![]() |
|
விழியின் மொழி......... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: விழியின் மொழி......... (/showthread.php?tid=3442) Pages:
1
2
|
விழியின் மொழி......... - ப்ரியசகி - 09-04-2005 <img src='http://img11.imageshack.us/img11/8788/eyes1hs.jpg' border='0' alt='user posted image'> நீயும் திறவாமல் நிஜமும் தெரியாது கண்ணே... நீயும் மூடாமல் நித்திரை வாராது கண்ணே... நீயும் பாராது அவன் விழியுனைக் காணாதே... நீங்க முடியாமல் அது சிலையாய் உறையாதே..... அந்த சிலையைக்கண்டு ரசிக்க நினையாதே.. சிரித்து உன்னை சிதற வைத்து விடுவானே... இவன்... இதயம் என்னை ஏற்காத போது இமைகள் மட்டும் உனை ஏற்றதோ... இதனைக்கண்டு ஏமாறாதே கண்ணே இவள் உன்னை சுமப்பவள்.. இவளை உதறி செல்லாதே!! கண்ணாடி முன் நின்று உனக்கு கண்மை பூசி..... தினமும் அழகு பார்ப்பவள் நானே... கண்ணன் கண்கள் கண்டதும் நீ பின்னே ஓடினால்... நெஞ்சம் துடிப்பவளும் நானே... கண்மையோடு போவாய்...நீ அது கலையாமல்... கண்மணியாய் வருவாயா... இல்லயே... கண்ணீரோடு தான் வருவாய்... கண்டவள் நான் சொல்கிறேன்... கடைசியாய் உன்னை வேண்டுகிறேன்....... நீயில்லாமல் நான் இல்லை என்று சொன்னவளை.. நீ இருந்ததால் தான் நான் இல்லாமல் போனேன் என சொல்ல வைத்து விடாதே கண்ணே......!! - Birundan - 09-04-2005 கவிதை நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் - shanmuhi - 09-04-2005 விழியின் மொழியால் பேசிய கவிதை அருமை. வாழ்த்துக்கள்... - Vishnu - 09-04-2005 வாழ்த்துக்கள் ப்ரி பின்னுறிங்க.... பின்னுங்க பின்னுங்க.... நல்ல இருக்கு உங்க கவிதை - Senthamarai - 09-04-2005 நன்றாக எழுதுகின்றீர்கள் பிரியசகி. வாழ்த்துக்கள் தொடர்ந்தும் எழுதுங்கள். - Rasikai - 09-04-2005 நீயும் திறவாமல் நிஜமும் தெரியாது கண்ணே... நீயும் மூடாமல் நித்திரை வாராது கண்ணே... அருமையான கவி வரிகள். வாழ்த்துகள் பிரியசகி தொடரட்டும் உங்கள் கவி - SUNDHAL - 09-04-2005 சுட்ட கவிதை நல்ல இருக்கு வாழத்துக்கள் சகி... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - ப்ரியசகி - 09-04-2005 சுட்டதா? hock: இப்ப போறன் அப்புறம..வந்து சொல்றேன்..சுட்டதா இல்லையான்னு.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- tamilini - 09-04-2005 Quote:நீயில்லாமல் நான் இல்லைஎன்ன பிரச்சனை தங்கையே.. உங்கட கவிதைகள் ஒரு மாதிரியிருக்கு. :? - கீதா - 09-04-2005 நல்ல கவிதை நன்றிஅக்கா - KULAKADDAN - 09-04-2005 பிரிய சகி, கவிதை நல்லயிருக்கு, வாழ்த்துக்கள். - அனிதா - 09-04-2005 கவிதை நல்லயிருக்கு.. வாழ்த்துக்கள் ப்ரியசகி.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 09-04-2005 விழி மொழி... விழி மொழி இரண்டு அர்த்தங்கள் இளையோட வடித்தது போல.. அழகாக இருக்கிறது...! வாழ்த்துக்கள்..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Re: விழியின் மொழி......... - Mathan - 09-05-2005 ப்ரியசகி Wrote:கண்ணன் கண்கள் கண்டதும் பல சமயங்களின் வாய் மொழி பேச முடியாத போது விழியின் மொழி தான் பேசுகின்றது. அதுவும் வாய் மொழி கேட்க முடியாத தூரத்தில் நிற்கும் போது கூட விழியின் மொழி புரிகின்றது. தவிர பல சந்தர்ப்பங்களில் ஈர்ப்பை விருப்பத்தை வெளிப்படுத்துவது கூட விழி மொழி தானே, கவிதை நன்றாக இருக்கின்றது, வாழ்த்துக்கள் ,,,, தொடர்ந்து எழுதுங்கள், - வெண்ணிலா - 09-05-2005 ரொம்ப நன்றாக எழுதுறீங்க சகி. சகி வாழ்த்துக்கள் சகி சொந்தக்கவிதையா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Re: விழியின் மொழி......... - Rasikai - 09-05-2005 Mathan Wrote:பல சமயங்களின் வாய் மொழி பேச முடியாத போது விழியின் மொழி தான் பேசுகின்றது. அதுவும் வாய் மொழி கேட்க முடியாத தூரத்தில் நிற்கும் போது கூட விழியின் மொழி புரிகின்றது. தவிர பல சந்தர்ப்பங்களில் ஈர்ப்பை விருப்பத்தை வெளிப்படுத்துவது கூட விழி மொழி தானே, மதன் உண்மையாவா? என்ன நல்ல அநுபவம் போல? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathan - 09-05-2005 என்ன உண்மை இல்லையா? Re: விழியின் மொழி......... - வெண்ணிலா - 09-05-2005 Rasikai Wrote:Mathan Wrote:பல சமயங்களின் வாய் மொழி பேச முடியாத போது விழியின் மொழி தான் பேசுகின்றது. அதுவும் வாய் மொழி கேட்க முடியாத தூரத்தில் நிற்கும் போது கூட விழியின் மொழி புரிகின்றது. தவிர பல சந்தர்ப்பங்களில் ஈர்ப்பை விருப்பத்தை வெளிப்படுத்துவது கூட விழி மொழி தானே, உண்மைதானே ரசிகை. பல இடங்களில் விழிகளால் கதைக்க முடியும் தானே. முகநயம் கூட புரியக்கூடியவர்களுக்கு புரியும் தானே. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- narathar - 09-05-2005 Mathan Wrote:என்ன உண்மை இல்லையா? வயசான ஆச்சி மாருக்கு கண்னெங்க தெரியப்போகுது ,விழியால பேசுறதுக்கு? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Rasikai - 09-05-2005 Mathan Wrote:என்ன உண்மை இல்லையா? hock: அது அனுபமுள்ளவர்களுக்குத்தான் தெரியும். இந்தச்சின்னப்பிள்ளையைக்கேட்டால்?
|