Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பொருளாதாரச் சமத்துவம் சாத்தியப்படாத பகற்கனவா?
#21
இவ்விடயத்திற்கு சரியான உதாரணம்
உலகின் பெற்றோலிய உற்பத்திகளின் தன் கட்டுப்பாடுகளின் கீழ் கொண்டு வரத் துடித்த அமெரிக்கா அதன் முதற் கட்டமாக பெற்றோலிய உற்பத்தியில் முதலிடம் வகித்த சவுூதி அரேபியாவை இலகுவாக அமுக்கியது இரண்டாவது இடத்திலிருந்த ஈராக்கை அமெரிக்காவால் ஒன்றும் செய்ய முடியாதிருந்தது. ஈராக் பல நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு நியாய விலையில் பெற்றோலியப் பொருட்களை விற்று வந்தது. இது பெரும் தலைவலியை அமெரிக்காவிற்கு ஏற்படுத்தியிருந்தது. தற்போது இல்லாத ஒரு பொய்யைச் சொல்லி ஈராக் மீது போர் தொடுத்து தன் எண்ணத்தை நிறைவேற்றி விட்டது. இப்போது அமெரிக்காவிற்கு ஜலதோசம் பிடிக்கும் போதெல்லாம் நாம் தும்ம வேண்டியுள்ளது. மாக்ஸின் கொள்கைகள் தோற்றுப் போய் விடவில்லை. தப்பான வழிநடாத்தல்களாலும் பல நாடுகளின் வறுமை நிலைகளாலும் அமெரிக்கா போன்ற நாடுகளின் அடக்கு முறைகளாலுமே தோல்வியைத் தழுவியிருக்கின்றன.
Reply
#22
kurukaalapoovan Wrote:
Jude Wrote:இந்த கருத்துக்கு ஆதாரம் தருவீர்களா? போரால் பாதிக்கப்பட்ட, எந்த நாடுகள் முதலில் சமவுடமை பொருளாதாரத்தாலும் பின்னர் முதலீட்டு பொருளாதாரத்தாலும் முன்னேறியுள்ளன?

சினாவைத் தயக்கமின்றி கூறலாம்.

சீனா போரினால் பாதிக்கப்பட்ட நிலையில் சமவுடமை பொருளாதாரத்தை தழுவி முன்னேறவில்லை. பொதுவுடமை பொருளாதாரத்தை நிலைநாட்ட, போரை தொடங்கி, வெற்றி பெற்று, பொதுவுடமை பொருளாதாரத்தில் வாழ்ந்து, இன்று அது தவறு என்று தமது இன்றைய மாணவர்களுக்கு போதிக்கும் நாடு. இன்று சீனாவில் "மாவோசெதுங் தவறு செய்து விட்டார்" என்றே பாடசாலைகளில் போதிக்கப்படுகின்றன. திறந்த முதலீட்டு பொருளாதாரத்தை அறிமுகப்படுத்திய டெங்சாபெங், இன்று <b>"சீனாவை மாவோவின் இருண்ட காலத்திலிருந்து மீட்ட தேசபிதாவாக"</b> மாணவர்களுக்கு போதிக்கப்படுகிறார்.

kurukaalapoovan Wrote:மூதலீடு என்பது இலாபநோக்கோடு தான் என்றும் மேற்கொள்ளப்படுவது ஆனால் பொருளாதார இலாப நோக்கோடுதான் நீங்கள் கூறும் நாடுகளில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டனவா? 2ஆம் உலகயுத்த முடிவின் பின்னர் போரினால் அழிந்த மற்றய நாடுகள் போல் மேற்கு யேர்மனி அதிவிசேட உதவிகளின்றி தன்னை மீளக்கட்டி எழுப்ப முற்பட்டது, ஆனால் தோல்வி கண்டது. மக்கள் போராட்டங்கள் ஆட்சி மாற்றங்கள் என வந்தது. இது முதலாளித்துவ பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் மேற்குலகத்திற்கு ஒரு பிரச்சாரப்பிரச்சனை. காரணம் கிழக்கு யேர்மனியை விட மேலான வாழ்வுத்தரத்தை காட்டவேண்டும். மேலும் 1வது உலக யுத்தத்தின் பின்னர் உருவான பொருளாதாரப் பிரச்சனைகள் வேலையில்லாத்திண்டாட்டங்கள் தான் மக்களை பாசிசவாதத்தை எற்றுக் கொள்ளும் மனநிலையை உண்டாக்கியது எனவும் உணரப்பட்டது. இதன் விளைவுதான் மார்சல் பிளான்.

யப்பானை அணுகுண்டு போட்டு அழித்த பொறுப்பினால் யப்பானிற்கு விசேட முதலீடுகள் வணிகச் சலுகைகள் வழங்கப்பட்டது அமெரிக்காவினால். கெரிய யுத்தக்காலத்தில் சிங்கப்பூர் அதன் பூகோள நிலையில் பின்தளமாக செயற்பட்ட தால் முதலீடுகள் வந்தன (யப்பானும் இதனால் ஓரளவு பயனடைந்தது). தென்கொரியாவிற்கு உதவிகள் (முதலீடுகள், ஏற்றுமதி வியாபாரச் சந்தர்ப்பங்கள் ) வழங்கப்பட்டது வடகொரியாவைவிட உயர்நிலையில் காட்டவேண்டி பிரச்சார தேவையினால். தாய்வானை பொருளாதாரரீதியலி தன்னிறைவடைந்த ஒரு சுயாதின நிர்வாக கட்டடைமைப்பாக உருவாக்குவதற்கு பெருளாதாரவிதிகளுக்கு அப்பாற்பட்ட விதிகள் அங்கு மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளை தீர்மானித்தன.
அரசியல் இராஜதந்திர பின்னணியின்றி பொருளாதார அடிப்படையில் மாத்திரம் நீங்கள் கூறிய நாடுகளுக்கு முதலீடுகளும் அது சார்ந்த சந்தைப்படுத்தல் சந்தர்ப்பங்களும் கிடைத்திருக்குமா?

பொருளாதாரம் மற்ற காரணிகளை தவிர்த்து தனித்து இயங்கும் ஒன்றல்ல. மேற்படி நாடுகள் போரினால் பாதிக்கப்பட்டவை. போர் இடம்பெற்றதற்கும் அது முடிந்ததற்கும் காரணங்கள் உண்டு. அந்த காரணங்கள் பொருளாதாரத்தையும் நிர்ணயிப்பத்தில் பங்குபற்றுகின்றன. ஆகவே இந்த போரினால் பாதிக்கப்பட்ட நாடுகள், இன்று பொருளாதாரத்தில் முன்னேறியிருக்கின்ற நிலையில், அவை சமவுடமை பொருளாதாரத்தை தழுவி முன்னேறவில்லை முதலீட்டு பொருளாதாரத்தையே தழுவி முன்னேறின என்பதே யதார்த்தமாகும்.
''
'' [.423]
Reply
#23
Vasampu Wrote:மாக்ஸின் கொள்கைகள் <b>தோற்றுப் போய் விடவில்லை</b>. தப்பான வழிநடாத்தல்களாலும் பல நாடுகளின் வறுமை நிலைகளாலும் அமெரிக்கா போன்ற நாடுகளின் அடக்கு முறைகளாலுமே <b>தோல்வியைத் தழுவியிருக்கின்றன</b>.
<span style='font-size:27pt;line-height:100%'>
ஆக தோற்றுப்போய் விடவில்லை, தோல்வியை தழுவியிருக்கின்றன.....</span>
''
'' [.423]
Reply
#24
நன்றி äட், சீனப்புரட்சிக்கு முந்தய காலகட்டத்தில் அதன் பொருளாதார நிலைபற்றி தெரிந்ததை எழுதுங்கள் அல்லது இணைப்புக்கள் இருந்தால் தரவும்.

நீங்கள் ஒத்துக்கொள்ளும் "எனைய காரணிகள்" ஒரு நாட்டிற்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக முதலீட்டுப்பொருளாதாரம் தான் முன்னேற உதவும். அவை சாதகமாக இல்லாதவிடத்து முதலீடு செய்பவர்களின் குறுகிய கால இலப எதிர்பார்ப்புக்களை நிவர்த்தி செய்வது கடினம். மற்றும் பல்நாட்டு தொழில்நிறுவனங்கள் நாட்டின் உள்ளுர் சந்தையின் பெறுமதி என்ன அதை எவ்வாறு தமதாக்கிக் கொள்ளலாம் என்ற எண்ணங்களோடுதான் அணுகு முறையிருக்கும். சில வெளிநாட்டு முதலீடுகள் உள்ளுர் சந்தைக்கான ஏகபோக உரிமையோடும் இணைக்கபடுவதும் உண்டு. உள்ளுர் தயாரிப்புக்களிற்கு பாதுகாப்பிருக்காது. போரினால் சந்ததிகளாக பாதிக்கப்பட்ட சமுதாயத்தில் பொருளாதார விளக்கங்கள் சந்தைப்படுத்தல் தயாரிப்புதுறை நிபுணத்துவம் என்பன வளர்ச்சி அடைந்த நாடுகளோடு போட்டி போடும் அளவிற்கு ஆரம்பத்தில் எதிர்பார்க்கமுடியாது. உள்ளுர் தயாரிப்புக்களை ஊக்குவித்து இறக்குமதிக்கட்டுப்பாடுகளை விதித்து கொடிய போரைமட்டுமே அறிந்திருந்த மக்களை ஒரு முதலாளித்துவ முதலீட்டு பொருளாதாரத்தின் சவால்களை எதிர்கொள்ள கொஞ்சம் கொஞ்சமாக தயார்படுத்த வேண்டும். இந்த பின்னணியில் தான் planned economy இல் ஆரம்பித்து சமுதாயத்தை தயார்படுத்திக் கொண்டு கட்டுப்பாடுகளை தளர்த்தி market economy உள்வாங்க முனையவேண்டும் என்று நினைக்கிறேன்.

சீனாவோடு ஒப்பிடும் போது குறைவாக இருந்தாலும் இந்தியா கூட 1980கள் வரை பல இறக்குமதிக் கட்டுப்பாடுகளை வைத்திருந்தது. இன்று இந்த 2 நாடுகளிலும் இவை தளர்த்தப்பட்டதை "தவறை திருத்திக் கொண்டதாக" எடுப்பதா இல்லை "நாட்டு மக்கள் தயார்படுத்தப்பட்டுவிட்டார்கள் என்று போட்டியை எதிர்கொள்ள திறந்துவிடப்பட்டிருக்கிறது" என எடுப்பதா?
Reply
#25
சீனப்புரட்சியோ அல்லது இரசியப் புரட்சியோ அல்லது கியுூபா புரட்சியோ தவறு என்று வாதிடுவது பொருத்தமற்றதாயிருக்கும் என்று எண்ணுகின்றேன். இந்தப்புரட்சிகள் அந்தக் காலகட்டத்தில் நிலவிய அடக்குமுறைகளுக்கெதிரான ஒரு கிளர்வாயிருந்தன. நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்திற்குட்பட்ட முதலாளித்துவத்தின் சுரண்டல் பண்பு மேலோங்கியிருந்த காலகட்டத்தில் இவை அவசியமானவையாக இருந்தன. அதன் பின்னர் உருவாக்கப்பட்ட சமத்துவ பொருளாதார கட்டமைப்பின்; பல அம்சங்கள் ஏற்றக் கொள்ளப்படக்கூடியதொன்றே.

ஆனால் அந்தப் பொருளாதார அமைப்பின் நெகிழ்வற்ற தன்மை, மக்களின், பொருளாதாரத்தின் தேவைகளை உள்வாங்க மறுத்த போக்கு அதன் முன்னேற்றத்தை தடுத்தன.

முதலாளித்துவத்தில் பலவகை (அதனை முதலாளித்துவம் என்று அழைப்பதா அல்லது சோசலிசம் என்று அழைப்பதா என்பதே விவாவத்திற்குரியது) ஆங்கிலோ அமெரிக்க, ஐரோப்பிய, கிழக்காசிய என்று அவை வேறுபட்டன. ஐரோப்பிய முதலாளித்துவத்தை மனித முகத்துடன் கூடிய முதலாளித்துவம் என்றும் கூறப்படுவதுண்டு.

குளக்கோட்டன் கூறிய திட்டமிடப்பட்ட பொருளாதாரக் கொள்கை என்பது தனியே சோசலிச பொருளாதாரக் கோட்பாட்டை மட்டும் கொண்டதாக இருக்கவேண்டியதென்பது அவசியமில்லை. சந்தைப் பொருளாதாரம் திட்டமிடப்பட்ட பொருளாதாரத்தின் ஒரு அம்சமாக இருக்கலாமல்லவா. அந்தந்த நாட்டின் பொருளாதார அரசியல் சமூக கட்டுமாணங்களுக்கேற்றவாறான ஒரு திட்டமிட்ட பொருளாதார அமைப்பு. இந்த திட்டமிடுதலில் முதலாளித்துவத்தின் அம்சங்களை கூடுதலாக சேர்ப்பதா அல்லது கம்யுூனிசத்தின் அம்சங்களை சேர்ப்பதா என்பது எப்போதுமே தொடர்ச்சியற்ற விவாவத்திற்குட்பட்ட ஒருபொருளாகவேயிருக்கும்.

சீனா இந்தியா விடயத்தில் இன்று கூட அவர்களது அதீத பொருளாதார வளர்ச்சி வேகம் எந்தளவுக்கு எல்லா மக்களையும் சென்றடைகின்றது என்பது ஆராயப்பட வேண்டியதொன்று. சில கணிப்பின்களின்படி இன்றும் 80 வீதமான மக்களில் அந்த நாடுகளின் வளர்ச்சி எந்த ஆரோக்கியமான மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக அந்த நாடுகளில் பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கா கைக்கொள்ளப்படும் முறைமைகள் இயற்கையை சீரழிவிற்கு உள்ளாக்குவதால் அது எல்லா மக்களையும் பாதிக்கின்றது.

ஒரு பக்கம் பொருளாதார வளர்ச்சி தனியே இலக்கங்களில் மட்டும் எட்டப்படுகின்றதா, அல்லது பரந்து பட்ட மக்களுக்கும் அதன் பலாபலன் வழிந்தோட வழிசெய்யப்படுகின்றதா, அந்த பொருளாதார வளர்சியின் போது எமது இயற்கையை எப்படி கனம்பண்ணுகின்றோம், அது எப்படி அடுத்த சந்ததியில் தாக்கத்தை ஏற்படுத்தப்போகின்றன என்பன நிச்சயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டியன. இவற்றிற்கான பதில் தனியே முதலாளித்துவத்திலோ அல்லது தனியே கம்யுூனிசத்திலோஇருப்பதாக தெரியவில்லை.
Reply
#26
ஒத்துக்கொள்ளுகிறேன், ஏலவே உள்ள ஒரு கொள்கையோடுதான் முற்று முழுதாக இணைத்துப்பார்கிறோம், விமர்சிக்கிறோம் (sterotyping). நமது நாட்டிற்கு தேவையானதுகளை ஏற்றவாறு பொறுக்கி எடுக்க வேண்டும்.
Reply
#27
ம் இங்கே பல்வேறு பொருளாதரக் கட்டமைப்புக்கள் ஒன்றாக எண்ணப்பட்டு ஆரயப் படுகிறது என்று எண்ணுகிறேன்.

ஜூட் மற்றும் மணிமாறன் எழுதியது போல் வினத்திறனை ஊக்குவிப்பது இந்த இலாபம் ஈட்டும் நோக்கிலான முதாலாளித்துவப் பொருளாதார அமைப்பே ஆகிலும்.ஈட்டிய இலாபம் அல்லது உபரி அனைவருக்கும் சமமாகப் பங்கிடப் படுகிறதா என்பது கேள்விக் குறியே.உதாரணத்திற்கு அண்மயில் அமெரிக்காவில் கட்டிரீனா பாதிப்பில் எவ்வறு அமெரிக்க கறுப்புஇன மக்கள் மூன்றாம் உலகை விடக் கேவலமான முறயில் வாழ்ந்தார்கள் என்பதுவும் எவ்வாறு அவர்கள் கைவிடப் பட்டவர்களாக இருந்தார்கள் என்பதுவும் மிகத் தெளிவாகத் தெரிந்த உண்மை ஆகும்.மேலும் திறந்த பொருளாதாரம் என்று முதலாளித்துவ அரசுகளால் சொல்லப் படும் பொருளாதார அமைப்பு முறைகள் உண்மயில் திறந்தவை அல்ல.இங்கே அமெரிக்க அரசாங்கத்தால் பல்வேறு வகையான கட்டுப் பாடுகள் அரசியல்,இராணுவ, மற்றும் பொருளாதாரத் தடைகள்,இறக்குமதி மானியங்கள்,தடைகள் மூலம் நிறை வேற்றப் படுகிறது.
உலகப் பொருளாதார முறமை ஆனது அமெரிக்க மற்றும் மேற்குலக இராணுவ மேலாதிக்கத்தால் உலக வங்கி சர்வதேச நிதியம் என்பவற்றால் நிர் நயிக்கப் படுகிறது.இதனை உலகமயமாக்கலின் உண்மைகள் என்று பிரேசிலச் சேர்ந்த உலக வங்கியின் முன்னால் தலைவர் ஒருவர் எழுதிய புத்தகத்தில் ஆதாரங்களுடன் வெகு விளக்கமாக எழுதி உள்ளார்.

இங்கே முதாளித்துவமானது பொருளாதரத்தின் கீழ் மட்ட நிலயில் அதாவது கொடுக்கல் வாங்கல் நிகழும் நிலயில் ,மனித சுய நலத்திற்கு தீனி போடக் கூடிய வகையில்
சாதகமானதைப் போல் அமைந்திருந்தாலும்.குவியப்படுத்தப்படும் இந்த உபரிகள் பல்வேறு படி நிலைகளைக் கடந்து ஈற்றில் ஒரு இடத்திலே குவிகின்றது.இதுவே பொருளாதாராச் சமனிலைகளையும் ,மக்களின் வாழ்கைத் தரத்திலே ஏற்றத் தாள்வுகளையும் உருவாக்கிகிறது.

ஏற்றத் தாழ்வுகள் துலாமபரமாகத் தெரியும் நிலைகளில் முரண்மாடுகள் போராட்டங்களாக வெடிக்கின்றன.இவற்றை நிவர்த்தி செய்யவே ஒரு வகையிலான கலப்பு பொருளாதக் கொள்கைகள் பல நாடுகளில் நடைமுறயில் உள்ளன.இதுவே பொதுவாக ஐரோப்பவில் உள்ள ஜனனாயக முதலாளித்துவம்.
Reply
#28
narathar Wrote:ஜூட் மற்றும் மணிமாறன் எழுதியது போல் வினத்திறனை ஊக்குவிப்பது இந்த இலாபம் ஈட்டும் நோக்கிலான முதாலாளித்துவப் பொருளாதார அமைப்பே ஆகிலும்.ஈட்டிய இலாபம் அல்லது உபரி அனைவருக்கும் சமமாகப் பங்கிடப் படுகிறதா என்பது கேள்விக் குறியே..


சமமற்ற உழைப்பின் பலன் சமமாக பங்கிடப்படுவதை கடினமாக உழைத்தவர்கள் விரும்ப மாட்டார்கள். ஏனென்றால் அவர்களது கடின உழைப்பின் பலன் பொறுப்பற்ற உழைக்கும் விருப்புமற்ற பலருடன் சமமாக பங்கிடப்பட்டு கொடுப்பதை அவர்கள் அநீதி என்று கருதுகிறார்கள்.

உழைப்பின் அளவும் ஆர்வமும் முயற்சியும் ஆற்றலும் அறிவும் சமமற்ற மனிதர்களை கொண்ட உலகில், உழைப்பின் பலனை சமமாக பங்கிட முயன்ற பொதுவுடமை நாடுகளில், உழைப்பின் அளவும் அதற்கான ஆர்வமும் முயற்சியும் ஆற்றலும் தேவையற்றதாகி, குன்றி, பொதுவுடமை வல்லரசுகள் மறைந்து, முதலீட்டு நாடுகள் தோன்றியது வரலாறு.

உழைப்பின் பலன் சமமாக எல்லோருக்கும் பங்கிடப்பட வேண்டும் என்ற கோரிக்கை நியாயமற்றதும் நடைமுறையில் சாத்தியப்படாததும் ஆகும். மாறாக மக்கள் யாவருக்கும் அடிப்படை தேவைகளான உணவு உடை உறையுள் மருத்துவ வசதிகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமானது. ஐரோப்பிய நாடுகளும் கனடா அவுஸ்திரேலியா போன்ற நாடுகளும் அந்நிய நாட்டு அகதிகளுக்கு கூட உணவு உடை உறையுள் மற்றும் மருத்துவ வசதிகளை உறுதி செய்கின்றன. இதற்கான பணம் வணிகர்களின் வருமான வரியில் இருந்து பெறப்படுகின்றது. இந்த அடிப்படை வசதிகளின் தரம் பொதுவுடமை நாடுகளில் உள்ள உழைப்பாளிகளின் வாழ்க்கைத்தரத்திலும் உயர்வானது. காரணம் இந்த முதலீட்டு பொருளாதார நாடுகள் பெருமளவு வருமான வரியை பெற்று அதில் தமது மக்களின் வாழ்க்கைத்தரத்தை உறுதி செய்கிறார்கள் பெருமளவு வருமான வரியை பெற பெருமளவு வருமானமும் இருக்கவேண்டும்..
''
'' [.423]
Reply
#29
வணக்கம் ஜூட்,

யோசிச்சு ஆறுதலா எழுத நேரம் வேணும்,உங்கள் பதிலுக்கு உடனடையாக எழுத முடியாமைக்கு வருந்துகிறேன்.
நீங்கள் குறிப்பிட்டீர்கள் கடினமாக உழைத்தவர்களுக்கு பலன் கிடைக்கும் என்று.இதில் நீங்கள் கடின உழைப்பு என்று எதைக் கூறுகிறீர்கள்? நீங்கள் கூறுவது மனிதர்கள் உடலால்,மூளயால் செய்யும் வேலையா?
சரி இப்ப உடலால் என்று பாத்தா உடலால் கடினமா தொழில் செய்யிறவை யாரு?கூலிக்கு சுமக்கிற தொழிலாளர்
போன்றாவர்.ஆனா இவை தான் சமூகத்தில அதிகம் கஸ்ட்டப் பட்ட மக்களாய் இருகினம்.அப்ப கடின உழைப்புக்கும் பலனுக்கும் என்ன சம்பந்தம். நீங்க சொல்லப் போறியள் கடின உழைப் பெண்டா மூளயப் பாவிச்சு வேலை செய்யிறது எண்டு.


அப்படிப் பாத்தாலும் பாருங்கோ என்ன மூன்றாம் உலகில மனிசர் மூளயப் பாவிச்சு வேலை செயிறேல்லயா அல்லது அவைக்கு மூளை இல்லயா.இப்ப நீங்களே இலங்கையில படிச்சு அமெரிக்காவில வேலை செய்யிறியள். நீங்களும் நானும் படிச்சது இலங்கை மக்களின் வரிப் பணத்தில ஆனாப் பாருங்கோ நாங்க வேலை செய்யிறது எங்கட மூளைப் பாவிச்சு மேற்குலகிற்கு.அப்ப எங்கட மூளைய எது வாங்கி இருக்கு?அது இந்த மூலதனம் இல்லயோ?
அது தான் மாக்ஸ் சொன்னவர் உற்பத்திக் கான காரணிகளை மூலதனம் தான் கைக்குள்ள வச்சிருக்கெண்டு.இதில் நாங்கள் எவ்வளவு தான் கடினமா உழச்சாலும்,எங்கட உழைப்பு மூலதனத்தைப் பெருக்குது அது எங்களை வாங்கி வச்சிருக்கிறவரின்ட மூலதனத்தைப் பெருக்குது.எண்ட படியால உழைப்புக்கும் பலனுக்கும் சம்பந்தம் இல்லயுங்கோ.


சடப் பொருட்கள் தம்பாட்டில் பெருகுவதில்லை அவற்றின் பெறுமதியும் தம் பாட்டில் கூடுவதில்லை.அவை மனிதர்களின் உழைப்பினாலேயே பெறுமதியைப் பெறுகின்றன.இந்த கூடிற பெறுமதியில இருந்து தானுங்கோ மூலதன உருவாக்கம் வருகுதுங்கோ.அப்ப நீங்க கேக்கலாம் அவனுக்கு எப்படி அந்த மூலதனம் கிடச்சது எண்டு அவன் கெட்டிக்காரன் தானே எண்டு.இப்ப பாருங்கோ உலகம் தோன்றேக்க மூலத்தனத்தோட தோன்றேல்ல.மனிசரின்ட உழைப்புத் தான் மூலதனத்தை உருவாக்கியது.மேல விளங்கப் படித்தி இருக்கு பாருங்கோ உபரி எண்டு அது தான் பருங்கோ உழைக்கிறவனுக்கு திருப்பிக் கிடைக்காத உழைப்பு அது தானுங்கோ உபரியா மூலதனமா மாறுது.மனிசரின்ட சரித்திரத்தைப் பாத்தா முன்னர் இந்த உபரிய அதாவது மற்றவனின்ட உழைப்ப கொள்ளை அடிச்சாங்கள்,இது தான் பாருங்கோ கப்பலில வந்து ஆயித பலத்தால காலணியளுக்க வந்து எங்கட சொத்துக்களைக் கொண்டு போனாங்கள்.இப்ப அதைத் தன் வலு நாசுக்க தெரியாத மாதிரிச் செய்யினம்.அப்ப நீங்கள் கேக்கலாம் அவன் கெட்டிக்காரன் தானே நீங்கள் என்ன ஏமலாந்தியளா எண்டு.ஓம் உண்மை தானுங்கோ நாங்கள் ஏமலாந்தியள் தான் ஏனெண்டால் விபரம் இல்லாம இருந்திட்டம் அதுக்காக இப்பவும் அப்படியோ இருக்கிறது? நாங்கள் இப்பவும் ஏமலாந்தியளா இருந்தம் எண்டா எங்கட உழைப்பு இப்பவும் மேற்குலகின்ட மூலதன விரித்திக்குத் தான் உதவும் இப்ப பாருங்கோ ஏன் பாருங்கோ இவங்கள் எங்கட பிரச்சினைக்கு மத்தியஸ்த்துக்கு வாறாங்கள்,இவங்களுக்கு வேற பிழைப்பில்லேயே.இவங்கள் பிழைப்புக்குத் தான் வாறாங்கள் பாருங்கோ. நாங்க தான் இன்னும் ஏமலாந்தியளா இருக்கக் கூடாது.



இப்ப பாருங்கோ தேசிய முலதன பெருக்கத்தில கண்ணா இருகிற இந்தியாவோ,சீனாவோ இவயள் சொல்லுறதக் கேட்டிருந்தா இப்ப இருகிற வளர்ச்சிய அடன்சிருக்கேலாது.அவர்கள் 20 ஆண்டுத் திட்டம் எண்டு திட்டம் தீட்டி தங்கட பொருளாதரக் கொள்கைகளை சுயமா வகுத்து உள் நாட்டில சேமிப்பை ஊக்குவிச்சு,சில தேசிய நிறுவனக்கள்,தொழிற்சாலைகளை அமச்சுத் தான் தங்கட பொருளாதரத்தைக் கட்டி எழுப்பிச்சினம்.



நாங்கள் உலக வங்கியிட்ட மூலதனத்தை எதிர்பார்த்தா அவை சொல்லுறதைக் கேட்டா அவயள் தான் எங்கட உற்பத்திக் காரணிகளை கட்டுப் படுத்துவினம்.பிறகு எங்கட உழைப்பு அவயின்ட மூலதனத்தை பெருக்கும்.



வேற பாருங்கோ இன்னொரு விடயம் நாங்கள் ஏன் சமதர்ம தமிழ் ஈழம் வேண்டு எண்டு சொல்லுறதுக்கும் இன்னொரு முக்கிய காரணம் இருக்குங்கோ.இப்ப பாருங்கோ நானும் நீங்களும் வசதியா தப்பி வந்து ஒரளவு மூலதனத்தை தேடிட்டம் எண்டு வைய்யுங்கோவன், நாளைக்கு தமிழ் ஈழத்தில போய் எங்கட பொவுண்ட்ஸையும்,டொலறையும் வச்சு உற்பத்திக் காரணிகளை வாங்கிப் போட்டு அங்க இருந்து சதயாலும் இரதத்தாலும் குருதி சிந்தி போராடி எந்த வித மூலதனமும் இன்றி இருக்கும் மக்களை எங்கட தொழிற்சாலைகளில வேலை செய்ய வச்சு எங்கட மூலதனத்தை இன்னும் பெருக்க வைக்கப் போறம். நான் இது சும்மா உதாரணத்திற்குச் சொன்னனான். நீங்க சொன்னமாதிரி எல்லாத்தையும் திறந்த பொருளாதாரம் எண்டு ஆக்கின அது தான் நடக்கும் பாருங்கோ.அதுகுத் தான் நாங்க எங்கட பொருளாதரக் கொள்கைகளை உருவாக்கேக்க அது எல்லா மக்களையும் போய்ச் சேர வேணும் எண்டு சொல்லுறம்.அல்லாட்டிப் பாருங்கோ அந்த மக்கள் குருதி சிந்திப் போராடினதில ஒரு பலனும் இல்லைப் பாருங்கோ.
அதுகுத் தான் சொல்லுறன் அரசியல் அதிகாரம் வேணும் உற்பத்திக் காரணிகள் மக்களின் சொத்தா இருக்கிறதுக்கு,அப்படி எண்டாத் தான் பாருங்கோ உழச்சவைக்கு பலன் போய்ச் சேரும் இல்லாட்டி நாங்கள் தான் தமிழ் ஈழத்தைல போய் இருந்து பலனை அனுபவிப்பம்.
Reply
#30
தமிழீழத்தின் பொருளாதாரம் கலப்புப் பொருளாதாரமாக அமைவதே சாலப்பொருத்தம்.முழுமையான சமதர்மப் பொருளாதாரமாக இருக்கவேண்டுமானால் தமிழீழம் விவசாயத்தில் மட்டுமல்ல கனிப்பொருட்கள் எண்ணெய் போன்றவற்றிலும் தன்னிறைவுள்ள நாடாக இருத்தல் வேண்டும் அல்லது அவற்றுக்கான மாற்றீட்டுப் பொருட்களையாவது கொண்டிருக்கவேண்டும்.

வளங்களின் பரந்துபடலைப் பார்க்கும்போது எண்ணெய் போன்றவற்றிற்காகவாவது தமிழீழம் மற்ற முதலாளித்துவ நாடுகளில் தங்கியிருக்கவேண்டி வரும்.அல்லது அவர்களின் சந்தைக்கேற்ற மாதிரி தனது சந்தையையும் விருத்தி செய்யவேண்டி இருக்கும்.நாணய மதிப்பைப் பேணிக்கொள்வதற்காக உற்பத்திப் போட்டியில் ஈடுபடவேண்டியிருக்கும்.

ஆகவே முழுமையான சோசலிச அடிப்படைப் பொருளாதாரம் சாத்தியமற்றது.

அதேவேளை முழுமையான முதலாளித்துவ அடிப்படையிலான பொருளாதாரம் தீங்கு விளைவிக்கக்கூடியது.அது சுரண்டலை ஊக்குவிக்கிறது.பெருஞ் செல்வம் யாவும் ஒரு சிலரின் கைகளில் போய்ச் சேர வழிவகுக்கிறது.ஏழைகள் இன்னும் ஏழைகளாகவும் பணக்காரன் மேலும் பணக்காரனாகவும் வழிவகுக்கிறது.

தமிழீழத்தின் பொருளாதாரக் கொள்கை இரண்டினதும் சரியான கலப்பு.விரிவாகச் சொன்னால் உள்நாட்டில் சோஷலிச அடிப்படையில் அமைந்த பொருளாதாரக் கொள்கையும்,வெளிநாட்டுச் சந்தைகளுடனா போட்டியில் முதலாளித்துவ கொள்கையை தழுவியதாகவும் இருக்கவேண்டும்
\" \"
Reply
#31
narathar Wrote:வணக்கம் ஜூட்,

யோசிச்சு ஆறுதலா எழுத நேரம் வேணும்,உங்கள் பதிலுக்கு உடனடையாக எழுத முடியாமைக்கு வருந்துகிறேன்.
நீங்கள் குறிப்பிட்டீர்கள் கடினமாக உழைத்தவர்களுக்கு பலன் கிடைக்கும் என்று.

நான் எங்கே அப்படி சொன்னேன்? நான் அப்படி சொல்லவில்லை. நான் சொன்னது வருமாறு:
Jude Wrote:சமமற்ற உழைப்பின் பலன் சமமாக பங்கிடப்படுவதை கடினமாக உழைத்தவர்கள் விரும்ப மாட்டார்கள்.

உங்களின் தொடரும் விளக்கம், நான் சொல்லாததை, நான் சொன்னதாக நீங்களே சொல்லி, அதற்கு தரும் விளக்கம். கடினமாக உழைத்தவர்கள் எல்லோருக்கும் பலன் கிடைப்பதில்லை.

narathar Wrote:இதில் நீங்கள் கடின உழைப்பு என்று எதைக் கூறுகிறீர்கள்? நீங்கள் கூறுவது மனிதர்கள் உடலால்,மூளயால் செய்யும் வேலையா?
சரி இப்ப உடலால் என்று பாத்தா உடலால் கடினமா தொழில் செய்யிறவை யாரு?கூலிக்கு சுமக்கிற தொழிலாளர்
போன்றாவர்.ஆனா இவை தான் சமூகத்தில அதிகம் கஸ்ட்டப் பட்ட மக்களாய் இருகினம்.அப்ப கடின உழைப்புக்கும் பலனுக்கும் என்ன சம்பந்தம்.

அதுதானே? என்ன சம்பந்தம்? நீங்கள்தான் கேட்கிறீர்கள். பதிலையும் சொல்லிவிடுங்களேன்?

narathar Wrote:நீங்க சொல்லப் போறியள் கடின உழைப் பெண்டா மூளயப் பாவிச்சு வேலை செய்யிறது எண்டு.

நான் அப்படியும் சொல்லவில்லையே? இதெல்லாம் நீங்களே கற்பனை செய்து கொண்டு உங்கள் கற்பனைக்கெதிராக செய்யும் வாதம்.

narathar Wrote:அப்படிப் பாத்தாலும் பாருங்கோ என்ன மூன்றாம் உலகில மனிசர் மூளயப் பாவிச்சு வேலை செயிறேல்லயா அல்லது அவைக்கு மூளை இல்லயா.

மிருகங்களும் தான் மூளையை பாவிக்கின்றன. எல்லா மனிதர்களும் மூளையை பாவிக்கிறார்கள். ஆனால் அதற்காக எல்லாரும் கண்டுபிடிப்புகளை செய்து இன்னொரு பாடசாலை போகாத கணித மேதை இராமானுஜமாகவில்லை.

narathar Wrote:இப்ப நீங்களே இலங்கையில படிச்சு அமெரிக்காவில வேலை செய்யிறியள். நீங்களும் நானும் படிச்சது இலங்கை மக்களின் வரிப் பணத்தில ஆனாப் பாருங்கோ நாங்க வேலை செய்யிறது எங்கட மூளைப் பாவிச்சு மேற்குலகிற்கு.அப்ப எங்கட மூளைய எது வாங்கி இருக்கு?அது இந்த மூலதனம் இல்லயோ?

உங்களுடைய மூளையை, நீங்கள் யாருக்கு அல்லது எதற்கு விற்றீர்கள், என்பதை நீங்கள் சொல்லி நாங்கள் அறிந்து கொள்கிறோம். என்னுடைய மூளை என்னிடம்தான் இருக்கிறது. அது எனது மூலதனம். நான் அதை வைத்து தாராளமாக செல்வம் சேர்க்கிறேன். எனக்குத்தான் சேர்க்கிறேன். அது எனது சுயவிருப்பில் நான் எடுத்த முடிவு.

narathar Wrote:அது தான் மாக்ஸ் சொன்னவர் உற்பத்திக் கான காரணிகளை மூலதனம் தான் கைக்குள்ள வச்சிருக்கெண்டு.இதில் நாங்கள் எவ்வளவு தான் கடினமா உழச்சாலும்,எங்கட உழைப்பு மூலதனத்தைப் பெருக்குது அது எங்களை வாங்கி வச்சிருக்கிறவரின்ட மூலதனத்தைப் பெருக்குது.எண்ட படியால உழைப்புக்கும் பலனுக்கும் சம்பந்தம் இல்லயுங்கோ

உங்களுடைய மூளையை நீங்கள் ஏற்கனவே விற்றுவிட்டதால் மார்க்ஸ் சொன்னதை ஆராயந்து பார்க்க உங்களுக்கு வசதியில்லை போலும்.

ஆனால் என்னுடைய அனுபவத்தில் உழைப்புக்கு பலனுண்டு. ஆனால் உழைப்பவர்கள் எல்லாருக்கும் பலன் எதிர்பார்த்தபடி கிடைப்பதில்லை. எனது உழைப்புக்கு நான் தாராளமாக பலன் அனுபவிக்கிறேன். (மறந்துவிடாதீர்கள் என்னுடைய மூளை, என்னுடைய மூலதனமாக என்னிடமே இருக்கிறது.)

narathar Wrote:நாங்கள் உலக வங்கியிட்ட மூலதனத்தை எதிர்பார்த்தா அவை சொல்லுறதைக் கேட்டா அவயள் தான் எங்கட உற்பத்திக் காரணிகளை கட்டுப் படுத்துவினம்.பிறகு எங்கட உழைப்பு அவயின்ட மூலதனத்தை பெருக்கும்

இன்னுமொரு சிங்கப்புூராகவோ, தாய்வானாகவோ, ஜப்பானாகவோ வராமல் ஒரு வியட்நாமாக, கம்போடியாவாக, கியுூபாவாக வரலாம் என்று சொல்கிறீர்கள். விடுதலைப்புலிகள் அவ்வளவு முட்டாள்கள் அல்ல. இன்றும் அவர்கள் சீனாவுடனோ தடை செய்த இந்தியாவுடனோ உறவை ஏற்படுத்துவதில் நேரத்தை வீணாக்காமல் அமெரிக்க தடைக்கெதிராக இராமஸே கிளார்க் ருத்திரகுமாரன் தலைமையில் வழக்குக்கு பின் வழக்காக தொடர்ந்து வெற்றிக்கு பின் வெற்றியாக கண்டு வருகிறார்கள். எத்தனை மில்லியன் இதற்கு செலவாகிறது தெரியுமா? கடந்தமாதம் கூட விடுதலைப்புலிகளுக்கு அமெரிக்கர்கள் பயிற்சி அளிப்பதற்கு இருந்த தடைக்கெதிரான ஒரு சட்டத்துக்கு எதிராக தீர்ப்பு கிடைத்ததை அடுத்து இன்னுமொரு சட்டத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்கள். அமெரிக்காவை விடுதலைப்புலிகள் நேசநாடாக பார்க்கிறார்கள். அமெரிக்க பொருளாதார கொள்கைகளை உள்வாங்கியே தமிழீழ பொருளாதாரம் அமைய இருக்கிறது.

narathar Wrote:நீங்க சொன்னமாதிரி எல்லாத்தையும் திறந்த பொருளாதாரம் எண்டு ஆக்கின அது தான் நடக்கும்

திரும்பவும் நான் சொல்லாததை, நான் சொன்னதாக நீங்களே சொல்லி, அதற்கு தரும் விளக்கம்.

நாடுகள் தமது பொருளாதாரத்தை முற்றிலும் திறந்து விடுவது முட்டாள்தனமானது. மார்க்ஸிய கற்பனையிலேயே அது சாத்தியம். அமெரிக்கா ஆடை இறக்குமதிக்கு ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு குறித்த தொகை வகுத்திருக்கிறது. அதற்கு மேல் தடை. ஜப்பானிய வாகனங்கள் அமெரிக்க வாகன உற்பத்தியாளர்களை பாதித்தால் அதற்கு கட்டுப்பாடு. அதிகவரி. கனடாவுடன் சர்வதேச வணிக கட்டுப்பாட்டு நிறுவனத்தில் மரஏற்றுமதிக்கு வரிவிதிப்பது பற்றி வழக்கு. ஆக முதலீட்டு பொருளாதாரமும் தமது மக்களின் உற்பத்தி நலன் கருதி பொருளாதாரத்தை கட்டுப்படுத்துகின்றது.
''
'' [.423]
Reply
#32
சமமற்ற உழைப்பின் பலன் சமமாகப் பங்கிடப்படுவதை கடினமாக உழைத்தவர்கள் விரும்பமாட்டார்கள்.

இது தான் நீங்க சொன்னது ஜுட் ,இதில நீங்க பலன் உழைப்பில தங்கி இருக்கெண்டு தானே சொல்லி இருகிறியள்.அதாவது ஒருத்தர் எவ்வளவு உழைக்கிறரோ அவ்வளவு பலன் அவருக்கு கிடைக்க வேண்டும் எண்டு தானே சொல்லி இருகிறியள்.அத்தோட கடினமா உழச்சவை ,கடினமா உழைக்காதவய விட கூடிய பலனைப் பெற வேண்டும் அல்லாவிட்டால் அதை அவை விரும்பமாட்டார் என்றும் சொல்லி இருகிறியள்.இதுக்குத் தனே நான் பதில் எழுதி இருகிறன்.

நீங்கள் சொன்னதிற்கு வேறேதாவது அர்த்தம் இருகெண்டா விளங்கப் படுந்துங்கோ எனெக்கெண்டா விளங்கேல்ல.

அடுதது ' நீங்கள் சொல்வீர்கள் ஆனால் ' என்று சொல்லித் தான் பதில் எழுதி இருகிறேனே தவிர நீங்க சொன்னீங்க எண்டு சொல்லேல்ல. நான் அப்படி எழுதினத்துக்குக் காரணம் இப்படி பலரும் செய்யும் விவாதங்களில் வரும் வழக்கமான் கேள்விகளுக்கு ஒரே அடியாக பதில் எழுதினேன்.

பிறகு மூளயப் பற்றிச் சொன்னீங்க.உங்கட மூளையும் என்னுடய மூளையும் எங்கட்டத் தான் இருக்கு ஆனாப் பாருங்கோ அதைக் கொண்டு நாங்க செய்யிற உழைப்பு எங்களுக்குச் சொந்தமில்லை.

Intellectual property rights அதாவது அறிவாற்றல் சொத்துரிமை
பற்றிக் கேள்விப் பட்டிருகியள் தானே.இப்ப நீங்க உங்கட அறிவாற்றலைப் பயன் படுத்தி எதயாவது வடிவமச்சீங்க எண்டா அதன் பயனாக வாற வடிவமப்புக்கு நீங்க உரிமை கொண்டாட ஏலாது ஏனென்றால் நீங்கள் அந்த நிறுவனத்திற்கு வேலை செய்ய ஒப்பந்தம் செய்யும் போது உங்கட அந்த அறிவாற்றல் உரிமையய் waiver அதாவது விட்டுக் கொடுப்பதாக உறுதி செய்ய வேணும்.இன்றைக்கு இந்தக் கணனியில இருகிற சில்லுகளை வடிவமச்சவைக்கு அதன் பலன் கிடயாது மாற்றாக அந்த வடிவமைப்புக்கு உருமை வச்சிருகிறது அவை வேலை செய்த நிறுவனம்.உங்களது உழைப்பிற்கான ஊதியம் தொழிற் சந்தையே தீர்மானிக்குது ஒழிய உங்கள் உழைப்பு அல்ல.அதனால் தான் சொல்கிறேன் உழைபிற்கும் பலனுக்கும் சம்பந்தம் இல்லை என்று.இதைத் தான் மேல உபரி எண்டு விளக்கி இருக்கு.

பிறகு திறந்த பொருளாதரம் பற்றிச் சொல்லி இருக்கிறியள் முதலாளித்துவ பொருளியளின் தந்தை என்று சொல்லப் படுகிற அடம் ஸ்மிதின் கோட்பாடுகளின் படி சந்தையே எல்லாவற்றையும் தீர்மானிகிறது.அதனால் சந்தைப் பொறி முறயில் எதுவித கட்டுப் பாடுகளையும் விதிக்கக் கூடாது என்று சொல்லுறார்.ஆனா அமெரிக்க தமது உள் நாட்டு விவசாயிகளுக்கு மானியம் வழங்குவது சந்தையின் விலையை கட்டுப்படுத்துவதாக அமைகிறது.இதற்குக் காரணம் அந்தச் சந்தையானது அமெரிக்க விவசாயிகளுக்கு பாதகமாக இருப்பதால்.அதாவது தனக்கு சாதகமான தருணங்களில் சந்தை திறந்திருக்க வேணும் ஆனால் பாதகமான சந்தைகள் மூடி இருக்க வேணும்.இது தான் அமெரிக்க முதலாளித்துவத்தின் இரட்டை வேடம்.ஒரு புறத்தில் தனது பொருட்களை ஏறுமதி செய்ய திறந்த சந்தைகள் வேணும் ஆனால் மற்றய நாடுகள் அமெரிகாவுக்கு ஏற்றுமதி செய்ய ஏலா வண்ணம் அது தனது சந்தையை மூடி விடும்.

பிறகு உருத்திரகுமாரண்ணய பற்றி எழுதி இருகியள்.ஈழத்தின் பொருளாதரக் கொள்கைகளை அவர் தீர்மானிப்பதிலை.அவர் அவரிற்கு இடப் பட்ட பணியை ஆற்றி வருகிறார்.அவர் மாதிரி பலரும் போராட்டத்திற்கான பங்களிப்பை பல நாடுகளில் ஆற்றி வருகின்றனர். நான் மாக்சியமும் ஈழமும் தலைப்பில எழுதின மாதிரி புலிகள் தங்களின் இலக்காக ஒரு சமதர்ம தமிழ் ஈழத்தயே கொண்டிருகின்றனர்.அதற்காகவே தமது உயிரைத் தியாகம் செய்கிறார்கள்.போராடியவர்களுக்கே அதன் பலன் கிட்ட வேணும், நான் மேலே விளக்கின மாதிரி மூலதனத்தை வைத்திருப்பவர்களுக்கு அல்ல.
Reply
#33
narathar Wrote:சமமற்ற Intellectual property rights அதாவது அறிவாற்றல் சொத்துரிமை
பற்றிக் கேள்விப் பட்டிருகியள் தானே.இப்ப நீங்க உங்கட அறிவாற்றலைப் பயன் படுத்தி எதயாவது வடிவமச்சீங்க எண்டா அதன் பயனாக வாற வடிவமப்புக்கு நீங்க உரிமை கொண்டாட ஏலாது ஏனென்றால் நீங்கள் அந்த நிறுவனத்திற்கு வேலை செய்ய ஒப்பந்தம் செய்யும் போது உங்கட அந்த அறிவாற்றல் உரிமையய் waiver அதாவது விட்டுக் கொடுப்பதாக உறுதி செய்ய வேணும். மாற்றாக அந்த வடிவமைப்புக்கு உருமை வச்சிருகிறது அவை வேலை செய்த நிறுவனம்

இது முற்றாக சரியான கருத்து அல்ல.
நிறுவனத்துடன் நான் ஒப்பந்தம் செய்யும் போது, அந்த நிறுவனம் தரும் பணத்துக்கு பெறுமதியாக நான் வடிவமைக்கும் தொழில்நுட்பம் அந்த நிறுவனத்துக்கே சொந்தமானது என நான் கையெழுத்து போட்டு கொடுப்பது எனது சொந்த விருப்பின் காரணமாகவே. நான் செல்வம் சேர்ப்பதற்காக எனது சேவையை ஒரு வணிக ஒப்பந்தத்தின் படி அந்த நிறுவனத்துக்கு வழங்க நான் செய்யும் ஒப்பந்தம் அது. ஒரு நிறுவனம் தயாரிக்கும் ஒரு பொருளின் தொழில்நுட்பமே அந்த நிறுவனத்துக்க சொந்தமானது. எனது அறிவாற்றல் அல்ல. எனது அறிவாற்றலை தனிப்பட்ட முறையில் பயன்படுத்தி நான் அந்த நிறுவனத்தின் வசதிகளை பயன்படுத்தாமல் வேறு இடத்தில் வடிவமைத்த பொருள் எனக்கு சொந்தமானது. எனது அறிவாற்றல் எனக்கு என்றும் சொந்தமானது. அதைப்பயன்படுத்தி நான் வழங்கும் சேவைகளுக்கு அந்த நிறுவனம் போதிய விலை தராவிட்டால் நான் வேறு நிறுவனத்துக்கு போய் அதை விற்க எனக்கு சுதந்திரம் உண்டு. இந்த நாட்டிலேயே நல்ல விலை கிடைக்காவிட்டால் வேறுநாட்டுக்கு சென்று விற்கவும் எனக்கு சுதந்திரம் உண்டு.

மார்க்ஸிய கொள்கைகளை பின்பற்றும் நாடுகளில் நீங்கள் இருக்கும் வீடும் உங்களுக்கு சொந்தமானதல்ல. நீங்கள் வடிவமைக்கும் தொழில்நுட்பமும் உங்களுக்கு சொந்தமானதல்ல. உங்கள் அறிவாற்றலும் உங்களுக்கு சொந்தமானதல்ல. காரணம் நீஙகள், பல கட்சி ஆட்சிமுறை, கருத்து சுதந்திரம், போன்றவற்றை பற்றி சிந்திப்பதாக அறிந்தால் கூட, அந்த மார்க்ஸிய அரசு உங்களை சிறையில் தள்ளுகிறது. சீனாவும், கியுூபாவும், இரஷ்யாவும் இவ்வாறுதான் இயங்குகின்றன.

narathar Wrote:இன்றைக்கு இந்தக் கணனியில இருகிற சில்லுகளை வடிவமச்சவைக்கு அதன் பலன் கிடயாது

இது மிகவும் தவறான கருத்து. கணணித்துறையில் தான் அதிக வருமானம் தரும் தொழில்கள் இருக்கின்றன. இந்த கணணி சில்லுகளை வடிவமைத்தவர்கள், அந்த நிறுவனம் வழங்கிய அபரிதமான வருமானத்தில் மிக வசதியாக சுகபோக வாழ்வு வாழ்கிறார்கள். இந்த வருமானம் அந்த கணணி சில்லுகளை வடிவமைத்ததற்கு கிடைத்த பலன். அந்த உழைப்புக்கான பலன். மேலும் அந்த நிறுவனத்தில் பங்குகளை வாங்குவதன் மூலம், கணணி சில்லுகளை வடிவமைத்தவர்கள் நிறுவனத்தின் இலாபத்திலும் நேரடி பங்குதாரராகி இருப்பார்கள்.

இவ்வாறன அதே சில்லுகளை வடிவமைத்த மார்க்ஸிய நாட்டில் வாழும் ஒருவருக்கு, இதே வருமானம் நிச்சயமாக கிடைத்திருக்காது. அந்த கணணிகள் தந்த இலாபத்தை (உபரியை) அந்த நாட்டின் கொம்யுனிஸ்ட் கட்சி உயர்மட்ட அதிகாரிகள் (மார்க்ஸிய நாட்டில் உள்ள முதலாளிகள்) தமது சுகபோக வாழ்வுக்கும், ஆயுத உற்பத்திக்கும் செலவிட்டிருப்பார்கள்.

narathar Wrote:.உங்களது உழைப்பிற்கான ஊதியம் தொழிற் சந்தையே தீர்மானிக்குது ஒழிய உங்கள் உழைப்பு அல்ல.அதனால் தான் சொல்கிறேன் உழைபிற்கும் பலனுக்கும் சம்பந்தம் இல்லை என்று.இதைத் தான் மேல உபரி எண்டு விளக்கி இருக்கு.

உழைப்புக்கும் பலனுக்கும் நிச்சயமாக தொடர்பு உள்ளது. ஆனால் பலன் உழைப்பில் மட்டும் தங்கியிருப்பதில்லை. சந்தை என்பது மக்கள் தமக்கு தேவையானவற்றை வாங்கவும், மற்றவர்களுக்கு தேவையானவற்றை விற்கவும் கூடும் இடம். மக்களுக்கு தேவை அதிகமாக உள்ள பொருட்களுக்கு நிறைய சந்தை வாய்ப்பு உள்ளது. யாருக்கும் தேவையில்லாத பொருளை, மாடுமாதிரி உழைத்து உருவாக்கிய முட்டாளின் உழைப்புக்கு யாரும் விலை கொடுக்க போவதில்லை. மார்க்ஸிசம் அந்த முட்டாளின் உழைப்புக்கும் சமமான விலை கொடுக்க விரும்பித்தான் அழிந்து போனது.
''
'' [.423]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)