Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழீழக்காதல்
#1
"முரளீதரனைப்பற்றி என்ன நினைக்கிற சொரூபா?"

"கள்ளனண்னா அவன், தமிழனே கிடையாது அவனும் சிங்களவன்தான்."

சில காலமாகவே இது எனக்கு வழக்கமாகயிருக்கிறது, இப்பொழுதெல்லாம் பெரும்பாலும் எங்கள் வீட்டிற்கு புதிதாய் குடிவந்திருந்த அந்த தமிழீழ பையனை வம்பிழுத்துக் கொண்டிருப்பேன். அவனுடைய பேச்சும் செயல்களும் பெரும்பாலும் எனக்கு சிரிப்பையே வரவழைக்கும். முன்பே பலசமயங்களில் நான் ஈழத்தமிழை உரைநடையில் படித்திருந்தாலும் பேசிக் கேட்டதில்லை, சொரூபனை முதலில் பார்த்தபொழுது அவன் பேசிய தமிழ் விநோதமாயிருந்தது. வேண்டுமென்றே அவனை வம்பிழுக்க, முரளீதரனையோ, கருணாவையோ பற்றி பேச நான் ஆரம்பித்தால் நிறுத்தாமல் பேசிக்கொண்டேயிருப்பான் நான் கேட்டுக்கொண்டேயிருப்பேன்.

அவன் தங்கை வந்து அவனை ஏதாவது சொல்லி அழைத்து சென்றுவிடுவாள். அவளுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது நான் அவள் அண்ணனை பேசவிட்டு வம்பிழுத்துக்கொண்டிருப்பது. இல்லாவிட்டால் எங்கக்கா வந்து தலையில் கொட்டி இழுத்துச்சென்றுவிடுவாள்.

ஒருமுறை எங்கள் வீட்டிற்கு வந்த என்னுடைய பெரிய மாமாவைப் பார்த்துவிட்டு சொரூபன்,

"அண்ணா நீங்கள் அப்படியே பொட்டு அம்மானைப் போலவே இருக்கிறியள்." என்று சொல்லிவைக்க ஏற்கனவே ஈழ ஆட்களுக்கு மாடிவீட்டை வாடகைக்குவிட்ட கோபத்தில் இருந்த மாமா அதன்பிறகு வீட்டிற்கு வருவதே நின்றுவிட்டது.

சொரூபனிடம் ஒருசில கெட்டபழக்கங்கள் இருந்தது, யாருக்கும் மரியாதை கொடுக்காமல் ஏகவசனத்தில் பேசுவது, ஒருமுறை என்னிடம் என் அக்காவை குறிக்க பெட்டைன்னு சொல்லிவிட பெரிய பிரச்சனை ஆகயிருந்தது. பெண்களைப்பற்றி அவன் கொண்டிருந்த சில எண்ணங்கள் இப்படி, அதேபோல் மாதக்கடைசியில் என்னிடம் வந்து காசு கேட்பதும்.

"அண்ணா உண்டியல் பணம் வரவேண்டியுள்ளது, வந்ததும் தருகிறேன்."

முதலில் புரியவில்லையென்றாலும் பின்னர் அவனே சொல்லத்தான் தெரிந்தது அது ஹவாலாப் பணம் என்று. அந்த அளவிற்கு விவரம் தெரியாவிட்டாலும் பையன் ஏதோ தப்பு செய்றான்னு மட்டும் தெரியும். அவன் சொந்தக்காரர்கள் ஜெர்மனியில் இருந்தார்கள் அவர்கள் அங்கிருக்கும் ஒரு ஏஜண்ட் இடம் காசு கொடுத்துவிட இவன் அந்தப் பணத்தை இங்கே ஒருஇடத்தில் வாங்கிக்கொள்வானாம். பெரிய தில்லாலங்கடி வேலையெல்லாம் கற்று வைத்திருந்தான். ஒருநாள் என்கிட்டயே உங்கள் பேங்க் டீடெய்லை கொடுங்கள் உங்கள் அக்கௌன்டிற்கு மாற்றிவிடச் சொல்கிறேன்னு சொன்னானே பார்க்கணும். முடியவே முடியாதுன்னு சொல்லிட்டேன்.

இப்பல்லாம் நேரம் போகலைன்னா அவனை கூப்பிட்டு பேச ஆரம்பிச்சிடுவேன். அதுவும் பிரபாகரனைப்பற்றியோ, புலிகளைப்பற்றியோ பேச ஆரம்பித்தால் அவ்வளவுதான் நிறுத்தாமல் பேசுவான். இடையில் நிறைய கெட்டவார்த்தையெல்லாம் சொல்லி திட்டுவான் எதற்கெடுத்தாலும் கள்ளப்பயதான், கருணாவைப்பற்றி கேட்டால் கள்ளன், முரளீதரனைப்பற்றி கேட்டால் கள்ளன் அப்பிடின்னு பெரிய கதையே ஆரம்பிச்சிடுவான். அந்தச் சமயங்களில் எல்லாம் அவன் கண்கள் பிரகாசமாவதைப் பார்த்திருக்கிறேன்.

"அண்ணே, பாருங்கண்ணே இன்னொரு வார் வந்தா ஆமியை அடிச்சு நொறுக்கிடுவாங்க, இப்போ நம்மக்கிட்ட கெலியெல்லாம் இருக்கு." அவன் ஒவ்வொரு விவரமாய்ச் சொல்ல எனக்கு ஆச்சர்யமாய் இருக்கும். வேலைவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் நான் சொரூபனிடம் பேச்சுக்கொடுக்க மாடிக்கு போய்விடுவேன் அதற்கு சொரூபன் மட்டும் காரணம் கிடையாது. அவன் தங்கிச்சியை வந்ததிலிருந்து நான் சைட் அடித்துக் கொண்டிருந்தேன் அதுவும் ஒரு காரணம். அவ பேரு சந்திரா, நம்ம பக்கத்து பெண்களைவிட கொஞ்சம் அடிக்கிற நிறத்தில் தான் இருப்பாள். ஆனாலும் நல்ல களையான முகம் இன்றைக்கெல்லாம் பார்த்துக்கொண்டேயிருக்கலாம்.

சொரூபனிடம் மட்டும் தான் விளையாட்டாய் பேசுவது, சந்திராவிடம் சீரியஸான மேட்டர் மட்டுமே பேசுவேன். பெரும்பாலும் விளையாட்டாய் பேச ஆரம்பித்தால் விலகிச்சென்றுவிடுவாள் என்பதால்தான் சீரியஸான மேட்டர். அவர்கள் இருவரும் சில லட்சங்கள் செலவழித்து பெங்களூரில், நான் சில ஆயிரங்கள் மட்டும் செலவழித்து படித்த டிகிரியை படித்துக் கொண்டிருந்தனர். அதைப்பற்றி, படித்துமுடித்ததும் அவர்கள் நாட்டில் இருக்கும் வேலை வாய்ப்புக்களைப்பற்றி, வெளிநாட்டில் பல சங்கடங்களுடன் வாழும் அவர்களுடைய உறவினர்களைப்பற்றி இப்படி நிறைய. கொஞ்சமும் விகல்பமில்லாமல் பேசிக்கொண்டிருப்பாள். அண்ணனைப்போல் வாயைத்திறந்தால் மூடாமல் பேசிக்கொண்டிருக்கமாட்டாள், ரொம்பவே அளவாய்த்தான் பேசுவாள். ஆனால் சொரூபனாகட்டும், சந்திராவாகட்டும் ராஜீவ்காந்தியைப்பற்றியோ, ஐபிகேஎப் பற்றியோ என்னிடம் பேசவேமாட்டார்கள். நானும் அவ்வளவாக சென்ஸிடிவ் விஷயங்களில் தலையிடமாட்டேன்.

அக்கா பெரும்பாலும் வீட்டில் இருக்கமாட்டாள் அதனால் பெரும்பாலும் சந்திரா தான் அம்மாவிற்கு உதவிவந்தாள், அம்மா மற்றவர்களை சமையல் அறைக்குள் விடமாட்டார்கள். என் அத்தையை கூட விடமறுத்து நான் பார்த்திருக்கிறேன். ஆனால் சந்திரா சமையல் கட்டிற்குள் போய் வேலைசெய்வாள். அம்மாவிற்கும் ஒருவாறு விஷயம் தெரிந்துதான் இருந்தது நேரில் காண்பிக்கவில்லை, ஆனால் அக்கா நேரிலேயே சொல்லிவிட்டாள்,

"மகனே சயனைட் குப்பிதான் உனக்கு ஜாக்கிரதை. வேணும்னா சொல்லு நைனாக்கிட்ட பேசி எனக்கு முன்னாடி உனக்கு வேறவொரு பொண்ணுகூட கல்யாணம் பண்ணிவைக்கச் சொல்றேன். இந்த விளையாட்டையெல்லாம் விட்டுறு. சொல்லிட்டேன்"

விளையாட்டாய் பேசுவதைப்போல் இருந்தாலும் ரொம்ப சீரியஸாய் சொல்லிக்கொண்டிருந்தாள்.

சொரூபனுக்கும் சந்திராவிற்கும் மற்ற பாடங்களில் பிரச்சனைகள் கிடையாது, ஆனால் ஆங்கிலம் தான் உதைக்கும். அதுவும் சொரூபன் பிரச்சனை, பெரிய பிரச்சனை. ஆங்கில பாடலாசிரியர்களையெல்லாம் ஏகவசனத்தில் பேசுவான், இவனெல்லாம் என்ன புஸ்தகம் எழுதுறான்னு. அதாவது அவனுக்கு சி, லாங்குவேஜையெல்லாம் தமிழில் சொல்லித்தரணும், யாராவது இதுபோன்ற தமிழ் புத்தகங்கள் இந்தக் கடையில் கிடைக்குதுன்னு சொன்னா அவ்வளவுதான் போய் வாங்கிட்டுத்தான் மறுவேலை பார்ப்பான். இதனால் பலசமயங்களில் சந்திராவை தனியாய் விட்டுவிட்டு தமிழ்நாட்டிற்கு வண்டியேறிவிடுவான்.

சொரூபனோ இல்லை சந்திராவோக்கூட தனியேயிருக்க பயப்படமாட்டாள், ஆனால் அம்மாவும் அக்காவும் நான் சந்திராவை என்னவோ செய்துவிடுவேன்னு அவளை அழைத்து எங்கள் வீட்டில் அவர்களுடன் படுக்கவைத்துக் கொள்வார்கள். சந்திராவிற்கு புரியுமோ புரியாதோ தெரியாது, சிரித்துக்கொண்டேயிருந்து விடுவாள். புஸ்தகம் வாங்கிவந்தவுடன் பிரச்சனை இன்னும் அதிகமாகும். தமிழ் விளக்கத்தையும் ஆங்கில விளக்கத்தையும் வைத்து என்னை சொல்லித்தரச்சொல்லி உயிரை வாங்குவான். இந்த விஷயத்தில் எனக்கு சந்திராவின் மீதுகூட கோபம் உண்டு. அவளும் இப்படித்தான் ஆங்கிலத்தில் இருக்கும் கட்டுரை முதற்கொண்டு தமிழில் மொழிபெயர்த்து படிப்பாள்.

இப்படியாகப் போய்க்கொண்டிருந்த ஒரு சனிக்கிழமையில் தான் டிவியில் நந்தா படம் போட்டான், ஈழ மக்களைப்பற்றிய படமென்பதால் சந்திராவும் பார்க்க வந்திருந்தாள். அதில் வந்திருந்த லைலா கதாப்பாத்திரத்தை சந்திராவாகவும் சூர்யா கதாப்பாத்திரத்தை நானாகவும் கற்பனை செய்து கொண்டு பார்த்துக்கொண்டிருந்தேன். இடையில் அவளை வேறு திரும்பித்திரும்பி பார்த்துக்கொண்டிருந்தேன். நான் பார்க்கும் சமயத்தில் எல்லாம் அவளும் என்னையே பார்ப்பதைப் போன்ற ஒரு பிரமை ஏற்ப்பட்டது.

படம் முடிந்த அன்றிரவு மெதுவாக அவளிடம் என் காதலைச் சொன்னேன். அதற்கு அவள் நேரடியாக பதிளலிக்காமல்,

"இங்கப்பாருங்க, நாங்களெல்லாம் படிக்க வந்திருக்கிறம். அதுவுமில்லாம என்னை கல்யாணம் கட்டிக்க உங்கட அரசு சம்மதிக்காது. உங்கட வீட்டிலும் கூட நான் வளையவர சம்மதிச்சாலும் கல்யாணம் கட்டிக்க சம்மதிக்க மாட்டாங்க. எனக்கு ஸ்டுடண்ட் விசாதான் இருக்கு அதுவும் முடியப்போகுது. அதனால கற்பனையெல்லாம காணாம போய் வேலையைப் பாருங்க." சொல்லிவிட்டு நகர்ந்தவளின் கையைப்பிடித்து நிறுத்தினேன்.

"அப்ப உனக்கு என்னை பிடிக்கலையா?"

"இங்கப்பாருங்கள் பிடிக்கிறதும் பிடிக்காததும் பிரச்சனை கிடையாது. இது நடக்காதது நடக்கமுடியாதது அதைத்தான் சொல்லுவினம். போய் உங்கட வேலையைப் பாருங்க. உங்கட ஊரில் என்னைவிட வடிவான பெண்களெல்லாம் கிடைக்கலாம் அவையைக் கலியாணம் கட்டிக்கிட்டு சந்தோஷமா இருங்க" இதைச் சொல்லும் பொழுது அவள் சிரித்துவிட்டாள், எனக்கும் சிரிப்புத்தான் வந்தது.

கொஞ்சம் கொஞ்சமாய் அவளுக்கும் எனக்கும் இருந்த இடைவெளி குறைந்தது. எங்கள் வீட்டிற்கும் இது ஒருமாதிரியாக தெரிந்துபோனாலும் அவர்களாக பிரச்சனையை வளர்க்க வேண்டாமென்று கேள்வியெதுவும் கேட்கவில்லை. ஈழ விடுதலைப்பாடல்களை ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டு பாடிக்காட்டுவாள் எல்லாவற்றையும் விளையாட்டாகவே பார்க்கும் எனக்கு இது மிகவும் வித்தியாசமாகயிருக்கும். அவளிடம் ஒரு முறை வைரமுத்து எழுதி தேசியவிருது வாங்கிய 'விடைகொடு எங்கள் நாடே' பாட்டைப்பற்றி பெருமையாக சொல்ல அவள் அதைப்பற்றி பெருமைப்பட எதுவுமில்லையென்றும்,

"எங்கட வலிகளை உங்களிண்ட கவிஞரின் வரிகளால் நிரப்பிவிட முயல்வது முட்டாள்தனம், அது அத்துனை இயல்பாய் வராது."

என்றும் கூறியது ஆச்சர்யமளித்தது. அதுமட்டுமில்லாமல் அவளுக்கு ஈழப்பிரச்சனையை வைத்து தமிழர்கள் படமெடுத்தும் பாட்டெழுதியும் சம்பாதிப்பதைப்பற்றிய அபிப்ராயமும் வேறாய்இருந்தது. அவர்களுடைய பிரச்சனையைப் பற்றிய தமிழர்களின் அறிவு குறைவாய் இருப்பதாகவும் அதன் பாதிப்பே இவையெல்லாம் என்றும் கூறினாள். பின்நாட்களில் அவள் ராஜீவைப்பற்றியும் ஐபிகேஎப் பற்றிய அவளுடைய மனப்பக்கங்களையும் எனக்குக்காட்டினாள். அது இதுவரை நான் படித்து கேட்டு தெரிந்துகொண்ட விஷயங்களில் இருந்தும் முற்றிலும் வேறுபட்டதாய் இருந்ததென்னவோ உண்மை.

அதன் பிறகு அவள் எங்கள் வீட்டில் இருந்த ஒருவருடம் சொர்க்கமாய்க் கழிந்தது, இடைவெளிகள் முற்றிலுமாய் இல்லாமல் போயிருந்தாலும் கடைசிவரை அவள் காதலை சொல்லவில்லை, என் காதலை ஏற்றுக்கொள்ளவுமில்லை. நாங்கள் நல்ல நண்பர்களாயிருந்தோம், இருக்கிறோம். இன்னமும் நான் கல்யாணம் பண்ணிக்கொள்ள வற்புறுத்தப்படும் ஒரு நாளில் அவள் பெயரை நிச்சயமாய்ப் பரிந்துரைப்பேன். இப்பொழுது படிப்பு முடிந்து அவள் இலங்கையில் இருக்கிறாள், இப்பொழுதும் தொலைபேசுவதுண்டு. பார்க்கலாம் காலம் தான் பதில் சொல்லவேண்டும் என் காதலுக்கான பதிலை
http://imohandoss.blogspot.com/2005/12/blo...og-post_05.html
Reply
#2
தாயகப்பெண்களின் காதல் உணர்வை உங்கள் சந்திராவின் பாத்திரத்தினுடாக காட்டியிருக்கீறிர்கள்.. வாழ்த்துக்கள்.
சந்திரா சொன்னது போல் எவ்வளவு பாட்டுக்களை தழிழக கவிஞர்கள் எழுதினாலும எமது வலிகளை புரியவைப்பது கஷ்டம் தான்..

உங்கள் காதநாயகனின் காதலில் நல்ல பதிலை காலம் சொல்லட்டும் என்று வாழ்த்துக்கின்றேன்.

Reply
#3
நல்லா மட்டம் தட்டியிருக்கார் முதலிலே வாசிச்சன் இந்தக்கதையை தமிழ்மணத்தில். :evil: :evil:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#4
ம்... அப்படி என்னதான் மட்டம் தட்டியிருக்கிறார் என அறிவதற்காக, வாசிப்பதற்காக வந்தால்.. கதை என்னவோ என்வரையில் யதார்த்தமாகத்தான் உள்ளது. சில குறைகளை சிலரால் தாங்க முடியாது. தமிழினியாலும் தாங்க முடியவில்லைபோலும்.. முதலில் என்னாலும்தான்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ஆனால் சிறிது யோசிக்கும்போது கதாசிரியர் கூறுவதிலும் உண்மை இருப்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
மற்றும்.. இந்த பேச்சுத் தமிழ்.. பழக்கப்படாதவர்கள் புதிதாக கேட்கும்போது சிரிப்பை வரவழைக்கலாம்.சினிமாவில் லூஸ் மோகனின் மெட்ராஸ் தமிழ் நகைச்சுவையாக இருப்பது போல.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
Reply
#5
கதையில் தென்படும் ஒரு விடயம் என்னவென்றால் ஈழவிடுதலைப் போராட்டத்தை, ஒரு வாழ்வாதாரப் போராட்டமாக, அல்லது உயிர் வாழ்வதற்காக போராடும் ஒரு இனத்தின் எண்ணத்தை புரிந்து கொள்ளமுடியாத நிலையில் தான் தமிழகத் தமிழர்கள் இருக்கின்றனர் என்ற யாதார்த்ததை சுட்டி நிற்கின்றது.

ஏதோ எம் தேசம் பொழுதுபோக்கிற்காகத் தான் போராடுகின்றது என்று எண்ணுகின்றனர் என ஜயுூறவு எழுகின்றது. மேலும் இப்படியான எண்ணங்களைத் தான் மணிரத்தினமும், கமலும் கொண்டிருந்தனர் என்று அவர்களின் ஈழத்தை மையப்படுத்திய படங்கள் காட்டி நின்றன.
[size=14] ' '
Reply
#6
91ல் நான் சென்னையில் இருக்கேக்க, சிவராசன் கர்நாடகவில் சயனற் அருந்தி இறந்த செய்தி கேட்டு, அங்கை இருந்த பொறியியாளளர் ஒருவர், ஈழப்பிரச்சனை முடிந்து விட்டது என்றார். அப்ப தான் நினைத்தேன் பலருக்கு ஈழத்தில் உள்ள பிரச்சனை தெரியாது என்று. நாங்கள் எமது பிரச்சனைய மற்றைய நாட்டவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். கொழும்பில் இருந்த ஆங்கில மோகம் கொன்ட தமிழார்கள் பலர் ஒஸ்திரெலியாவில் இருக்கினம். அவைக்கும் எமது போரட்டத்தைப்பற்றி தெரியாமல் விசர் கதை கதைப்பினம். அவையக்கண்ட நான் விடுகிறது இல்லை. நாங்கள் பலர் சேர்ந்து அவைக்கு விளங்கப்படுத்துவதால் இப்ப எங்களுக்கு முன்னால் ஈழப்போரட்டத்தைப்பற்றி கூடாமல் கதைப்பதில்லை.
Reply
#7
Quote:சொரூபனிடம் ஒருசில கெட்டபழக்கங்கள் இருந்தது, யாருக்கும் மரியாதை கொடுக்காமல் ஏகவசனத்தில் பேசுவது, ஒருமுறை என்னிடம் என் அக்காவை குறிக்க <b>பெட்டைன்னு</b> சொல்லிவிட பெரிய பிரச்சனை ஆகயிருந்தது. பெண்களைப்பற்றி அவன் கொண்டிருந்த சில எண்ணங்கள் இப்படி, அதேபோல் மாதக்கடைசியில் என்னிடம் வந்து காசு கேட்பதும்.


இவ்வாறு ஒரு பெண்ணை அக்குடும்பத்தவரிடம் யாரும் விளிப்பதில்லை என்று கருதுகிறேன், யாராவது தெரிந்திருந்தால் அறியத்தரவும்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#8
தூயவன் Wrote:கதையில் தென்படும் ஒரு விடயம் என்னவென்றால் ஈழவிடுதலைப் போராட்டத்தை, ஒரு வாழ்வாதாரப் போராட்டமாக, அல்லது உயிர் வாழ்வதற்காக போராடும் ஒரு இனத்தின் எண்ணத்தை புரிந்து கொள்ளமுடியாத நிலையில் தான் தமிழகத் தமிழர்கள் இருக்கின்றனர் என்ற யாதார்த்ததை சுட்டி நிற்கின்றது.

ஏதோ எம் தேசம் பொழுதுபோக்கிற்காகத் தான் போராடுகின்றது என்று எண்ணுகின்றனர் என ஜயுூறவு எழுகின்றது. மேலும் இப்படியான எண்ணங்களைத் தான் மணிரத்தினமும், கமலும் கொண்டிருந்தனர் என்று அவர்களின் ஈழத்தை மையப்படுத்திய படங்கள் காட்டி நின்றன.


எமது பிரச்சினைகளைப் புரிந்த கொள்ளமுடியாத நிலையிலே இன்னும் அவர்கள் இருக்கிறார்கள் அல்லது தெரிந்திருந்தும் அதனைத் தம் வியாபாரத்திற்காக மூடி வைக்கிறார்கள் என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#9
முந்தி யாழ்களத்திலேயும் சிலதுகள் வந்து விளக்கம் கெட்டு கதைப்பார்களாம். இப்ப எங்கள் சனங்கள் நிறையப்பேர் இங்கே நிற்பதால் மூச்சு அடங்கிப் போய் இருக்கினம். முக்கியமாக ஒரு சஞ்சிகையின் ஆசிரியர்.
ஆக சிலருக்கு விடயம் தெரியாது என்பதல்ல பிரச்சனை. ஆனால் எப்படி ஈழத்துகாரன் எங்கள் சொல்லுக் கேட்காமல் நடக்கலாம் என்ற ஆணவத் தொனி இருக்கின்றது. முக்கியமாக பாப்பாணிகளிடம்.
[size=14] ' '
Reply
#10
tamilini Wrote:நல்லா மட்டம் தட்டியிருக்கார் முதலிலே வாசிச்சன் இந்தக்கதையை தமிழ்மணத்தில். :evil: :evil:

kuruvikal Wrote:வந்தாரை அன்போடு வரவழைத்து விளங்காததை பண்போடு விளக்க முனைவதுதான் வரவேற்கத்தக்கது..! <b>தமிழினி ஒரு வாசகராக குறித்த கதையில் தான் உணர்ந்ததை வெளிப்படுத்தியது சிறப்பான ஒரு விமர்சனம் என்றே கொள்ள வேண்டும்..! </b>அதை அவர் கதைக்குரிய இடத்தில் வைத்திருந்தார்...! நிச்சயம் அவரைப் போலவே எமக்குள்ளும் ஒரு ஆதங்கம் எழுந்தது...அப்படி இன்னும் பலருக்குள் எழுந்திருக்கலாம்..! அதைச் சர்ச்சை ஆக்குவதிலும் தேவையானவற்றை பண்போடு விமர்சித்து விளங்கிக் கொள்வதே எல்லோருக்கும் நல்லது ஒற்றுமையையும் வலுப்படுத்தும்..! படைப்பாளியையும் பண்படுத்தும்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

என்ன இங்க நடக்குது..... தமிழினியக்கா எழுதினதுக்கு பேர் விமர்சனமெண்டா விமர்சனத்த என்னெண்டு சொல்லுறது......சின்னப்பிள்ளையள் மாதிரியே இருக்கினம் இங்க....... முதல்ல தமிழனியக்கா வச்சது கருத்தே இல்ல...அதுக்குள்ள அத விமர்சனம் எண்டா எங்க போய் தலையை முட்டுறது..... உத விமர்சனம் எண்டு சொல்லுறவை விமர்சனம் எண்டா என்னெண்டு ஒருக்கா விளங்கப்படுத்துங்கோவன்.....<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

மோகனதாஸ் அண்ணா உங்கட அனுபவங்கள எழுத்துவடிவில கற்பனையள் கலந்து சொல்லியிருக்கிறீங்கள்......அது உங்கட பார்வைதான். அதில மட்டந்தட்டினா மாதிரி ஒண்டும் எனக்க தெரியேல அண்ணா..... தமிழனிட்ட இருக்கிற குறையே தன்ர குறையள ஏத்துக்கொள்ளாத தன்மை தான்.....மற்றவன் தன்ன மட்டந்தட்டுறான் எண்டு சொல்லிச் சொல்லியே தாழ்ந்து போட்டுது எங்கட தமிழினி.னம்.

பெட்டை எண்டு சொல்லுறது எங்கட ஊரில மரியாத குறைவான வார்த்தையில்ல....அது இடத்துக்கு இடம் மாறுபடுந்தர்னே..... மூஞ்சி எண்டுறதும் எங்கட ஊரில அதிகமா பாவிக்கறதுதான்.... ஆனா உங்கட ஊரில அது கூடாம பார்க்கப்படுது..... இதெல்லாம் புரிஞ்சு கொள்ளக்கூடியதுதான்.....

உங்கட அனுபவங்கள எங்களோட பகிர்ந்துகொள்ளுங்கொண்ணா........நாங்கள் எங்கட கருத்த சொல்லுவம்......நீங்கள் எங்கள மட்டந்தட்டுறீங்களெண்டு அழுது புலம்ப மாட்டம்.......விமர்சனம் எண்டுற பேரில எங்கட தாழ்வுச்சிக்கல்கள வெளிப்படுத்தமாட்டம் அண்ணா.....எங்களுக்கு யாராவது விமர்சனம் வச்சா அத நாங்கள் ஏற்றுக்கொள்ளவே மாட்டம்....ஆனா மத்தாக்களுக்கு நல்லா அறிவுரை சொல்லுவமே.......எங்களுக்கு ஆரும் வச்சா அத வசைபாடுகினம் எண்டு சொல்லி அனுதாபம் தேடுவம்....ஆனா மற்றாக்கள நல்லா நயவஞஇசகமா வசைபாடுவமே........கவலைப்படாதேங்கோண்ணா.... தமிழினி திருந்தும்......

உங்கட அடுத்த கதையை நாங்கள் எதிர்பாக்கிறமண்ணா.....
Reply
#11
Quote:மோகனதாஸ் அண்ணா உங்கட அனுபவங்கள எழுத்துவடிவில கற்பனையள் கலந்து சொல்லியிருக்கிறீங்கள்......அது உங்கட பார்வைதான்.
பாத்தியளே பூனைக்குட்டியக்கா.. உங்கட அனுபவங்களை எழுத்துவடிவில சொல்லியிருக்கிறியள் என்ற கருத்தை நீங்கள் வைச்சியள் எல்லோ..?? இதே மாதிரி என்ர கருத்தைத்தாங்கோ நானும் நல்லா நக்கலடிச்சிருக்கினம் என்டு சொல்லியிருந்தன். இதில என்னங்க குறை என்றியள். அப்ப என்ன இப்படிச்சொல்றியளா.. எனக்கு அந்தக்கதையை வாசிக்க அந்த சொரூபன் என்ற பாத்திரத்தை மட்டம் தட்டியாதாய் தோன்றியது. அதை அப்படியே சொல்லியிருக்கிறனுங்க. ஏனுங்க அக்கா எல்லாற்ற கருத்தும் ஒன்றாயே இருக்கணுமாக்கா..?? இல்லை அந்த ஆக்கம் பற்றிய உங்களது கருத்துத்தான் என்ர கருத்தாய் இருக்கணுமாக்கா..?? ஏனுங்க அக்கா நான் வைச்சது என்ர பார்வை அது என்னக்கா பண்ணிச்சு உங்கள??

அதெப்படி உணர்றதை உணர்ற படி சொன்னா குறைபாடாக்கா..?? எத்தனை குறைபாட்டைஅக்கா சுட்டிக்காட்டினீங்க. ஏற்றுக்கொள்ளாமல் விட்டாங்க தமிழினி பட்டியல் தாறீங்களாக்கா..?? திருந்த உதவியா இருக்கும் எல்லாங்க அக்கா அதுதாங்க.

சரிக்க உங்களுக்கு இன்னொன்று சொல்லணுங்க. அடுத்தவினில குறைபிடிக்கிறதும் ஒரு குறையாமக்கா..??

Quote:உங்கட அனுபவங்கள எங்களோட பகிர்ந்துகொள்ளுங்கொண்ணா........நாங்கள் எங்கட கருத்த சொல்லுவம்......நீங்கள் எங்கள மட்டந்தட்டுறீங்களெண்டு அழுது புலம்ப மாட்டம்.......விமர்சனம் எண்டுற பேரில எங்கட தாழ்வுச்சிக்கல்கள வெளிப்படுத்தமாட்டம் அண்ணா.....எங்களுக்கு யாராவது விமர்சனம் வச்சா அத நாங்கள் ஏற்றுக்கொள்ளவே மாட்டம்....ஆனா மத்தாக்களுக்கு நல்லா அறிவுரை சொல்லுவமே.......எங்களுக்கு ஆரும் வச்சா அத வசைபாடுகினம் எண்டு சொல்லி அனுதாபம் தேடுவம்....ஆனா மற்றாக்கள நல்லா நயவஞஇசகமா வசைபாடுவமே........கவலைப்படாதேங்கோண்ணா.

ம் உண்மை தானுங்க. நாங்களும் ஆக்கங்களை வாசிச்சு முடிஞ்ச அளவு கருத்து வைப்பம். மற்றவை கருத்தா வைச்சா ஏற்றுக்கொள்வமக்கா. இப்ப உங்கட கருத்தை மாதிரியாராவது கருத்து வைச்சா எ்பபடியக்கா எடுக்கிறது..?? நீங்க வாசிச்சு உங்களுக்கு தோன்றியதை கருத்து என்றீங்க நான் எனக்கு தோன்றியதை வைச்சா தாழ்வுணர்ச்சி என்றீங்க..?? பிறகெப்படியக்கா..?? எழுத்தாளப்பெருமக்கள் நீங்களே இப்படி செய்தா.. வாசகர்கள் நாங்கள். :roll: :roll:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#12
அதெப்படி பூனைக் குட்டி இப்படி ஒருவரை நல்லாத் தெரின்சமாதிரி எழுதுறியள்?அது சரி உங்களுக்க ஆயிரம் இருக்கும் நான் உந்த வம்புக்கு வரேல்ல.

அதோட நான் களத்தில அவதானித்த வகையில் ,இந்தியத் தமிழர்களைப் பற்றிய மதிப்பீடு எவ்வாறு எம்மவர் மத்தியில் இந்திய இராணுவத்தை ,மத்திய அரசை மையமாக வைத்து வைக்கப் படுகிறதோ அவ்வாறே இந்தியத் தமிழர்களின் மதிப் பீடுகளும் தமது சொந்த அனுபவங்களின் ஊடாகவே வைக்கப் படுகின்றன.இதற்கு முக்கிய காரணம் எமக் கிடயில் தொடர்பாடலோ அன்றி போக்கு வரத்துக்களோ இல்லாததே காரணம்.இணயம் அந்தக் குறையை நிவர்த்தி செய்கிறது.அதனால் தயவு செய்து இங்கு வரும் இந்திய நன்பர்களுடன் பக்குவமாக நடந்து எமது பக்க நியாயங்களை எடுத்துரைப்போம்.அத்தோடு வரும் நண்பர்களும் இந்திய இராணுவத்தால் ஈழத் தமிழர் பட்ட இன்னல்களால் தான் இவ்வாறான இந்திய வெறுப்புணர்வு சிலரிடம் இருகிறது என்பதை புரிந்து கொண்டு கருத்தாடவும்.இங்கு பலருக்குத் தெரிந்த இந்தியா சினிமாவும் ,தமிழ் நாட்டு அரசியலும் தான்.ஈழத் தமிழருக்காக தீக்குழித்த தமிழ் நாட்டுத் தமிழரயோ அன்றி ஆரம்பகால இராணுவப் பாசறைகளுக்கு உதவி செய்த தமிழர்களயோ அறியார்.

நாம் இந்திய மத்திய அரசின் கபடத் தனத்தை அம்பலப் படுதும் அதே வேளை தமிழ் நாட்டுத் தமிழ் மக்களிடம் எமது பக்க நியாத்தை நிதானமாகச் சொல்ல வேண்டும்.இரண்டையும் ஒன்றாகப் போட்டுக் குழப்புவோமாகில் ,எமக்கு எதிராக தமிழ் நாட்டில் செய்யப் பட்டு வரும் பிரச்சாரத்திற்கு வலுச் சேர்ப்பதாகவே அது அமையும்.

மோகன தாஸ் என்ன சொல்லுறீங்க?
Reply
#13
Quote:ஏற்கனவே வரவேற்பு பகுதியில் எழுதிவிட்டு வந்தால் இங்கும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


<span style='font-size:22pt;line-height:100%'>வணக்கம் மோகன்தாஸ்.
முதற்கண் உங்களை அன்போடு வரவேற்கிறேன்.

கடந்த பதிவுகளையும்
உங்கள் பதிவில் எழுதியிருந்த அசல் கதையையும்
அங்கே பலரது வியப்புகளையும்
உங்கள் நிலையையும் என்னால் உணர முடிந்தது.

முதலில் உங்கள் படைப்புக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.

அடுத்து
நீங்கள் அந்த சம்பவங்களை உங்கள் நிலையிலிருந்து எழுதியிருக்கிறீர்கள்.
இலங்கையை அல்லது இலங்கை தமிழரைத் தெரியாத ஒரு இந்திய குடிமகனின் மனோ நிலையை அங்கே பார்க்கிறேன்.
அங்கே பொய் இல்லை.
மனதுக்கு பட்டது எழுத்தால் ஒரு படைப்பாகியுள்ளது.

நாங்கள் ஐரோப்பாவுக்கு வரு முன் வெள்ளைக்காரர்கள் எல்லோருமே ஆங்கிலம் பேசுபவர்கள் என்றே கருதினோம்.
<b>வெள்ளைக்காரங்கண்ணா இங்கிலீஸ்காரங்க.</b>
ஆனால் ஐரோப்பாவில் காலடி எடுத்து வைத்த போது எல்லோரும் வெள்ளையர்கள்தான்.
ஆனால் அவர்கள் எந்த நாடு என்று புரிந்து கொள்ளவே எமக்கு பல வருடங்கள் ஆகின.

நான் வாழ்வது சுவிஸ் நாட்டில்............
நான் வாழும் பகுதியின் மக்கள் ஜேர்மன் மொழி பேசுகிறார்கள்.
அந்த ஜேர்மன் மொழி கூட அசல் ஜேர்மன் மொழி அல்ல.
சுவிஸ் ஜேர்மன் மொழி.
நான் மொழி புரியாத நிலையில் இருந்த போது ஒரு வேலைக்கு போனேன்.
அங்கே இருந்த வெள்ளை நிறத்தவர்கள் என்னோடு பேசியது ஜேர்மன் மொழியில் என எண்ணினேன்.

சில வாரங்களுக்கு பின்தான் தெரிந்தது
அவர்கள் பேசியது ஜேர்மன் மட்டுமல்ல இத்தாலி பிரெஞ்சு ரொமானிஸ் போர்த்துகல் துருக்கி யூகோஸ்லாவிய ................என பல மொழிகள் என.........

அவை மாத்திரமல்ல .
இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

எனவே உங்கள் மனதுக்கு பட்டதை எழுதியிருக்கிறீர்கள்.
அது முற்று முழுதாய் ஏற்றுக் கொள்ள வேண்டியது வாசகர் கடமை.
இது ஒன்றும் ஆராச்சிக் கட்டுரை கிடையாது.
உங்கள் வாழ்வோடு நெருங்கிய இதயத்தில் உறைந்து விட்ட ஒரு அன்பு நினைவு............
<b>ஆட்டோ கிராப்</b>

நானும் பெங்களூரில் வாழ்ந்தவன் எனும் நிலையில்
ஒரு சில நிகழ்வுகளை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி மோகன்தாஸ்.
இது ஒரு வகையில் அடுத்த உறவுகளையும்
உங்களையும் யாழ் களத்தையும் இணைக்க நிச்சயம் உதவும் என்று நம்புகிறேன்.

பெங்களூர் சிவாஜி நகரில் 1987-1990கள் வரை தமிழ் ஈழ ஆதரவு மையமொன்று இருந்தது.
அதன் முகப்பில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் <b>பிரபாகரனின்</b> பெரிய கட்அவுட் ஒன்று இருக்கும்.
அங்கே ஈழ விடுதலை சம்பந்தமான அனைத்து புகைப்படங்களும் புத்தகங்களும் இருந்தன.
அந்த மையத்தில் எப்போதும் இளைஞர்களை பார்ப்பேன்.
<b>இது போதும்............... </b>
சிவாஜி நகர் என்பது ஒரு குட்டித் தமிழ்நாடுதான்.

நான் இக் கால கட்டத்தில் கன்னடப் படங்களில் பணிபுரிந்து கொண்டிருந்தேன்.
அதனாலேயே அங்குள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்தேன்.
லாட்ஜில் பல தமிழர்கள் வேலை செய்தார்கள்.

அக்காலத்தில் இலங்கை இராணுவத்துடன்
இலங்கை தமிழ் விடுதலை இயக்கங்கள் யாழ் கோட்டையை மீட்கும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
சுடச் சுடச் செய்திகள் பத்திரிகைகளில்...........
பத்திரிகையைத் தூக்கிக் கொண்டு ஓடி வரும் தமிழர்கள்
உணர்ச்சி பொங்க அவற்றை வாசித்து மகிழ்வார்கள்.

அவர்கள் தினமும் என்னிடம் கேட்ட கேள்வி.........
<b>புலிகள் எப்ப சார் கோட்டையை பிடிப்பாங்க?</b>
இவர்களது கேள்விக்குள் இருந்த தாகத்தை
என்னால் அன்று உணர முடியவில்லை.

ஒருநாள் அதிகாலை என் லாட்ஜ் முன்னால் வெடி கொழுத்தும் சத்தம்.
எழுந்து கதைவைத் திறந்தால்
தமிழர்கள் ஆரவாரமிட்டுக் கொண்டிருந்தார்கள்.
என்ன விசேசம் என்று கேட்டேன்.
<b>சார்.......விடுதலைப் புலிகள் கோட்டையை புடிச்சிட்டாங்க சார்.
கொடி நாட்டியாச்சு.
தமிழனுக்கு ஒரு நாடு கிடைச்சுட்டுது சார்.</b>
என்று மாதவன் என்ற தொழிலாளி
என்னைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டான்.

என் கண்கள் குளமாகின.
........................................

எம்.ஜீ.ஆர் படங்களில்
கோட்டையில் கொடி நாட்டினால் அந்த நாடே நமக்கு சொந்தம்
என்ற மனக்கணக்குடன் இவர்கள் வாழ்ந்திருந்தது மாதவனது பேச்சு எனக்கு உணர்த்தியது.

அவர்கள் தினமும் என்னிடம் கேட்ட கேள்வி.........
என் மனக் கண்ணில் வந்து போனது........
<b>புலிகள் எப்ப சார் கோட்டையை பிடிப்பாங்க?</b>

இன்று நாமெல்லாம் ஏதேதோ பேசுறோம்.
கொஞ்சம் யோசித்து பேசுவோம்.
<b>இந்திய அரசு என்பது வேறு.
இந்தியாவில் வாழும் தமிழ் ஈழ நேச மக்கள் என்பது வேறு?</b>
பக்கத்தில் இருந்த சிங்களவனையே புரிய முடியாதவங்க.........
வேறொரு................. :?:

மீண்டும் நன்றி மோகன்தாஸ்.
உங்கள் பதிவிலும் எழுதியிருக்கிறேன்.
</span>
Quote:"அண்ணா உண்டியல் பணம் வரவேண்டியுள்ளது, வந்ததும் தருகிறேன்."

முதலில் புரியவில்லையென்றாலும் பின்னர் அவனே சொல்லத்தான் தெரிந்தது அது ஹவாலாப் பணம் என்று. அந்த அளவிற்கு விவரம் தெரியாவிட்டாலும் பையன் ஏதோ தப்பு செய்றான்னு மட்டும் தெரியும். அவன் சொந்தக்காரர்கள் ஜெர்மனியில் இருந்தார்கள் அவர்கள் அங்கிருக்கும் ஒரு ஏஜண்ட் இடம் காசு கொடுத்துவிட இவன் அந்தப் பணத்தை இங்கே ஒருஇடத்தில் வாங்கிக்கொள்வானாம். பெரிய தில்லாலங்கடி வேலையெல்லாம் கற்று வைத்திருந்தான். ஒருநாள் என்கிட்டயே உங்கள் பேங்க் டீடெய்லை கொடுங்கள் உங்கள் அக்கௌன்டிற்கு மாற்றிவிடச் சொல்கிறேன்னு சொன்னானே பார்க்கணும். முடியவே முடியாதுன்னு சொல்லிட்டேன்.

உங்களால் மட்டுமல்ல பலரால் புரிந்து கொள்ள முடியாத ஒரு விடயத்தை பார்த்து அச்சமடைந்தீருக்கிறீர்கள்.

<b>உண்டியல்</b> என்பது
ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கோ அல்லது ஒரு ஊருக்கோ நண்பர்கள் அல்லது தெரிந்தவர்கள் வழி பணம் அனுப்புவது.

அதாவது
உங்கள் கதைப்படியே பார்த்தால்
ஜேர்மனியில் இருக்கும் சொருபனின் உறவினர் ஒருவர் ஜேர்மனியில் இருக்கும்
ஒரு இந்திய நண்பருக்கோ அல்லது வேறு ஒருவருக்கோ 500 டாலர் அல்லது யூரோ கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால் அதே பணத்துக்கான இந்திய மதிப்பீட்டுத் தொகையான 27122/- ரூபா பணத்தை ஜேர்மனியில் இருக்கும்
இந்திய நண்பரின் உறவினர் ஒருவர் மூலமாகவோ அல்லது நண்பர் மூலமாகவோ இந்தியாவில் கொடுப்பார்கள்.

அதாவது (இன்றைய ரேட் 1 = 54.24 படி 500 = 27122 ரூபா -
http://www.oanda.com/convert/cheatsheet ல் பார்க்கவும்)

இப்படியான பணமாற்று முறைகளை அதிகமாக மேலத்தேய நாடுகளில் இருக்கும் ஆசிய வியாபார நிறுவனங்களே செய்கின்றன. பல நாடுகளில் ஒரே நிறுவனத்தின் கிளைகள் இருக்கின்றன. ஒரு நிறுவனத்தில் கொடுக்கும் பணத்தை மற்றொரு நாட்டு நிறுவனத்தில் பெற்றுக் கொள்கிறார்கள். அவ்வளவுதான்........
புரியாதவனுக்கு சிம்ம சொப்பனம்தான்.

இது ஒன்றும் பெரிய ஹவாலாப் பணம் கிடையாது.(திருட்டு பணம் கிடையாது.)

இதை அனுப்ப கடைக்காரர்கள் கொஞ்சம் பணம் அறவிடுகிறார்கள்.

வங்கியில் பணம் அனுப்பினால் ஒரு வாரம் பத்து நாள் என இழுபடும்.

இப்படி அனுப்பும் போது ஒரே நாளில் இவர்களால் இந்தியாவில் உள்ள கடையில் போய் வாங்கிக் கொள்ளலாம்.

சிலரால் வங்கிக் கணக்குகளை திறக்க முடியாமல் இருக்கும் போது யாராவது ஒரு நண்பர்கள் மூலமாக அவர்கள் வங்கிக்கு பணம் அனுப்புவதுண்டு.

உங்கள் கதையில் இப்படியான விளக்கங்கள் இல்லாமை
<span style='font-size:16pt;line-height:100%'>(அதாவது இது பற்றிய தெளிவின்மையால்......../ இது தவறல்ல.)
ஏதோ கிரிமினல் குற்றவாளிகளாக அப்பாவிகளை நீங்கள் பார்த்ததாக காட்டுகிறது.
அதைக் கூட கலப்படமில்லாமல் சொல்லியிருக்கிறீர்கள்.
தவறு செய்யாத மனிதர்கள் இல்லை.
உங்களுக்கு சில விடயங்கள் தெரியவில்லை.
வார்த்தைகளின் அர்த்தம் கூட
கோபத்தை உண்டாக்கியிருக்கிறது.
Quote:சுவிஸ் ஜேர்மன் மொழியில் <b>\"கோபம்\"</b> என்று பாவிக்கப்படும் சொல்
ஜேர்மன் மொழியில் <b>பைத்தியம் / லூஸ்</b> என்று அர்த்தப்படுகிறது.
இது கூட புரியாம பேசினா லூஸுதான்.

மேலதிமாக விபரம் தேவைப்படின் எழுதுங்கள்.
பதில் தரக் காத்திருக்கிறேன்.
மீண்டும் வாழ்த்துகள்...........

அன்புடன்
அஜீவன்
Switzerland
www.ajeevan.com

கீழேயுள்ள கதை கூட உங்களை சிந்திக்க வைக்க உதவலாம்.
http://ajeevan.blogspot.com/2004/12/blog-p...st.html[/color]
Reply
#14
மோகன்தாஸ் தனது கதையில் மனதில் பட்டதை அப்படியே யதார்த்தமாக எவ்வித கலப்புமின்றி சொல்லியுள்ளார். உண்மையில் அஜிவன் என் மனநிலையை நீங்களும் அப்படியே பிரதிபலித்துள்ளீர்கள். இந்தியத் தமிழ் மக்கள் எங்கள் நிலையை புரிந்து கொள்ள வேண்டுமென்று ஆதங்கப்படும் நாம் எத்தனை பேர் அவர்களை முழுமையாக புரிந்து வைத்துள்ளோம். எமக்காவது சிங்கள அரசுடன் தான் பிரைச்சினை ஆனால் தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கு ஆந்திரா கர்நாடகா கேரளா இப்படியே பல பிரைச்சினைகள். இவ்வளவிற்கிடையிலும் எம்மில் அக்கறை கொண்டவர்களை நாம் மதித்தே ஆக வேண்டும். தவறுகள் இருப்பின் இங்கிதமாக சுட்டிக் காட்டுவோம்.
Reply
#15
¦º¡ÕÀÉ¢ý §ÀîÍõ ¦ºÂÖõ º¢Ã¢ô¨À ÅÃŨÇò¾ÐìÌ ¸¡Ã½õ «Åý ®Æô¨ÀÂý ±ýÀ¾¡ø «øÄ! «ôÀÊ¡¢ý «ó¾ ¦Àý À¡ò¾¢Ãò¾¢Öõ «øÄÅ¡ º¢Ã¢ôÒ Åó¾¢Õì¸ §ÅñÎõ? þÐ ¸¾¡º¢Ã¢Ââý «ó¾ ¦º¡ÕÀý (¾É¢ôÀð¼) À¡ò¾¢Ãò¾¢ý Á£¾¡É À¡÷¨Å§Â ¾Å¢Ã ®Æ¾Á¢Æ÷¸û Á£¾¡É À¡÷¨Å «øÄ!

¸¨¾Â¢ø À¡Ãð¼ôÀ¼ §ÅñÊ Ó츢 «õºõ ±ýɦÅýÈ¡ø, ®Æ¾Á¢Æ÷ ¦¾¡¼÷À¡É ÀÄ Å¢¼Âí¸¨Ç À¡ò¾¢Ãí¸Ç¢ý À¡÷¨Å¢ø ¾¡ý ¦º¡øÄ¢Â¢Õ츢ȡ÷. «¾¡ÅÐ ®Æ¾Á¢Æ÷ìÇ¢ý À¡÷¨Å¢§Ä§Â ¦º¡øÄ¢Â¢Õ츢ȡ÷.

º¢Äâý Å¢Á÷ºÉí¸¨Ç À¡÷ò¾¡ø, ¸¾¡º¢Ã¢Â÷ ±ýɧ𠮯 ¾Á¢Æ÷¸¨Ç ÀüÈ¢ ´ýÚõ ¦¾Ã¢Â¡Áø ±Ø¾¢Â Á¡¾¢Ã¢Â¡É «À¢ôÀ¢Ã¡Âò¨¾ ²üÀÎòи¢ÈÐ. ¿¢¨È Ţ¼Âí¸¨Ç ¦¾Ã¢óÐ ¦¸¡ñξ¡ý ±Ø¾¢Â¢Õ츢ȡ÷. þÕó¾¡Öõ, «¨ÉòРŢ¼Âí¸¨ÇÔõ ÐûǢ¡Á¡¸ ¦¾Ã¢óÐ ¦¸¡ñÎ ±Ø¾ «Å÷ ±ýÉ ³ì¸¢Â ¿¡Î¸û º¨ÀìÌ ®Æ¾Á¢Æ÷¸û ¦¾¡¼÷À¡¸ ¬Ã¡ö ¸ðΨá ºÁ÷ôÀ¢ò¾¡÷?
I don't agree with a damn thing you say, but I will defend to death for your right to say it!
Reply
#16
ஈழத்து பையன் என்பது சிரிப்புக்குரிய விடயமாக இருப்பதிலும், ஈழத்து விடுதலைப் போராட்டம் சிரிப்புக்குரிய விடயமாக விளிப்பதைத் தான் நாம் கவனத்தில் கொள்கின்றோம். எமது விடுதலைப் போராட்டத்தை அவர்கள் புரிந்து கொள்ளாத் தன்மையையே கண்டு கொள்கின்றோம்.
இங்கே தமிழினியும் சரி, பிறரும் சரி சுட்டிக்காட்டும் விடயம் அதுவே. இது கதையின் கதாபாத்திரத்தை, அல்லது அதில் பொதிந்திருக்கும் கருத்துக்களால் ஆசிரியர் எப்படியான உணர்வலைகளைக் கொண்டிருக்கின்றார் என்பதை சுட்டிக் காட்டுவதில் என்ன தவறு?
[size=14] ' '
Reply
#17
±¨¾ ¨ÅòÐì ¦¸¡ñÎ ®Æ¾Á¢Æ÷ §À¡Ã¡ð¼ò¨¾ º¢Ã¢ÒìÌâ Ţ¼ÂÁ¡¸ ŢǢò¾¾¡¸ ÜÚ¸¢È£÷¸û? ÓÃÇ¢¾Ãý ¦¾¡¼÷À¡É ¸Õò¾¢Ä¢ÕóÐ ¨ÅÃÓòÐÅ¢ý À¡¼ø ¦¾¡¼÷À¡É ¸ÕòРŨà ®Æ §À¡Ã¡¼ò¨¾ ºÃ¢Â¡É §¸¡½ò¾¢Ä¢ÕóÐ «Ï¸¢Â¾¡¸§Å ±ÉìÌ Àθ¢ÈÐ!
I don't agree with a damn thing you say, but I will defend to death for your right to say it!
Reply
#18
யாராக இருக்கட்டும். அவன் ஈழத்தை பற்றியோ அல்லது அவனின் வார்த்தைகளில் காணப்படும் கோபதாங்களை புரிந்து கொள்ளாமல் அவனை எரிச்சலுட்டுவதன் மூலம் அவன் வெளிப்படுத்தும் கோபத்தில் இன்பம் காணும் ஒரு போக்குத் தானே இருக்கின்றது. அங்கே எம் மக்களின் துன்பங்களை துளியளவும் புரிந்து கொள்ளும் தன்மையே இல்லையே?

இதனால் கதாசிரியரைக் குற்றம் சாட்டவில்லை. ஆனாலும் அவர் எம் பிரச்சனை தொடர்பான கருத்தியலை விளம்பி நிற்கின்றது என்பதையே சுட்டி காட்டுகின்றேன்.
[size=14] ' '
Reply
#19
¸¾¡º¢Ã¢Ââý ®Æô §À¡Ã¡ð¼õ ¦¾¡¼÷À¡É À¡÷¨Å ¸¨¾Â¢ý ¬ÃõÀò¾¢Öõ ÓÊÅ¢Öõ §ÅÚ §ÅȡɨÅ. þÐ ®ÆòÐô À¡ò¾¢Ãí¸û þÕÅÕõ «ÅÕìÌû ²üÀÎò¾¢Â Á¡üÈò¨¾ ¸¡ðΞüÌ ¨¸Â¡ñ¼ ¯ò¾¢Â¡¸ þÕì¸Ä¡õ. ¬ÃõÀò¾¢ø ¨À嬃 ÅõÒ츢Øò¾¡Öõ, ®Æô §À¡Ã¡ð¼ò¨¾ «È¢Ôõ ¬ÅÖõ «¾üÌû Á¨Èó¾¢ÕôÀ¨¾ «Å¾¡É¢ì¸Å¢ø¨Ä¡?
I don't agree with a damn thing you say, but I will defend to death for your right to say it!
Reply
#20
அந்த ஆவல் என்பது ஈழத்து பெண்ணை காதலிப்பதற்கு ஏற்பட்ட ஆவலே தவிர, உண்மைத் தெளிவுக்கல்ல. செரூபன் சொல்லுகின்றபோது புரிந்து கொள்ளமுடியாதவர், அவனின் தங்கை சொல்லும்போது தான் புரிந்து கொள்கின்றார் என்று சொல்வது வேடிக்கையாக இல்லை??
[size=14] ' '
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)