07-25-2005, 04:55 AM
போய் வா காதலனே!
*
உன்னையா
என்
உள்ளத்தில் எழுதினேன்...
* கை வளையல் கேட்டதற்கு
குரல்வளை தரவா என்றாய்...
கண்ணாடி வளையலுக்கே
கணக்கு பார்க்கிறவன்
என்பது தெரியாமல்
உன்னையா
என்
உயிரென்று கருதினேன்!
* புளியை விட
புளிப்புதான் என்றாலும்
என்
உதட்டின் நிறம் என்பதால்
ஜாம்பக்கா பிடிக்கும் என்றாய்...
* நான் குளிக்கும்
தண்ணீரை
வேருக்குத் திருப்பி விட்டதால்
என் வீட்டு
வேப்பங்காய் கூட
விதையில்லாத திராட்சையாக
இனிக்கிறதென்று
சொல்லிச் சொல்லியே
என்னைக் கொன்றாய்...
* கழுத்து வரையிலும்
காசு, நகை
ஆசைகளை வைத்துக் கொண்டு
வாய் வழியே
காதல் பொங்கி
வழிந்தவனே...
* நான்
உடுத்தியிருக்கும்
ஒற்றைப் புடவையைத் தவிர
மாற்றுத் துணி கூட
மறுப்பவன் நீ என்றால்
சரியான
ஆண்மகன் நீ
ஒத்துக் கொள்கிறேன்...
* என் வீட்டு
உத்திரத்தைப் பிடுங்கித்தான்
உன்
உடைந்த முதுகுக்கு
முட்டுக் கொடுக்க வேண்டுமென்றால்
போய் வா காதலனே...
உன்னை, என்
பழைய தோழிகளின் பட்டியலில்
சேர்த்துக் கொள்கிறேன்!
க.சந்திரகலா,
*
உன்னையா
என்
உள்ளத்தில் எழுதினேன்...
* கை வளையல் கேட்டதற்கு
குரல்வளை தரவா என்றாய்...
கண்ணாடி வளையலுக்கே
கணக்கு பார்க்கிறவன்
என்பது தெரியாமல்
உன்னையா
என்
உயிரென்று கருதினேன்!
* புளியை விட
புளிப்புதான் என்றாலும்
என்
உதட்டின் நிறம் என்பதால்
ஜாம்பக்கா பிடிக்கும் என்றாய்...
* நான் குளிக்கும்
தண்ணீரை
வேருக்குத் திருப்பி விட்டதால்
என் வீட்டு
வேப்பங்காய் கூட
விதையில்லாத திராட்சையாக
இனிக்கிறதென்று
சொல்லிச் சொல்லியே
என்னைக் கொன்றாய்...
* கழுத்து வரையிலும்
காசு, நகை
ஆசைகளை வைத்துக் கொண்டு
வாய் வழியே
காதல் பொங்கி
வழிந்தவனே...
* நான்
உடுத்தியிருக்கும்
ஒற்றைப் புடவையைத் தவிர
மாற்றுத் துணி கூட
மறுப்பவன் நீ என்றால்
சரியான
ஆண்மகன் நீ
ஒத்துக் கொள்கிறேன்...
* என் வீட்டு
உத்திரத்தைப் பிடுங்கித்தான்
உன்
உடைந்த முதுகுக்கு
முட்டுக் கொடுக்க வேண்டுமென்றால்
போய் வா காதலனே...
உன்னை, என்
பழைய தோழிகளின் பட்டியலில்
சேர்த்துக் கொள்கிறேன்!
க.சந்திரகலா,
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

