Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தம்பி
#21
வீட்டு வாசலில் இருக்கும் மரம் வெட்டப்பட இருப்பதைக் கூடத் தாங்கிக்கொள்ள முடியாத இளகிய மனதுடைய கதாநாயகன்இ தம்பி.

மரத்தைக் காப்பாற்றஇ ஓர் ஆணியை (லேசா வலிக்கும்இ பொறுத்துக்க) அதன் மேல் அடிக்கிறான். அதிலே ஒரு சிவப்புத் துணியைச் சுற்றிஇ அதனை சாமி மரமாக ஆக்கிஇ வெட்டப்படுதலிலிருந்து காப்பாற்றுகிறான்.

இத்தனை நல்ல மனசுடைய தம்பியின் குடும்பமே வில்லன்களால் காலியாகும்போதுஇ வழக்கமான நம் ஊர் ஹீரோ போல சூரசம்ஹாரம் செய்யாமல்இ அந்தத் தீயவர்களையும் திருத்த முனைந்துஇ வெற்றியும் காண்கிறான் தம்பி.

‘அட்வைஸ் சொல்றாங்கப்பா’ என்று லேசாகச் சொல்லிட்டு புறம்தள்ளக்கூடிய கதையைத் துணிந்து செய்திருக்கிறார் சீமான்இ _ பிரமாதமாகவே.

படத்தின் பெரும் பலம் மாதவனும் அழகிய தமிழ் வசனங்களும்இ

பேரன்பும் பெருங்கோபமும் கொண்டுஇ பரட்டைத் தலையுடன் ரகளை செய்திருக்கிறார் மாதவன். ரொம்ப நாள் கழித்து மேடிக்கு சீமான் வீட்டு அறுசுவை விருந்து கிடைத்திருக்கிறது. அதுவும் கல்லூரி ஆண்டு விழாவில்இ சிறப்பு விருந்தினராக வரும் தம்பியை ஒரு மாணவன்இ ரௌடி என்று சொல்லஇ ரொம்ப பொறுமையாக ‘‘நம்ம ஊர்ல சைலன்ஸ்ங்கறதைக்கூட சத்தமாத்தான் சொல்ல வேண்டியிருக்கு’ என்று தன் நிலையை விளக்கும் காட்சி மனதில் ரொம்ப காலம் தங்கியிருக்கும்.

பூஜா ஓகே.

வடிவேலுவும் மணிவண்ணனும் அநியாயத்திற்கு வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரே காட்சி என்றாலும் பட்டையைக் கிளப்பும் வைகைப்புயலைஇ ஏன் ஓரங்கட்டி வைத்தார்களோ தெரியவில்லை.

இசை வித்யாசாகரா? என்ன ஆச்சு? பாரதியின் ‘உடலினை உறுதி செய்’ மட்டும் முறுக்கேற்றுகிறது.

பாலசுப்பிரமணியெமின் காமெரா வேகமாகப் பாய்ந்திருக்கிறது.

வில்லன்கள் திடீரென திருந்துவதிலும் தம்பி என்ற ஒற்றை மனிதனைத் தாக்க முடியாமல் வில்லன்கள் தவிப்பதிலும் ஏகப்பட்ட சினிமாத்தனம் தெரிந்தாலும்இ ஓர் ஆக்ஷன் படத்திலும் நல்ல மெசேஜைத் தர வேண்டும் என்று நினைத்ததற்காகவும்இ தமிழ் ததும்பும் வசனங்களுக்காகவும்இ இயக்குநருக்கு ஒரு பலே.

தம்பி _ தங்கக் கம்பி.


நன்றி
குமுதம்இ
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#22
Jeeva Wrote:ம் ம் துயவன் கள்ளச் சிடியில் பாத்தாலும் பாறவாயில்ழை தான் பாத்துட்டு அக்கா விட்டையும் கொடுத்து அண்ணாக்கும் கொடுத்து எல்லா பார்த்தது!!!

ஏன் உங்கள் வீட்டில் படம் பார்ப்பதென்றால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சீடி வாங்கிப் போட்டா பார்ப்பீர்கள்?? :wink:
[size=14] ' '
Reply
#23
அனிதா Wrote:
தூயவன் Wrote:உம். எல்லோரும் கள்ளச் சீடியில் படம் பார்த்துப் போட்டு படம் வெற்றி பெறும் எண்டு நினைக்கின்றியளோ??? :twisted: :wink:

ஹி ஹி.. தியட்டர் ல போட்டால் போகமாட்டோம் எண்டா சொல்லுறம் ... இங்க போட மாட்டேங்கிறாங்க.. அதால 7 பிராங் க்கு சிடி வாங்கி பாக்குறம்.. :wink: சில பேர் 7 பிராங்க் சிலவு பண்ணாமல் நெட் ல யே பாக்கினமே.. அவர்களை என்ன சொல்லப் போறீங்க... 8) :roll:

சுவிசில் இருக்கின்ற உங்கள் 4 பேருக்காகவும் தியட்டார் ஒன்று கட்டி படம் போடுவதாக உத்தேசித்திருக்கின்றேன். ஒகேவா!!
[size=14] ' '
Reply
#24
பிரகாரன் மீது அதிக பற்றுள்ளவன் நான்'

கறுப்பு ஜீன்ஸ், கறுப்பு பனியன், அதில் சிவப்பு நிறத்தில் சேகுவேரா படம் என ஒரு போராளி போலவே இருக்கிறார் இயக்குநர் சீமான். பேச ஆரம்பித்தால், வார்த்தைகள் அருவியாகக் கொட்டுகின்றன. சுத்தத் தமிழில்... அவ்வப்போது சத்தத் தமிழில்! `தம்பி' பட வெற்றிச் செய்திகளால் சந்தோஷப்படுகிற முகத்தில், திடீர் திடீரெனக் கொப்பளிக்கிறது கோபம்.



"தம்பி கதைக்கான விதையை எங்கே இருந்து எடுத்தீங்க?"

"உங்களுக்கும் எனக்கும் ஏற்படுகிற சின்னச்சின்ன கோபங்களைத் தொகுத்துத்தான் தம்பியை உருவாக்கினேன். சாலையில் மஞ்சள் கோட்டைத் தாண்டி தனது வாகனத்தை நிறுத்துகிற ஒருவர், குப்பைத் தொட்டியை அலட்சியப்படுத்தி, வீதியில் குப்பையை வீசியெறிகிற பொறுப்பற்ற இளைஞன் இவர்களைப் பார்க்கும் போது உங்களுக்கும் எனக்கும் ஏற்படுகிற வருத்தம் கலந்த கோபம்தான் `தம்பி'. அதுவும், இந்தச் சமூகம் என் வீடு என்று நினைக்கிற என்னைப் போன்ற பொதுவுடைமைவாதிகளுக்கு இந்தக் கோபம் இன்னும் அதிகமாக வரும்"

"படத்தில் மாதவனின் கரக்டர் பேரு தம்பி வேலு தொண்டைமான். இது தம்பி வேலு பிரபாகரன் என்பதைப் போலவே இருக்கிறதே?"

"பிரபாகரன் மீது அதிகப் பற்று உள்ளவன் நான். அதனால் அப்படி வைத்தேன். இங்கு நடக்கும் வன்முறையை மட்டுமல்ல, உலக அளவில் வன்முறை எங்கு நடந்தாலும் தட்டிக்கேட்கிற படம் இது. இப்போது பிரபாகரன், `என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். செய்யத் தயாராக இருக்கிறேன். எங்களுக்குத் தேவை அமைதி; தமிழீழம்! என்று அறிவித்திருக்கிறார். வன்முறை வாழ்க்கை எப்போதுமே பாதுகாப்பற்றது. அதைத்தான் `தம்பி'யில் சொல்லி இருக்கிறேன்.

<b>பொது இடம் ஒன்றில் கதாநாயகி பூஜாவை செல்பேசி மூலம் புகைப்படம் எடுக்கும் ரௌடிகளை மாதவன் தட்டிக் கேட்பார். அவர் சுற்றி வளைத்துத் தாக்க, `இப்ப நான் என்ன பண்ண? சொல்லு' என்று கர்ஜிப்பார். அப்படி ஒரு நிலைமையில் தான் பிரபாகரன் இருக்கிறார். அவருடைய மக்கள் போராட்டத்துக்காக அவரைப் பெரிதும் மதிக்கிறேன். `தம்பி' படத்தின் வெற்றியை பெரியாருக்கும் பிரபாகரனுக்கும் அர்ப்பணிக்கிறேன்!"</b>

"மாதவனை ஒரு ஜாலியான ஹீரோவாகவே பார்த்தவர்கள் நாம். அவரை எப்படி இந்த கதைக்குத் தேர்ந்தெடுத்தீர்கள்?"

"உண்மையைச் சொல்ல வேண்டுமானால் எந்தக் ஹீரோவும் என் படத்தில் நடிக்க முன்வரவில்லை. சினிமா மொழியில் சொன்னால், நான் மார்க்கெட் இல்லாத டைரக்டர். ஆனால் மாதவன் கதையைக் கேட்டுவிட்டு உடனே ஒப்புக் கொண்டார். தவிர, அவர் திறமையான நடிகர் என்பதை `அன்பே சிவம்' படத்தில் கண்டு கொண்டேன். கமல் என்கிற ஒப்பற்ற கலைஞனோடு போட்டி போட்டு நடித்திருந்தார். அதுவே எனக்கு நம்பிக்கை ஏற்படுத்தியது!"

"அடுத்து என்ன படம் பண்ணப் போகிறீர்கள்?"

"சமரன் என்று எனக்குள் ஒரு படம் உறங்கிக்கிடக்கிறது. என் மண்ணை, மக்களையே யதார்த்தமாகச் சொல்ல நினைத்திருக்கிறேன். ஒரு பதினைந்து நிமிடம் வரலாற்றுப் படமாகவும், அடுத்து இப்போதைய வாழ்க்கைப் படமாகவும் மாறுகிற கதை அது. சமரன் என்றால் போர் வீரன் என்று பொருள். விக்ரம் அல்லது விஜய்யை வைத்து அந்தப் படத்தைப் பண்ணினால் சிறப்பாக இருக்கும். இனிமேல்தான் அவர்களிடம் பேசிப் பார்க்க வேண்டும்.

அடுத்ததாக `புரட்சி' என்றொரு படம். சேரனை வைத்துப் பண்ணப் போகிறேன். எது உண்மையான புரட்சி என மக்களுக்கு விளங்க வைக்கிற படமாக அது இருக்கும்."

"நல்ல படங்கள் வந்துகொண்டு இருக்கும் நேரத்தில், ஆபாசமான படங்களும் வருகிறதே?"

"இயக்குநர்களுக்கு நிர்ப்பந்தம் ஒரு காரணம். சினிமா ஒரு வியாபாரம். மணிரத்னமோ, பாலாவோ, சேரனோ அந்த நிர்ப்பந்த எல்லையை தாண்டி விட்டார்கள். மக்கள் மேலும் தப்பிருக்கிறது. குத்துப் பாடல்களைத்தான் இன்றைய இளைஞர்கள் விரும்புகிறார்கள். நமது சகோதரியை அப்படி அரைகுறை ஆடையில் திரையில் பார்த்து ரசிப்போமா என்று ஒரு கணம் அவர்கள் நினைத்துப் பார்த்தால், கவர்ச்சியையும் ஆபாசத்தையும் புறக்கணிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அந்த மனப்பான்மை மாறும் வரை இது மாதிரியான பாடல்களும், ஆபாசப் படங்களும் வந்து கொண்டுதான் இருக்கும்."

"ராமதாஸ் தி.மு.க. கூட்டணியில் நீடிக்க, திருமாவளவன் அ.தி.மு.க.வில் சேர்ந்துவிட்டாரே... இனி தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் நிலைமை?"

"தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் என்பது அரசியல் மற்றும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைக் கடந்த, மொழி என்கிற ஒரு அற்புதமான கருவிக்காகத் தொடங்கப்பட்டது. அமெரிக்காவில் இருந்தாலும், ஆண்டிப்பட்டியில் இருந்தாலும் நம்மை இணைக்கும் தமிழ் மொழி மாதிரி, யார் யார் எங்கிருந்தாலும் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் எங்களை இணைத்திருக்கும். தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் என்பது அந்த இருவர் மட்டும் கிடையாது. ஆயிரக்கணக்கான தமிழ் அறிஞர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் அது. நல்ல நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட எந்த விடயமும் அவ்வளவு சீக்கிரம் செயலிழக்காது!"

"பல நடிகர்களும் அரசியல் கட்சிகளில் தொடர்ந்து சேர்ந்துகொண்டு இருக்கிறார்களே?"

"எனக்கும் ஒன்று புரியவில்லை. தன்னுடைய படங்கள் வசூலை வாரிக் கொடுக்கும்போது, குப்பனையும், சுப்பனையும் பற்றித் தமிழ்க் கதாநாயகர்களுக்கு வராத அக்கறை, கையில் படம் இல்லாதபோது, வருமானம் இல்லாதபோது எப்படி பொத்துக் கொண்டு வருகிறது?கண் தானமோ, ரத்த தானமோ செய்துவிட்டு அந்தச் சான்றிதழைக் கொண்டு வரும் ரசிகர்கள் தன்னோடு நின்று படம் எடுத்துக் கொள்ளலாம் என்று சிரஞ்சீவி சொல்லியிருக்கிறார். கமல்ஹாசனின் ரசிகர் மன்றத்தினர் இதுவரை 15 ஆயிரம் லீற்றர் ரத்த தானம் செய்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஜோடி கண்களை தானம் செய்திருக்கிறார்கள். சிரஞ்சீவி, கமல்ஹாசன் இருவரும் அரசியலில் இல்லையே?

நடிகர்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்று சொல்லவில்லை. மக்களுக்கு உதவி செய்ய விரும்பினால், அதற்குப் பல வழிகள் உள்ளன. தயவுசெய்து அரசியலிலும் நடிக்காதீர்கள் என்கிறேன்.

விகடன் . கொம்

நன்றி: சூரியன் இணையத்தளம்
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#25
தூயவன் Wrote:
அனிதா Wrote:
தூயவன் Wrote:உம். எல்லோரும் கள்ளச் சீடியில் படம் பார்த்துப் போட்டு படம் வெற்றி பெறும் எண்டு நினைக்கின்றியளோ??? :twisted: :wink:

ஹி ஹி.. தியட்டர் ல போட்டால் போகமாட்டோம் எண்டா சொல்லுறம் ... இங்க போட மாட்டேங்கிறாங்க.. அதால 7 பிராங் க்கு சிடி வாங்கி பாக்குறம்.. :wink: சில பேர் 7 பிராங்க் சிலவு பண்ணாமல் நெட் ல யே பாக்கினமே.. அவர்களை என்ன சொல்லப் போறீங்க... 8) :roll:

சுவிசில் இருக்கின்ற உங்கள் 4 பேருக்காகவும் தியட்டார் ஒன்று கட்டி படம் போடுவதாக உத்தேசித்திருக்கின்றேன். ஒகேவா!!

ஆஹா அதுக்கென்ன போடுங்க, 4 பேர் என்ன 400 பேரையும் சேர்த்து கூட்டிக் கொண்டு தியட்டருக்கு வாரன்..... அப்படியே டிக்கட் எடுக்க தேவையில்லை இலவசம் எண்டு போட்டு விடுங்க <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#26
நல்ல ஐடியா அனி தூயவன் எங்க போயிட்டீங்க அப்படியே லண்டனிலயும் (தியேட்டர் கட்ட வேண்டாம்அது ஏற்கனவே இருக்கு) புது படங்களை இலவசமா போடுங்க
. .
.
Reply
#27
அனிதா Wrote:ஆஹா அதுக்கென்ன போடுங்க, 4 பேர் என்ன 400 பேரையும் சேர்த்து கூட்டிக் கொண்டு தியட்டருக்கு வாரன்..... அப்படியே டிக்கட் எடுக்க தேவையில்லை இலவசம் எண்டு போட்டு விடுங்க <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

ரெம்பத்தான் அதிகமாக வாயைக் கொடுத்துவிட்டேனோ???
:roll: :roll:
[size=14] ' '
Reply
#28
Niththila Wrote:நல்ல ஐடியா அனி தூயவன் எங்க போயிட்டீங்க அப்படியே லண்டனிலயும் (தியேட்டர் கட்ட வேண்டாம்அது ஏற்கனவே இருக்கு) புது படங்களை இலவசமா போடுங்க

தியட்டரில் இருந்து படம் பார்ததல் கண் பழுதாகி விடுமாம். உண்மையோ??? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
#29
தூயவன் Wrote:
Niththila Wrote:நல்ல ஐடியா அனி தூயவன் எங்க போயிட்டீங்க அப்படியே லண்டனிலயும் (தியேட்டர் கட்ட வேண்டாம்அது ஏற்கனவே இருக்கு) புது படங்களை இலவசமா போடுங்க

தியட்டரில் இருந்து படம் பார்ததல் கண் பழுதாகி விடுமாம். உண்மையோ??? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இதெல்லாம் வதந்தி தூயவன் நம்பாதீங்க நீங்க புது படத்தை போடுங்க பாத்திட்டு கண்பழுதாகுதா இல்லையா எண்டு நானும் அனியும் சொல்லுறம் ரெடியா அனி :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
. .
.
Reply
#30
யார் என்ன சொன்னாலும் அக்காவும், தங்கையும் ஒழுங்காகக் கவனிக்க வேண்டும் அல்லவா!! அந்தப் பொறுப்புணர்ச்சி ரெம்பவே உண்டு எனக்கு!!! :evil: :wink:
[size=14] ' '
Reply
#31
தூயவன் Wrote:யார் என்ன சொன்னாலும் அக்காவும், தங்கையும் ஒழுங்காகக் கவனிக்க வேண்டும் அல்லவா!! அந்தப் பொறுப்புணர்ச்சி ரெம்பவே உண்டு எனக்கு!!! :evil: :wink:

ஆஹா இப்படி ஒரு அண்ணா கிடைக்க குடுத்து வைக்கணும்...... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#32
அனிதா Wrote:
தூயவன் Wrote:யார் என்ன சொன்னாலும் அக்காவும், தங்கையும் ஒழுங்காகக் கவனிக்க வேண்டும் அல்லவா!! அந்தப் பொறுப்புணர்ச்சி ரெம்பவே உண்டு எனக்கு!!! :evil: :wink:

ஆஹா இப்படி ஒரு அண்ணா கிடைக்க குடுத்து வைக்கணும்...... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஆமா!! ஆமா!!! Idea

( அப்பாடா தியட்டர் கட்டித் தருகின்ற வாக்குறுதியில் இருந்து தப்பித்தேன் :wink: ))
[size=14] ' '
Reply
#33
தம்பி - திரைக்காவியத்துக்கு தமிழ்போராளி சுப. வீரபாண்டியன் (பிரபல இயக்குனர் எஸ்.பி. முத்துராமனின் தம்பி) எழுதிய விமர்சனம் சிறப்பாக இருக்கிறது படியுங்களேன் :-



தம்பி பட விமர்சனம் (விமர்சகர் சுப.வீ.)


சமூகத்திலிருந்து தன்னைப் பிரித்துக் கொள்கிறவன் துறவி. சமூகத்திற்காகத் தன்னை எரித்துக்கொள்கிறவன் புரட்சியாளன். தம்பி இரண்டாவது வகை.

தம்பி பொழைச்சிட்டான் என்று முடிகிறது படம். தம்பி ஜெயிச்சிட்டான் என்று நினைக்கிறது மனம்.

முரட்டுத்தனத்திற்கு வீரம் என்று முடிசூட்டி இருக்கும் தேசத்தில், எது உண்மையான வீரம் என்பதை இப்படம் விளக்குகிறது. 'இன்னொருத்தன் உயிரை எடுக்கிறதில்லே வீரம். மத்தவங்களைக் காப்பாத்துறதுக்காகத் தன் உயிரையும் கொடுக்கிறதுதான் வீரம்.'

பட்டாசு கொளுத்திப் போட்டதைப் போல, படம் முழுவதும் உரையாடல் வெடி, ஆனால் தம்பி ஏற்படுத்தும் உணர்வோ ஒரு தாயின் மடி. இம்முரண் தரும் அழகில்தான், இப்படம் இணையற்ற வெற்றியைப் பெற்றுள்ளது.



கொள்கைப் படங்கள் என்றாலே வறட்டுத்தனமாய்த்தான் இருக்கும் என்ற வசை இப்படத்தினால் ஒழிந்தது. பாதி இருட்டில் படம் எடுப்பதும், வாய்க்குள்ளேயே வசனம் பேச வைப்பதும்தான் தேர்ந்த இயக்குனரின் திறமைக்கு எடுத்துக்காட்டு என்னும் மாயையும் இப்படத்தினால் நொறுங்கியது. வெளிச்சமாகவும், இரைச்சலாகவும்தான் இருக்கிறது படம்.

இந்த வெளிச்சம் இருட்டில் வாழும் மக்களுக்குத் தேவையான வெளிச்சம்.

இந்த இரைச்சல் ஊமைச் சனங்கள் இனியேனும் ஓங்கி ஒலிக்க வேண்டிய இரைச்சல்.

ஓர் உணவகத்தில், கல்லூரி மாணவி களிடம் கயவர்கள் சிலர் கண்ணியமற்று நடந்து கொள்ள, அகிம்சையைப் போதிக்கும் அந்தக் கதாநாயகியின் முன்னால் போய் நின்று, இப்ப நான் என்ன செய்ய, இப்ப நான் என்ன செய்ய? என்று தம்பி இரைச்சலிட, 'அடி, அவனுங்கள அடி' என்று படம் பார்க்கும் மக்கள் திருப்பி இரைகின்றனரே, அங்கே இருக்கிறது படத்தின் வெற்றி.

கதாநாயகனின் காப்பகத்தில் தையல் வேலை செய்யும் பெண் ஒருத்தியிடம், உங்க அப்பா என்ன செய்யிறார்? என்று கதாநாயகி கேட்க, ஜெயில்ல இருக்காரு என்கிறாள் அவள். அடுத்த பெண்ணிடம் அதே கேள்வியைக் கேட்க, எங்க அப்பாவைக் கொன்னுட்டுதான், அவ அப்பா ஜெயில்ல இருக்கிறார் என்று விடை வருகிறது.



கொல்லப்பட்டவனின் குடும்பம் மட்டுமன்று, கொலை செய்கிறவனின் குடும்ப¬ம் நாதியற்று நடுத்தெருவில் நிற்க வேண்டிவரும் என்பதை உணர்த்தும் இக்காட்சியைக் கொண்டே, இன்னொரு படத்திற்குத் திரைக்கதை எழுதலாம் போல் உள்ளது.

இரண்டு குடும்பங்களையும் காப்பாற்றும் தம்பி, மனித நேயத்தின் மற்றோர் உருவமாய் உயர்ந்து நிற்கிறான்.

பழிக்குப் பழி வாங்குவதைத்தான் நம் படங்கள் இதுவரை சொல்லி வந்துள்ளன. பழிக்குப் பழி வாங்குவதே வேலையா இருந்தா, பாதி உலகம் சுடுகாடாப் போயிடுமே என்னும் கவலையை இப்படம்தான் வெளிப்படுத்தியுள்ளது.

'எங்கப்பாவை நீ கொன்னுட்டே இன்னிக்கு நான் ஒன்னை வெட்டுவேன். நாளைக்கு ஒன் புள்ளை, கத்தியோட என்னைத் தேடி அலைவான். அப்புறம் என் மவன் அவனைத் துப்பாக்கியோட துரத்துவான். வேணாம்.... இந்த வேலையே வேணாம். யாராவது ஒருத்தர் எங்கயாவது நிறுத்தனும். இங்க... இப்போ... நான் நிறுத்திக்குறேன்' என்று வசனம் பேசிய கதாநாயகனை இதுவரை நாம் தமிழ்ப் படத்தில் பார்த்ததில்லை. இப்போதும் பார்க்காதவர்கள், தம்பியைப் போய்ப் பாருங்கள்.

சீமான் என்றொரு சிந்தனையாளனும், மாதவன் என்றொரு மாபெரும் நடிகனும், இப்படத்தைச் செதுக்கியுள்ள சிற்பிகளான உள்ளனர்.



ஒளிப்பதிவாளருக்கும் ஒரு பெரும் பங்கு உள்ளது. பாடல் வரிகளைத் தந்த முத்துக்குமார் விரல்களுக்கு மோதிரம் சூட்டலாம்.

சே குவேரா, பெரியார், அம்பேத்கர், பாரதிதாசன் படங்கள் தம்பியின் வீட்டில்.

காரல்மார்க்ஸ், ஜென்னி, பகத்சிங் பற்றிய உரையாடல்கள் தம்பியின் பேச்சில்.

இப்படியொரு துணிச்சல், மார்க்சின் மாணவன், பெரியாரின் பேரன், தம்பியின் தம்பி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் இயக்குனர் சீமானுக்குத்தான் வரும்.

அந்தத் துணிச்சலின் இன்னொரு வெளிப்பாடுதான், பெரியாருக்கும், பிரபாகரனுக்கும் இப்படத்தை அர்ப்பணிக்கிறேன் என்று, ஒரு வார இதழுக்கு அவர் வழங்கியிருக்கும் நேர்காணல்!
,
......
Reply
#34
வணக்கம் லக்கி லுக்,

பயனுள்ள ஆழமான விமர்சனமொன்றினை இங்கே இணைத்தமைக்கு நன்றிகள். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#35
நன்றி மதுரன்....

நான் குழந்தை மாதிரி இங்கே வந்திருக்கிறேன்... நீங்கள் என்னிடம் எப்படி பழகுகிறீர்களோ, அது மாதிரியே நானும் உங்களுடன் பழகுவேன்....
,
......
Reply
#36
அப்படின்னா உங்களுக்கென்று ஒரு கருத்துமே கிடையாதா லக்கி
. .
.
Reply
#37
எனக்கென்று கருத்து உண்டு.... நான் அதைச் சொல்லும்போது மாற்றுக் கருத்து இருந்தால் நீங்கள் அமைதியான முறையில் சொன்னான் அதை நான் அமைதியான முறையில் எதிர்கொள்வேன் என்று சொன்னேன்....
,
......
Reply
#38
பாதி இருட்டில் படம் எடுப்பதும், வாய்க்குள்ளேயே வசனம் பேச வைப்பதும்தான் தேர்ந்த இயக்குனரின் திறமைக்கு எடுத்துக்காட்டு என்னும் மாயையும் இப்படத்தினால் நொறுங்கியது. வெளிச்சமாகவும், இரைச்சலாகவும்தான் இருக்கிறது படம்.



<span style='font-size:25pt;line-height:100%'>நல்லதொரு திரைப்படத்துக்கு, எழுதப்பட்ட சிறப்பானதோர் விமர்சனத்தில், இது போன்ற பிற படைப்பாளிகளை இலக்கு வைத்துதாக்குவது போன்ற கருத்துக்களைத்தவிர்த்திருக்கலாம்</span>.
NAMBUNGAL, NAALAYA POZHUTHU NAMAKKAANATHU.
Reply
#39
[quote=eezhanation]பாதி இருட்டில் படம் எடுப்பதும், வாய்க்குள்ளேயே வசனம் பேச வைப்பதும்தான் தேர்ந்த இயக்குனரின் திறமைக்கு எடுத்துக்காட்டு என்னும் மாயையும் இப்படத்தினால் நொறுங்கியது. வெளிச்சமாகவும், இரைச்சலாகவும்தான் இருக்கிறது படம்.



<span style='font-size:25pt;line-height:100%'>நல்லதொரு திரைப்படத்துக்கு, எழுதப்பட்ட சிறப்பானதோர் விமர்சனத்தில், இது போன்ற பிற படைப்பாளிகளை இலக்கு வைத்துதாக்குவது போன்ற கருத்துக்களைத்தவிர்த்திருக்கலாம்</span>

இப்படி சொன்னால் எப்படி?? அப்படி என்றால் அரச்ச மாவையே அரைக்க சொல்கின்றீர்களா?
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#40
<span style='font-size:25pt;line-height:100%'>இப்படி சொன்னால் எப்படி?? அப்படி என்றால் அரச்ச மாவையே அரைக்க சொல்கின்றீர்களா</span>?


நான் அப்படிச்சொல்லவில்லை மதூரன், தமிழ் சினிமாவின் அபத்தமான போக்கைப்பார்த்து மனம் வெதும்பும் ரசிகர்கள் வரிசையில் நானும் ஒருவன். <span style='font-size:25pt;line-height:100%'>தம்பி சற்று வித்தியாசமானமுயற்சி. அதன் இயக்குனர், மற்றும் சம்பத்தப்பட்ட கலைஞர்கள், நிச்சயமாக பாராட்டுக்குரியவர்கள். இந்தடத்தில் இன்னொரு படைப்பளியின் பாணியை தரம் தாழ்த்தி ஒப்பிடுவதுமுறை அல்லவே. மேலும் தமிழ்ச்சினிமாவை பிறர் திரும்பிப்பார்க்கவைத்த ஒரு சிறந்த இயக்குனரை இப்படி பாமரத்தனமாக விமர்சிப்பதென்பது தமிழ்ச்சினிமாவின் </span>.
NAMBUNGAL, NAALAYA POZHUTHU NAMAKKAANATHU.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)