Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
இளங்கோ சங்கம் மருவிய காலத்தில் (கி.பி. 100 -600) இருந்தவர். அவர் சேரலாதன் என்ற மன்னனின் மகனாகப் பிறந்தார். இவருடைய சகோதரன் சேரன் செங்குட்டுவன் ஆவான்.
இளங்கோ, செங்குட்டுவன் மற்றும் புலவர் கூலவாணிகன் சாத்தனார் (மணிமேகலையைப் பாடியவர்) ஆகியோர் இயற்கையைத் தரிசிக்க மதுரைப் பக்கம் உள்ள பெரியாற்றுப் பக்கமாகச் சென்ற வேளை, அருகிலுள்ள கிராமத்தில் உலவிய ஒரு கதையைச் செவிமடுத்தனர். ஒற்றை முலையுடைய ஒரு பெண் வேங்கை மரமொன்றின் கீழ் 15 நாட்கள் எதுவும் சாப்பிடாமல் இருந்த இறந்த கதைதான் அது. ஊர் மக்கள் அப் பெண்ணை பத்தினித் தெய்வம் என்று வழிபட்டனர். கதை கேட்டு உருகிய செங்குட்டுவன், கூலவாணிகன் சாத்தனாரை மேலதிக தகவல்களைப் பெற்றுவருமாறு கேட்டான்.
கூலவாணிகனும் மேலதிக தகவல்களைப் பெற்றுவந்து அப்பெண்ணின் பெயர் கண்ணகி என்று சொல்லி அவளின் துன்பக் கதையை செங்குட்டுவனுக்கும், இளங்கோவுக்கும் கூறினான். மன்னன் சேரலாதனுக்கும் இது தெரிய வரவே, அவர் கண்ணகியின் கதையை வைத்து காவியம் படைக்கும்படி இளங்கோவைக் கேட்டார். இப்படித்தான் சிலப்பதிகாரம் என்ற பெரும் புராணம் உருவானது.
<b> . .</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:பரமார்த்த குருவிகளுக்கு ஞாபகம் வரவில்லை என்பதைவிட தெரியாது என்பதே உண்மை.
_________________
யாரது..?? களக்குருவியாரோ..?? :mrgreen:
அம்பிகாபதி அமராவதி கதை தெரிந்தவர்கள் சொஞ்சம் சொல்லுங்களேன். நமக்கு தெரியாது. :?
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 27
Threads: 1
Joined: Feb 2005
Reputation:
0
கம்பனின் மகன்தான் அம்பிகாவதி. (சோழ?) மன்னனின் மகள் அமராவதி. இருவரும் காதலர்கள். நூறு செய்யுள் தொடர்ந்து பாடினால் தனது மகளை அம்பிகாவதிக்கு திருமணம் செய்ய சம்மதிப்பதாக மன்னன் அறிவித்தார். அம்பிகாவதி பாட அமராவதி ஒவ்வொரு பூ ஒரு செய்யுளுக்கு எடுத்து வைப்பதாகவும், அதில் முதலில் பாடிய காப்புக்கும் ஒரு பூவை தவறுதலாக <i>அமராவதி</i> போட்டதால் <i>அம்பிகாவதி</i> 99 தனது செய்யுளை நிறுத்தி விட்டதாக வரலாற்றுக் கதைகள் உண்டு.
<span style='font-size:16pt;line-height:100%'>திருத்தப்பட்டுள்ளது- இராவணன்</span>
;
Posts: 27
Threads: 1
Joined: Feb 2005
Reputation:
0
.
கம்பனும் மகன் அம்பிகாவதியும் மன்னனுடன் விருந்தில் இருக்கும் போது மன்னனின் மகள் பரிமாற அங்கு வருகிறார். அமராவதி நடந்து வருவதை பார்த்த அம்பிகாவதி ""இட்ட அடி நோவ எடுத்த அடி கொப்பளிக்க.."" எனப் படத்தொடங்கிவிட மன்னன் கோபம் கொண்டு கம்பனை பார்க்க கம்பன் '' கொட்டிக் கிழங்கோ கிழங்கு எனக் கூவினாள்..."" என அம்பிகாவதியின் பாடலுக்கு தெருவில் கொடிக்கிழங்கு விற்கும் பெண்ணுக்கு அந்த பாடலை மாற்றிப் பாடியதாகவும் மற்றொரு கதை உண்டு.
கிருபன் சொன்னதுபோல இது அம்பிகாவதி திரைப்படத்தை சார்ந்து நாம் அறிந்து கொண்டவைதான்
மெய்யான வரலாற்று ஆய்வாக கருத வேண்டாம்
;
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
பின்பு சிவாஜி - பானுமதி இணைந்து நடித்த அம்பிகாவதி படமும் வந்து சக்கை போடு போட்டது. இப்படத்தில் தான் சௌந்தரராஜன் சிந்தனை செய் மனமே எனத் தொடங்கும் பாடலை மூச்சு விடாமல் பாடியிருந்தார். சோழமன்னன் அம்பிகாபதியை வெறும் 100 பாடல்கள் பாடும்படி கேட்கவில்லை. சிற்றின்பம் கலக்காமல் 100 பாடல்கள் பாடும் படியே கேட்டான். அதற்கமைய அம்பிகாபதி பாடுவதாக அமைந்ததே மேற்கூறிய பாடல்.
:roll: :roll: :roll: :roll:
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
என்ன இது ஒரு பாடலை கூடப்பாடியிருக்கலாமே.. :mrgreen:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
சரி பாடிய பாடல்கள் எழுத்து வடிவில இல்லையா எண்ணியிருக்கலாமே.. அதைவிட 99 பாடல் பாடியவருக்கு ஒரு பாடல் மேலதிகமாய் பாடமுடியலையா..??? :evil: :x
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
போட்டிக்கு பாடுபவர் எண்ணிக் கொண்டிருக்க முடியாது. நடுவர்கள்தான் இதைச் செய்ய முடியும். அமராவதி விநாயகரைத் தொழும் காப்பையும் ஒரு பாடலாகக் கருதி 100 பாடல்கள் பாடிவிட்டீர்களென அம்பிகாவதியிடம் கூற அம்பிகாவதி உடனே அமராவதியை வர்ணித்து ஒரு சிற்றின்பப் பாடல் பாடி விடுகின்றான். பிறகு என்ன செய்ய முடியும்?????
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ஓ அப்படியா.. அப்ப துதியோட கணக்குச்சரி தானே.. பிறகென்ன.. அதுக்கென்ன அவசரம் உடனை அவாவை வர்ணித்துப்பாட..?? :mrgreen:
<b> .</b>
<b>
.......!</b>