[quote=ப்ரியசகி]<img src='http://img11.imageshack.us/img11/8788/eyes1hs.jpg' border='0' alt='user posted image'>
நீயும் திறவாமல்
நிஜமும் தெரியாது கண்ணே...
நீயும் மூடாமல்
நித்திரை வாராது கண்ணே...
நீயும் பாராது
அவன் விழியுனைக் காணாதே...
நீங்க முடியாமல் அது
சிலையாய் உறையாதே.....
அந்த
சிலையைக்கண்டு
ரசிக்க நினையாதே..
சிரித்து உன்னை
சிதற வைத்து விடுவானே...
இவன்...
இதயம் என்னை ஏற்காத போது
இமைகள் மட்டும் உனை ஏற்றதோ...
இதனைக்கண்டு ஏமாறாதே கண்ணே
இவள் உன்னை சுமப்பவள்..
இவளை உதறி செல்லாதே!!
கண்ணாடி முன் நின்று உனக்கு
கண்மை பூசி.....
தினமும் அழகு பார்ப்பவள் நானே...
கண்ணன் கண்கள் கண்டதும்
நீ பின்னே ஓடினால்...
நெஞ்சம் துடிப்பவளும் நானே...
கண்மையோடு போவாய்...நீ
அது கலையாமல்...
கண்மணியாய் வருவாயா...
இல்லயே...
கண்ணீரோடு தான் வருவாய்...
கண்டவள் நான் சொல்கிறேன்...
கடைசியாய் உன்னை வேண்டுகிறேன்.......
நீயில்லாமல் நான் இல்லை
என்று சொன்னவளை..
நீ இருந்ததால் தான்
நான் இல்லாமல் போனேன் என
சொல்ல வைத்து விடாதே கண்ணே......!!
நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்.. தொடருங்கள் <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->