![]() |
|
நீங்கா நினைவுகள்! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: நீங்கா நினைவுகள்! (/showthread.php?tid=3787) |
நீங்கா நினைவுகள்! - SUNDHAL - 07-31-2005 நீங்கா நினைவுகள்! * நீ நடந்த பாதையில் நித்தமும் நடந்தேன் நிழலாய் தொடர்ந்தன... உந்தன் நினைவுகள் – உன் கால் பதிந்த சாலையை கவனமாய் கடந்தேன் கை சேர்த்து என்னோடு வந்ததுன் நினைவுகள்! * நீ சூடிய மலர்களை சுகமாய் தொடுத்தேன் கனவிலும் மணந்தது காதல் நினைவுகள்... நீ பாடிய வரிகளை நான் பாடிக் களித்தேன் கூடவே கேட்டது குயிலாய் உன் குரல்! * நீ நேசித்த கடிதங்களை நிதமும் படித்தேன் வாசிக்கும் போதெல்லாம் வஞ்சியுன் நினைவுகள்... நீ உரைத்த சொற்களை உச்சரித்துப் பார்த்தேன் ஒவ்வொரு கவிதையாய் உன்னுடைய நினைவுகள்! * நீ இருந்த இதயத்தில் நினைவை சுமந்தேன் இரும்பாய் கனத்தது இளமை நினைவுகள்... நீ மறுத்த காதலை மறக்கப் பார்த்தேன் முடியாத காரணத்தால் மண்ணைப் பிரிகிறேன்! — கு.மா.பா.கபிலன் - கீதா - 07-31-2005 உங்கள் கவிதை நன்றாக இருக்கின்றது நன்றி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அன்புடன் jothika - அனிதா - 07-31-2005 http://www.yarl.com/forum/viewtopic.php?t=1201 சுட்ட கவிதை என்று ஒரு தலைப்பு இருக்கு அதில போடலாமே அண்ணா :wink: கவிதை நல்லாருக்கு நன்றி அண்ணா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ப்ரியசகி - 07-31-2005 நல்ல கவிதை சுண்டல் அண்ணா.. Quote:சுட்ட கவிதை என்று ஒரு தலைப்பு இருக்கு அதில போடலாமே அண்ணா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வெண்ணிலா - 08-01-2005 Quote:நீ நடந்த பாதையில் சுடச் சுட சுண்டல் தந்த சுட்ட கவிதை என் மனதை சுடுகிறது. நன்றி சுண்டல் - kavithan - 08-01-2005 நன்றி சுண்டல்.. - SUNDHAL - 08-01-2005 கவிதன் அண்னா இதை சுட்ட கவிதைகள் பகுதிக்கு மாத்தி விடுங்கோஇ அனித்தாக்கா கோவிச்சுக்க போறா |