Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நன்றி பதிவுகள்.கொம்.
#21
94க்கு முதல் இந்த சந்திப்புகளை உற்றுக் கவனித்திருக்கிறேன்.. அப்போது 'மாற்றி'களும் இருந்தார்கள்.. இப்போதும் அவர்கள் உள்ளார்களா என அறியத்தான்.
.
Reply
#22
சோழியன் ஏற்கனவே கோட்டுக்கு எல்லாம் ஏறிஇறங்கிவிட்டீர்கள்.

பொம்பிளையள் தானே என்று சிம்பிளாய் நினைத்திடாதேங்கோ கோட்டுக்கு இழுத்திடுவினம் கவனம்.
ஏற்கனவே கண்டணம் வேறையாம்
Reply
#23
94க்கு முதல் ஒரு இ-சந்திப்பு (இயக்க சந்திப்பு என்றும் எடுத்துக் கொள்ளலாம்) நிகழ்ந்தது. நானும் போயிருந்தேன். ஒரு திருமணமான பெண்மணி. நெற்றியில பொட்டோ அல்லது கழுத்தில் தாலியோ இல்லை. ஏனெனில் மைக்கில் பெண்ணியம் பற்றி கதைக்க அதுகள் தடைகளாகத் தென்பட்டிருக்கலாம். மைக்கில் பெண்கள் அடக்கப்படுகிறார்கள் என எழுதிக் கொண்டு வந்ததை (எழுதிக் கொடுத்தது அவரது கணவர் என்பது பலருக்கு தெரியும்) விளாசிக் கொண்டிருந்தார். பெரும்பாலும் ஆண்களைச் சாடுவதே அவ்வாசிப்பின் நோக்கமாக இருந்தது.
இடைவேளை வந்ததா? அப்பெண்மணி என்னுடன் பேசிக்கொண்டிருந்தவரிடம், "இவரைக் கண்டனீங்களே?" என்று விசாரித்தபோது அதிர்ந்தாலும்.. சந்தோசமாக இருந்தது. என்னதான் மைக்கில் கத்தினாலும்.. கணவனின் பெயர் சொல்லி விசாரிக்கவில்லையே?! அதற்காகத்தான். அதேநேரம், அவரது வாசிப்பின் தாக்கத்தால் கணவன்மாருடன் பிரச்சினைப்படப்போகும் பெண்களை நினைத்துக் கவலையாகவும் இருந்தது.
.
Reply
#24
வணக்கம் மணிமாறன் !
தங்கள் கருத்துக்கள் சரி. கீழ்க்காணும் பந்தியை இன்னும் விளக்கமாகத் தந்தால் பயனாகும்.

manimaran Wrote:"மாற்றம் என்பதே மாறாத ஒன்று" என்ற மாக்சின் தத்துவம். அதுபோல பெண்தொடர்பான ஆணின் சிந்தனையிலும் மாற்றம் ஏற்படவேண்டும். இல்லையேல் இயற்கைசுழற்சியில் எமது பண்பாடு காலத்திற்கொவ்வாததாய் கருதப்பட்டு எதிர்கால சந்ததியினரால் கைவிடப்படும் பேரபாயம் ஏற்படும்.
Reply
#25
ஏன் இந்த ஒன்று கூடலில் பெரும் பங்கு வகித்த அத்தோடு பாலியல் வன்முறை பற்றி எழுதிய சகோதரி கடினஉழைப்பின் மூலம் புத்தகம்செய்திருக்கிறார் ஆனால் அவரின் வாழ்வை ஏன் அப்படி ஒருகடினமாக சிந்திக்காமல் விட்டார். ஓ அவர் பெண்ணியவாதி என்பதால் ஆண்வர்கமான கணவனிடமிருந்து விடுதலையை விருமபுகிறர் அதற்கு பெயர்தான் பெண்விடுலையா? உண்மைதான் சமயம் மாறியவர் என்னவென்று தாலியைக் க(h)ட்டுவது. சமயம் மாறிய எம்மவர் தாலி பொட்டு எல்லாத்தையும் இழந்தவர்கள். அப்படியானால் எம் பண்பாட்டின் படி அவர்கள் அமங்கலிகள். அவர்களுக்கு வேண்டுமென்றல் இவைகள் பெண்ணிய விடுதலைக்கான அடிப்படையாக இருக்கலாம். சில தமிழ் பெண்கள் நினைப்பது தாம் நிலத்திலிருந்து புலத்துக்கு வந்து விட்டோம் எமக்கு விடுதலை வேண்டும் என்னமாதிரியான விடுதலை என்பது அவர்களுக்கே தெரியாது ஆனால் பெண் விடுதலை வேண்டும் எப்படி என்றால் தலையைகிப்பி வெட்டி வெள்ளைக்காறி மாதிரி உடுப்பு மாத்தி உடுப்பு மாத்திற மாதிரி ஆளையும் மாற்றி தனக்கு பெண்விடுதலை வேண்டுமென்றால் கட்டியவன் என்ன கைப் பொம்மையா? பிள்ளைகள் எல்லாரும் வாழ்கைப்பட்ட பின்னும் சிலருக்கு கணவனிடமிருந்து பெண்விடுதலை தேவைப்படுகிறது இதுகூட அந்த கூட்டத்தில் பெரும் பங்காற்றிய அந்திமகாலத்தில் இருக்கும் அம்மையாருக்கு. என்ரை பிரச்சனை எங்கடை பிச்சனை எம் நாட்டின் பிச்சனை எம்தமிழ் பெண்களின் பிரச்சனை என்ன என்பதை முதலில் கண்டு அதனை தீர்;த்து அதன் பின் உலகப்பெண்களின் பாலியல் பற்றி பாக்கலாமே அவசியம் தமது அடிப்படை பிரச்சனைகளைத் தீர்துக் கொள்ளட்டும் பிறகு மற்ரவை பற்றி சிந்திக்கட்டும் யாருக்கும் இது கவி அல்ல கற்பனையில் கதைக்க.
:twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted:
. . . . .
Reply
#26
மாற்றம் என்பது ஒன்று மட்டுமே மாறத ஒன்று என்று மாக்சு சொல்கின்றார். அதாவது உலகத்திலுள்ள அனைத்தும் காலவோட்டத்தின் தன்மைக்கேற்ப மாற்றத்திற்கு உள்ளாகும் அல்லது உள்ளாக்கப்படவேண்டும் இல்லாவிடின் அது அழிந்து விடும் என்று அவர் கருதுகின்றார். அது போல நாமும் எமது வாழ்க்கைமுறைமைகள் பழக்கவழக்கம்கள் கருத்தியல்கள் போன்றவற்றை எமது நிகழ்கால சூழ்நிலைக்கேற்ப மாற்றவில்லையெனில் எமது இருப்பு கேள்விக்குள்ளாகும். இந்த மாற்றங்கள் என்று மாக்சு குறிப்பிட்டது ஆரோக்கியமான மாற்றங்களை மட்டுமே.

தமிழர் வாழ்வு என்பது அல்லது அவர்தம் பண்பாடு என்பது சமயத்தைச் சார்ந்திருக்கவில்லை. தமிழரது உண்மையான சமயம் அல்லது நம்பிக்கை இயற்கையாகும். சைவம் இந்து என்பன கிறித்துவம் போன்று இடையில் வந்து செருகினவையே. இது பற்றி தமிழ்நாத இணையத்தளத்தில் கனடாவிலிருந்து நக்கீரன் அவர்கள் பலமான தொல்பொருள் ஆதாரத்துடன் சிறப்பாக எழுதி வருகின்றார். சமயம் அல்லது மதம் என்ற பெயரால் நாம் எப்படி மதம் பிடித்துப்போயுள்ளோம் என்பது அதனைப் படித்து சிந்தித்துப் பார்த்தால் தெளிவாகப்புரியும். எம்மிடம் இன்றுள்ள மதமானது எம்மிடையே சாதிப் பிரிவினையும் பெண்ணடித்தனத்தையும் மூடநம்பிக்கைகளையும் நன்கு ஆழவேரூன்றி அகல கிளைபரப்ப உதவினவே தவிர அதனால் நாம் ஒரு சமுதாயம் என்ற முறையில் குறிப்பிடத்தக்க முறையில் பெரிய நன்மை எதனையும் பெற்றதாக குறிப்பிடுவதற்கு ஒன்றும் இல்லை.

"எமது" புராணக்கதைகளை எடுத்து நோக்கினால் கடவுள்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவி. திருவிளையாடல் என்ற பெயரில் அவர்கள் ஆடிய ஆட்டங்களுக்கு அளவுகணக்குகிடையாது. புராணக்கதைகள் பெண்ணின் கற்பு பற்றி கட்டுக்கட்டாக பல கதைகள் பண்ணின. ஆனால் அவை கண்ணன், இராதை, பாமா என்று பலபெண்களுடன் களிநடனம் புரிந்ததை பெருமையுடன் சொல்லின. அவற்றை நாம் இன்றும் எமது பாலருக்கு பள்ளியில் பயபக்தியுடன் படிப்பிக்கின்றோம். கந்தன் வள்ளி தெய்வானையை வைத்திருக்கின்றபோதோ அல்லது பிள்ளையார் சித்தி புத்தியுடன் பாணைவயிறு பெருக்க திருஅமுது உண்டுகொண்டிருப்பதனையோ நாம் எமது பண்பாட்டு அவமானச் சின்னங்களாக கருதவில்லை. அவர்களுக்கெல்லாம் இலட்சோபலட்சம் செலவு செய்து கோயில் கட்டி தோப்புக்கரணம் போடுகின்றோம். இப்படியான கதைகளை எமது பண்பாட்டு ஆதரங்கள் என்று நாம் பெருமையுடன் சுமந்து கொண்டிருப்பது எமது இனத்தை இழிவாக எடைபோட மட்டுமே உதவும்.
Reply
#27
விடியலைத் தேடிய வனிதையர் முடிவைக் காணாத துயரத்தில்!

ஒருவேளை உணவுக்காக உடலைத் தானம் செய்ய வேண்டும். அதிகாரிகளின் சல்லாபங்களுக்கும் சேட்டைகளுக்கும் இடம்கொடுக்காவிட்டால் அங்கு நிம்மதியாக வாழவே முடியாது. இதுதான் லெபனானில் உள்ள பணிப்பெண்களின் உண்மை நிலைமை.

வெபனானில் உள்நாட்டு யுத்தம் ஏற்படும் வரை பணிப் பெண்கள் கௌரவமாகவே நடத்தப்பட்டனர். கைநிறையச் சம்பளம் பெற்று வந்தனர். லெபனானில் குடியேறியவர்களுள் பெரும்பாலானவர்கள் ஜரோப்பா, ஆபிரிக்க நாடுகளில் இருந்து வந்த படித்த சமூகத்தினர். இவர்களிடமே இலங்கைப் பெண்கள் பெரும்பாலும் பணிப்பெண்களாக கடமையாற்றினர்.

'உள்நாட்டு யுத்தம் காரணமாக ஏற்பட்ட இடம்பெயர்வால் இவர்கள் எம்மை கைவிட்டு ஜரோப்பிய நாடுகளுக்குச் சென்றுவிட்டனர். இதனால் நாம் அனாதைகளானோம். குண்டு வெடிப்புகளும், துப்பாக்கி வேட்டுக்களுக்கும் மத்தியில் தெரு நாய்களைப் போன்று இரவு பகலாக அலைந்து திரிந்தோம். உணவு இல்லை, மாற்றுடை இல்லை, தங்கவும் இடம்இல்லை. யார் காலைப் பிடித்தாவது நாடு திரும்பலாம் என்றால் பாஸ்போட் கையில் இல்லை. இங்கு தான் எங்கள் வாழ்க்கையில் சீரழிவுப் படலம் ஆரம்பமாகியது.

ஆங்காங்கே அகதி முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், அங்கு சென்று தங்கும்படியும் அறிவிக்கப்பட்டது. ஆனால், அவை எங்கே இருக்கின்றன? அங்கு எப்படிச் செல்ல வேண்டும் என்பது எவருக்கும் தெரியாமல் இருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் எமக்கு ஆதரவளிக்க வந்தது ஒரு கும்பல். அவர்கள் எம்முடன் அன்பாகப் பேசினர். இது நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஒரு துரும்பாக அல்ல, உயிர் காக்கும் தோணியாகவே தோன்றியது.

எம்மை அவர்கள் அழைத்துச் சென்றனர். ஆதரவு காட்டினர். உணவளித்து உபசரித்தனர். இவை அனைத்தும் முதல் இரண்டு நாட்கள் மட்டுமே. பசி பட்டினியால் துவண்டு போய் இருந்த நாம், சற்று தெம்படைந்த பின்னரே எம்மை ஆதரித்தவர்களின் சுயரூபம் வெளிப்பட ஆரம்பித்தது.

வெட்டிப் பலி கொடுக்கவிருக்கும் ஆடை எப்படிக் குளிப்பாட்டி அதற்கு மாலை போட்டு உணவ10ட்டுவார்களோ அப்படியானது எங்கள் நிலை. மாற்றுடை கேட்டபோது அரைகுறை ஆடைகளை தந்தனர். ஒரே அழுக்கான ஆடைகளை எத்தனை நாட்களுக்கு உடுத்தி இருப்பது? இங்கே எல்லோரும் பெண்கள் தானே என்று அவற்றை உடுத்திக் கொண்டுடோம். எந்த நேரத்திலும் அரைநிர்வாணம் உருண்ட திரண்ட அங்கங்ள் பளிச் என தெரிய வேண்டும். இது அதிகாரிகளின் கண்டிப்பான கட்டளை.

சிறு சிறு வேலைகளுக்காக எம்மை வெளியே அழைத்துச் செல்வார்கள். அங்கே இந்த அதிகாரிகளின் மனைவியைப் போன்று நடந்து கொள்ள வேண்டும். பட்டப் பகலில் பல நண்பர்கள் ஒன்று கூடி அனுபவிப்பார்கள் இவர்களைக் குஷிப்படுத்த மறுத்தால் கிடைக்கும் சித்திரவதைகளுக்கு அளவே இல்லை.

நல்ல உண்வு வேண்டுமா? அதற்காக, ஒரு வேளை உணவுக்கு ஒருவனுக்கு உடலை தானமாக்க வேண்டும். நிம்மதியாக சற்று தூங்க எழ வேண்டுமானல் இரவு முழுவதும் ஒரு அதிகாரியின் கட்டிலில் பங்காளியாக வேண்டும். இதற்கும் மேலாக, இராணுவ சிப்பாய்கள், பொலிஸார் என கூட்டமாக வந்த கும்மாளம் அடிப்பார்கள். அன்று நகர வேதனை தான்.

நாட்கள் செல்லச் செல்லத்தான் இது ஒரு அகதி முகாம் அல்ல, பொலிஸாரின் அனுசரனையுடன் நடத்தப்படும் சட்ட விரோத உல்லாச விடுதி என்பது தெரியவந்தது. என்ன செய்வது? எப்படித் தப்புவது? அந்த முகாமில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெண்கள் இருக்கின்றார்கள். யாரை நம்புவது? ஆண்களிடம் தான் இந்த கெடுபிடி என்றால், போதை தலைக்கேறிய பெண்கள் அட்டகாசம் அதைவிட மோசம். இவர்களிடம் சகவாசம் வைத்துக் கொண்ட நமது பெண்கள் பலர் ஒரினச் சேர்க்கையில் கூட பழக்கப்பட்டிருந்தனர்.

வெளியில் வாடகைக்கு அழைத்துச் செல்லும் சமயங்களிலும், பொலிஸார் கூட்டமாக வந்து கும்மாளம் போடும் சந்தர்ப்பங்களிலும் தப்பி ஓடிய பெண்கள் கொடுத்த தகவல்களை வைத்து உண்மையான பொலிஸார் வந்து எங்களை மீட்டனர்.

ஒருபடியாக எமது நாட்டுத் தூதரகத்தை கண்டுபிடித்தோம். உதவி கோரினோம். உதவி செய்தார்கள். கைமாறாக அவர்களது உடல்பசிக்கு இரையாக வேண்டிய நிலைமை. தமக்குத் தேவையானவர்களை தம்மோடு வைத்துக் கொண்டு, ஏனையவர்களை லெபானான் அரசு நடத்தும் முகாம்களுக்கு அவர்கள் அனுப்பி வைத்தனர். அங்கே பல ஆயிரக்கணக்கானோர் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அதில் எம் நாட்டவர்களும் இருந்தனர்.

பாஸ்போட் இல்லாதவர்கள், விசா முடிந்தும் கள்ளத்தனமாக தங்கி இருந்தவர்கள், பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் என அங்கே பல தரப்பட்டவர்களையும் காண முடிந்தது. மரத்தில் இருந்து விழுந்தவனை மாடேறி மிதித்த கதைதான் இந்த முகாமின் நிலைமை. தூதரக அதிகாரிகள் என்று சொல்லிக் கொண்டு யார் யாரோ வருவார்கள். பாஸ்போட் பெற வேண்டும் என அழைப்பார்கள். அரவணைத்து மகிழ்வித்து விட்டுப் போவார்கள். இந்த முகாம்களில் ஏழு எட்டு வருடங்களாகவும் பலர் இருக்கின்றனர்.

இலங்கைப் பெண்கள் பலர் கைகளில் குழந்தையுடன் கன்னித் தாய்மார்களாக அங்கே தங்கி இருப்பதையும் காண முடிந்தது. பெற்றோரைப் பராமரிக்க வேண்டும். அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று வெளிநாடு சென்ற இளம்பெண்கள், தாமே பிள்ளையைப் பெற்றுக் கொண்டு பரிதவித்து நிற்கின்றனர்.

திருமணம் முடிந்து ஒரு சில வாரங்களில், ஒரு சில மாதங்களில் வெளிநாடு போய் உழைத்துக் கொண்டு வா என கணவன்மாரால் கட்டயமாக அனுப்ப வைக்கப்பட்ட இளம் மனைவிமார் அங்கே கைகளில் குழந்தையுடன் இருக்கின்றார்கள். இந்த குழந்தைகளின் தந்தையர் யார்? வீட்டு எஜமாக்களா? முகாம் அதிகாரிகளா? உதவி செய்வதாக கூறிய உத்தியோகத்தர்களா? தந்தையின் பேர் அறியாத குழந்தைகள் 400க்கும் மேல் இருக்கின்றனர் என்று தெரிய வருகின்றது. இது தெரிந்த விவரம். தெரியாமல் இன்னும் எத்தனை குழந்தைகளோ? ஆண்டவனுக்கே வெளிச்சம்.

இப்படிப் பிறந்த குழந்தைகளின் பிறப்புக்கள் கூட இன்னும் பதியப்படவில்லை. இவர்கள் எந்த நாட்டைச் சோந்தவர்கள் என்று தீர்மாணிக்க முடியாத நிலையில் நாடற்ற பிறவிகளாக ஓரம்கட்டப்பட்டுள்ளனர். இக் குழந்தைகளின் எதிர்காலம் சூனியமாகவே இருக்கின்றது.

கன்னித் தன்மையுடன் விமானம் ஏறியவர்கள்; இன்று கன்னித் தயாமாராகிவிட்டனர். கணவனை விட்டுச் சென்றவர்கள் கையில் குழந்தை. இவர்கள் இங்கு திரும்பி வந்தால் குடும்பத்தவர்கள் இவர்களை ஏற்றக் கொள்வர்களா? பணம் சம்பாதித்து வா என்று விரட்டிய கணவர்மார் தமது மனைவியை மீண்டும் தம்முடன் சேர்த்துக் கொள்வார்களா? இல்லை, இந்த சமுதாயம் தான் இந்த அபலைகளை ஏற்றுக்கொள்ளுமா?

இப்படியான கேள்விகளுக்கு விடைகிடைக்காமல் இப்பெண்கள், லெபனானில் திக்குத் தெரியாமல் இரண்டும் கெட்ட நிலையில் இருக்கின்றனர். இந்த நிலைக்கு யார் பொறுப்பு? யார் குற்றவாளி? இந்த இளம் பெண்கள் தண்டனை அனுபவிப்பது அவர்களுடைய தலைவிதியா?

பொருள் தேடிவா என்று அனுப்பிய பெற்றோர்களா, பணம் கொண்டு வா என்று இளம் மனைவியை அனுப்பி வைத்த கணவன்மரா இந்த பாவச் செயலுக்கு பொறுப்பேற்கப் போகின்றனர்.? இப்டியான கேள்விகளை எழுப்புகின்றனர்; லெபனான் சிறைகளிலும் தடுப்பு முகாம்களிலும் இருக்கும் இலங்கைப் பெண்கள். இக் கேள்விக்கு விடை காண்பது யார்?

தொழில், தொழில்வாய்ப்புகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க அண்மையில் லெபனான் சென்று, அந்நாட்டு தொழில் அமைச்சர் மற்றும் சட்ட விவகார அமைச்சர் ஆகியோருடன் பேச்சுக்களை நடத்தினார். இதன் பயனாக விசா இன்றியும், சிறு குற்றச் செயல்களுக்காகவும் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் 175 பேர் விடுவிக்கப்பட்டனர். இவர்களுள் 71 இளம் பெண்கள் கடந்த 7ஆம் திகதி வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் மூலம் அழைத்து வரப்பட்டனர். இவர்களுள் மேலும் 104 பேர் இன்னும் சில தினங்களில் அழைந்து வரப்படவுள்ளனர் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் சுஸந்த பெர்னான்டோ கூறினார்.

இதே வேளை தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, 13ஆம் திகதி மீண்டும் லெபனான் சென்று அங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இலங்கைப் பணிப்பெண்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கட்டுநாயக்க விமானநிலையம் வந்திறங்கிய இப் பெண்கள் மிகவும் சந்தோஷமாகக் காணப்பட்டனர். மீண்டும் இலங்கை வருவோமோ? வரத்தான் முடியுமோ? என்று ஏக்கத்துனட இருந்தவர்கள், அமைச்சரின் முயற்சியால் தாய்நாட்டு மண்ணில் வந்திறங்கினர். இது அவர்களுக்கு மறுபிறவி எடுத்ததைப் போன்று தோன்றுவதாக அவர்கள் கூறுகின்றனர்.

இப்படியான சித்திரவதைகள் எல்லாப் பெண்களுக்குமே ஏற்படுகின்றனவா? என்று கேட்டால், அதற்கு அவர்கள் அளித்த பதில் மனதிற்கு சற்று ஆறுதலாக இருந்தது. அங்கே நல்ல மனிதர்களும் இருக்கத்தான் செய்கின்றனர் என்பதே அந்தப் பதில். மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் பெண்களில், லெபனானில் தொழில் புரியும் இலங்கைப் பெண்கள்தான் கூடுதலான வருமானம் பெறுகின்றனர். வசதியாக இருக்கின்றனர் என்று லெபனானில் உள்ள இலங்கைத் தூதுவர் கூறுகின்றாரே அது சரியானதா? என்று கேட்டோம். அது அவருடைய பார்வையில் என்று ஒரே சொல்லில் பதில் அளித்தனர்.

அதிகாரிகள் தொடர்பாகப் பல்வேறு குற்றச் சாட்டுக்கள் எழுந்துள்ளன. இப்பொழுது எமது தூதரகத்தின் செயற்பாடுகள் எப்படி? என்று கேட்டபோது, 'புதிய அமைச்சர் பலமுறை அங்கு வந்து நிலைமைகளை பார்த்ததாக அறிந்தோம். கடைசியாக எம்மை விடுவித்த போது எங்களால் அமைச்சரைக் காண முடிந்தது. எங்களுடைய குறைகளைக் கேட்டறிந்தார். தூதரக நிலைமையும் ஓரளவு முன்னேற்றம் கண்டுள்ளது என்று கூறியவர்கள், இன்னும் லெபனானில் பெரும் தொகையான இலங்கைப் பெண்கள் விசா முடிந்தும் பாஸ்போட் இல்லாமலும், சிறு சிறு குற்றங்கiளுக்காகவும் இலங்கை திரும்ப முடியாமல் இருக்கின்றனர். எனவே அவர்களையும் இலங்கைக்கு திருப்பி அழைக்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உருக்கமான ஒரு வேண்டுகோளையும் இப் பெண்கள் விடுத்தனர்.

இப்படி மததிய கிழக்கு நாடுகளில் எமது பணிப்பெண்கள் பல்வேறு சீரழிவுகளுக்கும், பாலியல் வல்லுறவுகளுக்கும், சி;த்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.அங்கு செல்லும எல்லாப் பெண்களும் இப்படிப் பாதிக்கப்படுகின்றனர் என்றும் தீர்மானித்துவிட முடியாது. அங்கிருந்து வரும் சில பெண்கள் 'என்னை வீட்டு எஜமானி சொந்தப்பிள்ளை போல் பார்த்தார். ஒரு மகாராணியைப் போல் இருந்தேன்" என்றும் கூறுகின்றர். அப்படியானால் ஏன் அடைத்து வைக்கப்பட்டிருந்தீர்கள்? என்று கேட்டால் வாயடைத்து நின்றனர்.

முன்னாள் ஜனதிபதி ஆர். பிரேமதாசாவின் அமைச்சரவையில் தொழில் அமைச்சராக இருந்த ஜீ.எம். பிரேமச்சந்திர மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று திரும்பியவுடன், மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பெண்கள் பணிப் பெண்களாகச் செல்வதற்கு தடை விதித்தார். ஆனால் அது தொடர்ந்து நடைபெறவில்லை. ஏதோ ஒரு காரணத்தால் தடை நீக்கப்பட்டது.

இப்பொழுதும் முற்றாகத் தடை செய்யவிட்டாலும், அங்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தொழில் அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எமது கருத்து.

நன்றி சுடர்ஒளி
Reply
#28
சோழியான் அண்ணா நீங்கள் விளங்கப்படுத்தா விட்டாலும் குடும்ப மாற்றிகள் விளங்கிட்டுதே......!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#29
சவப்பெட்டியில் வரும் பணிப்பெண்கள்

இலங்கையின் கிராமப் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான இளம்பெண்கள் மத்திய கிழக்கிற்கு வேலை வாய்ப்புத்தேடிச்செல்வது வழமை.சிலர் ஓரளவு பணத்துடனும் புதிய வாழ்க்கை குறித்து நம்பிக்கையுடனும் திரும்பிவருவதும் வழமை.எனினும் இவையாவற்றையும்விட வழமையான விடயமாகிவிட்ட ஒன்று உண்டு.அது மாதத்திற்கு 20அல்லது 25இலங்கைப் பணிப்பெண்களின் உடல்கள் மத்திய கிழக்கிலிருந்து வருகிறது.

கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலைய அதிகாரிகளைப்பொறுத்தவரை இது வழமையான விடயமாகிவிட்டதாகக் குறிப்பிடுகின்றனர்.கடந்த மூன்று வருட காலப்பகுதியில் 750உடல்களை தாங்கள் பெற்றுள்ளதாகவும் இதில் 532பெண்கள் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.புள்ளிவிபரங்களும் இதனை உறுதிப்படுத்துகின்றன.ஏனைய மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்தவர்களின் உடல்களும் விமான நிலையத்தினூடாக செல்வதாகவும் மாதமொன்றிற்கு 2912களிற்கு மேல்வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய கிழக்கிற்கு செல்லும் அனைவரும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் மூலம் செல்லாததால் முழுமையான புள்ளிவிபரங்கள் தெரியாமல் உள்ளன.துஷ்பிரயோகமும் பாலியல் வன்முறைகளும், கொலையும்,தற்கொலைகளும் மத்திய கிழக்கிற்கு சென்ற இலங்கைப் பெண்களின் வாழ்க்கையில் ஒரு பகுதியாக உள்ளன.ஒக்டோபர் 15ஆம் திகதி கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில தினசரி ஒன்றில் மத்திய கிழக்கில் இராஜதந்திரிகளால் இலங்கைப் பணிப்பெண்கள் துன்புறுத்தப்படும் சம்பவம் குறித்து சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

2001இல் அபுதாபியில் பணிபுரிந்து இலங்கைப் பெண்மணியொருவர் இலங்கை இராஜதந்திரியொருவராலும் நண்பராலும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.அந்தப் பெண்மணி அபுதாபி தூதரகத்தில் அடைக்கலம் புகுந்துள்ளார்.அங்கும் அவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.குறிப்பிட்ட இராஜதந்திரிகளுக்கு உதவியாக இருந்தவர்களிற்கு அபுதாபி நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நஷ்ட ஈட்டினை வழங்குமாறும் கோரியுள்ளது.எனினும் அபுதாபியில் உள்ள தூதரகம் குறிப்பிட்டுள்ள பெண்ணை இலங்கைக்கு பலவந்தமாக திருப்பியனுப்பிவிட்டது.எனினும் வேலைவாய்ப்பு பணியகங்களில் இந்த குற்றச்சாட்டுகளை ஏற்கத் தயாரில்லை.பத்திரிகைகளே இதனை பெரிதுபடுத்துகின்றன என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

நன்றி-வெப்தமிழன்
Reply
#30
sOliyAn Wrote:இடைவேளை வந்ததா? அப்பெண்மணி என்னுடன் பேசிக்கொண்டிருந்தவரிடம், "இவரைக் கண்டனீங்களே?" என்று விசாரித்தபோது அதிர்ந்தாலும்.. சந்தோசமாக இருந்தது. என்னதான் மைக்கில் கத்தினாலும்.. கணவனின் பெயர் சொல்லி விசாரிக்கவில்லையே?! அதற்காகத்தான். .


சோழியான் அப்ப கணவன் பெயரைச் சொல்பவர்கள் நல்ல பெண்கள் இல்லை அப்படித்தானே? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> (நாராயண நாராயண)
Reply
#31
தாத்தா நீங்கள் தொடர்ந்து எழுதுங்கோ. அப்பத்தான் உண்மை நிலை எங்களுக்கு தெரியும்.
நிற்க.
ஆண்கள் மலர் ஒன்று வெளியிடப்போகிறேன். ஆதரவு தேவை. :mrgreen:
Reply
#32
vasisutha Wrote:ஆண்கள் மலர் ஒன்று வெளியிடப்போகிறேன். ஆதரவு தேவை. :mrgreen:
Quote:

எனது ஆதரவும் உண்டு
Reply
#33
வணக்கம் மணிமாறன் ! உங்கள் கருத்துக்கள் யாவும் பயனுள்ளவை என்பதனாலேயே மீண்டும் சில கேள்விகளை முன் வைக்கிறேன். மனங்கோணாமல் தங்கள் கருத்தைத் தரவும்.

1)மதம் இதுவரை எமது சமூகத்தில் எதையும் செய்து விடவில்லையானால் அந்த மதத்தைப் பின்பற்றும் நாம் அறியாமையாளர்களா ?

2)தமிழர் பண்பாட்டுச் சின்னங்கள் என தாலி , புடவை , பொட்டு , வேட்டி என்பவற்றை இன்றும் பின்பற்றி அணிந்து வருவது அடிமைத்தனமா ?
அப்படியாயின் இவை எந்த வகையில் அடிமைத்தனமாகிறது ?
Reply
#34
மதத்தைப் பின்பற்றுவர்கள் அறியாமையாளர்கள் என்று சொல்வது பொருத்தமற்றதாயிருக்கும் என்றுதான் எண்;ணுகின்றேன். அறிவிற்கும் சிந்தனைத்திறனுக்கும் இடையே ஒரு மெல்லிதான கோடு ஒன்று உள்ளது. அறிவியலாளர்கள் ஏலவேயிருக்கின்ற தகவல்களின் அடிப்படையில் அவற்றை அறிந்து அதற்கமைய கருமமாற்றுபவர்கள். ஆனால் சிந்தனையாளர்கள் விடயங்களை தத்துவார்த்த ரீதியில் அலசி ஆராய்ந்து சிந்திக்கத் தலைப்படுபவர்கள். எமது சுற்றத்திலுள்ள பெரும் பதவி வகிப்பவர்களில் சிலரை அவதானிப்பின் அவர்கள் காலையில் திருநீற்றுப்பட்டையுடன் வேலைக்குப் போவார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் அது ஒரு நம்பிக்கை. காலம் காலமாக பாட்டன் புூட்டன் வழி பேணப்பட்டு வந்த புூர்வீகம். அதற்கு மாறாக சிந்திப்பதற்கு அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை அல்லது அது தேவையற்றதொன்று. இந்த மரபுவழி வாழ்க்கைமுறைமை அவர்களுக்கு வசதிகரமாய் இருக்கின்றது. எனவே அதையிட்டு அவர்கள் கவலைகொள்ளவில்லை. அதற்காக அவர்கள் அறிவற்றவர்கள் என்று சொல்வதற்கில்லை. அதேநேரம் அந்த அறிவார்ந்தவர்கள் செய்கின்றார்கள் என்பதற்காக அவையனைத்தும் சரியானவை என்ற முடிவுக்கு வந்து விடுவதற்கும் இல்லை.

இன்று எமது பண்பாட்டினை எடுத்து நோக்கினால் அதன் பெரும்பாலான அம்சங்கள் மதத்துடன் பின்னிப்பினைந்துள்ளன. மதத்தை எடுத்து எறிந்தால் எமக்கு பண்பாடே இல்லை என்று சொல்லுமளவுக்கு அவற்றின் செறிவு எமது பண்பாட்டில் இருக்கின்றது. மிக அன்மைக்காலம் வரை எமது ஒவ்வொரு செயற்பாடும் மதத்தின் ஆசிர்வாதத்துடன்தான் மேற்கொள்ளப்பட்டு வந்தன. எனவே இயல்பாகவே அதன் செல்வாக்கு எமது பெரும்பாலான நடவடிக்கைகளில் ஆதிக்கம் செலுத்துவதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இப்போது பாருங்கள் விடுதலைப்போராட்டகாலத்தில் எமது பெரும்பாலான சமுக நடவடிக்கைகள் அந்தபோராட்டத்தை ஒட்டி இடம்பெறவில்லையா. இலக்கியம் சிற்பம் ஓவியம் இசை நாடகம் நாட்டியம் ஏன் விடுதலைப்போராட்டத்தையொட்டிய ஒரு வணக்கமுறைகூடத் தோன்றவில்லையா. அதாவது எமது வாழ்க்கைமுறைமையென்பது சூழலையொட்டியது. அச்சூழலிற்கூடாக வாழ்வியலை விருத்திசெய்து கொண்டு செல்வது மனிதவியல்பு. ஒரு காலத்தில் சமயம் எமது சமுகத்தில் செல்வாக்கு செலுத்தியது. எனவே அதனையொட்டி எமது கலையிலக்கியங்கள் வாழ்க்கைமுறைகள் வளர்ந்தன. அதற்காக சமயம்தான் எமது பண்பாடு என்று சொல்லிவிடமுடியாது. அப்படிச் சொல்வோமாயின் இப்போது போராட்டத்தையொட்டி சமுக விழுமியங்கள் வளர்ச்சி காணும் போது போராட்டம்தான் எமது பண்பாடு என்று சொல்லவேண்டியிருக்கும். இந்த விடுதலைப் போராட்டம் என்பது எமது வரலாற்றின் ஒரு காலகட்டம். அதேபோல சமயம் என்பது அறிவியல் மட்டுப்படுத்தப்பட்ட அன்றைய காலத்தில் அது மனித வாழ்வின் ஒரு வரலாற்றுக்கட்டம். நாம் சுதந்திரமாய் வாழும் ஒரு காலகட்டத்தில் இந்தப்போராட்டம் எப்படி காலாவதியாகிப் போகுமோ அது போல அறிவியல் விருத்தியுற்ற இக்காலத்தில் சமயமும் காலாவதியாகி விட்டது. காலாவதியான பொருட்களைப் பாவித்தால் எப்படி மனிதன் நோய் வாய் படுவானோ அதுபோல காலாவதியான வாழ்க்கை முறையை நாம் பின்பற்றும்போது சமுகம் நோய்வாய்ப்படுகின்றது.

தாலி, பொட்டு, வேட்டி என்பன எமது பண்பாட்டுச் சின்ன அணிகலங்களாக அணிந்து வருகின்றோம். இந்த தாலி பொட்டு இற்கும் இந்த வேட்டிக்கும் இடையில் பெரிய வேறுபாடு உள்ளது. வேட்டி தனியே ஒரு உடை. அதற்கு பெரிய சமுகச்சிறப்பு கிடையாது. அதனை தேர்வு செய்வது தனியே அதனை அணிபவரின் இரசனையை விருப்பு வெறுப்பைப் பொறுத்தது. ஆனால் இந்த தாலி, பொட்டு என்பன தனியே ஒரு அணிகலன் என்பதற்கும் மேலாக சமுகத்தின் ஒரு தரப்புக்கும் மட்டும் வலிந்து சில அடையாளங்களைக் புகுத்துகின்றன. இந்த அடையாளங்கள் அந்த தரப்பினரை சமுகத்தில் பலவேளைகளில் சிறுமைப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன. இந்த இரு அணிகலன்களும் அணிபவரின் விருப்பு வெறுப்புக்களுக்கப்பாற்பட்டு சமுகத்தால் வரையறைசெய்யப்பட்ட சில அநாகரிகச்சட்டங்களை அமுல்படுத்துவதற்குத் துணைபோகின்றன. எனவே இவை தொடர்பி;ல் நாம் கவனம் செலுத்தவேண்டியவர்களாகின்றோம்.
Reply
#35
[url=http://www.yarl.com/articles.php?articleId=350][b]பெண்கள் சந்திப்பு மலர் 2002 - எனது பார்வை
Nadpudan
Chandravathanaa
Reply
#36
மணிமாறன் அண்ணா . .

இது இந்த தலைப்புக்கு சம்பந்தமில்லாத கேள்வி . .

எங்கயோ வாசிச்சன் . . . தாய்வழி சமூகம் கன காலத்துக்கு முதல் இருந்தது எண்டு . . அப்படி தமிழ் ஆக்களிடமும் இருந்ததோ ??
Reply
#37
தாய்வழிச் சமூகம் எமது தமிழ் சமுதாயத்தில் இருந்தது என்று அறுதியிட்டுச் சொல்லக்கூடியதான ஆதாரங்கள் எதனையும் நான் அறிந்திருக்கவில்லை. ஆனால் நம் ஈழத்து வரலாற்றில் சில நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட கால வரலாறுகளில் பெண்மையின் பெருவீரம் பற்றிப் பேசப்பட்டிருக்கின்றது. பண்டாரவன்னியனின் நாச்சிமார்
ஆனையடக்கிய அரியாத்தை போன்ற வரலாற்றுச் நிகழ்வுகள் பெண்களின் ஆற்றல் துணிவு அவர்களின் அன்றைய சமுதாயத்தின் மீதான செல்வாக்கு என்பன பற்றி சொல்வதற்கு போதுமானவை.

இராகுல் சங்கரச்சியார் (பெயர் சரியாக நினைவில் இல்லை) என்ற இந்திய எழுத்தாளர் எழுதிய புத்தகம் ஒன்று தமிழில் 'கங்கையிலிருந்து வொல்கா வரை" என்ற மொழிபெயர்ப்புடன் வெளிவந்திருந்தது. அதில் வேடுவ காலத்திலிருந்து தொடங்கப்பட்டு ஐரோப்பிய காலம் வரை சொல்லப்பட்டிருக்கின்றது என்று நினைக்கின்றேன். அவர் அன்றைய வேடுவ காலத்திலேயே தாய்வழிச் சமூகம் இருந்ததாகச் சொல்கின்றார். வேட்டையின் இடத்தை இலக்கை தீர்மானித்து அந்த வேட்டையை தலைமை தாங்கி நடத்துபவள் குடும்பத் தலைவி என்று குறிப்பிடுகின்றார். அன்றைய காலத்தில் வேட்டைதான் குடும்பத்தின் பிரதான செயற்பாடு. எனவே அதனை வழிநடத்தியவள் தாய் என்ற முறையில் அது தாய்வழிச் சமூகம் என்று சொல்லலாம். நாம் இந்திய பாரம்பரிய வழிவந்தவர்கள் என்று சொல்லப்படுபவர்கள். எனவே இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டிருப்பதன்படி பார்த்தால் ஆம் நமது மூதாதையரிடம் தாய்வழி சமூகக் கட்டமைப்பு இருந்தது என்ற முடிவுக்கு நாம் வரலாம்.
Reply
#38
பால்வினைத் தொழிலுக்கு இன்று காரணம் என்ன....?! வெறும் பஞ்சமும் கடத்தலும் என்றால் மேற்குலகிலும் எல்லாச் சந்தர்ப்பத்திலும் அதுதானா நடக்குது....?! எல்லா இடத்திலும் ஆண்கள் தான் இத்தொழிலுக்கு முக்கிய காரணம் என்பது போல பொதுப்படையா வசைமாரி பொழிகிறீர்களே....பஞ்சம் என்றால் பெண்கள் வேறு வேலைக்குப் போய் உழைக்க வழியில்லையோ.....?! அல்லது தேடப்பஞ்சியோ.....?!
என்ன கறுமமோ எல்லாம் ஆண்கள் மீதுதான் பழி...! ஒரு சில குட்டிச் சுவருகளால எல்லா ஆண்களுக்கும் நல்ல பட்டம்....அப்ப உலகத்தில் உள்ள பெண்கள் எல்லாம் என்ன பால்வினைத் தொழிலே செய்யினம்....????!

எழுத முதல் சரியாச் சிந்தியுங்கோ.... சரியா யார் மேல் தவறென்பதை சரியான பதங்களைப் பாவித்து வெளிப்படுத்துங்கோ....ஆண்கள் என்று இந்தப் பொதுப்படை விளிப்புகள் தேவையில்லை...அது எதிர்காலத்தில் பாரதூரமான விடயமாக எடுத்துக் கொள்ளப்படும்...அண்மையில் அம்னஸ்ரி இன்ரனஸனல் விட்ட அறிக்கை இங்கு போடப்பட்டது. அதை வாசியுங்கோ அவர்கள் எந்த இடத்திலும் 'Male/Men' என்று பொதுப்படையா விளிக்கவில்லை....சரியாக கருத்தை வெளிப்படுத்தத் தெரியாவிட்டால் கற்றுக் கொள்ளுங்கள்...இன்றேல் ஆண்களின் ஒட்டு மொத்த அனுதாபத்தையும் பெண்கள் இழக்க நேரிடும்...அதன் பின் உங்கள் அழிவுக்கு நீங்களே பொறுப்பாளர்கள் ஆவீர்கள்....!

http://www.yarl.com/forum/viewtopic.php?p=14529#14529

:evil: Idea :!: :?: :evil:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#39
kuruvikal Wrote:எழுத முதல் சரியாச் சிந்தியுங்கோ.... சரியா யார் மேல் தவறென்பதை சரியான பதங்களைப் பாவித்து வெளிப்படுத்துங்கோ....ஆண்கள் என்று இந்தப் பொதுப்படை விளிப்புகள் தேவையில்லை...
அது எதிர்காலத்தில் பாரதூரமான விடயமாக எடுத்துக் கொள்ளப்படும்...அண்மையில்
அம்னஸ்ரி இன்ரனஸனல் விட்ட அறிக்கை இங்கு
போடப்பட்டது. அதை வாசியுங்கோ
அவர்கள் எந்த இடத்திலும் 'Mal/Men' என்று பொதுப்படையா விளிக்கவில்லை....
சரியாக கருத்தை வெளிப்படுத்தத் தெரியாவிட்டால் கற்றுக் கொள்ளுங்கள்...இன்றேல் ஆண்களின்
ஒட்டு மொத்த அனுதாபத்தையும் பெண்கள் இழக்க நேரிடும்
...அதன் பின் உங்கள் அழிவுக்கு நீங்களே பொறுப்பாளர்கள் ஆவீர்கள்....!

http://www.yarl.com/forum/viewtopic.php?p=14529#14529

:evil: Idea :!: :?: :evil:


[quote] இன்றேல் ஆண்களின் ஒட்டு
மொத்த அனுதாபத்தையும் பெண்கள்

என்ன குருவி நீங்கள் மட்டும்
பொதுப்படையாக பெண்கள் என்று எப்படி
எழுதலாம்?
எல்லாப் பெண்களுமா ஆண்களை குற்றம் சாட்டினார்கள்.
நீங்கள் மட்டும் பொதுப்படையாக
பெண்கள் என்று எழுதலாம் ஆனால் மற்றவர்கள் பொதுப்படையாக ஆண்கள் என்று
எழுதக்கூடாது என்ன?
நல்ல உலகமடா சாமி. :roll:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#40
இங்க வந்த 'பெண்கள்' எல்லாப் பெண்களையும் தான் குறிக்கிறது...சில பெண்களின் நடவடிக்கையால் பல பெண்கள் அனுதாபங்களை இழக்க நேரிடும் என்றுதான் வருகிறது....!

இப்படியான வீணான அர்த்தமற்ற குற்றச்சாட்டுக்களால் பெண்கள் ஆண்களின் அனுதாபங்களை இழப்பது அவர்களின் பிரச்சனைகள் முடிவின்றித் தொடரவே வழி செய்யும்....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)