10-10-2003, 09:51 AM
மாற்று படம் கடந்த ஞாயிறு இரண்டாம் காட்சி 8.30 மணிக்கு பார்தேன் முதல் காட்சிக்கு நிறைய சனம் ஆனால் இரண்டாம் காட்சிக்கு ஒரு 80பேர் வந்திரிந்தினம். அமைதியாக இருந்து பார்க்க முடிந்தது. படம் ஆரம்பத்தில் ஒரே குழப்பம் அனுபவமின்மை தெரிகிறது, ஆனால் பார்க்கும் போது சலிப்பு தட்டவில்லை காரணம் அனைவரினதும் நடப்பு இயற்கையாக மிகப் பிரமாதமாக இருந்தது. கமரா பேசாவிட்டாலும் படப்பிடிப்பு முதல் அகுபவத்திற்கு பரவாயில்லை என்றே கூற வேண்டும்.
லண்டனில் தயாரித்து வெளி வந்த படங்கள் அனைத்தையும், பரிசில் தயாரித்து வெளிவந்த சில படங்களை பார்த்திருக்கிறேன். அவற்றுடன் ஒப்பிட்டால் மாற்று எங்கேயோ போய்விட்டது. ஆனால் இந்திய மற்றும் ஆங்கில படங்களுடன் மாற்றை ஒப்பிட முடியாவிட்டாலும் இவர்கள் அவர்கைள விஞ்சும் நாள் தொலைவில் இல்லை என்று கூறலாம்.
குறிப்பாக தொழில் நுட்ப விடயங்களில் இன்னும் கொஞ்சம் அக்கறை காட்டியிருந்தால் படம் சுப்பர். அரங்கில் படம் பார்த்த அனைவரும் இது லண்டன் படம் தானே என்று ஒரு அலுப்புடன் தான் படத்தை பார்க்க ஆரம்பிந்தோம் ஆனால் படம் தொடங்கி முடியும் வரை விறுவிறுப்புடன் கதை நகர்ந்தது. ஆரம்பத்தில் விறுவிறுப்பு கொஞ்சம் கூடித்தான் போட்டுது, பக்கத்தில் இருந்தவர் அடிக்கடி என்னை கேள்வி கேட்டதில் அது புரிந்து ஆனால் படம் அரைவாசிக்கு போய் விறுவிறுப்பு முடிச்சு அவிண்டதும் படம் எம்மை அசைய விடவில்லை.
பாடல் காடசி இயல்பாக எடுத்திருக்கிறார்கள் ஆனால் காட்சிகள் போதாது, இன்னும் அதிகமாக்கியிருக்கலாம். படத்தில் வன்முறை கொஞ்சம் அதிகம் ஆனால் அது பற்றி நான் படம் முடிந்ததும் இயக்கியவரிடம் கேட்ட போது உண்மைக்கதையில் நடந்த வன்முறையை போட்டிருந்தால் ஓருவரும் படம் பாக்க வந்திருக்க மாட்டினம் என்று அவர் நகைச்சுவையாக சொன்னபோதும் உண்மை கதை என்றதும் அது நெஞ்சில் ஒரு கனத்தை ஏற்படுத்த தவறவில்லை.
பாதிக்கப்பட்ட பெண்ணாக நடத்தவர் நல்லாக முத்திரை பதித்து விட்டார். ஆனால் திரைப்பட வெளியீட்டில் அவரை ஏனோ காண முடியவில்லை. இசை மிக நன்றாக இருக்கிறது. காட்சிக்கேற்ப இசையாக இருந்தாலும் சில இடங்களில் இசை கூடி வசனங்களை கேட்க முடியாது செய்து விட்டது. அடுத்த வெளியீட்டுக்கு திருத்துவதாக உறுதி செய்தனர்.
பல விடயங்களை ஒரே படத்தில் சொல்ல முனைந்தது ஒரு தவறு. இந்த படத்தில் நான்கு படங்களுக்கான கதையுள்ளது. முதல் படம் என்பதால் மன்னிக்கலாம். ஆனால் இது புலம் பெயரந்த அனைவரும் பார்தது ரசிக்க கூடிய படம். சிரிக்கவும் அழவும் செய்த ஒரு ஜனரஞ்சகமான படம். படம் கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் ஆனால் நேரம் போனது தெரியவில்லை. இன்னும் கொஞ்சம் போட்டிருக்கலாம் என்று என் அருகில் இருந்தவர் சொன்னபோது மாற்று பட குழுவுக்கு கிடைத்த ஒரு வெற்றி என்றுதான் புரிந்தேன். யாரும் எதிர்பாராத விதத்தில் நம்மவர் புலம் பெயர் மண்ணில் தயாரித்த முதல் படம் நம்பிக்கை தருகிறது.
இவ்விமர்சனம் காந்தனால் (இங்கு அங்கத்துவராக உள்ளார்) எனக்கு அனுப்பப்பட்டது. - மோகன்