07-21-2005, 03:03 AM
உன் மகன் பிறந்த நேரம் சரியில்லை' என ஜோசியர் கூறியதை நம்பி, தனது ஒன்பது மாத ஆண் குழந்தையைச் சரமாரியாக அடித்தே கொன்றார்' ஓட்டல் உரிமையாளர்.
கோவையில் உள்ள உடையாம்பாளையம், எம்.ஜி.ஆர்., வீதியில் வசிப்பவர் ரகுபதி (29). ஓட்டல் உரிமையாளர். இவருக்கும் காடம்பாறையைச் சேர்ந்த சந்திரகலா (26) என்பவருக்கும் 2003ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களது மகன் விக்னேஷ்வரன். ஒன்பது மாத குழந்தை. இவன் பிறந்த பிறகு ரகுபதி நடத்தி வந்த ஓட்டல் நஷ்டத்தில் வீழ்ந்தது. இதையடுத்து மகனின் ஜாதகத்தை, தனது குடும்ப ஜோசியரிடம் காண்பித்து, "எதிர்கால பலன்' கேட்டுள்ளார் ரகுபதி. அதற்கு அந்த ஜோசியர், "உன் மகன் பிறந்த நேரமே சரியில்லை, ஒன்று நீ இருப்பாய், அல்லது உன் மகன் இருப்பான். இருவரில் யாராவது ஒருவர் தான் உயிருடன் இருக்க முடியும் என ஜாதகம் சொல்கிறது. இந்த ஆபத்தில் இருந்து நீ விடுபட வேண்டுமெனில், ஒரு ஆண்டு வரை மகனை பிரிந்து இருக்க வேண்டும்' என கூறினார்.
ஜோசியரை சந்தித்து விட்டு வந்ததில் இருந்தே, ரகுபதி தனது மகன் மீது மிகுந்த கோபத்தில் இருந்தார். சில மாதங்களுக்கு முன் திடீரென தனது மகனை காடம்பாறைக்கு அழைத்துச் சென்று மாமனார் வீட்டில் விட்டு விட்டு வந்து விட்டார். சமீபத்தில் காடம்பாறைக்குச் சென்ற இவரது மனைவி சந்திரகலா, தனது மகனை அழைத்துக் கொண்டு கோவை வந்தார்.
கடந்த 17ம் தேதி மதியம் வீட்டுக்கு குடிபோதையில் வந்த ரகுபதி, கட்டிலில் துõங்கிக் கொண்டிருந்த மகனை கண்டார். "இவனால் தான் எல்லாம் வந்தது' எனக் கூறி மகனின் முகம், கழுத்து உள்ளிட்ட இடங்களில் சராமாரியாக தாக்கியுள்ளார். காலை பிடித்து துõக்கி குழந்தையை கட்டிலில் அடிக்க, மனைவி கதறியபடியே தடுத்துள்ளார். எனினும், இவர் கோபம் தணியாமல் மீண்டும், மீண்டும் தாக்கியதால் குழந்தை கதறியபடியே மயக்கம் அடைந்தது.
அருகில் இருந்தவர்கள் இக்குழந்தையை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்க போதிய பண வசதியில்லாததால், குழந்தையை பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த விக்னேஷ்வரன் நேற்று இறந்தான். தந்தை ரகுபதியை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் கைது செய்தார். போலீசாரிடம் இவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், "எல்லாம் ஜோசியத்தால் வந்த வினை. ஜோசியரின் பேச்சை நம்பி என் குழந்தையை அநியாயமாக நானே கொன்று விட்டேன்' எனத் தெரிவித்துள்ளார்.

oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............