Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உராய்வு
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> நன்றி ஈழவன். தாங்கள் சுட்டிக்காட்டிய விடயத்தைப்பற்றி விரிவாக ஆராய எனக்கு அறிவு போதாது.
'உராய்வு' கவிதைத் தொகுப்பில் 'காலத்தின் கவிக்கூர்' என அப் பட்டம் பொதுமைப்படுத்தபடாமல் குறிப்பிட்ட காலத்துக்கு உரியதாக இருந்தது.
ஆனால்.. அந்தக் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற கவி வரிகளின் அமைவு.. அவை சொல்ல வந்த விடயத்தை பல இடங்களில் வெளிக்காட்டும் தன்மை.. அவற்றிலே எழும் உணர்வுகள் பல இடங்களில் கூர்மையாக மனதைத் தாக்குவதாகவே எனக்குத் தோன்றியது.
அதனாலே, தாசீசியஸின் காலத்தின் கவிக்கூரை பொதுவாகவே 'கவிக்கூர்' எனக் குறிப்பிட்டேன். தகுதி இல்லாதவைகளுக்கு பட்டம் கொடுப்பது புலத்தில் அதிகரித்துள்ள சூழலில்... தகுதியான ஒருவரை அவ்வாறு அழைப்பது தவறில்லை எனவே கருதுகிறேன்.
ஆனால் ஈழவன் குறிப்பிடுவதுபோல தற்போது பட்டங்கள் பெறுமதியற்றதாக்கப்பட்டு, வெத்திலை பாக்குச் சரைபோல வழங்கப்படுவதென்பது என்னவோ உண்மைதான். அதனால் பட்டங்கள் கேலிக்குரியனவாக பிரமை ஏற்படுத்துவதும் உண்மைதான்-
ஆனால்.. சஞ்சீவ் காந்த் அவர்களின் வயது.. அவர் புலம் பெயர்ந்த வயது... புலத்தில் அவர் வாழும் காலம்.. இவற்றையும் அவரது கவிதா ஞானத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில்.. சஞ்சீவ் உற்சாகப்படுத்தப்பட வேண்டியவரே!
இந்தப் 'பட்டம்' மேலும் அவரிடமிருந்து ஆக்கங்களை வரச் செய்தால்.. பட்டம் காத்திரமாகும்.
பொறுத்திருந்து பார்ப்போம்! Confusedhock:
.
Reply
[quote=matharasi]தெரிஞ்சோ தெரியாம கொடுத்திட்டாஙக ஈழவன் சார்.... இனி என்ன திரும்பியா கொடுக்க முடியும்..திருப்பி கொடுத்தா தப்பா நினைச்சுங்குவாங்க இல்லையா.. இதை எல்லாம் மாட்டர் எண்ணு கண்ணுக்காதையுங்க சார்

அன்பின் மதராசிக்கு

[quote]"தெரிஞ்சோ தெரியாம கொடுத்திட்டாங்க ..........
இதை எல்லாம் மாட்டர் எண்ணு கண்ணுக்காதையுங்க சார்...."[/quote]

<b>இது போன்ற கண்டு கொள்ளா வார்த்தைகளால்தான் இலங்கை தமிழ் கலைஞர்கள் அழிந்து போனார்கள்.</b>

பெரியவர் தாஸியஸ் அவர்களும் எமது மண்ணுக்குக் கிடைத்த ஒரு பொக்கிசம்.

அவர் சஞ்சீவின் கவிதை நூலில்
<b>காலத்தின் கவிக்கூர் இவன்</b>
என சஞ்சீவைக் (இளைஞன்) குறிப்பிட்டிருக்கிறார்.

இதையே சோழியன் அவர்கள்
நம் கலைஞன் ஒருவனுக்கு
உரம் கொடுக்க நினைத்து கவிக்கூர் எனக் குறிப்பிட்டுள்ளார் என நினைக்கிறேன்.
இங்கு யாருக்கும் யாரும் பட்டங்கள் கொடுக்கவில்லை.

ஆனால் ஒருவர் தளராமல் தொடர்ந்து போராட
பாராட்டுகள் அவசியமாகின்றன.
புலம் பெயர் கலைஞர்களில் அனைவருமே
தன் பணத்தை செலவழித்து பாராட்டுக் கூட இல்லாமல்
அழிந்து போனவர்கள்தான்.
உணர்ச்சி - உந்துதல் - ஆர்வக் கோளாறு இப்படி ஏதாவது செய்துவிட்டு தேய்ந்து விட்டவர்கள் ஏராளம்.

மக்கள் திலகம் - சிவாஜி - சிம்மக் குரலோன் - புரட்சி நடிகர் - புரட்சித் தலைவி -
கலைஞர் - ..........வாரிசு - சுப்பர் ஸ்டார் - தலைவா .......................... இப்படியே போய்
<b>சே.......டாக்டர்</b> பட்டங்கள் வரை எப்படி வந்தது?
உங்களுக்குத் தெரியாதா என்ன? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

[quote]* <b>சிவாஜிராவ் ரஜினிகாந்த் ஆன கதை தெரியுமா? </b>
இது பற்றி டைரக்டர் பாலசந்தர் ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது: "மேஜர் சந்திரகாந்த்' நாடகத்தில் மூன்று கதாபாத்திரங்களுக்கு சந்திரகாந்த், ரஜினிகாந்த், ஸ்ரீகாந்த் என்ற பெயர்கள் வைத்திருந்தேன். இதில் ஸ்ரீகாந்த் என்ற பெயரை நான் ஏற்கனவே வெங்கட் என்பவருக்கு வைத்துவிட்டதால், சிவாஜிராவுக்கு ரஜினிகாந்த் என்று பெயர் வைத்தேன்.'' என்று கூறி உள்ளார்.

* ரஜினிகாந்த் என்று பெயர் வைத்த நாள், ஒரு ஹோலிப் பண்டிகை தினமாம்.
- <span style='font-size:17pt;line-height:100%'>நன்றி: சத்தியா</span>

புலம் பெயர் நாடுகளில் நான் சிரிக்கும் ஒரு விடயம்
சிலர் தங்களுக்கு தாங்களே <b>மாஸ்டர்</b> என தன் பெயருக்கு முன்னால் அல்லது பின்னால் சொல்லிக் கொள்வது..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இதுவே வழக்காகியிருக்கிறது.

எனக்கு வெகு காலமாக ஒருவரைத் தெரியும்.
அண்மையில் பலர் மத்தியில் அவரை சந்தித்துப் பேசும் போது
நான் அவர் பெயரை மட்டும் உச்சரித்தேன்.

அவர் உடனே என்னிடம் சொன்னது என்ன தெரியுமா?
"எல்லாரும் பார்க்கிறாங்க.
என்னை மாஸ்டர் என்டு சொல்லுங்கோ"

கிழிஞ்சுதுடா லம்பாட லுங்கி..........என்றேன்.

எனக்கு அவர் யாரென்று தெரியும்?
இது போன்ற கொடுமைகள்...............
தாங்க முடியாதவை? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஆனால் இங்கு சஞ்சீவ் தன் பெயருக்கு முன்னால் கவிக்கூர் என நூலில் போடவில்லை.

ஒரு பெரியவர் சஞ்சீவின் கவிதை தொடர்பாக சொன்ன ஒரு வரியை எடுத்து ஊக்கப்படுத்தும் எண்ணத்தில்
வளர்ந்து வரும் ஒரு செடிக்கு நீர் ஊற்றுவது போல பாசத்துடன் சோழியன் சொல்லியிருக்கிறார் அவ்வளவுதான் என நினைக்கிறேன்.

[b]எனவே வளர்ந்து வரும் ஒரு கலைஞனை
ஊக்கப்படுத்த வேண்டிய ஒரு நேரத்தில்
இந்த சர்ச்சசைகள் தேவையற்றது என்பது எனது தாழ்மையான கருத்து.

அவரது முயற்சி மற்றும் வளர்ச்சிக்கு நம்மால் எதையாவது செய்வோம்.

இவரைப் போன்ற பல இளைஞர்கள் முகம் புதையுண்டு கிடக்கிறார்கள்.
அவர்கள் இவற்றைப் பார்த்து மனம் தளர்ந்து விடுவார்கள்.

எமக்கு
எமது பிரச்சனைகளை - தாக்கங்களை - வேதனைகளை - எண்ணங்களைப் பேச எதிர்கால சந்ததியொன்று (குரல்கள்)தேவை.

[b]இளைஞர்களே
உங்கள் படைப்புகளை வெளிக் கொண்டு வாருங்கள்.
அது என்றோ ஒரு நாள் உங்களை அடையாளம் காட்டும்.
Reply
அன்பின் அஜீவன் அண்ணா,சோழியன் அண்ணா

உங்கள் விளக்கங்களுக்கு நன்றி.

இளைஞனுக்கு கவிக்கூர் என்னும் பட்டம் சரியா தவறா என்பதல்ல எனது கருத்து அப்படியான பட்டங்களை இட்டு அழைப்பது படிப்பவர்களுக்கு ஒரு அசூயையைக் கொடுக்கும்.இணையத்தின் வழி கேள்விப்படும் புதியவர் ஒருவருக்கு இப்படியான பட்டங்கள் மிரட்சியை அளிக்கக்கூடும் உண்மையான வாசக மனத்துடன் அன்றி கவிக்கூர் என்னும் பட்டத்தின் மூலம் அவர் இளைஞனின் படைப்புக்களை அணுக முயலலாம்.
இளஞன் நன்கு அறிந்தவர் என்பதால் அவரது பெயரைக் குறிப்பிட்டேன் மற்றும்படி ஜேர்மனி,சுவிட்சலாந்து பிரான்சில் அவ்வப்போது நடைபெறும் இலக்கிய நிகழ்வுகளிலும் கோவில் திருவிழாக்களிலும் வழங்கப்படும் இவ்வாறான பட்டங்கள் உண்மையில் ஆரோக்கியமானவை அல்ல.

ஈழத்தையே எடுத்துக் கொள்ளுங்கள் எத்தனை கவிஞர்கள் இருக்கிறார்கள் நுஃமான்,சிவசேகரம்,கருணாகரன்,சு.வில்வரட்ணம்,பா.அகிலன்,றஷ்மி என்று தலமுறைகள் தொடர்கின்றன யாருக்கும் யாரும் பட்டம் சூட்டவில்லையே புலத்தில் இவை நடைபெறுவது அவ்வப்போது அங்கே அழைத்துக் கொண்டாடப்படும் திராவிடக் கட்சிகளினதும் தமிழ் சினிமாவினதும் தாக்கத்தால்தான் என நினைக்கிறேன்.அல்லது பழைய பண்டித மரபைப் புதுப்பிக்கிறார்களோ தெரியாது.கம்பவாரிதி,செந்தமிழ்ச் செல்வர் என்று.

புலத்தில் வெளிவரும் பத்திரிகைகளையும் இதழ்களையும் எப்படியாவது பெற்று அவற்றை இங்கிருக்கும் தமிழார்வம் மிக்க நண்பர்களுக்குக் கொடுப்பதும் பகிர்ந்து கொள்வதும் எனது வழக்கம்.அப்போது அவர்கள் என்னைக் கேட்ட கேள்வியைத்தான் உங்களை நான் கேட்டேன்

மற்றும்படி ஒழுங்கான விமர்சனங்களும் பாராட்டுக்களும் கலைஞனை வளர்ப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன என்பதில் மாறு கருத்து இல்லை
\" \"
Reply
இடையழகி சிம்ரன், கண்ணழகி மீனா வைகை புயல் வடிவேலு என்று சொல்லிக்கிற மாதிரி......................அந்த ரேஞ்சுக்கு...ஏனுங்க ...அந்த வளரும் கலைஞனை நாமே குறைச்சுக்குவானுங்க.... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->



Reply
ஆஹா.. எனக்கும் தான் இங்கே.. பாக்கோ.. கவிமணி அப்பிடியெல்லாம் பட்டம் தந்திருக்கிறார்கள்..அதிலென்ன வெட்கப்பட இருக்கிறது
, ...
Reply
தகுதி உடையவனுக்கு பட்டம் தானாக தேடிவரும்.
.

.
Reply
Eelavan Wrote:அன்பின் அஜீவன் அண்ணா,சோழியன் அண்ணா

உங்கள் விளக்கங்களுக்கு நன்றி.

இளைஞனுக்கு கவிக்கூர் என்னும் பட்டம் சரியா தவறா என்பதல்ல எனது கருத்து அப்படியான பட்டங்களை இட்டு அழைப்பது படிப்பவர்களுக்கு ஒரு அசூயையைக் கொடுக்கும்.இணையத்தின் வழி கேள்விப்படும் புதியவர் ஒருவருக்கு இப்படியான பட்டங்கள் மிரட்சியை அளிக்கக்கூடும் உண்மையான வாசக மனத்துடன் அன்றி கவிக்கூர் என்னும் பட்டத்தின் மூலம் அவர் இளைஞனின் படைப்புக்களை அணுக முயலலாம்.

ஈழத்தையே எடுத்துக் கொள்ளுங்கள் எத்தனை கவிஞர்கள் இருக்கிறார்கள் நுஃமான்,சிவசேகரம்,கருணாகரன்,சு.வில்வரட்ணம்,பா.அகிலன்,றஷ்மி என்று தலமுறைகள் தொடர்கின்றன யாருக்கும் யாரும் பட்டம் சூட்டவில்லையே புலத்தில் இவை நடைபெறுவது அவ்வப்போது அங்கே அழைத்துக் கொண்டாடப்படும் திராவிடக் கட்சிகளினதும் தமிழ் சினிமாவினதும் தாக்கத்தால்தான் என நினைக்கிறேன்.அல்லது பழைய பண்டித மரபைப் புதுப்பிக்கிறார்களோ தெரியாது.கம்பவாரிதி,செந்தமிழ்ச் செல்வர் என்று.

புலத்தில் வெளிவரும் பத்திரிகைகளையும் இதழ்களையும் எப்படியாவது பெற்று அவற்றை இங்கிருக்கும் தமிழார்வம் மிக்க நண்பர்களுக்குக் கொடுப்பதும் பகிர்ந்து கொள்வதும் எனது வழக்கம்.அப்போது அவர்கள் என்னைக் கேட்ட கேள்வியைத்தான் உங்களை நான் கேட்டேன்

மற்றும்படி ஒழுங்கான விமர்சனங்களும் பாராட்டுக்களும் கலைஞனை வளர்ப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன என்பதில் மாறு கருத்து இல்லை
<img src='http://img494.imageshack.us/img494/3207/uraivuajeevanimg7mg.jpg' border='0' alt='user posted image'>
[size=15]ஈழவனின் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு.
ஆனால் நண்பர் மதராசி "இதை எல்லாம் மாட்டர் எண்ணு கண்ணுக்காதையுங்க சார்" என்ற போதுதான் உதைத்தது.

நம் மத்தியில் உண்மையான கலைஞர்கள் நசிந்து போய் விட்டதற்கு காரணம்
மற்றவர் போல வளர முடியாமல் போவதற்காக வெளியேயிருந்து வரும் அழுத்தங்கள்தான்.
அது எந்த உருவத்திலும் வரலாம்.

<b>1.வரும் புகழை அல்லது வளர்ச்சியை ஆரம்பத்திலே தடுப்பது.
2.புகழ் வரும் படி செய்து மற்றவர் கண்களில் எரிவை உருவாக்கி மற்றவர் மூலம் வளர்ச்சியை தடுப்பது.
3.மனோ ரீதியான தாக்கங்களை உருவாக்கி வீழ்த்துவது.
இப்படியானவை முக்கியமானவை.</b>

ஒரு கலைஞன் தனக்கு எது வந்தாலும் நிலை தளராது இருக்க வேண்டும்.

அது புகழாக இருக்கட்டும் அல்லது இகழ்வாக இருக்கட்டும்.
தனது குறிக்கோளில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.
சக கலைஞர்கள் துடித்த கணங்களை பார்த்திருக்கிறேன்.
என் வாழ்வில் பல்வேறு அனுபவங்களை சந்தித்திருக்கிறேன்.
இவையூடாக ஒரு கலைஞனாக எழும் உணர்வின்
தாக்கத்தை சக கலைஞனுக்காக அவன் என் எதிரியாக இருப்பினும் பேசுவேன்.
அப்படியில்லாதவன் சுயநலவாதி.
நாம் காசுக்காக - புகழுக்காக கலையை வியாபாரப் பொருளாக்குபவர்கள் ஆகக் கூடாது.
நமக்கான உணவுர்வுகளை - மற்றவர்களது தாக்கங்களை - பிரச்சனைகளை சொல்லும் நாம்
நமது திறமைகளை வெளிப்படுத்தி நமது இனத்துக்கான
ஒரு அடையாளத்தை விட்டுச் செல்வதற்கான படைப்புகளை
உருவாக்கும் கலைஞர்களாக இருக்க வேண்டும்.

<b>ஆயிரம் குப்பைகளை கொட்டுவதை விட ஒரு வைரம் காலம் முழுவதும் பேச வைக்கும்.
அதற்காக ஒரு வருடமென்ன பல வருடங்கள் தவமிருங்கள்.
அடி மனதில்
படைப்பு எனும் விதைக்கு நீர் பாச்சுங்கள் - அது
ஒருநாள் தளிர்விடும்...............
பூத்துக் குலுங்கி மக்களை வசீகரிக்கும்
அன்று
உலகம் ஒரு நாள் உங்களை நோக்கும்.</b>

எனக்கு
மதராசி மேலோ வேறு எவர் மேலோ எந்தக் கோபமுமில்லை. பார்த்த பார்வையினூடக சொன்ன விதம் தவறாக இருந்தது. எனவே நானும் எழுத வேண்டி வந்தது. இங்கே கருத்து சார் பிரச்சனையே தவிர தனிப்பட்ட முரண்பாடு அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டுகிறேன்.

ஈழவன் சொல்வது போல ஒரு ஆரம்ப கலைஞனின் படைப்பு மேல்
பெரும் எதிர்பார்ப்புகளோடு மற்றவர்களை நோக்க வைக்கும் போது அப் படைப்பு தோல்வியடையும் சாத்தியம் உண்டு.

இது குறித்த அவதானத்தை
சம்பந்தப்பட்டோர் முடிவு செய்ய வேண்டிய விடயமாகவே கருதுகிறேன்.

இதை இத்தோடு விட்டு படைப்பு சம்பந்தமாக ஆராய்ந்தால் அல்லது கருத்துகளை பகிர்ந்து கொண்டால் ஆக்க பூர்வமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

நன்றி.
Reply
ஜேர்மனி பிறேமன் தமிழ்க்கலை மன்றமும் அப்பால் தமிழ் இணையத்தின் சலனம் அமைப்பும் இணைந்து வழங்கிய 'குறும்பட மாலையும் நூல் அறிமுகமும்' நிகழ்வு 30.10.2005 ஞாயிற்றுக் கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களுடன், திருமதி பாமினி யூட்டா அருள்மதி வசந்தராசன் ஆகியோரது மங்கள விளக்கேற்றுதலுடன் ஆரம்பமாகியது.

முதலாவது நிகழ்வாக, 'கவிக்கூர்' சஞ்சீவ்காந்த் அவர்களின் 'உராய்வு' கவிதை நூலின் அறிமுகம் நிகழ்ந்தது. பிறேமன் தமிழ்க்கலை மன்ற, விளையாட்டுக் கழக தலைவர் நாச்சிமார்கோயிலடி இராஜன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

<img src='http://tamilamutham.net/images/stories/kalaignar/shortfilm1.jpg' border='0' alt='user posted image'>

அதனைத் தொடர்ந்து பிறேமன் தமிழ்க்கலை மன்ற செயலாளர் இராஜன் முருகவேல் அவர்கள் அறிமுக உரை நிகழ்த்தினார்.

<img src='http://tamilamutham.net/images/stories/kalaignar/shortfilm2.jpg' border='0' alt='user posted image'>

தொடர்ந்து 'செந்தமிழ்க்கோடையிடி' குமரன் மாஸ்ரர் அவர்கள் ஆய்வுரை செய்தார்.

<img src='http://tamilamutham.net/images/stories/kalaignar/shortfilm3.jpg' border='0' alt='user posted image'>

உராய்வின் முதற்பிரதியை நாச்சிமார்கோயிலடி இராஜன் வழங்க, மூத்த திரைப்படத்துறைக் கலைஞர் ஏ.ரகுநாதன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்த சஞ்சீவ்காந்த் அவர்களின் நன்றியுரையுடன் நூல் அறிமுகம் நிறைவடைந்தது.

<img src='http://tamilamutham.net/images/stories/kalaignar/shortfilm4.jpg' border='0' alt='user posted image'>

நூல் அறிமுகத்தைத் தொடர்ந்து, சுமதி ரூபனின் 'மனமுள்', வதனனின் 'விலாசம்', 'கலைக்கண்' பால்ராஜின் 'கனவுகள்', கலைஞர் பராவின் 'பேரன் பேத்தி' ஆகியன திரையிடப்பட்டன.
தொடர்ந்து, அக்குறும்படம் பற்றிய பார்வையாளர்களின் கருத்துப் பரிமாற்றங்களும் இடம்பெற்றன.

<img src='http://tamilamutham.net/images/stories/kalaignar/shortfilm5.jpg' border='0' alt='user posted image'>

கருத்துப் பரிமாற்றங்களை சலனம் அமைப்பைச் சேர்ந்த முகுந்தன் அவர்கள் நெறிப்படுத்தினார்.

படங்கள்: பிரபா

('தமிழமுதம்' இணையத்திலிருந்து..!)
.
Reply
நிகழ்வு... படங்களுடன் அறியத்தந்தமைக்கு நன்றிகள்..
Reply
நிகழ்வு பற்றிய தகவலுக்கு நன்றிங்கோ

என்னா இளைஞன் சார்........... லண்டன் நிகழ்விலை ஒருகெட்டப்பு ...இதிலை வேற கெட்டப்பு... டிபறண்டாக வந்து ஜமாச்சிகிறிங்க............ <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->



Reply
நிகழ்வு குறித்த தகவல்களை அறிய தந்த சோழியன் அண்ணாவிற்கு நன்றி, படங்களை தந்த பிரபா அண்ணாவிற்கும் நன்றிகள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
அழகாக தகவல்கள் மற்றும் படங்களை தந்த சோழியன் மற்றும் பிரபாவுக்கு நன்றிகள்.
Reply
களத்தின் மூன்று உறவுகளைக் கண்டதில் மகிழ்ச்சி..! நன்றி சோழியான் அண்ணா..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
தகவல்களுக்கும், படங்களுக்கும் நன்றி.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
நிகழ்வு... படங்களுடன் அறியத்தந்தமைக்கு நன்றிகள்..
<b> .. .. !!</b>
Reply
[quote]<img src='http://img494.imageshack.us/img494/3207/uraivuajeevanimg7mg.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:21pt;line-height:100%'><b>இரவில்லை பகலில்லை
பொழுதெல்லை ஏதுமில்லை
நாடெல்லை அதுவுமில்லை</b></span>

-----------

[size=15]அன்புடையீர்

சஞ்சீவ்காந்தின் உராய்வு கவிதை நூல் வெளியீட்டு விழாவும்
ஆய்வு மற்றும் விமர்சனமும் வெகு விரைவில் <b>சுவிஸில்</b> நடைபெற இருக்கிறது.

இந் நிகழ்வில் பங்கு கொள்ளவும்
இணைந்து நிகழ்வுகளை ஒழுங்கு செய்யவும்
விமர்சனங்களை முன் வைக்கவும் விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.

உங்கள் கருத்துகளையும் பங்களிப்பையும் எதிர்பார்க்கிறோம்.
<img src='http://img334.imageshack.us/img334/8219/ajeevanhand15zy.jpg' border='0' alt='user posted image'>
<b>நாம்
நமது படைப்பாளிகளையும்
அவர்களது படைப்புகளையும் கெளரவித்து -நாளைய
நம் சமூகத்தின் இளையோர் கரம் பற்றி
வளர வழி செய்வோம்.</b>

யாழ் இணைய கருத்துக் களத்தின் வழியாகவும்
நேரடி மின் அஞ்சல் வழியாகவும் தொடர்பு கொள்ளலாம்.
e-mail: ajeevan@ajeevan.com

www.europemoviesfestival.com
or
www.ajeevan.com
Reply
அஜீவன் அவர்கட்கு நன்றி....சுவிசில் நடைபெற இருக்கும் உராய்வு நிகழ்வு பற்றிய முன்னறிப்புக்கு....
Reply
Eelavan Wrote:அன்பின் சோழியன் அண்ணா,தகவலைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.உறுத்தும் ஒரு விடயத்தைப் பகிர்ந்துகொள்கிறேன்

கவிஞர்களுக்கும் பேச்சாளர்களுக்கும் பட்டம் சூட்டி மகிழ்வது.திராவிட முன்னேற்றக் கழகங்களின் எச்சம்.அது ஈழத்தவர்களையும் பிடித்தாட்டுகிறது என்பது எனது அபிப்பிராயம்.

வேடிக்கையான,மற்றவர்களால் கேலியாகப் பேசப்படும் இந்தப் பட்டங்களை எதற்காக நண்பர் சஞ்சீவுக்கும் சூட்டியிருக்கிறார்கள் என்று புரியவில்லை.இது அவரது தவறோ உங்களது தவறோ இல்லை ஆனால் நீங்கள் அந்தப் பட்டத்தைப் பயன்படுத்தியமையால் சுட்டிக் காட்டுகிறேன்.

சஞ்சீவின் சிந்தனைகளுக்கும் செயலுக்கும் ஏற்றதாக இளஞன் என்னும் புனைபெயரை அவரே தேர்ந்தெடுத்திருக்க எதர்காக கவிக்கூர் என்னும் பட்டம்?யாரோ ஒரு பெரியவர் பாராட்டாய்ச் சொல்லிவிட்டார் என்பதற்காக நாம் அதனைக் காவித்திரிய வேண்டுமா?'செந்தமிழ்க் கோடையிடி' பட்டம் கேட்கவே சிரிப்பு வருகிறது.

இளைஞன் இந்தப் பட்டங்களிலிருந்து விலகி தன்பாதையில் செல்லவேண்டுமென்பது எனது விருப்பம்

முதலின் அனைவருக்கும் நன்றி. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

அடுத்து ஈழநாதனின் கருத்தோடு நானும் உடன்படுகிறேன்.
சோழியான் அண்ணாவும், அஜீவன் அண்ணாவும் "கவிக்கூர்" பற்றி தெளிவுபடுத்திவிட்டார்கள். அவர்களுக்கும் நன்றி.

TTN (தமிழ்த் தொலைக்காட்சி இணையம்) இல் மூன்று மாதகாலம் பயிற்சிக்காய் சென்றிருந்தபோது, ஆரம்பகால என் கவிதை முயற்சிக்கு உற்சாகம் தந்தவரான நாடகக் கலைஞர் தாசீசியஸ் ஐயா (அப்போது ரிரிஎன் தமிழ் ஒளியின் நிர்வாகப்பொறுப்பில் இருந்தார்.) அவர்களிடம் எனது கவிதைத் தொகுப்புக்கான கவிதைகளைக் கொடுத்து வாழ்த்துரை எழுதித் தருமாறு கேட்டிருந்தேன். அவரும் அனைத்தையும் வாசித்துவிட்டு சில நாட்களின் பின் "காலத்தின் கவிக்கூர் இவன்" என்று ஒரு வரியை மட்டும் எழுதித் தந்தார். அதுதான் கவிதைத் தொகுப்பின் தொடக்கமாக இடப்பட்டுள்ளது. அவரின் அன்பின் வெளிப்பாடாகவே நான் அதைப் பார்க்கிறேன். <b>பட்டமல்ல - வாழ்த்துரை மட்டுமே!!!</b> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

ஈழநாதன்,
நீங்கள் குறிப்பிட்டதுபோல பட்டங்கள் என்பன இன்று சும்மா சும்மா அள்ளி வழங்கப்படுகின்றன. யாருக்கு எதற்காக வழங்குகிறோம் என்கிற அடிப்படையில்லாமலே வழங்கப்படுகின்றன.

மேடையும், ஒலிவாங்கியும் கிடைத்துவிட்டால் போதும் பட்டங்கள் குவிந்துவிடும். அதனால் அதற்குரிய மதிப்பும் இன்று இல்லாமல் போய்விட்டது. (துரோகி என்ற சொல்லுக்குரிய தன்மை இன்று எப்படி காணாமல் போயிற்றோ, அதேபோல்!)

பிறர் தரும் வாழ்த்தோ, பாராட்டோ, கருத்தோ அது அவரவர் எனது கவிதைகளை உள்வாங்கியதன் வெளிப்பாடு - அவர்களின் சுதந்திரம் - அதனை நான் தடுக்க முடியாது. அதேநேரத்தில் அவர்கள் சொல்லியதை அப்படியே காலம்பூராவும் சுமந்துகொண்டும் செல்ல முடியாது. (பெயருக்கு முன்னால எத்தனையைத்தான் போடுவது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> )

நான் எப்படி என்னை சமூகத்தில் அடையாளம் காட்ட விரும்புகிறேனோ அதுதான் முக்கியம்.

Quote:இளைஞன் இந்தப் பட்டங்களிலிருந்து விலகி தன்பாதையில் செல்லவேண்டுமென்பது எனது விருப்பம்

பட்டங்கள் சுமப்பதில் இளைஞனுக்கும் உடன்பாடில்லை. வெளியார் உருவாக்கும் ஒரு போலியான புகழ் வட்டத்துக்குள் முடக்குப்பட்டு கிடக்க இளைஞன் விரும்புவதில்லை. எனவே, ஈழநாதனின் விருப்பம் தான் இளைஞனதும். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

மீண்டும் அனைவரது கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்.


Reply
ஜேர்மனியில் பிறீமன் தமிழ்க்கலை மன்றத்துடன் இணைந்து சலனம் நடாத்திய 'குறும்படமாலை - 2005' கடந்த 30.10.2005 ஞாயிற்றுக்கிழமை அரங்கம் நிறைந்த பார்வையாளர்களுடன் நடந்து முடிந்தது. அதன் நிழ்ச்சி நிரல் இரு நிகழ்வுகளாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

முதலாவதாக ஜேர்மனியை வதிவிடமாகக் கொண்டு வளர்ந்துவரும் 22அகவையுடைய அடுத்த தலைமுறை வாலிபனான சஞ்சீவ்காந்தின் "உராய்வு" கவிதைநூல் அறிமுகம் இடம்பெற்றது.

இரண்டாவதாக சலனத்தின் குறும்படங்களாக கனடா சுமதி ரூபனின் "மனமுள்", ஈழவர் திரைக்கலைமன்றம் வழங்கும் ஜேர்மனி கலைக்கண் பால்ராஜின் "கனவுகள்", பாரிஸ் நேயாலயம் வழங்கும் கரைஞர் பராவின் "பேரன் பேத்தி", பிரான்சு நல்லூர்ஸ்தான் வழங்கும் வதனனின் "விலாசம்", கனடா எம் சுதனின் "அடிட்" ஆகியன திரையிடப்பட்டன.
அத்துடன் புலத்தமிழர்களின் திரைக்கலை வரலாற்றில் புதிய தடம்பதித்த "பேரன் பேத்தி" குறும்படத்தின் மூலம் அநேகரின் கவனத்தை ஈர்த்த பன்முகக்கலைஞர் பரா, அவையின் பலத்த கரவொலிக்கு மத்தியில் பிறீமன் தமிழ்க்கலை மன்றத்தால் "சிறந்த இயக்குநர் 2005" பட்டயம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

நூல் அறிமுக நிகழ்வில் தமிழையும், தமிழர் வாழ்வியலையும் சுருங்க விபரித்து அந்நதந்தக் காலப் பதிவுகளில் அக்கறையில்லாதிருக்கும் தமிழர்களின் அலட்சியப்போக்கை கண்டித்ததுடன், நாம் வாழும் புலத்தில் வளரும் அடுத்த தலைமுறை இளைஞனான சஞ்சீவ்காந்தின் இந்தப் பதிவு முயற்சியைப் பாராட்டிப் பேசினார் புலத்தமிழர் மத்தியில் சிறந்த சொற்பொழிவாளராகத் திகழும் கோடையிடிக் குமரன். இதனால் அவையிலிருந்தோரின் வாஞ்சைக்குள்ளானார் "இளைஞன்" என்ற புனைப்பெயரையுடைய சஞ்சீவ்காந்.

இவரது எளிமையான ஏற்புரையும், பிறீமன் தமிழ்க்கலை மன்றத்தின் புதிய தலைமுறையினருக்கான உற்சாகமூட்டலும் கவனங்கொள்ளத் தக்கன.

<b>இணைப்பு: இங்கே அழுத்தவும்
நன்றி: அப்பால் தமிழ்</b>


Reply
சஞ்சீவ்காந்த் அவர்களின் 'உராய்வு' கவிதைத் தொகுப்பிலிருந்து ஓர் கவிதை..

செயற்படு(பொருள்)

<img src='http://tamilamutham.net/images/stories/kavithai/seyatpadu.jpg' border='0' alt='user posted image'>

இருட்டைக்
கவிழ்த்து
வெளிச்சத்தின் மேல்
ஏறி நில்.

சுதந்திரத்தை
விரி
உலகை அதில்
கிடத்து
பண்பாட்டால்
போர்த்து

சமுதாயத்தை
நிர்வாணப்படுத்து
அதன் காயங்களில்
முத்தமிடு
அழுக்குகளை
நக்கு.

உண்மைகளைக்
கட்டிப்பிடி
உன் சொல்லைக்
கவ்விப்பிடி.

காலத்தை
நடத்து
வேகத்தை
முந்து.

முரண்படு
முட்டிமோது
உடன்படு
ஒட்டி உரசு
திறன்படு
தீர அனுபவி.

வாழ்க்கையைக்
கொண்டாடு
வரலாற்றில்
நின்றாடு.

ஆசைகளோடு
உறவுகொள்
தேவைகளைக்
கருத்தரி
தேடல்களைப்
பிரசவி.

பழசை மென்று
புதுசாய்த் துப்பு.
.
Reply


Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)