பால் வாழைக்காய் குழம்பு
அறுசுவை சமையல் போட்டியில் அமோக மதிப்பெண்களைப் பெற்று குழம்புகள் பிரிவில் முதலிடம் பெற்ற குழம்பு இது. சமைத்து, ருசித்துப் பாருங்கள்.
தேவையானப் பொருட்கள்
தேங்காய் - 2
வாழைக்காய் - 2
பட்டை மிளகாய் - 5
மிளகு - 3 தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 50 கிராம்
நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
தேங்காயை அரைத்து 4 டம்ளர் பால் எடுத்துக் கொள்ளவும்.
பட்டை மிளகாய், மிளகு, சீரகம், சின்ன வெங்காயம் இவற்றை அம்மியில் வைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
பிறகு வாழைக்காயை தோல் உறித்து குண்டு குண்டாக நறுக்கி உப்பு, மஞ்சள் தூள் போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
அரைத்து வைத்துள்ள விழுதினை தேங்காய் பாலில் கரைத்து ஒரு பாத்திரத்தில் இட்டு வேகவிடவும்.
உப்பு போட்டு குழம்பு நன்றாக கொதித்தப் பிறகு வேக வைத்து எடுத்துள்ள வாழைக்காயை போட்டு சுண்ட கொதிக்க வைக்கவும்.
ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய்யில் கடுகு தாளித்து கொட்டவும். மீதி எண்ணெயை அப்படியே ஊற்றி சிறிது நேரத்தில் இறக்கவும்.
வெற்றிகரமாய் சுடப்பட்டது.
http://www.arusuvai.com/blog/2005/03/blog-post_15.html