தூயவன் Wrote:அஜீவன் அண்ணா சொன்ன கருத்தை ஏற்றுக் கொள்கின்றேன்.
உண்மையில் நான் எனது பார்வையில் அடிமட்ட தமிழ்நாட்டு தமிழர்களை என்றுமே எதிராக பார்த்தில்லை. ஆனாலும் இதில் எழுத்தாளர் குறித்து சுட்டிக் காட்டியது என்னவென்றால் எம் விடுதலைப் போராட்டத்தை ஏன் என்னும் புரியமாட்டேன் என்கின்றார் என்ற ஆதங்கமே அது தவிர அவரது எழுத்துக்களை தாழ்த்தி எடை போடவில்லை.
நன்றி தூயவன்.
என்னால் உங்கள் மன உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது.
உதாரணத்துக்கு பாருங்கள் தூயவன்
இங்கு உள்ளவர்கள் கூட இலங்கை இந்தியாவென்றால் ஏழை நாடுகள் என்றே கருதுகிறார்கள்.
என்னிடம் கூட ஆரம்பத்தில் கையெழுத்து போடுவாயா என்று இங்கு கேட்டதுண்டு.
இன்று நிலமை வேறு................
அதே போல இந்திய சினிமாக்களில் காதலன் காதலியோடு பேசுவதில்லை.
பாடிக்கொண்டு தெருக்களில் ஓடித் திரிகிறார்கள்.
மனித நேயமேயில்லாமல் விரும்பிய ஒருவரை அடைய விடாமல் கொலை கூட செய்கிறார்கள்.
பெண் குழந்தைகளை கருக் கொலை செய்கிறார்கள்
13 வயது குழந்தைக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்கிறார்கள்..................
இப்படியெல்லாம் எத்தனையோ நினைக்கிறார்கள்..............
அவர்களுக்கு உண்மைகளை புரிய வைக்க சிரமப்பட வேண்டியே இருக்கிறது.
இலங்கையைக் கூட ஈராக் போல என நினைக்கிறார்கள்.
ஒரு சிலருக்கு மட்டுமே உண்மையின் யதார்த்தம் தெரிகிறது.
சுவிஸைப் பொறுத்த வரை இன்று தமிழர்கள் நல்லவர்கள் வல்லவர்கள் கடும் உழைப்பாளிகள்.
இது இன்றைய நிலை.
இதனால் நாம்தான் கொஞ்சம் மேலே போய்
யோசிக்க வேண்டும்.
எதிரியை நண்பனாக்கிக் கொள்ள முயல்வதை விட
ஒரு நண்பனை எதிரியாக்கிக் கொள்ளாமல் இருந்தாலே
நமக்கு நல்ல நண்பர்கள் நிறைந்து இருப்பார்கள்.
உண்மை, நேர்மை, அன்பு, பரிந்துணர்வு
உணர்ச்சிவசப்பட்டு எடுக்கப்படும் முடிவுகளை விட சிறப்பானது தூயவன் கண்ணா. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->