![]() |
|
இலங்கைக்கு 5 ஆயிரம் அமெரிக்க இராணுவத்தினர்!? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: அரசியல் / பொருளாதாரம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=36) +--- Thread: இலங்கைக்கு 5 ஆயிரம் அமெரிக்க இராணுவத்தினர்!? (/showthread.php?tid=6034) |
இலங்கைக்கு 5 ஆயிரம் அமெரிக்க இராணுவத்தினர்!? - anpagam - 12-29-2004 இலங்கைக்கு 5 ஆயிரம் அமெரிக்க இராணுவத்தினர்! இலங்கைத் தீவக கடற்புவி நடுக்க மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக அமெரிக்காவிலிருந்து 5 ஆயிரம் கடற்படை வீரர்கள் வருகை தர உள்ளனர். கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுதராலயம் இன்று இத்தகவலை அறிவித்துள்ளது. நன்றி:புதினம் - aathipan - 12-29-2004 உண்மையில் உதவவா அல்லது மதிப்பிடவா? - Mathivathanan - 12-29-2004 மருண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய்.. - vasisutha - 12-30-2004 காற்றுள்ள போதே தூற்றிக்கொள்! - ஊமை - 12-30-2004 இவர்கள் சரியாக திருமலையிலே தன்ன் தங்கள் தளத்தை நிறுவுவார்கள் பாருங்கள். - hari - 12-30-2004 Mathivathanan Wrote:மருண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய்..தெளிந்தவன் கண்னுக்கு அமேரிக்கா ஒரு பேய் தான், பெரிய சதி ஆரம்பம் - kuruvikal - 12-30-2004 அதுசரி இவையேன் இப்ப வருகினம்...வெள்ளி பாக்கவா...எல்லாம் நடந்து முடிஞ்சுது...வருமுன் காக்க வழியிருந்தும் செய்யாதவ இப்ப ஏன் படை கொண்டு வருகினம்...இந்தியா ஏற்கனவே வெளியார் யாருடைய உதவியும் தேவையில்லை என்று உவையின்ர நுழைவைத் தடுத்துப் போட்டுது....சம்பவம் நடந்து 24 - 48 மணி நேரத்துக்க வந்திருந்தாக் கூட பல குற்றுயிர்களைக் காப்பாற்றி இருக்கலாம்...அதுவும் இல்ல...இப்பதான் வருகினம்....ஏனோ....??! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- anpagam - 12-30-2004 <b>இந்தியப்படைகள் காலியில் அமெரிக்கப்படைகள் மாத்தறையில் !?</b> இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அழிவு ஒரு பிராந்திய யுத்தத்தை ஏற்படுத்துமா என்ற அச்சத்தினைப் பரவலாக மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது. அமெரிக்கப் படைகள் 5 ஆயிரம் பேர் உடனடியாக இலங்கையில் தரையிறங்குகின்றார்கள் இவர்களில் 300 படையினர் இந்தியக் கடற்படையினருடைய முகாமிற்கு அருகாமையில் முகாமிடவுள்ளார்கள். இதேநேரம் இந்தியக் கடற்படைகள் ஆயுதக்கப்பல்கள் யுத்த உலங்கு வானூர்திகள் என்று பலதரப்பட்ட ஆயதப்படையணிகள் காலியில் தரையிறக்கப்பட்டுள்ளது. இத்தகவலை அமெரிக்காவின் தேசிய தொலைக்காட்சியான சி.என்.என். அதிகம் முன்னுரிமை கொடுத்து வெளியிட்டு வருகிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு அமரிக்காவும் வேறு நாடுகளும் உதவி செய்வதை இந்திய மத்திய அரசு விரும்பவில்லையென்பதையும் சில முக்கிய இடங்களிலிருந்து தெரியவருகிறது. நன்றி: நிதர்சனம் - Mathan - 12-30-2004 நீண்ட நாட்களுக்கு பின் சோகமான நேரத்தில் வந்திருக்கின்றீர்கள் அன்பகம். இந்த கனாமி பேரழிவில் உதவி செய்வதில் கூட அரசுகள் அரசியல் செய்கின்றார்கள். ம் என்ன செய்ய ...... - aathipan - 12-30-2004 இந்திய யுத்தக்கப்பல் இரண்டு மருத்துவ வசதிகள் கொண்டதாக மாற்றப்பட்டு ஒன்று இலங்கைக்கும் ஒன்று இந்தோனேசியாவுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. - anpagam - 01-01-2005 <b>1500 U.S Marines to arrive in Sri Lanka</b> [TamilNet, January 01, 2005 11:24 GMT] U.S Ambassador to Sri Lanka , Jefferey Lunstead, and Colonel Thomas Collins, U.S Commander of U.S Disaster Response Assessment Team (DRAT) and USAID representative said in a press conference held at Hotel Galladhari in Colombo Saturday afternoon that 1300 U.S Marines are to arrive in Colombo in a U.S Essex class aircraft carrier, USS Bon Homme Richard, equipped with a helipad and supporting five helicopters on board. The Aircraft Carrier, USS Bon Homme Richard, which is to support full fledged U.S rescue operations in Galle, Amparai, Trincomalee and Jaffna coasts is also equipped with five small scale hovercrafts, the officials said in the press conference. The hovercrafts will engage in point to point rescue operations along the coasts, the officials added. A C-130 cargo carrier aircraft will also be supporting the rescue effort, the Ambassasdor said during the press conference. 200 US Marines are expected to arrive on Sunday afternoon or Monday morning to setup the required Command and Control system for the rescue operations. USS Bon Homme Richard, a 27,100-ton Essex class aircraft carrier, was built at the New York Navy Yard, Brooklyn, New York. Commissioned in November 1944, she went to the Pacific in March 1945 and in June joined the fast carriers in the combat zone and took part in the final raids on Japan. With the end of hostilities in mid-August, Bon Homme Richard continued operations off Japan until September, when she returned to the United States. "Magic Carpet" personnel transportation service occupied her into 1946. She was thereafter generally inactive until decommissioning at Seattle, Washington, in January 1947. <img src='http://www.tamilnet.com/img/publish/2005/01/ac_01_34124_140.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.tamilnet.com/img/publish/2005/01/ac_02_34126_140.jpg' border='0' alt='user posted image'> - KULAKADDAN - 01-01-2005 எல்லாம் பொட்டி தான் - anpagam - 01-02-2005 <b>யாழ்ப்பாணத்தில் 300 அமெரிக்கப் படையினர் தளமிடுவர்?</b> அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு வந்தடையவுள்ள சுமார் இரண்டாயிரம் விசேட படையினரும் இலங்கையின் பல பாகங்களிலும் தமது படைமுகாம்களை அமைக்கலாமென்று அறியமுடிகிறது. விசேட யுத்தக்கப்பல்கள் விமானம்தாங்கிக் கப்பல்கள் ஆகியவற்றுடன் அழிவுற்ற மக்களை மீட்கும் பணியென்று கூறிக்கொண்டு வருகைதரும் அமெரிக்கப்படைகள் காலி திருகோணமலை கொழும்பு யாழ்பாணம் ஆகிய இடங்களில் பிரதான இராணுவத் தளங்களை நிறுவுமென்றும் யாழ்ப்பாணத்திற்கான விசேட அமெரிக்க படைப்பிரிவு பலாலிக்கு விமானம் மூலமாக அனுப்பப்படலாமென்று எதிர்வு கூறப்படுகிறது. இவர்கள் பருத்தித்துறை நாகர்கோவில் உட்பட கடற்கரையோரங்களில் சிறு குழுக்களாக தொழில்படலாமென்று அரசியல் விமர்சகர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதேநேரம் அமெரிக்காவிற்கு மறைமுக அச்சறுத்தலைக் கொடுக்கம் நோக்குடன் இந்தியா உடனடியாகப் பத்துக்கு மேற்பட்ட யுத்தக்கப்பல்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதுடன் இந்தியக்கடற்படையும் தமது தீவிர தரையிறக்கத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய இலங்கை ஒப்பந்தத்தை சந்தர்ப்பமாக வைத்து இந்தியப்படைகள் தரையிறங்கியமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்க செய்தி நிறுவனமான சி.என்.என். தனது கவனத்தை அதிகம் இந்தியக் கடற்படையினரின் பக்கம் திருப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேநேரம் சி.என்.என். தொலைகாட்சியின் விசேட ஊடகவியளாளர்; தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் நிலக்கண்ணிவெடி காரணமாக வழித்துணையுடன் இன்று சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இத்தகவலை சீ.என்.என் தெரிவித்துள்ளது. நன்றி: நிதர்சனம் - tamilini - 01-02-2005 ஏன்க தமிழ் மக்களுக்கு எதாவது ஆப்பு வைக்கிற பிளான் இருக்கா என்ன..?? - thamizh.nila - 01-02-2005 என்ன தமிழினி இப்பிடி கேக்கிறியள்... இவங்களுக்கு தமிழ் மக்களுக்கு ஏதாவது தீங்கிழைக்காமல் தூக்கம் வருமா? இல்ல சாப்பிட்டது தான் செமிக்குமா? - AJeevan - 01-02-2005 <img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/01/20050101130917tsunami_airport_ap.jpg' border='0' alt='user posted image'> <b>இலங்கையில் நிவாரண உதவிகளைச் செய்ய அமெரிக்க 1500 துருப்பினர் வருகின்றனர்</b> கடற்கொந்தளிப்பு காரணமாக இலங்கையில் இதுவரையில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 28627 என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது; காணாமல் போனோர் எண்ணிக்கையும் 5040ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் நடைபெறும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு வெளிநாடுகளின் உதவி பெறுமளவில் குவிந்துவருகின்றது. இந்நிலையில் அமெரிக்கா தனது மரைன்ஸ் சிறப்புப் படையினர் 1500 பேரை ஹெலிகாப்டர்களை தாங்கிச்செல்லக்கூடிய பெரிய கப்பலொன்றில் இலங்கைக்கு அனுப்ப முடிவுசெய்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜெஃப்ரி லுன்ஸ்டட் இம்முடிவை வெளியிட்டுள்ளார். தரையிலும் நீரிலும் செல்லவல்ல ஹோவர்கிராஃப்ட்டுகள் 5இ மரைன்ஸ் ஹெலிகாப்டர்கள் 5 ஆகியவை அடுத்த வார இறுதிக்குள் இலங்கை வந்தடையும் என அவர் தெரிவித்துள்ளார். அதற்கு முன்பாக நாளைய தினமேஇ சுமார் 200 மரைன்ஸ் படையினர் இலங்கையைச் சென்றடைவார்கள் என அவர் குறிப்பிட்டார். நிவாரண உதவிப் பொருட்கள் மீட்புப் பணிகளில் உதவக் கூடிய நவீனக் கருவிகள் ஆகியவை அக்கப்பலில் கொண்டுவரப்பட இருப்பதாக அமெரிக்கத் தூதர் கூறியுள்ளார். ஊ130 ரக விமானம் ஒன்றிலும் மேலும் பல பொருட்கள் வரவிருப்பதாகவும் தேவைப்படும் பட்சத்தில் கூடுதலான அமெரிக்கச் சிப்பாய்கள் உதவிகளைச் செய்வதற்காக இலங்கைக்கு அனுப்பப்படலாம் என்றும் ஜெஃப்ரி தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு அமெரிக்கா தடை விதித்திருக்கும் பட்சத்தில்இ அவர்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உதவிகள் மேற்கொள்ளப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமெரிக்கத் தூதர்இ மனிதாபிமான தேவைப்படும் அனைவருக்கும் அமெரிக்கா உதவிக்கரம் நீட்டும் என்றும் இதில் அரசியலுக்கு இடமில்லை என்றும் தெரிவித்துள்ளார் http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml - anpagam - 01-02-2005 எது என்னவோ.... புலிகளும் சிங்களமும் மோதும் சந்தர்ப்தங்களை நாம் இனிவரும் காலங்களில் நாம் காணமுடியாவிட்டாலும்.... இந்திய அமெரிக்க பலவகை பட்டாசுகளையும் படங்களையும் வீடுகளில் இருந்தே இனி உலகம் பார்க்கும். காரணம்: Bollywood & Hoolywood சேர்து எல்வோ எடுக்கபோறார்கள் நாம் அமைதியாக இருந்து கொங்சக்காலம் படம்பார்கலாம். - thamizh.nila - 01-02-2005 குரங்கு பங்கு போட்ட கதைதான் இங்க நடக்க போறது... - shiyam - 01-02-2005 அடடா வந்திட்டாங்கள் இனி எப்படி கிழப்பிறதாம் - anpagam - 01-03-2005 மீட்புப் பணிகளின் பெயரால் கொழும்பை முற்றுகையிடுகிறது அமெரிக்க இராணுவம்? அமெரிக்காவின் 20 உலங்குவானூர்திகளுடன் விமானம் தாங்கி கப்பல் ஒன்று நேற்று கொழும்பை வந்தடைந்துள்ளது. இந்த கப்பலில் 200 அமெரிக்க படையினர் இறங்கியுள்ளனர். மேலதிகமாக 1200 படையினர் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் காலியில் தங்கியிருந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. தற்போது காலியில் இந்திய கடற்படையினர் தங்கியிருந்த மீட்பு பணிகளை மேற்கொண்டுள்ள நிலையில் அவர்களுடன் அமெரிக்க படைகளும் இணைந்து செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான அன்ரனோ சீ-130 ரக விமானங்கள் இரண்டு இன்று கட்டுநாயக்க வானூர்த்தி மையத்தை வந்தடைந்துள்ளது. இவற்றில் 30 படைவீரர்களுடன் மருந்துப் பொருட்களும் எடுத்து வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நன்றி:புதினம் |