07-19-2005, 02:53 AM
கனடா நாட்டு இளைஞர் ஹைதர் முபாரக். இவர் ஒட்டாவா நகரில் மணிக்கு 195 கி.மீ. வேகத்தில் காரை ஓட்டிக் கொண்டு சென்றார். அனுமதிக்கப்பட்ட வேகமான மணிக்கு 100 கி.மீ. வேகத்தை விட அதிகமாகச் சென்றதால் போலீசார் அவரை மடக்கிப்பிடித்தனர். கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. உடற்பயிற்சிக் கூடத்துக்குச் செல்வதற்காக புறப்பட்டேன். புரோட்டீன் பானத்தை அளவுக்கு அதிகமாக குடித்தேன். அது வயிற்றைக் கலக்கியது. `பாத்ரூம்' போக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. அதனால் தான் வேகமாகப் போனேன் என்று கூறினார். இந்தக் கதையை நம்ப நீதிபதி தயாராக இல்லை. அவர் 33 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். 30 நாட்கள் கார் ஓட்டவும் தடை விதித்தார். இந்தத் தகவல் கிடைத்ததும். இன்சூரன்ஸ் கம்பெனி இவர் ஆபத்தானவர் என்று கூறி அடுத்த முறை புதியகார் வாங்கும்போது இவர் காரை இன்சூர் செய்வதற்கு ஆண்டு ஒன்றுக்கு 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று கூறி உள்ளது.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

