08-02-2005, 09:07 AM
இங்கிலாந்தில் லண்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர்கள் ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டனர். அடிக்கடி கண்கள் இமைப்பது ஏன்? கண்கள் மூடித்திறக்கும் போது உடலில் என்ன மாற்றங்கள் நிகழ்கிறது என்பது பற்றித்தான் இந்த ஆராய்ச்சி.
நமது கண்கள் பல லட்சம் தடவை இமைக்கிறது. நம்மை அறியாமலேயே கண்கள் இமைக்கின்றன. ஒவ்வொரு தடவை கண் இமைக்கும் போதும் மூளையின் ஒரு பகுதி தற்காலிகமாக செயல் இழக்கிறது. இதனால்தான் கண் இமைப்பதை நாம் உணர முடிவதில்லை. கண்களில் இருந்து செல்லும் நரம்புகளும் இதை மூளைக்கு உணர்த்த முடிவதில்லை.
கண் இமைக்கும் போது இமைகள் மூடி இருந்தாலும் கூட வெளிச்சம் கண்களுக்குள்ளே செல்கிறது. இதையும் நாம் உணர்வது இல்லை.
இவ்வாறு அந்த டாக்டர்கள் தங்கள் ஆராய்ச்சியில் தெரிவித்து இருக்கிறார்கள்.
ஒரு சம்பவத்தை கவனமாக உற்று பார்க்கும்போது கண் நரம்புகளும் மூளையின் பாகங்களும் மிகவும் சுறுசுறுப்பாக தீவிரமாக செயல்படுகின்றன.
கண் இமைக்கும் போது மூளையின் பாகங்கள் தற்காலிகமாக செயல் இழப்பது சரி. நிரந்தரமாக கண்ணை மூடிவிட்டால்!

oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............