Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ரவா பால் கொழுக்கட்டை
#1
ரவா பால் கொழுக்கட்டை

தேவையான பொருட்கள் :

கடலை மாவு அரை கப்
ரவை 300 கிராம்
பால் 1 லிட்டர்
சர்க்கரை 500 கிராம்
முந்தரி 50 கிராம்
ஏலக்காய் 5
நெய் 100 கிராம்
உப்பு 2 சிட்டிகை

செய்முறை :

வாயகன்ற ஒரு பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு கடலைமாவைப் பச்சைவாசனை போகும் வரை வறுத்துக் கொண்டு கொஞ்சம் பால் விட்டுக் கரைத்து வைத்துக் கொள்ளவும். ஏலக்காயை தோல் நீக்கிப் பொடித்துக் கொள்ளவும். முந்திரியை நெய்யில் வறுத்து வைக்கவும். ரவையுடன் ஒரு சிட்டிகை உப்பும், ஒரு கரண்டி சர்க்கரையும் சேர்த்து முறுக்கு மாவு போல் பிசைந்து ஊற வைக்கவும். ஒரு லிட்டர் பாலில் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும், கொதிக்க ஆரம்பித்தவுடன் கரைத்து வைத்துள்ள கடலை மாவுக் கரைசலை ஊற்றி அடிபிடிக்காமல் கிளறி விடவும். கொதிக்கும் பொழுது தீயைக் குறைத்துக் கொண்டு பிசைந்து வைத்துள்ள ரவையை முறுக்கு குழலில் தேன்குழல் அச்சை போட்டு, ஒவ்வொரு ஈடாக கொதிக்கும் பாலில் பிழிந்து விடவும். ஒரு ஈடு வெந்து மேலே வந்தவுடன், அடித்த ஈடு பிழியவும். எல்லா முறுக்குத் துண்டுகளும் பிழிந்து மேலே மிதந்து வந்த பிறகு ஏலக்காய் வறுத்த முந்திரி, சர்க்கரை நன்கு கரைந்து கொதித்த பிறகு இறக்கி வைத்து ஒரு சிட்டிகை உப்பு, மீதமுள்ள நெய்யைச் சேர்த்து ஆறிய பின்பு பரிமாறவும். ரவா பால் கொழுக்கட்டை சாப்பிட புதுவிதமாகவும் சுவையாகவும் இருக்கும். பாலுக்கு பதிலாக தேங்காய்பால் சேர்த்தும் செய்யலாம். தேங்காய் பால் சேர்த்தால் வெல்லம் சேர்க்க வேண்டும். அப்போது தான் சுவை கூடுதலாக இருக்கும்.
<b> .. .. !!</b>
Reply


Messages In This Thread
ரவா பால் கொழுக்கட்டை - by Rasikai - 07-24-2005, 03:46 PM
[No subject] - by கீதா - 08-27-2005, 08:29 PM
[No subject] - by Rasikai - 08-27-2005, 08:44 PM
[No subject] - by கீதா - 08-27-2005, 10:02 PM
[No subject] - by Rasikai - 08-27-2005, 10:08 PM
[No subject] - by கீதா - 08-28-2005, 03:12 PM
[No subject] - by Rasikai - 08-28-2005, 03:33 PM
[No subject] - by கீதா - 08-28-2005, 05:32 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)