Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குடும்பப்பெண் உண்மையில் விடுதலைகிடைக்காத அடிமையா?
#21
Quote:Karavai Paranee

கண்காணிப்பாளர்



Joined: 14 Apr 2003
Posts: 990


Posted: Today at 4:15 pm


திருமதி சந்திரிகா செல்வி ஜெயலலிதா இவர்கள் பெண்கள் இல்லையா ?


அட கடவுளே நான் எங்கை போய் முட்ட!! அவை வெறும் பொம்மைகள் அவையை முழுக்க முழுக்க ஆட்டுவிற்து அண்கள் தான், ஏன் அவைக்கு பக்கத்திலை காவலுக்கு நிக்கிறவை என்ன குடும்பி வைச்ச பெம்பிளையளே நிக்கினம்!! தமிழாக்கள் முழுக்க அடக்கப்படுகினம் ஆனால் கதிர்காமர் தமிழ் ஆள் தானே, அவர் உயர் பதவியில் இருந்தவர் தானே, அப்ப தமிழாக்கள் அடக்கப்படேல்லை என்டே சொல்லுறியள்?
Reply
#22
ஜெயலலிலதா ஆட்டாமல்தான் கருணாநிதி ஆடினவரா ?

நீங்களும் யதார்த்ததிற்கு வாருங்கள்.

இன்று இப்போதைய நிலையில் பெண்கள் அடக்ப்படுவது அடிமைப்படுத்தப்படுவது என்பது எல்லாமத் பொய் என்றே நான் சொல்லிக்கொள்வேன்.

இங்கேயே பார்த்துக்கொள்ளுங்கள். எத்தனை பெண்கள் சுதந்திரமாக கருத்து எழுதுகின்றார்கள். ஒரு சில பெண்கள் அடக்கப்படுவதையும் ஒரு சில ஆண்கள் அடக்கமுனைவதையும் வைத்துக்கொண்டு கருத்துக்கள் எழுத முடியாது. இன்று பெருன்பாண்மை பெண்கள்தான் முண்ணனியில் இருக்கின்றார்கள். எங்கு நோக்கினும் பெண்களின் வளர்ச்சிதான். அது வரவேற்பிற்குரியது.
[b] ?
Reply
#23
அப்ப இஞ்சை எழுதிறதை கூட அவையின்றை உரிமையில்லை, அவைக்கு நீங்கள் கொடுத்த சுதந்திரம், அட என்ன கொடுமை, அப்ப எங்களுக்கு இங்கை எழுத ஏதும் தடை முதல் இருந்ததே? பெண்கள் முன்னணியில் நிக்கிறார்கள், அது இது எண்டு நீங்கள் சொல்லுறது சரி ஆனால் அதனால் அவை விடுதலை பெற்று விடடினம் எண்டு நீங்கள் சொல்ல வாற தான் கொடுமை, மகா கொடுமை என்ன தெரியுமே அவையின்றை உரிமையை அவை பெற்றதை நீங்கள் பெரிசா சொல்லிக்காட்டிறீங்கள் பாத்தியளெ அதுவே கொடுமையாக தெரியவில்லை. ஒரு மனிதம் தான் செய்ய வேண்டயது மறுக்கப்பட்டு அது கிடைக்கும் போது அனுபவிப்பது யதார்த்தம். நீங்கள் எழுதலாம், பாடலாம், ஆடலாம், தண்ணியடிச்சுப்போட்டு பிரண்டு எழும்பலாம் அனால் அவை அந்த அந்த இடத்திலை இருக்க வேணும். அண்கள் உலகத்தில் தான் இன்னமும் பெண்கள் வாழ்கிறார்கள் என்பாதற்கு ஒரு சில உதாரணங்களளை நான் முதலிலேயே கூறினேன். அது புரியாவிட்டால் நான் ஒன்றும் செய்ய முடியாது. பெண்களுக்கு வோட்டு போடும் உரிமை கூட வெகு அண்மையில்தான் வந்தது. புரிந்தால் சரி!
Reply
#24
இப்ப கொஞ்சம் புரிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்கவேண்டும் என்று எண்ணும் நிலையே தவறானது. அவர்களுக்;கு எதையும் நாம் பெரியமனது செய்து கொடுக்கவேண்டியது இல்லை. அவர்களை சுதந்திரமாக விட்டுவிடவேண்டும். எல்லைகள் போட்டுவைக்கக்கூடாது. சரியாகத்தான் உள்ளது. மேற்கத்தேய நாகரிகத்தில் இப்படி பெண்கள் முழு சுதந்திரத்துடன் இருக்க ஓரளவு வாய்ப்புள்ளது என நினைக்கிறேன்.
Reply
#25
ஜெயலலிதாவை பொம்மை என்று சொல்வது ஏற்றுக்கொள்ளமுடியாது. அவரின் கீழ் அமைச்சாராக இருப்பவர்கள்தான் உண்மையில் பொம்மைகள்...

சந்திரிகாவைப்பற்றி அதிகம் தெரியாது. ஆனால் அவர் அமைச்சரவையில் உள்ள கதிர்காமர் சந்திரிகாசொன்னதைத்தான் பேசுவார். சுதந்திரமாக கருத்து சொல்லி இருந்தால் மிக நெருக்கமாக இருக்க முடியுமா? அமைச்சராகத்தான் இருக்க முடியுமா? தூக்கி வீசியிருக்கமாட்டாரா சந்திரிகா?
Reply
#26
யார் சொன்னார் ஆண் என்றால் தண்ணி அடிக்கலாம் தம் அடிக்கலாம்.... என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் என்று...அது உங்கள் கற்பனையில் நீங்கள் எடுக்கும் தான்றோன்றித்தனமான முடிவு....இப்படி முடிவெடுக்கும் பெண்களும் பலர் உண்டு....!

சமூகம் என்ற கட்டமைப்புக்குள் ஆணும் பெண்ணும் மனிதன் என்ற வகையில் சட்டத்தால் தான் ஆளப்படுகிறார்களே தவிர ஆண்களால் அல்ல...அதே சட்டங்கள் ஆண்களை ஆள்வதுடன் சில சமயங்களில் சட்டங்கள் பாரபட்சமான முறையில் ஆண்கள் மீது வலிந்து கூட திணிக்கப்படுகின்றன...எத்தனையோ தீர்ப்புக்களில் பெண் என்பதற்காக மரணதண்டனை கூட விலக்களிக்கப்பட்டுள்ளது...பெண் என்பதற்காக அவள் உழைத்தால் கூட விவாகரத்தின் போது கணவன் தான் பிள்ளைகளை பராமரிக்க பணம் கொடுக்க வேண்டும் தனது சொத்துக் கொடுக்க வேண்டும்...ஏன்...பெண்கள் ஆண்களுக்குக் கொடுத்தால் என்ன...ஆண்களுக்குப் பிள்ளை பராமரிக்கத் தெரியாதோ என்ன....?????! அல்லது ஆண் மட்டும்தான் பிள்ளைகள் தோன்றக்காரணமா...பெண்ணின் 50 வீதப்பங்களிப்பு என்னானது......!இப்படிப் பல உதாரணங்கள் காட்டலாம்.........!ஏன்.... ஆண்களைக் கொலை செய்யும் பெண் குற்றவாளிகள் இல்லையா...இலங்கை அரசாட்சி வரலாற்றிலேயே பெண்களால் அழிக்கப்பட்ட அரசர்கள் தான் அதிகம்....பெண் கொள்ளையர்கள்...போதைப் பொருள் கடத்துவோர் இல்லையா...பெண்களை வைத்து பெண்களே செய்யும் பால்வினைத் தொழில் உலகில் நடக்கவில்லையா.....கலாசாரத்துக்கு பெயர் போன பாரத நாட்டில் அந்தக் கொடுமைதான் அதிகமாமே.....இப்படி எல்லாக் கொடுமைகளையும் குற்றங்களையும் பெண்களே ஆண் குற்றவாளிகளுக்கு நிகராகச் செய்து கொண்டு சமூகத்துக்கு மட்டும் ஆண் ஆதிக்கம் என்ற தோற்றப்பாடு காட்டுவதற்குக் காரணம் ஆண்கள் உடற்பலமானவர்கள் எனவே தாங்கள் அவர்களால் அச்சுறுத்தபப்ட்டு முடக்கப்பட்டு விடுவோமோ என்ற பயத்திலும் தம் இயலாமைகளை மறைக்கவுமே......!

எது எப்படியோ குற்றவாளிகள் அது ஆண்களானால் என்ன பெண்கள் ஆனால் என்ன சமூகத்தின் பாதுகாப்பு, மனித இனத்தின் பாதுகாப்புப் பொருட்டு தண்டிக்கப்பட வேண்டும் அங்கு பாரபட்டசம் இருக்கக் கூடாது.....!

முன்னர் போன்றன்றி இப்போ மனித உரிமைகளும் சட்டங்களும் நன்கு தெளிவாக வரையப்பட்டு ஆண்களும் பெண்களும் சமத்துவத்துடன் உரிமைகளைப் பகிர வழியும் பாதுகாப்பும் செய்யப்பட்டுள்ளது அதற்கு மேலதிகமாக பெண் என்பதற்காக விசேட சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளது...! இதற்கு மேலதிகமாக என்ன வேண்டும்...?????! பெண்கள் என்பதற்காக ஆண்கள் எல்லாம் இழிச்ச வாயர்களாக வாய்பாத்துக் கொண்டிருக்க வேண்டும்...... நாங்கள்(பெண்கள்) திறமைகளுக்கு இடம் தராமல் முன்னேற வேண்டும் அதுவா எதிர்பார்க்கப்படுகிறது....'பெண்விடுதலை'யின் உண்மையான இன்றைய நிலை என்ன வென்றால் போட்டி கூடிய சமூகத்தில் பெண்கள் போட்டிக்கு முகங்கொடுக்க தயங்குவதும் அதில் இருந்து தப்புவதற்காக இழகுவான மாற்று வழி தேடுவதும்தான்......!

அதன் ஒரு நிலைதான் ஆண்கள் மீது வீண் பழிசுமத்தி அவர்களை முடங்கச் செய்து தங்களை திறமைக்கப்பால் வளர்த்துக் கொள்வது....இதற்கு ஆண்கள் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை...அதேவேளை பெண்கள் மீதான ஆண் குற்றவாளிகளின் வன்முறைக்கும் அவர்கள் இடமளிக்கப் போவதில்லை....! அதே போல் ஆண்கள் மீதான பெண் குற்றவாளிகளின் வன்முறைக்கும் இடமளிக்கப்போவதில்லை....!

உலக சனத்தொகையில் பெண்களின் அதிகரிப்பும் அவர்கள் அதிக துறைகளில் தம்மை ஈடுபடுத்த வழி செய்வதுடன் பெண்கள் நுழைந்தபிந்தான் அதிக துறைகளில் நிர்வாகச் சீர்கேடுகளும் இடம்பெறுகின்றனவாம்....! எங்கும் குழப்பம் விளைவிக்கும் கூட்டங்களோ பெண்கள்....சந்திரிக்கா ஜெயலலிதா போல.....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#27
சமுதாயத்தில் சில கட்டுப்பாடுகள், விதிகள் உள்ளன. பெண்களுக்கும் ஏன் ஆண்களுக்கும் தான் உள்ளன. இந்தக்கட்டுப்பாடுகள் தான் காலப்போக்கில் அடிமைத்தனமாக எண்ணும் அளவு வளர்ந்து இருக்கவேண்டும் என எண்;ணுகின்றேன். இத்தகைய கட்டுப்பாடுகள் பொதுவுhக சமுதாயத்தில் வலியவர்களுக்கு சாதகமாகவும் இளைத்தோருக்கு பாதகமாகவும் மாறிப்போயிருக்கக்கூடும்.காலப்போக்கில் இது மெலியோரான பெண்களுக்கு பாதகமாகியிருக்கலாம்.

சரி ஒரு செய்தி உங்களில் பலருக்கு தெரிந்து இருக்கலாம் சில ஆபிரிக்க நாடுகளில் ஏன் இந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தில் கூட குடும்பத்தலைமைப்போறுப்பு பெண்ணுக்குத்தான். அனுபவம் மிக்க ஒரளவுவயதான ஒரு பெண்தான் எல்லா முடிவுகளையும் எடுக்கிறாள். அத்தகைய குடும்பங்களில் பெண்அடிமைத்தனம், ஆணடிமைத்தனம் இருக்கிறதா தெரியவில்லை.
Reply
#28
50:50 தான்
Reply
#29
Quote:
Mohamad Wrote:
தமிழாக்களுக்கு சிங்கள அரசாங்கம் கொடுத்த சலுகைகள் மாதிரிதான். சலுகைகளையும் உரிமையைம் போட்டு குழப்பும் உம் போன்ற ஆணாதிக்க வாதிகள் இந்த பூமில் இருக்கும் வரை பெண்கள் அடக்கப்பட்டுக்கொண்டே இருப்பார்ள். விதண்டாவாதம் கதைக்கிறதை விட்டு விட்டு யாதார்தத்தை கதைத்தல் பதில் இல்லை ? நீரே உம்முடன் பேசிக்கொள்ளும்! நி;ங்கள் வெறும் ஆணாதிக்க வாதிகள் மட்டுமல்ல ஆணவவாதிகளும் கூட!!!!


அட அப்படிப் போடுங்க முகமட் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
தமிழனுக்கு சீனியும் மாவும் தொலைபேசியும் மின்சாரமும் அனுப்பிப்போட்டு தமிழன் பிரச்சனை தீர்த்தாச்சு என்று சிங்களவன் சொன்னமாதிரியல்லே கிடக்கு எங்கட சனத்தின்ட கதை
Reply
#30
aathipan Wrote:இப்ப கொஞ்சம் புரிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்கவேண்டும் என்று எண்ணும் நிலையே தவறானது. அவர்களுக்;கு எதையும் நாம் பெரியமனது செய்து கொடுக்கவேண்டியது இல்லை. அவர்களை சுதந்திரமாக விட்டுவிடவேண்டும். எல்லைகள் போட்டுவைக்கக்கூடாது. சரியாகத்தான் உள்ளது. மேற்கத்தேய நாகரிகத்தில் இப்படி பெண்கள் முழு சுதந்திரத்துடன் இருக்க ஓரளவு வாய்ப்புள்ளது என நினைக்கிறேன்.

ஆதிபன் சொல்வது சரி. Arrow
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#31
குருவி நீர் எந்த உலகத்திலை இருக்கிறீர்?
நீர் இப்படி எழுதியிருக்கிறீர்.
பெண் என்பதற்காக அவள் உழைத்தால் கூட விவாகரத்தின் போது கணவன் தான் பிள்ளைகளை பராமரிக்க பணம் கொடுக்க வேண்டும் தனது சொத்துக் கொடுக்க வேண்டும்...ஏன்...பெண்கள் ஆண்களுக்குக் கொடுத்தால் என்ன...ஆண்களுக்குப் பிள்ளை பராமரிக்கத் தெரியாதோ என்ன....?????!
விவாகரத்தின் போது கணவன் மனைவி இருவரில் யார் கூட உழைக்கிறாரோ அவர்தான் மற்றவருக்குப் பணம் குடுக்க வேணும். இந்தச் சட்டம் உமக்குத் தெரியாதோ?
Reply
#32
பரணி நீர் இப்பிடி எழுதியிருக்கிறீர்-
இன்று எத்தனையோ பெண்கள் மிகப்பெரிய நிலையில் இருக்கின்றார்கள். இவர்கள் அவ்வாறு இருப்பதற்கு முக்கிய காரணம் அவர்களின் பின்புலத்தில் கணவனோ தந்தையோ வழங்கிய சுதந்திரம். அதை கவனத்தில் எடுத்துக்கொண்டால் பெண்ணடிமை ஆணாதிக்கம் என்ற பதங்கள் தேவையில்லாத ஓன்று.

இவர்களை எல்லாம் இப்படியான சுதந்திர போக்குடன் விட்டுக்கொடுத்தமைக்கு அவர்களைச்சார்ந்த ஆண்களிற்கு முதலில் பாராட்டவேண்டும்.

அவர்களின் மீது அடிமைத்தனம் ஆளுமை அடக்குமறை பிரயோகிக்கப்பட்டிருந்தால் அவர்களால் எப்படி இவ்வளவு சுதந்திரமாக எழுதமுடிகின்றது. அதை ஒருகணம் அவர்களே சிந்தித்துக்கொள்ளட்டும்.

தாயகத்தில் பார்த்தோமேயானால் பெண்கள் வேலைக்குப்போகின்றார்கள். பல்கலைக்கழகப்படிப்பிற்கும் சரி வேறு எந்த துறையிலும் பெண்கள்தான் முன்னணி வகிக்கின்றார்கள். இதனுடன் ஓப்பிடும்போது இன்றிய பெண்ணிய சிந்தனையாளர்கள் கத்திக்கூச்சிலிடும் அளவிற்கு பெண்ணடிமையோ ஆணாதிக்கமோ இல்லை. எந்த ஒரு பெண்ணும் இன்று முன்னிலையில் இருப்பதற்கு அவளின் பின்னால் ஒரு தந்தையோ கணவனோ தமையனோ தனயனோ காரணமாக இருப்பான். ஆவளிற்கான சுதந்திரத்தை அவன்தான் கொடுத்திருப்பான். அப்படி வழங்காத பட்சத்தில் அவளால் எப்படி இந்தளவிற்கு வளர்ந்திருக்ககூடும் என சற்று சிந்தித்துப்பாருங்கள்.


எனக்கு வாசிக்கவே புல்லரிக்குது.

பெண்களுக்கு இயல்பிலை ஒண்டுமே இல்லை. அவையள் பல்கலைக்கழகத்திலை படிக்கிறது... எழுதிறது.. இப்பüடி எல்லாக் கெட்டித்தனத்துக்கும் காரணம் ஆண்கள் குடுக்கிற சுதந்திரம்தான். அடடா...! என்ன அருமையான கண்டுபிடிப்பு.
Reply
#33
வாங்கோ காற்று
வணக்கம்

நீங்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை. பெண்களிற்கு இயல்பில் இல்லையென்று நான் சொல்லவில்லையே !

பெண்களை ஆண்கள் கட்டுப்படுத்துகின்றார்கள். அடிமைத்தனம் செய்கின்றார்கள் அடக்கியாள்கின்றார்கள் என்பதற்கு இல்லை என்று காட்டத்தான் அந்த கருத்து வைத்துள்ளேன். அப்படி அடக்கியிருந்தாலோ அடிமைத்தனம் செய்திருந்தாலோ இன்று எந்தவொரு பெண்ணும் படிக்கவோ எழுதவோ எதுவுமே செய்யமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருப்பாள்.

Quote:பெண்களுக்கு இயல்பிலை ஒண்டுமே இல்லை. அவையள் பல்கலைக்கழகத்திலை படிக்கிறது... எழுதிறது.. இப்பüடி எல்லாக் கெட்டித்தனத்துக்கும் காரணம் ஆண்கள் குடுக்கிற சுதந்திரம்தான். அடடா...! என்ன அருமையான கண்டுபிடிப்பு
[b] ?
Reply
#34
காத்து... நீங்கள் எந்தச் சட்டத்திக்கு கீழ அலசுறியள்...ஆங்கிலேயச் சட்டம்...உரோமன் டச்சுச் சட்டம்...கண்டியச் சட்டம்...தேச வழமைச் சட்டம்...சர்வதேசச் சட்டம்....எதுக்க எண்டு தெளிவாச் சொல்லுங்கோ.....சும்மா இருக்கிற சாள்ஸ்சே பிள்ளைகளையும் வைத்துக் கொண்டு டயனாவுக்கு தாரைவாத்தது எந்தச் சட்டத்துக்கு கீழப் பாருங்கோ...சனத் ஜெயசூரியாவைப் பாருங்கோ விமானப் பணிப்பெண்..நல்ல பணக்காறி...காசுக்கு லவ் பண்ணி கடைசியில இந்தாள் சம்பாத்தித்ததுகள பிடிங்கிக் கொண்டு ஓடிவிட்டாள்....ஏன் வெள்ளைப் பொடியள் கலியாணம் எண்டால் ஓடுறாங்கள் காரணம்....கையெழுத்து வைச்சாப் போதும் கைவிலங்குதான்.... சொத்தும் இல்லாமல் உழைப்பும் இல்லாமல் பிச்சைதான் எடுக்க வேண்டும்....அதுதான்.....அவங்கள் செய்யிறத்திற்கு அவங்கள் நியாயம் சொல்லுறாங்கள்....எல்லாம்... பெண்களுக்கு வழங்கப்பட்ட அதிக சலுகைகள் தான் சமூகம் சீர்கெடவும் சில சமயத்தில காரணமா இருக்குது.....!

அங்க எங்க 50:50 இருக்கு, பெண்களுக்கு : ஆண்கள் (சலுகைகளில்) = 90:10 அப்படி எண்டும் சொல்ல முடியாத அளவில எல்லோ இருக்கு.....நாங்கள் எங்க போய் முட்ட....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#35
எங்iகாயவது முட்டி ஒரு முடிவுக்கு வாங்கோ குருவி. திரும்பத் திரும்ப உங்கள் பல்லவியைச் சொல்லிச் சொல்லியே காலம் போகுது.

டயானாவையோ அல்லது காசுக்குக் கைமாற்றும் புத்தியுள்ளவர்களையோ இங்கு பெண்ணியத்தினுள் புகுத்தி உங்கடை விவாதத்திறனை நல்லாத்தான் காட்டுறியள்.

பரணி !
யாரும் பெண்ணுக்கென்ன ஆணுக்கென்ன அவரவர் உரிமையைப் பிச்சை போட முடியாது. இதென்ன வானொலி விவாதமா ? பெண்விடுதலை எடுக்கப்படவேணுமா கொடுக்கப்படவேணுமா ? என ஆணையும் பெண்ணையும் கருத்து மோதல்செய்வித்து நிகழ்ச்சியை நெறிப்படுத்த. யதார்த்தத்தையும் அதன் உண்மைகளையும் புரிந்து கொள்ளுங்கள். இது கண்ணே மணியே எனப்பெண்ணைப் புழுகும் தலைப்பும் அல்ல. ஒரு சமூகத்தின் பிரச்சனையை தமக்கேற்ற விதத்தில் விவாதம் செய்வதே இன்றைய விதியாய் இருக்கிறது.

இது தொடர்பாக நிறைய எழுதலாம் நேரம் போதவில்லை.
Reply
#36
நீங்கள் அனைவரும் குறிப்பாக உந்த குருவியும், பரணியும் கதைக்கும் வாதங்கள் அடிமைத்தனம் என்பதை அறியாது பேசும் நியாயங்கள். இன்று வரை பெண்கள் மனித சமுதாயத்தில் இராண்டாந்தர பிரஜைகள் தான். நீஙகள் என்ன சொல்லி மறுத்தாலும் உலகில் உள்ள மனிதம் ஏற்றுக்கொண்ட உண்மை அது. அதனால்தான் இன்று அதை நிவர்த்தி செய்ய வெறும் சலுகைகளை மட்டும் கொடுத்து விட்டு பெண்களுக்கு விடுதலை கிடைத்து விட்டது என்று உங்களை போன்றவர்கள் புலம்புகிறீர்கள். பெண் விடுதலை என்றால் நீஙகள் நினைப்பது போல் Nவுலைக்கு போவது, படிப்பது, அரசதலைமையில் இருபப்பது போன்ற விடயங்கள் அல்ல. இன்று பெண்களை சுயமாக கூட சிந்திக்க விடாது தடுப்பது இந்த ஆண் வரக்கமே. அட உங்கடை வீட்டிலை எடுத்துக்கொள்ளுங்கள். பெண் என்றால் அடக்க ஒடக்கமாக இருக்க வேண்டும், பொம்பளை சிரிச்சா போச்சு, நீ பொம்பிளைப்பிள்ளை (இங்கோ பிள்ளை என்பதே அவர்களை சின்னவர்கள், அறிவில் குன்றியவர்கள் என்பதை பொருட்படுத்தும் பதங்கள்) நீ கவனமாக இருக்க வேண்டும் என்று இன்னமுமு; சொல்வதை தயவு செய்து மறுக்க வேண்டாம். ஒரு பெண் குழந்தை பிறந்தால் அதற்கு சமைக்கும் உபகரணங்கள், பிள்ளை தள்ளும் வண்டில்கள் போன்ற வற்றை அந்த குழந்தைகளுக்கு சின்ன வயசில் கொடுப்பது கூட அவர்கள் அதறகு மட்டும் லயக்கானவர்கள் என்பதை நிலை நிறுத்தவே. ஆண் என்றால் வீரம், எனவே கார், துவக்கு போன்ற விழையாட்டுப் பொருட்களை வாங்கி கொடுப்பதுpல் கூட நமது பக்க சார்பு இருப்பதை காண முடியவி;ல்லையா? நமது சமுதாயத்தல் குழந்தை பிறந்ததும் அதன் முழுப் பொறுப்பும் பெண் தலையில் விழுவதை நீங்கள் காணவில்லையா? நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு விதண்டாவாதம் கதைக்கிறீங்கள் சிங்கள பேரின வாதிகள் போல.. உங்களுடன் கதைத்து பிரியோசனம் இல்லை, ஆனால் விழித்தெழுந்த பெண்கள் உங்களை சுட்டெரிப்பதை பாரக்க முடியாது நீங்கள் தத்துவம் பேசுகிறீர்கள். பாவம் உங்களை குறை சொல்ல முடியாது, உங்களிற்கள் இருக்கும் அந்த ஆண் என்ற ஆதிக்கத்தையும் ஆணவத்தையும்; தான் குறை சொல்ல முடியும். இப்படி எல்லாம் பேசுவதால் நான் ஒரு பெண்ணிய வாதியாக முடியாதுஈ காரணம் எனது பிற்போக்கு சமுதாயம் எனக் கூட்டி வழர்த்த ஆணாதிக்க வேர்கள் இன்னமும் உயிருடன் தான் இருக்கிறது. இதை எந்த ஆணும் மறுக்க முடியாது!
Reply
#37
இஞ்ச பாருங்கோ முகமட்... ஆண் பெண்ணாக முடியாது பெண் ஆணாக முடியாது...ஆணிற்கு என்று தனிச் சிறப்பும் பெண்ணிற்கென்று தனிச் சிறப்பும் உண்டு...அங்கு பிறப்புரிமை, உடற்கூற்று, உடற்றொழில் என்று பல சமாசாரங்கள் இருக்கு...அதைக் கடந்து நாங்கள் சமூகம் என்ற கட்டமைப்புக்குள் ஆண் பெண்ணின் வாழ்வுரிமைச் சமத்துவம் பற்றித்தான் இப்ப கதைக்கிறம்,,,,!

பெண்களுக்கும் ஆண்கள் போல்தான் எல்லாம் சட்டத்தால் வகுக்கப்பட்டுள்ளது...சட்டம் என்பது மனிதன் என்றுதான் பார்த்து வகுக்கப்படுகிறது அத்துடன் பெண் என்பதற்காக மேலதிக சலுகைகளும் வழங்கப்படுகிறது...! :!:

சரி இப்ப உங்கள் கூற்றுப்படி வருவோம் ஆண்பிள்ளையும் பெண்பிள்ளையும் வளரும் ஒரு வீட்டில் துவக்கும் இருக்கும் பாவைப் பிள்ளையும் இருக்கும்....ஆனால் பெண்பிள்ளை பாவைப் பிள்ளையைத்தான் தூக்கும் ஆண்பிள்ளை துவக்கைத்தான் தூக்கும்.... அது யாரும் சொல்லிக் கொடுத்து வருவதில்லை. அது உயிரியல் நடத்தைக் கோலம்....இறைச்சியையும் புல்லையும் வைத்து புலிக்குட்டியையும் மான் குட்டியையும் விட்டால் புலிக்குட்டி என்ன புல்லா தின்னும்...அங்கு யார் அவைக்குக் கற்றுக் கொடுத்தார்...இப்போ புரியுதா யார் யதார்த்தத்திற்கு புறம்பாகப் போகிறீர்கள் என்று.....பின்னர் பிள்ளைகள் வளர வளரத்தான் பெற்றோர் அவர்களின் திறமைகளை இனங்கண்டு அவர்களை அவர்கள் விரும்பும் துறைகளில் முழுக்கவனம் செழுத்தி வளர துணை புரிகின்றனர்....இங்கு எந்த அடிமைத்தனமும் புகுந்தப்படவில்லை....இயற்கை தெரிவு செய்துள்ள இயல்பிற்கேற்ப அவர்கள் வளர்க்கப்படுகிறார்கள்....அதை சரிவர புரிந்து கொள்ளுங்கள்.....!புலிக்குட்டியை புல்லே தின் என்று வளர்க்க முடியுமா.....?????!

அப்படி இருந்தும் இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கேற்ப ஆண்களும் பெண்களும் சகல துறையிலும் சமத்துவத்துடன் பங்களிக்க சட்டப்பாதுகாப்பும் சமூகப்பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது...இதையும் கடந்து... யாரை யாரும் இதுதான் செய் என்று திணிப்பதும் இல்லை....சுதந்திர சிந்தனைக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது...அப்படி இருக்க எப்படி ஆண்கள் ஆதிக்கத்தை புரியமுடியும்...ஒரு ஆண் அடிக்கிறான் என்றால், ஒரு பெண் ஏன் அடிக்கும் ஆணை திருப்பி அடிக்க முடியாது..????! அல்லது சட்டப் பாதுகாப்பைக் கோரமுடியாது....! அவள் அடி வாங்குகிறாள் என்றால் அல்லது சமூகத்திற்கு புற நடையாக வாழ விரும்புகிறாள் என்றால் அது அவளின் விருப்பம் என்றே கொள்ளப்படும்....அல்லது அவள் ஒரு குற்றவாளியாக இருக்கக் கூடும் அதனால் அவள் சட்டப்பாதுகாப்பையும் சமூகப்பாதுகாப்பையும் கோர முடியாதவளாய் இருக்கலாம்...! அதற்கு யார் பொறுப்பு....???! ஏன் இவற்றை எல்லாம் ஆணாதிக்கம் என்று கூறி ஆண்களையும் அவர்களின் உயரிய பண்புகளையும் மலினப்படுத்துகிறீர்கள்....! இப்படி ஒவ்வொன்றுக்கும் விளக்கமளிக்கலாம்...!

பெண்கள் வாழ்வது பெண்களின் கையிலேயே அன்றி ஆணிடம் எதிர்பார்க்கும் சலுகைகளில் அல்ல.... என்பதை பெண்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்....! பண்டைய காலம் போல் எனி பெண்ணிற்கு ஆண் பாதுகாப்பளித்துக் கொண்டிருக்க முடியாது. அவளே அவளைப் பாதுகாத்து போட்டியுள்ள சமூகத்தில் போராடித்தான் வாழ்வேண்டும்...பண்டைய உலகில் ஆண் உணவுக்கு, இடத்துக்குப் போராடி பெண்ணையும் பாதுகாத்து தானும் சுற்றமும் என்று வாழ்ந்தான்... ஆனால் இன்று கலாசார, சூழலியல் அபிவிருத்தி மாற்றங்கள் அதற்கு இடமளிக்கப் போவதில்லை.......பெண்கள் எனித்தான் வெளி உலகில் போட்டி போட வேண்டும் அங்கு ஆணுடனும் போட்டி வரும்...அதைச் சமாளிக்க திறமையை வெளிப்படுத்த வேண்டுமே தவிர ஓடி ஒழிந்து பின் கதவால் சலுகைகள் பெற்று வாழ முனையக்கூடாது....பெண்விடுதலை என்பது ஆணை முடக்கி மறைமுகமாகச் சலுக்கைகள் பெறுவதற்கான தேடலே.....! அதை சும்மா அங்கீகரித்து நிற்க ஆண் என்ன இளிச்சவாயனா...அவனும் போட்டியுள்ள சமூகத்தில் தான் வாழ்கிறான்...தனது திறமையால் வளர்கிறான்...அவனிடம் உள்ள திறமையை வீண் பழிகளால் யாரும் மழுங்கடித்துவிட முடியாது....மற்றவர்கள் போட்டிபோட தாம் தம் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர ஏட்டுச் சுரைக்காய்கள் வரைந்து பலனில்லை.....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#38
நாங்கள் என்றோ திறந்துவிட்டுவிட்டோம் இனிவரும் காலங்களிலும் யாருமே அடக்கப்போவதுமில்லை அடிமையாக்குவதுமில்லை.

முதலில் பெண்களிடமிருந்து பெண்களிற்கு விடுதலையை பெற்றுக்கொடுங்கள். அதன் பின் ஆணாதிக்கம் ஒடுக்கம் அடக்கம் பற்றி கதைப்போம்
[b] ?
Reply
#39
ஒரு பூனை நல்லா கண்ணை மூடிக்கொண்டு பாலைக் குடிக்குது! குடிச்சபடி சொல்லுது உலகம் இருண்டு போச்செண்டு, மற்றதும் அப்படியே செய்யது ஆனால் அது சொல்லுது உலகம் கறுப்பெண்டு! நாய் வால் நிமிருமா என்ன?
Reply
#40
mohamed Wrote:ஒரு பூனை நல்லா கண்ணை மூடிக்கொண்டு பாலைக் குடிக்குது! குடிச்சபடி சொல்லுது உலகம் இருண்டு போச்செண்டு, மற்றதும் அப்படியே செய்யது ஆனால் அது சொல்லுது உலகம் கறுப்பெண்டு! நாய் வால் நிமிருமா என்ன?

பாத்தியளோ நீங்கள் தான் பெண்களை சிந்திக்கவிடாது... நீங்கள் அவர்களுக்கு சார்பாக எழுதுவதாக அவர்களை மட்டம் தட்டுகிறீர்கள்...அவர்களுக்கு அவர்களின் நிலையை உணர, உணர்ந்து தம் திறமையை வளர்க்க உது உதவாது... இது மேலும் அவர்கள் சாதாரண சிந்தனைக்கும் உங்களைப் போல் ஆண்களில் தங்கியிருக்கவே வழி செய்யப்போகுது.....எமக்கென்னவோ இப்ப உங்கள் தரவழிதான் பெண்களை அடிமையாக்க விளைவது போலத் தெரியுது...! :!:

பெண்களே உங்களை சிந்திக்கவிடாது தமது சிந்தனை வரம்புக்குள் கட்ட நினைக்கும் இப்படியான ஆண்களிடத்தில் கவனமாக இருங்கள்.....! ஒரு சமூகத்தின் சம பங்களிகளாக உங்களுக்கான எமது கருத்து..ஏற்பதும் விடுவதும் உங்கள் கையில்....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)