07-31-2005, 07:31 PM
<b>தொடர்ந்து 102 நாட்கள் சந்திரமுகியை பார்த்த ரசிகர்</b>
<img src='http://thatstamil.indiainfo.com/images29/chandramukhi_1-200.jpg' border='0' alt='user posted image'>
சந்திரமுகி படத்தை கோவையை சேர்ந்த ஒரு வாலிபர் தொடர்ந்து 102 நாட்கள் பார்த்து சாதனை புரிந்துள்ளார்.
ரஜினியின் சந்திரமுகி 100 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந் நிலையில் கோவையை சேர்ந்த ரஜினியின் தீவிர ரசிகரான முத்து என்பவர் சந்திரமுகியை தொடர்ந்து 102 நாட்கள் பார்த்து சாதனை படைத்துள்ளார்.
கேவையை அடுத்த சர்க்கார் சாமக்குளத்தை சேர்ந்த இவர், காய்கறிக் கடையில் பணி புரிந்து வருகிறார். சந்திரமுகி வெளியான ஏப்ரல் 14ம் தேதி முதல் கோவை ராம்நகரிலுள்ள குமரன் திரையரங்கில் தினமும் படத்தை பார்த்து வந்துள்ளார்.
ஒரு வாரம் படத்தை தொடர்ந்து பார்த்த பிறகு, இந்தப் படம் 100 நாட்கள் கண்டிப்பாக ஓடும். 100 நாட்களும் நான் தொடர்ந்து படத்தை பார்க்க வருவேன் என்று முத்து தியேட்டர் நிர்வாகியிடம் கூறியுள்ளார்.
முத்து கூறியபடியே தினமும் படத்தை பார்க்க வந்துள்ளார். தினமும் படம் பார்க்க வரும்போது தியேட்டர் நிர்வாகியிடம் சென்று தனது ஆஜரை பதிவு செய்துள்ளார்.
இந் நிலையில் சந்திரமுகி 50 நாட்களை நிறைவு செய்த போது, அடுத்து எத்தனை நாட்களுக்கு படம் ஓடுகிறதோ, அத்தனை நாட்களுக்கும் இலவசமாக படத்தை பார்க்க முத்துவுக்கு தியேட்டர் நிர்வாகம் அனுமதி வழங்கியது.
இதையடுத்து தொடர்ந்து 102 நாட்கள் படத்தை பார்த்து முத்து சாதனை புரிந்துள்ளார்.
thatstamil.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>