Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நீங்கா நினைவுகள்!
#1
நீங்கா நினைவுகள்!


* நீ நடந்த பாதையில்

நித்தமும் நடந்தேன்

நிழலாய் தொடர்ந்தன...

உந்தன் நினைவுகள் – உன்

கால் பதிந்த சாலையை

கவனமாய் கடந்தேன்

கை சேர்த்து என்னோடு

வந்ததுன் நினைவுகள்!

* நீ சூடிய மலர்களை

சுகமாய் தொடுத்தேன்

கனவிலும் மணந்தது

காதல் நினைவுகள்... நீ

பாடிய வரிகளை நான்

பாடிக் களித்தேன்

கூடவே கேட்டது

குயிலாய் உன் குரல்!

* நீ நேசித்த கடிதங்களை

நிதமும் படித்தேன்

வாசிக்கும் போதெல்லாம்

வஞ்சியுன் நினைவுகள்... நீ

உரைத்த சொற்களை

உச்சரித்துப் பார்த்தேன்

ஒவ்வொரு கவிதையாய்

உன்னுடைய நினைவுகள்!

* நீ இருந்த இதயத்தில்

நினைவை சுமந்தேன்

இரும்பாய் கனத்தது

இளமை நினைவுகள்... நீ

மறுத்த காதலை

மறக்கப் பார்த்தேன்

முடியாத காரணத்தால்

மண்ணைப் பிரிகிறேன்!

— கு.மா.பா.கபிலன்
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Messages In This Thread
நீங்கா நினைவுகள்! - by SUNDHAL - 07-31-2005, 03:03 PM
[No subject] - by கீதா - 07-31-2005, 04:08 PM
[No subject] - by அனிதா - 07-31-2005, 04:09 PM
[No subject] - by ப்ரியசகி - 07-31-2005, 07:48 PM
[No subject] - by வெண்ணிலா - 08-01-2005, 02:32 AM
[No subject] - by kavithan - 08-01-2005, 04:11 AM
[No subject] - by SUNDHAL - 08-01-2005, 09:23 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)