![]() |
|
"பிறந்த நேரம் சரியில்லை' என்றார் ஜோசியர் : 9 மாத குழந்தையை அ - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: "பிறந்த நேரம் சரியில்லை' என்றார் ஜோசியர் : 9 மாத குழந்தையை அ (/showthread.php?tid=3876) |
"பிறந்த நேரம் சரியில்லை' என்றார் ஜோசியர் : 9 மாத குழந்தையை அ - SUNDHAL - 07-21-2005 உன் மகன் பிறந்த நேரம் சரியில்லை' என ஜோசியர் கூறியதை நம்பி, தனது ஒன்பது மாத ஆண் குழந்தையைச் சரமாரியாக அடித்தே கொன்றார்' ஓட்டல் உரிமையாளர். கோவையில் உள்ள உடையாம்பாளையம், எம்.ஜி.ஆர்., வீதியில் வசிப்பவர் ரகுபதி (29). ஓட்டல் உரிமையாளர். இவருக்கும் காடம்பாறையைச் சேர்ந்த சந்திரகலா (26) என்பவருக்கும் 2003ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களது மகன் விக்னேஷ்வரன். ஒன்பது மாத குழந்தை. இவன் பிறந்த பிறகு ரகுபதி நடத்தி வந்த ஓட்டல் நஷ்டத்தில் வீழ்ந்தது. இதையடுத்து மகனின் ஜாதகத்தை, தனது குடும்ப ஜோசியரிடம் காண்பித்து, "எதிர்கால பலன்' கேட்டுள்ளார் ரகுபதி. அதற்கு அந்த ஜோசியர், "உன் மகன் பிறந்த நேரமே சரியில்லை, ஒன்று நீ இருப்பாய், அல்லது உன் மகன் இருப்பான். இருவரில் யாராவது ஒருவர் தான் உயிருடன் இருக்க முடியும் என ஜாதகம் சொல்கிறது. இந்த ஆபத்தில் இருந்து நீ விடுபட வேண்டுமெனில், ஒரு ஆண்டு வரை மகனை பிரிந்து இருக்க வேண்டும்' என கூறினார். ஜோசியரை சந்தித்து விட்டு வந்ததில் இருந்தே, ரகுபதி தனது மகன் மீது மிகுந்த கோபத்தில் இருந்தார். சில மாதங்களுக்கு முன் திடீரென தனது மகனை காடம்பாறைக்கு அழைத்துச் சென்று மாமனார் வீட்டில் விட்டு விட்டு வந்து விட்டார். சமீபத்தில் காடம்பாறைக்குச் சென்ற இவரது மனைவி சந்திரகலா, தனது மகனை அழைத்துக் கொண்டு கோவை வந்தார். கடந்த 17ம் தேதி மதியம் வீட்டுக்கு குடிபோதையில் வந்த ரகுபதி, கட்டிலில் துõங்கிக் கொண்டிருந்த மகனை கண்டார். "இவனால் தான் எல்லாம் வந்தது' எனக் கூறி மகனின் முகம், கழுத்து உள்ளிட்ட இடங்களில் சராமாரியாக தாக்கியுள்ளார். காலை பிடித்து துõக்கி குழந்தையை கட்டிலில் அடிக்க, மனைவி கதறியபடியே தடுத்துள்ளார். எனினும், இவர் கோபம் தணியாமல் மீண்டும், மீண்டும் தாக்கியதால் குழந்தை கதறியபடியே மயக்கம் அடைந்தது. அருகில் இருந்தவர்கள் இக்குழந்தையை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்க போதிய பண வசதியில்லாததால், குழந்தையை பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த விக்னேஷ்வரன் நேற்று இறந்தான். தந்தை ரகுபதியை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் கைது செய்தார். போலீசாரிடம் இவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், "எல்லாம் ஜோசியத்தால் வந்த வினை. ஜோசியரின் பேச்சை நம்பி என் குழந்தையை அநியாயமாக நானே கொன்று விட்டேன்' எனத் தெரிவித்துள்ளார். - அருவி - 07-21-2005 :roll: :roll: :roll: - வெண்ணிலா - 07-21-2005 Quote:"எல்லாம் ஜோசியத்தால் வந்த வினை. ஜோசியரின் பேச்சை நம்பி என் குழந்தையை அநியாயமாக நானே கொன்று விட்டேன் தான் பெற்ற குழந்தையை கொலை செய்து விட்டு ஜோசியத்தின் மீது குற்றச்சாட்டா? :evil: :twisted: - Niththila - 07-21-2005 இவையெல்லாம் எதுக்கு பிள்ளையை பெற வேணும் :roll: :evil: :twisted: - Mathan - 07-21-2005 ஜோசியம் மற்றும் குடிபோதையால் வந்த வினை :evil: - tamilini - 07-21-2005 அடப்பாவிகளா உருப்படாத ஜோசியம். ஒ ரு உயிரை வாங்கிட்டுதே..
- SUNDHAL - 07-21-2005 ஜோசியத்த திட்டி சாத்திரி அங்கிளிட்ட வாங்கி கட்ட போறீங்கள் எல்லாரும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 07-21-2005 ஏன் ஈழத்தமிழர்கள் மட்டும் என்னவாம்...செவ்வாய் வியாழன் சனி என்று குறிப்பும் கையுமா அலையாத ஆக்களோ...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> hock:
- tamilini - 07-21-2005 Quote:ஏன் ஈழத்தமிழர்கள் மட்டும் என்னவாம்...செவ்வாய் வியாழன் சனி என்று குறிப்பும் கையுமா அலையாத ஆக்களோ...!ஆமா ஆமா அலையிற ஆக்கள் தான்.. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Malalai - 07-21-2005 மனித இயலாமையின் வெளிப்பாடு தான் மற்ற காரணிகள் மீது சுமத்தப்படும் பழி இந்த விடயத்தில் சாத்திரம்...மனித நேயத்தை குழி தோண்டி புதைச்சிட்டு..சும்மா இருக்கிற சாத்திரத்தில் பழி போடுவது...வியப்புக்குரியது.......:wink: - vasisutha - 07-21-2005 Quote:ஏன் ஈழத்தமிழர்கள் மட்டும் என்னவாம்...செவ்வாய் வியாழன் சனி என்று குறிப்பும் கையுமா அலையாத ஆக்களோ சரியா சொன்னீங்கள் குருவி.. படித்த மக்கள் கூட இப்படி மூடத்தனமான நம்பிக்கைகளில் மூழ்கிஇருக்கும் போது என்னத்தை சொல்ல. :roll: - MUGATHTHAR - 07-21-2005 Quote:படித்த மக்கள் கூட இப்படி மூடத்தனமான நம்பிக்கைகளில் இருந்தாலும் தம்பி நான் கொழும்புக்கு போணமூட்டம் காண்டம் பார்க்கவெண்டு ஒருஹோட்டலுக்குப் போனன் என்ன சனம் பெரிய பெரிய காரிலை எல்லாம் ஆட்கள் வருகினம் கூடியவரை இந்த வெளிநாடு போற சனம்தான் நானும் கஸ்டப்பட்டுப் பாத்தன் சும்மா சொல்லகூடாது என்ரை பேரிலையிருந்து தொழில் என்ரை மனுசின்ரை பேர் எல்லாம் அச்சுப் போல அந்த ஓலைச்சுவடைப் பாத்துப் படிக்கிறான் எனக்கு தலையை சுத்திச்சுது என்னண்டு அப்பிடிச் சொன்னான் எனக்கு விளங்கடீவயில்லையப்பு? - kavithan - 07-21-2005 Quote:உன் மகன் பிறந்த நேரம் சரியில்லை' என ஜோசியர் கூறியதை நம்பி, தனது ஒன்பது மாத ஆண் குழந்தையைச் சரமாரியாக அடித்தே கொன்றார்' ஓட்டல் உரிமையாளர். <b>சரி ஜோசியர் சொன்னது சரியா தான் நடந்திருக்கு.. </b>ஆனால் அவர் சொன்னதை வீட்டில் கூறி ஒரு வருடம் ஆவது அவர் கூறியபடி நடந்திருக்கலாமே. அதையும் செய்யவில்லை. ஜோசியத்தில் நம்பிக்கை இருந்தால் அதில் கூறிய எல்லாத்தையும் கவனிக்க வேண்டும் இல்லாவிடில் அதில் எதனையும் கவனிக்க கூடாது. - Danklas - 07-24-2005 மவனே சாத்திரி இந்தபக்கத்துக்கு மாத்திரம் வந்திராதையடி... சரிமாரியாக வெட்ட காத்துக்கொண்டு இருக்கிறாங்க... :evil: :evil: :evil: :oops: - sathiri - 07-24-2005 நீங்கள் என்னதான் எழுதினாலும் நான் சரியான பிசி 6 மாதத்துக்கு முதல் அப்பொயின்மனற் எடுத்தால்தான் என்னட்டை சாத்திரம் பாக்கலாம் ஏனெண்டா உலகத்திலை நிறைய ஏமாந்ததமிழர் இருக்கினம் அவை இருக்குமட்டும் என்னை அசைக்கேலாது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|