேன்.

இப்போது நாங்கள் இணைந்துவிட்டோம். நான் "அவன்" இல்லை என்று இப்போது அவளுக்குத் தெரியும். அவள் என்னுடன் பேசும் தொனியும் மாறிவிட்டது. பேச்சில் அக்கறை எட்டிப் பார்க்கிறது. என்னைப் பற்றி இன்னும் தெரிந்துகொள்ள விரும்புகிறாள். எனக்கு சாட் செய்ய நேரம் இருப்பதில்லை என்பதால் ஈ-மெயில்தான் அனுப்புகிறேன். அவள் நீளமான ஈ-மெயில்கள் அனுப்புகிறாள். தன்னைப் பற்றியும் முன்பை விட அதிகம் பேசுகிறாள். நான் மட்டும்தான் அவளை என் காதலி போல் செல்லமாக சீண்டுவேன். இப்போது அவளும் ஆரம்பித்துவிட்டாள். அவள் எங்கே வேலை பார்க்கிறாள் என்பதை மட்டும் சொல்லமாட்டேன் என்கிறாள். ஆகஇ இங்கே முடிகிறது கதை. நாங்கள் லவ் பண்ணவில்லை. ஆனால் எதிர்காலத்தில் இது மாறும் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன என்று நினைக்கிறேன். அப்படி ஒன்று நடக்கும்போது கதையை மேற்கொண்டு சொல்கிறேன்.


நன்றி : வெப்உலகம்

................
Reply
#2
<span style='font-size:25pt;line-height:100%'>கதை 2 : என்னைப் பற்றிய ரகசியம்</span>
சாட்ரூம்களிலும் ஐ.சி.க்யூ.விலும் (ICQ ஒரு சாட் புரோகிராம்) நான் பார்த்த ஆண்கள் எல்லாம் ரொம்ப மோசம். எடுத்த எடுப்பிலேயே வாரியா?' என்று கேட்கிற டைப். அப்படி வெளிப்படையாகக் கேட்காத ஆண்கள் கூட அநியாயத்திற்கு வழிகிறார்கள். ஆண்கள் ஆஃப்லைனிலும் ஆன்லைனிலும் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள். இதையும் மீறி எனக்கு இன்டர்நெட் நண்பர்கள் நிறைய பேர் உண்டு, தோழிகளை விட அதென்னவோ பையன்களுக்கு என்னை ரொம்ப சீக்கிரம் பிடித்துப் போய்விடுகிறது. நான் பாட்டுக்கு என் காதல் கதையை சொல்வதை விட்டுவிட்டு வளவள என்று பேசிக் கொண்டிருக்கிறேன்.

நான் பார்த்தவர்களில் மிகவும் வித்தியாசமானவன் விக்கி'. இது அவனுடைய சாட் nickname ஒரு நாள் ரொம்ப போரடித்து ஐ.சி.க்யூ.வில் vicky என்ற பெயருடைய ஆட்களைத் தேடினேன். 60 பேரோ என்னவோ வந்தார்கள். அதில் யார் ஆன்லைன் என்று பார்த்தேன். அதில் முதல் விக்கி'க்கு ஒரு instant message அனுப்பினேன். ஐ.சி.க்யூ. மற்ற சாட் புரோகிராம்களைப் போல live கிடையாது. ஒரு மெசேஜ் அனுப்பினால் அது போய்ச் சேர ஒரு நிமிடம் ஆகும். அதைப் படித்துவிட்டு நம் ஃப்ரெண்ட் பதிலுக்கு மெசேஜ் அனுப்புவார். ஆனால் இது டென்னிஸ் ஆடுவது போல் ஜாலியாக இருக்கும்.

விக்கியிடமிருந்து உடனே வந்த மெசேஜ் "ஹாய் ரியா நான் இப்ப கொஞ்சம் பிசியா இருக்கேன். தப்பா நெனைச்சிக்காதே. நாம அப்புறம் பேசலாம். குட்நைட்!" என்றது. இந்த விக்கிக்குப் பிறகு லிஸ்ட்டில் இன்னும் 26 விக்கிகள் ஆன்லைனில் இருந்தார்கள். ஆனால் இவன் ரொம்ப நாசூக்கான ஆளாகத் தெரிந்தான். மற்றவர்களிடம் இதை எதிர்பார்க்க முடியாது இவனைப் பிடித்துக் கொள் என்று என் அனுபவம் சொன்னது. விக்கி என்னைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டதும் குட்நைட் சொன்னதும் எனக்குப் பிடித்திருந்தது. ஓ.கே. அட்லீஸ்ட் என் நண்பர்கள் லிஸ்ட்டில் உன் பெயரை சேர்த்துக் கொள்ள எனக்கு அனுமதி கொடு.


நாம் அப்புறம் பேசலாம்' என்றேன். அவன் பதில் எதுவும் பேசாமல் அனுமதி கொடுத்தான். மறுநாள் அவன் ஆன்லைனில் இருந்ததைப் பார்த்து "ஹாய் விக்கி" என்றேன். "ஹாய் ரியா, எப்படி இருக்கே?" என்றான். அதற்குப் பிறகு அவன் பேச்சே வேறு மாதிரி இருந்தது.

அவன் அன்றைக்கு என்ன மூடில் இருந்தானோ தெரியவில்லை. நான் என்ன சொன்னாலும் அதற்குக் கிண்டலாக ஒரு பதிலைத் தயாராக வைத்திருந்தான். சரிதான், இந்தப் பையன் கேடியாக இருப்பான் போலிருக்கிறது உஷாராக இருக்க வேண்டும், என்று முடிவு செய்தேன். அவனுடன் சாட் செய்யும்போது யாராவது என்னைப் பார்த்தால் ஹசரியான லூஸ்' என்று நினைத்துக் கொள்வார்கள். அவன் எப்போதும் என்னை சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பான். என்னைப் போல் அவனும் சென்னையில்தான் இருக்கிறான். அவன் என்னைப் பற்றி அதிகம் கேட்கவில்லை. நானும் சொல்லவில்லை.

எனக்கு ஐ.சி.க்யூ. விலேயே நிறைய நண்பர்களும் நண்பிகளும் இருந்தார்கள். ஆனால் அவர்களில் முக்கால்வாசிப்பேர் நான் தினமும் காலேஜில் சந்திக்கும் நண்பர்கள்தான். விக்கியுடன் பேசுவதற்காக நான் மற்றவர்களுக்கு டிமிக்கி கொடுத்தேன். விக்கியுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அவர்கள் சரியான போர் மாதிரித் தெரிந்தார்கள். விக்கி என் மற்ற இன்டர்நெட் நண்பர்களைப் போல் "ஸ்வீட்டி, பேபி" என்று என்னிடம் வழியவில்லை. ஆனால் விக்கி என்னிடம் வழிந்திருந்தால் நான் அதை ரசித்திருப்பேன்.

விக்கி எப்போதுமே தன்னை சூப்பர்மேன் என்று சொல்லிக்கொள்வான். கிளம்பும் நேரம் வந்து விட்டால் "ஓ.கே. ரியா, எங்கேயோ ஒரு அழகான பெண்ணுக்கு ஆபத்து போலிருக்கிறது. நான்தான் போய்க் காப்பாற்றவேண்டும். சீ யூ டுமாரோ!" என்பான். ஒரு நாள் இதே மாதிரி என்னிடம் சொன்னபோது என்னால் பொறுக்க முடியவில்லை. "அதை விட அழகான பெண் உன்னிடம் பேசிக் கொண்டிருக்கிறாள். அவளை விட்டுப் போகப் பார்க்கிறாயே, உனக்கு அறிவிருக்கா?" என்றேன். சில நொடிகளுக்கு அவனிடமிருந்து பதில் இல்லை. பிறகு "ஸாரி டார்லிங்இ மறந்துட்டேன்!" என்று பதில் அனுப்பினான். ரொமான்ஸை நான்தான் அவனுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டியிருந்தது.

நான் பச்சை சிக்னல் காட்ட வேண்டும் என்தற்காகவே காத்திருந்தது போல விக்கி அதற்குப் பிறகு ரொமான்ஸில் கலக்கினான்! தினமும் ஒரு வெப்சைட்டிலிருந்து காதல் வாழ்த்து அட்டை அனுப்புவான் - விளையாட்டாகத்தான். என்னை ஆன்லைனில் பார்த்தால் "SWEETHEART!!!" என்று கொட்டை எழுத்தில் கத்துவான். இப்படியே இரண்டு மாதங்கள் கழிந்தன.

ஒரு நாள் விக்கிஇ "ஸ்வீட்டி, ரியா என்பது உன் நிஜப் பெயரா?" என்றான். இல்லை என்றேன். "அப்படி என்றால் உன் நிஜப் பெயரைச் சொல்!" என்றான் விக்கி. சொல்லலாமா வேண்டாமா என்று தயங்கினேன். "என் பெயரைத் தெரிந்து கொண்டு என் செய்யப் போகிறாய்?" என்றேன். "இதோ பார் பேபி, இவ்வளவு நாள் பழகியிருக்கிறோம். உன் பெயர் கூட எனக்குத் தெரியவில்லை என்றால் அசிங்கம்" என்றான் அவன். போகட்டும் என்று என் பெயரைச் சொன்னேன். அவன் தன் பெயரை எனக்கு எப்போதோ சொல்லிவிட்டான்.

பிறகு என் ஃபோன் நம்பரைக் கேட்டான். "விக்கி, நீ ரொம்ப ஓவராகப் போகிறாய். ஃபோன் நம்பர் எல்லாம் ரொம்ப பர்சனல்!" என்றேன். விக்கி உடனே ரொம்ப சீரியஸ் ஆகிவிட்டான். "I understand. உனக்கு என் மேல் நம்பிக்கை இல்லை" என்றான். இதென்னடா வம்பாகப் போய்விட்டது என்று நான் அவனை சமாதானப்படுத்த முயன்றேன். "அப்படி இல்லை விக்கி, நாம் இன்டர்நெட்டில் ஃப்ரெண்ட்ஸ். நாம் தினமும் ரொம்ப நேரம் சாட் பண்ணுகிறோம். அப்புறம் ஃபோன் நம்பர் எதற்கு?" என்றேன். "ஓ.கே. டியர், நான் கிளம்பவேண்டும். பிறகு பேசுவோம்" என்று சொல்லிவிட்டு உடனே ஐ.சி.க்யூ. விலிருந்து வெளியேறிவிட்டான். எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. விக்கி சரியான கோபத்தில் இருப்பது தெரிந்தது.

அடுத்த நாள் அவன் வருவதற்காக வீணாகக் காத்திருந்தேன். அதற்கு மறு நாளும் அவன் வரவில்லை என்றதும், "டேய் இடியட், உனக்கு என்ன ஆச்சு? மரியாதையாக ஐ.சி.க்யூ. வில் வா" என்று ஈ-மெயில் அனுப்பினேன். பதில் இல்லை. அதற்குப் பிறகு இன்னொரு முறை மெயிலும் மெசேஜும் அனுப்பிப் பார்த்தேன். அதற்கும் அவன் மசியவில்லை. சரிதான் போடா என்று விட்டுவிட்டேன். உண்மையில் அவன் எப்போது ஐ.சி.க்யூ. வில் வருவான் என்று காத்திருந்தேன். ஐ.சி.க்யூ.வில் invisible mode ஒன்று இருக்கிறது. நாம் ஆன்லைனில் இருப்பதை மற்றவர்களுக்குத் தெரியாமல் வைத்திருக்கலாம். விக்கி invisible mode ல் இருக்கலாம்.

ஒரு வாரம் கழித்து பொறுமை கெட்டுப்போய் அவனுக்கு ஒரு ஈ-மெயில் அனுப்பினேன். "விக்கி உனக்கு ஏன் என்னிடம் கோபம்? நீ என்னிடம் என்ன எதிர்பார்க்கிறாய்?" என்று சுருக்கமாக எழுதினேன். என் ஈ-மெயில்களை எல்லாம் அவன் படிக்கிறான் என்று எனக்குத் தெரியும். இதற்கு அவனிடமிருந்து கண்டிப்பாக பதில் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.

பதில் வரவில்லை. ஆனால் விக்கி ஐ.சி.க்யூ.வில் வந்தான். வந்துவிட்டு சும்மாதான் இருந்தான். நான்தான் அவனுக்கு மெசேஜ் அனுப்பினேன். "உனக்கு என்ன ஆச்சு?" என்று. ஹலோஇ ஹெள ஆர் யூ எல்லாம் இல்லாமல் நேரடியாகப் பேசினான் விக்கி. "என் மேல் நம்பிக்கை இல்லாதவர்களுடன் நான் பேச முடியாது. என்னை நம்பவில்லை என்றால் அது எனக்குப் பெரிய இன்சல்ட்" என்றான் அவன். "நீ ஏன் அதை அப்படி எடுத்துக்கொள்கிறாய்? நாம் எவ்வளவு நல்ல ஃப்ரெண்ட்ஸாக இருந்தோம். ஒரு ஃபோன் நம்பருக்காக நீ நம் ஃப்ரெண்ட்ஷிப்பை அறுக்கப் பார்க்கிறாயே!" என்றேன்.

"உன் ஃபோன் நம்பரைக் கூட எனக்கு சொல்ல மாட்டாய் என்றால் நீ என்ன ஃப்ரெண்ட் எனக்கு? ஓ.கே. நான் கிளம்புகிறேன். எனக்குக் கொஞ்சம் அவசர வேலை இருக்கிறது" என்றான் விக்கி. எனக்கு மனசு ரொம்பக் கஷ்டமாகிவிட்டது. "விக்கிஇ எனக்கு ஒரு விஷயத்தை மட்டும் சொல்லிவிட்டுப் போ. நாம் ஃப்ரெண்ட்ஸா இல்லையா?" என்றேன். "நான் உன்னை ஃப்ரெண்டாக நினைக்கவில்லை. நான் உன்னை லவ் பண்ணுகிறேன். உன்னை நான் நேரில் பார்க்க வேண்டும். குறைந்தது ஃபோனிலாவது பேசவேண்டும். போதுமா?" என்றான் விக்கி!

எனக்கு இதை ஜீரணிக்க முடியவில்லை. அவன் என் பதிலுக்காகக் காத்திருந்தான். ஆனால் எனக்கு ஆன்லைன் காதலில் நம்பிக்கை இல்லை. அவன் தனக்கு என் மேல் காதல் என்று தன்னையே ஏமாற்றிக்கொண்டிருக்கிறான் என்று எனக்குத் தோன்றியது. எனக்கு அவன் மேல் காதலும் இல்லை. அதே சமயம் நான் அவனை இழக்க விரும்பவில்லை. "விக்கிஇ நான் உன்னைக் காதலிக்கவில்லை. நான் உன்னுடன் இன்டர்நெட்டில் ஃப்ரடெண்டாகத்தான் இருக்க விரும்புகிறேன்" என்றேன்.

"எந்த உறவும் ஒரு கட்டத்திற்கு மேல் வளர வேண்டும் ரியா. நாம் அந்தக் கட்டத்தைத் தாண்டிவிட்டோம். நீ என்னைக் காதலிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. நிஜ வாழ்க்கையிலும் நண்பர்களாக இருப்போம் என்கிறேன்" என்றான் விக்கி. சொல்லிவிட்டு என் பதிலுக்குக் காத்திருக்காமல் போய்விட்டான்.

அடுத்து ஒரு வாரம் ஐ.சி.க்யூ.வில் தொடர்ந்து பேசினோம். ஆனால் விக்கி ரொம்ப சீரியஸாக இருந்தான். நான் ஜோக் அடிக்க செய்த முயற்சிகள் வீணானது. விக்கியிடம் முன்பிருந்த விளையாட்டெல்லாம் போய்விட்டது. இது வேறு விக்கி. ஆனால் எனக்கு மறுப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. நாங்கள் நேரில் சந்தித்தால் அவனுக்கு என்னைப் பிடிக்காமல் போகலாம். அல்லது எனக்கு அவனைப் பிடிக்காமல் போகலாம். இன்டர்நெட் நண்பர்கள் ஆன்லைனில் இருப்பது போல் நிஜ வாழ்க்கையிலும் இருப்பார்கள் என்று நிச்சயமாக சொல்ல முடியாது. அவனிடம் இதைப் புரிய வைக்கப் பார்த்தேன். விக்கி அதை மறுத்தான். எனக்கு உன்னை நிச்சயம் பிடிக்கும் என்றான்!

ஒரு வாரம் கழித்து மீண்டும் காணாமல் போனான் விக்கி. அதற்குப் பிறகு அவனுக்கு மெசேஜ்களும் ஈ-மெயில்களும் அனுப்பிக் கொண்ட இருந்தேன். இது வரை அவனிடமிருந்து பதில் இல்லை. எனக்கும் நம்பிக்கை போய்விட்டது. இப்போது தோன்றுகிறது, ஃபோன் நம்பர் கொடுத்து ரிஸ்க் எடுத்துப் பார்த்திருக்கலாம் என்று. May be எனக்கு அவன் மேல் அளவுக்கு அதிகமான ஒரு ஈர்ப்பு இருந்திருக்கிறது. அதனால்தான் அவனைப் பிரிந்த பிறகு எனக்கு எதுவும் பிடிக்காமல் போனது. நான் ரொம்ப எச்சரிக்கையாக இருந்திருக்கக் கூடாது தான்...



நன்றி : வெப்உலகம்

................
Reply
#3
இன்டர்நெற் காதலினால் கணவனை விட்டு இன்டர்நெற்
காதலுடன் ஓடிய நமது தமிழ்பெண்களும் ஜரோப்பியநாடுகளில் உள்ளார்hகள்
Reply
#4
[size=18]கதை 3 : ஈ-மெயிலில் வளர்ந்த உறவு

அப்போதுதான் நான் காலேஜில் சேர்ந்திருந்தேன். அங்கே நான் புதிதாக யாரைப் பார்த்தாலும் "உன் ஈ-மெயில் ஐ.டி. என்ன?" என்ற கேள்வியைக் கேட்டார்கள். எனக்கு இன்டர்நெட் என்றாலே என்னவென்று தெரியாது.

என் தோழி ஒருத்தி சரியான இன்டர்நெட் பைத்தியம். அவள் பெயர் லிசா என்று வைத்துக் கொள்வோம். அவள் உதவியுடன் எனக்கென்று ஒரு ஈ-மெயில் முகவரியை உருவாக்கிக் கொண்டேன். ஆனால் பல நாள் ஆகியும் எனக்கு யாரும் ஈ-மெயில் அனுப்புகிற மாதிரி இல்லை.

லாகின் செய்தால் ஈ-மெயிலுக்கே நேரம் சரியாக இருக்கிறது என்று லிசா ஸ்டைலாக அலுத்துக் கொள்ளும்போதெல்லாம் எனக்குப் பொறாமையாக இருக்கும். ஒரு நாள் என் பரிதாப நிலையைப் புரிந்துகொண்டு அவள் ஒரு டேட்டிங் சைட்டை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள்.

டேட்டிங் சைட் என்றால் அதில் நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் தங்களைப் பற்றிய தகவல்களைத் தந்து நண்பர்கள், காதலர்கள் வேண்டும் என்று கேட்டிருப்பார்கள். லிசாவின் வற்புறுத்தல் தாங்காமல் 20 டாலர் கட்டி அந்த சைட்டில் உறுப்பினர் ஆனேன்.

பெரும்பாலான ஆண்கள் தங்களைப் பற்றி வேடிக்கையாக எழுதியிருந்தார்கள். அத்தனை பேரில் டோனி வில்சன் என்பவனின் விவரங்கள் என்னைக் கவர்ந்தன.தன்னைப் பற்றி அவன் அடக்கமாக, தமாஷாக, தெளிவாக எழுதியிருந்த விதம் என்னை யோசிக்க வைத்தது. சரி, இவன் சரியான ஆம்பிளை, இவனுக்கு ஈ-மெயில் அனுப்பிப் பார்க்கலாம் என்று முடிவெடுத்தேன்.

டோனி, அமெரிக்காவின் தென்கோடியில் இருந்தான். நான் வடக்கில் இருந்தேன். இவ்வளவு பாதுகாப்பான தூரத்தில் இருந்ததால் நான் அவனோடு ரொம்ப இன்வால்வ் 'ஆகிவிட மாட்டேன் என்று நினைத்தேன். அவன் ஒரு சைக்கோவாக இருந்தால் கூட அவ்வளவு தூரத்தில் இருந்துகொண்டு என்னை ஒன்றும் செய்ய முடியாது.

ஹாய் சொல்லி ஒரு ஈ-மெயில் அனுப்பினேன். டோனியும் அந்த சமயத்தில் இன்டர்நெட்டில் இருந்திருக்கிறான் போலிருக்கிறது. நான் அனுப்பிய சில நிமிடங்களில் அவனிடமிருந்து பதில் வந்தது. டோனி புத்தகம் படிப்பானாம். சீரியஸ் படங்கள் நிறைய பார்ப்பானாம். இப்படி தன்னைப் பற்றி விலாவாரியாக எழுதினான் டோனி. நான் என் ரசனைகள் பற்றி எழுதினேன். இவ்வளவு பரிவான ஆளை நான் பார்த்ததில்லை.

சில மாதங்களுக்குள் நாங்கள் ரொம்ப அன்னியோன்யமாகிவிட்டோம். அவன் என்னை ஒரு நல்ல நண்பியாகக் கருதி தன் பிரச்னைகளைப் பற்றி சொன்னான். எனக்கு அவன் மேல் காதல் இன்னும் முழுமையாக உருவாகவில்லை. நீ யாரையாவது காதலிக்கிறாயா?' என்று யாராவது கேட்டால் நான் இல்லை என்று சொல்வேன். ஆனால் எனக்கு அவன் ஞாபகம்தான் வரும்.

நாங்கள் பழகி சுமார் ஒரு வருடம் ஆகியிருக்கும். ஒரு நாள் ஈ-மெயிலில் "நாம் நேரில் சந்திப்போமா?" என்று கேட்டான் டோனி எனக்கு லேசாக அதிர்ச்சியாக இருந்தது. வேண்டாம் என்று சொன்னால் தப்பாக நினைத்துக்கொண்டுவிடுவானோ என்று பயமாக இருந்தது. "வாட் டு யூ மீன்?" என்று எதிர்க் கேள்வி கேட்டேன். "ஏன் பயப்படுகிறாய்?" நேரில் சந்திப்போமா என்றால் சாட் செய்வோமா என்று அர்த்தம்! என்றான் டோனி. எனக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

எனக்கு சாட் செய்யத் தெரியாது. எங்கே போகவேண்டும், எப்படி செய்யவேண்டும் என்றெல்லாம் டோனிதான் சொல்லிக் கொடுத்தான். சாட் அற்புதமாக இருந்தது! எனக்கு ஃபோனில் பேசுவதை விட சாட் பிடித்தது. நானும் டோனியும் அன்றைக்கு விடிய விடியப் பேசினோம்! என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத நாள் அது.

ஒரு நாள் சாட் செய்துகொண்டிருக்கும்போது டோனி, "உன்னிடம் ஒரு விஷயம் சொல்லவேண்டும்" என்றான். "என்ன?" என்றேன், ஒரு வித எதிர்பார்ப்புடன். "நான் ஒரு பெண்ணுடன் பழக ஆரம்பித்திருக்கிறேன்" என்றான். எனக்கு அதைக் கேட்டு ஏமாற்றமாக இருந்தது. அப்போதுதான் நான் அவனைக் காதலிக்கிறேன் என்று எனக்கு நிச்சயமாகத் தெரிந்தது.

ஆனால் அவன் சொன்னதை நான் முழுசாக சொல்லவில்லை. அவனுக்கும் அவன் பழகும் அந்தப் பெண்ணுக்கும் இடையில் சுவாரஸ்யமாக எதுவும் உருவாகவில்லை என்றான் டோனி. "கவலைப்படாதே டோனி, உனக்கென்று ஒருத்தி எங்காவது காத்துக் கொண்டிருப்பாள். Just keep your eyes open என்று ஆறுதல் சொன்னேன். அத்தனை சந்தோஷமாக நான் யாருக்கும் ஆறுதல் சொன்னதில்லை.

ஆனால் நான் முடிவு செய்தேன். இனிமேலும் தாமதிக்காமல் அவனிடம் நேரடியாகப் பேசிவிடவேண்டும். அடுத்த சாட்டில் அவனோடு கொஞ்சம் சீரியஸாகப் பேசினேன். அவனுக்கு இன்டர்நெட் காதலில் நம்பிக்கை இருக்கிறதா என்பது போன்ற கேள்விகள் எல்லாம் கேட்டேன். அவன் புரிந்துகொண்டிருப்பான்.

சில வாரங்கள் கழித்து அவனே என்னை நேரில் பார்க்கவேண்டும் என்று சொன்னான். அப்போது எங்களுக்கு அது வித்தியாசமாகப் படவில்லை. நாங்கள் அவ்வளவு நெருக்கமாகியிருந்தோம். டோனி பல நூறு மைல்கள் கடந்து என்னைப் பார்க்க வருகிறான் என்பதை நினைக்கும்போதே எனக்கு சிலிர்ப்பாக இருந்தது.

எங்கள் பகுதியில் இருந்த ஒரு ஹோட்டலில் தங்கினான் டோனி. ஹோட்டலுடன் இணைந்திருந்த திறந்தவெளி ரெஸ்ட்டாரன்ட்டில் சந்திப்பதாகப் பேசி வைத்துக்கொண்டோம். அது கிறிஸ்துமஸுக்கு முந்தைய நாள்.அவன் வருவதற்கு அரை மணி நேரம் முன்பே நான் அங்கே போய்விட்டேன். அவனுக்கு என்னைப் பார்த்தால் பிடிக்காமல் போய்விடுமா, எனக்கு அவன் முகம் பிடிக்குமாஇ அவன் நேரில் வேறு மாதிரிப் பழகுவானா என்றெல்லாம் யோசித்தபடி அந்த அரை மணி நேரம் நான் தவித்த தவிப்பு எனக்குத்தான் தெரியும்!நேரம் நெருங்கியபோது என் டேபிளை நோக்கி ஒரு இளைஞன் தயக்கமாக நடந்து வந்தான். அது டோனிதான். அவனைப் பார்த்ததுமே அசந்து போனேன். சூப்பர் மாடல் மாதிரி இருந்தான் அவன்! அடுத்த கேள்விஇ அவனுக்கு என்னைப் பிடிக்குமா என்பதுதான்.

டோனியின் குரல் கூட ஒரு பாடகனின் குரல் போல கம்பீரமாகவும், மிருதுவாகவும் இருந்தது. இவனுக்கு ஜோடி ஆக இப்போது ஆசைப்பட்டால் அது பேராசையாகத்தான் இருக்கும். அவனோ என்னைப் பற்றி எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்தது போல் சகஜமாகப் பேசிக்கொண்டிருந்தான். காதல் என்பது அவன் மனதில் கொஞ்சம் கூட இல்லையோ என்னவோ என்று எனக்குத் தோன்றியது.

பேசிக்கொண்டிருந்தபோது, "உன் குடும்பத்தினரை எனக்கு அறிமுகப்படுத்தி வைக்க மாட்டாயா?" என்றான் டோனி. நான் சந்தோஷமாக ஒப்புக்கொண்டேன். சிறிது நேரம் அங்கே பேசிவிட்டு என் வீட்டுக்குப் போனேன்.

என் பெற்றோர் முதலில் அவனை விநோதமாகப் பார்த்தாலும் பிறகு அவர்களுக்கு அவனைப் பிடித்துப் போனது. அங்கிருந்து அவன் ஹோட்டல் ரூமுக்குப் போனான். மறு நாள் சந்திப்போம் என்று முடிவு செய்தோம். மறு நாள் மாலைதான் அவன் திரும்பிப் போவதாக இருந்தது.

அன்று மாலை வழக்கம் போல் ஈ-மெயில் பார்த்தபோது அவனிடமிருந்து ஒரு வாழ்த்து அட்டை வந்திருந்தது. கிறிஸ்துமஸ் வாழ்த்து சொன்ன டோனிஇ கூடுதலாக ஒரு வரி சேர்த்திருந்தான் "Will you marry me?" எனக்குக் கத்தவேண்டும் போல் இருந்தது! உடனே பதிலுக்கு நான் ஒரு அட்டை அனுப்பினேன்

அடுத்து ஒரு மணி நேரம் நாங்கள் ஃபோனில் உருகி உருகிப் பேசிக்கொண்டிருந்தோம்! என் பெற்றோரிடமும் எங்கள் விஷயத்தை சொன்னேன். கடைசியில் என் காலேஜ் படிப்பு முடிந்தவுடன் என் திருமணம் நடக்கும் என்று முடிவானது.

இப்போதெல்லாம் என் பெற்றோர் டெலிஃபோன் பில் பற்றிக் கவலைப்படுவதில்லை. நானும் டோனியும், ஈமெயில், சாட், ஃபோன் என்று எது கிடைத்தாலும் விடுவதில்லை. நான் மட்டும் இன்டர்நெட்டில் நுழைந்திருக்கவில்லை என்றால் என் வாழ்க்கை எப்படிப் போயிருக்கும் என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. இன்டர்நெட் என் வாழ்க்கையை அடியோடு மாற்றிவிட்டது!



நன்றி : வெப்உலகம்

................
Reply
#5
நல்ல கதைகளை பகிர்ந்துகொள்ளும் நண்பர் அருணிற்கு நன்றிகள். (எனக்கும் கருவாகின்றது)
[b] ?
Reply
#6
ganesh Wrote:இன்டர்நெற் காதலினால் கணவனை விட்டு இன்டர்நெற்
காதலுடன் ஓடிய நமது தமிழ்பெண்களும் ஜரோப்பியநாடுகளில் உள்ளார்hகள்

வணக்கம் கணேஷ் !
இன்ரனெட்டில் காதல்செய்து 53வயது ஆண் தன்மனைவியைத் துரத்திவிட்டுள்ளதும் நடந்திருக்கிறது. எனக்காக ஆயிரம் இளம்பெண்கள் இன்ரனெட்டில் உள்ளார்கள் என வீராப்பும்பேசிக்கொண்டிருக்கும் கணவனை நம்பி தாயகத்தில் ஒருபெண் காத்திருக்கிறாள் ஒரு பெண். (இது உண்மைச்சம்பவம்) ஆனால் அக்கணவனோ அவள் செத்தாலும் அவளைத்தன்னுடன் அழைக்கமாட்டேன் என அடம்பிடிக்கிறார். குற்றங்கள் , குறைகள் இருபக்கமும் உள்ளது. ஒருபக்கத்தை மட்டும் பார்த்து இதுதான் நடக்கிறது என்றால் என்னவாம் நீதி....?
Reply
#7
இன்ர நெட்டில் என்ன சாதாரணமாகவே நமது சமுதாயத்தில் வீராப்புடன் தனித்தனியாக வெவ்வேறு ஸ்டட்டில் வாழ்பவர்களும் இருக்கிறார்கள்.

கலாச்சாரத்தை,கட்டுப்பாட்டை,நமது பண்பாட்டை மறந்தவர்களிடம் நியாயம் பேசிப்பயனே இல்லை.
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
Reply
#8
இன்டர்நெட்டில் எவ்வளவோ நல்ல
காரியங்கள் உண்டு ஆனால் நம்மவர்கள் தவறாகப்பயன்படுத்துகிறார்கள்
Reply
#9
சொந்தந்தங்களுக்குள் சொந்தங்கள் திருமணம் செய்து கொண்டோம். இவை சொந்தங்கள் விலகிவிட கூடாது என்ற நோக்குடையனவாகவும் சொத்துக்கள் விலகி விட கூடாது என்ற நோக்குடையனவாகவும் இருந்தது. இன்றும் இருந்து வருகிறது.

சொந்தம் விட்டு கிராம hPதியாக அவை தாவின. கூப்பாடு போட்டுவர்கள் பலர். ஆனாலும் திருமணங்கள் நடந்தேறினதான்.

வடமராச்சியான் தீவான் இப்படியே பலவாய் ...... பின்னர் பாகு பாடு நிறைந்தன. ஆனாலும் திருமணங்கள் நடந்தேறினதான். இப்படியாக தெரியாத ஒரு ஊர் ஆயின் எதிற்புக்கள் எழுந்தன உண்மை தான். காரணம் மிக விரைவில் பிரிந்து விடுவார்களோ என்கின்ற சுhக்குமம் அதனுள்.
பிரதேசவாத உரையாடல் போய் தொலைபேசி உரையாடல் வந்து பின்னர் படிப்படியாக கணணியில் இன்று வந்து நிக்கிறது. கூட்டிக் கழித்து பாத்தால் எல்லாம் ஒன்று தான் மிரழுவதற்கு இங்கு ஏதுமில்லை. சொந்தந்துக்குள் செய்த திருமணங்களே கலை வாரி விடுகிறபோது ஊர் மாறி ஊர் திருமணங்கள் அழிவை சுமந்தவையான சில சம்பவங்களை தருகிற போது ஏன் கணித்திருமணங்களில் வென்றவர்கள் பலர் உளர். எங்கும் எதிலும் தில்லு முல்லு இருக:;கத்தான் செய:;கிறது.

கணணி என்றால் என்ன ஒழுங்கை என்றால் என்ன மனிதன் மனிதனாக முதலில் வாழ பழகட்டும். காதல் அதன் உன்னதம் புரிந்தவற்கு இவை யாவும் சாதரணமே.

திருமணத்திற்கு பின்னான காதலாயின் சினிமாவில் வந்தால் மட்டும் அந்த சினிமாவிற்காக வக்காளத்து வாங்குவோர் பலரை கண்டிருக்கின்றேன். திருமணத்திற்கு பின்னான நிச வாழ்விலமைந்த காதலாயின் தாம் தோம் என துள்ளுவோரைத்தான் அதிகம் கண்டு வருகிறேன்.

சின்ன வீடு என ஒரு சொற்பதமே தமிழில் உள்ளது. அனைத்து ஆணாதிக்க தன்மையோடு.

நளாயினி கூட கூடையில் கணவனை கூத்தி வீட்டிற்கு கணவனை கொண்டு சென்றாள் என்கின்ற வரலாறு தான் உண்டு. அங்கு கணவனின் பெயர் கூட யாருக்குமே தெரியாது. தெரியாது மறைக்கப்பட்டுள்ளது என்றால் நளாயினியைக் கூட அன்றய ஆணாதிக்க சமூகம் தனக்கான ஆணாதிக்கத்துள் நன்றாக பயன்படுத்தி உள்ளது என்று தான் பொருளாகிறது.

தமக்கு சாதகமாக கதைகளை அளந்து அளந்து வெயிட்டதன் போக்கு ஆணாதிக்க சமூக உருவாக்கத்திற்கு வழிகோஈலியுள்ளது எனலாம்-. ஒரு பெண்ணே கொண்டு சென்று விட்டாள் என்கின்ற வரலாறு மற்ற பெண்களை வாயடைக்க செய்தது என்பது தான் உண்மை. அதனால் தான:; இன்றைய நிசங்கள் எமக்கு கசக்கிறது.

இரு மனமொத்தது தான் வாழ்க்கை - இல்லை என்றால் அழுது புலம்பி இழுத்து வைத்திருத்தல் வாழ்க்கையாகாது.
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#10
Karavai Paranee Wrote:நல்ல கதைகளை பகிர்ந்துகொள்ளும் நண்பர் அருணிற்கு நன்றிகள். (எனக்கும் கருவாகின்றது)

ஏன் நீரும் காதலித்து இருக்கிறீரா பரணீ

................
Reply
#11
இந்தத் தளத்திலை நடக்கிற ஆள்மாறாட்டங்கள் பால்மாற்றங்கள் தில்லுமுல்லுகளை கவனிக்கிறவர்.. ஒருகாலமும் இன்ரநெற் காதல் கத்திரிக்காய் எண்டு அலையமாட்டார். அவர் தீவாராகவோ.. வடமராட்சியாராகவோ.. அல்லது யாராகவும் இருக்கலாம் யாபேருக்கும் பொருந்தும்..
அந்தளவுக்கு தில்லுமுல்லுகள் இந்தத் தளத்தில்
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#12
[size=18]கதை 4 : சக்களத்தி சண்டை

ஆறு மாதங்களுக்கு முன் நானும் என் ரூம் மேட் அன்னாவும் சேர்ந்து ஒரு கம்ப்யூட்டர் வாங்கினோம். பாடம் தொடர்பாக நிறைய கட்டுரைகளும் உதவிகளும் இன்டர்நெட்டில் கிடைக்கும் என்பதற்காகத்தான் அதை வாங்கினோம். ஆனால் தற்செயலாக ஒரு நாள் சாட் செய்யப் போக, அதற்குப் பிறகு நாங்கள் கம்ப்யூட்டரை சாட் செய்யத்தான் பயன்பத்தினோம்!

ஒரு நாள் சாட் செய்து கொண்டிருந்தபோது யாரோ ஒருவன் "ஹாய்!" என்று ஒரு மெசேஜ் அனுப்பினான். நானும் ஹாய் சொல்லி அவனுடன் பேச ஆரம்பித்தேன். அவன் பெயர் ஸ்டீவ். கொஞ்ச நேரத்தில் அவன் தன்னைப் பற்றி எல்லாவற்றையும் சொல்ல ஆரம்பித்தான். ஸ்டீவ் வளவள என்று பேசிக்கொண்டே இருந்தாலும் எங்கள் சாட் ஜாலியாக இருந்தது.

அவன் தன் ஆறு மாத கேர்ள்ஃப்ரெண்ட் பற்றி சொன்னான். எங்கள் முதல் சந்திப்பிலேயே நாங்கள் மூன்று மணி நேரம் பேசினோம். நாம் மீண்டும் சந்திப்போம் என்று அவன் சொல்ல, அன்றைய சாட் அதோடு முடிந்தது. ஸ்டீவும் நானும் தினமும் சாட் செய்தோம். அவனுடன் பேசப் பேச எங்களுக்குள் இடையில் எத்தனை விஷயம் ஒத்துப் போனது என்று தெரிந்தது.

இதற்கிடையில் அவன் கேர்ள்ஃப்ரெண்ட் தாரா அவனுக்குப் பிரச்னை கொடுக்க ஆரம்பித்தாள். ஸ்டீவின் காதலி சரியான பொறாமைப் பேய். ஸ்டீவ் வேறு பெண்களுடன் பேசினால் அவனை ஆயிரம் கேள்விகள் கேட்பாளாம். ஃபோனில் பேசினால், "யாருடன் பேசிக் கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டு நச்சரிப்பாளாம். தாராவுக்கு நாங்கள் மணிக்கணக்கில் சாட் செய்வதைப் பார்த்து எரிச்சல்.

நாங்கள் வெறும் ஃப்ரெண்ட்ஸ்தான் என்று ஸ்டீவ் சொல்லிப் பார்த்தான். தாரா அதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. பிறகு அவனுக்கு அன்னாவை ஆன்லைனில் அறிமுகம் செய்து வைத்தேன். அவளும் ஸ்டீவுடன் சாட் செய்யத் தொடங்க, தாராவுக்கு வெறியே வந்துவிட்டது. ஸ்டீவைப் பற்றி அவள் புலம்பியதெல்லாம் அபத்தமாக இருந்தது.

ஸ்டீவ் வீட்டில் யாருக்கும் தாராவைப் பிடிக்காது. அவன் நண்பர்களுக்கும் அவளைப் பிடிக்காது. ஸ்டீவ் தனியாக ஒரு ரூமில் தாராவுடன் தங்கியிருந்தான். தாரா தன்னுடன் இருப்பதே இல்லை என்று ஸ்டீவ் வருத்தப்பட்டான். சில சமயம் தாரா ஊர் சுற்றப் போய்விட்டு சேர்ந்தாற்போல் இரண்டு நாட்கள் திரும்பி வராமல் இருப்பாள்.

தாராவின் சில்லறை புத்தியை சகித்துக் கொள்ள புத்தர் மாதிரி இருக்கவேண்டும். சில சமயம் அவள் ஸ்டீவின் பெயரில் ஆன்லைனில் வந்து என்னையும் அன்னாவையும் வெறுப்பேற்றுவாள். அவளும் ஸ்டீவும் ரொம்ப சந்தோஷமாக இருப்பதாகப் புளுகுவாள். நாங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் அவர்களைப் பிரிக்க முடியாது என்பாள்.

நாங்கள் ஸ்டீவை அவளிடமிருந்து "திருட" முயற்சி செய்யவில்லை என்று நாங்களும் அவளுக்கு எடுத்து சொன்னோம். அவள் அதைக் கண்டு கொள்ளவில்லை.

ஒரு கட்டத்தில் நிலைமை ரொம்ப மோசமானது. தாரா ஸ்டீவை ஏமாற்றுகிறாள் என்று ஸ்டீவின் அண்ணன் எங்களிடம் சொன்னான். தாராவை விட்டுப் பிரிந்துவிடு என்று நானும் அன்னாவும் ஸ்டீவுக்கு அறிவுரை சொன்னோம். இதற்கிடையில் ஸ்டீவ் மெல்ல மெல்ல என்னைக் காதலிக்கத் தொடங்கியிருந்தான்!

உனக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்றான். வேறு யரையும் விட என்னை விரும்புவதாகச் சொன்னான். ஸ்டீவ் அன்னாவிடமும் என்னைப் பற்றிப் பேசியிருக்கிறான் போலிருக்கிறது. "ஸ்டீவ் தான் உனக்கேற்ற ஆள்" என்று அவளும் விடாமல் சொல்ல ஆரம்பித்தாள்.

ஸ்டீவ் கடைசியில் தாராவுக்கு குட்பை சொன்னான். அதுவும் நான் சொன்னதற்காக. தாரா அதை வைத்து டிராமா நடத்தினாள். அவன் கண்ணெதிரிலேயே மாத்திரைகள் விழுங்கினாள். அவை சாதாரண காய்ச்சல் மாத்திரைகள் என்று அவளுக்குத் தெரியும். ஆனால் ஸ்டீவுக்குத் தெரியாது.

ஸ்டீவை முடிந்த வரை பிளாக்மெயில் செய்யப் பார்த்தாள் தாரா. பிறகு ஸ்டீவ் தன் கையை விட்டுப் போய்விட்டான் என்று புரிந்துகொண்டு கிளம்பினாள் அவள். ஆனால் போவதற்கு முன், நாங்கள் பேசக்கூடாது என்பதற்காக ஸ்டீவின் மைக்ரோஃபோனை உடைத்துவிட்டுத்தான் போனாள்.

இப்போது எங்களுக்கு யார் தொந்தரவும் இல்லை. ஸ்டீவ் மேல் எனக்குப் பைத்தியமாகிவிட்டது! ஸ்டீவ் இல்லை என்றால் அவன் அண்ணனுடனோ தங்கையுடனோ ஜாலியாக சாட் செய்துகொண்டிருப்பேன். நான் மிக விரைவில் கண்டிப்பாக அவர்கள் வீட்டுக்கு வரவேண்டும் என்று சொன்னார்கள்.

நானும் ஸ்டீவும் நேரில் சந்திப்பதுதான் எங்கள் காதலின் அடுத்த கட்டம். அதில் ஒன்றும் சிக்கல் இருக்கப் போவதில்லை. நாங்கள் ஒருவரை ஒருவர் முன்பே ஃபோட்டோவில் பார்த்துவிட்டோம். நாங்கள் முடிந்த வரை நெருக்கமாக இருந்துவிட்டோம். எனவே ஏமாற்றத்திற்கு இடமில்லை. நாங்கள் இருவரும் இப்போது அந்த நாளுக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறோம். பரிட்சை எல்லாம் முடிந்த பிறகு!



நன்றி : வெப்உலகம்

................
Reply
#13
அரட்டை அரங்கானாலும் சரி, அலுவலகம் ஆனாலும் சரி, தொடங்கும் போழ்து வெறும் நட்பு என்மர், கணவன் ஐயப்பட்டாலும் சினந்து வெறும் நட்புதான் என்று உறுமுவர், பின்னர் அந்த வெற்றிடத்தை நிரப்பிக் காதல் கத்**** என்று புலம்புவர்.
நட்பு எனும் விதை தான் அரட்டை எனும் மழையால் காதல் எனும் முளை விடுகிறதோ?

அது சரி திரு அருண், அன்னா, தாரா என்றுவருகிறது எங்காவது ஆங்கில வலைப்பக்கத்திலிருந்து சுடப்பட்டதோ (வெப் உலகத்தினரால்)?

-
Reply
#14
வடமராட்சியார் தென்மராட்சியார் காரைதீவார்...இப்படிப்பலதும் இப்ப இல்லைப்பாருங்கோ...பிறகேன்...இப்ப PR தான் கேப்பினம் வேற ஒண்டும் இல்ல...சரி...அது போகட்டும்...
முன்னைய இலக்கியங்களில் ஏன் ஆண்களைக் கீழத்தரமாய்ச் சித்தரிக்கினம்.......கல்லானாலும் கட்டினவள் புல்லானாலும் பொண்டில் :wink: ...எண்டு வாழ்ந்த கோடி கோடி ஆண்களின் கதை எழுதாமல்...ஆராரோ வீட்டுக்குப் போன ஆண்கள் கதை ஏன் எழுதினவை...அப்ப கதை எழுதிறவையெல்லாம் அந்தக் கேசுகளோ....அனுபவத்தைப் பகிருகினம் போல...! நமக்கென்ன.... சமுதாயம் எண்டால் சாக்கடையும் இருக்கத்தான் செய்யும் fine filter பண்ணிற முறையில பண்ணினால் ஆணாதிக்கமும் (word) இருக்காது ஆதிக்க ஆணைக்கவரும் பெண்ணும் இருக்க மாட்டாள்... இல்லையோ....!

கணணியே வைரஸ் பிடிச்சுப் போகுது.....அதுவே நிலையில்லாமல் கிடக்குது.... அதுக்க அதுக்கால காதலோ...ஆரோ வேலை மிணக்கட்டவன் செய்யுறான் எண்டதுக்காக எல்லாரும் அப்படியே...அவனுக்குமேதாவது வேலை கொடுத்தால் கணணிப்பக்கம் வரான்...மனைவிமார் கணவன்மார் தாய்மார் தந்தைமார் உதை முதலில செய்யுங்கோ...எப்படிக் Connection சுலபமோ...அப்படியே Disconnection னும் அங்க சுலபம் எண்டது பலருக்குப் புரியல்லப் போல...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#15
நல்லா கருத்துக்கை பொறுக்கி எடுத்து கருத்தெழுதிறியள் . அதுகும் சரி தான். பொறுக்கி மிண்டிறதெண்டே முடிவு பிறகென்ன முடிவு இது தானெண்டேக்கை ஆராலை மாத்தேலும். :roll: :roll: :roll:
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#16
சும்மா சும்மா சும்மா....பொ....கி எண்டு மிண்டுறது....நாகரிகமாப்படேல்ல....பழக்க தோஷத்தை மாத்தேலுமே....அக்கா எண்டு பாத்தா...சும்மா சும்மா....மீண்டும் மீண்டும் சும்மா சும்மா....?!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :oops:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#17
Kanakkayanaar Wrote:அது சரி திரு அருண், அன்னா, தாரா என்றுவருகிறது எங்காவது ஆங்கில வலைப்பக்கத்திலிருந்து சுடப்பட்டதோ (வெப் உலகத்தினரால்)?
இருக்கலாம் ஆயனார்

................
Reply
#18
[size=18]கதை 5 : காதலர் தின அதிர்ச்சி

ஹாய், என் பெயர் அருண். வயது 26. ஒரு தனியார் வங்கியில் வேலை பார்க்கிறேன். நெட்டில் எனக்குக் கிடைத்த ஒரு காதல் அனுபவத்தைப் பற்றி உங்களுக்கு சொல்லப் போகிறேன்.

வெளிப்படையாகச் சொன்னால் எனக்கு இன்டர்நெட்டில் ஆர்வம் வந்ததே இதில் இருக்கும் கிளுகிளுப்பு சமாச்சாரங்களால்தான். ஆனால் சீக்கிரமே எங்களுக்கு அது அலுத்துவிட்டது. எனவே நானும் என் நண்பர்களும் தட்டுத்தடுமாறி சாட் செய்யக் கற்றுக் கொண்டோம்.

எம்.ஐ.ஆர்.சி. என்று ஒரு சாட் சாஃப்ட்வேரில் அரட்டை அடிக்க பிரவுசிங் சென்டரில் ஒருவர் கற்றுக் கொடுத்தார். பேசாமல் ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டு சாட் பண்ணலாம் போல அவ்வளவு ஜாலியாக இருந்தது சாட்!

"CyberChat" என்ற அரட்டை அறையில்தான் என் காதலியை முதன்முதலில் சந்தித்தேன். நான் போனபோது அந்த அறையில் மூன்று பேர்தான் இருந்தார்கள். நான் போனதுமே எனக்கு ஒரு பர்சனல் மெசேஜ் (PM) வந்தது. அனுப்பியது "skinnycat". "வாஇ வாஇ உனக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தேன்" என்றாள் ஸ்கின்னி.

"ஸாரி, வர லேட்டாயிடுச்சு" என்று நானும் அவளைத் தெரிந்த மாதிரி காட்டிக் கொண்டேன். உண்மையில் அந்த அறையில் நான் நுழைவது அதுதான் முதல் தடவை. கொஞ்ச நேரம் இப்படி தமாஷாகப் பேசிவிட்டு, ஊர், பெயர் போன்ற விஷயங்களைப் பகிர்ந்துகொண்டோம். நல்ல வேளையாக அவளும் கோயம்புத்தூர்தான். அதுவும் இரண்டு பேரும் ஆர்.எஸ்.புரம்! இது எட்டாவது உலக அதிசயம் என்றேன். அவளும் ஒப்புக் கொண்டாள்.

நாங்கள் வழக்கம் போல் தமிழ் சினிமா, பஸ் பயணங்கள், இன்டர்நெட் என்று மனதில் தோன்றியதையெல்லாம் பேசிக் கொண்டிருந்தோம். தினமும் அந்த சைபர்சாட்டில் சந்திக்கத் தொடங்கினோம். நான் எந்த அரட்டை அறைக்குப் போனாலும் ஏதாவது அட்டகாசம் பண்ணி எல்லாருடைய கவனத்தையும் என் பக்கம் இழுத்துவிடுவேன். ஸ்கின்னியை ஈர்க்க இந்தக் கலை உதவியது.

எனக்குப் பிரச்னைகள் ஏற்படும்போதெல்லாம் ஸ்கின்னிதான் எனக்கு மருந்தானாள். நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கிக் கொண்டிருந்தோம். பிறகு ஒரு நாள் அவள் படத்தை அனுப்பச் சொன்னேன். அவளும் அனுப்பினாள். நான் என் படத்தை அனுப்பினேன். "வாவ்! சூப்பராக இருக்கிறாய்! என்றாள் ஸ்கின்னி. எனக்குத்தான் அவள் படத்தைப் பார்த்துக் கொஞ்சம் ஏமாற்றமாகிவிட்டது. அவள் அவ்வளவு அழகு என்று சொல்ல முடியாது.

இப்படி நினைக்கிறேனே என்று எனக்கே வெட்கமாக இருந்தது. அவளுடன் பழகத் தொடங்கிய சில நாட்களிலேயே அவளைப் போல் இன்னொரு பெண் உலகத்தில் இருக்க வாய்ப்பில்லை என்று நான் முடிவு செய்திருந்தேன். அப்புறம் ஏன் அவள் அழகைப் பற்றி நான் கவலைப்படவேண்டும்?

ஸ்கின்னியை சில நாட்கள் பார்க்காமல் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். இது அவளை அவளது உருவத்தை வைத்து எடைபோட்டதற்காக எனக்கு நானே கொடுத்துக் கொண்ட தண்டனை. ஒரு வாரம் ஈ-மெயில், சாட் இல்லாமல் இருந்தேன். இதற்கிடையில் அவள் என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொள்வாளோ என்ற கவலை வேறு.

பிறகு ஒன்றுமே நடக்காதது போல சைபர்சாட் அறையில் நுழைந்தேன். "ஹாய்!" என்றேன் ஸ்கின்னியைப் பார்த்து. "வாடா வா, இப்பத்தான் உனக்கு வழி தெரிஞ்சுதா?" என்று தமிழை ஆங்கிலத்தில் டைப் செய்து அனுப்பினாள். நான் "ஸாரி டியர்" என்று சொல்லி சமாளித்தேன். "என் ஃபோட்டோவைப் பார்த்து பயந்து ஓடிப் போயிட்டியா?" என்று நேரடியாகவே கேட்டுவிட்டாள்!

நான் ரொம்ப கூனிக் குறுகிப் போனாலும், "டார்லிங்! என்ன பேச்சு பேசுகிறாய்?! நீ ரொம்ப அழகாக இருக்கிறாய்" என்று மழுப்பினேன். அதற்குப் பிறகு நாங்கள் எப்போதும் போல் பேசிக் கொண்டிருந்தோம். நான் முன்பை விட அவளிடம் அக்கறை காட்ட ஆரம்பித்தேன். அன்பாக அதிகாரம் செய்தேன்.

ஒரு நாள் ஸ்கின்னி ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாள். அவளுக்கு அவள் காலேஜ் பையன் ஒருவன் மேல் கண்ணாம். அவனுடன் எப்படிப் பேசுவது என்று அவளுக்குத் தயக்கமாம். என்ன செய்வது என்று கேட்டாள். நான் என்ன செய்ய முடியும்? அவனிடம் வெளிப்படையாகப் பேசிவிடு என்றேன். ஆனால் உள்ளுக்குள் பொறாமை பற்றி எரிந்தது! நான் அவளைக் காதலிக்கவில்லை. ஆனால் அவளுக்கு என்னைத் தவிர வேறு நண்பர்கள் இருக்கக் கூடாது என்று நினைத்தேன்!

அதற்குப் பிறகு நான் அவனைப் பற்றி கேட்கவில்லை. கேட்க விரும்பவில்லை. சில நாட்கள் கழித்து ஸ்கின்னி அவனைப் பற்றி பேசினாள். அவனுக்கு ஏற்கனவே ஒரு கேர்ள்ஃப்ரெண்ட் இருக்கிறாளாம். "போனால் போகட்டும் விடு. இவனை விட்டால் வேறு ஆளே இல்லையா?" என்று அவளுக்கு ஆறுதல் சொன்னேன். எனக்கு சந்தோஷமாகவும் இருந்தது, வருத்தமாகவும் இருந்தது.

மூன்று நான்கு மாதங்கள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் சாட் செய்து நாங்கள் ஒன்றுக்குள் ஒன்றானோம். சைபர்சாட்டில் எங்களைத் தவிர இன்னும் பலர் இருந்தார்கள். அவர்களில் பலர் இன்டர்நெட் காதல் ஜோடிகள். அப்போது காதலர் தினத்திற்கு முந்தைய நாள். அந்த அறையே கலகலப்பாக இருந்தது. எல்லோரும் தங்கள் ஜோடியோடு கொஞ்சிக் கொண்டிருந்தார்கள்.

வேடிக்கை பார்த்துக் கொண்டு, அவர்களைத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்த என்னையும் ஸ்கின்னியையும் அவர்கள் கிண்டல் செய்ய ஆரம்பித்தார்கள். சில சமயம் பச்சையாக! எனக்கு அதில் ஆட்சேபம் இருக்கவில்லை. ஒரு நாகரீகத்திற்காக "இது ரொம்ப ஓவர்!" என்று கத்தினேன். ஸ்கின்னி என்னவென்றால் "hahaha" என்று சிரித்துக்கொண்டிருந்தாள்!


ஆனால் சிறிது நேரத்தில் நாங்களும் வேடிக்கைக்காக காதலர்கள் போல் பேச ஆரம்பித்தோம். அவளும் அதை என்ஜாய் செய்தது தெரிந்ததது. நேரம் ஆக ஆக ஒவ்வொருவராகக் கிளம்பினார்கள். நாங்கள் மட்டும் எங்கள் தனி அறையில் எங்கள் ரொமான்ஸை தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தோம். சந்தடி சாக்கில் நான் அவளுக்கு நிறைய எலக்ட்ரானிக் முத்தம் கொடுத்தேன்! (*kiss* என்று டைப் செய்தால் முத்தம் கொடுப்பதாக அர்த்தம்)

அப்போது அவளிடம் நான் சொன்னேன். "ஸ்கின்னி, நான் உன்னிடம் ஒரு சீரியஸான கேள்வி கேட்க வேண்டும்." "கேளு" என்றாள் ஸ்கின்னி. "இப்போது நான் உன்னிடம் பேசியதெல்லாம் நிஜம்தான் என்று சொன்னால் நீ என்ன நினைப்பாய்? நான் உன்னை நிஜமாகவே காதலிக்கிறேன் என்று சொன்னால் நீ எப்படி எடுத்துக் கொள்வாய்?" என்றேன். "தெரியவில்லை" என்றாள் ஸ்கின்னி.

"நான் பேசியது எல்லாமே நிஜமான உணர்ச்சிகள்தான். நான் உன்னைக் காதலிப்பதும் நிஜம்தான்" என்றேன். சொல்லிவிட்டு சட்டென்று எம்.ஐ.ஆர்.சி.யை க்ளோஸ் செய்துவிட்டேன். அவ்வளவு டென்ஷன் எனக்கு!

அவசரப்பட்டுவிட்டோமோ என்று தோன்றியது எனக்கு. முதலில் அவளிடம் அவள் ஃபோன் நம்பரை வாங்கிவிட்டு இதை சொல்லியிருக்கலாம். அடுத்த நாள் சாட்டுக்குப் போகவில்லை. அவளிடமிருந்து"??????" என்ற தலைப்பில் ஒரு மெயில் வந்திருந்தது. குறுகுறுப்புடன் திறந்தேன்.

அதைத் திறப்பதற்கு முன்பே எனக்கு ஆயிரம் கற்பனைகள். " அருண், நாம் நண்பர்கள்தான். நீ என்னைத் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டாய். நீ அப்படி நினைக்க நான் ஒரு காரணமாக இருந்திருந்தால் ஸாரி" என்று அவள் எழுதியிருப்பாளோ என்று பயந்தேன்.

"அருண், உன் கேள்விக்கு என் பதிலைப் படித்தாயா? யாஹூ மெசஞ்சரைத் திறந்து பார்." - ஸ்கின்னி இவ்வளவுதான் எழுதியிருந்தாள். அதே குறுகுறுப்புடன் மெசஞ்சரில் லாக்-இன் செய்தேன். அவள் மேசேஜ் : "எனக்கும் அப்படித்தான் என்று நினைக்கிறேன்."

எனக்கு சந்தோஷத்தில் அலற வேண்டும் போல் இருந்தது! காதலர் தினத்தைக் கொண்டாட எனக்கு அருமையான வாய்ப்பு கிடைத்தது. உடனே ஸ்கின்னிக்கு ஒரு வாழ்த்து அட்டை அனுப்பினேன். சில நாட்களுக்கு எனக்கு எல்லாமே சொர்க்கமாக இருந்தது. நான் சொன்ன காதல் வார்த்தைகள் எல்லாம் கேட்டு அவள் ரசித்து சிரித்துக் கொண்டிருந்தாள். ஆனால் இந்த சந்தோஷம் சில நாட்கள்தான் நீடித்தது.

"உன்னோடு கொஞ்சம் பேச வேண்டும்" என்று ஸ்கின்னி ஒரு நாள் ஈ-மெயில் அனுப்பினாள். என்னவாக இருக்கும் என்ற ஆர்வத்தில் "பேசலாம்" என்றேன். அன்று சாட்டில் அவள் சொன்ன விஷயம் எனக்கு அதிர்ச்சியைத் தந்தது.

"அருண், நான் காதலர் தினத்திற்கு முந்தைய நாள் போட்ட கூத்தில் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன். என்னை மன்னித்துவிடு. நான் உன்னை விரும்புகிறேன், ஆனால் காதலிக்கவில்லை. நாம் எப்போதும் நண்பர்களாகவே இருப்போம். தயவு செய்து என்னைத் தப்பாக நினைத்துக் கொள்ளாதே. ஆத்திரப்படாதே. கோபித்துக் கொள்ளாதே" என்று நீளமாக ஒரு மெசேஜை டைப் செய்து அனுப்பினாள்.

"பரவாயில்லை ஸ்கின்னி . நீ சொல்வது எனக்குப் புரிகிறது. நாம் நண்பர்களாகவே இருப்போம். ஆனால் இன்று மட்டும் நான் சொஞ்சம் சாட்டிலிருந்து விலகிக் கொள்கிறேன்." என்று சொல்லிவிட்டு எம்.ஐ.ஆர்.சியை க்ளோஸ் செய்தேன். அதற்கு மேல் என்னால் பேச முடியவில்லை. என் கற்பனைகள், கனவுகள் எல்லாம் ஒரு நொடியில் அர்த்தமில்லாமல் போய்விட்டன.

இது நடந்து ஐந்தாறு மாதங்கள் ஆகியிருக்கும். இப்போதும் நாங்கள் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறோம். ஆனால் அவளுக்குக் காதலன் என்ற பெயரில் யாரும் கிடைக்கவில்லை. அப்படி யாரும் கிடைப்பதற்கு முன் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்!


குறிப்பு : "இன்டர்நெட் காதல்கள்" பகுதியில் வரும் பெயர்கள் ஃ புனைபெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.



நன்றி : வெப்உலகம்

................
Reply
#19
மேலே சொன்ன கதை பல இடங்களில் நடந்திருக்கின்றது.

................
Reply
#20
ஓமோம்
அந்தப் பக்கம் ஐஸ்வரியா இருக்கிறா என்று ஒருத்தரும்
இந்தப் பக்கம் மாதவன் கதைக்கிறார் என்று ஒருத்தியும்......
இன்ரநெட்காதல் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
நேரம் பொன்னானது தோழர்களே!
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)