07-21-2005, 09:09 PM
Quote:உன் மகன் பிறந்த நேரம் சரியில்லை' என ஜோசியர் கூறியதை நம்பி, தனது ஒன்பது மாத ஆண் குழந்தையைச் சரமாரியாக அடித்தே கொன்றார்' ஓட்டல் உரிமையாளர்.
கோவையில் உள்ள உடையாம்பாளையம், எம்.ஜி.ஆர்., வீதியில் வசிப்பவர் ரகுபதி (29). ஓட்டல் உரிமையாளர். இவருக்கும் காடம்பாறையைச் சேர்ந்த சந்திரகலா (26) என்பவருக்கும் 2003ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களது மகன் விக்னேஷ்வரன். ஒன்பது மாத குழந்தை. இவன் பிறந்த பிறகு ரகுபதி நடத்தி வந்த ஓட்டல் நஷ்டத்தில் வீழ்ந்தது. இதையடுத்து மகனின் ஜாதகத்தை, தனது குடும்ப ஜோசியரிடம் காண்பித்து, "எதிர்கால பலன்' கேட்டுள்ளார் ரகுபதி. அதற்கு அந்த ஜோசியர், <b>"உன் மகன் பிறந்த நேரமே சரியில்லை</b>, ஒன்று <b>நீ இருப்பாய்</b>, அல்லது <b>உன் மகன் இருப்பான்</b>. <b>இருவரில் யாராவது ஒருவர் தான் உயிருடன் இருக்க முடியும் </b>என ஜாதகம் சொல்கிறது. இந்த ஆபத்தில் இருந்து நீ விடுபட வேண்டுமெனில், ஒரு ஆண்டு வரை <b>மகனை பிரிந்து இருக்க வேண்டும்</b>' என கூறினார்.
<b>சரி ஜோசியர் சொன்னது சரியா தான் நடந்திருக்கு.. </b>ஆனால் அவர் சொன்னதை வீட்டில் கூறி ஒரு வருடம் ஆவது அவர் கூறியபடி நடந்திருக்கலாமே. அதையும் செய்யவில்லை. ஜோசியத்தில் நம்பிக்கை இருந்தால் அதில் கூறிய எல்லாத்தையும் கவனிக்க வேண்டும் இல்லாவிடில் அதில் எதனையும் கவனிக்க கூடாது.
[b][size=18]

