01-04-2006, 07:53 AM
கழ்ன்ட கேசு தம்பிய்டயான் !! நீ முத்ல்ல கும்டிபூண்டி தான்டு. அப்புரம் நீ இத பத்தி எல்லாம் பேசலாம்.
|
ஹிந்துவின் தலையங்கம், இந்திய நிலைப்பாடு
|
|
01-04-2006, 07:53 AM
கழ்ன்ட கேசு தம்பிய்டயான் !! நீ முத்ல்ல கும்டிபூண்டி தான்டு. அப்புரம் நீ இத பத்தி எல்லாம் பேசலாம்.
01-04-2006, 07:57 AM
அந்த கட்டுரை(ஆய்வு)
௧- ராம் என்ற தனிமனிதருக்கு இந்தியா என்ற நாடு விருது கொடுத்தது பற்றி அல்ல. ௨- இந்து என்ற பத்திரிகை மற்றும் அதன் தலமை ஆசிரியர் ராம் எழுதும் எல்லா விடையங்கள் பற்றய பொதுவான விமர்சனமும் அல்ல. ௩- இந்து பத்திரிகை இந்தியா என்ற நாட்டின் தேசிய பத்திரிகையை இல்லையா என்பது பற்றியும் இல்லை. ௪- ராம் உம் சம்பந்தனும் எழுதுவது எல்லாம் ஒட்டு மொத்த இந்திய மக்களின் பிரதிபலிப்பா இல்லையா என்று கேள்வியும் கேக்கப்படவில்லை. ஏன் என்றால் இவை எல்லாம் இந்தியாவின் உள்வீட்டு விவகாரங்கள். அதை விமர்சனம் செய்ய எமக்கு உரிமையில்லை. அதேபால் தான் ராமும் சம்பந்தனும் ஏனை இந்துப் பத்திரிகை பரிவாரங்களும் ஈழத்தமிழர் பற்றிய அரைவேக்காட்டு பித்தலாட்டம் தேவை அற்றது. அவர்கள் ஈழமக்கள் போராட்டம் பற்றி எடுக்கும் எல்லா நிலைப்பாடுகள் பற்றியும் விமர்சிக்கும் முழு உரிமை ஈழத்தமிழராகிய எமக்கு உண்டு. அது தான் இங்கு நடக்கிறது எதிர்காலத்திலும் நடக்கும். இந்துவினதும் ராமினதும் எமைப்பற்றிய கருத்துக்களை நாம் விமர்சிக்கும் போது கொஞ்சமமும் சம்பந்தமில்லாம் Wஅல்ல்ஸ்ட்ரேட் Jஒஉர்னல் ஈழத்திலா அச்சடிக்கிறார்கள் என்று கேக்கபது மிகவும் நகைப்பிற்குரியது. இதிலிருந்து விளங்கிறது அவரின் சிந்தனை ஆழமும் மனநிலையும். எனைய கள உறவுகளே இதை கருத்திற் கொண்டு பதில்கருத்துக்களை வைப்பதற்கு இங்கு சிலர் அருகதை அற்றவரா இல்லை என்று முடிவு செய்யுங்கள். உங்களுக்கு என்று சிறிதளவு சுயமரியாதை இருக்கிறதா இல்லயா என்பதை அது தீர்மானிக்கும். அத்ல்லாம் சரி !! ஏன் இந்தியன் எஸ்பிரஸ், தின மலர், டைம்ஸ் ஆப் இந்தியா பற்றி விமர்சனம் வருவதே இல்லை ??
01-04-2006, 09:03 AM
நன்றி லக்கி லுக்.சில நண்பர்கள் மாற்று கருத்தை எதிர் கொள்ளும் மன நிலையில் இல்லை என்று தெறிகிறது.ஏன் இந்திய தமிழ்ர்கள் உங்கள் கருத்தோடு மாறுபடுகிறார்கள் என்று அறிய முயற்சி செய்ய தயங்குவதேன்.
01-04-2006, 10:33 AM
இலங்கைப் பிரச்சனையின் மிக அண்மைக்கால வரலாறுகளை இந்தியா மறந்துவிடக் கூடாது: ஆய்வாளர் எஸ்.வி.இராசதுரை
[புதன்கிழமை, 4 சனவரி 2006, 05:35 ஈழம்] [கொழும்பு நிருபர்] இலங்கை அரசாங்கத்துடன் உறவுகளை மேற்கொள்ள விரும்புகிற இந்திய அரசு அண்மைக்கால வரலாறுகளை மறந்துவிடக் கூடாது என்று தமிழக ஆய்வாளர் எஸ்.வி.இராசதுரை சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்நாட்டின் தினமணி நாளேட்டில் அவர் எழுதியுள்ள கட்டுரை: அண்மையில் இந்தியாவிற்கு வருகை தந்திருந்த இலங்கை அதிபர் ராஜபக்சவின் சென்னைப் பயணம் ஏதோவொரு காரணத்தால் கடைசி நேரத்தில் இத்து செய்யப்பட்டுவிட்டது. கருத்துச் சுதந்திரத்தை மதிக்கும் இந்திய ஊடகங்களில் இலங்கை அரசின் கொள்கைகளுக்கும் சிங்கள அரசியல்வாதிகளுக்கும் கணிசமான ஆதரவு இருப்பதை அவர் அறியாதவரல்லர். 1980-களில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனவாதத் தாக்குதல்களில் யாழ். நூலகம் எரிக்கப்பட்டது உட்படப் பல்வேறு நடவடிக்கைகளில் நேரடியான, மறைமுக ஆதரவு கொடுத்தவர்களில் ஒருவர் எனத் தமிழ் மக்களால் கருதப்படும் காமினி திஸ்ஸநாயக்க போன்றோரும்கூட ஜனநாயகவாதிகளாகக் கருதப்படுவதையும் அவர் அறிந்திருப்பார். எனினும் அவருடன் வந்திருந்தவர்களில் ஒரு குறிப்பிட்ட நபரைப் பத்திரிகையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பது ராஜபக்சவின் "கூட்டணி தர்ம'த்தால்கூட இயலாததாக இருந்திருக்கும். அவரது கூட்டணியைச் சேர்ந்த இரண்டு சிங்கள தீவிரவாத அமைப்புகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமயவின் முக்கியத் தலைவரான உதய காம்மன்பில என்பவரும் அதிபரின் குழுவில் இடம்பெற்றிருந்தார். அந்தத் தீவில் போருக்கு எதிராகவும் அமைதிக்கும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்காகவும் குரல் கொடுக்கும் சிங்களக் கலைஞர்கள் மீது தொடர்ந்து வன்முறையைத் தூண்டிவிட்டு வருபவர் என்னும் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளவர் அவர். அந்த நாட்டின் பாதுகாப்புக்காக அரசாங்கத்தால் அமைக்கப்பட்டிருக்கும் "பாதுகாப்புக் குழு'வில் அவரும் இடம்பெற்றிருப்பதாக ஒரு செய்தி அடிபட்டுக் கொண்டிருக்கிறது. இது உண்மையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய கடமை இந்திய அரசாங்கத்திற்கு உண்டு. ஜாதிக ஹெல உறுமயவும் மற்றொரு சிங்கள தீவிரவாத அமைப்பான ஜனதா விமுக்தி பெரமுனவும் விதித்த நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ராஜபக்சய தலைமையிலான கூட்டணி உருவாகிற்று என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் சுனாமி நிவாரணத்திற்கு சந்திரிகா குமாரதுங்க அரசாங்கம் புலிகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தையும் இரத்து செய்ய வேண்டும். இலங்கையில் கூட்டாட்சி முறையை உருவாக்குதல் என்னும் அடிப்படையில் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதைக் கைவிட வேண்டும் என்பன இந்த நிபந்தனைகளில் அடங்கும். அதாவது மீண்டும் உள்நாட்டுப் போரைத் தொடங்க வேண்டும் என்பதுதான் இந்த நிபந்தனைகளின் சாரம். இது ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைபாட்டுக்கு மட்டுமன்றி, சந்திரிகா ஆட்சியிலிருந்த வரை ராஜபக்சவும் கூட ஏற்றுக்கொண்டிருந்த கொள்கைக்கும் எதிரானதாகும். அச்சமயம் சந்திரிகா அரசாங்கத்தில் பிரதமராக இருந்த ராஜபக்ச, கண்டியில் புத்தரின் பல் இருப்பதாகக் கருதப்படும் ஆலயத்திற்குச் சென்று அங்கு ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரான எல்லாவல மேதானந்தவின் காலில் விழுந்து அந்த ஒப்பந்தத்தின் பிரதியை வாங்கிக் கொண்டார். அதன் பிறகு அனைத்துச் சமயச் சடங்குகளையும் செய்த பின்னர் அந்த ஆவணத்தை புத்தரின் பல் இருப்பதாகச் சொல்லப்படும் பேழைக்கு முன் வைத்து வணங்கினார். இலங்கையின் முக்கிய அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் தலைவர்கள் எல்லாருமே புத்த பிக்குகளின் ஆசியைப் பெறுவது வழக்கம் என்றாலும் தேர்தல் அறிக்கைகளையோ கூட்டணி அரசியல் ஒப்பந்தங்களையோ அவர்களது காலடிகளில் இதுவரை சமர்ப்பித்ததில்லை. பிற முதன்மையான அரசியல் கட்சிகள், அரசு யந்திரம், இராணுவம் ஆகியவற்றில் விரவியுள்ள புத்தமதவாதத்தின் அதிதீவிர வெளிப்பாடுகள்தான் ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கைகள். உறுமயவின் தலைவரின் முன் ராஜபக்ச மண்டியிட்டது இலங்கை அரசின் மற்றொரு வெளிப்பாடுதான். அந்த நாட்டின் நாடாளுமன்ற இடதுசாரிகளின் ஆதரவுடன் 1972-ல் இலங்கையில் புத்தமதம் அரசு மதமாக அறிவிக்கப்பட்டதன் தொடர்ச்சியாகவே இன்று உறுமய, சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே அந்த நாட்டை ஆள்வதற்கான உரிமை இருக்கிறது என இடைவிடாது கூறி வருவதாகும். சிங்கள ஆட்சியாளர்களுக்குத் தேவையான இனவாத அரசியலுக்கு அடிப்படையாக உள்ள புத்த பிக்குகள், ஆங்கிலேயரின் காலனியாதிக்கப் பண்பாட்டை எதிர்த்தல் என்னும் பெயரால், பழங்கால சிங்கள மன்னர்களின் ஆட்சியைச் சுட்டிக்காட்டி, அந்த நாடு முழுவதுமே சிங்களர்களின் ஆட்சியின் கீழ் இருந்ததாகக் கட்டுக்கதைகளைப் பரப்பி வருகின்றனர். உண்மையில் இத்தகைய கட்டுக்கதைகளைச் சாத்தியமாக்கியவர்கள் பிரிட்டிசார்தான். கண்டியின் கடைசி சிங்கள அரசைத் தோற்கடித்த பின்னர், அந்த அரசின் வாரிசுகளுடன் 1815-ல் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் "புத்தமதமும், அதன் சடங்குகள் சம்பிரதாயங்களும், பிக்குகளும் பௌத்த வழிபாட்டுத் தலங்களும் பராமரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படும்" எனப் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கூறினர். தாங்கள் பாதுகாக்க விரும்பிய அரசியல் சமநிலையைக் குலைக்கும் வகையில் சமுதாய மாற்றங்களுக்கும் சீர்திருத்தங்களுக்குமான இயக்கங்கள் தோன்றுமானால் அவற்றை வலுக்குன்றச் செய்வதற்கு பௌத்த மதம் பயன்படும் என பிரிட்டிசார் கருதியதாக இலங்கையின் புகழ்பெற்ற வரலாற்றறிஞர் கே.எம்.டி சில்வா கூறியுள்ளார். பிரிட்டிசாருக்குப் பின்வந்த சிங்கள ஆட்சியாளர்கள் இதனை இன்னும் ஆழமாகப் புரிந்து கொண்டனர். இலங்கை அரசாங்கம் ஒவ்வோராண்டும் தனது வரவு - செலவுத் திட்டத்தில் பௌத்த விவகாரங்கள் துறைக்கு பெருந்தொகைகளை ஒதுக்குகிறது. 2004-ல் இப்படி ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 18.50 கோடி. இப்படி ஒதுக்கப்படும் தொகையில் பெரும்பகுதி புத்த மடங்களுக்குப் போய்ச் சேர்கிறது. எனவே அவர்களும் தங்கள் பங்குக்கு, ஆட்சியாளர்களும் பிற முதன்மையான சிங்களக் கட்சிகளும் விரும்புகிற இனவாத அரசியலுக்குத் தூபம் போடுகின்றனர். எடுத்துக்காட்டாக சுனாமி நிவாரணப் பணிகளைக் கூட்டாக மேற்கொள்வதற்கு சந்திரிகா அரசாங்கம் புலிகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை இரத்து செய்ய வேண்டும் என்பதற்காக உறுமயவின் செயலாளரும் புத்த பிக்குவுமான ஓமல்பெ சோபித, கண்டியிலுள்ள கோவிலுக்கு முன் அமர்ந்து "சாகும் வரை உண்ணாநோன்பு இருக்கப்போவதாக'' அறிவித்தார். அதனைத் தொடர்ந்து கொழும்பிலுள்ள பிக்குகளும் இந்த ஒப்பந்தம் தேசத் துரோகமானது என அறிவித்து உண்ணாநோன்பைத் தொடங்கினர். சிங்களவகள் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதாகப் பிரசாரம் செய்த உறுமய, கடந்த இரண்டாண்டுகளில் கிறிஸ்துவ தேவாலயங்கள் மீது வன்முறைத் தாக்குதல்கள் நடத்தியது. இந்தியாவில் மதச்சார்பின்மைக்கு ஆதரவாகவும் பெரும்பான்மை மதவாதத்திற்கு எதிராகவும் பேசுபவர்கள், சிங்கள பௌத்தவாதம் அந்த நாட்டின் அமைதிக்கும் முன்னேற்றத்துக்கும் ஏற்படுத்தி வரும் பாதிப்புகளைப் பற்றி மௌனம் காக்கின்றனர். அந்த நாட்டில் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முதல் நிபந்தனை சிங்கள பௌத்தத்தை அரசு மதம் எனக் கூறும் அந்த நாட்டின் அரசியல் சட்டப் பிரிவை நீக்குவதுதான். இந்த அரசியல் சட்டப் பிரிவுதான் தமிழர்கள் மீது பாரபட்சம் காட்டுவதற்கு சிறிமாவோ பண்டாரநாயக அரசாங்கத்திற்கும் அதன் பிறகு ஜே.ஆர்.ஜெயவர்தன அரசாங்கத்திற்கும் அடிப்படையாக இருந்து 1983-ல் இனக் கலவரத்தைத் தூண்டிவிட்டது. இலங்கையுடன் தொழில் - வர்த்தக உறவுகளையோ பாதுகாப்பு உறவுகளையோ வலுப்படுத்திக் கொள்வதையும் இலங்கையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கப்படுவதையும் விரும்பும் மத்திய அரசாங்கம் இந்த மிக அண்மைக்கால வரலாற்றை மறந்துவிடக் கூடாது என்று அதில் எஸ்.வி.இராசதுரை குறிப்பிட்டுள்ளார். http://www.eelampage.com/?cn=23076
01-04-2006, 10:50 AM
பல தமிழக மக்கள் எங்கள் அடிபடைப் பிரச்சினைபற்றி நன்கு புரிந்துனர்வோடு இருக்கிறார்கள் என்பதுக்கு நல்ல சாண்றான கட்டுரை.... நண்று நாரதா..!
ஜனநாயகம் பேசிக்கொண்டு இங்கு வரும் உருப்பினர்கள்.. ஒண்றைப் புரிந்து கொள்ளவேண்டும். யாரை யார் விமர்சிப்பதுக்கும் யாருக்கும் உரிமை உண்டு.. அதை எதிர்த்துப் பேச எங்களுக்கும் உரிமை உண்டு... இந்தியாவின் ஆங்கிலப் பத்திரிகைகளில் ஒண்றான இந்து தேசியப்பத்திரிகை என்பவர்கள்... தேசியம் ஆங்கில மயமாகி அழிந்து கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளாமல் தங்கள் தேசியத்தைக் விமர்சிக்க வேண்டாம் எண்டு தடைபோடுவது மரபானதா..?? இது ஜனநாயகமானதா...???? புரிபவருக்குப் புரியும் ..... :wink:
::
01-04-2006, 10:53 AM
எனக்கும் புரியாது மனிதராக பிறந்தவர் எவருக்கும் புரியாது உங்கள் வாதம்... தயவு செய்து எதையுமே தெளிவாக குறிப்பிட பழகிக் கொள்ளுங்கள்....
,
......
01-04-2006, 11:03 AM
Luckyluke Wrote:எனக்கும் புரியாது மனிதராக பிறந்தவர் எவருக்கும் புரியாது உங்கள் வாதம்... தயவு செய்து எதையுமே தெளிவாக குறிப்பிட பழகிக் கொள்ளுங்கள்.... இதைக்கள வேறு உறுப்பினர்கள் சொன்னால் செய்யலாம்... பார்போம் நாங்களா, நீங்களா மனிதர்கள் எண்டு.... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
::
01-04-2006, 11:05 AM
உங்களுக்குப் புரியாவிட்டால் மனிதர்கள் எவருக்கும் புரியாது என்று எப்படிச் சொல்வீர்கள்?உங்கள் அரசியல் அறிவென்பது மட்டுப்படுத்தப்பட்டது, அதனால் உங்களுக்குச் சில விடயங்கள் புரிவதில்லை.புரியாத விடயங்கள் புரிய வேண்டும் என்றால் வாசிக்க வேண்டும், புரிந்தவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும்.அதை விடுத்து நாம் சொல்வது தான் சரி என்று விதண்டாவாதம் செய்தால் எப்போதுமே புரியாது.
புரிதலுக்கான அடிப்படை கேட்பது.கேட்டதைப் பற்றிச் சிந்திப்பது.மேலும் கேட்பதற்கான தேடலை மேற்கொள்வது.ஆளமான கருதுக்களை உள்வாங்குவது.அதை விடுத்து மேலோட்டமான பார்வையும் தமிழ் சினிமாத் தனமான அரசியல் சமூகப் பார்வையும் இருக்குமிடத்து உங்கள் அரசியல் அறிவு வளர்ச்சிக்கு இவற்றைப் புரிவது கடினம். நீங்கள் அரசியல் பாடமாகப் படித்ததாகச் சொல்லுகிறீர்கள் ஆனால் உங்கள் அடிப்படைகளே சிறுபிள்ளைத்தனமான வாதாங்களாக இருக்கின்றனவே?
01-04-2006, 11:08 AM
அதுதானே ஜனனாயகவாதிகளா இவர்கள். யாரை யார் விமர்சிக்கக் கூடாது என்பது அதுக்கு இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது.?
:::::::::::::: :::::::::::::::
01-04-2006, 11:13 AM
நான் கேட்டது அத்ல்லாம் சரி !! ஏன் இந்தியன் எஸ்பிரஸ், தின மலர், டைம்ஸ் ஆப் இந்தியா பற்றி விமர்சனம் வருவதே இல்லை ??
இதை விடுத்து வேறு எதோ பேசுவது தலைபை விடுத்து எஙோ செல்வது போல் உள்ளது.
01-04-2006, 11:23 AM
ஜனநாயகம் பேசிக்கொண்டு இங்கு வரும் உருப்பினர்கள்.. ஒண்றைப் புரிந்து கொள்ளவேண்டும். யாரை யார் விமர்சிப்பதுக்கும் யாருக்கும் உரிமை உண்டு.. அதை எதிர்த்துப் பேச எங்களுக்கும் உரிமை உண்டு... இந்தியாவின் ஆங்கிலப் பத்திரிகைகளில் ஒண்றான இந்து தேசியப்பத்திரிகை என்பவர்கள்... தேசியம் ஆங்கில மயமாகி அழிந்து கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளாமல் தங்கள் தேசியத்தைக் விமர்சிக்க வேண்டாம் எண்டு தடைபோடுவது மரபானதா..?? இது ஜனநாயகமானதா...???? புரிபவருக்குப் புரியும்
தல !! எங்கள் நாட்டின் கட்டமைபை தெரிந்த நீங்களே இப்படி பேசலாமா? இங்கு 27 மொழி பேசும் மக்கள் உள்ளனர். அனைவர்க்கும் பொதுவான மொழி ஆங்கிலம் , ஹிந்தி. நான் ஒரு மலயாலி கூட பேச வேண்டுமானால் ஆங்க்லிதிலோ அல்லது ஹிந்தியிலோ பேச வேண்டும்.நான் தமிழ்டில் தாம் பேசுவேன் என்று அடம் பிடிகக முடியாது. உஙகள் போரத்ட்டிதின் காரண்மாக தமிழ் மொழி மேல் அசைக்முடியாத பற்று உங்களுக்கு. அதை போல் ஒன்று தமிழ் நாட்டில் வரபோவதுதில்லை. வெறும் தமிழ் மட்டும் கற்று கொண்டால் தமிழ் நாட்டை கும்மிடிபூண்டி கூட தாண்ட முடியாது. ஆங்கில அறிவின் காரனமாக எங்கள் நாட்டின் குறிப்பக தமிழ் நாட்டின் பொருளதாரம் வளர்ந்து வருவதை காணலாம்.
01-04-2006, 11:28 AM
[quote=rajathiraja]தல !! எங்கள் நாட்டின் கட்டமைபை தெரிந்த நீங்களே இப்படி பேசலாமா? இங்கு 27 மொழி பேசும் மக்கள் உள்ளனர். அனைவர்க்கும் பொதுவான மொழி ஆங்கிலம் , ஹிந்தி. நான் ஒரு மலயாலி கூட பேச வேண்டுமானால் ஆங்க்லிதிலோ அல்லது ஹிந்தியிலோ பேச வேண்டும்.நான் தமிழ்டில் தாம் பேசுவேன் என்று அடம் பிடிகக முடியாது.
உஙகள் போரத்ட்டிதின் காரண்மாக தமிழ் மொழி மேல் அசைக்முடியாத பற்று உங்களுக்கு. அதை போல் ஒன்று தமிழ் நாட்டில் வரபோவதுதில்லை. வெறும் தமிழ் மட்டும் கற்று கொண்டால் தமிழ் நாட்டை கும்மிடிபூண்டி கூட தாண்ட முடியாது. ஆங்கில அறிவின் காரனமாக எங்கள் நாட்டின் குறிப்பக தமிழ் நாட்டின் பொருளதாரம் வளர்ந்து வருவதை காணலாம். அதை ஆங்கிலத்தில் தான் விமர்சிக்க வேண்டுமா வேறு நல்ல இந்திய மொழிகளா இல்லை 27 மொழி இருந்தும் பஞ்சம் தலைவிரித்தாடுது.... சரி ஒரு கேள்வி..! உங்கள் நாட்டில் இந்தியாவை விமர்சிப்பவரோ இல்லை, மத்திய அரசை விமர்சிப்பவர் இல்லையா...???அப்போ ஈழத்தவன் என்ன இளைச்சவனா...??? நீங்கள் எல்லாம் வந்து அதிகாரம் பண்ண...! நாங்கள் என்ன செய்ய வேண்டும் எண்று எங்களிற்கு நன்கு தெரியும். அதை நீங்கள் முடிவு செய்யாதீர்கள்....
::
01-04-2006, 11:49 AM
ராஜாதி ராஜா வார்த்தைகளில் கவனம் செலுத்துங்கள்... இவர்களுக்காக நாம் மற்ற தொப்புள்கொடி உறவுகளை கொச்சைப் படுத்த வேண்டாம்.....
,
......
01-04-2006, 11:56 AM
அய்யா அகிலன் அவர்களே... என் தரம் தெரியும் அது இது என்று ஏதேதோ சொன்னீர்கள்... உமக்கு ஒன்று தெரியுமா... தட்ஸ் தமிழ் இணையத்தில் சென்ற வருடத்தின் சிறந்த உறுப்பினராக என்னை வாக்கு கணிப்பு நடத்தி தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.... மொத்தம் பதிவான 57 வாக்குகளில் எனக்கு 21 பேர் வாக்களித்திருக்கிறார்கள்...
,
......
01-04-2006, 12:00 PM
ஆமாம் ஐயா அங்கு அதிகமான கெட்டவார்த்தை பயன் படுத்தியதும் நீங்கள் தான் எண்று தெரியும். இரட்டை அர்த்த வசனங்கள் பாவிப்பதிலும் முன்னிலையில் நீங்கள்தான். கடைசியாக "தம்பியடையானை" எப்படி வர்ணித்தீர்கள் எண்டும் தெரியும். அதோடு யாழ்கள உறவுகளை எவ்வளவு கேவலமாக விமர்சித்தீர்கள் என்பதுவும் தெரியும்.
உங்கள் மதிப்பை நாங்கள் தரமுடியாது அதை நீங்கள்தான் தக்கவைக்க வேண்டும். நண்றி வணக்கம்.
:::::::::::::: :::::::::::::::
01-04-2006, 12:02 PM
அது சரி!! நான் என்ன கெட்ட வார்தை பயன் படுத்தினேன். சொல்லுஙகள். கொன்சம் TENSION ஆயிடேன்.. மன்ன்க்கவும்.
01-04-2006, 12:10 PM
rajathiraja Wrote:அது சரி!! நான் என்ன கெட்ட வார்தை பயன் படுத்தினேன். சொல்லுஙகள். கொன்சம் TENSION ஆயிடேன்.. மன்ன்க்கவும். இந்தியாவை விமர்சிக்க உரிமை எங்களுக்கு இருக்கிறது. அதை மறுக்க உங்களிற்க்கும் உரிமை இருக்கிறது. அதைக் கருத்துகளால் முறையடிக்க முயலுங்கள். எங்கச்ளுக்கு தெளிவின்மை எண்றால் முடிந்தால் தெளிய வையுங்கள். நாங்கள் பல காயங்கள் பட்டவர்கள் அவ்வளவு விரைவில் யாரையும் நம்பத்தயாராக இல்லை. பிறகு த.ல க்கு ஜட்டிக் கதை எல்லாம் வேணாம். கள உறுபினரைக் கேவலப்படுத்துவது தவிர்க்கப் பட வேண்டியது.
:::::::::::::: :::::::::::::::
01-04-2006, 12:12 PM
rajathiraja Wrote:சரி சரி அதான் தப்பு மன்னிப்பு கேட்டேனே அப்புறம் என்ன?ஏன் என்னை வம்புக்கு இழுகிரே? சரி என்னையும் மன்னித்து விடுங்கள்.
:::::::::::::: :::::::::::::::
01-04-2006, 12:16 PM
சரி என்னையும் மன்னித்து விடுங்கள்.
ஐயா!! நாம் இருவரும் தமிழ்ர்கள் தேவை இல்லாமல் சண்டை போட்டு கொன்டு இருக்கிறோம். இனிமேல் இப்படி இல்லாமல் நல்ல கருத்து பறிமாறல் செய்வோம். நன்றி. |
|
« Next Oldest | Next Newest »
|