01-03-2005, 07:19 PM
ஏங்க இதையாருமே சொல்ல மாட்டேன் என்கிறாங்க..?? பலாலி முகாமுக்கு இந்த சுனாமியால் ஏதாவது பாதிப்பா..??
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>
|
இலங்கைக்கு 5 ஆயிரம் அமெரிக்க இராணுவத்தினர்!?
|
|
01-03-2005, 07:19 PM
ஏங்க இதையாருமே சொல்ல மாட்டேன் என்கிறாங்க..?? பலாலி முகாமுக்கு இந்த சுனாமியால் ஏதாவது பாதிப்பா..??
<b> .</b>
<b> .......!</b>
01-03-2005, 07:22 PM
தென் தமிழீழத்தில் இந்தியத் தூதுவர்
சிறிலங்காவுக்கான இந்திய தூதுவர் நிரூபமா சென் இன்று தென் தமிழீழப் பகுதிகளை பார்வையிட்டார். மட்டக்களப்பு கச்;சேரியில் அரசாங்க அதிபர் வே.சண்முகம் உட்பட நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளையும் அவர் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பாதிப்புகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அவர் கேட்டறிந்தார். விடுதலைப் புலிகள் சார்பில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழுவில் அங்கம் வகிக்கும் மாவட்ட நிர்வாகப் பொறுப்பாளர் தயாமோகன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோசப் பரராஜசிங்கம்ää தங்கேஸ்வரி கதிர்காமர் ஆகியோரையும் நிருபமா சந்தித்தார். இந்த மாவட்டத்தின் அழிவுகளை நிவர்த்தி செய்ய நீண்டகால திட்டம் மற்றும் இடைக்கால திட்டம் என இரண்டு திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்தனர். அரச நிர்வாகப் பிரிவுää விடுதலைப் புலிகள் நிர்வாகப் பிரிவு என இரண்டு நிர்வாகப் பிரிவுகள் இருப்பதால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களிற்கான உதவிகள் அவர்கள் ஊடாகவே வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். எந்த உதவியென்றாலும் சரி அரசாங்கத்தின் உடாகவே செய்யப்படும். வடக்கு கிழக்கு நிலமை தொடர்பாக கவனத்தில் எடுக்கப்படும் என இந்திய தூதுவர் பதிலளித்துள்ளார். காத்தான்குடி நாவலடி கல்லடி போன்ற பகுதிகளையும் நேரில் சென்று அவர் பார்வையிட்டார். நன்றி:புதினம்
01-03-2005, 08:37 PM
அமரிக்க இந்திய பந்தயகளமாக இலங்கை மாறுகின்றதா? ரொய்டர்ஸ் செய்தியை படித்து பாருங்கள் ............
ANALYSIS-Sri Lanka tsunami aid becomes geopolitical game 03 Jan 2005 12:15:18 GMT Source: Reuters By Chaitanya Kalbag COLOMBO, Jan 3 (Reuters) - Sri Lanka's tsunami devastation has drawn a huge international aid response, but a geopolitical game of influence between India and the United States is playing not too subtly in the background, analysts said on Monday. முழுமையாக படிக்க ..... http://www.alertnet.org/thenews/newsdesk/SP152088.htm
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
01-04-2005, 12:53 AM
இவ்வளவு காலம் தமிழீழமக்கள் எவ்வளவோ வழியாக எமது எண்ணக்கிடைக்கைகளை இந்தியாவுக்கு சொன்னோம் கேக்கவில்லை... அவர்களும் எமக்கு (தமிழ்மக்களுக்கு) அவர்கள் (அரசால்) எமக்கென்று ஏதும் இதுவரை ஒன்றும் சொல்லவில்லை... செய்யவில்லை...
இனி அவர்கள் எம்மைபற்றி கதைக்க செய்ய வெளிக்கிடலாம்..... அதைவிட....கனக்க என்னம் உண்டு.... எமது 30000 தமிழ் முஸ்லீம் சிங்கள உயிர்கள்மீது யாவரும் அரசியல் நடத்துகிறார்கள்.... இன்னெரு செயற்கை அழிவு இலங்கையில் நடப்பது உறுதியாகிவருகின்றது... :roll:
<img src='http://www.yarl.com/forum/images/avatars/2439290643fbe18d6975f2.gif' border='0' alt='user posted image'><b>... .....</b>
01-04-2005, 01:24 AM
இதுவும் ஒரு சுனாமியா ? இல்லை பினாமியா ? அமெரிக்கா ! இந்தியா ! பாகிஸ்தான் ! பிரிட்டன் ! இலங்கைத் தீவில் புதிய அரசியல் சூழல்?
முன்னாள் ஜனாதிபதிகளான கிளின்டன் புஸ் இருவரும் புதிதாக நியமனம். சுனாமி என்றால் ஜப்பானிய சொல் என்று கூறுகிறார்கள். சு - என்றால் துறைமுகம்ää னாமி - என்றால் அலை என்கிறார்கள். ஆக சுனாமி என்றால் துறைமுக அலை என்பது பொருளாகும். சுமார் 12 நாடுகளில் சுமனாமி தாக்குதலை நடாத்தினாலும் இலங்கையில்தான் துறைமுக அலை என்ற பொருள் அழகாக விழுந்திருக்கிறது. ஆமாம் ! இலங்கையின் துறை முகங்களில் இனி இந்தியää அமெரிக்கää பாகிஸ்தானியää வங்காள தேசää பிரிட்டன் கப்பல்கள் அலையலையாக வரப்போகின்றன. இதுதான் சுனாமி என்னும் துறைமுக அலை ஏற்படுத்தப் போகும் தாக்கமாகும். சுனாமியை விடுங்கள் இப்போது வரும் வெளிநாட்டு யுத்தக் கப்பல்கள் யாருக்கு பினாமியாக வருகின்றன என்பதுதான் முக்கிய கேள்வி. சற்று முன்னர் அமெரிக்காவின் இராட்சத விமானம் ஜலக்சி ஜப்பானில் இருந்து கொழும்பு போய் இறங்கியுள்ளது. இதில் சுமார் 200 க்கும் மேற்பட்ட துருப்புக்களும்ää 20 உலங்குவானூர்திகளும் வந்துவிட்டன. அடுத்து இரத்மலானையில் இரண்டு விமானங்கள் மருந்துப் பொருட்களுடன் வந்திருக்கின்றன. இவற்றில் 30 பேர் வந்திருக்கிறார்கள். அமெரிக்காவின் நவீன உபகரணங்களை பொருத்தும் பணியாளர்களே முதலில் வந்திருக்கும் 150 பேர் என்று சற்று முன் வெளியான செய்திகள் கூறுகின்றன. அமெரிக்கா புறப்பட்ட சொற்ப நேரத்தில் துடித்தெழுந்தது இந்தியா. அந்தத் துடிப்பிற்குள் டீக்சித்தின் மரணச் செய்திகூட அடிபட்டுப் போனது இன்னொரு விடயம். தற்போது காலியில் இருக்கும் இந்தியத் துருப்புக்கள் மட்டுமல்லää மேலும் பல கப்பல்களில் இந்தியத் துருப்புக்கள் இலங்கை வரவிருப்பதாக பிந்திய செய்திகள் கூறுகின்றன. இந்தியா வந்தால் நான் சும்மா இருப்பேனா என்பது போல 400 படை வீரர்களுடன் பாகிஸ்தானிய போர்க்கப்பல்கள் புறப்படவிருப்பதாக செய்திகள் சற்றுமுன் வெளியாகின. அத்தோடு இத்தாலியில் இருந்து கடல் விமானங்கள் இரண்டும் வருகின்றன. பிரிட்டனின் யுத்தக்கப்பல் இன்று மாலை கொழும்பு வந்துள்ளது. முக்கிய இராஜதந்திர குழுவினர் அடுத்து வரவுள்ளனர். இவர்களுடன் ரஸ்யர்கள் வேறு விட்டேனா பார் என்று வந்துவிட்டார்கள். இன்னும் பின்லாடன் கப்பலோடு வருகிறார் என்ற செய்திதான் பாக்கி என்று நினைக்காதீர்கள். சில வாரங்களுக்கு முன்னரே பின்லாடனின் ஆட்கள் மட்டக்களப்பு பக்கமாக வந்து போனதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டு முடிந்துவிட்டன. இவர்கள் எல்லாம் ஏன் வந்திருக்கிறார்கள்? சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி நிவாரணங்களை செய்ய வந்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்தச் செய்திகள் அனைத்தும் உதவிகளுக்கு அப்பால் உருவாக்கும் கேள்விகள் இவை - சுனாமி ஒன்று வருமா என்ற கேள்வியே இல்லாமல் வாழ்ந்த நாம் இனிமேலாவது பல பக்கங்களிலும் சிந்திக்க வேண்டியது அவசியமாயிருக்கிறது. முதலில் எல்லாம் நலமாக நடக்க வேண்டும் என்று எண்ணும் அதேவேளை எதிர்ப்பக்கமாகவும் சிந்திப்பது நமது கடமை. ஆகவேதான் நமது அறிவுக்கு எட்டிய கேள்விகளை கேட்டுப் பார்க்கிறோம். 01. முஸ்லீம்களின் பகுதியில் அமெரிக்க இராணுவமும்ää இந்திய இராணுவமும் பணியாற்ற இயலாத காரணத்தினாலா பாகிஸ்தான் இராணுவம் வருகிறது ? அல்லது இந்தியா வருவதால் அதற்கு ஏட்டிக்குப் போட்டியாக அது வருகிறதா ? 02. பங்களாதேஸ் இராணுவக்கப்பல் ஏன் வருகிறது ? சியா முஸ்லீம் சன்னி முஸ்லீம் பிரிவுகளைக் கருத்தில் கொண்டு இவர்கள் வருகிறார்களா ? 03. சுனாமியின் பாதிப்புக்கு உதவ இவ்வளவு பெரிய இயந்திரங்களுடன் வரும் அமெரிக்காää சுனாமி வர முன்னர் ஏன் உரிய தகவல்களை வழங்கவில்லை ? சுனாமி வருவதற்கு முந்திய படங்களையும் அதற்குப் பிந்திய படங்களையும் அமெரிக்க செய்மதிகள் படம் பிடித்துள்ளன. ஆனால் தகவல் மட்டும் கொடுக்காதது ஏன் ? 04. இவ்வளவு அக்கறை கொண்ட அமெரிக்க அதிபர் சுனாமி வந்ததும் உடனடியாக செயற்படாமலிருந்து தாமதமாகச் செயற்படுவது ஏன் ? 05. விடுதலைப் புலிகளுக்கு தடை விதித்துள்ள இந்தியாவும்ää அமெரிக்காவும் புலிகளுடைய கட்டுப்பாட்டுப் பகுதியில் பணியாற்றுவது எப்படி ? 06. வரும் படையினர் எவருமே போகும் திகதி அறிவிப்பதில்லை இவர்கள் எப்போது திரும்புவார்கள் ? அல்லது பணி முடிந்ததும் திரும்புவோமென ஒரு வார்ததைகூட பேசாமல் இருப்பது ஏன் ? 07. நிவாரணப் பணிகளில் புலிகளும்ää அரசும் இணைந்து செயற்படுவதால் பேச்சுவார்த்தை நடாத்த நல்ல சூழல் உருவாகும் என்று சிங்கள அமைச்சர் ஒருவரும்ää ஜனாதிபதியும் கூறியிருப்பதன் பொருள் என்ன ? 08. அரசின் கடற்படைப் பிரிவுகள் பாரிய அழிவைச் சந்தித்துள்ளதால் அதை நிரவுவதற்கு வெளிநாட்டுப் படைகளை அவசரமாக சிறீலங்கா அரசு வரவழைத்து தன்னை பாதுகாக்க முற்படுகிறதா ? விடுதலைப் புலிகளின் கடற்படை அழிவடைந்துள்ளதாக சந்திரிகா கதையளந்து புலிகளின் வாயைக் கிளறி உண்மையை எடுக்க முயன்றாரா ? 09. நோர்வேயையும்ää மேற்கு நாடுகளையும் எதிர்க்கும் ஜே.வி.பியும் nஉறல உறுமயவும் இப்போது ஏன் வாலைச் சுருட்டி மௌனம் காக்கிறார்கள் ? 10. உலக வல்லரசுகள் தங்களுடைய பினாமிகளாகவே ஆசிய வட்டகையில் அரசுகளை வைத்திருப்பதாக சிலர் கூறுவார்கள். எல்லாருமே இங்கு மக்களின் வேண்டுதலின்றி திடீரென வருவதால் இவர்களுடைய பினாமியாக இருக்கிறதா சிறீலங்கா அரசு ? 11. ஊடகங்கள் எல்லாமே எதைச் சொல்வது ? எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியாமல் திணறுவதன் நோக்கம் என்ன ? 12. எல்லா நாடுகளும் படைக்கப்பல்களுடன் வந்திருப்பது அமைதி முயற்சிக்கான கண்காணிப்பு வேலைக்குத்தான் என்று யாராவது கூறினால் அதற்கு என்ன பதில் கூறலாம் ? 13. இஸ்ரேல் பாணியல் பாதிக்கப்பட்டோர் தங்கியிருந்த அகதி முகாமை எரித்தது இந்த படைகளின் வரவு பற்றிய எண்ணங்களை திசை திருப்பவா ? 14. இவர்கள் அனைவருமே உதவும் உள்ளங்கள் என்று சொல்வதுதான் சரியா ? அப்படியானால் வந்த விமானங்கள் என்னென்ன கொண்டு வந்தன ? 15. வந்திருக்கும் எல்லா முகங்களையும் ஒரு வரிசையில் அடுக்குங்கள்ää இவர்கள் அனைவரும் என்றாவது ஒரு கருத்துடன் இருந்ததாக வரலாறு இருக்கிறதா? என்று ஒரு பாமரன் கேட்டால் என்ன பதில் சொல்வது? 16. நாம் வீணாக அலட்டத் தேவையில்லைää பாதிக்கப்பட்டவருக்கு உதவ வந்தவர்கள் பற்றி நாம் அவசரமாக சிந்திப்பது தவறு என்று கூறலாமா ? 17. இது குறித்த விரிவான செய்திகளின்றி ஊடகங்கள் கிடப்பது ஏன் ? 18. பில் கிளின்டன்ää முதலாவது புஸ் இருவரும் சேவை புரிய வருவதால் இது உண்மையான மனிதாபிமானப் பணியென அமெரிக்கா காட்ட முற்படுகிறதா ? அல்லது உண்மையாகவே மனிதாபிமானப் பணிதானா ? 19. இதனால் சிறிலங்கா அரசுக்கோ அல்லது தமிழருக்கோ தனித்தனியாக பாதிப்பு உண்டா ? அல்லது இரு தரப்பிற்குமே பாதிப்பா ? அல்லது இரு தரப்பிற்குமே நன்மை உண்டா ? 20. இதுவரை பல இலட்சம்பேர் மடிந்தபோது மௌனமாக இருந்த இவர்கள் இப்போது ஏன் வந்தார்கள் ? 21. சுனாமி வருவதற்கு முன்னரே அமெரிக்கா அதிகாரிகள் இராணுவ முகாம்களை கண்காணித்தது ஏன் ? இப்படிப் பல கேள்விகள் எழுகின்றன. செய்திகளின்படி பார்த்தால் எல்லோருமே நல்லவர்கள்ää நல்லதிற்காகவே வருவது போலவே செய்திகள் வெளியாகின்றன. வெளிப்பார்வைக்கு பாலும் தேனும் ஆறாக ஓடப்போவது போல காட்சியை உண்டு பண்ணுகிறது. ஆனால் அரசியல் வானில் எல்லோரும் நல்லவர்களாக ஒரு போதும் இருக்க முடியுமா? இதுவும் ஒரு சுனாமியா ? இல்லை பினாமியா ? அமெரிக்கா ! இந்தியா ! பாகிஸ்தான் ! பிரிட்டன் ! இலங்கைத் தீவில் புதிய அரசியல் சூழல் என்ன? காலம்தான் பதில் சொல்ல வேண்டும். நன்றி: அலைகள் நள்ளிரவு 03.01.2005
01-04-2005, 02:59 AM
இலங்கையிலிருந்து அமெரிக்கப் படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் - இந்தியா
இலங்கையிலிருந்து அமெரிக்கப் படைகள் உடனடியாக வெளியேற வேண்டுமென்று இந்தியா ஊடகம் ஒன்றின் ஊடாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியப் பத்திரிகையான இந்துஸ்தான் ரைம் என்டிரிவி ஆகிய இணையங்களின் ஊடாக இக்கோரிக்கையை இந்தியா வெளியிட்டுள்ளது. அப்பத்திரிகையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது இந்தியாவின் அனுமதி இல்லாமல் இலங்கையரசு இரகசியமாக அமெரிக்கப் படைகளை வருவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக உடனடியாக இந்தியாவிற்கு இலங்கை அரசு அறிவிக்கத் தவறியுள்ளது. அமெரிக்கப் படைகள் உடனடியாக வெளியேறுவதே சிறந்தது. இவர்கள் தொடர்ந்து நிலைகொள்வார்களாக இருந்தால் இந்தியாவின் அயல் நாடுகள் மீதான உறவுகளில் பாரிய மாற்றம் எற்படும் என்பதனையும் எமது கடுமையான கண்டனத்தையும் இந்தச் சந்தர்ப்பத்தில் இந்தியா தெரிவித்துக் கொள்வதாகவும் அந்தப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி:நிதர்சனம்
01-04-2005, 02:14 PM
இந்தியாவின் அனுமதி இல்லாமல் அமெரிக்கா இலங்கை வந்தது தவறு. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இந்தியாவின் அனுமதி இல்லாமல் இலங்கைக்கு அமெரிக்கப்படைகள் வந்துள்ளமை மிகப்பெரும் தவறு எனவும் இந்த விடயம் தொடர்பாக தமிழீழத் தலைவர் வே.பிரபாகரன் அவதானமாக இருக்கவேண்டுமென்று லண்டனில் வாழும் இந்தியத் தமிழ் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தத் தகவலை அவரிடம் சொல்லுவதற்கு சந்தர்ப்பம் இல்லாத காரணமாக ஊடகத்தின் ஊடாகக் கேட்டுக்கொள்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில் நாம் சொல்லும் தகவல்கள் தமிழீழத்தின் தலைவரை சென்றடைய வேண்டுமென்று விரும்பகின்றோம்ää நான் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன். அமரி;க்கா இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பியது உள்நோக்கம் கொண்டது பலகாலத்திற்கு முதலே அந்தமான் தீவுகளிலும் பர்மாவிலும் தாய்லாந்திலும் இந்தியாவையும் சீனாவையும் கண்காணிக்கத் தேவையான வேலைத்திட்டத்தை செய்து வைத்துள்ளது. தற்போது தமிழ் மக்களின் வடகிழக்குப் பிரதேசம் பிரதேசம் அமெரிக்காவிற்கு மிகவும் பயனுடைய இடமாக அமைந்திருக்கிறது. இந்தப் பிரதேசத்தில் படைகள் வருகின்றமை இந்தியாவிற்குப் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழீழத் தேசியத் தலைவர் இவர்களுடைய வருகையினையும் நடவடிக்கைகயிலும் அவதானமாக இருக்க வேண்டுமென்றும் தென்னிந்தியத் தமிழ் உறவுகள் ஊடகமொன்றின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளனர். நன்றி:நிதர்சனம் கண்கெட்டபின் சூரியநமஸ்காரமாம்.....
01-04-2005, 02:24 PM
அமெரிக்கப் படைகளின் வருகை கூட்டு அரசாங்கத்தைப் பாதிக்கும் என்கிறார் சந்திரசேகரன்.
இலங்கைக்கு அமெரிக்கப் படையினர் வந்துள்ளமை பாரிய அரசியல் பிளவுகளைக் கூட்டு அரசியலில் ஏற்படுத்தும் என்று ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினரான சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் அமெரிக்கப்படைகள் ஜே.வி.பி.யின் அனுமதி இல்லாமலேயே இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளது. ஜே.வி.பி. சந்திரிகா அரச கூட்டமைப்பில் பாரிய விரிசல் ஏற்பட்டு அரசு கவுழும் நிலை மிகவிரைவில் உருவாகலாம் என்றும் அமெரிக்கப்படைகள் இலங்கையிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டுமென்றும் கோரிக்கை விடுவதாக அவர் தெரிவித்துள்ளார். நன்றி:நிதர்சனம் நடக்கட்டும் நடக்கட்டும் விமல் வீர ஒளிச்சுட்டாராக்கும் அல்லது hoolywood or bollywood ஓட கூட்டணிவைக்க பேசுறாராக்கும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :mrgreen:
01-04-2005, 02:31 PM
<b>நிவாரணப் பணிக்கு அப்பால்!</b>
சுனாமி பேரலைகளால் இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தமானது இன்று முழுஅளவில் அரசியல் மயமானதாக மாறிவிட்டதா? என்ற சந்தேகம் எழத் தொடங்கியுள்ளது. ஏனெனில் உதவி மீட்புப்பணி என்ற பேரில் அரசியல்-இராஜதந்திர-இராணுவ நகர்வுகள் இடம்பெறத் தொடங்கிவிட்டதற்கான சமிக்ஞைகள் தெளிவாகவே தென்படத் தொடங்கியுள்ளன. ஒரு நாட்டிற்கு ஏற்படும் அவலம் அதற்கு கிடைக்கப்பெறும் உதவிகள் நிவாரணம் என்பவற்றில் மனிதாபிமானம் மட்டுமல்ல அதற்கு மேலாக அரசியலும் உண்டு என்பது புரியப்படாத தொன்றல்ல. அதைப் புரிந்து கொள்ளாது போனால் உலக அரசியலில் ஆரம்ப அறிவைக் கூட நாம் பெற்றவர்களாகவே இல்லை என்றே கொள்ள வேண்டும். அவலத்திலும் நெருங்கிய நட்பு நாடுகள; வேண்டப்படாத நாடுகள் எனப் பாகுபடுத்தப்பட்டே உதவிகளின் அளவுகள் தீர்மானிக்கப்படுகின்றன. அதாவது அனர்த்தத்தின் கொடூரம மக்களின் அவலம் என்பன மதிப்பீடு செய்யப்பட்டு அவை வழங்கப்படுவதில்லை. அதற்கும் மேலாக வேண்டியவர்கள் வேண்டதவர்கள் என்ற ரீதியிலேயே உதவிகள் வழங்கப்படுகின்றன. இதைத் தவறு என்றோ மனிதாபிமானமற்ற செயல் என்றோ குறை கூறவும்ää திருத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடவும் இங்கு நாம் முற்படவில்லை. ஆனால் அவலத்திற்கான உதவிகள்ää நிவாரணப்பணிகள் என்பன புதிய நெருக்கடிகளைத் தோற்றிவிக்கக் கூடியவையாகவும் புதிய அரசியல் இராஜதந்திர இராணுவ நகர்வுகளாகவும் இருப்பது குறித்தே கவலை தெரிவிக்க வேண்டியதாகிறது. இலங்கையில் பேரலையின் தாக்கத்தினால் பேரிழப்பு ஏற்பட்டதென்பது உண்மையே. இவ் இழப்பில் இருந்து மக்களை விடுவிப்பதற்கு போர்க்;கால அடிப்படையில் மீட்புப் பணி மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதும் உண்மையே. ஆனால் தற்போதுள்ள கேள்வியானது சிறிலங்கா ஆயுதப் படைத்தரப்பால் இதனை மேற்கொள்ள முடியாதா? என்பதே ஆகும். அதாவது மக்களுக்கு ஏற்பட்ட அனர்த்தத்திலிருந்து அவர்களை மீட்டெடுப்பதற்குப் போதிய அளவில் சிறிலங்கா ஆயுதப் படைத்தரப்பில் ஆளணி இல்லையா? என்பதே ஆகும். ஆனால் அவ்வாறு கூறுவதற்கில்லை. ஏனெனில் நாட்டின் சனத்தொகைக்கும் ஆயுதப் படைத்தரப்பிற்கும் இடையிலான விகிதாசாரத்தைப் பொறுத்தவரையில் சிறிலங்கா ஆயுதப் படைத்தரப்பின் ஆளணியானது மிக உயர்ந்த விகிதாசாரத்தைக் கொண்டதாகவே உள்ளது. இந் நிலையில் வெளிநாட்டு இராணுவத்தினரை மீட்புப் பணிக்கு அழைக்க வேண்டிய தேவையோ அன்றி அனுமதிக்க வேண்டிய தேவையோ அவசியமானதா? அதிலும் குறிப்பாக யுத்த நிறுத்தம் ஒன்று நாட்டில் நடைமுறையில் உள்ளநிலையிலும் விடுதலைப்புலிகள் தமிழர் தாயகத்தில் ~சுனாமி| விளைவித்த அனர்த்தத்திலிருந்து மக்களை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டிருக்கையிலும் சிறிலங்கா அரசு தனது இராணுவத்தை மீட்புப் பணிகளில் பயன்படுத்திக் கொண்டால் என்ன? அது மட்டுமல்ல சுனாமி பேரலைகளால் சிறிலங்கா அரசு ஸ்தம்பிதநிலை அடையும் வகையிலோ அன்றி சிறிலங்கா அரசின் ஆள்புலப்பரப்பு முழு அளவிலுமானதாகவோ பாதிப்பிற்குள்ளாகவில்லை. சிறிலங்கா அரசின் நிர்வாக மையமும் அதன் அரசியல் இராஜதந்திர செயற்பாடுகளும் முழு அளவில் செயற்படத்தக்கதானதொரு நிலையிலுமே வெளிநாட்டுப் படைகள் மீட்புப் பணிக்காக அழைக்கப்பட்டுள்ளன அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆகையினால் இத்தகையதொரு நிலையானது தனியாக சுனாமியினால் ஏற்பட்ட அனர்த்தத்துடன் மட்டுப்படுத்தப்பட்ட தொரு நடவடிக்கையாக நோக்கப்படுதல் எத்தனை தூ}ரம் பொருத்தப்பாடானதாகும்? ஏனெனில் இந் நடவடிக்கையானது இனப்பிரச்சினை விடயத்திலும் பாதிப்பை- அதாவது இராணுவச்சமநிலை இராஜதந்திரச் செயற்பாடுகளில் தாக்கத்தை விளைவிக்கத் தக்கதாக அமையக்கூடியதாகும். அது மட்டுமன்றி ஒன்றிற்கு மேற்பட்ட இராணுவங்களின் வருகை அதிலும் குறிப்பாக இப் பிராந்தியத்திற்கு வெளியேயுள்ள நாடுகளின் இராணுவ பிரசன்னமானது இலங்கையில் மட்டுமல்ல இப் பிராந்தியத்தின் இராணுவச் சமநிலையிலும் மாற்றங்களையும்ää தாக்கத்தையும் விளைவிக்கக்கூடியதாகும். அதாவது சுனாமியினால் இலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தின் மீட்புப் பணி புனர்வாழ்வு என்பவற்றிற்கும் அப்பாற்பட்ட விதத்தில் வெளிநாடுகளின் பங்கு பணி இருக்குமானால் அது இலங்கையினதும் இப் பிராந்தியத்தினதும் அரசியல் இராஜதந்திர சூழ்நிலைகளில் பெரும் தாக்கத்தை விளைவிப்பவையாகவே இருக்கும். இது இலங்கையின் எதிர்காலத்தை சிக்கலுக்குள்ளானதாகவும். குழப்பம் நிறைந்தனவாகவும் மாற்றும் எனின் மிகையாகாது. நன்றி: ஈழநாதம் ஈழநாதம் நாளேட்டில் 04.01.05 வெளிவந்த ஆசிரியர் தலையங்கம்
01-04-2005, 02:45 PM
[b]சர்வதேச சதிவலையில் சிக்கியது இலங்கைத் தீவகம் அந்நியப் படைகள் பெரும் எண்ணிக்கையில் குவிப்பு!!
இங்கிலாந்தின் இரண்டு கடற்படைக் கப்பல்கள் இன்று கொழும்புத் துறைமுகத்தை அண்மித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடற்படைக்கப்பலில் கடற்படைத் துருப்புக்கள் மற்றும் கனரக இயந்திரங்கள் உலங்குவானூர்திகள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த இரண்டு நாட்களில் வங்கதேசத்தின் கடற்படைக்கப்பல் இலங்கையை அடையும் எனத் தெரியவருகிறது. பாகிஸ்தான் இலங்கைக்கு இரண்டு யுத்த தாங்கி கப்பல்கள் மூலம் 400 கடற்படை சிப்பாய்களை அனுப்புவதற்கு ஆயத்தமாகி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இலங்கையில் மேற்கொள்ளப்படும் மீட்புப் பணிகளில் இலங்கை படைகளுடன் இணைந்து செயலாற்றுவதற்காககவே பாகிஸ்தான் தனது கடற்படையை அனுப்பிவைக்க உள்ளதாக பாகிஸ்தானிய தூதாரகம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே தனது கடற்படைத் துருப்புகளை இலங்கைக்கு அனுப்பிவைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவின் முக்கிய போர்க்கப்பல்கள் மூன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளன. இந்த நிலையில் பாகிஸ்தானும் தனது கடற்படையை இலங்கைக்கு அனுப்பவுள்ளமை பலத்த சந்தேகங்களை தோற்றுவித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கைக்கு 1ää500 படையினரை அனுப்ப அமெரிக்கா உத்தேசித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு நடவடிக்கைகள் முடிவடைந்துள்ள நிலையில் சர்வதேச படைகள் இலங்கையை நோக்கி நகர்த்தப்படுவது குறித்து பல்வேறு விதமான சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. அமெரிக்காவின் 20 உலங்குவானூர்திகளுடன் விமானம் தாங்கி கப்பல் ஒன்று முன்னதாகவே கொழும்பை வந்தடைந்துள்ளது. நேற்று இலங்கைக்கு வருகை தந்துள்ள 200 அமெரிக்க படைகளுடன் 213 கடற்படையினர் இங்கு கால்பதித்துள்ளனர். அமெரிக்க கடற்கலங்களின் வருகைக்கு தேவையான முன்னேற்பாட்டு பணிகளை இவர்கள் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் காலியில் தங்கியிருந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. தற்போது காலியில் இந்திய கடற்படையினர் தங்கியிருந்து மீட்பு பணிகளை மேற்கொண்டுள்ள நிலையில் அவர்களுடன் அமெரிக்க படைகளும் இணைந்து செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான அன்ரனோ சீ 130 ரக விமானங்கள் இரண்டு நேற்று கட்டுநாயக்க வானுர்த்தி மையத்தை வந்தடைந்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. இவற்றில் 30 படைவீரர்களுடன் மருந்து பொருட்களும் எடுத்துவரப்பட்டுள்ளதாக வானூர்தித் தளச்; செய்திகள் தெரிவித்துள்ளன. நன்றி:புதினம்
01-04-2005, 02:59 PM
<img src='http://www.thinakural.com/New%20web%20site/Images/2005/04-01-05/moorthyL.gif' border='0' alt='user posted image'>
நன்றி: தினக்குரல்
01-04-2005, 03:05 PM
[b]கேந்திர இராணுவ போட்டி களமாகும் இலங்கை...?
சுனாமியின் தாக்கம் இந்நாட்டின் இனப்பிரச்சினையையும் சமாதான முயற்சிகளையும் இரண்டாமிடத்துக்குத் தள்ளிவிட்டுள்ள அதே வேளையில் கேந்திர ரீதியாக அக்கறையுள்ள சில நிகழ்வுகள் அனர்த்தத்தின் மறைவில் நடைபெற்றுக் கொண்டிருப்பதை கவனிக்காமலிருக்க முடியவில்லை. இலங்கையில் நடைபெற்றுள்ள அனர்த்தத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு தமது கேந்திர நோக்கங்களை அடைவதற்கு சக்திவாய்ந்த நாடுகள் சில மேற்கொண்டுவரும் முயற்சிகள் பிராந்திய இராணுவச் சமநிலையில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கின்றன. தன்னுடைய கேந்திர நலன்களின் அடிப்படையில் இலங்கை மீது அமெரிக்கா நீண்ட காலமாகவே ஹகண்' வைத்திருந்தது. மத்திய கிழக்கில் அதிகரித்துவரும் நெருக்கடிகளின் மத்தியில் - இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தனக்கு வாய்ப்பான தளம் ஒன்றை அமெரிக்கா நீண்ட காலமாகத் தேடி வந்துள்ளது. அந்த வகையில் இலங்கை தான் அமெரிக்காவின் விருப்புக்குரிய இடமாக இருந்து வந்திருக்கின்றது. இருந்த போதிலும் இதற்கு நீண்டகாலமாகத் தடைபோட்டு வந்திருப்பது இந்தியா தான்! உபகண்டப் பிராந்தியத்தில் தன்னை மீறி எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதில் இந்தியா கவனமாகவே இருந்து வருகிறது. 1987 இல் கைச்சாத்திடப்பட்ட இலங்கை - இந்திய உடன்படிக்கை இதனைத் தெளிவாகவே பிரதிபலித்தது? இப்போது கடல்கோளினால் பேரழிவு ஒன்றை நாடு சந்தித்துள்ள நிலையில் - உதவி என்ற பெயரில் பெருந்தொகையான அமெரிக்கத் துருப்புகள் இலங்கைக்குள் அனுப்பிவைக்கப்படுகின்றன. அமெரிக்காவிலிருந்து வந்து சேரவுள்ள சுமார் இரண்டாயிரம் விஷேட படையினரும் இலங்கையின் பல பாகங்களிலும் முகாம்களை அமைத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஷேட யுத்தக் கப்பல்கள் விமானம் தாங்கிக் கப்பல்கள் போன்றவற்றுடன் அழிவுற்ற மக்களை மீட்குப் பணி எனக் கூறிக்கொண்டு வருகை தரும் அமெரிக்கப் படைகள் காலி திருகோணமலை கொழும்பு யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் பிரதான இராணுவத் தளங்களை நிறுவும் எனவும் யாழ்ப்பாணத்துக்கான விஷேட அமெரிக்க படைப் பிரிவு பலாலிக்கு விமானம் மூலமாக அனுப்பப்படலாம் எனவும் கூறப்படுகின்றது. இவர்கள் நாகர்கோவில் பருத்தித்துறை உட்பட கரையோரப் பகுதிகளில் குழுக்களாகச் செயற்படுவார்கள் என செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இலங்கையைத் தாக்கிய கடற்கோளைப் பொறுத்தவரையில் மீட்புப் பணிகள் அநேகமாகப் பூர்த்தியாகிவிட்டன. அடுத்த கட்டமாக இருப்பது அனைத்தையும் இழந்து அகதிகளானவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதும் புனருத்தாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதும்தான் அமெரிக்காவிலிருந்து அனுப்பப்படும் விஷேட படை அணிகள் இந்த புனர்வாழ்வு நடவடிக்கைகளிலோ அல்லது மீள்குடியேற்ற முயற்சிகளிலோ எந்தளவுக்கு உதவப் போகின்றன!? மீட்பு நடவடிக்கைகளில் படையினரை ஈடுபடுத்துவது தான் வழமை! ஆனால் மீட்பு நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் படையினரை அமெரிக்கா அனுப்பிவைப்பது இயல்பாகவே சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்றுதான்! இந்தச் சந்தேகம் இந்தியாவுக்கும் ஏற்பட்டிருப்பதாகவே தெரிகின்றது. அதனால் தான் அமெரிக்காவுக்கு மறைமுகமான அச்சுறுத்தலைக் கொடுக்கும் நோக்கத்துடன் இந்தியா உடனடியாக பத்துக்கும் மேற்பட்ட யுத்தக் கப்பல்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதுடன் இந்தியக் கடற்படையும் தீவிர தரையிறக்கத்தில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்க பிரசன்னத்துக்கு எதிரான தன்னுடைய நிலைப்பாட்டை இதன் மூலம் இந்தியா தெளிவாக வெளிப்படுத்திக் காட்டியுள்ளது. இலங்கை அமெரிக்க செல்வாக்குக்கு அதிகளவில் உட்படுவது தன்னுடைய கேந்திர நலன்களுக்கும் பாதுகாப்புக்கும் ஒரு அச்சுறுத்தல் என்றே இந்தியா கருதுகின்றது. தெற்காசியப் பிராந்தியத்தில் தனது வல்லாதிக்க நிலைக்கு இது சவாலாக அமைந்துவிடலாம் என்ற அச்சம் இந்தியாவுக்கு இருப்பதையும் புரிந்துகொள்ள முடிகின்றது. அமெரிக்காவை விட பாகிஸ்தானின் உதவிகளும் அதிகளவுக்கு வருவது இந்தியாவை விழிப்படையச் செய்திருக்க வேண்டும். மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக எனக் கூறி இரண்டு கடற்படைக் கப்பல்களையும் இரு சி- 130 ரக ஹெர்குலிஸ் சரக்கு விமானங்களையும் அனுப்பி வைப்பதாக பாகிஸ்தான் அறிவித்திருக்கின்றது. தன்னுடைய நடவடிக்கைகள் மனிதாபிமான நோக்கத்தைக் கொண்டவையே என பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் அதனைச் சந்தேகக் கண்களுடனேயே இந்தியா பார்க்கும் என்பது வெளிப்படை! சமாதானத்தை முன்னகர்த்த முடியாமல் இக்கட்டான நிலைமையிலிருந்த ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இவ்விதம் கேந்திர இராணுவப் போட்டியின் ஒரு தளமாக இலங்கையை மாற்றியமைக்க ஏன் முற்பட்டிருக்கின்றார்? கடல்கோளினால் ஏற்பட்ட அனர்த்தம் யுத்தத்துக்கான உடனடிச் சாத்தியக்கூறுகளை இல்லாமல் செய்துவிட்டது என ஜனாதிபதி சந்திரிகா கடந்த வாரத்தில் கூறியிருந்தார். இந்த அனர்த்தம் படைகளையும் பெரிதாகப் பாதித்துள்ளது என்பதன் அடிப்படையிலேயே இந்தக் கருத்தை அவர் வெளிப்படுத்தியிருந்தார். மீட்பு நடவடிக்கை என்ற பெயரில் வெளிநாட்டுத் துருப்புகளை கேந்திர இடங்களில் முகாமிட அனுமதிப்பதன் மூலம்இ எதிர்காலத்தில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்களைப் பெருமளவுக்குத் தடுக்கக் கூடியதாக இருக்கும் என்ற ஒரு கருத்து சிங்கள இனவாதிகள் மத்தியில் உள்ளதையும் புரிந்துகொள்ள முடிகின்றது. இதன் வெளிப்பாடாகத்தான் அமெரிக்க இந்தியத் துருப்புகளுக்கு இப்போது செங்கம்பளம் விரிக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் தமிழர்கள் மத்தியில் காணப்படுகின்றது! அவலங்களை தமது நலன்களுக்காகப் பயன்படுத்தும் இந்த அணுகுமுறைகள்இ கேந்திர இராணுவப் போட்டிக் களமாக இலங்கையை மாற்றப் போகின்றது. குறுகிய கால அரசியல் நலன்களின் அடிப்படையில் இதற்கு அரசாங்கம் பச்சைக் கொடி காட்டுவது நீண்ட கால அடிப்படையில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம்! இன்றைய நிலையில் அனர்த்தத்திலிருந்து நாட்டை மீட்பதற்கு எவ்வாறான உதவிகள் தேவையாகவுள்ளன என்பதை அரசாங்கம் சர்வதேச சமூகத்துக்குத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். குறுகிய நலன்களைக் கருதி ஏகாதிபத்திய நாடுகளின் நோக்கங்களுக்கு இரையாகக் கூடாது! நன்றி: தினக்குரல்
01-04-2005, 03:28 PM
இலங்கைக்கு அமெரிக்கப்படைகள் வரவிருப்பதுகுறித்து
இந்தியா பிரச்சினை கிளப்பவில்லை கடற்கோளினால் பெரும் அவலத்துக்குள்ளாகியிருக்கும் இலங்கையில் அவசர நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதற்கு அமெரிக்கப் படைகள் வரவிருப்பது குறித்து இலங்கை அரசாங்கத்துடன் இந்தியா பிரச்சினை எதையும் கிளப்பவில்லை என்று கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் நேற்று திங்கட்கிழமை தெரிவித்திருக்கிறது. நிவாரணப் பணிகளில் அமெரிக்கப் படைகளை ஈடுபடுத்துவதென்பது முற்றிலுமே இலங்கை அரசாங்கத்துக்கும் அமெரிக்க அரசாங்கத்துக்கும் இடையேயான விவகாரமாகும். இலங்கை அரசாங்கம் தெரியப்படுத்தியிருப்பதற்கிணங்க தேவைகளின் அடிப்படையில் மக்களுக்கு அவசர நிவாரண உதவிகளை வழங்குமுகமாக இந்தியா எதிர்வரும் நாட்களிலும் மாதங்களிலும் சர்வதேச சமூகத்துடன் தொடர்ந்து பணியாற்றும் என்று தெரிவித்த இந்தியத் தூதரகத்தின் பேச்சாளர் நக்மா மாலிக்இ நிவாரணப் பணிகளில் நெருக்கடியான ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. இலங்கையில் பணியாற்றும் பல்வேறு நிவாரண உதவிக் குழுக்களிடையே நெருக்கமான ஒருங்கிணைப்பு இருக்க வேண்டியது முக்கியம் என்றும் இந்திய நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார். விசேட ஹெலிகொப்டர் பிரிவு ஒன்றுடன் கூடிய மினி விமானந்தாங்கிக் கப்பலான யூ.எஸ்.எஸ்.போன்ஹொமி றிச்சார்ட்டில் இருக்கும் 1இ500 அமெரிக்க கடல் சார் படையணியினர் (-ச்ணூடிணஞுண்) இலங்கைக்கு வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. முதலில் நேற்று முன்தினம் ஞாயின்று 200 அமெரிக்கப் படையினர் இலங்கையில் வந்திறங்குவர் என்று கூறப்பட்டபோதிலும் இதுவரை அவர்கள் வந்து சேர்ந்ததாக இல்லை. எனினும்இ 60 அமெரிக்க இராணுவத்தினர் (கடல் சார் படையணி அல்ல) நேற்று கொழும்புக்கு வந்து சேர்ந்திருப்பதாக அறிய வருகிறது. இதேவேளைஇ இலங்கையின் தெற்கிற்கும்இ கிழக்குக்கும் மிதக்கும் ஆஸ்பத்திரி ஒன்று உட்பட 7 கடற்படைக் கப்பல்களை அனுப்பி வைத்திருக்கும் இந்தியா நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. இந்திய விமானப் படையின் இரண்டு எம்.ஐ.8 ஹெலிகொப்டர்கள் வடக்கில் யாழ்ப்பாணத்துக்கும்இ கிழக்கில் திருகோணமலைக்கும் பெருமளவு கூடாரங்களை ஏற்றிக் கொண்டு சென்றிருப்பதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மனிதாபிமான உதவிப் பணிகளுக்கான தரைச் செயற்பாடுகளுக்கு பொறுப்பானவராக விளங்கும் உலகப் பொருளாதார அமைப்பின் அனர்த்த வளங்கள் கட்டமைப்பின் பணிப்பாளரான கிறிஸ் வீக்ஸ் தெரிவித்ததாக ராய்ட்டர் செய்திச் சேவை அறிவித்தது. பிரிட்டன் ஒரு சி -130 விமானத்தை அனுப்புவதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் லீக்ஸ் தெரிவித்தார். நன்றி: தினக்குரல்
01-04-2005, 05:51 PM
இந்தியா தமிழீழம் எதிர்ப்பு எதிரொலி? அமெரிக்க கடற்படைத் தளபதியின் கொழும்பு ஊடகவியலாளர் மாநாடு ரத்து!!
இலங்கைக்கு நிவாரணப் பணிகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படும் அமெரிக்க கடற்படையினரின் தளபதி இன்று கொழும்பில் நடத்தவிருந்த ஊடகவியலாளர் மாநாட்டை ரத்து செய்துள்ளார். இன்று பிற்பகல் இந்த ஊடக மாநாடு அமெரிக்க நிலையத்தில் நடைபெறவிருந்தது. எனினும் ரத்துக்கான காரணம் எவையும் அறிவிக்கப்படவில்லை. இதேவேளை அமெரிக்க கடற்படையினர் கட்டுநாயக்கா வானூர்தி தளத்தின் அருகில் தற்காலிக முகாம் ஒன்றையும் அமைத்துள்ளனர். ஏற்கனவே இலங்கைக்கு வானூர்தி மூலம் நேற்று மட்டும் 42 கடற்படையினர் வருகை தந்தனர். அதேநேரம் இலங்கைக்கு நிவாரணப் பணிகளுக்காக கொண்டு வரப்பட்டுள்ள வானூர்திகள் மற்றும் கப்பல்கள் மூலம் இதுவரை இருநூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்க கடற்படையினர் சிறிலங்கா வந்துள்ளனர். இவர்களுடன் 20 உலங்கு வானூர்திகள்ää இரண்டு உதவிக்கப்பல்கள் மற்றும் சரக்கு கப்பல்களும் எடுத்துவரப்படுகின்றன. இன்று மட்டும் அமெரிக்காவின் பல வானூர்திகள் கட்டுநாயக்காவுக்கு வந்துள்ளன. கட்டுநாயக்காவில் அமைக்கப்படும் அமெரிக்க கடற்படை முகாமுக்கான பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களை ஏற்றிய நிலையில் இவை வந்துள்ளன. சி 5 என்ற அதிவேக வானூர்தியில் இன்று பிற்பகல் 2.25 அளவில் 30 அமெரிக்க கடற்படையினர் வந்துள்ளனர். பிற்பகல் 3.40 அளவில் மற்றும் ஒரு சி 5 ரக வானூர்தியில் கடற்படை முகாமுக்கான பெருமளவு பொருட்கள் எடுத்து வரப்பட்டன. 3.31 அளவில் பிளக் கொக் என்ற ரகத்தை சேர்ந்த 2 உலங்கு வானுர்திகள் கட்டுநாயக்காவை வந்தடைந்தன. 5.51க்கு மேலும் பல அமெரிக்க கடற்படையினர் வந்தடைந்தனர். இந்த நிலையில் இன்று மட்டும் சுமார் 70 அமெரிக்க கடற்படையினர் சிறிலங்காவுக்கு வந்துள்ளனர். நன்றி: புதினம் தமிழீழம் எதிர்ததாக இதுவரை உத்தியோக பூர்வ தகவல் ஏதும் இல்லை !?
01-04-2005, 06:04 PM
<span style='font-size:30pt;line-height:100%'>அமெரிக்க உதவியை இலங்கை நிராகரித்தது ????</span>
Sri Lanka Rejects U.S. Rescue Fleet "PA" Down in the hull of the USS Bonhomme Richard everything is ready to go. There are tractors and trucks and three huge landing craft. Theres water purifying equipment, tarpaulins and wood beams for building temporary shelters. And there are more than 1,300 Marines ready to take it all ashore and get to work. But even for a strictly humanitarian mission in the political minefield of southern Asia, getting American boots on the ground is a delicate concept. The first helicopter flights off the 40,000 ton amphibious assault ship began relief operations today, flying to the city of Medan on Indonesias tsunami-struck island of Sumatra, where more than 100,000 people are feared dead and a million or more are homeless after the catastrophic quake and tsunami. Plans to put a Marine expeditionary unit ashore on Sri Lanka with heavy equipment, however, have been put on hold. After being informed that Colombo was scaling down its request for help, the Bonhomme Richard and another US warship cancelled plans to spearhead relief efforts off Sri Lanka’s coast and have instead joined the aircraft carrier Abraham Lincoln and its battle group off Sumatra. The landing ship Mount Rushmore, carrying a smaller contingent of Marines, will travel on to Sri Lanka alone. It was expected to cross the Indian Ocean by the weekend. An advance party of seven Marines arrived in the southern town of Galle today. Though no firm plans had been set, due to the uncertainty of the situation, the Marines had hoped to put more than 1,000 troops ashore in Sri Lanka to help clear roads and build shelters for refugees. The Bonhomme Richard, carrying more than 1,300 Marines, has three hovercraft capable of putting the troops ashore by the hundred on almost any kind of beach. All are fully loaded and ready to go. But for the time being, that capability will not be used. Instead, the ships helicopters will continue ferrying supplies to and from the regional airports where they have been piling up, and taking them out to the more remote places where they are needed. Part of the reason is clearly political. Sri Lanka has long been embroiled in a civil war with the Tamil Tiger rebel group, and the area of operations in Sumatras Aceh province is also highly sensitive. Due to a long-standing insurgency, Aceh had been restricted to foreigners. Jakarta was quick to open Aceh because it needed the help, but the image of large numbers of Marines pouring ashore would be politically sensitive to the predominantly Muslim nation. Washington, meanwhile, has been keen to display the humanitarian capabilities of its military. All told, about 20 military ships and more than 10,000 Marines and sailors have been mobilised for the relief operation, which is the largest the US military has conducted in Asia since the Vietnam War ended in 1975 and possibly its biggest humanitarian mission ever. Air Force C-130 cargo planes have been flying sorties out of the Vietnam-era bomber base in Utapao, southern Thailand. With Sri Lanka no longer on its itinerary, the Bonhomme Richard was expected to take its position off southern Sumatra, while the Lincoln battle group would remain in the more heavily populated north. The extent of death and damage in south Sumatra is not yet well known, and one of the Marines first priorities was to conduct reconnaissance missions to determine what areas needed the most help. The militarys helicopter operations have been key to easing aid bottlenecks and getting supplies out to the harder-to-access areas. But the Marines had hoped to put troops on the ground to provide badly needed manpower for clearing roads and airfields and for building shelters for refugees.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
01-04-2005, 10:44 PM
ராசா மதன் தமிழில போடப்பு விழங்கேல்லை????? :twisted: :evil: :evil: :evil: :evil: :evil:
[b]
01-05-2005, 05:43 PM
பாரிய அளவில் தொடர்ந்து குவிக்கப்படும் அமெரிக்க படை!
அமெரிக்காவின் ய10.எஸ்.எஸ்.ரர்மோர் என்ற யுத்த கப்பல் இந்த வார இறுதியில் இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 1987 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த கப்பல் 186 மீற்றர் நீளமானது விமானங்கள் தரையிறங்கக்கூடிய இரண்டு இறங்கு தளங்கள் உள்ள இந்த கப்பல் மணிக்கு 22 கடல் மைல் வேகத்தில் பயணம் செய்யக் கூடியது என தெரிவிக்கப்படுகின்றது. இந்த கப்பலில் 20 உலங்குவானூர்த்திகள் மற்றும் கனரக வாகனங்கள் என்பன எடுத்துவரப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இரண்டு 20 எம்.எம்வி. ரக சுடுகலன்கள் மற்றும் 25 எம்.எம் பீரங்கிகள் இரண்டு 50 கலிபர் தானியங்கி சுடுகலன்கள் ஆறு மற்றும் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் இரண்டு என்பன பொருத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இதேவேளை அமெரிக்க விமானப் படைக்கு சொந்தமான விமானங்கள் மூலம் இலங்கைக்கு எடுத்துவரப்பட்டுள்ள பிளக் ஹொக் வகை உலங்குவானூர்திகள் நேற்று கட்டுநாயக்க பகுதியில் பரீட்சார்த்த பறப்பினை மேற்கொண்டுள்ளன. நேற்று முன்தினம் 42 அமெரிக்க படையினரும் நேற்று 30 படையினரும் இலங்கைக்கு விமானங்கள் மூலம் வருகை தந்துள்ளனர். இவர்கள் கட்டுநாயக்க பகுதியில் தற்காலிக முகாம் ஒன்றை அமைத்துள்ளதாகவும் இந்த முகாமின் ஊடாகவே மீட்பு பணிகள் ஒருங்கிணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை வடக்கு கிழக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் மீட்பு பணிகளில் அமெரிக்க துருப்பினர் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என்று தெரியவந்துள்ளது. நன்றி:புதினம்
01-05-2005, 05:53 PM
<img src='http://www.thinakural.com/New%20web%20site/web/2005/January/05/moorthy.gif' border='0' alt='user posted image'>
நன்றி:தினக்குரல்
01-08-2005, 04:39 PM
அமெரிக்கப் படைகளை வெளியேற்ற ஹக்கீம் அரபு நாட்டு இராஜதந்திரிகளுடன் பேச்சு - முஸ்லீம்கள் ஆயுதம் ஏந்தும் நிலை.
இலங்கை நிவாரண உதவிகளையும் புனரமைப்பு உதவிகளையும் செய்யப்போவதாக நுளைந்துள்ள அமெரிக்கப் படைகள் நீண்டகாலத்திற்கு நிலைகொள்ளப் போவதாகவும் அதன் எண்ணிக்கையிலும் பலமடங்கு அதிகரிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ள நிலையில் இதனை எதிர்த்துப் போரிடுவதற்காக உலக அரபு நாடுகளின் தூதுவர்களைக் ஹக்கீம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். சவுதி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் எகிப்த்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஈரான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் பாகீஸ்தான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மலேசியா மற்றும் மாலைதீவின் இலங்கைக்கான தூதுவர் ஆகியோரையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். அமரிக்கப் படைகளின் வருகையினைக் கடுமையாகச் சாடிய ஹக்கீம் அரபு நாடுகளின் உதவியினூடாக அமெரிக்கப் படைகளுக்கு எதிராக இலங்கையில் செயற்படப்போவதாகத் தெரிவித்துள்ளார். இதேநேரம் அமெரிக்கப் படைகளை எதிர்த்துப்போரிடுவதற்குக் கிழக்கு மாகாணத்தைத் தளமாகக்கொண்டு இயங்கும் ஒசாமா குழு மற்றும் பல முஸ்லீம் மதக்குழுக்கள் தயாராகி வருவதாகவும் இதனைக் கண்காணிக்கும் ஒரு நடவடிக்கையாகவே அமெரிக்கப் படைகள் கிழக்கு மாகாணத்திற்குச் சென்று வந்ததாக அறியமுடிகிறது. இதேநேரம் அமெரிக்கப் படைகளுக்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்தால் மாக்சிசத்தைப் பின்பற்றும் பல்லாயிரம் சிங்கள இளைஞர்களும் களத்தில் குதிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதேநேரம் இன்று மட்டக்களப்பில் பள்ளிவாசலொன்றில் தொழுகையைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டமொன்றில் அமெரிக்கப் படைகளை எதிர்த்துப் போராட்டங்களை நடாத்துவதென்று முஸ்லீம் அமைப்புகளைச் சேர்ந்த பலரும் முடிவெடுத்துள்ளனர். நன்றி:நிதர்சனம் |
|
« Next Oldest | Next Newest »
|