Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலிகளின் தீர்வுத்திட்டம்.
#21
Quote:ஐயா குருவிகாள் ஆப்கானிஸ்தானிலிருந்தும் ஈராக்கிலிருந்தும் யுத்தத்திற்கு முதல்தான் மக்கள் வெளியேறி மேலைநாடுகளில் தஞ்சம் கோரினார்களே தவிர யுத்தத்தின்போதோ அல்லது யுத்தத்தின் பின்னோ அல்ல..

மேலை நாடுகளே அணிதிரண்டு வந்து போர் புரியும் பொழுது, ஏன் அவர்கள் அங்கு தஞ்சம் கேட்க எண்ணுவர்.
அதுசரி பாக்கிசுதான் எல்லைக்குள் அகதி முகாம்கள் நிரம்பினவைதானே. (CNN :mrgreen: மட்டும் தான் பார்கிறதோ?). இதல்லாத்தையும் விட எந்த வழியால அகதிகள் ஓடுறது, கடலும் இல்லை. நும் புரட்டல் வல்லமையை எண்ணி வியக்கிறேன் மதியாரே. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

சிங்களப் படைகளும் தானே 'ஆயுததாரிகளாக' திரிகிறார்கள்! :wink:

-
Reply
#22
அதைத்தான் நான் உறுதியாக சொல்கிறேன் யுத்தம் என்ற ஒன்று கட்டாயம் வரும் ஆனால் கல காலம் போகாது.
சிறு காலத்தை கொன்டதாக அமையும் ஆனால் தொடராது பேச்சும் யுத்தமும் இப்படி போகும்.

என்பது எனது கனிப்பு.

தீர்வுத்திட்டம் ஒருபோதும் இலங்கை அரசு ஏற்கப்போவது இல்லை அவர்கள் இதில் சில மாற்றத்தை செய்யவேன்டும் என சொல்லுவார்கள் அது செய்ய கதைக்க வரச்சொல்லி சொல்லுவார்கள் அப்படியே காயை நகர்த்த வெளிக்கிடுவார்கள் இப்படியே இளுபடும்.
இதுதான் உன்மை.
எங்கள் தலைவர் ஆயுதத்தால் யுத்தம் செய்யாட்டிலும் தற்போது மிகப்பெரும் யுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்.
Reply
#23
Kanakkayanaar Wrote:மேலை நாடுகளே அணிதிரண்டு வந்து போர் புரியும் பொழுது, ஏன் அவர்கள் அங்கு தஞ்சம் கேட்க எண்ணுவர்.
அதுசரி பாக்கிசுதான் எல்லைக்குள் அகதி முகாம்கள் நிரம்பினவைதானே. (CNN மட்டும் தான் பார்கிறதோ?) இதல்லாத்தையும் விட எந்த வழியால அகதிகள் ஓடுறது, கடலும் இல்லை. நும் புரட்டல் வல்லமையை எண்ணி வியக்கிறேன் மதியாரே.

சிங்களப் படைகளும் தானே 'ஆயுததாரிகளாக' திரிகிறார்கள்!
ஓமோம் Kanakkayanaar யாரே.. கொழும்பு.. கண்டி.. காலி.. சிங்களப்பகுதியிலைத்தானே.. அவங்கள் ஆயுததாரிகள் எண்டபடியால்த்தான் அங்கு போய் 5 இலட்சம் ஈழத் தமிழ் மக்கள் மக்கள் இருக்கிறார்களாக்கும்.
:mrgreen:

கடலிருந்தால்த்தான் தப்பி ஓடலாமாக்கும்.. தரைவழியால் பாதை அமைத்து அகதிகளுக்கான கூடாரங்களும் கொடுத்தாலும் கடலிருந்தால்த்தான் உள்ளுக்குள் வந்து இருப்பார்களாக்கும்..
:mrgreen:

அகதிமுகாம்கள் அமைத்து அதற்கான உதவிகள் செய்தததில் பாக்கிஸ்தான் சேர்ப்பில்லையாக்கும்.. இல்லை பாக்கிஸ்தானும் மேலைநாடாக்கும்..
:mrgreen:

இவர்கள் உள்ளே போகாதநேரத்தில் சதாம் தலைபான் ஆட்சியில் பிளேன் ஹையக் பண்ணிக்கொண்டு வா.. வந்து அகதித் தஞ்சம் கோரு என என்று வெத்தலை கும்பம் வைத்து மேலைநாடுகள் கூப்பிட்டனவாக்கும்..
:mrgreen:

இல்லை அமெரிக்கா நல்லநாடு எண்டபடியால்த்தான் சதாம்சரி பின்லாடன்சரி.. அமெரிகாவிட்டை போய்ஆயுதம் வேண்டினவையாக்கும்.. இதுகள் ஒண்டும் உவையடை மற்ற ரெலிவிஷன்களிலை வாறேல்லைத்தானே..
:mrgreen:

நும் புரட்டல் எண்டால் என்னவெண்டு விளங்கவில்லை இல்லாட்டில்... உதுக்கும் ஏதாவது எழுதியிருப்பன்..
:mrgreen:
Truth 'll prevail
Reply
#24
தணிக்கை அவர்களே சிங்களத்தின் ஒரு தந்திரம் இது. புலிகளின் தீர்வுத் திட்டம் என்று சொல்லி கசியவிட்டு பேரினத்தின் கருத்துக்களை அறிந்து கொள்ளும் முறை. எது எப்படி இருந்தாலும் கசிந்துள்ள வரையில் தமிழருக்கு நன்மைபயக்கக் கூடிய ஒரு திட்டம் தான். இது போலியனதெனில் பேரினம் இதையும் ஒரு வாய்பாக எண்ணி கலவரத்திற்கு வழி சமைக்கலாம்.

அன்புடன்
சீலன்
seelan
Reply
#25
உங்கள் ஊகத்திற்கு பதில் தரமுடியவில்லை காரனம் இந்த பேரினவாத ஊகம் முதல் முதல் வெளியானது உதயனில் எனவே நான் உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.
Reply
#26
தணிக்கை இது உங்களுக்கு: உதயனில் வெளிவருவதை ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றீர்கள.? உள்நாட்டுக் கலகமா? எது எப்படியிருப்பினும் தீர்வுத்திட்டம் சிங்களம் ஏற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கை தமிழருக்குக் கிஞ்சித்துக் கூட இல்லை. உலகம் இனியாவது புரிந்து கொண்டால் சரி யாருக்கு சமாதானம் தேவையென்று, அல்லது யார் பயங்கரவாதிகள் என்று.

தாத்தா இது உங்களுக்கு:

தாத்ஸ் யாரடா அப்பா காலியிலும் மாத்தரையிலும் போய் வாழு என்று துரத்தியவை ? தமது அப்பட்டமான சுயநலங்களுக்காக குடியேறியதற்கு மூல காரணம் பேரினவாதம். இவர்களைக் காட்டியே இனத்தை அழிப்பத்றகு நிதியுதவிகள் பெறுவதற்கு இவர்களை ஒரு காரணியகக் காட்டவே அங்கு குடியேற விட்டார்கள். காலியிலும் மாத்தரையிலும் இன்று நேற்றா தமிழன் வாழ்ந்தது. பண்டை தொட்டே தமது தொழில் நிமித்தமாக அங்கு இருந்தது தெரியாதா? சுருட்டுக் கடையும், சைவக் கடையும் யார் சிங்களவனா வைத்திருந்தது. ஆச்சி ஒருவேளை இவர்களi நினைத்துத் தான் வந்தெறு குடிகள் என்று சொன்னாளோ என்னவோ? ஐம்பதுகளில்,அறுபதுகளில், எழுபது, எண்பதுகளில் தமிழன் அடிவாங்கியது எங்கே வடகிழக்கிலா? அடிவாங்கிக் கொண்டு ஒடிவந்தது எங்கே லண்டனுக்கா? தமது பொருளாதார அரசியல் நன்மை கருதித்தான் சிங்களம் அவர்களின் இடங்களினல் குடியேற விட்டது. அவர்கள் காணிகளை தமிழன் கொடுத்த விலை கொடுத்து வாங்க எந்த சிங்களவனுக்கும் பொருளாதார பலமிருந்ததா? இன்றைக்கும் கொழும்பு நகரிலே கோழிக் கூடுகள் போன்று தொடரடுக்கு மாடி கட்டி வைத்துக் கொண்டு 30,40 இலட்சங்கள் என்று சொல்ல வாங்குவது யார்? அமெரிக்கனா அல்லது சிங்களவனா? தமழன் தான.; இது பேரினத்தின் சந்தர்ப்பவாதம். யாழில் மின் விசிரி காற்றில்லை, குழாயைத் திறந்தால் தண்ணீர் இல்லை. நவீன வசதிகள் கொண்ட குளியலறையில்லை. இதனால் தான் இன்று அதிக புதுப்பணம் கண்ட தமிழர்கள் தெற்கில் வந்து குடியேறுவதற்குக் காரணம். யுத்தத்தால் ஒரு 10 வீதம் வந்ததெனில் மற்றவைகள் வந்தது சுயநலத்தில். என்ன வன்னியில் வாழ்ந்தவர்கள் எல்லாம் துரத்துப்பட்டு செத்தொழிந்தா போய்வி;ட்டார்கள். யுத்த சமயத்தில் ஆச்சியின் அரசு வெளிநாட்டு நிதிகளை மட்டுமல்ல தமிழனின் பொருளாதார பலத்திலும் தான் தங்கியிருந்தது. இதை வெள்ளவத்தை தெஹிவலை இரத்மலானை போன்ற இடங்களில் உள்ள வங்கிகளுக்கு காலை நேரத்தில் சென்று பார்ததால் புரிந்திருக்கும்.

பாக்கிஸ்தான் தனது அப்பட்ட அரசியல் சுயநலங்களுக்காகத் தான் ஆகானிஸ்தானுக்கு உதவியது. ஏனெனில் ஒரு முஸ்லிம் நாட்டை உலக பயங்கரவாதிகளுக்குக் காட்டிக் கொடுத்து விட்டோம் என்று மற்றைய நாடுகள் குற்றம் சுமத்தக் கூடாது என்பதற்காகவும் அமெரிக்கனின் பொருளாதாரத் தடையை எடுப்பிப்பதற்கும் அண்டை அசிங்க நாட்டுற்கு ஒரு பயமுறுத்தலாக இருக்கட்டுமே என்றபதற்காகத் தான் இந்த வேசங்கள் எல்லாம்.

சதாமும் பின் லாடனும் என்ன தாத்தா கூட பணம் வைத்திருந்தால் உலக பயங்கர வாதிகளின் கருப்புச் சந்தையில் ஆயதம் வாங்கலாமே. விற்று விட்டு அடிவாங்கும் போது தான் மண்டையைப் பித்துக் கொண்டு பொய்களை "சிஎன்என்" னுக்கும் அடி வருடி ஊடகங்களுக்கும் குய்யோ முறையோ என்று சொல்லிக் கொண்டு திரிவார்கள். உதாரணம்: ஈராக்கின் தற்போதைய நிலை.

அத்துடன் அமெரிக்கா பின்லாடனுக்கு ஆயதங்கள் கொடுத்தது என்ன உத்தமன் என்று தெரிந்து கொண்டா? இல்லை தனது எதிரிக்கு எதிரி நன்பன் என்பதனாலே. இரஸ்சியாவை ஆப்கானிஸ்தானியருடன் சேர்ந்து எதிர்த்து போர் புரிந்ததனாலேயே செங்கம்பள வரவேற்பு ஒரு அரசு அற்ற தனிமனிதனுக்கு பின்லாடனுக்கு கொடுத்தது. பொல்லைக் கொடுத்து அடிவாங்குகின்றான். விணையறுக்கிறான்.

ஈராக்கிற்கும் அதே கதை தான் ஈரானை ஆட்டிப்படைக்க வேண்டும் என்ற மமதையில் ஈராக்கிற்கு இரசாயண ஆயதங்களில் இருந்து சகல ஆயுதங்களையும் கொடுத்து அழிக்கவே அமெரிக்கன் ஆயுதம் கொடுத்தது. இப்போது சொல்லுங்கள் பயங்கர வாதி யார் பயங்கர வாதிகளுக்கு துணை போவது யாரென்று. பொல்லுக் கொடுத்து அடிவாங்குவது யாரேன்று?

அது சரி இப்போது என்ன தேவை வந்தது உலக நாடுகளுக்கு தார்மீக ஆதரவு வழங்க, எம் நாட்டில் என்ன பாலும் தேனுமா ஓடுகின்றது. முதலில் தலைப்பு விடயத்தைக் கவனிப்போம்.

அன்புடன்
சீலன்
seelan
Reply
#27
இதுதானய்யா உங்கள் பத்திரிகை வாசிக்கும் முறையா ?
சும்மா கதைக்கவேண்டும் என்பதற்காகவும் எழுதவேண்டும் என்பதற்காகவும் சொல்லாதீர்கள்.

உதயனில் வெளிவரமுதல் ஆங்கில பத்திரிகையிலும் சிங்கள பத்திரிகையிலும்தான் வெளிவந்தது. அதை முதலில் தெளிவுபடுத்திக்கொள்ளும். உதயனில் மறுநாள்தான் செய்திவந்தது. அதுவும் எப்படி வந்தது தெரியுமா ? தலைநகரில் இருந்து ஒரு பத்திரிகை வெளியிட்ட செய்தியாகத்தான் தெரிவித்தது.

என்னய்யா செய்கின்றீர்.


Quote:உங்கள் ஊகத்திற்கு பதில் தரமுடியவில்லை காரனம் இந்த பேரினவாத ஊகம் முதல் முதல் வெளியானது உதயனில் எனவே நான் உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.
[b] ?
Reply
#28
கரவை பரனி அவர்களே முதலில் கசிவு என உதயனில் வெளிவந்தது எது தெரியுமா 100 க்கான கணக்கு.

ஆனால் ஆங்கிலத்தில் வேறு ஒரு நாட்டினது திட்டத்தை ஒட்டி ஒன்று போடப்பட்டது.

அதுமட்டுமா வன்னியில் ஊடக ஊகங்களை தாம் ஏற்றுக்கொள்ளமுடியாது என அரசியல்துறை பொறுப்பாளர் தெரிவித்து தமிழ் ஆங்கில பத்திரிகைகளின் ஊகத்தை மறுத்தபின்னார் என்னை எப்படி ஏற்றுக்கொள்ள சொல்லுகிறியள் சீலன்.
Reply
#29
எதுவாகினும் உதயன் முதலில் செய்தி வெளியிடவில்லை.
அதுதான் உண்மை.

Quote:கரவை பரனி அவர்களே முதலில் கசிவு என உதயனில் வெளிவந்தது எது தெரியுமா 100 க்கான கணக்கு
[b] ?
Reply
#30
<img src='http://www.thatstamil.com/images15/tamilselvan3-300.jpg' border='0' alt='user posted image'>


thatstamil.com
நவம்பர் 01, 2003

இடைக்கால நிர்வாகம்: கூட்டாட்சியை வலியுறுத்தும் புலிகள்

கொழும்பு:

வட கிழக்குப் பகுதியில் வரி வசூல் செய்யவும், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், வளர்ச்சிப் பணிகளுக்கு நேரடியாக வெளிநாட்டு நிதியுதவியைப் பெறவும் தங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என இடைக்கால நிர்வாகம் குறித்த திட்டத்தில் விடுதலைப் புலிகள் குறிப்பிட்டுள்ளனர். அதே போல மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்கவும் முன் வந்துள்ளனர்.


ஆனால், இந்தத் திட்டத்தை ஏற்பதில் சில அடிப்படை பிரச்சனைகள் இருப்பதாக இலங்கை அரசு கூறியுள்ளது.

வட கிழக்கில் தங்கள் தலைமையில் இடைக்கால தன்னாட்சி நிர்வாகம் அமைக்க உரிமை கோரியுள்ள புலிகள் அது தொடர்பான 8 பக்க திட்ட அறிக்கையை நேற்று நார்வே தூதரிடம் ஒப்படைத்தனர். இத் திட்டம் இந்தியா இலங்கை அமைதி உடன்பாட்டின்போது கூறப்பட்ட கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் உள்ளதாக சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

புலிகளின் இந்தத் திட்ட அறிக்கையை நார்வே குழு நேற்றிரவே இலங்கை அரசிடம் சமர்பித்துவிட்டது.

புலிகள் திட்ட விவரம்:

வட கிழக்கில் வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து அன்னிய நாட்டு நிறுவனங்களுடன் நேரடிப் பேச்சு நடத்தவும் தங்களுக்கு உரிமை வழங்கப்பட வேண்டும் என புலிகள் அந்த திட்டத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த இடைக்கால நிர்வாகம் 5 ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருக்க வேண்டும் எனவும், அதற்குள் இலங்கை அரசுக்கும், தங்களுக்கும் இடையிலான அதிகாரப் பகிர்வு குறித்த அனைத்து அம்சங்களும் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கோரியுள்ளனர்.



நார்வே தூதரிடம் அறிக்கையை அளிக்கும் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன்

இதன் பின்னர் இடைக்கால நிர்வாகம் நியமிக்கும் சுதந்திரமான தேர்தல் கமிஷன் வட கிழக்கில் தேர்தலை நடத்தலாம் என்று கூறியுள்ளனர் புலிகள்.

இடைக்கால நிர்வாகம் அமைவதால் ஏற்படும் சட்டச் சிக்கல்கள், வழக்குகளை நடத்த வட கிழக்கில் தனியான நீதிமன்றத்தை ஏற்படுத்தலாம் எனவும் புலிகள் தங்களது திட்டத்தில் முன்மொழிந்துள்ளனர்.


இந்த 8 பக்க திட்டத்தில் முதல் இரண்டரை பக்கங்களில் அரசியல் சட்ட ஷரத்துக்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்துசில விஷயங்களை புலிகள் கூறியுள்ளனர். அதில், சிறுபான்மை தமிழர்களின் அங்கீரம் பெற்ற ஒரே பிரதிநிதி விடுதலைப் புலிகள் இயக்கம் தான். வட கிழக்கில் வசிப்பவர்களில் பெரும்பான்மையினர் இந்துக்களாக இருந்தாலும் எந்த தனிப்பட்ட மதத்துக்கும் அதீத முக்கியத்துவம் அளிக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.

இலங்கை அரசியல் சட்டத்தில், புத்த மதத்துக்கே மிகுந்த முக்கியத்துவம் தரப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந் நிலையில் புலிகள் கோரும் அரசியல் சட்டத்தில் அனைத்து மதங்களூம் சமமாக பாவிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இடைக்கால நிர்வாகத்தில் தமிழர்களுக்கு அடுத்தபடியாக முஸ்லீம்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் என்றும் புலிகள் கூறியுள்ளனர்.

தமிழ்ச்செல்வன் பேட்டி:

இந் நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன், சிங்கள சகோதரர்களுக்கு சமமாக தமிழர்களும் பாவிக்கப்பட வேண்டும், இழந்த சுதந்திரத்தை தமிழர்கள் திரும்பப் பெற வேண்டும் என்ற அடிப்படையில் தான் இடைக்கால நிர்வாகம் குறித்த திட்டத்தையே தயாரித்துள்ளோம்.

நாங்கள் ஆயுதம் ஏந்தியது தற்காப்புக்காகத் தான். இப்போது சூழல் மாறியுள்ளதால் ஆயுதத்தைக் கைவிட்டு அமைதிக்காக உண்மையுடன் உழைத்துக் கொண்டிருக்கிறோம். போர் நிறுத்தத்தால் நாட்டின் தென் பகுதி சாதாரண நிலைக்குத் திரும்பிவிட்டது.

ஆனால், வட கிழக்கில் லட்சக்கணக்கான மக்கள் இன்னும் குடியேறிகளால் வேறு இடங்களில் வாழ்ந்து வருகின்றனர்.



நிருபர்களுக்குப் பேட்டியளிக்கும் தமிழ்ச்செல்வன்


வட கிழக்கில் வசிப்பவர்களுக்கு வேலையில்லை. வாழ வழியில்லை. இதை நேர் செய்யவே இடைக்கால நிர்வாகம் கோருகிறோம்.

இடைக்கால நிர்வாகம் குறித்து மீண்டும் அரசுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவும் நாங்கள் தயார் என்றார்.

திட்டத்தை ஏற்க அரசு மறுப்பு?:

இந் நிலையில் புலிகளின் திட்டத்தை ஏற்பதில் சில அடிப்படை பிரச்சனைகள் இருப்பதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு உருவாக்கிய திட்டத்தில் இருந்து புலிகளின் திட்டம் அடிப்படையிலேயே வேறு மாதிரியாக உள்ளது. இருப்பினும் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க அரசு உடனடியாக முயற்சி எடுக்கும்.

அப்போது இந்த அடிப்படை கருத்து வேறுபாடுகள் குறித்து பேசித் தீர்க்க முயற்சி எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
Reply
#31
P.S.Seelan Wrote:தாத்ஸ் யாரடா அப்பா காலியிலும் மாத்தரையிலும் போய் வாழு என்று துரத்தியவை ? தமது அப்பட்டமான சுயநலங்களுக்காக குடியேறியதற்கு மூல காரணம் பேரினவாதம். இவர்களைக் காட்டியே இனத்தை அழிப்பத்றகு நிதியுதவிகள் பெறுவதற்கு இவர்களை ஒரு காரணியகக் காட்டவே அங்கு குடியேற விட்டார்கள். காலியிலும் மாத்தரையிலும் இன்று நேற்றா தமிழன் வாழ்ந்தது. பண்டை தொட்டே தமது தொழில் நிமித்தமாக அங்கு இருந்தது தெரியாதா? சுருட்டுக் கடையும், சைவக் கடையும் யார் சிங்களவனா வைத்திருந்தது. ஆச்சி ஒருவேளை இவர்களi நினைத்துத் தான் வந்தெறு குடிகள் என்று சொன்னாளோ என்னவோ? ஐம்பதுகளில்,அறுபதுகளில், எழுபது, எண்பதுகளில் தமிழன் அடிவாங்கியது எங்கே வடகிழக்கிலா? அடிவாங்கிக் கொண்டு ஒடிவந்தது எங்கே லண்டனுக்கா? தமது பொருளாதார அரசியல் நன்மை கருதித்தான் சிங்களம் அவர்களின் இடங்களினல் குடியேற விட்டது. அவர்கள் காணிகளை தமிழன் கொடுத்த விலை கொடுத்து வாங்க எந்த சிங்களவனுக்கும் பொருளாதார பலமிருந்ததா? இன்றைக்கும் கொழும்பு நகரிலே கோழிக் கூடுகள் போன்று தொடரடுக்கு மாடி கட்டி வைத்துக் கொண்டு 30,40 இலட்சங்கள் என்று சொல்ல வாங்குவது யார்? அமெரிக்கனா அல்லது சிங்களவனா? தமழன் தான.; இது பேரினத்தின் சந்தர்ப்பவாதம். யாழில் மின் விசிரி காற்றில்லை, குழாயைத் திறந்தால் தண்ணீர் இல்லை. நவீன வசதிகள் கொண்ட குளியலறையில்லை. இதனால் தான் இன்று அதிக புதுப்பணம் கண்ட தமிழர்கள் தெற்கில் வந்து குடியேறுவதற்குக் காரணம். யுத்தத்தால் ஒரு 10 வீதம் வந்ததெனில் மற்றவைகள் வந்தது சுயநலத்தில். என்ன வன்னியில் வாழ்ந்தவர்கள் எல்லாம் துரத்துப்பட்டு செத்தொழிந்தா போய்வி;ட்டார்கள். யுத்த சமயத்தில் ஆச்சியின் அரசு வெளிநாட்டு நிதிகளை மட்டுமல்ல தமிழனின் பொருளாதார பலத்திலும் தான் தங்கியிருந்தது. இதை வெள்ளவத்தை தெஹிவலை இரத்மலானை போன்ற இடங்களில் உள்ள வங்கிகளுக்கு காலை நேரத்தில் சென்று பார்ததால் புரிந்திருக்கும்.

பாக்கிஸ்தான் தனது அப்பட்ட அரசியல் சுயநலங்களுக்காகத் தான் ஆகானிஸ்தானுக்கு உதவியது. ஏனெனில் ஒரு முஸ்லிம் நாட்டை உலக பயங்கரவாதிகளுக்குக் காட்டிக் கொடுத்து விட்டோம் என்று மற்றைய நாடுகள் குற்றம் சுமத்தக் கூடாது என்பதற்காகவும் அமெரிக்கனின் பொருளாதாரத் தடையை எடுப்பிப்பதற்கும் அண்டை அசிங்க நாட்டுற்கு ஒரு பயமுறுத்தலாக இருக்கட்டுமே என்றபதற்காகத் தான் இந்த வேசங்கள் எல்லாம்.

சதாமும் பின் லாடனும் என்ன தாத்தா கூட பணம் வைத்திருந்தால் உலக பயங்கர வாதிகளின் கருப்புச் சந்தையில் ஆயதம் வாங்கலாமே. விற்று விட்டு அடிவாங்கும் போது தான் மண்டையைப் பித்துக் கொண்டு பொய்களை "சிஎன்என்" னுக்கும் அடி வருடி ஊடகங்களுக்கும் குய்யோ முறையோ என்று சொல்லிக் கொண்டு திரிவார்கள். உதாரணம்: ஈராக்கின் தற்போதைய நிலை.

அத்துடன் அமெரிக்கா பின்லாடனுக்கு ஆயதங்கள் கொடுத்தது என்ன உத்தமன் என்று தெரிந்து கொண்டா? இல்லை தனது எதிரிக்கு எதிரி நன்பன் என்பதனாலே. இரஸ்சியாவை ஆப்கானிஸ்தானியருடன் சேர்ந்து எதிர்த்து போர் புரிந்ததனாலேயே செங்கம்பள வரவேற்பு ஒரு அரசு அற்ற தனிமனிதனுக்கு பின்லாடனுக்கு கொடுத்தது. பொல்லைக் கொடுத்து அடிவாங்குகின்றான். விணையறுக்கிறான்.

ஈராக்கிற்கும் அதே கதை தான் ஈரானை ஆட்டிப்படைக்க வேண்டும் என்ற மமதையில் ஈராக்கிற்கு இரசாயண ஆயதங்களில் இருந்து சகல ஆயுதங்களையும் கொடுத்து அழிக்கவே அமெரிக்கன் ஆயுதம் கொடுத்தது. இப்போது சொல்லுங்கள் பயங்கர வாதி யார் பயங்கர வாதிகளுக்கு துணை போவது யாரென்று. பொல்லுக் கொடுத்து அடிவாங்குவது யாரேன்று?

அது சரி இப்போது என்ன தேவை வந்தது உலக நாடுகளுக்கு தார்மீக ஆதரவு வழங்க, எம் நாட்டில் என்ன பாலும் தேனுமா ஓடுகின்றது. முதலில் தலைப்பு விடயத்தைக் கவனிப்போம்.
ஐயா சீலன்.. 95 ஆம் ஆண்டு 700.000 குடாநாட்டு மக்களை 24 மணித்தியாலத்திலை வெளியேறு எண்டு கால்நடையா வற்புறுத்திக் கொண்டுபோனது சிங்களவனில்லையே..? சொந்தக்கிணறு செந்த வீடு சகல வசதிகளுடனும் இருந்த மக்களை வன்னிக்குள்ளையும் வவுனியாக்குள்ளையும் கொழும்பு கண்டி காலி எல்லா இடமும் ஓட்டுவித்தது அகதியாக்கினது சிங்களவனே..? ஐயா வியாபாரநோக்கோடு போய் வியாபாரம் சிங்களப்பகுதிகளில் வியாபாரம் செய்தவர்களின் தொகை மிகச்சிறறிது. அதைவிட பெரிய பதவிகளில் இருந்த படித்த தழிழர்கள் தொகை கூட.. இவர்கள்கூட தமிழ்ப்பகுதிகளில் வீடுகட்டியிருந்தார்களே தவிர பெரும்பான்மையானவர்கள் சிங்களப்பகுதிகளில் வாடகைவீடுகளிலேதான் குடியிருந்தனர்.
ஐயா அடிவேண்டிய தமிழன் ஏன் அவர்களிடத்தில் போய் தஞ்சம் கோரவேண்டும். அவர்களிடத்தில் அடைக்கலம் புகவேண்டும்..?
ஐயா தமிழன்தான் தொடர்மாடி வேண்டுகிறான் என்று சொல்ல உங்களுக்கு வெக்கமாக இல்லை. அவர்களிடத்தில் இருக்கவிடாமல் துரத்திவிட்டு சிங்களப்பகுதிகளில் வற்புறுத்தி குடியேற்றிவிட்டு தற்போது முதலைக்கண்ணீh வடிக்கிறீர்களே..

ஐயா நாமெல்லாம் குளிக்க குடிக்க தண்ணீர் இல்லாமலா வளர்ந்தோம்..? இல்லை செந்த கக்கூசு இல்லாமலா இருந்தோம். யாருக்கையா கதை சொல்லுகிறீர்..?
ஐயா சுதந்திரமாக வாழ்ந்தவர்களை கூட்டிச்சென்றவர்கள் ஆட்டுப்பட்டிபோல அடைத்துவைக்க முயற்சித்தமையால்தான் அத்தனைபேரும் ஓடினார்கள். இதை முதலில் புரிந்துகொள்ளும். அடைத்துவைக்கப்பட்ட பலரும்தான் தற்போது மீளவும் குடியேறியுள்ளார்கள். ஐயா நிதி நிலை தற்போதுதான் உருவாகியுள்ளதே தவிர புலம்பெயர்ந்தபோது இருக்கவில்லை.
சர்வதேச நிதியுதவி அதுகூட அவர்கள் தனியே சென்று பெற்றதே தவிர இவர்கள் அங்கு செல்லவில்லையே.. அங்கு செல்லாத ஒருவன் தனது நிதி.. தான் செலவழிப்பதுதான் முறை என்பது எனக்கு நியாயமாகப்படவில்லை..

ஐயா பாக்கிஸ்தான் மாத்திரம்தான் வேஷம் போடுகின்றதா..? சலுகைக்காக மாத்திரம் வேஷம்போடுகின்றதா..?

நீங்கள் சொல்லுவதைப்பார்த்தால் சதாமுக்கும் பின்லாடனுக்கும் பணமில்லாமல் ஆயுதம் கொடுத்தான் என்று சொல்லுவதுபொலத் தெரிகிறது. எதுவாக இருப்பினும்.. இவர்கள் அமெரிக்காவிடம் ஆயுதம் வாங்கும்போது இவர்கள் புத்தி எங்கு போனது..? இவர்கள் தமது இனத்துக்கெதிராக சண்டையிடும்போது சதாம்.. பின்லாடன் புத்தி எங்கு மறைந்தது..? தமது இனத்தை அழிக்கும்போது இவர்கள்புத்தி எங்கு போனது..?

ஐயா ஈராக்கை முற்றுமுழுதாக அடக்க அமெரிக்காவால் முடியாதென்று நினைக்கிறீர்களா..? அவனால் முடியும்.. தற்போது நடப்பவை சர்வதேச அங்கீகாரத்துடன் நடைபெறவேண்டும் என்ற தேவை கருதியே உதவி கோருகிறானே தவிர இயலாமையால் அல்ல.

ஐயா 20 வருடம் எவ்வளவு பணத்துக்கு ஆயுதம் வித்திருப்பான் அமெரிக்கன். அவனது பொருளாதாரம் எத்தனை மடங்கு உயர்ந்தது. ஆயுதம் வாங்கியவர்கள் எங்காவது உயிர்த்து நிற்கிறார்களா..? ஆயுதத்துக்கு வக்காலத்துவாங்கும் உங்களுக்கு இது எங்கே புரியப்போகின்றது..?
அவன் பொல்லுக்கொடுத்து அடி வேண்டவில்லை. தனது அடுத்தகட்ட பொருளாதார விருத்திக்கு அடிக்கல்லு நாட்டுகிறான். இருந்துதான் பாருங்களேன்.

ஐயா இது உங்கள் பதிலுக்கான பதிலே தவிர தலைப்புக்கான கருத்தாடல் அல்ல..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#32
700000 போரில் எத்தனை பேர் கொழும்பிற்கு ஓடிவந்தது? யாரை ஏமாற்றுகின்றீர்கள். அவர்களினது பாதுகாப்பிற்காகத் தான் அவர்களை வன்னியில் போய் இருக்கச் சொன்னார்கள். சொகுசு வாழ்வைத் தேடி தெற்கிற்கு ஓடிவந்து அந்நியனுக்கு வால் பிடித்து வாழச் சொல்லவில்லை.என்ன வன்னியில் வாழ்ந்தவர்கள் எல்லோரும் செத்தா போனார்கள். மண்ணை நேசித்தவனுக்கு இந்தத் துன்பம் ஒன்றும் பெரிதாகப் படவில்லை. சுயநலம் பிடித்து வாழ நினைத்தவர்கள் தாம் அதிகம் ஓடிவந்தது. வெட்கமாகத் தான் இருக்கிறது. தனது மண்ணின் நிலைமைக்கு வாழத் தெரியாமல் அந்நியனின் அடிவருடிக் கூட்டமாக வாழ நினைப்பதற்கு. அதற்காவது சிங்கள உருமையவை உருவேற்ற வேண்டும். திரும்பவும் வன்னிக்கும் யாழுக்குமாக சொந்த மண்ணிற்கு தமிழர் படையெடுக்க. செம்மணிகள் இன்னும் விசலமானதாக இருந்திருக்கும். அவர்கள் துரத்தி விடாவிட்;;டால் காணமல் போனோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்திருக்கும். உதவாத சிலதுகள் சிங்களவனை நம்பியதால் தான் கணவனின் முன்னாலே துகிலுரிந்து அவமானப்பட்டு அநியாயமாக செத்தது. ஐம்பதுகளில் அறுபதுகளில் எங்கே வடகிழக்கிலா அடிவாங்கினார்கள். அப்போது எங்கே போனது இந்த ரோசம். அடிமை வாழ்வு அசிங்க வாழ்வு இதை உணருங்கள் முதலில்.

ஆமாம் போய் தெற்கில் குடியேறியவர்களைக் கேட்டால் சொல்வார்கள் கதையாரிடம் விடுகின்றீர்கள்.

நிச்சயமாக அமெரிக்கன் முதன் முதலில் இந்தப் பயங்கரவாதிகளுக்கு முதல் முதலில் பணமில்லாமல் தான் ஆயுத உதவி செய்தது. ஏனேனில் அடுத்தவனை அடித்து உலையில் போட்டால் பின் அவனுக்கு இவன் ஆயுதம் விற்று வயிறு வளர்க்கலாமே என்ற எண்ணம்

நிச்சயமாக அமெரிக்கனால் ஈராக்கில் நின்று பிடிக்காத நிலை மிக விரைவில் ஏற்படும். உலக நாடுகளைக் கெஞ்சிக் கேட்டும் அவர்கள் மறுத்து விட்டார்கள். ஏனேனில் இது அமெரிக்கனின் பொருளாதார வளர்ச்சிக்கான ஒரு யுத்தம், எண்ணைத் திருட்டுக்கான ஒரு யுத்தம் என்பது அனைவரும் புரிந்து கொண்டு விட்டார்கள். அந்த சர்வதேச அங்கீகாரத்தை ஏன் யுத்தம் தொடங்க முன் கேட்கவில்லை. அதற்கான அங்கீகாரத்தை ஐ.நா சபையும் உலக நாடுகளும் கொடுக்காத போதும் இவன் ஏன் அங்கு புகுந்தான்? திருடனே இன்னோரு திருடனைப் பார்த்து திருடன் என்கின்றான். உலக பயங்கர வாதி மற்றவனைப் பார்த்து பயங்கரவாதி என்கின்றான். முதலில் உன் முதுகை சுத்தப்படுத்து மற்றவனின் முகத்தைப் பின் பார்க்கலாம்.

இல்லை நிச்சயமாக எந்த நாடும் அமெரிக்கனின் ஆதரவுடன் செயல்பட்ட எந்த நாடும் முன்னேறவும் முடியாது முன்னேறவும் அமெரிக்கன் விட மாட்டான். அவனுக்கு வேண்டியதெல்லாம் மற்ற நாடுகளை கொதி நிலையில் வைத்து தனது பொருளாதா பலத்;தையும் உலக பொலிஸ் காரனென்ற அந்தஸ்தையும் பெறுவதே. அது இனி முடியாமல் போகலாம். ஏனேனில் முஸ்லிம் நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து அவர்களுக்கென ஒரு பொதுவான கட்டமைப்பை உருவாக்க தருணம் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

பொல்லுக் கொடுத்து அடிமட்டுமல்ல பல்லுடையும் பட்டுக் கொண்டிருக்கின்றான். வாங்கிக் கட்டியவைகளை மறந்து மறந்து ஆச்சி போல சன்னதம் ஆடுகின்றான். சீக்கிரம் பயங்கரவாதி பயங்கரவாதிகளின் கைகளினாலேயே பாடம் படிக்கப் போகின்றான். கவலை அப்பாவி அமெரிக்க மக்களை நினைத்தே.

அன்புடன்
சீலன்.
seelan
Reply
#33
P.S.Seelan Wrote:700000 போரில் எத்தனை பேர் கொழும்பிற்கு ஓடிவந்தது? யாரை ஏமாற்றுகின்றீர்கள். அவர்களினது பாதுகாப்பிற்காகத் தான் அவர்களை வன்னியில் போய் இருக்கச் சொன்னார்கள். சொகுசு வாழ்வைத் தேடி தெற்கிற்கு ஓடிவந்து அந்நியனுக்கு வால் பிடித்து வாழச் சொல்லவில்லை.என்ன வன்னியில் வாழ்ந்தவர்கள் எல்லோரும் செத்தா போனார்கள். மண்ணை நேசித்தவனுக்கு இந்தத் துன்பம் ஒன்றும் பெரிதாகப் படவில்லை. சுயநலம் பிடித்து வாழ நினைத்தவர்கள் தாம் அதிகம் ஓடிவந்தது. வெட்கமாகத் தான் இருக்கிறது. தனது மண்ணின் நிலைமைக்கு வாழத் தெரியாமல் அந்நியனின் அடிவருடிக் கூட்டமாக வாழ நினைப்பதற்கு. அதற்காவது சிங்கள உருமையவை உருவேற்ற வேண்டும். திரும்பவும் வன்னிக்கும் யாழுக்குமாக சொந்த மண்ணிற்கு தமிழர் படையெடுக்க. செம்மணிகள் இன்னும் விசலமானதாக இருந்திருக்கும். அவர்கள் துரத்தி விடாவிட்;;டால் காணமல் போனோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்திருக்கும். உதவாத சிலதுகள் சிங்களவனை நம்பியதால் தான் கணவனின் முன்னாலே துகிலுரிந்து அவமானப்பட்டு அநியாயமாக செத்தது. ஐம்பதுகளில் அறுபதுகளில் எங்கே வடகிழக்கிலா அடிவாங்கினார்கள். அப்போது எங்கே போனது இந்த ரோசம். அடிமை வாழ்வு அசிங்க வாழ்வு இதை உணருங்கள் முதலில்.

ஆமாம் போய் தெற்கில் குடியேறியவர்களைக் கேட்டால் சொல்வார்கள் கதையாரிடம் விடுகின்றீர்கள்.

நிச்சயமாக அமெரிக்கன் முதன் முதலில் இந்தப் பயங்கரவாதிகளுக்கு முதல் முதலில் பணமில்லாமல் தான் ஆயுத உதவி செய்தது. ஏனேனில் அடுத்தவனை அடித்து உலையில் போட்டால் பின் அவனுக்கு இவன் ஆயுதம் விற்று வயிறு வளர்க்கலாமே என்ற எண்ணம்

நிச்சயமாக அமெரிக்கனால் ஈராக்கில் நின்று பிடிக்காத நிலை மிக விரைவில் ஏற்படும். உலக நாடுகளைக் கெஞ்சிக் கேட்டும் அவர்கள் மறுத்து விட்டார்கள். ஏனேனில் இது அமெரிக்கனின் பொருளாதார வளர்ச்சிக்கான ஒரு யுத்தம், எண்ணைத் திருட்டுக்கான ஒரு யுத்தம் என்பது அனைவரும் புரிந்து கொண்டு விட்டார்கள். அந்த சர்வதேச அங்கீகாரத்தை ஏன் யுத்தம் தொடங்க முன் கேட்கவில்லை. அதற்கான அங்கீகாரத்தை ஐ.நா சபையும் உலக நாடுகளும் கொடுக்காத போதும் இவன் ஏன் அங்கு புகுந்தான்? திருடனே இன்னோரு திருடனைப் பார்த்து திருடன் என்கின்றான். உலக பயங்கர வாதி மற்றவனைப் பார்த்து பயங்கரவாதி என்கின்றான். முதலில் உன் முதுகை சுத்தப்படுத்து மற்றவனின் முகத்தைப் பின் பார்க்கலாம்.

இல்லை நிச்சயமாக எந்த நாடும் அமெரிக்கனின் ஆதரவுடன் செயல்பட்ட எந்த நாடும் முன்னேறவும் முடியாது முன்னேறவும் அமெரிக்கன் விட மாட்டான். அவனுக்கு வேண்டியதெல்லாம் மற்ற நாடுகளை கொதி நிலையில் வைத்து தனது பொருளாதா பலத்;தையும் உலக பொலிஸ் காரனென்ற அந்தஸ்தையும் பெறுவதே. அது இனி முடியாமல் போகலாம். ஏனேனில் முஸ்லிம் நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து அவர்களுக்கென ஒரு பொதுவான கட்டமைப்பை உருவாக்க தருணம் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

பொல்லுக் கொடுத்து அடிமட்டுமல்ல பல்லுடையும் பட்டுக் கொண்டிருக்கின்றான். வாங்கிக் கட்டியவைகளை மறந்து மறந்து ஆச்சி போல சன்னதம் ஆடுகின்றான். சீக்கிரம் பயங்கரவாதி பயங்கரவாதிகளின் கைகளினாலேயே பாடம் படிக்கப் போகின்றான். கவலை அப்பாவி அமெரிக்க மக்களை நினைத்தே.
ஐயா சீலன் 700000 போரில் வசதியான குடும்பங்கள் அத்தனையும் மேல்நாடுகளுக்கும் சிங்களப்பகுதிகளுக்கும் குடிபெயர்ந்தார்கள்.. மேலும் இலட்சக்கணக்கில் பணம்கொடுத்து சொத்துக்கள் பணயம்வைத்து வெளியேற விரும்பாதவர்கள் பாஸ் வேண்ட முடியாதவர்கள்.. வன்னியில் அடைபட்டுக்கிடந்தார்கள் என்றால் மிகையாகாது. தற்போது என்ன இராணுவமில்லாமலா குடாநாடு இருக்கின்றது.. எப்போது சந்தர்ப்பம் வரும் என்று காத்திருந்து தமது வீடுகளுக்கு வசதிகள் பல இல்லாதநேரத்திலும் வந்து குடியேறவில்லையா..? யாருக்கையா பூச்சொருவுகிறீர்..? ஐயா.. நீங்கள் ஏன் வன்னியில் இல்லை..? அதற்கு முதலில் பதில் சொல்லுங்களேன். உங்களுக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதியா..? நீங்களும் வன்னிக்குள் சாகாமல் இருந்திருக்கலாம்தானே..? உங்களுக்குச் சுயநலமில்லாமல்த்தான் உங்கிருந்துகொண்டு உங்களைப்போன்ற ஏனையோரை தூற்றுகிறீர்களாக்கும்.
முதலில் உன் முதுகை சுத்தப்படுத்து மற்றவனின் முகத்தைப் பின் பார்க்கலாம். (நீங்கள் எழுதியததான்)
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

ஐயா நாட்டைவிட்டு வெளியேறியது 1.2 மில்லியன். இவர்கள் அத்தனைபேரும் உங்களுக்கு அடிவருடிகளாகத் தெரியலாம் எனக்கு அப்படித் தோன்றவில்லை.
செம்மணிக்கதையை எனக்குச் சொல்லாதீர்கள்.. 92-95 3 வருடகால அதி உயர் பாதுகாப்பு வலையம் அமைத்திருந்தது இவர்களே. எதற்கும் நடக்கும் விசாரணை முடிவுகள் வரட்டும்.. அதுவரை பொறுத்திருப்போம்.. 5 இலட்சம் மக்கள் தற்போது சிங்களப்பகுதிகளில் வாழ்கிறார்கள். இவர்களை சிங்களவன் அடித்து துகிலுரிந்து வற்புறுத்தி கொண்டுபோய் இருத்தினானா..?
உங்கள் கதையின்படி உங்களுக்கு ஆதரவு 20 சதவீதம்கூடத் தேறாதுபோலுள்ளதே..
:!: Idea :?:

ஐயா அமொரிக்கா தற்போதுதான் ஈராக்கினுள் நுளைந்துள்ளது.. அதற்குமுன்னம்.. சுரண்டிய ஜேர்மனீய பிரெஞ்சு ரஸ்ய வல்லரசுகள் தங்கள் சுரண்டல்கள் தடைப்பட்டதையிட்டு வருந்துகின்றனவேயன்றி ஈராக்கின் அக்கறையில் வருந்தவில்லை..
Idea Idea :!:

ஒரு கல்லில் பல மாங்காய் அதில் ஒன்றுதான் எண்னெய் விவகாரம்.. அதற்குமுன்னமும் மத்தியகிழக்கு எண்ணெய் உற்பத்திக்கு 75 வீதம் உதவிசெய்தது அமெரிக்காதான்..

அமெரிக்கா தன்நலமில்லாது உதவிசெய்யுமென்றா இவர்கள் உதவிகேட்டு அங்கு சென்றார்கள்.. இல்லை பணமில்லாமல் ஆயுதம் தரும் என்ற நினைப்பிலா அங்கு போனார்கள்..? எல்லாம் தெரிந்நுதான் போனார்கள்.. தம்நாட்டையே சுடுகாடாக்கினார்கள்.

முதலில் சதாம்.. பின்லாடன் போன்றவர்கள் தங்கள் முதுகை சுத்தப்படுத்தட்டும் பின்னர் மற்றவனின் முகத்தைப் பார்க்கட்டும்.

ஐயா இஸ்லாமியர்கள் ஒன்றுசேர்ந்தால் சூரியனே இல்லாமலப்போய்லிடும். சீலன்.. "முஸ்லிம் நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு பொதுவான கட்டமைப்பை உருவாக்க தருணம் பார்க்கிறார்கள்" தயவு செய்த இப்படியான வார்த்தைகளைப் பிரயோகித்து உலகை அழிக்கும் முயற்சியில் இறங்காதீர்கள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

தமது மக்களையே ஆயுதத்தால் அடக்கி ஒடுக்கி கப்பமும் வரியும் அறவிட்டு தம் சுயநலம் காக்க ஒருசாராரை மூளைச்சலவைசெய்து சலுகைகள் கொடுத்த வாங்கிவைத்திருக்கும் பயங்கரம் நிச்சயம் அழியவேண்டும்.. ஜனநாயகமுறை வளரவேண்டும்.. சீக்கிரம் பயங்கரவாதிகள் பாடம் படிக்கப் போகின்றார்கள்.

ஐயா இது உங்கள் பதிலுக்கான பதிலே தவிர தலைப்புக்கான கருத்தாடல் அல்ல..
Idea Idea Idea
Truth 'll prevail
Reply
#34
சரி நடந்தது நடந்துவிட்டது.
மறப்போம் மன்னிப்போம்

எங்கும் ஜனநாயகம் மலரவேண்டும். இதுதான் எங்கள் உங்;கள் அனைவரின் விருப்பம்.

புலிகளின் தீர்வுத்திட்டத்தை நிச்சயமாக சிங்கள் கட்சிகள் ஏற்கப்போவதில்லை. ஆனால் அவற்றை ஏற்க வற்;புறுத்த உலக நாடுகள் முற்படுமா? இல்லை சந்திரிகா சொல்வதையோ கதிர்காமர் சொல்வதையோ கேட்டுக்ககொண்டு கண்டுகொள்ளாமல் விட்டுவிடுமா?

நோர்வேயுடன் யார்யார் எல்லாம் கைகோர்த்து அமைதிக்காக சிங்கள அரசைவற்புறுத்தப்போவது.

யப்பான் இதில் வருகிறதா?
இந்தியா குழப்பிவிட நேரம் பார்க்குமா?

சிங்கள இனவாதிகளின் எதிர்ப்பு இதை எவ்வளவு பாதிக்கும்.

தீர்வுத்திட்டத்;தை அப்படியே ஏற்றுக்கொண்டாலும் எதிர்ப்பு இருக்கும்.

அதிகம் கேட்டால் கொஞ்சமாவது கொடுப்பார்க்கள் என் எதிர்பார்க்கலாம் இல்லையா?

இந்தத்திட்டத்தீர்வு எத்தனை சதவீதம் எம் அபிலாசைகளை புூர்த்தி செய்;யும். அது நிறைவேற்றப்படுமாயின் எத்தனை சதவீதம் ஏற்றுக்கொள்ளப்படும்.

அமைதியாக ஆலோசிப்பபோமே எதற்;க்கு நமக்குள் வாக்குவாதம்
Reply
#35
விடுதலைப் புலிகள், தமது யோசனை வரைபைக் கையளித்திருப்பதை, ஒரு முக்கியமான திருப்புமுனை என வர்ணித்துள்ள, ஐரோப்பிய ஒன்றியத் தூதரகம், சமாதானப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.


இந்த இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபையை அமைப்பதற்கு அரசுக்கு இருக்கக்கூடிய அரசியலமைப்புச் சட்டச்சிக்கல்கள் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, சிறீலங்காவின் தற்போதுள்ள அரசியலமைப்புக்கு உட்பட்டு தமிழ்மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது எனத் தெரிவித்த சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள், தமிழ்மக்களின் போராட்டத்திற்கு காரணமாக இந்த அரசியல் அமைப்பே இருந்தது எனவும், தமிழ்மக்களுக்கும் சிறீலங்கா அரசியலமைப்புக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கையில் ஏற்படக்கூடிய எதிர்ப்புகள் குறித்து கேட்கப்பட்டபோது கருத்துத் தெரிவித்த சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள், அது அவர்களின் பிரச்சினை எனத் தெரிவித்தார். ஆக்கபுூர்வமானதும் நடைமுறைச் சாத்தியமானதுமான யோசனையைத் தாம் முன்வைத்திருப்பதாகத் தெரிவித்த அவர், இதனை நடைமுறைப்படுத்த தெற்கில் எழும் முரண்பாடுகளுக்கு முகம்கொடுக்கவேண்டியது அரசே எனத் தெரிவித்ததுடன், இது விடயம் எங்களது கைகளில் இல்லை எனத் தெரிவித்தார்.


விடுதலைப் புலிகளின் யோசனை வரைபு தொடர்பாக, சிறீலங்கா அரசு வெளியிட்ட செய்தியில், தமது யோசனைக்கும் விடுதலைப் புலிகள் முன்வைத்துள்ள யோசனைக்கும் இடையே வேறுபாடு இருப்பதாகவும், எனினும் பேச்சுவார்த்தை ஊடாக, முரண்பாடுகளைத் தீர்த்துக்கொள்ள வழியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.


இடைக்கால நிர்வாக சபைக்கெதிராக, தெற்கில், சிங்களப் பேரினவாதிகள், தொடர்ச்சியாக போராட்;டங்களை நடத்திவரும் நிலையில், இடைக்கால நிர்வாகசபையை அமைக்க, சிறீலங்கா அரசு, சட்டச்சிக்கல்களையும், அரசியல் hPதியான எதிர்ப்புக்களையும் சந்திக்கவேண்டியது தவிர்க்கமுடியாதது எனத் தெரிவிக்கும், அவதானிகள், இறுதித் தீர்வொன்றைக் காணும் தைரியம், சிறீலங்கா அரசுக்கு உண்டா?
Reply
#36
அங்கு போய் குடியேறுபவர்களைச் விடுங்கள். அவர்களுக்குத் தெரியும் அந்த மண்தான் தமக்குரியது என்று. நிச்யமாக நீங்கள் சொல்வது உண்மைதான். இன்று தெற்கில் தங்கியிருப்பவர்கள் உயாமட்டத்தைச் சார்ந்தவர்களே. நடுத்தர வர்க்கமும், அதற்குக் கீழுள்ள வர்க்கமும் பணம் பெற முடியாத காரணத்தினாலல்ல அவர்கள் புலிகளின் மீது வைத்த நம்பிக்கையினால் தான் எத்தனை கஸ்டம் வந்தாலும் எம் மண்ணிலே இருப்போம் என்று அங்கேயே குடியிருந்தார்கள். ஆனால் உயர்மட்டம் சிங்களத்திற்கு அடிவருடினாலும் தன் இனத்துடன் ஒன்று பட்டு வாழ விரும்பாது. இப்போது இவர்களுக்கு என்ன குறை அழகாக போய் தெற்கில் சிங்கவனின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதிலும் பார்க்க தன் மண்ணின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தலாமே. போய் பார்த்தால் தெரியும். வடகிழக்கிற்குப் போய் குடி ஏறுபவர்கள் யாரென்று. தெற்கின் சுகபோகங்கள் இல்லை என்று அங்கிருந்துவிட்டு மறுமுறையம் ஒரு 83 வந்தபின் ஐயோ புலிகளினால் தான் எமக்கு இந்தக் கஸ்டம் என்று ஒப்பரி வைக்கட்டும். வன்னியில் மல்லாவியைத் தெரியுமா? தெரிந்திருக்காது ஏனெனில் கல்லெரிகளைக் கண்டு தப்பி அகதியாய் அந்த வயதிலே வந்ததனால். கேட்டுப் பார்த்து தெரிந்து கொண்டு வாருங்கள். நீர்; வற்றினாலும், நுளம்பு மொய்தாலும் உணர்வுகளை வற்ற விடாத மண் சொந்மமண். சுயநலங்கள் இல்லாமல் இருந்தால் தன் மணணை அந்நியனுக்கு விலை பேசி விற்றுத் திரிய மாட்டீர்கள்.

முட்டாள் தனமான கருத்து. பின்லாடன் முதலில் மோதியது ரஸ்சியனுடன். அங்கே அவனினம் இல்லை. ஈராக்கில் கதை வேறு தனது எல்லைகளை பெருப்பீப்பதற்கு செய்த அழிவு.

சுரண்டல்கள் நடத்துவது தான் மேற்கத்தைய நாடுகளின் கொள்கை. ஆனால் அமெரிக்கனுக்கு அதற்கு மேலும் பல நிறைவேற்ற முடியஙாத ஆசைகள் உள்ளது. ஜெர்மனியனும், பிரான்சும் சுரண்டினாலும் அந்த நாடுகளின் இறைமையில் தலையிடவில்லை. அந்த நாடுகளின் முன்னேற்றத்திற்கும் எந்தத் தடையும் விதிக்க வில்லை.

சாதாமும் பின்லாடனும் அவர்களின் முதுகைச் சுத்தப்படுத்த வேண்டிய அவசியமில்லை. முதலில் உலக பயங்கர வாதி, பொலிஸ்காரன் தனது முகத்தைச் சுத்தப்படுத்தட்டும். நிச்சயமாக நான் சொல்கின்றேன். இந்தப் பயங்கர வாதிகள் எல்லாம் காணமல் போய்விடுவார்கள். அமெரிக்கனின் ஊடுருவலும், அகம்பாவமும் தான் இவர்களின் வளர்ச்சிக்கு ஊட்டச் சத்து.

நான் பலமுறை எழுதிவிட்டேன். உங்கள் தகுதிக்கு புலம் பெயர்ந்த அத்தனை பேரையும் சேர்க்காதீர்கள் என்று. நான் வாதிடுவது உங்களைப் போன்ற துரோக எண்ணம் கொண்டவர்களைத் தானே ஒழிய ஒட்டு மொத்தா அத்தனை புலம பெயர்ந்தவர்களையும் அல்ல.

ஆமாம் செம்மணி உயர் பாதுகாப்பு வலயமாக அமைந்திருந்தாபோது எதுவும் நடந்ததாகக் கேள்விப்படவில்லை நாம். உமக்கு மட்டும் தான் விஷேசமாக ஏதோ தெரிந்திருக்கின்றது. செம்மணியின் பெயர் உலகநாடுகளில் அடிபட்டதே ஆக்கிரமிப்பாளனின் அழித்தொழிப்பு நடவடிக்கைகளுக்கு அப்புறம் தான்.

புரட்சி நடக்கும் ஒரு நாட்டில் வழமையாக நடப்பதுதான். அப்படி இல்லாவி;;ட்டால் எத்தனை தாத்தாக்கள் இன்று காட்டிக் கொடுத்து அந்நியனின் அடிவருடிகளாக இருந்து இனத்தை அழித்திருப்பீர்கள். அவர்கள் கப்பமும் வரியும் பெறுவது தமது வங்கிக் கணக்குகளைக் கூட்டவல்ல. எமது அடிமை வாழ்வின் நாளைக் குறைப்பதற்கு. ஜனநாயகம் நிச்சயமாக வளரும். பயங்கர வாத ஆக்கிரமிப்பாளர்கள் சீக்கிரம் ஒழிவார்கள். அதற்கான காலம் வெகு சீக்கிரம். காலம் கனிந்து வருகின்றது. உலகினிலே ஒரு ஒப்பற்ற ஜனநாயகம் தமிழீழத்தில் நடப்பதைக் கண்டு உலகம் வியர்க்கத்தான் போகின்றது. மற்றைய நாடுகளின் போலி ஜனநாயகத்தைப் புகழும் நீங்கள் அனைவரும் வெட்கித் தலை குனியத் தான் போகின்றீர்கள்.

ஆத்திபன் வாருங்கள் புலிகளின் தீர்வுத் திட்ட களத்திற்கு இதைப்பற்றி பேசுவோம்.

அன்புடன்
சீலன்
seelan
Reply
#37
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#38
வாயைத்திறந்து இரண்டுவார்த்தை பேசுவதற்கு தடையிருக்கும் தமிழீழம் பற்றித்தெரியாத சீலனுக்கு மாத்திரம்தான் உலக ஜனநாயகம் பற்றிபேசுவதற்கு உரிமையுள்ளது.. தகுதியுள்ளது.
கப்பம் கொடுத்துவிட்டு கப்சிப்பென்று வந்தவர் சொன்னவற்றை பாராட்டவேண்டும். வாயைத்திறந்தால் உயிருடன் திரும்பி வரமோட்டேன் என்ற அச்சம் காரணமாக சொன்னதை கட்டிவிட்டு வந்ததாக.

இருந்த சனத்தொகையில் 75 சதவீதம் இல்லை. 50 சதவீதம் வெளிநாட்டிலும் 25 சதவீதம் சிங்களப்பிரதேசத்திலும் இருக்கின்றனர்..நீங்கள் சொல்லுவதைப்பார்த்தால் 25 சதவீத சிறுபான்மைக்குள் ஒருசிறுபான்மையினருக்காகவா அத்தனை அழிவும்.. ஏன் அந்த நீங்கள்கூறும் சிறுபான்மையினர்கூட சொந்தக்காணி சொந்தபூமி சொந்தக்கினறு சொந்தக்கக்கூசுடன் செல்வச் செழிப்புடன்தானிருந்தார்கள். அதைக்கூட உங்களால் ஜீரணிக்கமுடியவில்லையே..
உங்கள் தமிழீழ அடக்குமுறை ஜனநாயகம் வாழ்க.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#39
தீர்வு கிடைக்குமா ? கிடைக்காதா ?
[b] ?
Reply
#40
தீர்வு கிடைக்காது.

அரசியல் தீர்;வு என்ற ஒன்று தமிழனுக்க இலங்கையில் இல்லை அதை பெறவேன்டுமாயின் புலிகளுடன் கைகோர்த்து போரடியே பெற்றுக்கொள்ளவேன்டும். இதுதான் இறுதிதீர்விற்கு வளிவகுக்கும்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)