07-15-2005, 07:00 AM
Quote:வந்தது என்னவாழ்த்துக்கள் குருவியண்ணா.
வஞ்சிப் பயலிடம்...
வடிவாய் இருந்தவன் - சில கணம்
வதங்குகிறான் வாடுகிறான்
வசனங்கள் உதிர்கின்றான் தனிமையில் - மறு கணம்
வசந்தத்து அவன் மலர் போல்
வதனம் மலர்கிறான்
வழிகிறான் குழைகிறான்
வானம் போல் பொழிகிறான் அன்பு..!
வழமைகள் வாழினும் மாறினும்
வகையாய் இவன்
வழி நடக்கிறான் காதல் கிறுக்கனாய்
வாழும் தன்னவள்
வழுவில்லா நினைவின் துணையோடு...!
----------

