Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கண்ணுபடப்போகுதய்யா
#6
Ampalathar Wrote:எல்லாருடை வாழ்த்துக்களுக்கும் ஆதரவுக்கும் நன்றிகள். வயசுபோன காலத்திலை மறதியும் கொஞ்சம் அதிகம்தானே. அதாலைதான் வாழ்த்தி எழுதும்போது சிலரது பெயர்கள் விடுபட்டுப்போச்சு, ஆனாலும் அதாலைமட்டும் அவர்கள் குறைந்தவர்கள் என்று ஆகிவிடாது. அவர்கள் அய்யாவைக் கோபிக்கமாட்டினம் என நினைக்கிறன.;. முன்பு ஒருதடவையும் எழுதினனான் குருவிகள் கொத்துவதுகூட அலாதியான இன்பமாகத்தான் இருக்கிறது. அஜீவன் ஈழத்துக் குறும்பட வரலாற்றில் மட்டுமல்ல அதுக்கு மேலையும் உலகளவில் நிலைத்து நிற்கப்போறவர். உங்களையெல்லாம் விமர்சிக்கிற அளவுக்கு எனக்குத் தகுதியில்லை ஏதோ என்ரை அறிவுக்கு எட்டியவரைக்கு அப்;பப்ப எதாவது உளறிவைப்பன். மன்னிச்சுக்கொள்ளுங்கோ நான் போலிக்குச் சொல்லவில்லை. யாழின் அபிமானியாகி இரண்டு வருடங்கள் இருக்குமென நினைக்கிறன். இந்த இடைப்பட்ட காலத்திலை அதன் வளர்ச்சி அசுர வளர்ச்சிதான். அதுமட்டுமில்லை ஆக்கதாரர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு இந்தக் குறுகிய காலத்திலேயே தங்கள் எழுத்தின் வலிமையும், சமுதாயம்பற்றிய பொறுப்புணர்வு ஏற்பட்டிருப்பதுவும், எழுத்தில் மெருகேறியிருப்பதும் நன்கு தெரிகிறது. விபரம் தெரிஞ்சவை சோழியான் சொன்ன விசயத்தையும் கவனத்தில் எடுங்கோ. நீங்களெல்லாம் வாழுற காலத்திலை வாழக் கொடுத்துவச்சிருக்க வேணும்.

<span style='font-size:20pt;line-height:100%'>ஐயா அம்பலத்தார் அவர்களே உங்களால் வளர்ந்து வரும் கலைஞர்கள்-எழுத்தாளர்கள் வாழ்த்தப் படுவதே பெரும் பேறு.

வாழ்த்துவதற்கு வயது தேவையில்லை
மனசிருந்தாலே போதும் என்பார்கள்.

ஒரு குடும்பத்தில் யாரை வாழ்த்தினாலும் அது அக் குடும்பத்தையே சாரும். அது யாருக்கு கிடைக்கிறது என்பது பெரிதல்ல.

நாங்கள் படிக்கும் அல்லது படித்த எமது கல்லுாரிக்கு ஒரு புகழ் கிடைத்தால் அதில் எமக்கும் பெருமை இருக்கிறது.

ஒரு குடும்பத்தில் ஒருவரது வெற்றி அக் குடும்பத்தையே பெருமைப்பட வைக்கிறது.

அதுபோல் நமது நாடு,இனம்,மொழி,விளையாட்டுக் கழகம்........................... இப்படி தொடர்ந்து கொண்டே போகலாம். இங்கெல்லாம் நான் வெல்லவோ , பாராட்டுப் பெறவோ என்று சுயநலமாக நினைக்கவே கூடாது. இங்கே நாங்கள் நல்லதை செய்ய வேண்டும் என்பதை மட்டும் கருத்தில் கொண்டால் போதும்.

அங்கே நாங்கள் வெல்வோம், பாராட்டுப் பெறுவோம். அந்த நாங்கள் என்ற கூண்டுக்குள் நானும் அடக்கம்தானே?

நான் என்ற ஒருவன் கை தட்டி ஆர்ப்பரிப்பதை விட , நாங்கள் சேர்த்து தட்டினால் மட்டுமே கரகோசமாகும். இல்லாவிடில் அது ஒரு கை ஓசைதான் இல்லையா?

யாழ் இணையத்தில் நல்ல செய்திகள் - கருத்துகள் - கருத்து முரண்பாடுகள் - கவிதைகள் - ......................................... இப்படி தொடர்ந்தால் நமது களத்துக்குள் பார்வையாளர்கள் வருவார்கள்.
இல்லாவிடில் வேறு பக்கம் போய் விடுவார்கள்.............. இது மாற்ற முடியாத நியதி.

எமது களத்தில் பெண்கள் மிகமிகக் குறைவு. அதற்கான காரணத்தை நாமேயறிவோம். குழந்தைகள் வரவு எத்தனை என்பது தெரியாது.

நாம் வார்த்தை பிரயோகங்களை, வசன நடைகளை ஒரு மக்கள் ஊடகமாக நினைத்து பகிர்ந்து கொள்ள வேண்டுமே தவிர,தான் தோன்றித் தனமாக முன் வைப்பது சரியா என்பதை நமக்குள் நாமே எழுப்பிக் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய கேள்வி என்று கருதுகிறேன்.

யாழ் களத்துக்குள் வந்து எழுதும் அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். களத்துக்கு களங்கம் வந்து விடக் கூடாது என்று ஒவ்வொரு நொடியும் வந்து செல்லும் மோகன் மற்றும் அனைத்து முகம் தெரியா உறவுகளது பணி மிக மிக கடுமையானது.

அவர்கள் எம்மால் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

கருத்துகள் வேறுபட்டால் மட்டுமே சுவை.அல்லது சப்பென்றாகி விடும். கருத்துகள் வெவ்வேறாகலாம் அதற்காக ஒருவர் சரியென்றால் தவறென்றும், தவறென்றால் சரியென்றும் வாதிடும் போது அது பணத்துக்காக பொய்யுரைக்கும் வக்கீல் போன்ற நிலைக்கு நம்மை நாமே தள்ளி விடுவது போலாகும்.

தெரியாத ஒன்றை வேறொருவர் சொல்லும் போது நாம் அதைத் தெரிந்து கொள்கிறோம்............... அதற்காக நான் எங்கோ கேட்ட ஒன்றையே விடாக் கண்டனாக வாதிடுவது எந்த வித்தில் முறையாகும்?

நம்மைத்தான் நமது எதிர்கால சந்ததியும் பின் பற்றும். எமது சுயலாபத்துக்காக தவறை சரியென்பதோ, சரியை தவறென்பதோ இன்று இல்லாவிடினும், நாளை வெளிச்சத்துக்கு வரும்...............

இங்கு நமக்குள் நடப்பது நட்பு ஒன்றை உருவாக்கும் ,தெரியாததை தெரிந்து கொள்ள நடக்கும் ஒரு மோதல்.

இங்கே எத்தனை பேரை நமக்கு நேரடியாகத் தெரியும்?

புலம் பெயர்ந்து சோகங்களோடும், சுமைகளோடும் வாழும் நமக்கு யாழ் களம் ஆதரவாக இருக்கிறது.

இக்கால கட்டத்திலாவது முகம் தெரியாத ஒரு சில நண்பர்களை உருவாக்கிக் கொள்ளலாமே..............

ஒருவருக்கு கெடுதல் செய்து விட்டு நம்மால் துாங்க முடியுமானால் அது ஒரு வித மனநோய். ஒருவரது மகிழ்ச்சிக்கு வித்திட முடிந்தால் நாம் பிறந்தற்காக எதாவது இன்று செய்தோமேயென்று துாங்கலாம். அப்படியான துாக்கத்தில் வரும் சாவு கூட மகிழ்ச்சியானது......................

ஐயா, தங்கள் எழுத்துப் பொறிக்கு நானும் வசமாகி விட்டேன்.

யாழ்கள குடும்பத்தின் சார்பில் நன்றிகள் ஐயா......</span>

தாழ்மையுடன்
உங்கள் முகம் தெரியா,
அஜீவன்
Reply


Messages In This Thread
[No subject] - by sOliyAn - 10-09-2003, 01:25 AM
[No subject] - by nalayiny - 10-09-2003, 09:17 AM
[No subject] - by Paranee - 10-09-2003, 01:21 PM
[No subject] - by ampalathar - 10-09-2003, 03:08 PM
[No subject] - by AJeevan - 10-09-2003, 05:18 PM
[No subject] - by kuruvikal - 10-09-2003, 06:12 PM
[No subject] - by tamilchellam - 10-09-2003, 08:04 PM
[No subject] - by ampalathar - 10-09-2003, 08:38 PM
[No subject] - by tamilmaravan - 10-10-2003, 02:02 PM
[No subject] - by Mathivathanan - 10-10-2003, 02:17 PM
[No subject] - by ampalathar - 10-10-2003, 08:25 PM
[No subject] - by Mathivathanan - 10-10-2003, 08:38 PM
[No subject] - by ampalathar - 10-10-2003, 08:41 PM
[No subject] - by Mathivathanan - 10-11-2003, 11:43 AM
[No subject] - by Paranee - 10-11-2003, 01:37 PM
[No subject] - by Mathivathanan - 10-11-2003, 04:14 PM
[No subject] - by kuruvikal - 10-11-2003, 08:21 PM
[No subject] - by Mathivathanan - 10-11-2003, 08:31 PM
[No subject] - by kuruvikal - 10-11-2003, 08:37 PM
[No subject] - by Mathivathanan - 10-11-2003, 09:04 PM
[No subject] - by kuruvikal - 10-11-2003, 09:10 PM
[No subject] - by Mathivathanan - 10-11-2003, 09:35 PM
[No subject] - by sOliyAn - 10-12-2003, 12:53 AM
[No subject] - by kuruvikal - 10-12-2003, 09:41 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)