07-23-2005, 07:59 PM
Mathan Wrote:படங்களை பார்க்கும் போது விமானம் தரையுடன் உராய்ந்து கொண்டு கிளம்புவதை போன்ற ஒரு உணர்வை தருகின்றது. படங்களுக்கு நன்றி.
ஆம் மதன் உங்கள் அவதானிப்புச் சரியானது.
இதை Tail strike test என்று சொல்வார்கள்.
அதாவது விமானி விமானத்தை மேலெழுப்பும் போது எவ்வளவு அதி கூடிய கோணத்தில் திருப்ப மடியும் என்பதையும்,அவ்வாறு அதி கூடிய கோண எல்லையை தாண்டினால் என்ன விதமான சேதம் விமானத்தின் அடிப்பாகத்தில் உள்ள கட்டமைப்புக்களுக்கு ஏற்படும் என்பதை ஆராய்வதே இந்த பரிட்சார்த்த ஓட்டத்தின் நோக்கம்.அதனாலேயே இதனை அளப்பதற்கான கருவி அடிப்பாகத்தில் பூட்டப்பட்டுள்ளது,இதில் இருந்துதான் அந்த தீப்பொறி வெளிக்கிளம்பியது.

