Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நன்றி பதிவுகள்.கொம்.
#1
நன்றி பதிவுகள்.கொம்.

http://www.geotamil.com/pathivukal/penka_s...thippu2003.html
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#2
<b>நிகழ்வுகள்</b>
<b>சுவிஸ் பெண்கள் சந்திப்பு 2003! </b>
<b>ஒரு குறிப்பு! </b>
<b>றஞ்சி (சுவிஸ்)</b>

புகலிடத்தில் வாழும் பெண்கள் தங்கள் கருத்துக்களையும் அனுபவங்களையும் பா¢மாறிக்கொள்ளும் முகமாக 1990இல் §ஐர்மனியில் உள்ள சில பெண்களால் ஆரம்பிக்கப்பட்டது. இப் பெண்கள் சந்திப்பு §ஐர்மனியின் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற அதேநேரம், அது தனது எல்லைகளை விஸ்தா¢த்து சுவிஸ், பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் சந்திப்புகளை நடாத்தி வருகின்றது. ஜரோப்பாவில் வாழும் பெண்கள் மட்டுமன்றி இலங்கை, இந்தியா அவுஸ்திரேலியாவிலிருந்தும்கூட பெண்கள் வந்து கலந்து கொள்ளும் சந்திப்பாக வளர்ந்திருக்கிறது. சுவிஸில் மூன்றாவது தடவையாக நடைபெறும் பெண்கள் சந்திப்பின் 22வது தொடர் ஒக்டோபர் மாதம் 11ம் திகத§ சுவிஸ் சூ¡¢ச் நகா¢ல் நடைபெற்றது. இச் சந்திப்பு தனது 13வது வருடத்தை பூர்த்தி செய்வதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஓரு நாள் நிகழ்ச்சியாக நடைபெற்ற இச் சந்திப்பில் பெண்ணியச் சிந்தனை நோக்கிலான கருத்தாடல்கள், அனுபவப் பகிர்வுகள், விமர்சனங்கள் என்பன இடம்பெற்றன.

வழமைபோல் சுய அறிமுகத்துடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. "தமிழ்ப் பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் கலாச்சாரமும் பெண்களும்" என்ற தலைப்பில் பிரான்ஸைச் சேர்ந்த பா¢மளா தனது கருத்தை வெளியிட்டார் அவர் கூறும்போது சகல பெண்களும் ஒடுக்குமுறைக்கு உட்பட்டிருக்கின்றோம், வெள்ளை இனப் பெண்களாக இருந்தால்கூட. குறிப்பாக வறிய வெள்ளை இனப் பெண்கள், ஆபி¡¢க்கப் பெண்களைவிட இந்திய, இலங்கைப் பெண்கள் கலாச்சாரத்தினால் கூடுதலாக ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். இந்திய இலங்கைப் பெண்கள் 'தாலி' என்ற பதத்தை வைத்து சென்¡¢மென்டாகவும் பெண் ஒடுக்குமுறைக்குள் தள்ளிவிடப்பட்டுள்ளார்கள். பண்டைய காலத்தில் மாடுகளை தங்களுடைய மாடுகள்தாம் என அடையாளம் காண்பதற்காக நிறம் பூசிய கயிறுகள் மூலம் கட்டுவர். அதேபோல்தான் இந்தத் தாலியும் என்று கூறினார். கலாச்சாரத்தை பெண்கள் மட்டும்தானா கட்டிக்காக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார். தாய்வழிச் சமூகம் இருந்த காலத்தில் பெண்கள் கடின உழைப்பாளிகளாகவும் ஆண்கள் வீட்டு வேலைகளை செய்பவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். தாய்வழிச் சமூகம் மாறி தந்தைவழிச் சமூகம் வந்தபின் அவர்கள் பெண்களை அடக்குவதற்காக தாலி, சாமர்த்திய சடங்கு, பொட்டு பூ நகை போன்ற அடையாளங்களை வேண்டுமென்றே கலாச்சார சின்னங்களாக திணித்து பெண்களை அடிமையாக்கியுள்ளனர். இவ்வாறாக தனது கருத்துக்களை முன்வைத்தார் பா¢மளா. கலந்துரையாடல் ஒன்றரை மணிநேரம் நடைபெற்றது மட்டுமல்லாமல் பயனுள்ளதாகவும் அமைந்தது.

மதியபோசனத்தின் பின் சாந்தினி வரதராஐன் "புலம்பெயர் தமிழ்ப் பெண்களின் முற்போக்கு சிந்தனையும் அவர்கள் வாழும் பிற்போக்கு வாழ்க்கையும்" என்ற விடயத்தினை முன்வைத்து தனது கருத்தை வெளியிட்டார். இன்று பெண்கள் தாங்கள் வாழும் வாழ்க்கையில் பின்தங்கியே உள்ளார்கள் என்றும் மனம்விட்டுப் பேசக்கூட அவர்களால் முடியாமல் உள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், தாங்கள் முற்போக்கு சிந்தனையுடன் தான் வாழ்கிறோம் எனக் கூறிக்கொண்டு தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறினார். இதையடுத்து பலர் அங்கு மனம்விட்டுக் கதைத்தார்கள். இது அங்கு சமூகமளித்த பெண்களை உணர்வு¡£தியில் ஒன்றுகூட வைத்தது சிறப்பான அம்சமாக அமைந்தது.

அடுத்த நிகழ்ச்சியாக பெண்கள் சந்திப்பு மலர் 2002 இன் மீதான ஓர் வாசிப்பை §ஐர்மனியைச் சேர்ந்த சந்திரவதனா செய்யவிருப்பதை அறிவித்த நான், அதற்குமுன் இம் மலர் பற்றிய சில கருத்துக்களை எனது தலைமையுரையின் ஒரு பகுதியாகக் குறிப்பிட்டேன். பால்வினைத் தொழில் பற்றிய விடயங்களை கருப்பொருளாகக் கொண்டு இம் மலர் வெளிவந்துள்ளது. பால்வினைத் தொழில் என்ற சொல்லே எம்மில் பலருக்கு அலர்ஐ¢யை ஏற்படுத்தக்கூடியது. இது என்ன சாக்கடை, இந்த அசிங்கத்தை எழுதுவதன் மூலம் நாமும் கெட்டவர்கள் ஆகிவிடுவோமா என்ற பயமும் எம்மில் சிலருக்கு. ஒரு தலைப்பைத் தொ¢வு செய்து இதுபற்றி எழுதுங்கள் என வரையறுப்பது படைப்பாளியின் சுதந்திரத்தில் தலையிடுவது போன்றது என்றாலும், சமூகத்தில் நடைமுறையில் இருக்கும் பாலியல் சுரண்டல், சமப்பாலுறவு போன்ற விடயங்கள் ஏனைய சமூகங்களில் பேசப்படுவது போன்று தமிழ்பேசும் மக்களிடையே உரத்துப்பேசப்படுவதில்லை. பால்வினைத் தொழிலை பேசு பொருளாக்குவதன் மூலம் பெண்கள் மீது சமூகமும் அதனுடன் தொடர்புடைய சகல நிறுவனமயப் படுத்தபட்டவைகளும் எவ்வாறு அடக்குமுறையை திட்டமிட்டுப் பேணுகின்றன என்பதை நாம் வேறு ஒரு பா¢மாணத்தில் காணலாம். பெண்ணியம் பற்றிய பு¡¢தலில், உணர்தலில் பால்வினைத் தொழில் பற்றிய கருத்தோட்டத்தையும் வாதப்பிரதிவாதங்களையும் ஏற்படுத்த வேண்டிய தேவையின் அடிப்படையில் இதனை நாம் தொ¢வு செய்திருந்தோம் என தொகுப்பாளர்கள் கூறியுள்ளார்கள்.

<b>ஆனால் இப் பெண்கள் சந்திப்பு மலர் வெளிவந்தவுடன் பல ஆண்கள் தங்களது காழ்ப்புணர்ச்சிகளை கொட்டவும் தவறவில்லை. யாழ் இணையத்தில் தங்களது ஆணாதிக்கக் கருத்துக்களை வலுப்படுத்துவதற்காக பெண்கள் சந்திப்புமலரை கொச்சையாக எழுதியதும் மட்டுமல்லாமல், தங்களது சொந்தப் பெயர்களில் எழுத திராணியற்ற ஆண்கள் வேறு பெயர்களில் பெண்கள் சந்திப்பு மலரைப் பற்றி மிகக் கேவலமான முறையில் யாழ்.கொம்மில் 14 பக்கங்கள் வரை தங்களது காழ்ப்புணர்வுகளை கொட்டித்தீர்த்தனர். அதற்குப் பதிலடி கொடுத்து இளைஞனும், சந்திரவதனாவும் தமது கருத்துக்களை கூறியிருந்தனர். அம் மலரை கண்ணால்கூட பார்க்காமல், அதில் வந்த கட்டுரைகளை வாசிக்காமல் கருத்துச் சொல்ல வருமளவுக்கு ஆண் மேலாதிக்கச் சிந்தனை எழுத்துத் தர்மத்தையே மீறி செயற்பட வைத்தது. இதற்குத் துணைபோன இணையத்தளங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளாமைக்கு எனது வன்மையான கண்டனத்தைத் முன்வைத்தேன். இதன்பால் அபிப்பிராயம் தொ¢வித்த பலரும், இவர்களைப் போன்றவர்களை நாம் கணக்கில் எடுத்து விவாதிப்பதும் விமர்சிப்பதும் தேவையில்லாதது. இவர்கள் எல்லாவற்றுக்கும் மூக்கை நுழைப்பவர்கள். அதனால் இவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எமக்கு இல்லை எனவும் அத்துடன் சொந்தப் பெயர்களில் எழுதுவதை விடுத்து புனைபெயர்களின் பின்னால் ஒளிந்துகொள்வதே அவர்களது கருத்துகளின்மீதான திராணியற்ற தன்மையை வெளிப்படுத்துவதாகவும் கருத்துக்கள் கூறப்பட்டதுடன் யாழ்.கொம் மீது கண்டனமும் தொ¢விக்கப்பட்டது. </b>

இதைத் தொடர்ந்து இம் மலர் பற்றிய சந்திரவதனாவின் கட்டுரை வாசிக்கப்பட்டது. (இக் கட்டுரை கீழே இணைக்கப்பட்டுள்ளது)

பால்வினைத்தொழில் சம்பந்தமான தகவல்களைத் திரட்டும் இந்தக் கால கட்டத்தில் என்னால் வேறெதிலும் கவனம் செலுத்த முடியாதபடி மனசு ஏதோ ஒரு சோகத்தில் ஆழ்ந்து போயிருந்தது. இப்படியும் நடக்கிறதா..? இப்படியெல்லாம் சின்னஞ்சிறு சிறுமிகளும், பெண்களும் துயருறுகிறார்களா..? உலகம் இத்தனை ஏமாற்றுத்தனமும் நயவஞ்சகமும், சுயநலமும் நிறைந்ததா..? என்றெல்லாம் கேள்விகள் எனக்குள் எழுந்து கொண்டே இருந்தன. சில விடயங்களை நம்பவும் முடியாமல், நம்பித்தான் ஆக வேண்டும் என்ற நிலையில் உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் பால்வினைத் தொழிலுக்காகவும், பாலியல் துர்ப்பிரயோகத்துக்காகவும் பலிக்கடாக்கள் ஆக்கப்பட்ட பெண்களின் துயர்களை மனசை விட்டு அகற்றவும் முடியாமல்.. அவஸ்தைப்பட்டேன் என உணர்வைக் கொட்டியபடி தொடங்கிய அவா¢ன் விமர்சனம் எல்லோரையும் பாதிப்பதாக இருந்தது.

இதற்கு கருத்துச் சொன்ன பெண்கள், இப்படியான பிரச்சினைகள் எமது சமூகத்தினா¢டமும் இருக்கின்றது அதை மூடி மறைத்து வருகின்றனர் என்றும் சென்ற ஆண்டில் வவுனியாவில் ஒரு சிறுமி 65 வயது நிரம்பிய ஆணால் பாலியல் வன்முறைக்கு ஆளாகியதை ஒரு உதாரணமாகவும் அந்த ஆண் குற்றவாளிக்கு நீதிமன்றம் 1500 ரூபா அபராதமும் 6 மாதச் சிறைத்தண்டனையும் விதித்த மலினமான தண்டனை பற்றியும் பேசப்பட்டது. புலம்பெயர் தேசத்திலும்கூட நிகழ்ந்த இவ்வாறான வன்முறை பற்றியும் (குறிப்பாக பிரான்ஸ் இல் கொலைசெய்யப்பட்ட சிறுமி நிதர்சினி உதாரணமாக்கப்பட்டார்) கருத்துக்கள் பா¢மாறப்பட்டது. இந்தியா போன்ற நாடுகளில் பால்வினைத் தொழிலாளர்கள் உருவாக்கப்படுவதில் ஆட்கடத்தல் மூலமாக அதாவது சிறுமிகள் யுவதிகளைக் கடத்திச் சென்று பலவந்தமாக இத் தொழிலுக்கு உட்படுத்தி பின் அதிலிருந்து மீளமுடியாமல் ஆக்கிவிடுவதின் மூலமும் பால்வினைத் தொழிலாளர்கள் உருவாக்கப்படுவது பற்றியும் பேசப்பட்டன.

அடுத்த நிகழ்ச்சியாக நளாயினி "ஒரு பெண்ணின் எழுதுகோலுக்குப் பின்னால்" என்ற தலையங்கத்தில் உரையாடினார். அவர் கூறும்போது ஒரு ஆண் எழுத்தாளன் ஒரு பெண் எழுத்தாளரை விட எத்தனை தவறுகள் செய்தாலும் இந்த சமூகம் எதையுமே கூற தலைப்படாது என்றும் ஒரு பெண் எழுத்தளருக்கோ இச்சமூகம் எழுந்தமானமான விமர்சனங்களால் சந்தேகப் பார்வைகளால் மனம் நொந்து தற்கொலை செய்யுமளவுக்கு தள்ளிவிடுகின்றனர் என்றும் கூறினார். அத்தோடு ஆண் எழுத்தாளர்கள் எதை வேண்டுமானாலும் எழுதிவிட்டு போகலாம்ளூ அது கருத்தோடு நோக்கப்படும் விமர்சனம்ளூ அந்த ஆணையோ அல்லது அவனின் குடும்பத்தையோ சாடாது எழுத்தோடு மட்டுமே நின்று கொள்ளும். ஓரு ஆண் எழுத்தாளன் காதலை காமத்தை சமூக வரம்பு மீறலை எதையும் எழுதலாம். ஆனால் ஒரு பெண் எழுத்தாளர் இதையே காமத்தை காதலை ஏன் பாலியல் சம்பந்தமாக எழுதிவிட்டால் அவளே அதை செய்ததாக குற்றச்சாட்டு வைத்து, விமர்சனத்தை கூறி, மனஅழுத்தத்தை ஏற்படுத்தி, அவளை எழுதவிடமால் பண்ணிவிடுகிறார்கள் என தனது பல கருத்துக்களை முன்வைத்தார்.

கடைசி நிகழ்ச்சியாக அடுத்த பெண்கள் சந்திப்பு மலர்க் குழு தொ¢வுசெய்யப்பட்டதுடன், பெண்களின் பிரச்சினைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட குறுந் திரைப்படங்களான மத்தம்மா, மல்லி, து¡க்கம், ஆயி'¡, ராஐ¡ங்கத்தின் முடிவு ஆகிய படங்கள் காண்பிக்கப்பட்டன. .

இப் பெண்கள் சந்திப்பினால் என்ன பலன் ஏற்பட்டுவிடப் போகிறது. பெண்கள் சந்திப்பு மலர் தேவைதானா?? கவிதை, கட்டுரை, கதை, ஓவியம், விமர்சனங்களினால் என்ன நிகழ்ந்துவிடப்போகிறது?? இவைகளால் பெண்களின் பிரச்சினைகள் இல்லாமல் போய்விடுமா?? அல்லது பெண்ணு¡¢மை தான் கிடைத்துவிடுமா?? இவ்வாறான கேள்விகளோடு இச் சந்திப்பிலிருந்து சில பெண்கள் ஒதுங்கிக் கொண்டனர். காலம்காலமாக எழும் இப்படியான சலனங்களுக்கு விடைகளை அவர்கள் தமது தரப்பிலேயே தேடிக்கொள்ள வேண்டியிருப்பதால் அவை எந்த சமூகச் செயற்பாட்டையும் இல்லாமல் செய்துவிடுவதில்லை. பெண்கள் சந்திப்பும் அதன் தொடர்ச்சியைப் பேணிக் கொண்டு ஒக்ரோபர் 11ம் தேதியன்று சுவிஸில் ஆக்கபூர்வமாக நடந்துமுடிந்தது. அடுத்த பெண்கள் சந்திப்பு (2004 ம்ஆண்டு) பிரான்சில் நடைபெறவுள்ளது.

நன்றி: பதிவுகள்.கொம்


Reply
#3
பதிவுகள் இணையத்தளத்தில் வந்த கட்டுரைக்கான இணைப்பைத் தந்தமைக்கு முதற்கண் நளாயினி அக்காவிற்கு நன்றிகள். மேலே கட்டுரையில் மொத்த எழுத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள பந்தியைப் பற்றிய உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். அதாவது யாழ் இணையம் பற்றிய கருத்து அங்கே இடம்பெற்றுள்ளது. எனவே கள அங்கத்துவர்கள் ஆகிய நீங்கள் இது பற்றி நாகரீகமான முறையில் கருத்துக்களைப் பகிர்ந்தால் நன்றாக இருக்கும்.

விரைவில் எனது பதிலுடன்...


Reply
#4
இளைஞன்.. ஏதோ அட்டைப்படம், தொழில் பற்றி கருத்தாக்கும். கருத்துக்கூட அந்தத் தொழில் பற்றியதே. ஏதொ எழுதி முடிஞ்ச கதை. பிறகேன் புதுப்பிப்பான்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#5
ஆம். இவர்கள் பெண்ணியவாதிகள். அதையாரும் இங்கே மறுக்கவில்லை. ஆனால் தமிழரின் கலாச்சாரம்பற்றியும் அதில் தாலியினால் பெண்ணாணவள் சிறைப்படுத்தப்படுகிறாள் என்றும் மிக அழகாக குறிப்பிட்டுள்ளார்கள். தமிழரின் கலச்சாரம் இடைப்புகுத்தல் என்றால் அது ஏற்ருக்கொள்ளப்படக்கூய ஒன்றா?
தென்று தொட்டு சமயவரலாறுகள்மூலம் வழிவந்தது தமிழ் கலாச்சாரம். அதைகூறிய பெண்கள் எல்லோரும் ஏன் ஆண்கள் கருத்தெழுதினால் அவர் ஆணதிக்கம் கொண்டுகருத்தெழுதுறார் என்று கருதுகிறர்கள். அத்தோடு யாழ் களத்தில் நளாயினிக்கும் குருவிகளுக்கும் நடந்த கருத்துப் பரிமாறல் அதில் தவறுகள் சுட்டிக்காட்ப்பட்னவேதவிர யாழ்களத்தில் இருக்கும் எவரும் ஆணாதிக்கவாதிகள் இல்லை. இச்சந்திப்பு நன்மைபயிர்க கூடியதே பெண்கள் ஆணுக்கு நிகராக வளாச்சியடைவது நல்லதே ஆனால் இச்சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் யாரும் தாலி சுமக்காதவர்களா? பெண்ணியவாதம் பேசலாம் அதற்கு தடை போடமுடியாது ஆனால் கலாச்சாரம் கொச்சை படுத்தப்படுதல் தமிழராகிய ஆண் பெண் ஆகிய எம் எல்லோருக்குமே அது நன்றல்ல. சந்திரவதனா அவர்கள் சிந்திப்பது தவறல்ல பாலியல் வன்முறைகள் என்பதை சொல்லியிருக்கிறார் அறிந்து ஆரய்ந்து கடினாமாக முயற்சி செய்து அதனை நிறைவாக்கியிருக்கிறார் அது வரவேற்கத்தக்கது. அதற்காய் அவரை கண்டவர்கள் மாற்ரு நோக்கில் பார்தால் அதற்கானவிளக்தை கொடுங்கள். தவறல்ல ஆனால் அதையே பெண்தான் கூறுகிறள் என்றால் அது யார் தவறு. மனதில் எழுந்ததை கவிதைபோல் வரைவது வாழ்க்கைக்கு பொருந்தாது. அதற்காக இதனை எழுதிய நான் ஆணாதிக்கவதியல்ல. புலத்தில் வாழும் பெண்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை அறிந்து நன்மை என்ன தீமை என்ன என்பதை ஆராயுங்கள் அததைப்பற்றி எழுதுங்கள் அவர்களை திருத்துங்கள் நல்வழிகாட்ட முனையுங்கள்;. அதைவிடுத்து ஆணாதிக்கம் பற்றியும் ஆண்களுக்கு எதிராக சிந்திப்பதையும் நிறுத்துங்கள். பெண்விடுதலை என்பது மகத்தானது என்னைப் பெற்றவன் தாய் தாய்மைஎன்பதன் பொருள் உலகத்தில் தெய்வத்துக்கீடானது.
இறுதியாக நான் சொல்வது பொண் சுதந்திரம் வேண்டு மென்தற்காய் பெண்ணாக பிறந்தவள் தன்னிலை மறக்காமல் கட்டிய கணவனைவிட்டு இன்னெருவனோடு சேரமல் (இது ஒருவனுக்கு ஒருத்தி ஒருத்திக்கு ஒருவன்) என்பதற்கமையவே கலச்சாரம் என்பதை கட்டிக்காத்து வருங்காலத்து பெண்பிள்ளைகளை எமது கலச்சாரம் கட்டுக் கோப்புகளில் இருந்து பிரிக்காமல் நல்வளிக்கமைய யாரும் பெண்ணியவாதம் பேசுங்கள். அத்தோடு இதனை படிக்கும் பெண்கள் ஆணியவாதியின் கருத்து என்று இல்லாமல் பொறுமையுடன் கருத்தெழுதுங்கள் இது யாரையும் காள்ப்பணர்வுடன் நோக்கி வைக்கப்படவில்லை.
:twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted:
. . . . .
Reply
#6
இளைஞன் விளம்பரம் போதவில்லையா?
இன்னும் கேட்கிறீர்கள்.
Reply
#7
பெண்களும் மனிதர்களே ஆண்களும் மனிதர்களே...ஆணுக்கும் சிந்திக்கும் திறன் இருக்கிறது பெண்ணிற்கும் இருக்கிறது....கலாசார அடையாளங்கள் பெண்ணிற்கு மட்டுமானதல்ல ஆணுக்கும் உரியதே...அவை ஒரு இனத்தின் தனித்துவ வெளிப்பாட்டிற்கான அடையாளங்கள்....சுயநிர்ணயம் பேசும் காலத்தில் பெண்களுக்கு அது தெரியாதோ......! உங்களுக்கு தாலி போட்டால் திருமணமானவள் என்று பிரத்தியேகமாக காட்டுவதாகப்பட்டால் கழற்றி எறியுங்கள்....பதுக்கி வைத்திருக்கும் நகைகளை வாழ்விழந்த பெண்கள் மறுவாழ்வுக்கென கூட்டிய கூட்டத்திலேயே கொடுத்து ஒரு புரட்சி செய்திருக்கலாமே.....????!!

பாலியல் தொழிலுக்கு மரணதண்டனை கொடுக்கும் நாட்டில் வாழ்ந்தவர்கள் நாம் எமது சமூகத்துக்குள் அந்த விசக் காளான்கள் தேவையில்லை என்பதன் அர்த்தமே அது....புலத்தில் பெண்களும் ஆண்களும் எப்படி வாழ்கிறார்கள் என்பது எமக்குத் தேவையில்லை எமது சமூகத்தை தென் ஆபிரிக்க நிலைக்குள் தள்ள வேண்டாம் என்பதே எமது தாழ்மையான வேண்டுகோள்....! பாலியல் தொழிலுக்கு ஆதரவாகவா அல்லது எதிராகவா நீங்கள் சிந்திக்கிறீர்கள் என்பது புரியாத புதிராக இருக்கிறது...எது எப்படியோ பாலியல் தொழில் செய்யும் கீழ்த்தரமான நிலையில் உள்ள பெண்களைக் காப்பாற்ற வேண்டியது பெண்களின் கடமையே...வேண்டும் என்றால் இத்தொழிலுக்கு உதவியளிக்கும் ஆண்களை போட்டுத்தள்ள AK 47 வாங்க நாமே நிதி அளிக்க தயாராக இருகின்றோம்.....!
காரணம் இப்படியான ஆண்கள் பெண்களால் தான் தாயகத்தில் இன்று பாலியல் நோய்த் தாக்கம் அதிகரித்துள்ளது....அதைக் கட்டுப்படுத்துவதற்கு இதுவே மிகச் சிறந்த வழி போல் தெரிகிறது காரணம் சில பாலியல் நோய்களுக்கு இன்னும் மருந்துகளே கண்டுபிடிக்கப்படவில்லை.....!

சமூகத்தில் வாழும் பெண்களால் பெண்ணிற்கெழும் பிரச்சனைக்கு தீர்வு காண இப்படியான கலந்துரையாடல்கள் அவசியம்...ஆனால் <b>மனித சமூகக் கட்டமைப்புக்குள்</b> வாழும் பெண்கள் பிரச்சனையை பெண்களே ஆராய்ந்தால் அது வெறும் பொழுது போக்கம்சமே அன்றி வேறில்லை.....காரணம் சமூகத்தில் ஆணும் பெண்ணும் என்ற இரண்டு தரப்பு வாழ்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு பிரச்சனைகளுக்கு தீர்வு எட்டுவதில் உள்ள சுலபத்தை கருத்தில் எடுக்கக் கூட நாதியற்ற 'சிந்தனைவாதிகளுக்கு ' அவர்களுக்கான Chat இன் மூலம்......!

அடுத்து நண்பா இளைஞன்... தங்களின் சொந்தப் பெயர் இளைஞனோ...கட்டுரையில் அடிக்கடி வருகிறது...........அது சரி கண்ணை மூடிக் கொன்டு ஆதரவா எழுதினா அங்கு புனைபெயரும் தெரியாது தவறும் தெரியாது...... :wink:

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: Idea

:twisted: :roll: Idea <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
இளைஞன் Wrote:<b>நிகழ்வுகள்</b>
<b>சுவிஸ் பெண்கள் சந்திப்பு 2003! </b>
<b>ஒரு குறிப்பு! </b>
<b>றஞ்சி (சுவிஸ்)</b>


<b>ஆனால் இப் பெண்கள் சந்திப்பு மலர் வெளிவந்தவுடன் பல ஆண்கள் தங்களது காழ்ப்புணர்ச்சிகளை கொட்டவும் தவறவில்லை. யாழ் இணையத்தில் தங்களது ஆணாதிக்கக் கருத்துக்களை வலுப்படுத்துவதற்காக பெண்கள் சந்திப்புமலரை கொச்சையாக எழுதியதும் மட்டுமல்லாமல், தங்களது சொந்தப் பெயர்களில் எழுத திராணியற்ற ஆண்கள் வேறு பெயர்களில் பெண்கள் சந்திப்பு மலரைப் பற்றி மிகக் கேவலமான முறையில் யாழ்.கொம்மில் 14 பக்கங்கள் வரை தங்களது காழ்ப்புணர்வுகளை கொட்டித்தீர்த்தனர். அதற்குப் பதிலடி கொடுத்து இளைஞனும், சந்திரவதனாவும் தமது கருத்துக்களை கூறியிருந்தனர்.

நன்றி: பதிவுகள்.கொம்



அத்துடன் சொந்தப் பெயர்களில் எழுதுவதை விடுத்து புனைபெயர்களின் பின்னால் ஒளிந்துகொள்வதே அவர்களது கருத்துகளின்மீதான திராணியற்ற தன்மையை வெளிப்படுத்துவதாகவும் கருத்துக்கள் கூறப்பட்டதுடன் யாழ்.கொம் மீது கண்டனமும் தொ¢விக்கப்பட்டது. </b>




இளைஞன் உங்களுக்குத்தான் சொல்லப்பட்டிருக்கிறது.இனியாவது புனைபெயரில் எழுதாதீர்கள் ..பார்த்தீர்களா காப்பாற்ற பதிலடி கொடுக்கப்போய் உங்கள் கருத்துக்களே அதாவது புனைபெயரில் எழுதுபவர்களின் கருத்துக்கள் திராணியில்லாதவை என சொல்லப்பட்டிருக்கிறது..


தேவையா?
Reply
#9
யாழ்.கொம் மீது கண்டனமும் தொ¢விக்கப்பட்டது.


ஒருவர் தெரிவித்தாரா அல்லது எல்லோரும் தெரிவித்தார்களா??
Reply
#10
முதலில் கண்டனம் தெரிவித்தவர்கள் குடும்பத்தவரா.. அல்லது குடும்ப மாற்றிகளா? அறிய மிக மிக ஆவல்.
.
Reply
#11
நான் அப்பவே சொன்னான் அலை முல்லை குயில் புறா கிளி என்று பெயர் வைக்காதையுங்கோ என்று...கேட்டியளா?
Reply
#12
பெண்ணியம் தொடாபாக காலம்காலமாக நாம் உணர்ச்சி கொந்தளிக்கும் வகையில் வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்டு வருகின்றோம். இந்த வாதங்களின் பயணாக அல்லது அதுவும் ஒரு காரணமாக பெண்கள் தொடர்பான எமது கருத்துக்ளில் ஆரோக்கியமான மாற்றம் ஏற்பட்டுவருகின்றது. இருப்பினும் வளர்ந்து வரும் மனித அறிவின் வேகத்துக்கு நிகராக பெண்ணியம் தொடர்பான கருத்தியல் மாற்றத்தின் வேகம் குறைவாகவுள்ளது போன்றேதென்படுகின்றது.

எமது இனத்தைப் பொறுத்தவரையில்; நாம் பெண்களது உரிமை என்று சொன்னவுடன் தமிழ்க்கலாச்சாரம் என்று தொடங்கிவிடுகின்றோhம். (உண்மையில் கலாச்சாரம் என்ற சொல்லே தமிழ் இல்லையாம். பண்பாடுதானாம் சரியான சொல் அது ஒருபுறம் இருக்க) நாம் எமது பண்பாட்டை(கலாச்சாரம்) பெண்களில்தான் முற்றுமுழுதாகப் பார்க்க முனைகின்றோம். ஏனெனில் எமது சமுதாயம் ஆண்வழி சமூகம். அதாவது சமுதாயத்தின் கட்டமைப்பை தீர்மானிப்பவர்கள் ஆண்கள். (ஆணாதிக்க சமுதாயம் என்ற சொல் எமது நண்பர்கள் பலரை கடுமையாகப் பாதிக்கின்றது போலிருக்கின்றது எனவே இந்த ஆண்வழி என்ற சொற்தொடரையே பாவிக்கின்றேன்.) மனிதவாழ்க்கை நாகரிக வளர்ச்சிக்கேற்ப எமது விரிவாக்கம் அடையும்போது அதற்கேற்ப ஆண் தனது நடை உடை பாவனையில் மாற்றத்தை தானாகவே ஏற்படுத்திக் கொண்டான். அதனை எமது சமுதாயம் ஒன்றும் சொல்லாமலே ஏற்றுக்கொண்டது. ஆண் வேட்டியை மாற்றி காற்சட்டை அணிந்தபோதோ அல்லது திருமணத்தின் பின் மெட்டி கடுக்கன் என்பவற்றை அணிவதை நிறுத்தியபோதோ அது பெரிய தமிழ்பண்பாட்டுப்பிரச்சணையாக யாரும் கருதியதாக நான் அறியவில்லை. அதனில் எந்த தவறு இருப்பதாயும்; தெரியவில்லை. ஆனால் சிக்கல் எப்போது உருவெடுத்ததெனில் பெண்ணும் ஆணுக்கு நிகராக சமூகபொருளாதார செயற்பாடுகளில் இறங்கியபோது அவளும் பழைய பழக்கவழக்கங்களில் சிலவற்றை கழட்டிவைக்க வேண்டிய தேவையேற்பட்டபோது 'பண்பாட்டுக்கூச்சல்கள்' சற்றுப் பலமாகவே ஒலிக்கத்தொடங்கின. ஏனெனில் எமது சமுதாயம் ஆண்வழியானது. ஆண்தான் மாறும்போது அவனது பண்பாட்டு 'பிறழ்ச்சி' அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை அல்லது தெரிந்து கொள்ள விரும்பவில்லை. ஆனால் பெண்மாறும் போது அவனால் தனது இனத்தின் 'பண்பாடு பாழ்பட்டுப்" போவதைக் காணச் சகிக்க முடியவில்லை. எமது சமூகத்தில் கருத்தியலை உருவாக்குபவனும் ஆணாயிருப்பதனால் இப் "பண்பாட்டுச் சீரழிவுக்கு" எதிராக அவனால் பலமாகவே கூக்கிரலிட முடிந்தது முடிகின்றது. அணிகலன்களை அணிந்துதான் எமது பண்பாட்டை பேணவேண்டும் என்ற நிலையில் எமது பண்பாடு அவ்வளவு தரம் குறைந்ததாக இருப்பதாகத் தெரியவில்லை. எமது பண்பாடு என்பது எமது வாழ்க்கையை வளப்படுத்துவதாய் இருத்தல்வேண்டும். எமது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் எமது பழைய பழக்கவழக்கம்களை நாம் தொடர்ந்து பின்பற்றுவதனால் எந்தவொரு நன்மையும் எவருக்கும் கிட்டப்போவதில்லை.

உண்மையில் நாம் ஒவ்வொருவரும் எமது சமுதாயத்தால் வனையப்பட்டவர்கள். நாம் வாழ்ந்த சுற்றாடல் நாம் கற்ற புத்தகங்கள் பத்திரிகைகள் எமது சமயம் எல்லாம் எமது இப்போதைய கருத்தியலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த சுற்றாடல் என்ன சொன்னதோ அதனையே சரியென பற்றிப் பிடித்திருக்கின்றோம். அதற்கு மாறாக எம்மால் சிந்திக்க முடியவில்லை அல்லது முயலவில்லை. ஆண்களுக்குரிய சிக்கல் என்னவெனில் அவர்களுக்கு பெண்கள் அடிமைப்படுத்தப்படுத்தப்படுகின்றார்கள் என்பது தெரியாமல் இருப்பதுதான். பெண்கள் எப்படியான முறையில் காலம்காலமாக செயற்பட்டு வந்தார்களோ அதுவே இயற்கையின் நியதி என்று ஆண்கள் எண்ணுகின்றார்கள். எனவே பெண்களது உரிமைப் பிரச்சணை ஒருபெரிய விடயமாக அவர்களுக்குத் தெரியவில்லை. பெண் தனது உரிமைக்காக குரல் எழுப்பும்போது அது ஏதோ இயற்கைக்கு மாறான செயலாக அவர்கள் பார்க்கின்றார்கள். ஆண்கள் பெண்ணின் நிலையிலிருந்து அவள் தொடர்பான விடயங்களை அனுகினால் அவள் எப்படியான செக்கில் பிணைக்கப்பட்டிருக்கின்றாhள் என்பதை புரியக்கூடியதாக இருக்கும்.


"மாற்றம் என்பதே மாறாத ஒன்று" என்ற மாக்சின் தத்துவம். அதுபோல பெண்தொடர்பான ஆணின் சிந்தனையிலும் மாற்றம் ஏற்படவேண்டும். இல்லையேல் இயற்கைசுழற்சியில் எமது பண்பாடு காலத்திற்கொவ்வாததாய் கருதப்பட்டு எதிர்கால சந்ததியினரால் கைவிடப்படும் பேரபாயம் ஏற்படும்.
Reply
#13
தம்பி இளைஞன் மக்சிக்கன் சாப்பிட்டிருக்கிறார். அதுதான் கருத்து எழுதினாப்பிறகு இரகசியமா மாற்றங்கள் செய்திருக்கிறார். அதோடை தோஸ்து ஒண்டையும் கூட்டிவந்திருக்கிறார். எழுதிறவை கவனம். உங்களையும் சிக்கன் நகற்றாக்கி சாப்பிட்டிடுவார்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
ஒரு பெயரில் கருத்து எழுதத் திராணியில்லாத கோழைகள்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#14
மீண்டும் செவிடர் காதில் சங்கூதலா?
Reply
#15
திருவெம்பாவைக்கு இன்னும் சில மாதங்கள்தான் இருக்கின்றன. அப்போது ஊதுங்கள். ஏதாவது பயன் கிடைக்கும்.
Reply
#16
Mathivathanan Wrote:
kaattu Wrote:மீண்டும் செவிடர் காதில் சங்கூதலா?
ஒரு பெயரில் கருத்து எழுதத் திராணியில்லாத கோழைகள்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#17
அது சரி.. மதிவதனன் புனைபெயரா உண்மைப் பெயரா? தலைப்போடை 'சம்பந்தம்' இருக்கிறதால கேட்கிறன்.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
.
Reply
#18
Mathivathanan Wrote:ஒரு பெயரில் கருத்து எழுதத் திராணியில்லாத கோழைகள்.
sOliyAn Wrote:அது சரி.. மதிவதனன் புனைபெயரா உண்மைப் பெயரா? தலைப்போடை 'சம்பந்தம்' இருக்கிறதால கேட்கிறன்..
புனைபெயரோ.. உண்மைப் பெயரோ.. ஒரு பெயரில். இங்கு யன்னல்மயம்தான் பலரும்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#19
இன்று மேற்கில் ஆண்கள் தான் பெண் வன்முறைக்கெதிராகக் குரல் கொடுக்கின்றார்கள்...காரணம் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு ஆண்களும் காரணமாக இருக்கின்றார்கள் எனவே அதுவிடயத்தில் இது தொடர்பில் ஆண்களைத் தெளிவு படுத்த வேண்டியது சமூகத்தின் கட்டமைப்பாளன் எனும் வகையில் ஆணினதும் கடமை.....அன்று பாரதியும் இதைத் தான் அங்கு செய்தான்.....!
பெண் அடிமைத்தனம் என்பது பெண்களின் மனநிலை சம்பந்தப்பட்ட விடயம்...ஒரு பெண்ணிற்கு சுயமாக சிந்திக்கும் சக்தி என்றும் எப்போதும் இருந்தே வருகிறது...ஆண்கள் திணித்து ஒன்றை செய் என்றால் அதை சுயமாகச் சிந்தித்து நிராகரிக்கும் சக்தி பெண்ணிடம் இருக்கிறது.....!ஆனால் சமூகப்பண்பாட்டுக் கோலங்கள் என்பது சமூகத்தில் அடங்கும் ஆண் பெண் இருபாலாரின் சம்மதத்துடன் கடைப்பிடிக்கப்படும் வழிமுறைகள்....ஆண்கள் மேற்கு கலாசாரத்துக்குச் சொந்தமான நீளக் காற்சட்டை அணிகிறார்கள் என்றால் பெண்கள் கீழை மேலை என்று கலந்து அணிகிறார்களே அதைக் தாங்கள் காணவில்லையோ.....?! இது ஒன்றே போதும் எமது கலாசார சின்னங்களை மறந்து நாம் தூர விலகி செல்கிறோம் என்பதை நிரூபிப்பதற்கு....!

மேலும் பெண்கள் மீதான வன்முறை என்பது மட்டுமல்ல ஆண்கள் மீதான வன்முறையும் இன்று சமூகத்தில் காணப்படுகிறது...அது ஒரு சமூகப்பிரச்சனை....இன்று பல பெண்களால் அநியாயப் பழி சுமத்தல்களுக்கு உள்ளாகி தங்கள் சுதந்திர வாழ்வுரிமை இழந்த பல ஆண்களை எந்தச் சமூகத்திலும் காணலாம்.....ஆகவே அது தொடர்பில் பெண் விடுதலை என்று ஒரு கோசம் எழுமானால் அதே பலத்துடன் ஆணுக்கும் விடுதலைக்கான கோசம் இட தேவை இருக்கிறது...!ஆனால் எமது கருத்து அதுவல்ல...அது மட்டுமன்றி இயற்கைக்கு மாறான பொய்களை பிரச்சாரம் செய்வதால் அல்ல.....உதாரணத்துக்கு பெண் ஆணுக்குச் சமனான உடல் வலிமை மிக்கவள்...ஆண் சமன் பெண் இப்படிப்பலவும்....ஆண் சமன் பெண் என்றால் பெண்ணிற்குரிய தனித்துவங்கள் ஆணிடம் உண்டா....அல்லது மறுதலையும் உண்மையோ.....பெண்ணிற்கும் ஆணிற்கும் சமூகவியல் சமத்துவம் மற்றும் தேவையான உரிமைகள் என்பது அவசியம் அது எங்கும் வழங்கப்படே உள்ளது...அதை சரிவர இனங்காண்பதும் அனுபவிப்பதும் அவரவர்களின் சிந்தனைப் போக்கில் தங்கியுள்ளது....!

ஒரு தேசிய இனத்துக்கான கலாசார பண்பாட்டுச் சின்னங்களும் கோலங்களும் இழக்கப்படுகிறதென்றால் அதை இயலுமானவரை தடுப்பது அச் சமூகத்தை பிரதிபலிக்கும் ஆணினதும் பெண்ணினதும் கடமை...ஆண் ஒரு சின்னத்தை இழக்கிறான் என்றால் பெண் என்ன வாயா பார்த்துக் கொண்டிருந்தாள்...அவர்கள் அதை ஆண்களிடம் வலியுறுத்தி பாதுகாத்துக் கொள்ள வேண்டுமே தவிர.... நானும் எல்லாத்தையும் கழற்றி எறிகிறேன் என்றால்....உங்கள் பிரச்சாரத்தின் உண்மையான சமூகவியல் நோக்கம் என்ன.....??????!!!! நாம் சொல்கிறோம் தாலியும் தேவை ஆண்களிடம் அழிந்து போன அல்லது விடப்பட்ட சின்னங்கள் மீண்டும் வர வேண்டும் என்பதே...அதற்கு ஆண்கள் தயார் இல்லை என்றால் அந்த ஆண்கள் பெண்ணிடம் தாலியை அல்ல எந்தக் கலாசார பண்பாட்டு விழுமியத்தையும் எதிர்பார்க்க முடியாது.......!

நாம் புல்லானாலும் புரிசன் கல்லானாலும் கணவன் என்று பெண்களின் சிந்தனைக்கு மட்டும் வரம்புகட்ட விரும்பவில்லை...புல்லானாலும் புரிசன் என்றால் கல்லானாலும் மனைவி என்று ஆண்களுக்கும் சமூகத்தின் நீடித்த நலன் கருதி சமூக வரையறைகளை விதிக்கவே விரும்புகின்றோம்.....!

மீண்டும் சொல்கிறோம் பெண்ணை அடிமைகொள்வதல்ல எமது நோக்கம்.....பெண்ணும் ஆணும் சமூகத்தின் தனித்துவம் காத்து நியாயமான சமூகவியல் உரிமைகளைப் பகிர்ந்து வாழுதலையே கோரி நிற்கிறோம்....அது மட்டுமன்றி நீடித்த சமூக நலன் நோக்கியதாக...., சமூகக் காப்பு வரம்புகள் ஆணாலும் சரி பெண்ணாலும் சரி மீறப்படுவதையே எதிர்க்கிறோம்...! அப்படிச் செய்யவில்லை என்றால் தமிழரும் அவரது கலாசாரமும் இன்னும் சில நூற்றாண்டுகளில் காணாமல் போவதை நாம் தவிர்க்க முடியாது போகும்......!

அது மட்டுமன்றி வாழும் சூழலிற்கேற்ப நல்ல பண்பாட்டுக் கோலங்களை எமது கலாசார பண்பாட்டுச் சிதைவுகளுக்கு இடம் கொடமால் மற்றைய தேசிய இனங்களிடம் இருந்து உள்வாங்குதலும் நாம் எந்தச் சமூகத்துடனும் ஒற்றுமை பாராட்டி வாழ வழிசமைக்கும்.....! ஆனால் இங்கு சரியான தெளிவான நடைமுறைகளை ஆண்களும் பெண்களும் கடைப்பிடுக்க வேண்டும்....!

:twisted: Idea :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#20
sOliyAn Wrote:முதலில் கண்டனம் தெரிவித்தவர்கள் குடும்பத்தவரா.. அல்லது குடும்ப மாற்றிகளா? அறிய மிக மிக ஆவல்.

அதென்ன சோழியான் அண்ணா 'குடும்ப மாற்றிகள்' புதுச் சொல்லாக்கிடக்கு.....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)