07-23-2005, 04:44 PM
கலவை பருப்புப் பொடி
துவரம் பருப்பு 100 கிராம்
பாசிப்பருப்பு 100 கிராம்
உளுத்தம் பருப்பு 100 கிராம்
மிளகாய் வற்றல் 6
பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை
உப்பு தேவையான அளவு
எண்ணெய் சிறிதளவு
வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் மிளகாயையும் பெருங்காயத் தூளையும் போட்டு வறுக்கவும்.
இரண்டு நிமிடங்கள் நன்கு வறுத்த பிறகு பருப்புகள் அனைத்தையும் போட்டு பச்சை வாசனை போகும் வரை நன்கு வறுக்கவும்.
வறுத்தபின்பு இறக்கி நன்கு ஆறவிடவும். ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு தேவையான உப்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
இந்த பொடி இருந்தால் ஆத்துக்காரர் மூன்று தோசை அதிகமாகவே சாப்பிடுவார்.