Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
கட்சிகளின் தெர்தல் கோஷங்களைப் பாருங்கள் யார் என்று புரியும்
மற்றது வேட்பாளர் விடயத்தில் நானும் யோசித்தேன் மீண்டும் மீண்டும் அதே பழைய ஆட்கள்
ஆனால் அதற்கு காரணம் இருக்கிறது
1)தமிழர் விடுதலைக் கூட்டணி உடைந்தமை
2)நிறையக் கட்சிகள் சேர்ந்த கூட்டு
3)அரசியலில் அடிபட்ட இளைஞர்கள் குறைவு
கூட்டணியின் முந்திய வேட்பாளர் பட்டியலில் அரவிந்தன் முதலியோர் இருந்தனர் அத்துடன் மாநகர சபை போன்றவற்றிலும் புதிய தலைகள் புகுத்தப்பட்டன ஆயினும் நாட்டுச் சூழல் காரணமாக புதியவர்கள் மக்கள் மத்தியில் பிரபலமடையவில்லை அரவிந்தன் சங்கரியுடன் சேர்ந்து கொண்டார்
இப்போது இருக்கும் வேட்பாளர்கள் கூட கட்சிகளுக்குரிய விகிதாசாரத்தில் ஒதுக்கப்பட்டு புதியவர்களாக கூட்டுறவு சமாசம்,பனை தென்னை அபிவிருத்தி சபை,பல்கலைக்கழகம் என்பவற்றிலிருந்து ஒவ்வொரு பிரதிநிதிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்
அதே போன்று தான் மற்றைய மாவட்டங்களிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தக் கட்சி எந்த நபர் செல்வாக்கு அதிகம் உள்ளவர் என கலந்தாலோசித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது
இதில் கூட விடுதலைப் புலிகளின் தலையீடு இருப்பதாகச் சொல்லப்படும் போதிலும் ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம் என்ற பிரச்சனையைத் தான் அவர்களும் எதிர்நோக்கியிருப்பர் ஒவ்வொரு கட்சியினதும் முக்கியஸ்தர்களை ஒதுக்க முடியாமல் அத்துடன் மக்கள் மத்தியில் ஏதோ ஒரு விடயத்தில் செல்வாக்குப் பெற்றவர்களையும் இணைத்து பட்டியல் தயாரிக்கப் பட்டுள்ளது
பெண்களின் பிரதிநிதித்துவம் சொல்லும்படியாக இல்லைத் தான் ஆனால் அண்மையில் நடந்த சம்பவத்தை வைத்துப் பார்க்கும் போது பெண்கள் யாரும் போட்டியிடுவார்களா என்ற கேள்விதான் எழும் வேட்பாளர் பத்மினி சிதம்பரப்பிள்ளை வீட்டின் முன்னால் வேண்டுமென்றே கட்சியொன்று ஒலிபெருக்கி பூட்டி சத்தம் போட்டிருக்கிறது பல்கலைக் கழக மாணவர்களின் தலையீட்டினால் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கப் பட்டது
அதே போன்று கடந்த தேர்தலில் ஊர்காவற்றுறையில் வைத்து தமிழ்க் கூட்டமைப்பு வேட்பாளர்கள் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டனர் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழுக் கூட்டத்தில் ஏற்பட்ட வாக்குவாததில் உறுப்பினர்களே உறுப்பினர்களைத் தாக்கியுள்ள்னர் இவ்வாறான அடிதடி அரசியலில் பெண் வேட்பாளர்கள் அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களால் ஈடு கொடுக்கமுடியுமா என்பதே கேள்வி
உங்கள் கேள்வியில் உள்ள நியாயம் புரிகிறது இந்தத் தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பு என்ற பெயருக்கும் விடுதலைப் புலிகளின் ஆதரவுக்கும் மட்டுமே வாக்குகள் கிடைக்கவிருக்கின்றன அப்படிக் கிடைக்கவிருக்கும் பாராளுமன்ற ஆசனங்களில் பெண்களையும் புகுத்தியிருக்கலாம் ஆனால் பெறுபேறு எப்படியிருக்கும் என நினைக்கிறீர்கள் அப்படிப் புகுத்துவதாக இருந்தாலும் துணிந்து முன் வருவார்களா?

Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
[size=14] இது சுவிஸ் ரவியின் "வாழ்வின் மீதான எளிய பாடல்கள்" என்ற அறிமுக குறிப்பில் இருந்து எடுத்த்து. அதில் அரசியல் பற்றிய விவாத்துக்குரிய பகுதி இருந்ததால் இங்கே போடுகின்றேன். உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.
இதில் இருந்து ஒரு முக்கியமான கேள்வி >>> நமது அள்வுகோல்களை வசதிக்கு ஏற்றவாறு மாற்றுகின்றோமா?
தமிழீழ விடுதலைப் போராட்டம் வீச்சம் கொண்டு நியாயம் தேடிய காலகட்டத்தில் காத்தான்குடிப் பள்ளிவாசலினுள் தொழுகையில் இருந்த நு£ற்றுக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் தமிழப் போராளிகளாலே இரத்தவெள்ளத்தில் அமிழ்த்தப்பட்டார்கள். இராணுவத்தின் கோவில்கள் மீதான குண்டுவீச்சுகளுக்கும் மடுமாதாமீதான தாக்குதலுக்கும் புனித ஸ்தலங்கள் என்ற அளவுகோலில் நின்று இன்றுவரை குரல்கொடுக்கும் பல மனிதாபிமானிகளுக்கு இந்த காத்தான்குடிப் பள்ளிவாசல் இரத்தச் செய்திக்கு வேறு அளவுகோல்கள் தேவைப்பட்டதோ என்னவோ அடக்கியே வாசித்தார்கள், வாசிக்கிறார்கள். தமிழ்மொழியையே தாய்மொழியாகக் கொண்ட யாழ் முஸ்லிம் மக்கள் தமது சொந்த மண்ணிலிருந்து தமிழ்ப் போராளிகளால் வெளியேற்றப்பட்டார்கள். அதுவும் 24 மணி நேரத்திற்குள் நடாத்திமுடிக்கப்பட்டது. இருளை மூளைக்குள் திணித்தபடி அகதியாய்ப் போயினர் அவர்களும். இப்படியே அவர்களை தமிழ்ப் போ¤னவாதமும் ஒடுக்கியது. அடக்குமுறைக்கு எதிராக போராடும் இனம் தன்னுடன் வாழும் இன்னொரு இனத்தை அடக்கியாள்வதை சகித்துக் கொள்கிற நிலை. அதனால்தானோ என்னவோ சகோதர மனிதனே என்று விழித்தபடி வருகிறான் கவிஞன்.
இந்தக் கவிஞன் அகதியாய்ப் போகிறான்.
இந்தத் தேசத்தை விட்டும்
இங்கேயிருக்கும் தாவரங்களையும்
பூக்களையும்
புல்பூண்டுகளை விட்டும்
மிருகங்களையும்
எனக்கு அநியாயம் செய்தவர்களை விட்டும்
நான் போகிறேன்
எனது இதயத்திற்கும்
உங்கள் இதயத்திற்கும்
து£ரமென்று விலக்கிவிட்டீர்களே
அதனால் போகிறேன்.

நான் பிடித்த தும்பிகளே
வண்ணத்துப் பூச்சிகளே
இந்தக் காற்றில் கலந்திருக்கும்
நல்லவர்களின் சுவாசத்தின் வாசனைகளே
நான் போகிறேன்
என்றபடி இந்த அநியாயங்களுக்காக கண்ணீர்வடித்த மனிதர்களிடமும் விடைபெற்றுப் போகிறான். அதே கவிதையில்,
இடிவிழுந்து புயல் அடித்து
து£ள்து£ளாய்ச் சிதறி இந்தத் தேசம்
மண்போல் போகட்டுமென்று
என்னால் சாபமிட முடியாது
எனது நாகா¦கம் வேறு
நான் போகிறேன்
என மனிதமாகிறான் கவிஞன். போராட்டத்தின் காயங்களைப் பற்றிப் பேசுவதே போராட்டத்துக்கு எதிரானவன் என்ற ஒற்றையிலக்கணத்தில் புதையுண்டோர் பலர். இதற்குள் நின்று இந்தக் கவிஞனின் உணர்வை வகைப்படுத்துவது ஒன்றும் போராட்டத்துக்குச் செய்யும் தொண்டல்ல. மாறாக தவறுகளுக்கு துணைபோனவர்களாகவே வரலாறு காண்பிக்கும்.
தலையைக் கொத்தி மூளை குடி
வறுத்துண்ணு
விரும்பின் எலும்புகளையெல்லாம்
சேர்த்து சூப்புக் காய்ச்சலாம்

மொத்தத்தலிது ஈழமில்லை
சா¤காணின் பிணங்கள் கண்டதும்
காகங்கள் பூக்கும் தென்னை.
பாறையைப் பிராண்டும் அலைகளின் வடிவாய், அடக்கப்படுதலின் தடுப்புச் சுவர்களை இந்தக் கவிதை வா¤களும் பிராண்டுகின்றன. போராட்டத்தின் நியாயங்களை எந்தக் கவிதையும் சீண்டவில்லை. உச்சமாக அவன் எமது தேசத்தை ஆக்கிரமித்தவர்களை நோக்கி வருகிறான் இந்தக் கவிதையில்...
இன்று எனது பிறந்தவீடும்
தாய்நிலமும்
உன்னிடம் உனது படையிடம்
பறிபோயிருக்கலாம்
இன்னும் கடல் தள்ளும் அலையினு£டே
றப்பர் டையர்களினு£டே
நீளமான வாவிகளினு£டே
பதுங்குகுழியினு£டே
போராட்டம் குறித்த காயங்களோடும்
கனவுகளோடும்
எனதையும் நீ ஒதுக்கிவிடலாம்
உண்மையிலேயே யாரையும் யாரும்
காப்பாற்ற முடியாதும் போகலாம்
ஆனால் இவைகளுக்கப்பாலும்
இரவின் துவாரம் கிழிந்து
இன்னொரு இரத்தக் கட்டியை உதிர்த்தும்
அது உன்னையும் உனது படையையும்
எனது மண்ணிலிருந்து விரட்டியடிக்கும்.
என முடிக்கிறான் கவிஞன்.
இப்படியே மனிதத்தை நேசிப்பவனாகவும் கொடுமைகளின்மீது தாக்குதல் தொடுப்பவனாகவும் போராட்டத்தின்மீது நம்பிக்கை கொண்டவனாகவும் சிலபொழுதுகளில் நம்பிக்கைகள் தளர்ந்த மனிதனாகவும் பா¤தாபத்துக்கு உ£¤யவனாகவும்கூட முரண்பாடுகள் கொண்ட உணர்வுநிலைகளில் உலவுகிறான். எழுத்துக்களில் தனது அகவிருப்பு வெறுப்புகளை சாதிப்பவனாக அன்றி எலும்பும் சதையும் கொண்ட மனிதனாய் நின்று பேசுகிறான். இதனால் அவனது கவிதைகளால் நாம் காவப்பட்டு அலைக்கழிக்கப்படுகிறோம். ஒற்றைச் சிறகு முளைத்தவர்கள் பறக்கமுடியாது, கவிதையின் வெளியை எட்டமுடியாது.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
யாழ்.தீவுப் பகுதிகளில் தேர்தல் பிரசாரத்திற்கு தடையில்லை என்கிறார் டக்ளஸ்
யாழ்.தீவுப்பகுதிகளில் ஏனைய அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட முடியாதுள்ளது என பெப்ரல் அமைப்பு கூறி இருப்பது உண்மைக்கு புறம்பான ஆதாரமற்ற தகவல் என்பதுடன் கள நிலைவரத்தை அறியாமல் கூறப்பட்ட செய்தியென யாழ்.மாவட்ட முன்னாள் எம்.பி.யும் ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா நேற்றுத் தெரிவித்தார்.
யாழ். தீவுப்பகுதிகளுக்கு ஈ.பி.டி.பி. இயக்கத்தை தவிர ஏனைய அரசியல் கட்சிகளினால் செல்ல முடியாதுள்ளது என பெப்ரல் அமைப்பு கூறியிருந்ததை அடுத்து டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறுகையில்
யாழ். தீவுப் பகுதிகளுக்கு எந்த அரசியல் கட்சியும் சென்று தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட முடியும். தடை விதிக்கப்பட வில்லை என்றார்.கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ் கூட்டமைப்பின் யாழ்.வேட்பாளர் ஸ்ரீகாந்தா தலைமையிலான குழு தீவுப்பகுதிகளுக்கு சென்று தமது பிரசாரங்களை மேற்கொண்டனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
[b]அதேவேளை, எம்மைப் பொறுத்தவரையில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நாம் சுதந்திரமாக பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். அதேபோன்று வன்னியில் புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான உறுதி எமக்கு வழங்கப்பட வேண்டும்.
நாம் இரவு நேரங்களில் யாழ்.மாவட்டத்தில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பு உதவியுடன் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை. பெப்ரல் அமைப்பு அப்படி கூறி இருப்பதால் எந்தவித உண்மையும் இல்லை என்றார்.
நன்றி - வீரகேசரி
அப்படியானால் கருணா, டக்ளஸ் இடையே உடன்பாடு?
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
நீக்கப்பட்டுள்ளது - மோகன்
Truth 'll prevail
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
நீக்கப்பட்டுள்ளது - மோகன்
தாத்தா ரொம்பத்தான் லொள்ளூ
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
இங்கு பகரப்படும் கருத்துகள் பல தமிழரின் தேசிய தலைமை மற்றும் தாயக மக்கள் எதிர்ப்புக் கருத்துகள் என்பதில் ஐயமே இல்லை...!
இப்படியான கருத்தாளர்களின் சுய கருத்தல்லாத தகவல்களுக்கும் கருத்துக்களுக்கும் மறு பிரசுர இடமளிப்பதன் மூலம்
யாழ்களம் தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான சக்திகளுக்கு மறைமுக ஆதரவு வழங்குவதுடன் தமிழினத் துரோகத்திலும் ஈடுபடுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது....!
இங்கு கருத்தாடுபவர்கள் சமகால மக்கள் சார் அரசியல்வாதிகளோ மக்களோடு விடுதலைப் போரில் நின்றவர்களோ நிற்பவர்களோ அல்ல...பலரும் பார்வையாளிகளாக இருந்து காலம் கடத்தியவர்கள் அல்லது துரோகத்தனம் செய்தவர்களாகத்தான் இருப்பர்....இவர்களின் நடுவு நிலைமையும் கருத்துக்களும் உண்மையாக துன்பங்களையும் துயரங்களையும் சுமந்து கொண்டு விடுதலை உணர்வையும் சுமக்கும் மக்களை மேலும் வேதனைப்படுத்துமே தவிர அவர்களுக்கு ஆறுதல் அளிக்காது...யாழ்களம் ஏன் இப்படியான சந்தர்ப்பவாத ஆசாமிகளுக்கு தொடர்ந்து கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் இடமளிக்கிறது....!
கருத்துச் சுதந்திரம் என்பது மனிதனின் மனிதத்தின் ஆக்கத்தினை விருத்தியை வளர்ச்சியை நோக்கியதாக இருக்க வேண்டுமே தவிர துன்பத்தையும் அழிவையும் தரும் ஒன்றுக்காக இருக்கக் கூடாது...அதற்கு அனுமதிக்கவும் கூடாது....! அப்படி அனுமதித்தால் அது தமிழருக்கு மட்டுமல்ல முழு அப்பாவி மனித இனத்துக்குச் செய்யும் துரோகமாகும்....!
இது தொடர்பில் தமிழ்நாதம் இணையத்தளம் எடுத்திருந்த தமிழர் தேசியவிடுதலைப் போராட்டத்திற்கு எதிரான கருத்துக்களை உள்வாங்கிக் கொள்வதில்லை என்பது போன்றதான நிலையை மக்களின் நலன் கருதி யாழ்களம் பரிசீலிக்குமா....???!
:evil:

:evil:

Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
அந்தத் தேர்தல் கண்காணிப்பாளர்களிலேயே தமிழர்களை இணைத்ததற்கு கட்சியொன்று தனது கண்டனத்தை தெரிவித்துள்ளதே அப்படியாயின் எது சரி கண்காணிப்புக் குழு சொல்வதா அல்லது கட்சி சொல்வதா?

Posts: 292
Threads: 3
Joined: Mar 2004
Reputation:
0
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கு செய்யும் உதவியோ
என்ன நிவாரணம் குடுக்கினமோ?
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
Eelavan Wrote:அந்தத் தேர்தல் கண்காணிப்பாளர்களிலேயே தமிழர்களை இணைத்ததற்கு கட்சியொன்று தனது கண்டனத்தை தெரிவித்துள்ளதே அப்படியாயின் எது சரி கண்காணிப்புக் குழு சொல்வதா அல்லது கட்சி சொல்வதா?
இது அந்த கட்சி தமிழர்களிடம் நம்பிக்கை இழந்ததை காட்டுகின்றது. தமிழர்களை நம்பாத இந்த கட்சி எந்த நம்பிக்கையில் தமிழர்கள் ஓட்டு போடுவார்கள் என்று நினைத்து தேர்தலில் குதித்துள்ளது?
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 292
Threads: 3
Joined: Mar 2004
Reputation:
0
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற நம்பிக்கையில் தான்
பல்கலைக் கழக மாணவர்களைத் தாக்கியதுமன்றி குண்டர்கள் என்று வர்ணித்திருப்பது வருந்தத் தக்கது
தோழர் டக்ளஸ் மாணவர் அமைப்பிலிருந்து வந்ததை மறந்துவிட்டார் என நினைக்கிறேன்
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
தோழர் டக்ளஸ் இல்லை தோழர் தலைவர் அப்படிச் சொல்லாவிட்டால் கோபம் வந்துவிடும்