Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இனிப்பு வெட்டுகுத்து [ கட்லட்] / இனிப்பு இட்லி
#1
<b>இனிப்பு கட்லட்</b>

தேவையான பொருட்கள்

பயத்தம் பருப்பு - 1கப்
தேங்காய்பால் - 1/4கப்
பாதாம் - 6
முந்திரி - 6
மைதாமாவு - 100 கிராம்
சோளமாவு - 150 கிராம்
வெள்ளை எள் - 2 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 100 கிராம்
நெய் - 4 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணை - பொறிக்க
ரஸ்க் தூள் - 50 கிராம்

செய்முறை

பயத்தம் பருப்பை நன்றாக வேகவைத்து நீர் வடித்து மசித்து வைத்துக்கொள்ளவும். நான் ஸ்டிக் கடாயில் தேங்காய் பாலுடன் மசித்த பருப்பை சேர்த்து நன்றாக கிளறவும். நெய்யில் பாதாம், முந்திரி துண்டுகளை துண்டுகளாக்கி வறுத்து எடுத்து இத்துடன் சேர்த்து நன்கு கலந்து ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாக செய்து கொள்ளவும். மைதாமாவு,சோளமாவு இரண்டினையும் சிட்டிகை அளவு உப்பு சேர்த்து கலந்து பஜ்ஜி மாவு கரைப்பது போல் கெட்டியாக கரைத்து அதில் உருண்டைகளை தோய்த்து எடுத்து எள், ரஸ்க்தூள் இரண்டிலும் புரட்டி எடுத்து எண்ணையில் பொரித்து எடுத்துக்கொள்ளவும். புதுச்சுவையுடன் குழந்தைகளுக்கு ஏற்ற மாலை நேர ஸ்நாக்ஸ் புதுப்பெயருடன் தயார்.




நன்றி தமிழோவியம்
[b][size=18]
Reply


Messages In This Thread
இனிப்பு வெட்டுகுத்து [ கட்லட்] / இனிப்பு இட்லி - by kavithan - 07-22-2005, 10:42 PM
[No subject] - by kavithan - 07-22-2005, 10:43 PM
[No subject] - by vasisutha - 07-23-2005, 02:05 AM
[No subject] - by kavithan - 07-23-2005, 03:31 AM
[No subject] - by வெண்ணிலா - 07-23-2005, 09:22 AM
[No subject] - by Niththila - 07-23-2005, 12:33 PM
[No subject] - by Mathan - 07-23-2005, 03:34 PM
[No subject] - by Rasikai - 07-23-2005, 05:15 PM
[No subject] - by அனிதா - 07-23-2005, 06:57 PM
[No subject] - by Thala - 07-23-2005, 07:18 PM
[No subject] - by narathar - 07-23-2005, 08:51 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)