![]() |
|
தம்பி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: தம்பி (/showthread.php?tid=792) |
தம்பி - ப்ரியசகி - 02-19-2006 <img src='http://img141.imageshack.us/img141/7026/image014tk.jpg' border='0' alt='user posted image'> "மிட்வேலி எண்டெர்டயிண்மென்ட், மோஷன் பிக்சர்ஸ் பார்ட்னர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் மிகப்பிரம்மாண்டமான படம் "தம்பி'. இதில் மாதவன் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பூஜா நடிக்கிறார். மலையாள நடிகர் பிஜுமேனன் வில்லனாக நடிக்கிறார். வடிவேலு, இளவரசு, மணிவண்ணன், மனோபாலா, ராஜ்கபூர், சண்முகராஜன், வினோத்ராஜ், சுமித்ரா மற்றும் பலர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - பாலசுப்பிரமணியம். இசை - வித்யாசாகர். பாடல்கள் - வைரமுத்து, நா.முத்துக்குமார். படத்தொகுப்பு - வி.டி.விஜயன், சண்டைப்பயிற்சி - விக்ரம் தர்மா, நடனம் - பிரசன்னா. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் -சீமான். வன்முறைக்கு வன்முறை தீர்வு இல்லை என்ற கொள்கை கொண்ட தம்பி கதாபாத்திரம், தமிழ்த் திரைக்கண்ட கதாநாயகப் பாத்திரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. "தம்பி' விரைவில் திரைக்கு வருகிறான்." <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ப்ரியசகி - 02-27-2006 <img src='http://img139.imageshack.us/img139/9484/image082lx.jpg' border='0' alt='user posted image'> நடிகர்கள் - மாதவன், பூஜா, பிஜுமேனன், வடிவேலு, மணிவண்ணன் இயக்கம் - சீமான் இசை - வித்யாசாகர் ஒளிப்பதிவு - பாலசுப்ரமணியன் கத்தி - ரத்தம் என்று வெறி பிடித்து திரிபவர்களை அடக்க, அவர்களைப்போல ஆயுதம் எடுப்பது தீர்வு ஆகாது என்பதை துணிச்சலாக சொல்லும் கதை. வன்முறை செய்பவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பவன் தம்பி வேலுத் தொண்டைமான். ஆயுதம் எடுப்பவர்களுக்கு அனுபவ பாடம் நடத்தி திருத்த வேண்டும் என்பது அவனுடைய கொள்கை. தன் குடும்பத்தை அழித்த எதிரியையும் பழிக்குப் பழி வாங்காமல் மனித நேயத்தால் திருத்த முயற்சி செய்கிறான். ஆதரவற்றவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாப்பு அரணாக நிற்கிறான். நேர்மையான அதிகாரியை கொலை செய்யும் ரவுடிகளை திருத்தி வில்லனுக்கு எதிராக சாட்சி சொல்ல வைக்கிறான். இதனால் தம்பியை கொலை செய்ய முயற்சி நடக்கிறது. இந்த நிலையில் ஒரு இளம் பெண் அவனை காதலிக்கிறாள். வில்லன் தூண்டுதலால் ஊரில் வன்முறை வெடிக்கிறது. இதில் சிக்கிய வில்லனின் குழந்தையும், தாயும் உயிருக்கு போராடுகிறார்கள். அவர்களையும் தம்பி காப்பாற்றுகிறான். வன்முறையை தடுக்கும் தம்பியை, ஜெயிலில் இருந்து வரும் ஒரு ரவுடி வெட்டி சாய்க்கிறான். முடிவு என்ன என்பது "கிளைமாக்ஸ்''. தம்பியாக மாதவன். வன்முறையை ஒழிக்க அகிம்சையை கடைபிடிக்கும் புதுமையான வேடம் என்றாலும் அறிவுரையை கேட்காதவர்களுக்கு "நையப்புடை'' என்ற பாரதியின் பாடலை தாரக மந்திரமாக ஏற்று பாடம் புகட்டுவது வித்தியாசம். தாய், தந்தை, தங்கை மீது காட்டும் பாசம் "பூவாசம்''. அவர்களைப் பிரிந்து துடிப்பது "பூகம்பம்''. சுற்றிச் சுற்றி வரும் காதலியை நெருங்க விடாமல் மிரட்டுவது வித்தியாசமான காதல். கத்தி - ரத்தம் என்று வாழ்பவர்களுக்கு அதனால் ஏற்படும் விபரீத முடிவை நேரில் காட்டி திருத்துவது புதிய கோணம். மாதவனின் கண்களும் நடிக்கின்றன. தம்பியின் காதலி அர்ச்சனாவாக பூஜா. ஆரம்பத்தில் மாதவனை வெறுப்பதும், அவரைப் பற்றி தெரிந்ததும் விரும்புவதும் வழக்கமான விஷயம். என்றாலும், பூஜா அந்த உணர்ச்சிகளை அருமையாக பிரதிபலிக்கிறார். நாட்டிய அரங்கில் மாதவன் ரவுடிகளை துரத்தி வந்து அடித்து உதைப்பதைப் பார்த்து நடுங்கும் பூஜா, ரசிகர்களை நிமிர்ந்து பார்க்க வைக்கிறார். காதல் கனவுகளில் புகுந்து விளையாடியிருக்கிறார். கிடைத்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி பெயர் வாங்குகிறார். மாதவனின் நண்பனாக வடிவேலு வந்து போகிறார். வில்லனாக பிஜுமேனன். மிரள வைக்கிறார். அவரது கையாளாக வரும் இளவரசு, சண்முகராஜன் இருவரும் கதைக்கு விறுவிறுப்பு ஏற்றுகிறார்கள். மணிவண்ணன் பாத்திரம் இதுவரை தமிழ்த்திரை காணாதது. மனோபாலா, ராஜ்கபூர், சுமித்ரா, வினோத் ராஜ் ஆகியோரும் உண்டு. வித்யாசாகர் இசையில் "வித்தக சாகர்' என்பதை காட்டியிருக்கிறார். பாரதி பாடல் மனதில் இடம் பிடிக்கும். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு "பலம்''. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் சீமான். அகிம்சைதான் அமைதிக்கு ஆதாரம் என்பதை அழுத்தமாக பதிய வைப்பதில் முழு கவனம் செலுத்தியுள்ள இவரது சமூக அக்கறையை பாராட்டலாம். "கத்திக்கு கத்தி, ரத்தத்துக்கு ரத்தம்'' என்பது பிரச்சினைக்கு தீர்வு ஆகாது என்று பெரியவர்கள் சொன்னதை இன்றைய இளைஞர்களுக்கு அவர்களுடைய பாணியில் சொல்லி புரட்சி சீமான் ஆகியிருக்கிறார். ஒரே ஒரு இளைஞனால் அது சாத்தியமாகுமா? என்ற கேள்வியை எழுப்பி அதற்கு பதில் சொல்லும் விதம் புதுமை. கமர்சியல் சினிமாவிலும் கனமான கருத்தை புரியும்படி சொல்ல முடியும். வெற்றியை அள்ள முடியும் என்பதற்கு இவர் சொன்ன கதை கச்சிதம். தம்பி - இன்றைய தலைமுறைக்கு தேவையான தங்கக் கம்பி. - iniyaval - 03-03-2006 படம் பார்த்தன் பறவாய் இல்லை. என்ன மாதவன் நம்ம தலைவர்ட்டை டயலொக் எல்லாம் விடுறார். - தூயா - 03-04-2006 அட அது தானா காரணம்? இங்கு சில சனம் "தம்பி" படம், தலைவரின்ட கதையாம் என்று சொல்லுதுகள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> தாங்க முடிலயடா !!!
- Thala - 03-04-2006 படம் எடுத்தவர் <b>சீமான்</b>. அவர் விடுதலை சிறுத்தைகள், நெடுமாறன் அண்ணா, மதிமுக வுடன் சேர்ந்து ஈழத்தமிழர் ஆதரவுபோராட்டங்களில் கலந்து கொள்பவர்... - Aravinthan - 03-14-2006 தம்பியின் வெற்றியினை பெரியாருக்கும் தேசியத்தலைவருக்கும் அர்ப்பணிப்பதாக ஆனந்த விகடனில் இயக்குனர் சீமான் தெரிவித்த செய்தி. http://www.tamilnaatham.com/press/thampi.pdf - வர்ணன் - 03-14-2006 சீமான்- தலைவரை - பெயர் சொல்லி கூட பேசமாட்டார்-! அண்ணன் என்றே எப்போதும் சொல்வார்- அவர் பேட்டிகளே - சாட்சி! பத்திரிகைகளுக்கால தலைவர் பேர் சொல்லி இருந்தாலும் - அங்கே தெரிவது - நான் புலி ஆதரவாளர்தான் - என்ற கோபம்! பணம்தான் எல்லாம் என்று நினைக்கும் - சினிமா உலகத்தில்- வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத காலத்திலும் தலைவரை நேசிச்ச சீமானின் பண்பு உயர்ந்தது! வாய்ப்பு கிடைத்த காலத்திலும் - தன் படத்துக்கு <b>"தம்பி"</b> என்று பெயர் வைத்தது - ம்ம் என்ன சொல்ல- சீமான் - - ரொம்ப நல்லவர்! 8) - வர்ணன் - 03-14-2006 http://www.tamilnatham.com/Interviews.htm http://www.tamilnatham.com/Interviews.htm - கந்தப்பு - 03-14-2006 இயக்குனர் சீமான் தேசியத்தலைவர் மீது அளவு கடந்த அன்பு கொண்டவர். இவரது கட்டுரை ஒன்றினை தேசியத்தலைவரின் 50வது அகவையில் பிரான்ஸ் ஈழமுரசு வெளியிட்ட விடுதலைப்பேரொளி என்ற புத்தகத்தில் காணலாம். வர்ணன், நீங்கள் இணைத்த சீமானின் பேட்டியினை யாழ்கள உறுப்பினர் கானாபிரபா அவுஸ்திரெலியா இன்பத்தமிழோசையில் பேட்டி கண்டவர் . இப்பெட்டியினை வன்னியில் புலிகளின் குரல் வானொலியிலும் பிறகு ஒளிபரப்பாகி பலர் கேட்டு பாரட்டுக்களினைத் தெரிவித்தார்கள். சீமானின் தம்பிபடம் மிக வெற்றிபெற எனது வாழ்த்துக்கள் - வர்ணன் - 03-14-2006 <b>சீமானின் தம்பிபடம் மிக வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்</b> அந்த படம் -வெற்றி பெற்று ஆச்சு - மாதவனுக்கும் - ரீ எண்ட்ரீ - கிடைச்சிட்டுது 8) - Vishnu - 03-14-2006 iniyaval Wrote:படம் பார்த்தன் பறவாய் இல்லை. என்ன மாதவன் நம்ம தலைவர்ட்டை டயலொக் எல்லாம் விடுறார். உங்க தலைவர் யாரு என்று கடைசிவரை சொல்லவே இல்லையே?? :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - sinnakuddy - 03-14-2006 http://www.lankasritv.com/ActresAndmore/ci...nthurajadal.wmv இந்த ஒளி பேட்டியில் சேரன் தஙகர், தம்பி பட டைரக்டர் சீமானை பார்க்கலாம் - அனிதா - 03-16-2006 Vishnu Wrote:iniyaval Wrote:படம் பார்த்தன் பறவாய் இல்லை. என்ன மாதவன் நம்ம தலைவர்ட்டை டயலொக் எல்லாம் விடுறார். ம்ம் அதுதான் நானும் யோசித்தன்,,, :roll: சில நேரம் விஜய் ஆ இருக்குமோ...? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ம்ம் நானும் தம்பி படம் பார்த்தன் இந்த படத்தில் மாதவன் வித்தியாச நடித்திருக்கார் ... பூஜாவும் நல்லா நடித்திருக்கா... பாட்டுகளும் பரவாயில்லை... இந்த படம் மாதவனுக்கு வெற்றி படம் எண்டு தான் நினைக்குறன்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- தூயவன் - 03-17-2006 உம். எல்லோரும் கள்ளச் சீடியில் படம் பார்த்துப் போட்டு படம் வெற்றி பெறும் எண்டு நினைக்கின்றியளோ??? :twisted: :wink: - ப்ரியசகி - 03-17-2006 Quote:ம்ம் நானும் தம்பி படம் பார்த்தன் இந்த படத்தில் மாதவன் வித்தியாச நடித்திருக்கார் ... பூஜாவும் நல்லா நடித்திருக்கா... பாட்டுகளும் பரவாயில்லை... இந்த படம் மாதவனுக்கு வெற்றி படம் எண்டு தான் நினைக்குறன்... ம்ம் இப்போதேல..கொலை செய்யும் முறைகளை வைத்து தான் படம் வெற்றியோ..தோல்வியோ என்று சொல்லலாம்..புதுசு புதுசா ஐடியாவும்..ஆயுதமும் தேடுறாங்க..இதுலயும் தொடக்கமே..டண் டண் எண்டு சத்தம்..என்னெண்டு பார்த்தா..கொலை :evil: :evil: :evil: என்ன படமோ..மாதவனும் ரொம்ப சொஃப்ற்றா வாறவர்..இதுல..ரொம்ப ஓவரா வாறார்..கண்ணை அடிக்கடி முழுசுறது எனக்கு சுத்தமா பிடிக்கல சொல்லிட்டேன் :!: :evil: - அனிதா - 03-17-2006 தூயவன் Wrote:உம். எல்லோரும் கள்ளச் சீடியில் படம் பார்த்துப் போட்டு படம் வெற்றி பெறும் எண்டு நினைக்கின்றியளோ??? :twisted: :wink: ஹி ஹி.. தியட்டர் ல போட்டால் போகமாட்டோம் எண்டா சொல்லுறம் ... இங்க போட மாட்டேங்கிறாங்க.. அதால 7 பிராங் க்கு சிடி வாங்கி பாக்குறம்.. :wink: சில பேர் 7 பிராங்க் சிலவு பண்ணாமல் நெட் ல யே பாக்கினமே.. அவர்களை என்ன சொல்லப் போறீங்க... 8) :roll: - Manmathan18 - 03-17-2006 நானூம் படம் பார்தேன் சும்மா பார்கலாம் <span style='font-size:25pt;line-height:100%'>7 பிராங் க்கு சிடி வாங்கி பாக்குறம்.. சில பேர் 7 பிராங்க் சிலவு பண்ணாமல் நெட் ல யே பாக்கினமே.[/b]</span> அனிதா அக்கோய் நீங்க சொல்வத பார்தால் நீங்கள் நெட் ல தான் பார்கிறது போல - அனிதா - 03-17-2006 Manmathan18 Wrote:நானூம் படம் பார்தேன் சும்மா பார்கலாம் அச்சோ நான் எங்க அப்படி சொன்னன் 7 பிராங்க்கு சிடி வாங்கி பாக்குறம் எண்டெல்லோ சொன்னன்... hock: hock: hock: hock: :roll: :roll:
- iniyaval - 03-17-2006 அனிதா Wrote:உங்க தலைவர் யாரு என்று கடைசிவரை சொல்லவே இல்லையே?? :roll: :lol என்னது விஜயோ அவர் எனக்கு தலைவரோ. கடவுளே கடவுளே நாடு இவ்வளத்துக்கா இருக்கு. நான் சொன்னது தலைவர் பிரபாகரனை. - Jeeva - 03-18-2006 ம் ம் துயவன் கள்ளச் சிடியில் பாத்தாலும் பாறவாயில்ழை தான் பாத்துட்டு அக்கா விட்டையும் கொடுத்து அண்ணாக்கும் கொடுத்து எல்லா பார்த்தது!!! |