![]() |
|
பொருளாதாரச் சமத்துவம் சாத்தியப்படாத பகற்கனவா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: அரசியல் / பொருளாதாரம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=36) +--- Thread: பொருளாதாரச் சமத்துவம் சாத்தியப்படாத பகற்கனவா? (/showthread.php?tid=2798) Pages:
1
2
|
பொருளாதாரச் சமத்துவம் சாத்தியப்படாத பகற்கனவா? - narathar - 10-23-2005 மேற்குறிப்பிட்ட தலைப்பில் எனக்கிருக்கும் சந்தேகஙளைத் தீர்த்துக் கொள்ள ஆளமான,தலைப்புக்கு பொருத்தமான கருத்தாடல்களை எதிர்பார்க்கிறேன்.இதில் எனக்கு இருக்கும் தெழிவின்மைகளுக்கு விளங்கம் கிடைக்குமா என்பதை நோக்காக் கொண்டே இந்த தலைப்பை ஆரம்பிக்கிறேன்.தயவு செய்து இதனையும் பூட்ட வைக்காதீர். சரி இனி விசயத்துக்கு வருவோம். 1)எல்லாருக்கும் சமத்துவமான பொருளாதர நலனை அடிப்படயாக அமைக்கப்பட்ட சோவியத் யூனியன் ஏன் தோல்வி அடைந்தத்து? 2)கம்யூனீச சித்தாந்ததில் இருந்து சீனா ஏன் வழுவியது? 3)மாக்ஸ் எதிர்வு கூறிய மூலதனச் சிக்கல் ஏன் இன்னும் ஏற்படவில்லை? 4)சமத்துவமான பொருளாதாரம் என்பது சாத்தியப் படாத ஒன்றா? 5)போட்டியும் ,சந்தையும்,மூலதன உபரியும் தவிர்க்க முடியாதவையா? - kurukaalapoovan - 10-25-2005 உபரியும் என்ற சொல்லின் ஆங்கில விளக்கத்தை தரமுடியுமா நாரதர்? - stalin - 10-25-2005 http://www.yarl.com/forum/viewtopic.php?t=6255 - kurukaalapoovan - 10-25-2005 -1- சோவியத்äனியன் ஏன் தோல்வி அடைந்தது... சமத்துவத்தை கொள்கை அடிப்படையில்; கொண்டிருந்தாலும் செயல்வடிவில் நடைமுறையில் ஊழல்களால் பொலிற்பீரோ கொäனிச கட்சி மேல் தலைமை ஆளும்வர்க்கமாகவும் ஏனையோர் ஆளப்படுவோராகவும் இருந்து. முதாலாளித்துவ பொருளாதாரத்தோடு குறுகிய மனப்பான்மையில் போட்டி போட்டு மக்களை நம்பவைப்பதற்காக மாயத்தோற்றப்பாட்டை தோற்றுவிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டமை. குறுநோக்கில் முதலாளித்துவ பொருளாதாரத்தோடு போட்டி போட்டு வெல்ல முடியாது என்ற உண்மை உணராமை அல்லது உணர்ந்தும் அதை ஏற்றுக் கொண்டு மக்களிற்கும் தொளிவுபடுத்த முயலும் துணிவு அற்ற தலைமை. -2- சீனா ஏன் (உடையாது மெல்ல மெல்ல) வழுவியது.... சோவியத்äனியன் போன்ற படு தோல்வியை தவிர்த்துக் கொள்ள. அந்த வகையில் சீனாவிற்கு சோவியத்äனியனின் கசப்பான அனுபவம் உதாரணமாக உதவியுள்ளது. சீனாவின் தலைவர்கள் நிலமையை உணர்ந்து மாற்றங்களை கொண்டுவரும்வரை பொறுமைகாத்த மக்களிற்கு காரணம் சீனர்கள் (ஆசியர்களின்) சகிப்புத்தன்மை, பணிவு. சீனர்கள் தேசியத்தால் ஒற்றுமையாக உள்ளனர். சோவியத்äனியன் இடம் அந்த ஒற்றுமை இருக்கவில்லை. உடைப்பதற்கு உதவியாக இருந்ததில் இதும் ஒன்று. - narathar - 10-25-2005 kurukaalapoovan Wrote:உபரியும் என்ற சொல்லின் ஆங்கில விளக்கத்தை தரமுடியுமா நாரதர்? உபரி எண்டால் ஆங்கிலத்தில சேர்ப்பிளஸ்.(surplus) இதை முன் மொழிந்தத்து கார்ல் மாக்ஸ் ,டாஸ் கபிடாலில. இதை எனக்கு விளங்கின மாதிரி விளக்கினா, ஒரு நாள் வேலை செய்பவர் ஒரு பண்ணயாரிடம் 100 ரூபாவுக்கு வேலை செய்து உருவாக்கும் பொருளை பண்னயார் 200 ரூபவிற்கு விற்கிறார்.அந்த வேலை செய்தவரின் உபரி உழைப்பானது பண்னயாரின் உபரி , லாபகாமாக, மூலதனப் பெருக்கம் அடைகிறது.100 ரூபா பெற்ற தொழிலாழி அந்த 100 ரூபாயை தனது வாழ்வதற்கான பொருட்களை வாங்குவதில் செலவு செய்து விடுகிறார்.அதனால் அவர் தொடர்ந்த்து வாழ்வதற்காக மீண்டும் தனது உழைப்பை இன்னொரு வருக்கு விற்க வேண்டும். ஆனால் 100 ருபாயை 200 ஆகியவர், தனது மூலதனத் திரட்சியை இவ்வாறான பரிமாற்றலினூடாகப் பெருக்கிக் கொள்கிறார். இதனால் மூலதனம் ஒரு இடத்தில் குவிக்கப் படுகிறது. இந்த மூலத்னத் திரட்சியினால் தான் உலகின் செல்வத்தின் 80 வீதம் உலக சனத் தொகையின் 5 சத வீததிடம் தேங்கி நிற்கிறது. இப்ப இதயே நாடுகளைப் பார்த்தா மூலதனத்தை வைத்திருக்கும் நாடுகளிடம் மற்ற நாடுகள் கடன் வாங்கி ,தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்கின்றன. அந்தக் கடனுக்கு வட்டியும் குடுக்கின்றன.பிறகு அந்த நாடுகளிலே உள்ள மூலவளங்களைக் கொண்டு மேற்குலக நாடுகள் பொருட்களை உற்பத்தி செய்கின்றன .பின்னர் அவற்ரை திரும்ப அதே நாடுகளுக்கு விற்கின்றன.இந்த சுழற்ச்சியில் மூலதனத்தைப் பெருக்கிக் கொள்கின்றன. எனக்கு இருக்கும் கேள்வி ,இவ்வாறான சமத்துவம் அற்ற பொருளாதார முறமயை நிராகரித்து உருவாக்கப்பட்ட சோசலிச பொருளாதர முறமை ஆனது ஏன் தோல்வி அடந்தது என்பதுவே. - stalin - 10-25-2005 மேலெழந்தவாரியாக எனது சிற்றறிவுக்குட்பட்டவரையில் 1 சோவியத் யூனியன் சமூக ஏகாதிபத்திய திரிபவாத கோட்பாட்டை பின்பற்றியமையாலும் உலகலாவிய சமத்துவ பொருளாதரத்தை அடிப்படை நோக்கி போகாமையாலும்...கொம்யூன் என்பது உலகலாவியதெனபதை பின் வந்த தலைவர்கள் பின்பற்றாமையும் சோவியத் யூனியன் தன்னளவில் ஏற்பட்ட ஏகாதியபத்திய கனவும் தன்னகத்தை ஏற்பட்ட உள் முரண் பாடுகளுடன் கம்னியூச எதிரிகளை மேல் மட்டம் வரை அநுமதித்து பெரஸ்ரோறிக்கியா என்ற கோசத்துடன் சோவியத் யூனியன் உடைத்தார்கள் சோவியத்தின் வீழ்ச்சியாக கொள்ளலாமே தவிர ...கம்யூனின் வீழ்ச்சியீகா கொள்ள முடியாது - poonai_kuddy - 10-27-2005 பொருள் உற்பத்தியின்ர அல்லாட்டி சரக்கு உற்பத்தியின்ர வளர்ச்சியில ஒரு கட்டத்தில பணம் மூலதனமா மாறுகிறது. ஒரு பொருள வித்து இன்னொரு பொருள வாங்குறது சரக்குச் சுற்றோட்டத்தின்ர விதி. அதாவது பொருள் பணம் பொருள் எண்டு சுத்தும். அதுக்கு மாறாக இலாபத்த நோக்கமாக கொண்டு விற்கிறதுக்காகவே வாங்குறது மூலதனத்தின்ர பொது விதி. அதாவது பணம் சரக்கு பணம் எண்டு சுத்துறது. இந்த சுழற்சியில தொடங்குகிற அல்லாட்டி இடப்படுற பணத்தின்ர தொடக்க மதிப்பு பிறகு பிறகு கூடுந்தானே. அந்த வளர்ச்சியத்தான் மாக்ஸ் உபரி மதிப்பெண்டு சொல்லுறார். இப்பிடியான வளர்ச்சிதான் பணத்தை மூலதனமா மாத்துது :? - kurukaalapoovan - 10-27-2005 பூனைக்குட்டி நீங்கள் சொல்லவாறது வணிகத்தின் அடிப்படை பற்றியா? செல்வந்தத்தை உருவாக்கிற நடவடிக்கையில் (wealth creation), பணம், மூலம் பொருள்(raw material), தொழில்நுட்பம், அதை தெரிந்த மனிதவளம் இவை எல்லாம் மூலதனங்கள் - முதலீடுகள் தானே. நாரதர் மூலதனச்சிக்கலும் மூலதன உபரியும் எடுத்த எடுப்பில் பார்க்கும் போது முரணபாட உள்ளது. மூலதனச்சிக்கல் என்று என்னத்தை எதிர்வு கூறியுள்ளார் மார்கஸ். ஸ்ராலின் தந்த இணைப்பில் அவற்றிற்கு விளக்கம் இல்லை. வேறு பயனுள்ள இணைப்புகள்? - sinnakuddy - 10-27-2005 http://www.wsws.org/articles/2002/mar2002/.../corr-m19.shtml - narathar - 10-27-2005 http://en.wikipedia.org/wiki/Das_Kapital http://en.wikipedia.org/wiki/Surplus_value - Eelavan - 10-28-2005 சோவியத் யூனியனின் உடைவுக்கு முதற் காரணமாகிய அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாடுகளின் முயற்சியை விட்டுவிட்டீர்களே. சோவியத் யூனியன் என்பது தனி ஒரு நாடல்ல பல்வகமையுள்ள இறைமை கொண்ட நாடுகள் பொருளாதார வளர்ச்சி மற்றும் ஒரே அரசியற் சித்தாந்த அடிப்படையில் ஒன்று சேர்ந்து உருவாக்கிய அமைப்பு. அந்த அமைப்புக்குள் தேசியம் பற்றிய சிந்தனைகள் பரவியதும் நாடுகள் பிரிந்துபோனதற்கு ஒரு காரணம்.இன்னொரு காரணம் 'கொர்பச்சேவ்'வின் தலைமை இந்த விவாதத்தில் தமிழீழத்துக்கு எந்தப் பொருளாதாரக் கொள்கை பொருத்தமாக இருக்குமென்றும் விவாதிக்கலாமே முதலாளித்துவமா,பொதுவுடமையா அல்லது இரண்டினதும் சரியான வீதத்திலமைந்த கலப்புப் பொருளாதாரமா? - sinnakuddy - 10-28-2005 70 களின் நடுப்பகுதியில்....சோசலிச தமிழீழத்தை நோக்கி...விடுதலை புலிகளால்.முதன் முதலாக வெளியிட்ட புத்தகம் யாரும் பார்த்திருக்கிறீர்களா...தமிழ் தேசியஇனத்துக்கு பிரிந்து போகும் சுயர்ண உரிமை இருக்கிறது என்று இலங்கையிலுள்ள மார்க்சிய பண்டிதர்களோடு வாதிட்டு மார்க்சிய அடிப்படையில் பாலசிங்கம் அவர்களால் நிறுவிய கட்டுரை முதல் முதலாக தொழிலாளர் பாதை என்ற பத்திரிகையில் வந்தது - manimaran - 10-28-2005 பொருள்முதல்வாதத்தை மூலக்கருவாக கொண்டு உருவாக்கப்பட்ட மாக்சியம் பல உயர்ந்த சிந்தனைகளை உள்ளடக்கியபோதும் அதனை நடைமுறைக்கு ஏற்றவகையில் பிரயோகிக்க கூடியவழியில் சிந்திக்கவில்லை என்பது பொதுவான குற்றச்சாட்டு. உற்பத்திக்காரணிகள் பொதுவானதாயிருந்தால் சிக்கல்கள் தீர்ந்துவிடும் என எண்ணிய மாக்சு அத்தகைய சந்தர்ப்பங்களில் தனிமனித நடத்தை எப்படி பொருளாதாரத்தை பாதிக்கும் என்பதை கருத்தில் எடுக்கவில்லை. எல்லோருக்கும் எல்லாம் பொது என்ற நிலைப்பாடு வரும்போது தனிமனித உத்வேகம் குறைந்து விடும். இந்த அம்சம் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. சோவியத்தின் வீழ்ச்சிக்கு அமெரிக்கா ஒரு முக்கிய காரணியாக இருந்தபோதும் அதுதான் முழுமுதல் காரணி என்று சொல்லிவிடுவதற்கில்லை. உள்நாட்டு பொருளாதார அரசியல் கொள்கைகளின் உறுதியற்ற தன்மையுடன் இறுக்கமற்ற அரசியல்தலைமை கைகோர்த்தபோது புறக்காரணிகள் இலகுவாக சோவியத்தை உடைக்க வழிகோலின. முதலாளித்துவத்தின் வலிமையாதனில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அது தனிமனித நடத்தைக்கு சமாந்தரமாக செல்வதுதான். முதலாளித்துவமும் தனிமனித நடத்தையும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஒன்றையொன்று குறுக்கிடுவதில்லை. ஒன்றுக்கொன்று உறுதுனை செய்தவாறு முன்னோக்கி நகரும். இது எப்போதும் ஒரு ஆரோக்கியமான நகர்வு என்பது எனது வாதமல்ல. இந்த முனைப்பு கடிவாளமிடப்பட்டு வினைத்திறனுடன் கையாளப்படுமெனில் பலருக்கும் பலனளிக்கும் - stalin - 10-28-2005 சோவியத் யூனியன் வீழ்ச்சியை வைத்துக்கொண்டு பொருள் முதல்வாதத்தின் குறைபாடாக காட்டுவது சரியான வாதமாக அமையாததென நினைக்கிறேன் உழைப்புக்கேற்ற ஊதியம் உற்பத்திகாரணிகளை பகிர்வதால் சுரண்டலற்றநிலமை உருவாக்க முயலும் பொழுது சில குழுக்களின் தனிபர் நடத்தையயும் சுரண்டப்படுவதாய் அறியாமல் இருக்கும் குழுவினுள்ள தனிநபரின் நடத்தையையும் நன்கு அறிந்து வைத்துள்ளாரென்று நினைக்கின்றேன். மற்றும் பொருளாதரத்தில் வளர்ச்சியடைந்த தாக கூறும் அமெரிக்கா கூட தனது அபரிதத்தை க்காட்ட 250 வருடங்களுக்கு மேலை எடுத்தன...சோவியத்தை ஒரு பேச்சுக்கெடுத்தால் கூட 1917 இல் புரட்சியின்பின் 100 வருட காலத்தை விட குறுகியதை கொண்டன அதனால் இரண்டையும் பொருளாதர வளர்ச்சின் திறனை அளவிட்டு கூற முடியாது ஆசிய நாடுகளில் மேற்கு நாடுகள் மாதிரி முதலாளித்துவத்தின் நேரடி தாக்கம் இருக்கவில்லை...ஆனால் நிலபுரத்துவத்தின் தாக்கமும் காலனியத்துவ ஆதிக்கமும் இருந்தது முதலாளித்துவத்தின் வீழ்ச்சிக்கு தனிமனித நடத்தை தான் முக்கிய பங்காற்றுகின்றன - Mind-Reader - 10-28-2005 தனிமனித தவறுகளால் சோசலிஷம் வீழும் என்றால் தனிமனித சொத்துரிமைக்கு எப்போ முடிவு காலம்? இது கோழியா? முட்டையா? முதலில் வந்தது போன்ற ஒரு விவாதத்துக்கே வழி தேடுவது போன்றது. - kurukaalapoovan - 10-28-2005 வரலாற்றில் போரினால் சிதைவடைந்த ஒரு நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப துணையாக பயனுள்ளதாக இருக்கும் கொள்கை சோசலிஷம் அல்லது கமிäனிசம் என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. ஒரு புத்தம் புதிய தேசத்தின் பொருளாதாரம் வணிகம் என்பவற்றிற்கான அத்திவாரத்தை இடும் ஆரம்பக்கட்டத்தில் ஒரு planned economy இன் பாதுகாப்பு அவசியம், சில படிநிலைகளை அடைந்த பின்னர் market economy இன் சவால்களை எதிர் கொள்ளத்தயாராக இருக்கும். - manimaran - 10-29-2005 சோவியத்தில் மட்டுமல்ல எந்தவொரு நாட்டிலும் கம்யுூனிசம் வெற்றிகரமாக நீடித்து நிற்கவில்லை என்பது நடைமுறை வரலாறு. அந்தந்த நாடுகளின்; ஆட்சியளர்களின் பிழையான கையாழுதனினால்தான் கம்யுூனிசம் தோல்வியுற்றது இல்லாவிடின் அது வெற்றியடைந்திருக்கும் என்ற விவாதம் பரவலாக உண்டு. ஒன்று அல்லது இரண்டு அல்லது சில இடங்களில் இந்த சிக்கல் ஏற்பட்டால் இந்த விவாதம் சற்று வலுவானதாக கொள்ளக்கூடியதாகவிருக்கும். ஆனால் எல்லா இடத்திலும் இப்படியானதொரு சிக்கல் ஏற்பட்டிருப்பதால் கொள்கையில் ஒரு பாரிய சிக்கல் உள்ளதென்பது தெளிவு. கொள்கை என்பது நாட்டின் மக்களின் இயல்புகளிற்கேற்ப வளர்ச்சி விரிவாக்கத்திற்கேற்ப இருத்தல் வேண்டும். மாறாக ஒரு கொள்கையை வரைந்து விட்டு அதற்கேற்றபடி நாட்டையும் மக்களையும் வழிநடத்த முனைந்தால் நிலைமை சிக்கலாகவமைய நிறையவே சாத்தியமுண்டு. மேற்குலக முதலாளித்துவம் என்று பொதுப்படையாக சொன்னாலும் உலகமயமாக்கலின் இன்றைய உச்சகாலத்தில்கூட முதலாளித்துவத்தின் பலவானான அமெரிக்கா விவசாயம் இறக்குமதி ஏற்றுமதி மற்றும் பலவற்றிற்கும் மானியமுறை மூலம் பக்கபலமூட்டி வருகின்றது. இது கம்யுூனிசத்தின் ஒரு மூல அம்சம். முதலாளித்துவம் கம்யுூனிசத்தைப் போல தன்னைச் சுற்றி ஒரு வட்டத்தினை வரைந்துவிட்டு அதற்குள் மட்டும் நின்று சுற்றிச்சுழன்று கொண்டிருக்கவில்லை. தேவைக்கேற்றபடி நீள அகலங்களை மாற்றியமைத்துக் கொண்டது. அவசியமான சந்தர்ப்பங்களில் வட்டத்திற்கு வெளியேயும் செல்லத்தயாராயிருந்தது. அந்த பண்பு கம்யுூனிசித்திடம் இருக்கவில்லை. மாக்சு என்ன சொன்னாரோ அல்லது லெனின் என்ன வழி முறைகளை கடைப்பிடித்தாரோ அதை அப்படியே அடியொற்றி செல்லவே அது முயன்றது, புவியியல், மக்கள் பண்பாட்டு பழக்க வழக்கமுறைகளுக்கேற்ப இது தன்னை மாற்றிக் கொள்ளத் தயாராக இருக்கவில்லை. முதலாளித்துவத்;தின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் தனிமனித நடத்தை காரணமாயமையக்கூடும். எனவேதான் உரிய பாதையில் செலுத்த கடிவாளம் தேவை - Jude - 10-29-2005 kurukaalapoovan Wrote:வரலாற்றில் போரினால் சிதைவடைந்த ஒரு நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப துணையாக பயனுள்ளதாக இருக்கும் கொள்கை சோசலிஷம் அல்லது கமிäனிசம் என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. ஒரு புத்தம் புதிய தேசத்தின் பொருளாதாரம் வணிகம் என்பவற்றிற்கான அத்திவாரத்தை இடும் ஆரம்பக்கட்டத்தில் ஒரு planned economy இன் பாதுகாப்பு அவசியம், சில படிநிலைகளை அடைந்த பின்னர் market economy இன் சவால்களை எதிர் கொள்ளத்தயாராக இருக்கும். இந்த கருத்துக்கு ஆதாரம் தருவீர்களா? போரால் பாதிக்கப்பட்ட, எந்த நாடுகள் முதலில் சமவுடமை பொருளாதாரத்தாலும் பின்னர் முதலீட்டு பொருளாதாரத்தாலும் முன்னேறியுள்ளன? உண்மையில் இரண்டாம் உலகப்போரின் பின் ஜேர்மனி, ஜப்பான், சிங்கப்புூர், கொரிய போரின் பின் தென் கொரியா, சீன புரட்சியின் பின் தாய்வான் போன்ற பல நாடுகள் நேரடியாக முதலீட்டு பொருளாதாரத்தை தழுவியே வளம் செறிக்கும் பணம்படைத்த நாடுகளாக வளர்ச்சியடைந்திருக்கின்றன. Re: பொருளாதாரச் சமத்துவம் சாத்தியப்படாத பகற்கனவா? - தூயவன் - 10-29-2005 Quote:1)எல்லாருக்கும் சமத்துவமான பொருளாதர நலனை அடிப்படயாக அமைக்கப்பட்ட சோவியத் யூனியன் ஏன் தோல்வி அடைந்தத்து?உண்மையில் எனது கருத்து என்னவெனறால் கம்னீசியக் கொள்கைகள் தோல்வியுற்றன என்பதை விட தோற்கடிக்கப்பட்டன என்று தான் கருதுகின்றேன். அமெரிக்காவின் சதியால் தான் சோவியத்ஒன்றியம் உடைக்கப்பட்டன என்பது தெரியும். கொங்கொங்கை பிரிட்டன் சீனாவிடம் கொடுத்தது கூட கம்யூனீச கொள்கைகளை தோற்கடிப்பதற்காகத் தான் என கூறப்படுகின்றது. ஏனென்றால் முதலாளித்துவ கொள்கையில் வளர்ந்த கொங்கொங்கை சீனாவிடம் இணைத்து சீனா மக்களிடம் அறிமுகப்படுத்தல் தான் காரணம் என கொள்ளப்படுகின்றது. இதனால் தான் சீனா பல தளர்வு நிலையை உட்கொண்டுள்ளது. மாக்ஸ் கொள்கையில் உண்மையில் எனக்கு தெளிவே இல்லை. எனவே மன்னிக்க. சமத்துவமான பொருளாதாரம் சாத்தியப்படாதே என்றே நினைக்கின்றேன். எல்லா நாடுகளும் தங்களுக்குள்ளேயே எப்போதும் போட்டிபோட்டுக் கொண்டே இருப்பது காரணமாக இருக்கின்றது.[/quote] - kurukaalapoovan - 10-29-2005 Jude Wrote:இந்த கருத்துக்கு ஆதாரம் தருவீர்களா? போரால் பாதிக்கப்பட்ட, எந்த நாடுகள் முதலில் சமவுடமை பொருளாதாரத்தாலும் பின்னர் முதலீட்டு பொருளாதாரத்தாலும் முன்னேறியுள்ளன? சினாவைத் தயக்கமின்றி கூறலாம். பின்லண்ட் உம் சோசலிச பொருளாதாரக் கொள்கையில் தான் 2ஆம் உலகப்போரில் சிதைவடைந்த நாடு, கடன்பட்டு infrastructure கட்டி எழுப்பி அந்த கடனை அடைத்த பெருமையுண்டு. மூதலீடு என்பது இலாபநோக்கோடு தான் என்றும் மேற்கொள்ளப்படுவது ஆனால் பொருளாதார இலாப நோக்கோடுதான் நீங்கள் கூறும் நாடுகளில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டனவா? 2ஆம் உலகயுத்த முடிவின் பின்னர் போரினால் அழிந்த மற்றய நாடுகள் போல் மேற்கு யேர்மனி அதிவிசேட உதவிகளின்றி தன்னை மீளக்கட்டி எழுப்ப முற்பட்டது, ஆனால் தோல்வி கண்டது. மக்கள் போராட்டங்கள் ஆட்சி மாற்றங்கள் என வந்தது. இது முதலாளித்துவ பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் மேற்குலகத்திற்கு ஒரு பிரச்சாரப்பிரச்சனை. காரணம் கிழக்கு யேர்மனியை விட மேலான வாழ்வுத்தரத்தை காட்டவேண்டும். மேலும் 1வது உலக யுத்தத்தின் பின்னர் உருவான பொருளாதாரப் பிரச்சனைகள் வேலையில்லாத்திண்டாட்டங்கள் தான் மக்களை பாசிசவாதத்தை எற்றுக் கொள்ளும் மனநிலையை உண்டாக்கியது எனவும் உணரப்பட்டது. இதன் விளைவுதான் மார்சல் பிளான். யப்பானை அணுகுண்டு போட்டு அழித்த பொறுப்பினால் யப்பானிற்கு விசேட முதலீடுகள் வணிகச் சலுகைகள் வழங்கப்பட்டது அமெரிக்காவினால். கெரிய யுத்தக்காலத்தில் சிங்கப்பூர் அதன் பூகோள நிலையில் பின்தளமாக செயற்பட்ட தால் முதலீடுகள் வந்தன (யப்பானும் இதனால் ஓரளவு பயனடைந்தது). தென்கொரியாவிற்கு உதவிகள் (முதலீடுகள், ஏற்றுமதி வியாபாரச் சந்தர்ப்பங்கள் ) வழங்கப்பட்டது வடகொரியாவைவிட உயர்நிலையில் காட்டவேண்டி பிரச்சார தேவையினால். தாய்வானை பொருளாதாரரீதியலி தன்னிறைவடைந்த ஒரு சுயாதின நிர்வாக கட்டடைமைப்பாக உருவாக்குவதற்கு பெருளாதாரவிதிகளுக்கு அப்பாற்பட்ட விதிகள் அங்கு மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளை தீர்மானித்தன. அரசியல் இராஜதந்திர பின்னணியின்றி பொருளாதார அடிப்படையில் மாத்திரம் நீங்கள் கூறிய நாடுகளுக்கு முதலீடுகளும் அது சார்ந்த சந்தைப்படுத்தல் சந்தர்ப்பங்களும் கிடைத்திருக்குமா? தாய்வான் யப்பான் சிங்கப்பூர் தென்கொரியா தயாரிப்பாளர்களுக்கு சந்தையையும் தொழிலாளர்களிற்கு தொழில்வாய்ப்பையும் விரும்பி தெரியாமல்த்தான் இழக்கிறார்களா? |