Posts: 173
Threads: 10
Joined: Oct 2005
Reputation:
0
மாவீரரின் அன்னைக்கும் சகோதரிகளிற்கும் கண்ணீர் வணக்கங்கள். ஒவ்வொரு நாளும் எமது மக்கள் சாகும் பொழுது என் நெஞ்சம் கொதிக்கிறது இதற்கு ஒரு விடையும் இல்லையா
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
இந்த துன்பகரமான கொலையைச் செய்தவர்கள் இராணுவம் அல்லது தமிழ்க் கூலிகள் . இராணுவத்தினருக்கு என்னபதில் அடி வளங்கப் படுமோ அதே பதிலடி கூலிகளுக்கும் வளங்கப்பட வேண்டும்...... கொலைகாறக் கூலிகள் அனைவரும் தமிழீழத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும்.....
::
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
[b][size=18]இது கேவலமான அரசபயங்கர வாததின் அப்பட்டமான கொலை வெறி. இதை வன்மையாக கண்டிக்கின்றோம்!!!!!
Posts: 70
Threads: 9
Joined: Dec 2005
Reputation:
0
கண்ணீர் அஞ்சலிகள்
<span style='color:blue'>
«ýÒ¼ý,
Ò¾¢ÃÅý
</span>
Posts: 73
Threads: 12
Joined: Dec 2004
Reputation:
0
கண்ணீர் அஞசலிகள். அத்தோடு இதை மொத்த தமிழ் மக்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
! ! !!
Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
கண்டித்தல் சிங்களவனுக்கு விளங்குமா?
தண்டித்தால் மட்டுமே அவனுக்கு விளங்கும்!
சஞ்ஜீ-05 அவர்களின் கோவம் நியாயமானது!
நாங்கள் நம்பி இருக்கிற தலைமை ஏதாவது ஒரு முடிவு இனி எடுத்துதான் ஆகணும்!
வெளிநாட்டில வாழுறீங்க -சோ நல்லா வசனம் விடுவீங்க எண்டு சுகுமாரன் தரவழி இங்க ஒண்டும் சொல்ல வராதீங்க....
ஏற்கனவே ஒருவர் அந்த குடும்பத்தில் இல்லை-மாவீரர் ஆயிட்டார்! பிறகு-ஒரே இரவில் 3 பேர் சடலம் ஆயிட்டங்க...
மிஞ்சின 2 பேர் ஹொஸ்பிற்றல்ல- கூட வாழ்ந்தவர்கள் பிண ஊர்வலத்தை கூட பார்க்க முடியாத துயரம்!
ஒரே வீட்டில இருந்து 3 பேரை கொண்டு போய் எரிக்கேக்க... இதே கருத்தை தாயகத்தில் உள்ளவர்களூம்- புலம்பெயர் நாட்டில் வாழும் எங்களை விட பல மடங்கு கருத்தை அழுத்தி சொல்வர்!
100 % தமிழன் யாழ்ப்பாணத்தில வாழ்ந்தும்..
ஒரே இரவில ஒரு தலைமுறையையே இல்லாமல் சிங்களவன் பண்ண முடியும் என்றால் பிறகு எதுக்கு எங்களுக்கு ஒரு போராட்டம்?
குளிர்காலம் -விடிய எழும்பி யன்னலுக்கு வெளியால வெதர் எப்பிடி இருக்குமோ எண்டு
கவலைப்படும் எம்முள் சிலருக்கு-
விடிய விடிய தூக்கம் இல்லாம எவன் ஜன்னலுக்குள்ளால குண்டு எறிஞ்சு போடுவானோ எண்டு இனி பயப்பிட போகும்-அவர்களின் துயரம் எப்பிடி விளங்கும்?
அவர்கள் வாழ்க்கை இனி சாதாரணமாவா இருக்கும்?- நடை பிணம்தான்!
(இவ்ளோ கருத்தும் சுகுமாரன் போல் அற்ப சிந்தனை கொண்டவர்களூக்கு மட்டுமே) 8)
-!
!
Posts: 1,674
Threads: 91
Joined: Jan 2005
Reputation:
0
சொற்கள் ஏதும் வரவில்லை,கண்ணீரை தவிர...
[b][size=15]
..
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
<span style='color:red'><b>மானிப்பாய் படுகொலை-தமிழின அழிப்பு முன்னெடுப்புகளுக்கு எடுத்துக்காட்டு: மானிப்பாய் பொதுஜன ஒன்றியம் </b>
<b>சிங்கள பௌத்த பேரினவாதத்தின் தமிழின அழிப்பு முன்னெடுப்புகளுக்கு மானிப்பாய் படுகொலை எடுத்துக்காட்டு என்று மானிப்பாய் பொதுஜன ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது.</b>
அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கை:
சிறிலங்கா படையினராலும் ஈ.பி.டி.பி துணை இராணுவ ஒட்டுக்குழுவினராலும் 15.01.2006 அன்று நடுநிசியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் உட்பட மூவர் தமது வீட்டில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது அவர்களது வீட்டில் வைத்தே சுட்டுக்கொல்லப்பட்டதுடன், அவரது கணவரும் பிள்ளையும் படுகாயமடைந்து யாழ்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருமதி.அன்னாநாகேஸ்வரி போஜனும், அவரது இரு பெண் பிள்ளைகளாகிய திருமதி.ரேணுகாவும், செல்வி.சண்முகாவும் கொல்லப்பட்டுள்ளனர். அவரது கணவராகிய திரு.நகேந்திரம் போஜனும், மகனாகிய போஜனும் உல்லாசனும், படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் யாழ்.மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஏதோ சமாதானத்தின் பால் கரிசனை கொண்டவர்கள் போல் அரிதாரமிட்டு சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஐபக்சவின் தலைமையிலான சிறிலங்கா சிங்கள பௌத்த பேரினவாதத்தின் தமிழின அழிப்பு முன்னெடுப்புகளுக்கு இக்கொடூர சம்பவங்கள் எடுத்துக்காட்டுகளாகும்.
இச் சந்தர்ப்பத்தில் அநியாயமாக சிங்களப் படையினரால் தமிழ் மக்கள் பலியாக்கப்படுவதிலிருந்து தம்மைத் தாமே தற்காத்துக் கொள்வதற்கு பாதுகாப்பான வன்னிப் பிரதேசத்திற்கு செல்வதே எமது பாதுகாப்புக்கான சிறந்த வழியாகும்.
சட்டத்தினதும், ஒழுங்கினதும் பேரால் தமிழ் மக்களது பாதுகாப்பிற்கே தாமே பொறுப்பு எனக் கூறிக்கொள்ளும் சிறிலங்கா படையினரின் அடாவடித்தனங்கள் சிறிலங்கா அரசாங்கத்தினதும், படையினரதும், உயர் பீடத்தினால் திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் தமிழ் மக்கள் மீதான போர்த் திணிப்பதற்கான முதற்படிகளாகும் இந்தப் படுகொலைகள்.
போர் நிறுத்த உடன்படிக்கையை முழுமையாக நிறைவேற்றுவதில் இராணுவ நோக்கங்களுக்காகவே பின்னடிக்கும் சிறிலங்கா அரசாங்கம் சமாதான வழியிலான அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்கு தயாராக இல்லையென்பதை கடந்த சில மாதங்களாக படையினர் மேற்கொள்ளும் மிலேச்சத்தனமான கொலைவெறி அட்டூழியங்கள் தெளிவாக்குகின்றன.
சர்வதேச சமூகம் வெறுமனே பார்வையாளராக இருந்து, சிறிலங்கா படைகளது அட்டூழியங்களையும், சிங்கள பௌத்த பேரினவாதத்தை நிலைநாட்ட முயலும் சிறிலங்கா அரசாங்கத்தினதும் வஞ்சகப் போக்குகளையும் கண்டும் மௌனித்திருப்பதானது அவர்களது இன அழிப்பு கொடூரங்களுக்கு துணைபோவதாகவே அமைந்துவிடுகின்றது.
வெறுமனே கண்டனங்களும், அறிக்கைகளும் எவ்வகையிலும் பயனான விளைவுகளை ஏற்படுத்தப்போவதில்லை. மெய்யான சமாதானத்தின் மேலுள்ள மக்களது பற்றுதலானது அன்றாடம் சிதைக்கப்பட்டே வருகின்றது. தமிழின அழிப்புக்கான முன்தயாரிப்புக்களில் சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படையாகவே இறங்கியுள்ளது.
இக் கட்டத்தில் தமிழ் மக்கள் தம்மைத்தாமே தற்காத்துக் கொள்வதற்கும் கௌரவத்தையும், சுதந்திரத்தையும் பேணுவதற்கும் மனித உரிமைகளின் அப்பாற்பட்டதும் அடக்குமுறைக்கு எதிரானதுமான போராட்டங்களை முன்னெடுப்பது வரலாற்றுத் தேவையாகிவிட்டது.
கௌரவத்துடனான சுதந்திர வாழ்வியல் உரிமைகளை தமிழ் மக்களாகிய நாம் போராடித்தான் பேறவேண்டும் என்பது தெளிவாகியுள்ளது.
மிலேச்சத்தனமாக மேற்கொள்ளப்பட்ட இப்படுகொலைகளுக்கு நாம் எமது வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதோடு, தமிழ் மக்கள் தமது கௌரவத்தையும், சுதந்திரத்தையும் மீட்பதற்கான அனைத்து வழிமுறைகளையும் கைக்கொள்வதற்கு பின்நிற்கப்போவதில்லை என்பதை சர்வதேச சமூகத்திற்கும், சிறிலங்கா அரசாங்கத்திற்கும் ஓர் எச்சரிக்கையாக வலியுறுத்துகின்றோம்.</span>
<b><i>தகவல் மூலம் - புதினம்</i></b>
"
"
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
<b>மானிப்பாய் படுகொலை இராணுவம் பொலிஸ் விசாரணை.</b>
மானிப்பாய் பகுதியில் இடம் பெற்ற இராணுவல் புலனாய்வாளர்கள் மற்றும் தேச விரோத குழுவான ஈ.பி.டி.பி அமைப்பினர் இணைந்து மேற்கொண்ட படுகொலை சம்பந்தமான விசாரனையை இராணுவ புலனாய்வாளர்களும் மற்றும் பொலிசாரும் மேற் கொண்டுள்ளார்கள்.
கடந்த 16ம் திகதி அதிகாலையில் மானிப்பாய் முதலியார் வீதியில் அமைந்துள்ள வீட்டில் அத்துமீறி நுழைந்தவர்கள் நடத்திய வெறியாட்டத்தில் தாயும் மற்றும் இரண்டு பெண்பிள்ளைகளும் படுகொலை செய்யப்பட்டதுடன் தகப்பனும் மகனும் யாழ்ப்பாணம் போதனா வையித்தியசாலையில் படுகாயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இன்றைய தினம் வையித்திய சாலைக்குச் சென்ற இராணுவப் பலனாய்வாளர்களும் மற்றும் பொலிசாரும் இவர்களுப்டம் வாய் முறைப்பாடடை சிங்களத்தில் பதிந்து சென்றுள்ளார்கள் முறைப்பாட்டைப் பதிய வந்தவர்களுடன் எந்தவொரு மொழிபெயர்ப்பாளர்களும் கூட வரவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
விளங்காத மொழியில் முறைப்பாடடை எழுதி கையொப்பம் வேண்டிச் செல்லப்பட்டுள்ள போதிலும் அதில் என்ன எழுதப்பட்டது என்பது யாருக்கும் தெரியாது என்பதே உண்மையாகும்
<i><b>தகவல் மூலம்- பதிவு</b></i>
<i><b>சிங்களத்தின் "கண்துடைப்புக்கள்"உம் நீளுகின்றன
என்பதற்கு இச் செய்தியும் சான்றாகிறது
"ஓநாய்களின் கண்ணீர்"ஆல் "ஆடுகள்" ஏமாறது;
எதிர்ப்பையும் ஓர்மத்தையும் பெருக்கும்...
அதுவே எங்கள் உறவுகளுக்கான
அர்த்தமுள்ள "இறுதி வணக்கம்" ஆகும்....</b></i>
"
"