07-25-2005, 03:27 AM
<b>கடற்கரையில் நடந்த படப்பிடிப்பில் பரபரப்பு: நடிகை கோபிகாவை, ராட்சத அலை இழுத்து சென்றது அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் </b>
கடற்கரையில் கதாநாயகனுடன் உருண்டு புரண்டு நடித்தபோது, நடிகை கோபிகாவை ராட்சத அலை கடலுக்குள் இழுத்து சென்றது. அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.
`சாந்து பொட்டு'
நடிகை கோபிகா கேரளாவை சேர்ந்தவர். மலையாள பட உலகில் இருந்து தமிழ் பட உலகுக்கு வந்தவர். `ஆட்டோகிராப்' படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆனார்.
அவர் நடிக்கும் `சாந்து பொட்டு' என்ற மலையாள படத்தில் திலீப் கதாநாயகனாக நடிக்கிறார். லால்ஜோஸ் டைரக்டு செய்கிறார்.
ஆலப்புழை
இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள ஆலப்புழையில் நடந்தது.
கதாநாயகன் திலீப்பும், கதாநாயகி கோபிகாவும் கடற்கரையில் உருண்டு புரள்வது போல் ஒரு பாடல் காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தார்கள்.
ராட்சத அலை
அப்போது திடீர் என்று ஒரு ராட்சத அலை சீறிப்பாய்ந்து வந்தது. கடலை நோக்கி உருண்டு புரண்டபடி போய்க் கொண்டிருந்த திலீப்பையும், கோபிகாவையும் அந்த ராட்சத அலை இழுத்து சென்றது. இரண்டு பேரும் கடலில் மூழ்கினார்கள்.
எதிர்பாராதவிதமாக நடந்த இந்த சம்பவத்தை பார்த்து, படப்பிடிப்பு குழுவினர் அதிர்ச்சி அடைந்தார்கள். திலீப்பின் உதவியாளரும், கோபிகாவின் தாயாரும் கதறினார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார்கள்.
உயிர் தப்பினார்கள்
அதிர்ஷ்டவசமாக இன்னொரு பெரிய அலை திலீப்பையும், கோபிகாவையும் கரையில் கொண்டு வந்து தள்ளியது.
படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் ஓடிப்போய் 2 பேரையும் தூக்கி வந்தார்கள்.
ஆஸ்பத்திரியில் அனுமதி
திலீப்_ கோபிகா இருவரும் கடலுக்குள் நிறைய உப்பு தண்ணீரை குடித்து விட்டதால், மயங்கிய நிலையில் கிடந்தார்கள். 2 பேரையும் அவசரம் அவசரமாக ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்தார்கள்.
சிகிச்சைக்குப் பின் இருவரும் கண் விழித்தார்கள்.
பேட்டி
இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் பற்றி கோபிகா `தினத்தந்தி' நிருபரிடம் கூறியதாவது:_
"கடல் பக்கமாக உருண்டு போக வேண்டும் என்று சொன்னபோதே எனக்கு பயமாக இருந்தது. எனக்கு நீச்சல் தெரியாது.
என்றாலும் டைரக்டர் சொல்லை மீற முடியாது. பயந்து கொண்டேதான் நடித்தேன். நான் பயந்தது போலவே நடந்து விட்டது.
2_வது ஜென்மம்
ராட்சத அலை என்னை கடலுக்குள் இழுத்து சென்ற போதே, இன்றோடு என் கதை முடிந்தது என்று நினைத்தேன். கடவுள்தான் இன்னொரு அலையாக வந்து என்னை கரைக்கு கொண்டு வந்து சேர்த்து இருக்கிறார்.
நான் மறுபடியும் பிறந்து வந்தது போல் உணர்கிறேன். இரண்டாவது ஜென்மம்".
இவ்வாறு கோபிகா கூறினார்.
நன்றி விடுப்பு : .

----------