Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்திய சகோதரர்களுக்கு,,,,
#21
நன்றி நண்பர்களே உங்கள் கருத்தை நானும் ஆமேதிக்கிறேன்
#22
இந்த பகுதியில் கருத்தெழுத தவிர்க்க விரும்பிய பொழுதும் வசும்புக்காக பதில் சொல்ல வேண்டியிருக்கு... இந்திய நலன் முக்கியமென்பதற்க்காகதான் அவர்களின் இராணுவ அரசியல் ராஜ தந்திரம் எல்லாவெற்றை யும் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தியா இவ்வளவுகாலம் செய்த திருவிளையாடலெல்லாம் இலங்கையில எடுபடாது கையை சுட்ட பின்னர் புதிய வகையான ராஜ தந்திர போர் செய்து கொண்டிருக்கிறது..இவ்வளவு காலமும் தீர்வில் இலங்கையின் சிறுபான்மையினருக்கு உகந்த தீர்வு வழங்கபடவேண்டும் கூறிய இந்தியா ..இப்பொழுது தீர்வில் சகல தரபபுக்கும் உகந்த தீர்வாக இருக்க வேண்டு மென்ற புதிய பல்லவியை பாடி வருகிறது... வசும்பு இதில் என்ன சிநேகதமாக போறது வேணுமானால் அரசியல் ராஜதந்திரமாக இருங்களென்று சொல்லலாம்

நாம் தமிழ் நாட்டின் உள்ளூர் அரசியல் முதற்கொண்டு தெரிஞ்சு வைத்திருக்கிறோம்..தமிழ்நாட்டு சில நண்பர்கள் முழுமையாக இலங்கை நடப்புகளை அறிந்திருக்கவில்லை அறியவும் ஆர்வமில்லை ஆனால் மூளை சலவை செய்யபட்ட கருத்துகளின்படி கருத்து கூறுகிறார்கள்... பிரச்சனை வருமென்று சமரசம் செய்வதிலும் பார்க்க கருத்துக்களால் உணரவைப்பது சிறந்தது என்று நினைக்கிறன்.. இந்த களமும் குருசேஸுத்திரம் தான் நியாயம் ஜெயிக்கட்டும்.........
#23
:mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen:
[b]
#24
சின்னப்பு திடீர் என்று உனக்கு என்னணை நடந்தது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
#25
ஊமை

சின்னப்பு பல நாட்களுக்கு பின் தனது பல்செட்டைக் களட்டி விளக்கினவராம். அது சரியாக இருக்கோ என்று வந்து கேட்கின்றார். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
#26
பண்பைப்பேணுவோம் அன்போடு வாழுவோம்.

டண் உங்கள் சிந்தனை செழிப்புற என் வாத்துக்கள். புரிந்துணர்வுக்கு அனைவருக்கும் நன்றிகள்.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
#27
sinnakuddy Wrote:.........
நாம் தமிழ் நாட்டின் உள்ளூர் அரசியல் முதற்கொண்டு தெரிஞ்சு வைத்திருக்கிறோம்..தமிழ்நாட்டு சில நண்பர்கள் முழுமையாக இலங்கை நடப்புகளை அறிந்திருக்கவில்லை அறியவும் ஆர்வமில்லை ஆனால் மூளை சலவை செய்யபட்ட கருத்துகளின்படி கருத்து கூறுகிறார்கள்... பிரச்சனை வருமென்று சமரசம் செய்வதிலும் பார்க்க கருத்துக்களால் உணரவைப்பது சிறந்தது என்று நினைக்கிறன்.. இந்த களமும் குருசேஸுத்திரம் தான் நியாயம் ஜெயிக்கட்டும்.........
Idea :| 8) Idea
.
#28
இது உணர்ச்சி வசப்பட வேண்டிய விடயம் அல்ல.. இரு வேறு இனங்களின் புரிந்துணர்வு எண்று கூட இல்லை... இந்திய தமிழர் எங்களின் இனம் எங்களின் சகோதரர்கள்... அவர்களின் நாட்டு அரசியலை நாங்கள் விமர்சிப்பது அவர்களுக்கு மனவேதனையை தரும் எண்டால் நாங்கள் தவிர்ப்பது தவறானது அல்ல... அதுக்காக இந்தியாவின் செய்திகள் போடப்படுவது தவறல்ல.! போடலாம். கருத்துக்களை அவர்கள் மனம் நோகாதவாறு வையுங்கள்....
::
#29
சின்னக் குட்டியின் கருத்துத் தான் எனதும்.இது கருத்துக் களம் இங்கே நாங்கள் கருதுக்களாலேயே முரண் பட வேணும்.கருத்து முரண்பாடுகளுக்கிடையில் தனி நபர் வசை பாடலும், யாரென்று அறியாமலே பொதுப்படயான அனுமானங்களின் அடிப்படயில் தனி நபர் தாகுதல்களை மேற் கொள்ளுவதுமே பிரச்சினயாக உருவெடுக்கிறது.இங்கே கருத்தாடும் இந்திய நண்பர்களும் சரி மற்றய கள உறவுகளும் சரி இதனை மனதில் இருத்திக் கருத்தாடினால் பிரச்சினைகள் வராது.

அப்படி யாரும் வேண்டும் என்றே பிரச்சினைகளை உருவாகுவதாகத் தெரிந்தால் அவருக்குப் பதில் அழிக்காமல்மட்டுறுதினர் மாரிடம் அவர்களின் சீண்டல் பாணியிலான கருத்துக்களை கள விதிமுறையின் படி அகற்றுமாறு கோரலாம்.

மற்றது சின்னக்குட்டி சுட்டிக்காட்டிய படி எமக்கு இந்தியாவைப் பற்றித் தெரிந்த அளவு அவர்களில் சிலருக்கு எம்மைப் பற்றியோ எமது போராட்டம் பற்றியோ அல்லது அரசியல் போராட்ட வரலாறுகளோ தெரியாது.அவர்கள் நாளாந்தம் தினசரிகளில் படிக்கும் மேலோட்டமான செய்திகளின் அடிப்படையிலேயே அவர்களின் புரிதல் இருக்கிறது.அப்படியான இந்த மேலோட்டமான நுனிப்புல் மேய்ந்த கருதுக்களைக் கண்டு எமக்கு கோவம் வருகிறது, நாம் நிதானம் இழந்து வசை பாட முயலுகிறோம்.அதை விடுத்து நிதானமாகப் பதில் அழித்தால் அவர்களுக்கும் புரியும் ,களத்தை வாசிக்கும் மற்றய இந்திய உறவுகளுக்கும் அது ஒரு தகுந்த பதிலாகத் தெரியும்.

இன்று நாம் பலம் பெற்ற ஒரு நிலயில் நிற்பதே இந்திய அரசின் தற்போதய தலை இடாக் கொள்கைக்கான அடிப்படைக் காரணம்.சர்வதேச அரசியல் நலங்கள் சார்ந்ததே.ஆகயால் நாம் பலம் பெற்று இருக்கும் வரை எமக்குப் பாதுகாப்பு.இன்றைய மத்திய அரசு ஒரு கூட்டு அரசு அதில் பல மானிலக் கட்சிகளினதும் கம்முயுனிஸ்ட கட்சிகளினதும் அழுத்தங்கள் இருக்கும்.தமிழ் நாட்டின் தலை விதியை தமிழ் நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும், நாமல்ல.அது தமிழ் நாட்டவரின் பிரச்சினை.

ஆனால் நாம் இந்திய ஆளும் வர்க்கத்தைப்பற்றிய சரியான கணிப்புடன் செயற்பட்டாலேயே ,எமது பலத்தைத் தக்க வைத்துக் கொள்ளலாம்.இல்லாவிடில் பல்வேறு வகையான சதி முயற்சிகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும்.எமது நிரந்தரமான நேச சக்திகளுடனான எமது ஆதரவும் தொடர்பும் தொடர்ந்த வண்ணமே இருக்க வேண்டும்.

நம்ப நட நம்பி நடவாதே.
#30
ரெம்ப ரெம்ப சந்தோசமாக இருக்கின்றது...............

உங்கள் இறைமைக்கோ, எங்கள் இறைமைக்கோ இருவரும் பங்கம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வோம்.
[size=14] ' '
#31
Thala Wrote:இது உணர்ச்சி வசப்பட வேண்டிய விடயம் அல்ல.. இரு வேறு இனங்களின் புரிந்துணர்வு எண்று கூட இல்லை... இந்திய தமிழர் எங்களின் இனம் எங்களின் சகோதரர்கள்... அவர்களின் நாட்டு அரசியலை நாங்கள் விமர்சிப்பது அவர்களுக்கு மனவேதனையை தரும் எண்டால் நாங்கள் தவிர்ப்பது தவறானது அல்ல... அதுக்காக இந்தியாவின் செய்திகள் போடப்படுவது தவறல்ல.! போடலாம். கருத்துக்களை அவர்கள் மனம் நோகாதவாறு வையுங்கள்....

சிறந்த கருத்து .

இந்தியாவின் வெளியுறவு கொள்கைகள் எப்பிடியாவது இருந்திட்டு போகட்டும். ஆனால் தமிழ்நாட்டின் உறவை எவ்வளவு முடியுமோ ...அவ்வளவுக்கு பேணி பாதுகாக்க வேண்டும்.
தமிழ்நாட்டு தமிழருடன் நாங்கள் கொள்ளும் நல்லுறவு
இந்தியாவின் எந்த..எமக்கு எதிரான எந்த வெளியுறவு கொள்கைகளையும் ஆணிவேர்வரை சென்று அசைத்து பார்க்கும்.
எமது இனத்துக்கு எதிரானவர்கள் எல்லாம் ஆஹா ஓஹோ என்று துள்ளி குதித்த இந்திய-இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தத்தை இல்லாமல் செய்வதற்ககு பெரும்பங்கு ஆற்றியது வை.கோ என்ற ஒரு தமிழன்! 8)
-!
!
#32
அட.நான் காண்பதென்ன கனவா........அல்லது நிஜமா.........என் கண்ணெதிரே..............சா.........ஏதோ எல்லாம் எழுத வருகுது குசியிலை.......நல்ல கருத்தை டண்ணும் தலயும் சொல்லியிருக்கிறார்கள் இதை வானம்பாடி ஏற்றுக் கொண்டது இன்னும் சந்தோஷமாகக் கிடக்கு.....நாங்கள் தனிய அரசியலுக்கை நிக்காமல் மற்ற பகுதிக்கிலையும் அடிபட...........சா......கருத்து பரிமாறலாம்தானே என்ன எமது இந்திய நண்ப்களே.................
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
#33
MUGATHTHAR Wrote:அட.நான் காண்பதென்ன கனவா........அல்லது நிஜமா.........என் கண்ணெதிரே..............சா.........ஏதோ எல்லாம் எழுத வருகுது குசியிலை.......நல்ல கருத்தை டண்ணும் தலயும் சொல்லியிருக்கிறார்கள் இதை வானம்பாடி ஏற்றுக் கொண்டது இன்னும் சந்தோஷமாகக் கிடக்கு.....நாங்கள் தனிய அரசியலுக்கை நிக்காமல் மற்ற பகுதிக்கிலையும் அடிபட...........சா......கருத்து பரிமாறலாம்தானே என்ன எமது இந்திய நண்ப்களே.................


சீ முகத்தார் எப்பவும் இப்படி தான் முதல நம்புறது அப்புறம் ஜாயே முதுகில குத்திட்டாங்கள் எண்டு புலம்பிகொண்டு திரியுறது :twisted: :twisted: :twisted:
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
#34
வினித் Wrote:
MUGATHTHAR Wrote:அட.நான் காண்பதென்ன கனவா........அல்லது நிஜமா.........என் கண்ணெதிரே..............சா.........ஏதோ எல்லாம் எழுத வருகுது குசியிலை.......நல்ல கருத்தை டண்ணும் தலயும் சொல்லியிருக்கிறார்கள் இதை வானம்பாடி ஏற்றுக் கொண்டது இன்னும் சந்தோஷமாகக் கிடக்கு.....நாங்கள் தனிய அரசியலுக்கை நிக்காமல் மற்ற பகுதிக்கிலையும் அடிபட...........சா......கருத்து பரிமாறலாம்தானே என்ன எமது இந்திய நண்ப்களே.................


சீ முகத்தார் எப்பவும் இப்படி தான் முதல நம்புறது அப்புறம் ஜாயே முதுகில குத்திட்டாங்கள் எண்டு புலம்பிகொண்டு திரியுறது :twisted: :twisted: :twisted:
முகத்தார் மப்பில அப்படித்தான் புலம்புறவர் கண்டுக்காதைங்கோ!
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
.
#35
என்ன எங்கட மற்ற உறவுகளை இந்தப்பக்கம் காணேல்லை. உங்கட அபிப்பிராயங்களையும் கூறலாமே
. .
.
#36
Niththila Wrote:என்ன எங்கட மற்ற உறவுகளை இந்தப்பக்கம் காணேல்லை. உங்கட அபிப்பிராயங்களையும் கூறலாமே

ஏன் நித்திலா அவங்களை இங்க கூப்பிட்டு குழப்பிறீங்க? அவங்களுக்கும் இதுக்கும் தொடர்பு இல்லைத்தானே? இந்த பிரச்சினைகள் தல, அருவி, பிருந்தன், என்போன்ற உறுப்பினகர்களால்த்தானே வந்தது? அவங்க கவிதை, சினிமா, போட்டி நிகழ்ச்சி எண்டு பிசியா இருப்பாங்க,,, அவங்களை பிறகு இங்க கூப்பிட்டு அவங்களையும் நாங்கள் பழதாக்கினமாதிரி போயிடும்,,, தேவையா? வேலையைப்பார்ப்பீங்களா,,, :roll: :? Idea
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
#37
நீங்களொன்று டண்

லோயரம்மா இந்தக் குளிருக்கு யாரையும் சூடேற்றி விட்டு குளிர் காய நினைக்கிறாங்க போல :roll: :roll:
#38
Vasampu Wrote:நீங்களொன்று டண்

லோயரம்மா இந்தக் குளிருக்கு யாரையும் சூடேற்றி விட்டு குளிர் காய நினைக்கிறாங்க போல :roll: :roll:

[quote=Vasampu][size=18]<b>தயவுசெய்து இதனை அரட்டைப் பக்கம் ஆக்காதீர்கள்</b>

அறிவுரையை எல்லாப் பக்கத்திலும் கடைப்பிடிக்க வேண்டும். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
#39
வணக்கம்
அன்பின் யாழ்கள உறுப்பினர்களே கடந்த மாதங்களிலே இந்தியாவிற்கும் விடுதலைப் பேராட்டத்துக்கும் (விடுதலைப் புலிகளுக்கம்) எதிரான பல கருத்துக்கள் வைக்கப்பட்டிருக்கின்றது இதில் மட்டுமல்ல பல ஊடகங்களிலும் எதிர்கருத்துக்கள் வைக்கப்பட்டுள்ளது வைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது இதற்காக விடுதலைப்பலிகளும் தமிழிழ மக்களும் இந்தியாவிற்கு எதிரானவர்கள் என இங்கு கூற முடியாது ஏனெனில் எந்த ஒரு நாட்டுக் குடி மகனும் தன்னுடைய நாட்டை பற்றி மற்றவர்கள் இழிவாக பேச அனுமதிக்கமாட்டார்கள் அப்படி மற்றவர்கள் பேச முற்பட்டால் அதை பார்துக்கொண்டிருக்கமாட்டார்கள் அதற்கு எதிர்கருத்து வைப்பார்கள் இது சகயம் இதனால் பல தேவையில்லாத மனக்கசப்பு யாழ் களத்தில் ஏற்படுகின்றது இதை தமிழிழ மக்கள் பார்கும் போது தமிழிழத்திற்கு எதிரான கருத்தை இந்தியர்கள் வைக்கின்றனர் என்றும் இந்தியமக்கள் பார்கும் போது இந்தியாவிற்கு எதிரான கருத்தை தமிழிழ மக்கள் வைக்கின்றனர் என்றும் தவறாக புரிந்து கொள்கின்றனர் இதனால் ஒற்றுமையா இருக்கும் எங்ககளுக்குள் பிரிவை ஏற்பபடுத்த முற்படுத்திக் கொண்டிருப்பவப்களுக்கு தீனி போட்டமாதியாகிவிடும் இனி தயவு செய்து இப்படியான கருத்துக்களை தவிர்த்துக் கெள்வோம் ஆக்கபூர்வமாக கருத்துக்களை முன்வைப்போம்
இவற்றின் அடிப்படையில் மட்டுமல்லாது, கடந்த கால வரலாற்றின் அடிப்படையிலும், அதன் அரசியல் பின்னணியின் அடிப்படையிலும், இந்தியாவிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான உறவின் முக்கியத்துவம் குறித்துத்து விபரிக்க விரும்புகின்றோம்

ஒரு நாட்டின் அரசியல் கட்சிகளின் ஆட்சி கைமாறும்போது, பொதுவாக அந்த நாட்டின் வெளிவிவகாரக் கொள்கைகளில் பெரிதான மாற்றங்கள் ஏற்படுவதில்லை, என்பதுதான் உண்மை. அதிலும் அந்த நாடு, ஒரு வல்லரசாக இருக்கும் பட்சத்தில் அந்த நாட்டின் வெளிவிவகாரக் கொள்கைகளில் மாற்றம் ஏற்படுவது மிக அரிதான விடயமாகவே இருக்கும். எனினும் அண்டை நாடான இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கைகளை நாம் அரசியல் ரீதியாக மட்டுமல்லாது புவியியல் பொருளாதாரவியல் போன்றவற்றின் அடிப்படையிலும் கவனித்து சிந்திக்க வேண்டும். அந்த வகையில் சில விடயங்களைத் விபரிக்க விரும்புகின்றோம்.

திருமதி சோனியா காந்தி அவர்களின் அன்புக்குரிய மாமியார் திருமதி இந்திரா காந்தி அவர்களுடைய ஆட்சிக் காலத்தில், அவர் தமிழ் போராளி இயக்கங்களுக்கு ஆதரவும், இராணுவ பயிற்சியும் கொடுத்து வந்தார் என்பது வெளிப்படையான இரகசியமாகும். அத்துடன் அன்றைய சிறிலங்கா அரசு தமிழீழ மக்கள் மீது மேற்கொண்ட அரச பயங்கரவாத இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக இந்திரா காந்தி அறிக்கைகளை வெளியிட்டு வந்ததோடு சிறிலங்கா அரசு மீது அரசியல் அழுத்தத்தையும் பிரயோகித்து வந்தார். இந்திரா காந்தியின் இப்படிப்பட்ட நடவடிக்கைகள் கரணமாக தமிழீழ மக்கள் அவர்மீது மிகுந்த நம்பிக்கையும், எதிர்பார்ப்பையும் கொண்டிருந்தார்கள்.

அப்படியென்றால் அன்று இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் இருந்த இந்தியாவின் வெளிவிவகார கொள்கைக்கும் பின்னாளில் இந்தியா கொண்டிருக்கும் வெளிவிவகாரக் கொள்கைக்கும்-(முக்கியமாக ஈழத்தமிழ் மக்கள் பிரச்சனையில்) வித்தியாசம் இருக்கின்றதே என்ற கேள்வி எழுவது இயல்பானதாகும். ஆனால் கூர்ந்து சிந்தித்து பார்த்தால் இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையின் அடிப்படை நோக்கத்தில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என்ற உண்மை புலனாகும்.

அன்றைய சிறிலங்கா அரசு - ஜேஆர் ஜெயவர்த்தனாவின் அரசு - இந்திய எதிர்ப்புப் போக்கை கொண்டிருந்ததோடு மட்டுமல்லாது பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் நெருங்கிய நட்புறவைக் கொண்டிருந்தது. இந்திரா காந்தியின் அரசோ அன்று ஒரு வல்லரசாக திகழ்ந்த சோவியத் ரஷ்யாவுடன் மிகுந்த நட்புறவைக் கொண்டிருந்தது. இதன் காரணமாக அமெரிக்கா போன்ற நாடுகளின் தலையீடும், செல்வாக்கும் இலங்கையில் அதிகரித்து வருவதை தனக்கு ஓர் அச்சுறுத்தலாகவே அன்றைய இந்திய அரசு கருத்pயது.
அந்த வேளையில் இலங்கை விவகாரத்தில் தன்னுடைய மூக்கை நுழைப்பதற்கு இந்தியாவிற்கு கிடைத்த வரப்பிரசாதமாக ஈழத்தமிழர் பிரச்சனை விளங்கியது. அதனை பயன் படுத்தும் முயற்சியில் இந்திரா காந்தி இறங்கி தமது பிராந்திய மேலாண்மையை நிலைநிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.

ஈழத்தமிழர் போராட்டமானது ஜேஆர் ஜெயவர்த்தனாவின் அரசிற்குத் தீராத தலையிடியாக உருவாகுவதன் மூலம் ஜேஆர் ஜெயவர்த்தனாவின் அரசு இந்தியாவின் உதவியை நாடி வரவேண்டும் - என்றே இந்திரா காந்தி விரும்பினார். அதுவே உண்மையுமாகும். திருமதி இந்திரா காந்தி அவர்கள் கொலை செய்யப்பட்ட சில மாதங்களின் பின்பு அவருடைய அரசியல் வாழ்க்கை குறித்து ஒரு புத்தகம் வெளி வந்தது.
அதனை எழுதியவர் இந்திரா காந்தியின் பிரத்தியேகச் செயலாளர் ஆவர். அவர் இலங்கை அரசையும் தமிழர் பிரச்சனையையும் தமிழ்ப் போராளிகள் இயக்கங்களைப் பற்றி இந்திரா காந்தி கொண்டிருந்த சிந்தனைகளை விபரித்து எழுதியுள்ளார். அவர் எழுதியிருந்த விடயங்களில் சிலவற்றை நாம் இப்போது சுட்டிக் காட்டியிருந்தோம்.

தவிரவும், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் குறித்து இந்திரா காந்தி அவர்கள் கொண்டிருந்த கணிப்பையும், அவரது பிரத்தியேகச் செயலாளர் தன்னுடைய நூலில் அன்றே குறிப்பிட்டிருக்கின்றார். ஏனைய தமிழ்ப் போராளிக் குழுக்களையும் விட தமிழீழ விடுதலைப்; புலிகளின் இயக்க உறுப்பினர்கள் தனித்துவமாகவும் கொள்கைப் பிடிப்பு உடையவர்களாகவும் கட்டுக்கோப்பாகவும் உள்ளார்கள்.
எதிர்காலத்தில் புலிகள் இந்தியாவின் அழுத்தத்திற்குப் பணிய மாட்டார்கள். ஏனென்றால் விடுதலைப் புலிகள் இயக்கம் தன்னுடைய இலட்சியத்தில் உறுதி கொண்ட இயக்கமாக வளர்ந்து வருகின்றது என்று மறைந்த பாரதப் பிரதமர் இந்திரா காந்தியின் எண்ணங்களை பிரத்தியேகச் செயலாளர் தன்னுடைய நூலில் எழுதியுள்ளார்.

எனவே தன்னுடைய பிராந்திய மேலாண்மை கருதியும், பெருளாதார முன்னேற்றம் கருதியும், இந்தியா இடப் பக்கமும் சாயும், வலப்பக்கமும் சாயும் அப்படி இந்தியா எப்பக்கம் சாய்ந்தாலும் அதில் இந்தியாவின் நலனுக்கு முன்னுரிமை இருக்கும். அதுவே இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையின் அடிப்படை வாதமுமாகும்.

அந்தத் தர்க்கத்தின் அடிப்படையிலேயே இந்தியாவின் எதிர்கால நடவடிக்கைகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இன்று இலங்கைத் தீவின் அரசியல் இராணுவக் களங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசும் சமபங்காளிகளாக இருக்கும் நிலை உருவாகியுள்ளது. தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப் புலிகளே-என்கின்ற உண்மை இன்று நிரூபிக்கப்பட்ட விடயமாகி விட்டது. இந்த நிலையில் தன்னுடைய வெளிவிவகாரக் கொள்கையை இந்தியா எவ்வாறு கையாளப் போகின்றது என்பதே இப்போதைய எதிர்பார்ப்பாகும்.

18 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1987ம் ஆண்டு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் சுதுமலை என்ற இடத்தில் முதன் முதலாக தமிழீழ மக்கள் முன் தோன்றி உரையாற்றினார். பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் முன்பு தேசியத் தலைவர் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த உரை சுதுமலைப் பிரகடனம் என்று பெயர் பெற்றது.

இந்திய இலங்கை ஒப்பந்தம் தமிழ் மக்களுக்கு உரிமை எதையும் பெற்றுத் தராது என்பதையும் இந்த ஒப்பந்தத்தை தாம் ஏற்கவில்லை என்பதையும் இந்தியாவின் கேந்திரச் செல்வாக்கானது, தமிழ் மக்களின் சுயநிர்ணயப் போராட்டத்தோடு உரசுகின்றது என்பதையும் அன்று சொன்ன தலைவர் இன்னுமொரு விடயத்தையும் மிகவும் வலியுறுத்தியிருந்தார். நாம் இந்தியாவை நேசிக்கின்றோம். இந்திய மக்களை நேசிக்கின்றோம். நாம் இந்தியாவிற்கு எதிரானவர்கள் அல்ல, என்று தமது நிலைப்பாட்டை அன்று தெளிவாக கூறியிருந்தார்.
இந்தக் கூற்றையும் அதிலிருக்கும் அடிப்டையான நேர்மையையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அன்றைய இராஜதந்திரிகளினதும், இந்திய உளவுப்பிரிவினரதும், அன்றைய இந்திய அரசியல்வாதிகளினதும், தவறான கணிப்புக்களாலும், செயல்களாலும் பின்னாளில் புலிகளுக்கும், இந்திய இராணுவத்தினருக்குமிடையே போர் மூண்டு கசப்புணர்வுகள் தோன்றினாலும், இந்தியாவின் இறையாண்மைக்கும், இந்திய நாட்டிற்கும், இந்திய மக்களுக்கும் அடிப்படையில் விடுதலைப்புலிகள் எதிரானவர்கள் அல்லர் என்ற திடமான, தெளிவான, சிந்தனை தமிழீழத் தேசியத் தலைவருக்கு இருந்தது.
அதனையே அவர் அன்றைய தினம் தெளிவு படுத்தியிருந்தார். அது மட்டுமல்லாது மூன்றாண்டுகளுக்கு முன்பு- அதாவது 2002ம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச ஊடகவியலாளர் மகாநாட்டின் போதும் இந்தியாவுடனான நட்புறவு குறித்துத் தேசியத் தலைவர் மீண்டும் வலியுறுத்தியிருந்தார்.

ரணில் விக்கிரமசிங்கவின் அன்றைய அரசோடு தமிழீழ விடுதலைப் புலிகள் சமாதானப் பேச்சு வார்;த்தைகளை ஆரம்பித்தபோது அச்சமாதானப் பேச்சு வார்த்தைகளுக்குரிய களமாக இந்தியாவைத் தெரிவு செய்வதில் இயக்கம் தெரிவித்த விருப்பம் இங்கே குறிப்பிடத் தக்கதாகும். அதனை தனது உள்ளுர் அரசியல் குழப்பம் காரணமாக இந்தியா தவற விட்டதனை நேயர்களும் அறிவீர்கள்.

தனது பிராந்திய மேலாண்மைக்கு விடுதலைப் புலிகளால் பங்கம் ஏற்பட்டு விடும் என்று 1987ல் தேவையற்ற அச்சம் கொண்ட இந்தியா, இன்று தனது பிராந்திய மேலாண்மைக்குப் பங்கம் ஏற்படும் வகையில் சிறிலங்கா அரசே காரணமாக அமைந்து வருவதையும் கருத்தில் கொள்ளக் கூடும் தற்போது ஜப்பான் போன்ற நாடுகளின் ஊடாக மறைமுகமாகவும். வெளிப்படையாகவும் அமெரிக்கா தனது பிராந்திய மேலாண்மையை நிலைநாட்ட வருவதையும் இந்தியா புரிந்து கொள்ளாமல் இல்லை. அதேபோல் பாகிஸ்தான்,- ஈராக்- அப்கானிஸ்தான் என்று இந்தியாவைச் சுற்றிலும் சிறிது சிறிதாக அமெரிக்கா தனது பிராந்திய மேலாண்மையை வளர்த்து வருவதையும் நாம் காண்கின்றோம்.

வரலாற்று ரீதியாக ஈழத் தமிழினத்திற்கும், இந்தியாவிற்கும் இடையே நெருங்கிய நட்புறவு இருந்து வந்துள்ளது. ஆனால் சிங்கள தேசமும் இந்தியாவும் தொடர்ந்து முரண்பட்டு வந்துள்ளதைத்தான் வரலாறு காட்டி நிற்கின்றது. இலங்கைக்குப் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் கிடைத்த பின்னரும் கூட இதே இந்திய வெறுப்புணர்வைத்தான் சிங்களத் தலைமைகளும், சிங்கள அரசியல்வாதிகளும் கொண்டிருந்தனர். அரசியல் ரீதியாக பொருளாதார ரீதியாக இராணுவ உதவிகள் ரீதியாக சிறிலங்கா தொடர்பு கொண்டிருந்த நாடுகளில் பல இந்திய எதிர்ப்பு நாடுகளாகவே இருந்துள்ளன. சீனாவையும் பாகிஸ்தானையும் உதாரணத்துக்கு எடுத்துக் காட்டலாம். முன்னர் வல்லரசாக இருந்த ரஷ்யாவோடு இந்தியா நெருங்கிய நட்புறவைக் கொண்டிருந்த காலத்தில் சிறிலங்கா அமெரிக்காவுடன் நெருக்கத்தை ஏற்படுத்த முயன்றது.

இந்தியாமீதும், இந்திய மக்கள் மீதும் சிங்கள மக்கள் கொண்டுள்ள வெறுப்புணர்ச்சி பரம்பரை பரம்பரையாகவே தொடர்ந்து வருகின்றது. வருந்தத்தக்க வகையில் இந்த துவேஷ உணர்ச்சியானது சாதாரண சிங்கள பொதுமக்களிடமும் பலமாக விதைக்கப்பட்டு விட்டது. 1985ல் இந்தியாவும், சிறிலங்காவும் கலந்து கொண்ட (TEST) கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை சிறிலங்கா வென்றது. சுpறிலங்கா அணி இந்திய அணியை வெற்றி கொண்டதை கொண்டாடும் முகமாக அடுத்த நாளை நாடு தழுவிய பொதுவிடுமுறை தினமாக சிறிலங்கா அரசு அறிவித்ததை எமது நேயர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

ஈழத் தமிழினத்தை கலந்து கொள்ளாமல் அவர்களுடைய பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியாத இலங்கை இந்திய ஒப்பந்தத்தை இரு அரசுகளும் கைச்சாத்திட முயன்ற போது. சிங்களப்பகுதிகளில் கடும் எதிர்ப்பு தோன்றியதன் காரணம் என்ன? பிரச்சனை எதுவாக இருந்தாலும் அதில் இந்தியா சம்பந்தப்படக் கூடாது என்ற இந்திய எதிர்ப்பு நிலைப்பாடுதான் அதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது.

அன்று இந்தியா வரக்கூடாது என்று கூக்குரல் இட்ட அதே சிங்கள சக்திகள் இன்று இந்தியா வரவேண்டும் என்று கெஞ்சுவதன் காரணம் மனமாற்றம் அல்ல. தமிழினத்தின் பலத்தை உரிமைப் போராட்டத்தை எந்த வகையிலாவது நசுக்கி விடவேண்டும் என்ற பரிதவிப்புத்தான்.

இப்படிப்பட்ட பின்புலத்தில் சிறிலங்கா குறித்த இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையை நாம் தர்க்கிக்க விரும்புகின்றோம்.

பலமொழிகளைப் பேசுகின்ற, பல இனங்களைச் சார்ந்த, பல மதங்களைப் பின்பற்றுகின்ற மக்களை உள்ளடக்கியுள்ள இந்தியாவின் அரசு தன்னை இந்த மக்களின் பிரதிநிதியாகக் கருதிச் செயற்படுகிறது அதுவே முறையானதாகும். பல்லின மொழி பண்பாட்டை ஒருங்கிணைத்துப் பிரதிநிதித்துவம் செய்கின்ற இந்தியா அதே உள்நாட்டுப் பார்வையை தனது அண்டை நாடுகளிடமும் காட்ட வேண்டும்.
ஆனால் இந்தியாவோ தனது அண்டை நாடான இலங்கைத் தீவின் பிரச்சனைகளை சிங்கள தேசத்தின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு பார்க்கின்றது.
ஆகவே இந்தியாவின் கொள்கையானது தமிழர் நலனையும், சிங்களவர் நலனையும் சமமாகச் சீர்கொண்டு பார்க்காமல் சிங்கள ஏகாதிபத்தியத்தின் பால், சார்பாகச் செயற்படுகின்றது. இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையானது இலங்கைத்தீவின் இரண்டு இனங்களுக்கும் பொதுவானதாகவே அமைய வேண்டும். இந்த மாற்றம் இந்தியாவிடம் ஏற்படவேண்டும்.

தமிழீழத்தவரின் விடுதலைப் போராட்டத்தை சற்று ஆழமாக கூர்ந்து கவனித்தால் ஓர் உண்மை புலப்படும். தமிழீழத்தவரின் விடுதலைப் போராட்டத்தால் தான் இந்தியாவின் பிராந்திய மேலாண்மை ஓரளவிற்காவது காப்பாற்றப் பட்டுள்ளது.
இன்று தமிழர் தேசம் தமது நிலப்பரப்புக்களைத் தம்மிடையே தக்க வைத்துக் கொண்டிருப்பதனால்தான் இந்தப்பகுதிகளுக்குள் இந்திய விரோத நாடுகளின் சக்திகள் புகமுடியாமல் இருக்கின்றன. இன்று தமிழர் தேசம் தனது நிலப்பரப்பை தக்க வைக்காமல் போயிருந்தால் அந்தப் பகுதிகளையெல்லாம் இந்திய விரோத நாடுகளுக்கு சிறிலங்கா அரசு எப்போதோ குத்தகைக்கு கொடுத்து விட்டிருக்கும். இப்போது வாயளவிலும், காகிதத்திலும் போடப்படுவதாகச் சொல்லப் படுகின்ற வெளிநாட்டு ஒப்பந்தங்கள் முழுமையாகச் செயற்படுத்தப்பட்டு இலங்கைத்தீவின் கரையோரப் பகுதிகளில் இந்திய விரோத சக்திகள்தான் குடியிருந்திருக்கும்.

எனவே உருவாக வேண்டும் ஓர் உறவு.!

நீண்டகாலமாகவே இந்தியா குறித்த தங்கள் நிலைப்பாட்டை தமிழீழ விடுதலைப்புலிகள் தெளிவு படுத்தி வந்துள்ளார்கள். மீண்டும் மீண்டும் இந்தியாவுடனான ஆத்மார்த்த நட்பினை வேண்டி தமிழர் தலைமை நேசக்கரத்தை நீட்டி நிற்கின்றது. இந்தியா போன்ற ஒரு பிராந்திய முக்கியத்துவம் பல உண்டுதான் மறுக்கவில்லை.
அதேபோல் இலங்கைத்தீவில் வாழும் தேசிய இனமான தமிழினத்தினை இன்று ஒரு பலம் பொருந்திய இனமாக மாற்றிய மாபெரும் சக்தியாக விடுதலைப்புலிகள் இயக்கம் விளங்குகின்றது என்பது மறுக்க முடியாத உண்மைதான். இப்படிப்பட்ட நிலையில் இந்தியா கருத்தில் கொள்ளக்கூடிய பலகேள்விகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தெளிவாகவும் விரிவாகவும் விடையிறுத்தே வந்துள்ளார்கள். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைமைப்பீடம் பகிரங்கமாக அறிவித்து வருகின்ற விடயங்கள் தான் என்ன?

<b>
இந்தியாவின் பிராந்திய மேலாண்மைக்குப் பங்கம் விளைவிக்க விடுதலைப்புலிகளும் தமிழிழ மக்களும் விரும்பவில்லை

இந்தியாவின் இறையாண்மைக்கும், இந்திய நாட்டிற்கும் இந்திய மக்களுக்கும் விடுதலைப்புலிகளும் தமிழிழ மக்களும் எதிரானவர்கள் அல்ல.

இந்தியாவின் தேசிய நலனுன்களுக்கு விடுதலைப்புலிகளும் தமிழிழ மக்களும் தடையாக இருக்க போவதில்லை.

இந்தியாவின் புவியியல் கேந்திர நலனுக்கு எதிராக விடுதலைப்புலிகளும் தமிழிழ மக்களும் செயற்படுபவர்கள் அல்ல.

இந்தியாவின் பொருளாதார நலன்களுக்குப் பங்கம் ஏற்படுத்த விடுதலைப்புலிகளும் தமிழிழ மக்களும் விரும்பவில்லை.

இந்தியாவின் பிராந்திய அரசியல் களத்தில் குழப்பம் எதையும் ஏற்படுத்த விடுதலைப்புலிகளும் தமிழிழ மக்களும் விரும்பவில்லை.

[b]
<i>மாறாக விடுதலைப்புலிகளும் தமிழிழ மக்களும் விரும்புவது என்ன?</b></i>
[b]
இந்தியாவுடன் நல்லுறவை பேணவே விடுதலைப்புலிகளும் தமிழிழ மக்களும் விரும்புகின்றார்கள்.

இந்தியாவை ஒரு நட்புச்சக்தியாக, நேசசக்தியாகவே விடுதலைப்புலிகளும் தமிழிழ மக்களும் கருதுகின்றார்கள்.

இந்தியாவுடன் நட்புறவோடு இணங்கி செயற்பட விடுதலைப்புலிகளும் தமிழிழ மக்களும் மனப்பூர்வமாக விரும்புகின்றார்கள்.

இப்படிப்பட்ட சுமுகமான உறவை ஏற்படுத்துவதற்காக இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும்.


தமிழீழ விடுதலைப்புலிகளும் தமிழிழ மக்களும் இந் நியாயமான வேண்டுகோளை இந்தியா ஏற்க வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளில் இந்தியா இறங்க வேண்டும். இந்த விடயங்களில் மேலும் தெளிவு தேவைப்படும் பட்சத்தில் அவற்றைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். ஆகவே இந்தியா புலிகளை இராஜ தந்திர ரீதியாக அணுக வேண்டும்.

இதுவே ஈழத் தமிழினத்தினதும், அதன் தலைமையினதும் கோரிக்கையாகும்.

உருவாகட்டும் ஓர் உறவு!


தயவு செய்து எழத்துப்பிழைகள் அல்லது கருத்துப்பிழைகள் இருந்தால் தயங்காமல் சுட்டிக்காட்டவும்

நன்றி
narmatha
#40
என்ன இங்க நடக்குது?? எல்லாரும் அன்பை பொழிகின்றீர்கள். நர்மதா அக்கா சொல்லுறதுதான் சரி எண்டு தோணுது.
[size=18]<b> </b>
[size=18]<b> </b>

IRUVIZHI


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)