![]() |
|
அர்னால்டு அரசியலிலும் வெற்றி! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: அர்னால்டு அரசியலிலும் வெற்றி! (/showthread.php?tid=8012) |
அர்னால்டு அரசியலிலும - AJeevan - 10-08-2003 <img src='http://www.yarl.com/forum/files/arnald.1.jpeg' border='0' alt='user posted image'><span style='font-size:25pt;line-height:100%'>அர்னால்டு அரசியலிலும் வெற்றி!</span> தமிழ்நாட்டில் நடிகர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று ஒரு பிரிவினரும் நடிகர்கள் நடித்தால் மட்டும் போதும் அரசியலுக்கு வர வேண்டாம் என்று மற்றொறு பிரிவினரும் சண்டை போட்டுக் கொண்டு இருக்க அமெரிக்காவில் சத்தமில்லாமல் கலிபோர்னியா மாகாணத்தின் புதிய கவர்னராக புகழ் பெற்ற ஆங்கில நடிகரும் உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டுள்ள அர்னால்டு சுவாஸ்நேகர் வெற்றி பெற்றுள்ளார். தமிழ்நாட்டில் மட்டுமல்ல நடிகர்களுக்கு அரசியல் மோகம் அமெரிக்காவையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் திரைக்கு வந்த டெர்மினேட்டர் படம் அர்னால்டின் திரையுலக வாழ்வில் மற்றுமொரு மைல்கல் என்று சொல்லலாம். கிட்டதட்ட 1000 கோடியை விழுங்கிய இப்படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்டு பல கோடிகள் லாபம் சம்பாதித்துக் கொடுத்தது. இந்தப் படத்திற்கு பிறகு அவர் அரசியலில் நுழைந்தார். 56 வயதாகும் அர்னால்டுக்கு கலிபோர்னிய மக்கள் கவர்னர் பதவி கொடுத்து கௌரவித்துள்ளனர். ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த அர்னால்டு அமெரிக்க குடியுரிமை பெற்றவர். டிவி நிருபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகர்களுக்கு அரசியல் மோகம் நம் நாட்டில் தான் அதிகம் என்று நினைத்தவர்களுக்கு அமெரிக்காவே இருந்தாலும் சரி எந்த நடிகர்களாக இருந்தாலும் பதவி மோகம் இருக்கும் என்பது நிஜம். திரையில் டெர்மினேட்டராக கலக்கியவர் அரசியலிலும் அது போல கலக்குவாரா?[/size] நன்றி:www.tamilcinema.com Re: அர்னால்டு அரசியலிலு - AJeevan - 10-08-2003 <span style='font-size:25pt;line-height:100%'>கலிபோர்னியா கவர்னர் தேர்தல்„ அர்னால்டு அபார வெற்றி </span> <img src='http://www.yarl.com/forum/files/arnald.jpeg' border='0' alt='user posted image'> கலிபோர்னியா கவர்னர் தேர்தலில் வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் ஆதரவாளர்களுடன் கைகுலுக்கும் நடிகர் அர்னால்டு ஸ்வார்ஸ்னெகர். வாஷிங்டன், அக்.9- அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாண கவர்னர் பதவிக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. ஏற்கனவே அங்கு கவர்னராக இருந்த கிரே டேவிஸ் மீது பல ஊழல் புகார்களை கூறப்பட்டன. எனவே அவரை தொடர்ந்து கவர்னராக நீடிக்க விடுவதா, வேண்டாமா என்பதை தீர்மானிக்க தேர்தல் நடத்தப்பட்டது. ஒருவேளை அவர் வேண்டாம் என முடிவானால் புதிய கவர்னரை தேர்ந்து எடுக்கவும் அதோடு சேர்த்து தேர்தல் நடத்தப்பட்டது. கலிபோர்னியா கவர்னர் தேர்தலில் புகழ்பெற்ற ஹhலிவுட் நடிகர் அர்னால்டு, கவர்ச்சி நடிகை மேரிகேரி உள்பட 135 பேர் போட்டியிட்டனர். அர்னால்டுக்கு 56 வயது ஆகிறது. உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்த டெர்மி னேட்டர் ஆங்கிலப்பட கதாநாயகன் அவர். எனவே வாக்கு கேட்டு அவர் சென்ற இடமெல்லாம் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு போட்டியாக கவர்ச்சி நடிகை மேரிகேரியும் பிரசாரத்தில் கலக்கினார். படங்களில் முழு நிர்வாணமாக வரக்கூடிய அவர், பிரசாரத்தின் போது முக்கால் நிர்வாணமாக காட்சியளித்தார். இப்படி பரபரப்பாக நடைபெற்ற பிரசாரம் முடிந்து வாக்குப்பதிவும் நடந்தது. நேற்று ஓட்டு எண்ணிக்கை நடை பெற்றது. இதில் ஏற்கனவே கவர்னராக இருந்த டேவிசை வாபஸ் பெற 56 சதவீதம் ஓட்டுகள் விழுந்திருந்தன. 44 சதவீதம் ஓட்டுகளே அவருக்கு ஆதரவாக கிடைத்திருந்தது. எனவே டேவிஸ் கவர்னர் பதவியை இழந்தார் என அறிவிக்கப்பட்டது. அடுத்து புதிய கவர்னர் யார் என்கிற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்தது. அதில் அர்னால்டுக்கு அதிக எண்ணிக்கை ஓட்டுகள் கிடைத்தன. அவர் புதிய கலிபோர்னியா கவர்னராக தேர்ந்து எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 10 மில்லியன் வாக்காளர்கள் அளித்த மொத்த வாக்குகளில் அர்னால்டுக்கு 52 சதவீதம் ஓட்டுகளும், குரூஸ் பஸ்டாமான் டிக்கு 30 சதவீதம் ஓட்டுகளும், டாம் மெக்லிங்டாக்குக்கு 12 சதவீதம் ஓட்டுகளும் கிடைத்தது. அர்னால்டு வெற்றி பெற்றதும் அவரும், அவரது மனைவி மரியாவும் மகிழ்ச்சியோடு கைஅசைத்து அங்கு திரண்டிருந்த கூட்டத்தினரின்டனர். கவர்ச்சி நடிகை மேரிகேரி கொஞ்சம் தூரத்தில் சோகமாக நின்றிருந்தார். நடிகர் அர்னால்டு ஆஸ்திரியா நாட்டுக்காரர். இப்போது அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கு வசிக்கிறார். தேர்தல் பிரசாரத்தின்போது கடைசி கட்டத்தில் அர்னால்டுக்கு சில எதிர்பாராத சோதனைகள் ஏற்பட்டன. எங்களிடம் செக்ஸ் குறும்பு செய்தார் அர்னால்டு என்று 15 பெண்கள் குற்றச்சாட்டு கூறினார்கள். உடனே அர்னால்டு, 20 ஆண்டுகளுக்கு முன்பு நான் விளையாட்டாக சில பெண்களிடம் நடந்து கொண்டதை ஒப்புக்கொள்கிறேன். அதற்காக மன்னிப்பு கேட்கிறேன் என்று சொல்லி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அப்படிபட்ட ஒரு தலைவர்தான் வேண்டும் என்று முன்பொருமுறை எப்போதோ அர்னால்டு சொன்னதையும் எதிர்தரப்பினர் பெரிதாக விளம்பரபடுத்தி அவரை வீழ்த்தப் பார்த்ததையும், எல்லாவற்றையும் மீறி அர்னால்டு வெற்றி பெற்று கவர்னர் ஆகி விட்டார். அர்னால்டு புதிய கவர்னராக தேர்ந்து எடுக்கப்பட்டிருப்பது ஜனாதிபதி ஜார்ஜ; புஷ் கையை ஓங்க செய்திருக்கிறது. புஷ் சார்ந்துள்ள குடியரசு கட்சியின் வேட்பாளராகத்தான் அர்னால்டு இந்த தேர்தலில் போட்டியிட்டார். கவர்னர் பதவி இழந்த டேவிஸ் ஜனநாயக கட்சி வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே 1921-ல் வடக்கு டகோடா மாநில கவர்னராக இருந்த லின்பிரேசியர் இது போல திரும்ப அழைக்கும் தேர்தல் மூலம் பதவியை விட்டு விரட்டப்பட்டார். இப்போது 2003-ல் அதுபோல பதவி இழந்துள்ள 2வது கவர்னர் டேவிஸ் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி:தினகரன் - yarl - 10-09-2003 நம் வாத்தியார் பதவிக்கு வந்தபோது கூத்தாடி அரசாட்சி என்கிறார்கள். சினிமாவின் முகம் பல(ம்)முகம் - AJeevan - 10-09-2003 யாழ்/yarl Wrote:நம் வாத்தியார் பதவிக்கு வந்தபோது கூத்தாடி அரசாட்சி என்கிறார்கள். இன்னும் அங்கு புரட்சி தலைவரின்(MGR) பெயரை வைத்துத்தான் பிழைப்பு நடத்துகிறார்கள் யாழ்.அவரது பெயரை தவிர்க்கும் நோக்கம் அடிப்படையில் அங்குள்ள சிலரிடம் இருக்கிறது.ஆனாலும் சறுக்கி விடுவோமோ என்றுதான் சிலுமிசிம் போல் அங்கும் இங்கும் சில MGRபடங்களை வைக்கிறார்கள். நாம் வாழும் ஐரோப்பிய நாடுகளின் ஒருவர் கலிபோர்னியாவின் கவர்னராக வந்திருக்கிறார். மகிழ்ச்சி. கலிபோர்னிய மாநிலத்தில் துண்டு விழுந்திருக்கும் 38கோடி டொலர்களை ஈடு செய்தால் கூத்தாடி அரசாட்சியின் சினி முகம் (அர்னால்டு) அரசியல் முகமாகலாம்.அல்லது????????? |