Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
Thala Wrote:பிரம்மச்சாரி எண்று சொல்பவர்கள் ஆனா அது வடமொழி.. தமிழ் என்ன???? :roll: :roll:
பிரமச்சாரி திருமணம் செய்யாமல் இருப்பவர் என்றாலும் அது முதிர்கன்னிக்கு ஈடான ஆண்பாலாக இருக்காது என்று நினைக்கின்றேன். விதவைக்கு ஆண்பால் தபுதாரன் என்றும் முதிர்கன்னிக்கு ஆண்பால் முதிர் ஆண் என்றும் ஒருவர் மடல் மூலம் சொல்லியிருந்தார். தபுதாரன் விதவைக்கு சரி ஆனால் முதிர்கன்னிக்கு இன்னும் சரியான ஆண்பால் தெரியவில்லை
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
வாழை மரத்தின் சபதம்
வளமான சூழ்நிலையில் வளர்வேன் - ஆனால்
வறியவரின் கைகளிலே தவழ்வேன்
மலிவான விலையின் நான் கடைகளிலே
கிடைப்பேன் - ஏழை
மக்களது ஆப்பிள் மரம் என்ற பெயர்
எடுப்பேன்!
மரங்களில் நான் ஏழை - எனக்கு
வைத்த பெயர் வாழை!
கருத்தாக்கிப் பிள்ளையினைப் பெற்றெடுத்துக்
கண்மூடும் புத்திரிநான் எனக்குக் கீழே
குருத்துவிடும் கன்றுக்கு வழியை விட்டுக்
குறிப்பறிந்து ஒதுங்குவதால்
தலைமுறையின் தத்துவத்தை புவிக்குக் காட்டும்
தடயம் நான்
வானத்தை தொடுவதற்குக் கனவு காணும்
வழக்கமில்லை என்னிடத்தில் மயக்கமில்லை
மானிடரின் புழுதிக்கால் பதியும் இந்த
மண்ணுடன் என் உறவதிகம்! ஆதலாலே
மரங்களில் நான் குட்டை மரம்
மனிதர்களின் கைகளுக்கு இலகுவாக எட்டும் மரம்
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
மானிடர் செய்யும் சிவப்பு விளம்பரம்
மதிலின் முதுகில் மாட்டியிருக்கும் - நானோ
தானாய் எழுந்து தட்டி கட்டிய
தரையின் பச்சை விளம்பரப் பலகை!
அழைப்பிதழ்கள் திருமணத்தின்
அறிமுகங்கள் நாங்கள்
அடையாள மரங்கள்
கல்யாண வீடுகளில் காவலுக்கு நிற்கும்
துவார பாலகர்கள்!
குட்டை மரமெனும் குறையை என்
பெரிய இலைகளால் பெயர்த்து தகர்த்தவன் நான்!
என் இலைகள்.....
மயிலிடம் கடன் வாங்காத
பச்சை நரம்புகளால் ஆன
தோகைகள்!
கலைகளில் இன்றியமையாத
சமையற் கலை - என்
இலை வாகனத்தில்
ஏறி வரும்போது
விரல் வரவேற்பு
விரைவாகக் கிடைக்கும்!
என் இலைகள் உபசரிப்பின் இலக்கியங்கள்
விருத்தினரின் அந்தஸ்தை
எடை போடும் இயந்திரங்கள்!
சோற்று புமியின்
சொர்க்க வாசல்கள்
ஏழை வயிறுகளின்
இலட்சியக் கனாக்கள்!
இந்த மனிதர்கள்
உண்பதற்கு முன்னர்
உணவு இலை என்பார்கள்
உண்டு முடித்த பின்னர்
எச்சில் இலை என்று எறிந்து விடுவார்கள்
கூடத்தில் மரியாரைப் புச்சு
குப்பைத் தொட்டில்களில் எங்கள்
ஆயாச மூச்சு
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
தொட்டி இலையையும்
துடைத்துச் சாப்பிட
இந்த தேசத்தின்
தெரு ராஐhக்கள்
ஒருவரோடொருவர்
கட்டிப் புரள்கிறபோது
எதிர் கால இருட்டை எண்ணிப் பதைக்கிற என்
இதய வேதனைகளுக்கு
உவமைகள் ஏது?
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
வாழை மரத்தின் சபதம் 2
மனித மரங்களைப் பார்த்துப் பார்த்து
மற்ற மரமெல்லாம் வேர்த்து வேர்த்து
மனப் புழுக்கத்தின் குலுங்கல் - அதில்
வந்து கனிந்தவவை பழங்கள்!
பகை மூட்டிப் பழுக்க வைக்கும்
பழங்களினால் உலகில்
பாகிஷ்தானில் நடந்தது போல
பாகப் பிரிவிணை நடக்கும்
புகை மூட்டிப் பழுக்க வைக்கும் - என்
புரட்சிப் பழங்களினால்
பு வயிறு சிரிக்கும்
பொலிவிழந்த உடல் செழிக்கும்
மறுபடியும் உழைப்பதற்குப்
புதுவலிமை பிறக்கும்
சீவாத தலையோடு பிறருடைய தலையைச்
சிங்காரம் செய்வதற்குப் புச்சாரங்கள் தொடுக்கும்
பாவடைக் காரிகளின் நளின விரலோடு
பழக்கமுள்ள நாருக்குப் படைப்பாளி நான்!
அந்த நார்கள்
என்னுடைய
உடை உரிப்புக்கள்
சத்தம் போடதா
சதைக் கிழிசல்கள்!
புவைப் போல் உயர் பிறப்பு
இல்லாத நாரை
புக்களுடன் சேர்த்து வைத்துச்
சம மரியாதை
வாங்கித் தந்ததென்
சுய மரியாதை!
என் மட்டைச் சட்டையோ
சேர்ந்த நாசிக்குச்
சுறுசுறுப்புக் கொடுக்கும்
மூக்குப் பொடியின்
தூக்குத் தூக்கி!
புகையிலைத் தூளின்
பொட்டலப் பெட்டகம்!
மரங்களில் நான் ஏழை - எனக்கு
வைத்த பெயர் வாழை
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
வாழை கவிதை அருமை. நன்றி ரமா
----------
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
வாழை மரத்தின் சபதம் 3
எப்போதும் நான் என் இலைச் சிறகுகளை விரித்தே வைத்திருப்பதால்
பறக்கத் தயாராயிருக்கும் மிக் விமானம் போல பார்வைக்குத்
தெரிகிறேன்.
இதனால் இந்த மண்ணில் பெருகிவரும்
மாபெரிய கொடுமைகளை
கோடையிடித் தாக்குதலை
கூக்குரலில் ஆர்ப்பரிப்பை
கொலைகளது கணக்கெடுப்பைக்
கண்ட மனமொடிந்து
மனமிடிந்து என்றேனும்
என்றேனும் ஒரு நாள்
இந்த புமியிலிருந்து
பறந்து போய்விடுவேன்
என்று
எவரேனும் எதிர்பார்த்தால்
அவர்கள் எமாந்து போவர்கள்!
நான்
மண்ணில் வேரோடி
மாநிலத்தில் கால் பதித்து
வீசும் புயற்காற்றை
விழும் வரைக்கும் நின்றெதிர்ப்பேன்
நின்றெதிர்த்த முடிவினில் நான்
நிலத்தில் விழுந்து விட்டால் என்
கன்றெதிர்க்கும்! கன்றுகளின்
கன்றெதிர்க்கும்!
நான்
வெட்ட வெட்டத்
துளிர்ப்பேன் தழைப்பேன்
இறப்பின் மடியினில்
கண்கள் விழிப்பேன்
என்
ஒவ்வொரு இறப்பும்
ஒவ்வொரு பிறப்பு!
ஒவ்வொரு பிறப்பும்
தனித் தனிச் சிறப்பு!
மானுட சந்ததி
மறையாத சந்ததி
நானும் அந்த
ஐpவ சங்கிலி
அறுந்து விடாமல்
தொடர்ந்து வருகிற
தவிப்பின் துடிப்பு!
புமியின் புல்லரிப்பு
புதுமைகிளன் இனைப்பு
புதுயுகத்தின் கனைப்பு!
நான் தனி வாழை அல்ல
வாழையடி வாழை!
-------------------------------------
Posts: 1,660
Threads: 21
Joined: Jul 2005
Reputation:
0
என்ன வித்யாசமான கற்பனைகள்...சூப்பராக இருக்கு..ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கற்பனை என்பது உண்மையாத்தான் இருக்கு....
..
....
..!
Posts: 112
Threads: 10
Joined: Sep 2005
Reputation:
0
மு. மேத்தாவின் கனவுக் குதிரை என்னும் தொலகுப்பிலிருந்து
சில கவிதைகள்:
<b>உனக்குத் தெரியுமா</b>
<b>
முகம் எனக்குத் தெரியாது
உன்
முகவரியும் தெரியாது
ஆனால்
பம்பரம் சுற்றும்
நாளிலிருந்து
உன்னைத்தான்
சுற்றி வருகிறேன்....</b>
<b>காதல் காற்று</b>
<b>மூச்சு விட மறந்துவிட்டேன்
என் வீட்டில்
உன்னைப் பற்றி
பேச்சு வந்ததால்</b>
இன்னும் தொடரும்.......
.
Posts: 2,542
Threads: 15
Joined: May 2005
Reputation:
0
ம்ம் அருமையான கவிதைகள் ... அவரின் கவிதைகளை அறிய தந்தமைக்கு நன்றி குமரன் அண்ணா...
Posts: 189
Threads: 11
Joined: Jul 2005
Reputation:
0
நன்றிகள் ரமா , குமரனுக்கு . வாழை மரத்தின் சபதம் அருமை.
....
Posts: 189
Threads: 11
Joined: Jul 2005
Reputation:
0
[b] ரத்தம் வெவ்வேறு நிறம்
அங்கே
பிணங்கள் விழுந்து கொண்டிருக்கின்றன;
நாம்
'எத்தனை விக்கெட்டுகள் விழுந்தன'? என்று
விசாரித்துக் கொண்டிருக்கிறோம்
அங்கே
குண்டுகள் வெடித்துக் கொண்டிருக்கின்றன;
நாம்
பட்டாசு வெடித்துப்
பரவசப் பட்டுக் கொண்டிருக்கின்றோம்
அவர்கள்
வேட்டையாடப்பட்டுக்
கதறிக் கொண்டிருக்கிறார்கள்;
நாம்
வெள்ளித் திரைகளுக்கு முன்
விசிலடித்துக் கொண்டிருக்கிறோம்
அவர்கள்
கற்பழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்;
நாம்
'கற்பில் சிறந்தவள் கண்ணகியா ? சீதையா?' என்று
பட்டி மண்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம்
அவர்கள்
வெளிச்சத்தின் விளைச்சலுக்கு
ரத்தம் சொரிந்து கொண்டிருக்கிறார்கள்;
நாம்
இருட்டுக் காடுகளுக்கு
வேர்வை வார்த்துக் கொண்டிருக்கிறோம்
அவர்கள்
சயனைட் அருந்திக் கொண்டிருக்கிறார்கள்;
நாம்
அதர பானம் பருகிக் கொண்டிருக்கிறோம்
இதில் வியப்பேதும் இல்லை
அவர்கள் கவரி மான்கள்
நாம் கவரிகள்
இதோ
தேவ வேடம் போட்ட சாத்தான்கள்
வேதம் ஓதுகின்றன
இதோ
ரத்த பற்களை மறத்த ஓனாய்கள்
நீரைக் கலக்கிய பழியை
ஆடுகளின் மீது சுமத்திக் கொண்டிருக்கின்றன;
இதோ
சித்தாந்த வித்துவான்கள்
ஒப்பாரியில்
ராகப் பிழை கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள்
இதோ
வெள்ளைக் கொடி வியாபாரிகள்
விதவைகளின் புடவைகளை
உருவிக் கொண்டிருக்கிறார்கள்
அன்று
அசோகன் அனுப்பிய
போதி மரக் கன்று
ஆயுதங்கள் பூத்தது
இன்று
அசோக சக்கரத்தின்
குருட்டு ஓட்டத்தில்
கன்றுகளின் ரத்தம்
பெருகிக் கொண்டிருக்கிறது
தாய் பசுவோ
கவர்ச்சியான சுவரோட்டிகளைத் தின்று
அசை போட்டுக்
கொண்டிருக்கிறது.
....
Posts: 112
Threads: 10
Joined: Sep 2005
Reputation:
0
மேத்தாவின் மற்றுமொரு அற்புத கவிதை இது....
<b>ஒரு வாரம் போர் நிறுத்தம்</b>
<b>குவிந்த பிணங்களைக்
குழிதோண்டிப் புதைக்க
அல்லது-
கொளுத்திமுடிக்க
அவகாசம் வேண்டாமா...
அதற்காகத்தான்!</b>
.
Posts: 189
Threads: 11
Joined: Jul 2005
Reputation:
0
போதாது
இன்னும் கொஞ்சம்
ரத்தம் கொண்டு வா
பூர்த்தி செய்ய வேண்டும்
புத்தரின் ஓவியத்தை
....
Posts: 74
Threads: 2
Joined: Oct 2005
Reputation:
0
sakthy Wrote:காத்திருக்கும் வரை
நம் பெயர்
காற்றென்றெ
இருக்கட்டும்
புறப்பட்டு விட்டால்
புயலென்று
புரிய வைப்போம்.
அட! எந்தக் கவிதையில் மேத்தா இப்படி எழுதியிருக்கிறார்?
என் கையெழுத்தாயிற்றே இது....!!!
-----------------
-----------------
-----------------