Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அர்னால்டு அரசியலிலும் வெற்றி!
#1
<img src='http://www.yarl.com/forum/files/arnald.1.jpeg' border='0' alt='user posted image'><span style='font-size:25pt;line-height:100%'>அர்னால்டு அரசியலிலும் வெற்றி!</span>
தமிழ்நாட்டில் நடிகர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று ஒரு பிரிவினரும் நடிகர்கள் நடித்தால் மட்டும் போதும் அரசியலுக்கு வர வேண்டாம் என்று மற்றொறு பிரிவினரும் சண்டை போட்டுக் கொண்டு இருக்க அமெரிக்காவில் சத்தமில்லாமல் கலிபோர்னியா மாகாணத்தின் புதிய கவர்னராக புகழ் பெற்ற ஆங்கில நடிகரும் உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டுள்ள அர்னால்டு சுவாஸ்நேகர் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல நடிகர்களுக்கு அரசியல் மோகம் அமெரிக்காவையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் திரைக்கு வந்த டெர்மினேட்டர் படம் அர்னால்டின் திரையுலக வாழ்வில் மற்றுமொரு மைல்கல் என்று சொல்லலாம். கிட்டதட்ட 1000 கோடியை விழுங்கிய இப்படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்டு பல கோடிகள் லாபம் சம்பாதித்துக் கொடுத்தது.

இந்தப் படத்திற்கு பிறகு அவர் அரசியலில் நுழைந்தார். 56 வயதாகும் அர்னால்டுக்கு கலிபோர்னிய மக்கள் கவர்னர் பதவி கொடுத்து கௌரவித்துள்ளனர். ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த அர்னால்டு அமெரிக்க குடியுரிமை பெற்றவர். டிவி நிருபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகர்களுக்கு அரசியல் மோகம் நம் நாட்டில் தான் அதிகம் என்று நினைத்தவர்களுக்கு அமெரிக்காவே இருந்தாலும் சரி எந்த நடிகர்களாக இருந்தாலும் பதவி மோகம் இருக்கும் என்பது நிஜம்.

திரையில் டெர்மினேட்டராக கலக்கியவர் அரசியலிலும் அது போல கலக்குவாரா?[/size]

நன்றி:www.tamilcinema.com
Reply


Messages In This Thread
அர்னால்டு அரசியலிலும - by AJeevan - 10-08-2003, 09:47 PM
[No subject] - by yarl - 10-09-2003, 06:03 AM
[No subject] - by AJeevan - 10-09-2003, 06:28 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)