Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
போரை ஆரம்பித்தது சிறீலங்கா அரசு
#21
திருகோணமலையில் அரச படைகளால் நடத்தப்படும் தாக்குதல்களால் உருவாகும் உயிர் உடமை அழிவுகள் இடம் பெயர்ந்துள்ள மக்கள் போன்ற அவலங்கள் ஏன் இன்னமும் ஒளிவடிவில் செய்திநிறுவனங்களை எட்டவில்லை?

மாறி மாறி அறிக்கைகள் காட்டமான அறிக்கைகள் என்று எழுத்தில் வெளியிடுவதை விட அங்குள்ள அவலத்தை ஒளிப்படத்தில் 5 நிமிடங்கள் காட்டினாலும் அதன் தாக்கம் பல மடங்கு.

சிறீலங்கா அரசின் பிரகடனப்படுத்தப்படாத வலிந்த தாக்குதலில் அப்பாவி மக்களுக்கு ஏற்பட்டிருக்கிற அழிவுகள் புகைப்படங்களாக கூட இன்னமும் வெளிவரவில்லை.

A9 பாதை மூடப்பட்டதால் அந்தரிக்கும் பயணிகள் பற்றி ஒரு படமாவது இணையத்தில் இதுவரை வந்திருக்கா?

கையில் தொழில்நுட்பத்தை வைத்துக் கொண்டு ஏன் இன்னமும் பழைய முறையில் எழுத்தில் மாத்திரம் நிலமையை விவரித்துவிட்டு நின்றுவிடுகிறார்கள்?

கொழும்புத் தாக்குதல் சேதங்களை முண்டியடித்துக் கொண்டு புகைப்படங்களாக பிரசுரிக்கும் வேகத்தில் ஒரு பங்காவது எமது பகுதியில் மக்களுக்கு கிடைக்கும் இழப்புக்களை அவலங்களை காட்ட... :roll:

தேசிய ஊடகங்கள் சிந்திப்பார்களா?
Reply
#22
hவவி:ஃஃறறற.ளயமெயவாi.உழஅஃiனெநஒ.pரி?ழிவழைnசிறீஉழஅ_உழவெநவெரூவயளமசிறீஎநைறரூனைசிறீ2737ரூஐவநஅனைசிறீ26

http://www.sankathi.com/index.php?option=c...=2737&Itemid=26
Summa Irupavan!
Reply
#23
நல்ல கேள்வி. நேற்றுக் உள்ளூர் பிபிசி செய்தி அறிக்கையில் இலங்கை சம்பந்தமாக காட்டப்பட்ட ஒளிப்படங்களில் ,திருகோணமலையில் கொல்லப் பட்ட சிங்கள விவசாயிகளின் மரணவீடும், விடுதலைப் புலிகளின் தற்கொடைதாரிகளின் அணிவகுப்பும்(இது முன்னர் எடுக்கப்பட்ட
படம்,முகத்தை மூடிய அணிவகுப்பு) காட்டப் பட்டது.

தமிழ் மக்கள் மேல் நிகழ்த்தப்பட வன்முறைகள் பற்றி எதுவித செய்தியும் இல்லை.தமிழ் ஊடகங்களில் கூட ஒரு படமும் கிடையாது.எமது ஊடகங்களில் கூட இல்லா விட்டால் மற்றய செய்தியாளர்கள் இவற்றை எங்கிருந்து பெறுவார்கள்.இவ்வாறான படங்களே மேற்குலகில் பொதுமக்களிடயே செய்திகள் பற்றிய அபிப்ராயத்தை ஏற்படுதுகின்றன.ஈற்றில் அரசியல்வாதிகளின் முடிவுகளுக்கும் இவை உளவியல் ரீதியில் தாக்கம் செலுத்துகின்றன.மிகவும் குறைந்த விலையில் டிஜிடல் கமராக்களை வாங்க முடியும்.பரந்து பட்ட ரீதியில் இவற்றை நிலை பெறச் செய்தால் எல்லா இடங்களிலும் படங்களை உடனடியாகவே எடுக்க முடியும் அல்லவா? மக்களின் அவலமே மேற்குலகில் தாக்கத்தைச் செலுத்தும்.இதனை வெகு லாவகமாக தற்போது சிங்கள அரசாங்கம் செய்கிறது.தமிழ் நெற்றில் இருந்தே இப்போது அனேகமான தமிழர் தரப்புச் செய்திகளை,மேற்குலக செய்தி நிறுவனங்கள் எடுகின்றன.ஆகவே தமிழ் நெற்றை நடதுபவர்கள் தங்கள் பிராந்திய செய்தியாளர்களுக்கு டிஜிடல் கமராக்களை கொடுத்து படங்கள இணயத் தளத்தில் போட்டால் இதனைச் ஓரளவு சரி செய்ய முடியும் என்று நினக்கிறேன்.
Reply
#24
சிங்களவர் மாண்டு போகும் போது கொடுக்கும் முக்கியத்துவம் தமிழர் மரணிக்கும் போது கொடுக்கப்படாதது வேதனை!!

படங்களை இணைப்புகளை அழுத்துவதன் மூலம் பார்வையிடலாம்.
http://www.yarl.com/forum/files/DSC09719.JPG
http://www.yarl.com/forum/files/DSC09720.JPG
http://www.yarl.com/forum/files/DSC09726.JPG
http://www.yarl.com/forum/files/DSC09729.JPG
http://www.yarl.com/forum/files/DSC09730.JPG

படங்கள் நன்றி: www.eelavision.com
[size=14] ' '
Reply
#25
நாங்கள் முதலில் படங்கள் எடுத்தால் தான் அவை போடப் படும்.மேற்குலக செய்தியாளர்கள் எல்லா இடத்திலேயும் போக முடியாது ,அனேகமா ஒருவரே கொழும்பில் இருப்பார், அவர் உள்ளூர் ஊடகங்களில் இருந்தே படங்களைப் பெற்றுப் போடுகின்றனர்.தொடர்பாடல் சம்பந்தமான பிரச்சினைகளை
களைய செல்லிடத் தொலைபேசியுடன் கூடிய கமராக்களிப் பாவிக்கலாம்.மக்களின் அவலங்களைச் சித்தரிக்கும் படங்களே மேற்குலகில் தாக்கம் செலுத்தும், இராணுவ ரீதியான படங்கள் அல்ல.இதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.இணயத்திலும் இப்படங்களை இலகுவாக எடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.இதற்கெனவே சில செய்திக் கழன்சியங்கள் இணயத்தில் இயங்குகின்றன.இவற்றிற்கு நங்கள் இலவசமாக இந்த ஒளிப் படங்களை வழங்கலாம்.
Reply
#26
ஆமாம். இப்படியான சந்தர்பங்களில் குறியீட்டு முத்திரை குறிக்கப்பட்டால் மற்றய செய்தி நிறுவனங்கள் அவற்றை எடுத்துப் போடாது. எனவே இப்போதைக்கு சிங்ள இனவாதத்தின் முகத்திரையை கிழிக்க வேண்டியது தான் முக்கியம்.

இதைப் பற்றிய செய்திகளை ஒவ்வொரு நாட்டில் உள்ளவர்களும் அவ்வவ் நாட்டு மொழிகளில் மொழி பெயர்த்து சேவை மனப்பாங்குடன் அனுப்பி வைத்தல் நல்லது. உடனே பலன் கிடைக்காவிட்டாலும் பிற்காலத்தில் அவர்களும் தமிழ்மக்களுக்கு உள்ள பிரச்சனைகளை உணருவார்கள்.

உண்மையில் இதை சேவை மனப்பான்மையில் செய்தால் தான் வெற்றி பெறமுடியும். தங்கள் பெயர்கள் வரவேண்டும் என்று எதிர்பார்த்து செய்தால் எதிர்பார்க்கும் பலன் கிடைக்காது
[size=14] ' '
Reply
#27
ம் தமிழ் நெற்காரர் இப்ப கொஞ்சம் படங்கள் போட்டிருகினம்.படம் இல்லாட்டி மற்றவ்ரகளிடம் இருந்து வாங்கியாவது போடவும்.
Reply
#28
பிபிசிக்கும் உங்களுக்கு கிடைக்கும் படங்கள்,வீடியோ என்பவற்றை நீங்கள் கீழ்க் காணும் மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.

Have you been affected by this story? Send us your comments and experiences using the form below.
You can send your pictures and video from Sri Lanka to yourpics@bbc.co.uk or text them to 07725 100 100.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asi...sia/4946730.stm
Reply
#29
http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கை முடிவுக்கு வந்துவிட்டதாக ஹன்சன் பௌயரிடம் சிறீலங்கா அறிவிப்பு.

http://www.eelampage.com/?cn=25793
புலிகள் மீது தாக்குதல்களும் தொடரும் யுத்த நிறுத்தமும் தொடரும் அமைச்சர் அனுர பிரயதர்சன யப்ப பத்திரிகையாளர் மகாநாட்டில் அறிவிப்பு. இதுவந்து 1983 கலவரத்தைப் பற்றி காமினிதிசனாயக்கா "இந்தக் கலவரத்தில் தமிழர்களைக் கொன்றவர்கள் யாரென்றால் சிங்களவர்கள், காப்பாற்றியவர்கள் யரென்றால் அதுவும் சிங்களவர்கள். இதிலிருந்து தமிழர்கள் ஒன்றை விளங்கிக் கொள்ளலாம், தமிழர்களை அழிக்கவோ காப்பாற்றவோ சிங்களவர்களால் தான் முடியும்." என்றமாதிரியல்லவா கிடக்கு.

http://www.thinakkural.com/news/2006/4/26/...ws_page1244.htm
தினக்குரல் செய்தியில் ஹன்சன் பொளயர் நேற்றிரவே 10 நாட்கள் தங்கியிருந்த பின்னர் நாடு திரும்பிவிட்டதாக கூறுகிறது.
Reply
#30
<b>எமது தலைமைப்பீடம் உத்தரவிட்டால் எதிரிக்குப் பேரழிவுதான்: சி.எழிலன் எச்சரிக்கை</b>

[புதன்கிழமை, 26 ஏப்ரல் 2006, 20:22 ஈழம்] [ச.விமலராஜா]

"எமது படையினர் தயார் நிலையில் உள்ளனர்.- எமது தலைமைப்பீடம் உத்தரவிட்டால் எதிரிக்கு பேரழிவுதான் ஏற்படும்" என்று விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் எச்சரித்துள்ளார்.


மூதூர் கிழக்கு நிலைமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில் எழிலன் இதைத் தெரிவித்தார்.

"சிறிலங்கா படையினரின் வான் தாக்குதல், ஆர்ட்டிலறித் தாக்குதல், பீரங்கிப் படகுத் தாக்குதல்களுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் இதுவரை பதில் தாக்குதல் நடத்தவில்லை. அமைதி முயற்சிகளைச் சீர்குலைக்க வேண்டாம் என்பதில் விடுதலைப் புலிகள் முனைப்புடன் உள்ளனர். இருப்பினும் எமது தலைமைப்பீடத்தின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம்" என்றார் எழிலன்.

இதனிடையே சிறிலங்கா படையினரால் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிய மூன்று தமிழர்களை மேலதிக சிகிச்சைக்காக அரசாங்க ஆக்கிரமிப்புப் பகுதிக்குக் கொண்டு செல்ல முயன்ற சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரை படையினர் தடுத்துள்ளனர். அவர்களுக்கு அனுமதி மறுத்துள்ள நிலையில் மூதூர் கிழக்கிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் எழிலன் கூறினார்.

சிறிலங்காவின் முப்படையினர் தாக்குதலில் செவ்வாய்க்கிழமை மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 27 பேர் படுகாயமடைந்துள்லதாகவும் எழிலன் மேலும் கூறினார்.

மூதூர் கிழக்கு கிராமங்கள் மீது இன்று புதன்கிழமை காலை 9.30 மணிக்கும் அதன் பின்னர் 11.50 மணிக்கும் விமானப் படை தாக்குதலும் ஆர்ட்டிலறித் தாக்குதலும் நடத்தப்பட்டதாகவும் எழிலன் தெரிவித்தார்.

கட்டைப்பறிச்சான் சிறிலங்கா இராணுவ சோதனைச் சாவடி செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி முதல் மூடப்படிருப்பதால் விடுதலைப் புலிகளின் பகுதிக்குள்ளோ அல்லது அப்பகுதியிலிருந்து வெளியேறவோ தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.


<b>நன்றி: புதினம்</b>
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#31
[size=18]புலிகள் எந்நேரமும் பாய்வர்!

நேற்று எமது செய்திகளின் பர்வையில் கூறப்பட்டது போன்று சிறிலங்கா அரசு தன்னுடைய இராணுவ நடவடிக்கையை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது. நேற்று காலையிலும் திருகோணமலையில் உள்ள விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் குண்டு வீச்சினையும் எறிகணைத் தாக்குதலையும் நடத்திய சிறிலங்கா அரசு நேற்று பிற்பகல் கண்காணிப்புக் குழுவிடம் தமது மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கை முடிவுற்றதாக தெரிவித்துள்ளது. ஆனால் விடுதலைப்புலிகள் தாக்கினால் மீண்டும் இராணுவ நடவடிக்கை தொடரும் என அறிவித்துள்ளது. இரண்டு நாட்களாக நடந்த இராணுவத் தாக்குதல்களில் 20இற்கு மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டும், 40இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

இந்த இராணுவ நடவடிக்கையின் நோக்கம் தமிழர்களை அச்சுறுத்துவதும் சிங்கள இனவாதிகளை திருப்திப்படுத்துவதும் ஆகும். ஆனால் அதே வேளை விடுதலைப்புலிகள் மீது நேரடியாக தாக்குதல் நடத்துவது தோல்வியில் முடிந்துவிடலாம் என்ற அச்சத்தில் பொதுமக்களின் வாழ்விடங்கள் மீது குண்டுமாரி பொழிந்துள்ளது. இதன் மூலம் விடுதலைப்புலிகளுடன் நேரடி மோதலைத் தவிர்த்தும், சிங்கள இனவாதிகளை திருப்திப்படுத்தியும் உள்ளது. ஆனால் இந்த மிலேச்சத்தனமான தாக்குதலுக்கான பதிலடியை சிறிலங்கா அரசு வரும் நாட்களில் பெறுவது தவிர்க்க முடியாத ஒன்று

இதே வேளை நாளை தற்பொழுது இலங்கைத்தீவில் நடந்து வரும் சம்பவங்கள் குறித்து விவாதிக்க நோர்வேயில் இணைத் தலைமை நாடுகளாகிய அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே, ஜப்பான் ஆகியன கூட உள்ளன. இந்தக் கூட்டத்தில் தாக்குதல்களை நிறுத்தும்படி இருதரப்பையும் கோரியும், கொழும்பில் நடந்த தற்கொலைத் தாக்குதலுக்கு விடுதலைப்புலிகளையும் கண்டித்து அறிக்கை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக சிறிலங்கா அரசு நடத்திவரும் தமிழர் மீதான தாக்குதலை எந்த ஒரு நாடும் இதுவரை கண்டிக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இது சிறிலங்கா அரசு திருகோணமலையில் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைக்கு மேற்குலகின் மறைமுகமான ஆசீர்வாதம் இருக்கின்றதா என்றும் சந்தேகிக்க வைக்கிறது.

எதுவாயிருப்பினும் சிறிலங்கா அரசு முன்னறிவித்தல் இன்றி வெளிப்படையாக தாக்குதலை மேற்கொண்டதன் மூலம் விடுதலைப்புலிகளுக்கும் அதற்கான உரிமையை வழங்கி உள்ளது. அந்த வகையில் விடுதலைப்புலிகள் யுத்தநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு 2 வாரங்களுக்கு முன்பே அறிவித்தல் எதையும் கொடுக்கத் தேவையில்லை. ஆகவே இனிமேல் சிறிலங்கா இராணுவம் நிம்மதியாக தூங்காது எந்த நேரமும் புலிகளின் பாய்ச்சலை எதிர்பார்த்திருக்க வேண்டியதுதான்.

- வெப்பிளம்
,
,
Reply
#32
உதவி வழங்கும் நாடுகளுக்கான இணைத்தலமை நாளை (28 சித்திரை) ஒஸ்லோவில் சந்திக்கவுள்ளனர். அவர்களது சந்திப்பின் முடிவில் அவர்கள் வெளியிடும் அறிக்கை ஜெனிவா-1 இற்கு பின்னர் புலிகளும் சிறீலங்கா அரச தரப்பும் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பது பற்றிய சர்வதேசத்தின் தீர்ப்பாக பார்க்கலாம்.
இந்த தீர்ப்பானது 4 ஆவது ஈழப்போரின் ஆரம்பத்தை தீர்மானிக்கப் போகிறது. அதாவது யுத்த நிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட 2 தரப்புக்களான சிறீலங்கா அரசையும் விடுதலைப் புலிகளையும் சமமாக வைத்து யுத்த நிறுத்த மீறல்களை பற்றி பக்கச்சார்பற்ற முறையில் நியாயமாக விமர்சித்து கண்டிக்கப்போகிறதா இல்லை இதுவரைகாலமும் நடந்து கொண்டது போல் யுத்திநிறுத்தம் மற்றும் சமாதானப் பேச்சுவார்த்தைக் அடிநாதமான சமநிலையைக் குளப்பி சிறீலங்கா அரச பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் முறையில் நடந்து கொள்ளப் போகின்றனரா?

யுத்த நிறுத்தம் என்பது இராணுவ வலுச் சமநிலையின் அடிப்படையில் உருவானது. அதன் அமுலாக்கல் சமாதான போச்சுக்களிற்;கான ஆரம்ப நிலை அத்தியாவசிய நம்பிக்கையை இரு தரப்பின் மீதும் பரஸ்பரம் கட்டியெழுப்ப உதவுகிறது.

சம உரிமையும் மதிப்பும் கொடுத்து புலிகளை உள்ளடக்காத உதவி வழங்கும் நாடுகளிற்கான முன்னோடிக் கூட்டம் (10 சித்திரை 2003) ஒன்றை அமெரிக்காவில் நடத்தியதன் மூலம் நோர்வே என்ற அனுசரனையாளர்கள் உட்பட சர்வதேச சமூகம் தமது முதலாவது தவறைவிட்டார்கள். 3 வருடப்பட்டறிவிற்கு பிறகாதல் தமது தவறுகளை உணர்ந்து தமது நடுநிலை பற்றிய நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சிப்பார்களா நாளை?

இது சர்வதேச சமூகத்திற்கான ஒரு இறுதிச் சந்தர்ப்பம்.
Reply
#33
<span style='color:red'>சிறிலங்கா அரச படைகளின் செயற்பாடுகள்: ஆசிய மனித உரிமை அமைப்பு கண்டனம்

திருகோணமலை படுகொலைச் சம்பவம் மற்றும் விமானக் குண்டு வீச்சுத் தாக்குதல்களில் சிறிலங்கா அரச படைகளின் செயற்பாடுகளை ஆசிய மனித உரிமை அமைப்பு வன்மையாகக் கண்டனம் செய்துள்ளது.


தாய்லாந்தின் பாங்காங்கை தலைமையிடமாகக் கொண்டு செயற்படும் ஃபோரம் ஏசியா என்ற மனித உரிமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசாங்கமும் வன்முறைகளை நிறுத்தி போரைத் தவிர்த்து உடனே பேச்சுக்களைத் தொடங்க வேண்டும்.

கொழும்புத் தாக்குதல் மற்றும் அதையடுத்து கிழக்குப் பகுதியில் நடத்தப்பட்ட விமானக் குண்டு வீச்சு உள்ளிட்ட இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைகள் குறித்து எமது அமைப்பு கவலை கொள்கிறது.

அனைத்து இலங்கை மக்களினது பாதுகாப்புக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் சிறிலங்கா அரசாங்கம் பொறுப்பானது. திருகோணமலையில் இம்மாதத்தின் தொடக்கத்தில் நடத்தப்பட்ட படுகொலைகளின் போது சிறிலங்கா அரச படைகளின் செயற்பாடானது கடும் கண்டனத்துக்குரியது.

இனப் படுகொலை நடந்து கொண்டிருக்கும் போது அதை அரச படைகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதானது முற்று முழுதாக ஏற்றுக்கொள்ள முடியாதது.

கொழும்புத் தாக்குதலையடுத்து பதில் நடவடிக்கையாக கிழக்குப் பகுதியில் விமானக் குண்டு வீச்சு மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியிருப்பது அரச படையினரின் தொடர்ச்சியான பழிவாங்கும் நடவடிக்கையாகும்.

கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதல்கள், சிங்களவர்கள் படுகொலைகள் மற்றும் தற்கொலைத் தாக்குதல்களுக்குக் காரணமாக கூறப்படுகிற தமிழீழ விடுதலைப் புலிகளையும் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

பதில் நடவடிக்கைகள் என்பது வன்முறையை அதிகரிக்கவே செய்யும். பிரச்சனைக்கு அமைதியான தீர்வை ஏற்படுத்தாது.

தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக விடுதலைப் புலிகள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று நம்பிக்கை கொண்டிருந்தால் அவர்கள் வன்முறையைக் கைவிட வேண்டும்.

சர்வதேச சமூகத்தினரால் சிறிலங்கா அரசாங்கம் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனில் மனித உரிமைகளை மதிக்க வேண்டும். குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபை உறுப்பினராக தனது வேட்பாளரை சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் அதனது அரச படைகளானது இன வேறுபாடின்றி அனைத்து மக்களையும் பாதுகாக்க வேண்டும். பாரபட்சத்தோடு பதில் நடவடிக்கை மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-புதினம்
[size=18]</span>
! ?
'' .. ?
! ?.
Reply
#34
[size=18]தொடரும் தமிழர் படுகொலை: சர்வதேச மன்னிப்புச் சபை கவலை
இலங்கையில் தொடர்ந்து தமிழர்கள் கொல்லப்படுவது குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை கவலை தெரிவித்துள்ளது.


சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் கடந்த இருவாரங்களாக வன்முறைகள் தொடரும் நிலையில் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை முழுமையாக மதிக்க வேண்டும்.

கொழும்பில் உள்ள இராணுவத் தலைமையகத்தில் ஏப்ரல் 25 ஆம் நாள் நடத்தப்பட்ட தாக்குதலில் படையினரும் பொதுமக்களும் கொல்லப்பட்டு இராணுவ தளபதி சரத் பொன்சேகா படுகாயமடைந்துள்ளார்.

இத்தாக்குதலுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் காரணம் என்று கூறப்படுகிறது.

இத்தற்கொலைத் தாக்குதல், அதற்குப் பதில் நடவடிக்கையாக சிறிலங்காவின் முப்படைகளும் இணைந்து திருகோணமலை மாவட்டத்தில் விமானக் குண்டுவீச்சு மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது பீரங்கித் தாக்குதல் மேற்கொள்வதானது மீண்டும் ஒரு முழு அளவிலான யுத்தத்துக்குத் திரும்புவதையே வெளிப்படுத்துகிறது.

இதன் விளைவாக இலங்கையில் பொதுமக்களின் மனித உரிமை மீறல்களுக்கு பேராபத்து ஏற்படும்.

திருகோணமலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள மூதூர் கிழக்கில் கடந்த இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட பதில் தாக்குதல்களில் குறைந்தபட்சம் 12 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருகோணமலை சந்தைப் பகுதியில் ஏப்ரல் 12 ஆம் நாள் நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து சிங்களவர்களால் 20 தமிழ் மற்றும் முஸ்லிம் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

பெரும் எண்ணிக்கையிலான வீடுகளும் வர்த்தக நிறுவனங்களும் நிர்மூலமாக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர். சிறிலங்கா அரச படையினர் பொதுமக்களை உரிய நேரத்தில் பாதுகாக்கத் தவறியமை தொடர்பில் கவலை கொள்கிறோம்.

கடந்த இருவார கால யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்களில் மொத்தம் 80 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மக்களுக்குத் துன்பமேற்படுவதைக் குறைக்கவும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை மதித்து நடக்கவும் அனைத்து தரப்பினரையும் சர்வதேச மன்னிப்புச் சபை கேட்டுக்கொள்கிறது. இருதரப்பு படையினரும் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதையோ பாகுபாடான தாக்குதல் மேற்கொள்வதையோ நிறுத்த வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை கேட்டுக்கொள்கிறது.
-புதினம்
! ?
'' .. ?
! ?.
Reply
#35
மூதூர் குண்டு வீச்சு போர் நிறுத்த மீறல் என்று போர் நிறுத்தக் கண்காணிப்புத்தலைவர் தெரிவித்தார் - சங்கதி
http://www.sankathi.com/index.php?option=c...=2759&Itemid=26
! ?
'' .. ?
! ?.
Reply
#36
[size=18]அரசாங்கத்தின் பதில் நடவடிக்கை ஆபத்தானது: வாசுதேவ நாணயக்கார

சிறிலங்கா அரசாங்கம் பதில் நடவடிக்கை மேற்கொண்டதாக அறிவித்தமை ஆபத்தானது என்று கொழும்பு மாநகர சபையின் ஆளும் கட்சி வேட்பாளர் வாசுதேவ நாணயக்கர குற்றம்சாட்டியுள்ளார்.


கொழும்பு மேயர் தேர்தலில் அரசாங்கத்தின் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பில் வேட்பாளராகப் போட்டியிடும் வாசுதேவ நாயணக்கார நேற்று வியாழக்கிழமை தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அவர் பேசியதாவது:

சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட பதில் தாக்குதல்கள் இந்த நாட்டை மிக மோசமான நிலைக்குக் கொண்டு சென்றுவிடும். இத்தகைய தாக்குதல்கள் மூலம் எதனையும் சாதிக்க முடியாது.

வடக்கு கிழக்கில் இத்தகைய போர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமாயின் கொழும்பில் அமைதியான சூழ்நிலை இல்லாது போய்விடும்.

கொழும்புக்குத் தேவையானது அமைதி என்பது வடக்கு கிழக்கைப் பொறுத்தது. நிரந்தரமான அமைதியை உருவாக்க தியாகத்துக்கு தயாராக உள்ளோம் என்றார் அவர்.

-புதினம்
! ?
'' .. ?
! ?.
Reply
#37
[size=18]திருகோணமலைப் பகுதியில் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு
இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் உல்ஃப்
ஹென்றிக்ஸன் இன்று திருகோணமலைப் பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு சென்று சேதங்களைப் பார்வையிட்டார்.

மூதூர் கிழக்குப் பிரதேசத்திற்குச் சென்ற போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழவினர் விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் மற்றும் புலிகளின் பிரதேச தளபதிகளையும் சந்தித்துப் பேசியுள்ளனர்.

மூதூரில் இந்தக் குழுவினர் அங்கு குண்டு வீச்சினால் பாதிக்கப்பட்ட தக்வா நகர் பகுதிகளைப் பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்துப் பேசியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கண்காணிப்புக் குழுவின் தலைவர் உடனடியாகவே கொழும்பு திரும்பியுள்ளார்.



இன்று வியாழக்கிழமை விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதி மீது வான் தாக்குதல்களோ, ராணுவத் தாக்குதல்களோ நடைபெற்றதாக தகவல் எதுவும் இல்லை.

போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுத் தலைவரின் பயணம் குறித்து கருத்து வெளியிட்ட கண்காணிப்புக் குழுவின் சார்பில் பேசவல்ல அதிகாரி ஹெலன் ஒலஃப்தோதிர், தற்போது சம்பூரில் குறிப்பாக நகர்ப்பகுதியில் நிலைமை வழமை நிலைக்குத் திரும்பிக் கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது. பல பள்ளி மாணவ மாணவியர் வழமை போல பள்ளிக்குச் சென்றனர் என்றார்.

மேலும் இந்தத் தாக்குதலினால் இடம் பெயர்ந்தோர் குறித்து பல்வேறு செய்திகள் வருகின்றன. கடற்கரையோரப் பகுதிகளில் இருந்து பலர் வெளியேறியுள்ளனர் என்று எங்களுக்குத் தெரிய வந்துள்ளது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அந்தப் பகுதியில் ரோந்து சுற்றி வருகிறது. நாற்பதாயிரத்திற்கும் அதிகமானோர் இடம் பெயர்ந்து விட்டனர் என விடுதலைப் புலிகளும், வேறு சில அமைப்புக்களும் கூறுவது கள நிலவரத்தை விட அதிகமாக மதீப்பீடு செய்யப்பட்டுள்ளது போலத் தெரிகிறது என்றார்.

இன்னொரு முக்கியமான விடயம் என்னவென்றால், நேற்று புதன்கிழமை அரசுத் தரப்பு கொழும்பில் நடத்திய பத்திரிகையாளர் கூட்டத்தில், மூதூர் பகுதியில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியாக தெரிவித்தது. ஆனால் அது உண்மையல்ல, நிச்சயமாக அது இலங்கைப் படையின் வான் தாக்குதல் தவறாகப் போனது என்பதை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுத் தலைவரால் உறுதி செய்ய முடிந்தது என்றும் கூறினார் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு அதிகாரி
-பி.பி.ஸி
! ?
'' .. ?
! ?.
Reply
#38
[size=18]சிறிலங்காவின் துப்பாக்கிச் சூட்டில்தான் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர்- புலிகள் காரணம் அல்ல: கண்காணிப்புக் குழு மூதூர் கிழக்கில் அரசாங்க ஆக்கிரமிப்பில் உள்ள வட்டம் கிராமத்தில் சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதலிலேயே நான்கு முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தவில்லை என்றும் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் உல்ப் ஹென்றிக்சன் தெரிவித்துள்ளார்.


சிறிலங்கா கடற்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் கடந்த புதன்கிழமை நடத்திய தாக்குதலினால் நான்கு முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாகவும் ஒன்பது பேர் படுகாயமடைந்ததாகவும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்திருந்ததை உல்ப் ஹென்றிக்சன் நிராகரித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைகளைக் குறிவைத்துத் தாக்குவதாகக் கூறி அப்பாவித் தமிழர்கள் மீது முப்படைகளைக் கொண்டு தாக்கிய கொடூரத்தை உல்ப் ஹென்றிக்சன் நேற்று நேரில் பார்வையிட்ட பின்னர் அவர் இதைத் தெரிவித்தார்.

"உயிரிழப்புக்களும் உடைமை இழப்புகளும் சிறிலங்கா இராணுவத்தினரது தாக்குதலினால்தான் நிகழ்ந்ததேயன்றி புதன்கிழமையன்று அரசாங்கம் கூறியது போல் விடுதலைப் புலிகளின் தாக்குதலால் அல்ல. சம்பவ இடங்களைப் பார்வையிட்ட உல்ப் ஹென்றிக்சன் இதை உறுதிப்படுத்தியதாக" கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் ஓல்ப்ஸ்டொட்டிரும் தெரிவித்துள்ளார்.

-புதினம்
! ?
'' .. ?
! ?.
Reply
#39
தமிழ் நாதத்தில் வந்த கட்டுரை

http://www.tamilnaatham.com/articles/2006_...sh/20060428.htm
! ?
'' .. ?
! ?.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)