Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
டி.சே கவிதை
#21
<b>நிலாச்சாரல் இணைய இதழ்</b>
Quote:<b>'பெண் விடுதலை நோக்கிய பயணம்'
மாலதி மைத்ரேயி, சல்மா போன்ற பெண் கவிஞர்கள் தமது சர்ச்சையான படைப்புகளை 'பெண் விடுதலை நோக்கிய பயணம்' என்று சொல்கிறார்கள். இது பற்றிக் கவிஞர் என்ற முறையில் என்ன நினைக்கிறீ¡கள்? </b>

அவர்களின் படைப்புகளில் தனிப்பட்ட சோகங்கள், ஆதங்கங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். அந்தப் பதிவுகளில் சில அசாதாரண வார்த்தைகளை உபயோகித்து இருக்கிறார்கள். அப்படிப்பட்ட கவிதைகள் பிரபலமானதால், சில பெண் கவிஞர்களுக்கு இப்படி எழுதினால் தான் தனது எழுத்தைப் பெண் இலக்கியத்தில் பதிவு செய்வார்களோ? என்ற எண்ணம் வருகிறது. கவிதை தானாக வந்து விழ வேண்டும். அதில் வார்த்தைகளைப் புகுத்தக் கூடாது.

"சங்க இலக்கியத்தில் 1861 அகப்பாடல்களில் உடலுறவைப் பேசுகிற ஒரு பாடல் கூடக் கிடையாது" என்று பேராசிரியர் தொ.பரமசிவம் குறிப்பிட்டிருக்கிறார். அப்படி இருக்க, நாம் இந்தப் பெண் கவிஞர்கள் குறித்த விவாதத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பதால்தான் அவர்கள் மேலும் எழுதுகிறார்கள். ஒரு அணையில் இருந்த தண்ணீரைத் திறந்து விட்டவுடன் தண்ணீர் வேகமாக வரும். பின் மெதுவாக, சமச்சீரான வேகத்தில் போகும். அது மாதி¡¢த் தான் இதுவும். ஒரு கட்டுப்பாட்டில் இருந்த பெண்கள் எழுத வந்திருக்கிறார்கள். அசாதாரணமானவர்களைப் பற்றிப் பேசிப் பேசியே சாதாரணமாக எழுதுகிற படைப்பாளிகளைக் கவனிக்க முடியாமல் போய் விடுகிறதோ? என்று எனக்குத் தொ¢யவில்லை.
Reply
#22
<b>நன்றி புூனைக்குட்டி</b>

உங்கள் இணைப்பிற்கு . உண்மையில் யதார்த்தமான பதில். இது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் பொருந்தும்.
Reply
#23
வசம்பு மற்றும் பூனைக்குட்டி

இக்கருத்துக்குரியவர் யார் என்று இங்கே குறிப்பிடப்படாவிட்டாலும்.கருத்தின் தன்மையை வைத்து திலகபாமா என்று ஊகிக்க முடிகிறது.

அகப்பாடல்களின் எண்ணிக்கை பற்றியே குழப்பம் அதில் ஒன்றில் கூட காமம் செப்பவில்லை என்றால் குழப்பமோ குழப்பம்.

அகப்பாடல்களில் உடல் உறவைப் பற்றிப் பேசவில்லை என்பது சுற்றி வளைத்துக் கூறப்பட்ட உண்மை.சங்கப்பாடல்களில் உடலுறவை எவ்வாறு மேற்கொள்வது என்று எனக்குத் தெரிந்து எங்குமே குறிப்பிடவில்லை.

ஆனால் காமம் பற்றிக் குறிப்பிடப்படுகிறது.நாங்கள் இப்போது படிப்பதிலும் தாராளமாக அப்போது குறிப்பிட்டிருக்கிறார்கள்.மலையும் மலை சார்ந்த இடமுமாகிய குறிஞ்சி நிலத்திற்கு களவழி ஒழுக்கம் திணையொழுக்கமாகக் குறிப்பிடப்படுகிறது

தழையணி அல்குல் தாங்கல் செல்லா
நுழை சிறு நுசுப்பிற் கெவ்வமாக
அம்மெல் ஆக நிறைய வீங்கிக்
கொம்மை வரிமுலை செப்புடன் எதிரின
யாங்கா குவள்கொல் பூங்குழை என்னும்
அவல நெஞ்சமொடு சாவாக்
கவலை மாக்கட்டிப் பேதையூரே

என்னும் பாட்டு ஐங்குறுநூறில் ஒன்று

காமம்,அதனால் உண்டாகும் வேட்கை,பிரிவுத்துயர் அதனால் உண்டாகும் பசலை நோய்.காதலருடன் புணர்தல் ஊடல் ஊடிப் பின் கூடலென்று பலதும் நிறைந்ததுதான் சங்கப்பாடல்.

சங்கப்பாடல்களில் அல்குல் என்றால் எமக்கு என்னவென்றே தெரிவதில்லை அதனால் விட்டுவிடுகிறோம்.யோனி என்றால் எமக்குத் தெரிகிறது அதனால் அதனை ஏற்க மறுக்கிறோம்.
\" \"
Reply
#24
<b>நன்றி ஈழவன்</b>

<b>உண்மையில் கவிதை தாமாக வந்து விழ வேண்டும். அதில் வார்த்ததைகளை புகுத்தக்கூடாது</b>. இதில் எனக்கு நிறைய உடன்பாடு. உதாரணமாக கர்ணன் திரைப்படத்தில் வரும் இரவும் நிலவும் வளரட்டுமே பாடலில் கூட கவிஞர் காமத்தைக் கையாண்டிருக்கின்றார்.ஆனால் எவ்வளவு அழகாக அதனை கையாண்டிருக்கின்றார் என்பதையும் கேட்டிருப்பீர்கள். நீங்கள் சொல்லும் சங்க இலக்கியங்களிலும் வார்த்தைப் பிரயோகங்கள் உண்டுதான். அதற்காக அது முழுவதுமாக அப்படியா எழுதப் பட்டிருக்கின்றது. உதாரணமாக புறநாநு}ற்றில் என்று நினைக்கின்றேன் போருக்குச் செல்லும் வீரனின மனைவியின்; விரகதாபங்களை விளக்க முற்பட்டிருக்கின்றார்கள். அதற்காக புறநாநு}று முழுவதுமே விரகதாபங்களை மட்டுமே எழுதவில்லை. ஆனால் இப்போது எழுதுபவர்கள் எதைப்பற்றி எழுதினாலும் பெரும்பாலும் எப்படியாவது ஓரிரு வார்த்தைகளை புகுத்துவதிலேயே முனைப்பாகவிருக்கின்றார்கள்
Reply
#25
நல்ல விசயம் நடக்குது இங்க.எனக்கு எப்பவுமே டி.சே யின் கவிதைகள் இலகுவாய் புரிவதில்லை.நெருக்கத்தை குறிக்கவே டி.சே முலை என்ற வார்த்தையை பிரியோகித்திருக்கிறார் என நினைக்கிறேன்.அவருடைய மற்ற கவிதைகளையும் இங்கு தீவிர இலக்கியத்தில் கருத்தாய்வு செய்தால் நன்றாக இருக்கும்.
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)